உணவே மருந்து
ஆயுள் நூறு:
"காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி
நடப்பானே........"
இதை முறைப்படி மண்டலம் ( 48 நாட்கள்) உண்டால் ஆயுசு நூறு என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் உண்ண வேண்டும்.. 6 திங்களுக்கு ஒரு முறை வாந்தி செய்விக்கக்கூடிய மருந்தையும், 4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி செய்யக்கூடிய மருந்தையும், நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணை குளியலையும், கண்டிப்பாக செய்ய வேண்டும்.. தன் உடல் நலனின் மீது அக்கறை கொண்டால் தங்களுடைய
வாழ்க்கையை வெற்றியாக நடத்த முடியும்.
இஞ்சி
இஞ்சியின் தோலில் தான் நஞ்சு இருக்கிறது. எனவே தோலை உரித்த பின் தான் அதை உபயோகிக்க வேண்டும்..
இஞ்சி உண்ணும் முறை
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிச்சாறு 3 டீஸ்பூன் தேன் 3 டீஸ்பூன்
இரண்டும் சம அளவு கலந்து உண்ண வேண்டும். இது பித்தத்தை சமன் செய்யும்.
சுக்கு
சுக்கை கத்தியால் மேல் பகுதியில் சுரண்டிவிட்டு உபயோகிக்க வேண்டாம்.
சுக்கை உண்ணும் முறை
மதிய உணவுக்கு முன் சுக்கு தூள் அரை டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து பயன்படுத்தலாம். இது வாயுவை சமன் செய்யும்.
கடுக்காய்
கடுக்காயை உடைத்து உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கி விட வேண்டும். கொட்டை நஞ்சாகும்.. சதைப்பகுதியை மட்டும் இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும்..
கடுக்காய் உண்ணும் முறை
இரவில் படுக்கும் போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில்
கலந்து குடிக்கவும். இது கபத்தை சமன் செய்யும்.
இம்மூன்றும் தினமும் செய்து வந்தால் உங்களை எட்டு கூட பார்க்காது.
ஆனால் இதை எச்சரிக்கையாக கையாள வேண்டும். ஏனெனில்
மூன்றிலும் தோல் பகுதி, மற்றும் கொட்டையில் நஞ்சு உள்ளது. இதை
கவனமாக மறக்காமல் நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். மூன்று
வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.
மண்பானை சமையல்
இப்போதைய சூழ்நிலையில் குடும்பத்தில் ஆண் ,பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை இருப்பதால் பழைய காலத்து மண்பானை சமையல் மேற்கொள்ள முடிவதில்லை. அதற்கு முக்கியமான காரணம் நேரமின்மை. ஆனாலும் நமது உடல் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு மண்பானையில் சமைப்பதை விடுமுறை நாட்களிலாவது மேற்கொள்ள வேண்டும் சகோக்களே.
மண்பானையின் மகத்துவம்
1 .நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.
2 .மண்பானைகள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.
3 .நல்ல பசியையும், நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.
4 .மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும்.
5. குழந்தையின்மைப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.
6. மண்பானை உணவு இரத்தக்குழாய்களை சீராக்க உதவும்.
7. உடல் சூட்டை தணிக்கும்.
இப்படி மண்பானையின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். அறுசுவை உணவு ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்றால்
மண் பானையில் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.
ஆவாரம்பூ
இன்று ஆவாரம்பூ பற்றிய சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
"ஆவாரை பூத்திருக்க சாவாரை
கண்டதுண்டோ"
என்பது முன்னோர்கள் கூறிய வாக்கு. அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகரிக்கும் என்று கூறுவார்கள்.
இன்றைய உலகில் மக்கள் தொகையில் பாதி பேருக்கு மேல் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை ஆவாரம் பூவுக்கு உண்டு.
மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
ஆவாரம் பூ பொடியை நீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை நீக்கும்.
ஆன்டி ஆக்சிடென்ட்கள் அடங்கியுள்ளன. சிறுநீரக பாதை தொற்றுக்கள்,
டைபாய்டு, காலரா, சர்க்கரைநோய், உடலின் தேவையில்லாத கழிவுகளை
வெளியேற்றும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது.
அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாக இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் இரண்டு முறை 15 அவுன்ஸ் வீதம் குடித்து வர சர்க்கரை நோய் குணமாகும்.
ஆவாரம் பூவுடன் ஊற வைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால், நமைச்சல், துர்நாற்றம் நீங்கும்.
உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள், ஆவாரம் பூ கசாயத்தை தவறாமல்
குடித்து வந்தால், உடல் குளுமை அடையும்.
ஆவாரம் பூவை ஊறவைத்து, குடிநீர் தயாரித்து அருந்தினால் நாவறட்சி
நீங்கும். கண் எரிச்சல் நீங்கும்.
ஆவாரம் பூக்களை சேகரித்து, பாசிப் பருப்புடன் சேர்த்து, சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். காலை, மாலை, அரை தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.
மொத்தத்தில் ஆவாரம்பூவை அன்றாட சமையலில் முடிந்த வரை மாதம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும். கிராமங்களில் எளிதாக கிடைக்கும்.
நகரங்களில் இப்போது விற்பனை ஆகிறது.
ஆவாரம்பூவை பாசிப்பருப்புடன் கூட்டாகவோ, குழம்பாகவோ, தேநீராகவோ ஏதேனும் ஒருவகையில் உணவில் சேர்க்க வேண்டும்.
ஆவாரம்பூ தேநீர்
ஆவாரம்பூ - 1 2 டீஸ்பூன்
(காயவைத்து அரைத்து கொள்ளவும்)
இஞ்சி - சிறிய துண்டு
கருப்பட்டி - தேவைக்கேற்ப
மிளகு - 1 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1கப்
ஏலக்காய் - 2
பால் வேண்டுமென்றால் சேர்த்து கொள்ளலாம்.
செய்முறை
ஆவாரம் பொடி கருப்பட்டி ஏலக்காய் மிளகு சேர்த்து நன்றாக பொடி செய்து
கொள்ளவும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி அத்துடன்
இஞ்சி அரைத்த வைத்த கலவை பொடி ஆகியவற்றை போட்டு நன்கு கொதிக்க விடவும் நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு
செய்வதால் சர்க்கரை நோய் குணமாகும்.
ஆவாரம்பூக்களை எவ்வாறெல்லாம் சமைத்து உண்ணலாம் என்ற குறிப்பு
உங்களுக்கு வேண்டுமென்றால் கூறினால் அதையும் சேர்த்து போடுகிறேன் சகோக்களே.
கூடுதல் தகவல்கள்
அறிந்த செய்திகளும் அறியாத உண்மைகளும்..
அரசமரம்
அரசு மரத்தை சுற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
என்பது மூதாதையர்கள் வாக்கு.
அதன் விளக்கம்.
குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளை அரசமரத்தை சுற்றி வரச் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.
அரச மரத்தின் கீழ் சுற்றுவதால், அரசமரத்தின் மின்காந்த அலைகள்
அவர்களின் சுவாசத்தின் வழியே ரத்தத்தில் கலந்து உயிர் சக்தியும்,
விந்து சக்தியும் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள நாளமில்லாச்
சுரப்பிகளை செயல்படத் தூண்டுகிறது.
எனவே தான் இதை அறிந்த நம் மூதாதையர்கள் அரச மரத்தின் கீழ்
விநாயகரை வைத்து வலம்வரும் பழக்கத்தினை ஏற்படுத்தினார்கள்.
இம்மரத்தை சுற்றி வரும்பொழுது இம்மரத்தில் இயங்கிவரும் மின்சக்தி விந்து சக்தியின் நீர்ப்புத் தன்மையை விரைவில் சரிசெய்து விடுகிறது.
ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு,
ராகு, கேது போன்ற கிரகத்தால் உயிர்சக்தியில் ஏற்படும் நச்சுத் தன்மையையும் அரசமரத்தில் இயங்கும் மின் சக்தியானது கட்டுப்படுத்துகிறது என்று கூறுவர்.
குரு, சுக்கிரன் இவ்விரு கிரகத்தின் மின் சக்தியையும் கட்டுப்படுத்தும் வல்லமை அரச மரத்திற்கு உண்டு.
மேலும் மனிதனுடைய உடலில் விந்து சக்தி உருவாக, சுக்கிரனின் மின்சக்தியும், உயிர் சக்தி உருவாக குருவின் மின்சக்தியும் கட்டாயம் வேண்டும். இந்த இரண்டு மின்சக்தியும் அரசமரத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.
எனவே தான் அரச மரத்தை சுற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறினார்கள்.
எனவே தம்பதியராக வலம் வரவேண்டும். ஒரு நாள், ஒரு வாரம் சுற்றினால் உடனடியாக பலன் கிடைக்காது. நம் குறைகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெறும் வரை தொடர்ந்து அரச மரத்தை சுற்றினால் நிச்சயமாக குழந்தைப் பாக்கியம் பெற்று பலன் அடைவர் என்று ஜோதிடத்தில் பரிகாரமும்
கூறுகிறது. அறிவியல் உண்மையும் கூட இதுதான்.
தொடரும்.....