கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் காக்கும் மூலிகை சமையல், அத்தியாயம் - 03

தூதுவளை




காதுமந் தம்தா தெழுச்சி காசந்தினவு மதம்
ஓதுமந்தம முத்தோடம் உட்சூலை- தாதுநட்டம்
மீதுளைப் பத்திரியை மேவச்செய் வாராய்ந்தோர்

தூதுவளைப் பத்திரியைத் துய்த்து..


என்பது சித்தர்கள் வாக்கு..

இது காது மந்தம், காதெழுச்சி,
காசநோய், நமைச்சல், உடல் குத்தல்,
தாது பலம் பெருகும்..

அதுமட்டுமின்றி,


1 . தூதுவளை இலை நாவிற்கு ருசியை தரும்..

2. இதன் பூக்கள் ஆண்மையை பெருக்கும்.

3. காய்கள் உடலிலுள்ள பிணிகளைப் போக்கும்.

4. இதன் வேரும் கொடியும் சளி சம்பந்தமான அனைத்து தொல்லைகளையும் நீக்கும்..

நமது வீட்டிலேயே கிடைக்கும்.. மிகவும் எளிமையான முறையில் சமைக்கலாம்..
மருத்துவ குணங்கள் கொண்டது தான் தூதுவளை. வாரம் ஒருமுறையாவது பயன்படுத்தி பலனை பெறுவோம்.
தூதுவளை காய் குழம்பு வைத்து சாப்பிடலாம். தூதுவளையின் இலையை துவையல் அரைக்கலாம். தூதுவளை இலை அடை. தூதுவளை பச்சடி..
தூதுவளை இலையில் இட்லி பொடி. தூதுவளை இலை ரசம் என்று பல வகையிலும் சமைக்கலாம்.....

தூதுவளை பூக்களை தாளித்து உண்ணலாம். இதற்கு நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு செய்தால்
நமக்கு உடலில் பலம் உண்டாகும்.

தூதுவளை பூ துவையல்

தேவையான பொருட்கள்



தூதுவளை பூ - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரைமூடி
நல்லெண்ணெய் - 5 கிராம்
(அல்லது பசு நெய் )
சின்ன வெங்காயம்- 15
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு இணுக்கு
உப்பு தேவையான அளவு

செய்முறை

தூதுவளை பூவையும் தேங்காய் துருவலையும் சிறிது எண்ணெய்
அல்லது நெய் விட்டு நன்றாக வதக்கி
அரைத்துக் கொள்ளவும்..

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய்
அல்லது நெய் ஊற்றி கடுகு
கருவேப்பிலை கடலைப் பருப்பு போட்டு
தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன
வெங்காயம், தக்காளி அனைத்தும் போட்டு
எண்ணெய் தெளியும் வரை நன்றாக
வதக்கி பின் அரைத்து வைத்து
தூதுவளை தேங்காய் கலவையை அதில் கொட்டி நன்றாக வதக்க வேண்டும்.. தேவைக்கேற்ப உப்பு போட்டுக் கொள்ளவும்..

வாரத்தில் இரண்டு நாட்கள் இவ்வாறு
செய்தால் உடலில் அளவில்லாத
வலிமை பெறும். சளித்தொல்லை
நீங்கும்.


அமாவாசை பற்றிய சில தகவல்கள்

அமாவாசை என்பது சூரியன் சந்திரன்
முதலான ஒன்பது கிரகங்களின்
மின்காந்த அலைகள் எதிர்மறையாக

பூமியை நோக்கி வந்து அடைவதுதான்..

எனவே தான் அந்த நாளில் விரதம்
இருப்பது சிறந்தது என்னும் கருத்தையும்
நம் முன்னோர்கள் கொண்டுவந்தார்கள்
.

ஏனெனில் இதைப் போன்ற நாட்களில் கிரகங்களின் எதிர்மறை மின்சக்தி
நமது சுவாசத்தின் வழியே நம் உடலில் கலப்பதால் பெருமளவு நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது....

இன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
இந்த நாட்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதை நாம் காணமுடிகிறது...


மேலும் இந்த மின்சக்தி உடைய
நாளில் பேய் பிசாசு ஏவல் போன்ற
எதிர்மறை சக்திகளின் தன்மை
பூமியில் அதிகம் இருக்கும்
...

அதை தவிர்க்கவே மின்சக்தி உடைய
நாளில் கோவிலுக்கு செல்லவும் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
செய்யவும் ஏற்ற நாளாக
நமது முன்னோர்கள் கடைபிடிக்கும்
பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்....


மாந்திரீகம் செய்வதற்கும் ஏற்ற
நாளாக இன்று வரை நடைமுறையில்
உள்ளது.. எதிர்மின் சக்தி இந்த
நாளில் பூமியில் அதிகமாக இருப்பதுவே
அதற்கு காரணம்.......
 
Top