அதியனின் குழப்பம் தெளிவாகும் வரை அவனை தனியே விடக்கூடாது என்று நினைத்த தீபக் கையோடு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான். அதிர்ஷ்டவசமாக தீபக்கின் பெற்றோர் மூன்று நாள் திருப்பதி சென்று இருந்தனர்.
அடுத்த இரண்டு மணி நேரமும் அதியன் தீபக்கின் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான்.
வாட்சைப் பற்றிய பயத்தில் வீட்டிற்கும் செல்லாமல், ஆபீஸிற்கும் செல்லாமல் குட்டி போட்ட பூனை போலக் குறுக்கும் மறுக்கும் அல்லாடினான்.
விடை தெரியாக் கேள்வி தன் நண்பன் முன் நிற்பது தெரிந்தாலும் தீபக் வெகு சாதாரணமான குரலில், "டோண்ட் வொர்ரிடா, பாத்துக்கலாம்.." என்று அதியனை அவ்வப்போது பேச்சிலேயே தேற்ற முயன்றிருந்தான்.
ஆனால் அதியனோ, 'எங்கே போவது, என்ன செய்வது, எப்படி இந்த வாட்ச்சைக் கையாள்வது?..' என்று தெரியாததால், மனம் தெளியாமலேயே நின்றிருந்தான்..
ஒரு கட்டத்திற்குப் பிறகு, 'வீட்டைத் தவிர வேறு எந்த இடமும் எனக்குப் பாதுகாப்பான பகுதியாய் இருக்கப் போவதில்லை..' எனும் ஞானோதயம் அந்த கலிகாலத்துப் புத்தன் புத்தியில் உதித்தது.
'ஆனது ஆகட்டும், நம் வீட்டிற்கே திரும்பிப் போவோம்..' என்று முடிவெடுத்தவன், தீபக்கிடம் சொல்லிவிட்டு தன் வீடு நோக்கிக் கிளம்பிவிட்டான்.
மதியப் பொழுதாகையால் வீட்டிலிருந்த மற்ற மூவரும் அவரவர் வேலையைப் பார்க்க வெளியே சென்றிருந்ததால், வீடு வெறிச்சோடிக் கிடந்தது.
கைவசம் இருந்த சாவியால் வீட்டை திறந்த அதியன், அமைதியாக தன் அறைக்குள் முடங்கினான்..
காலம், நேரம், பசி அனைத்தையும் மறந்து, உடல் மரத்துப் போன நோயாளியைப் போல நெடுநேரம் படுத்துக் கிடந்தவனின் மனம் முழுவதும் பயம் சூழ்ந்திருந்தது.
சதிகார வாட்ச், அந்த நிலையிலும் அதியனுக்குச் சற்று இரக்கம் காட்டாமல், அவன் கையிலேயே ஜாலியாகப் படுத்துக் கொண்டது..
அது தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு பிம்பம் அவன் மனதில் தோன்றியிருக்க, அதியன் குப்புறப்படுத்துக் கொண்டு வலது கையை தன் உடலை விட்டு தூரமாய் வைத்துக் கொண்டான்.
அப்படி செய்வதால், தன்னைவிட்டு அது தூரமிருக்கிறது எனும் நிம்மதி அவன் மனதிற்கு கிடைத்தது.
'இந்த வாட்ச் புண்ணியத்தால இன்னைக்கு நான் ஆபீஸ் போகல, அந்த டீம் ஹெட் எனக்காக வழிமேல விழிவச்சு காத்துட்டு இருப்பான். லீவு சொல்லாம வீட்ல உக்காந்து இருக்குறதுக்கு, வேலைய விட்டு தூக்கப் போறேன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானே..
அது கூடப் பரவாயில்லை, அந்தச் சொட்டையன எதாவது சொல்லி சமாளிக்கலாம். ஆனா நான் என் செல்லத்த பார்க்காம இருக்கேனே..
ஆபிஸ்ல ஜாலியா என்னோட சண்டை போட்டு விளையாடிகிட்டே வேலை பார்ப்பா.. பெரிய சண்டை வரும் போது காபி கொடுத்து சமாதானம் பண்ணுவா.. முக்கால்வாசி நேரம் அவளோட கண்ணுக்குள்ளயே என்ன அடக்கி வச்சிருப்பா..
அப்படி இருக்க வேண்டிய என்ன, இந்த வாட்ச் என் ரூம்லயே அடைச்சு வச்சிருக்கே..' என்று வேதனையுடன் தன் சொந்த ராமாயணத்தைப் பாடிக் கொண்டிருந்தான் அதியன்.
'நல்லவேள அப்பா கண்ணுல படாம தப்பிச்சுட்டேன்.. சும்மா சும்மா சத்தம் போடுற அவருகிட்ட மாட்டி இருந்தேன்னா இன்னிக்கி எனக்கு சமாதி கட்டி இருப்பாரு..
என் பொண்டாட்டி மாதிரி கையோட ஒட்டிட்டு இருக்குற இந்த வாட்ச், அவரு திட்டினா சும்மா இருக்குமோ என்னமோ தெரியல?
இந்த கபிலனுக்கும் எனக்கும் ஏற்கனவே வாய்க்கா தகறாரு, எப்ப யாரு டீம்க்கு பல்டி அடிப்பானோன்னு பக்கு பக்குனு இருக்கு..
அப்பா.. உங்க நேரம் நல்லா இருந்தா என்ன பார்க்க மாட்டீங்க, இல்லைனா? நான் என்னத்தைச் சொல்ல..
ஐயயோ, தனியா உளற ஆரம்பிச்சுட்டேனே. இன்னும் என் வாழ்க்கையில என்னெல்லாம் செய்ய காத்திருக்கோ இந்த வாட்ச்சு. எது நடந்தாலும் என் ஆளு மட்டும் என்ன விட்டு போயிடக்கூடாது..' என்று புலம்பியவனின் மனக் கண்ணில் அவனின் பூங்குழலாள் வந்து சிரித்தாள்.
அவன் கண்ணெதிரில் தீட்சண்யாவின் திருவுருவம் வலம் வர ஆரம்பித்ததும், இவனுடைய கற்பனைகள் தறிகெட்டு ஓடத் துவங்கியது.
'இந்நேரம் அவ ஆபீஸ்ல சின்சியரா மீட்டிங் அட்டர்ன் பண்ணிட்டு இருப்பா. நான் ஏன் வரலைனு தெரியாம, என்ன ரொம்ப மிஸ் பண்ணுவா..' என்று கற்பனை காட்சியில் தெரியும் தன் தேவதையின் முகத்தைப் பார்த்து, இவன் வெட்கப் பட்டுச் சிரித்தான்.
அதியனின் மைண்ட் வாய்சில் புகுந்த தீபக், 'இல்லை தொலைஞ்சது சனியன், இன்னிக்கி ஒரு நாளாவது அந்த இம்சை இல்லாம ஃப்ரீயா இருக்கலாம்னு அவளோட வேலையைப் பார்ப்பா..' என்று நக்கலடித்தான்..
தீபக்கின் நிழலுருவத்தை ஓரப்பார்வையால் முறைத்த அதியன்,
தன் பூம்பாவையின் புறம் திரும்பி, 'சே.. சே.. என் செல்லக்குட்டி அப்படியெல்லாம் நினைக்காது. என்னைப் பார்க்காம ஏங்கி இளைச்சுப் போயிருவா..' என்று இவன் சிரிக்க, எதிரிலிருந்த அவள் சிரிக்க,
காதல் கசிந்து ஆறாய் பெருகி ஓடிய நேரம், சரியாக அவனுடைய கைபேசிக்கு ஒரு மெஸேஜ் வந்து விழும் ஒலி கேட்டது.
தன் கற்பனை ஓட்டத்தை ஒரு ஓரமாய் நிறுத்தி வைத்துவிட்டு, மெசேஜில் கவனத்தைச் செலுத்தினான் அதியன்.
'நான் ஒண்ணும் உன்ன தேடி தவிக்கல...' என்று தீட்சுவிடமிருந்து வந்திருக்கும் மெஸேஜைப் பார்த்ததும், திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான் அதியன்.
தலையைச் சொரிந்து கொண்டே பால்கனிப் பக்கம் வந்து தெருவின் எல்லை வரை பார்வையைச் சுழற்றினான்.
அங்கு ஒரு ஈ காக்கா கூட இல்லாமலிருக்க, 'எப்படி நான் மனசுல நினைச்சதுக்கு தீட்சண்யா பதில் போட்டிருக்கா? நிஜமாவே என் தலைக்கு மேல ஆன்ட்டனா ஏதாவது மாட்டி விட்டுட்டாளா?..
இல்ல.. இல்ல.. அவ யதார்த்தமா ஏதாவது போட்டு விட்ருப்பா. நமக்குத்தான் இந்த சனியனால எதுக்கெடுத்தாலும் சந்தேகமா இருக்கு.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கறது இதுதான் போல..' என்று தனக்குத் தானே முடிவு கட்டிக்கொண்டு, மீண்டும் போய் பெட்டில் விழுந்தான்.
'என் டார்லிங்க்கு என்ன பதில் போடலாம்?' என்று அதியன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவன் வாட்சப்பிற்கு இன்னொரு மெஸேஜ் வந்துவிட்டது.
'எதார்த்தமா போட்டேனா?.. உனக்கும் எனக்கும் சண்டைடா... எப்படியெல்லாம் நேத்து ஃபிலாசபி பேசுன நீ? அத அப்படியே விட்ருவேனா? ஐயோ பாவமே, ரொம்ப பெரிய ஸ்பீச் கொடுத்து தொண்டை காய்ஞ்சு கெடப்பானேனு பரிதாபப்பட்டு உனக்கு காபி தந்தேன்.
அதுக்குனு எல்லாத்தையும் மறந்துட்டேன்னு அர்த்தமாகிடுமா? நீயே வந்து பேசாம நான் என்னிக்கி இறங்கிப் போயிருக்கேன்?
சும்மா இருந்தவளுக்கு நீதானடா இப்ப மெஸேஜ் பண்ண? சரி, சமாதானந்தான் பேசக் கூப்பிடுறான்னு ரிப்ளை பண்ணா, என்னையே பேய்னு வேற சொல்லுறியா? எனக்கு தேவைதான்டா...' என்ற மெஸேஜை பார்த்ததும், அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
குழப்பத்துடன், 'நான் இவளுக்கு ஒரு மெஸேஜும் அனுப்பலையே!!.. அவதான எனக்கு முதல்ல மெஸேஜ் அனுப்பி இருந்தா?!..' என்று தன் செல்போனை எடுத்துப் பார்த்தான்.
அவள் சொன்னது சரிதான், அவன் பேச நினைத்து புலம்பியதெல்லாம் மெசேஜ் வடிவில் அவளுக்கு சென்றிருந்தது...
'என் செல்போனுக்கு என்னாச்சு? நல்லாத்தான இருந்துச்சு..' என்று போனையே திருப்பித் திருப்பி பார்த்தவன், அதிர்ச்சியோடு வாட்ச்சைப் பார்த்தான்...
அது அவனைப் பார்த்து சிரிப்பது போல இருக்க, 'இதுவும் இந்த வாட்ச் வேலையா? ஆனா அது எப்படி என் போன் மூலமா அவளுக்கு மெஸேஜ் அனுப்புச்சு?..
ஒருவேள, எப்பவும் மைண்ட் வாய்ஸ்ல பேசிப்பேசி எனக்குத்தான் பைத்தியம் புடிச்சிடுச்சா?..' என்று மீண்டும் வாட்சப் வரை சென்று, சற்று முன்பு தீட்சு திட்டியதை உறுதி செய்துவிட்டு வந்தான்.
அப்போது திடீரென்று அவன் அறைக்குள் நுழைந்த அவனின் அப்பா, "என்ன அதி? என் நேரம் நல்லாயிருந்தா உன்னைப் பார்க்க மாட்டேன்னு வாட்சப்ல மெஸேஜ் அனுப்பி வச்சிருக்க..
ஏன்? நான் உன்ன பார்த்தா என்னாகும்? வரவர உன் போக்கு எதுவும் சரியில்லடா.
ப்ரெண்டு வாட்ச்ச உன் கையில மாட்டிட்டு அலையிற, தம்பிகூட தேவையில்லாம சண்ட போடுற, எல்லாத்துக்கும் மேல இன்னிக்கி சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு கிளம்பி எங்கேயோ போய் சுத்திட்டு வந்திருக்க..
நானும் சின்னப் பையன் போகப்போக சரியா போயிருவான்னு விட்டு பிடிச்சா, ஆள் பெருசாகுறியே தவிர மூளை வளரவே இல்ல, அப்படியே இருக்கு" என்று அவனை அடுப்பு இல்லாமலேயே பாகாய் காய்ச்சிக் கொண்டிருந்தார்.
'வாத்தியார்னா, உங்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா மூளையா முளைச்சிருக்கு? எப்பப் பாரு என் மூளையப் பத்தி பேசறதே இந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பொழப்பு..
இவங்க என்ன என் மண்டைக்குள்ள போய் பார்த்தாங்களா? வளர்ந்துச்சா வளரலையான்னு தெரிஞ்சுக்க?..' என்று உள்ளுக்குள் புலம்ப புலம்ப அப்பாவின் பாக்கெட்டில் இருந்த செல்போனுக்கு மெசேஜ் சென்று குவிய ஆரம்பித்தது.
கண் கெட்ட பிறகு சுதாரித்தவனோ, 'ஐயய்யோ, பழக்க தோஷத்துல அப்பாவை மனசுக்குள்ள திட்டிட்டேனே, இப்ப இந்த வாட்ச் எல்லாத்தையும் அவருக்கு மெசேஜா அனுப்பி வச்சிடுச்சு போலயே? சேஞ்ச் த மைண்ட் செட்.. சிரிடா அதியா.. சிரிச்சிடுடா அதியா.." என்று அதியன் தன் மனதிற்குள்ளேயே ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருந்தான்.
அது தெரியாத அவன் அப்பா, "ஆபீஸ் போகலையா இன்னிக்கி?.."
அதியன், ஈஈஈ.. என்று இளித்தான்.
"பதில் சொல்லுடா.."
அவன் மீண்டும் ஈ.. என்று பல்லைக் காட்ட,
"உன் பைக் எங்கடா?" என்று அடுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்தார் அவர்.
அதுவரை அதியன் எதுவும் நினைக்காமல், பல்லைக் காட்டிக் கொண்டு நின்றதால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சென்றது..
இப்போது வண்டியைப் பற்றிக் கேட்கவும் பதட்டத்தில், "அது வந்துப்பா.." என்று தடுமாற்றத்துடன் என்ன சொல்வது என்று தெரியாமல் எச்சில் முழுங்கிய நேரம், அவருடைய போனில் மீண்டும் மெஸேஜ் வந்ததிற்கான அறிகுறி காட்டியது.
"யார்ரா இது?.. மெஸேஜுக்கு மேல மெஸேஜா அனுப்புறது" என்று சலித்துக் கொண்டே போனை எடுத்துப் பார்த்தவரின் புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன..
அதியனின் எண்ணைக் கண்டதும், யோசனையுடன் மகனின் முகம் பார்த்தார். அவனோ திருட்டுக் கோழி தவிட்டை முழுங்கியது போல நின்று கொண்டிருந்தான்.
'நான் அவனைத் திட்டினேன், அவன் என் கண்ணு முன்னால அமைதியா நிக்கிறான். ஆனா எப்படி அவன் போன்ல இருந்து பதில் வரும்? அவன் மெஸேஜ் அனுப்பவே இல்லையே!!..' என்று யோசித்தார்.
வாட்ச்சில் இருந்து ஒரு மின்னல் கீற்றுப் போல வெளிவந்த ஏதோ ஒன்று தணிகாசலத்தை தாக்கிட, ஆரம்பித்த பேச்சினை அப்படியே நிறுத்திவிட்டு அவன் அறையிலிருந்து வெளியே சென்றார்.
அதியன் மிரண்டு போய், "அப்பா.. அப்பா.." என்று அழைக்க, அவரோ அமைதியாய் சோபாவில் அமர்ந்தபடி டிவி பார்க்க ஆரம்பித்திருந்தார்.
"அப்பா என்னாச்சு உங்களுக்கு?.." என்றான் அதியன்.
அவரோ அசால்ட்டாக, "ஏன் எனக்கென்ன?.." என்று தன் கோழி குண்டு கண்களை உருட்டி மிரட்டினார்.
அவர் அப்படி கேட்டதுமே அதியனுக்கு புரிந்து விட்டது, அவருக்கு வாட்ச் எந்த தீங்கும் செய்யவில்லை, சற்று முன்பு நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தையும் மறக்க வைத்திருக்கிறது என்று.
"இல்ல, இந்நேரம் டிவி பாக்குறீங்களே.. அதான் கேட்டேன்" என்று மழுப்பினான் அதியன்.
"இன்னைக்கி ஒரு நாள் லீவு போட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சேன், அதுல உனக்கு எதும் பிரச்சனையா?"
"இல்லையே.." என்றவன் சந்தோஷத்தோடு துள்ளிக் குதித்தபடி தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.
'அப்பாடா..' என்று அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்துவிட்டவன், 'தப்பிச்சேன்டா சாமி..' என்று நினைத்தபடியே மெத்தையில் சரிந்தான்.
அதியனின் மைண்ட் வாய்ஸ், 'என்னடா பொழப்பு இது? ஆளாளுக்கு என்னை பந்தாடுறாங்க.. இதுக்கெல்லாம் காரணம் இந்த வாட்ச்தான்.
அது நான் நினைக்கிறதை எல்லாம் போட்டுக் கொடுத்து எட்டப்பன் வேலை பார்க்குது..' என்று வாட்ச்சை கழட்டி கையில் வைத்துக் கொண்டான்.
"நீ யாருடா நல்லவனா? கெட்டவனா? ஒரு தடவ என்ன காப்பாத்துற, ஒரு தடவ என்னடான்னா என்ன மாட்டி விட்டு வேடிக்கை பார்க்குற..
இப்படியே போனா நான் ஆபீஸ் போவேனோ இல்லையோ, நிச்சயமா பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு போயிடுவேன்டா.." என்று அந்த வாட்ச்சைப் பார்த்துப் புலம்பினான்.
அப்போது அவனுடைய போன் ஒலிக்கவும், "அடுத்து யாரு? இன்னைக்கு யார் முகத்தில் முழுச்சேன் நான்? ஆங், என் அருமைத் தம்பி மூஞ்சிலதான் முழிச்சேன். எம்பொழப்பு இன்னிக்கி சிரிப்பா சிரிக்கப் போவுது.." என்று போனை எடுத்தான்.
திரையில் அவனுடைய அழகுக் காதலியின் பெயர் ஒளிர்ந்து கொண்டிருக்க, உற்சாகமாய் போனை ஆன் பண்ணி காதில் வைத்தவன்,
"சொல்லுடா தங்கம், என் ஞாபகமாவே இருக்க போல இருக்கு.." என்றான் உல்லாசச் சிரிப்போடு.
"ஏன்டா சொல்லமாட்ட? நீ வீட்ல தின்னுட்டு தூங்கு, இங்க உன் வேலையும் சேர்த்து நான் பார்த்து சாவுறேன். அதுசரி, ஏன் காலைல என்ன திட்டி மெஸேஜ் போட்டுக்கிட்டு இருந்த?" என்றாள்.
"உன்னையா? யாரு, நான் திட்டினேன்? அடிபோடி, உனக்கு வேற வேலை இல்லை. இங்க நான் படுற பாடு உனக்கு சொன்னாலும் புரியாதுடி. அடுத்து என்ன பண்றதுனு தெரியாம, மூளையே குழம்பின ஸ்டேஜ்ல நான் இருக்கேன்டி செல்லம்.." என்றான் அதியன்.
"அப்படி என்னடா உனக்குப் பெரிய கஷ்டம் வந்துடுச்சு? எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம், ஆபீஸ் வந்து சேரு.." என்றாள்.
"சாரிடி, இன்னிக்கி ஒரு நாள் வீட்லயே இருக்கேன்.."
"வானு சொன்னா வர மாட்டியாடா?" என்று அதிகாரமாகத்தான் சொன்னாள், ஆனால் அதில் அத்தனை ஏக்கம் தெரிந்தது அவனுக்கு.
"என்ன பார்க்காம இருக்க முடியலையாடி?"
எதிர்முனையில் பேரமைதி..
'வெட்கப்படுறாளோ?! அவ கன்னம் அல்வா கலருக்கு போயிருக்குமே. இதெல்லாம் நான் அவ பக்கத்துல இருக்கும் போது பண்ண மாட்டா.. ஆம்பளையா பொறந்துட்டேன், வேற என்ன பண்ண முடியும்? மீனு வேணும்னா பூனைதான் தேடிப் போகணும்..'
'இந்த வாட்ச் அப்பாவ எதுவும் செய்யலைல..' எனும் தைரியத்தில், "இதோ கிளம்பி இப்பவே வரேன்டி" என்றான் கிறங்கிப்போன குரலில்..
"ஹலோ.. ஹலோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல, நீயே வீணா கற்பனையை வளர்த்துக்காதே" என்று சொல்லிவிட்டு பட்டென்று போனை வைத்துவிட்டாள்.
'மனுஷன கொஞ்சம் சந்தோஷப்பட விடமாட்டாளே!..' என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவன், தன் கையில் நிறைந்திருக்கும் பிரச்சனையை மறந்து ஆபீஸுக்குத் தயாராக ஆரம்பித்தான்.
அப்போது கல்லூரியிலிருந்து திரும்பி வந்த அவனுடைய தம்பி கபிலன் அப்பாவுக்கு ஒரு சல்யூட்டை வைத்து விட்டு அண்ணனின் அறைக்குள் வந்தான்.
"என்னடா அண்ணா, டைம் பதினோரு மணியாகிடுச்சு, நீ இன்னும் அரை ட்ரவுசரோட வீட்ல சுத்திட்டு இருக்க, ஆபீஸ் போகலையாடா இன்னிக்கி? குத்துக் கல்லு மாதிரி நல்லாத்தானே இருக்க, அப்புறம் ஏன் மட்டம் போட்ட? வேற ஏதாவது பிரச்சனையா அண்ணா?" என்றான் ரகசியக் குரலில்.
நல்ல பிள்ளை போல மெதுவாகப் பேச்சுக் கொடுத்து, எதாவது சிக்கினால் அம்மாவிடம் அப்பாவிடம் போட்டுக் கொடுப்பதுதான் அந்தச் சில்வண்டு சிறுவயது முதலே தன் அண்ணனிடம் கடைப்பிடிக்கும் யுக்தி..
அதியனா அவனிடம் ஏமாறுவான்?
"நான் நல்லா இருந்தா உனக்கென்ன, நாசமாப் போனா உனக்கென்னடா எரும? ஏற்கனவே உன் மூஞ்சியில முழிச்சதுக்கு இன்னிக்கி நாள் ஜெகஜோதியா போயிட்டு இருக்கு, இதுல மறுபடியும் உன் தேங்காய் மண்டைய என் பக்கத்துல தூக்கிட்டு வராத, செதறிடும் பாத்துக்க.." என்றவன், கபிலனை முறைத்து விட்டு குளிக்கச் சென்றான்.
அப்பாவைப் பற்றிய பயமில்லாமல் தைரியமாகப் பேசும் அண்ணனை கண்டு ஆச்சரியமாக இருந்தது கபிலனுக்கு.
இடது உள்ளங்கையை வலது உள்ளங்கையால் குத்தி, 'சிக்காம தப்பிச்சுட்டானே, போற போக்குல என்ன திட்டிட்டு வேற போயிட்டான், இன்னிக்கி எதுலயாவது இவன மாட்டிவிட்டே ஆகனுமே?' என்று வில்லன் ரேஞ்ச்க்கு யோசித்துக் கொண்டே ஹாலுக்கு வந்தான்.
அப்பா, "கபிலா, நான் பேங்க் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன். அம்மா தலைவலினு லீவெடுத்துட்டு வீட்டுக்கு வர்றா, நீ அவ வர்ற வரைக்கும் அங்க இங்கனு சுத்தாம வீட்டிலேயே இரு.." என்றதும் கோவில் மணி போல கடகடவென தலையாட்டினான் கபிலன்.
அவன் இருக்கிறான் என்றதும், இரண்டு அடி முன்னால் நடந்தவர், ஏதோ தோன்றியவராக மீண்டும் கபிலன் முன் வந்து நின்றார்.
"என்னப்பா?.." என்றான் கபிலன்.
"அது ஒண்ணுமில்ல, உன் அண்ணன பார்க்கத்தான் நான் வீட்டுக்கு வந்தேன், ஆனா ஏன் வந்தேன்னு மறந்துட்டேன். அவன் உங்கிட்ட ஏதாவது சொன்னானா?" என்றார்.
காரியவாதியான கபிலனோ ரெண்டு லட்டு திங்க ஆசைப்பட்டு, "இல்லையேப்பா.." என்று அப்படியே தோசையைத் திருப்பிப் போட்டு விட்டான்.
"அப்படியா? சரி, ரெண்டு பேரும் பார்த்து இருந்துக்கோங்க.." என்றவர் கவலை தோய்ந்த முகத்தோடே கிளம்பிப் போனார்.
'அப்பா கிளம்பியாச்சு, அம்மா வரப்போறாங்க, அண்ணன் ஆபீஸ்க்கு ரெடி பண்ணிட்டு இருக்கான்.. இனிமே வீடு என் கன்ட்ரோல்லதான், இர்றா அண்ணா உனக்கெதிரா ஒரு மினி பிக்பாஸ உருவாக்குறேன்..' என்று தொடையைத் தட்டி சவால் விட்டான்.
கிரகலட்சுமி வாசல் கேட்டைத் திறந்ததும் விறுவிறுவென ஓடிச் சென்று, "வாங்கம்மா, உடம்புக்கு என்னாச்சு?" என்றான்.
"எல்லாம் உன் அண்ணனால வந்த தலைவலிதான்டா, அப்பா அவன எதாவது சொன்னாரா?.." என்றார் அக்கறையாய்.
"அப்பா எதையோ கேட்டாரு, நான் எனக்கு எதுவும் தெரியாதுனு சமாளிச்சு அனுப்பிட்டேன். இப்ப பேங்க்குக்கு போயிட்டாரு.." என்றான்.
"நல்ல காரியம் செஞ்சடா.. ஏதோ இந்தளவுக்கு கூடப் பொறந்தவன் மேல அக்கறை இருந்தா சரி.."
"ம், ஆனா உங்களுக்கு கொஞ்சமாவது அண்ணன் மேல அக்கறை இருக்கா? அண்ணன் பைக்க எப்படி உடைச்சு வச்சிருந்தான், அதப்பத்தி ஒரு வார்த்தை கேட்டீங்களா?
பாவம் அவனுக்கு என்னாச்சோ? எனக்கு இருக்கற கவலை கூட உங்களுக்கும் அவன் மேல இல்லையேம்மா, அந்த பைக் மட்டும் அப்பா கண்ணுல பட்டிருந்தா இன்னிக்கு அவன வீட்ட விட்டே விரட்டியிருப்பாரு.
ஒரு வேள அவன் அப்பாவோட மூத்த தாரத்துப் பையனா? அதனாலதான் நீங்க அவன கவனிக்காம இருக்கீங்களா?.." என்று ஏற்ற இறக்கங்களோடு பேச,
"அடச்சீ, வாயக்கழுவுடா.. என்ன பேச்சு பேசுற?"
"ஏம்மா?.."
"உங்கப்பாவுக்கு ஒருத்தி வாக்கப்பட்டு வந்ததே உலக அதிசயம்.. இதுல ரெண்டு மூணுனு கிறுக்குத்தனமா உளறிட்டு.."
"ஹா.. ஹா.. அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி பேசப் போறீங்கனு நினைச்சா, நீங்க அப்பாவ டோட்டல் டேமேஜ் பண்ணிட்டு இருக்கீங்க. அதுசரி, அண்ணன்ட்ட உடம்புக்கு எதும் ஆச்சானு ஒரு வார்த்தை விசாரிங்களேன்.."
"எப்பபாரு அவனோட சண்டை போட்டுகிட்டு திரிவ, இப்ப என்னடா புதுசா அக்கறை பிச்சுகிட்டு ஆடுது?.." என்று கேட்டார்.
"என்ன இருந்தாலும் அவன் என் அண்ணன்மா, எனக்கு அவனைப் பத்தின கவலை இருக்காதா?.." என்றிட, கிரகலக்ஷ்மியும் உள்ளுக்குள் மூத்த மகனை நினைத்து கவலையாய் இருந்தார்.
அதேநேரம் அதியன் ஆபீஸ் போக தயாராகி வரவும், "அதியா, உன் பைக்க எங்க?" என்று மெதுவாய் விஷயத்தை ஆரம்பித்தார் கிரகலஷ்மி.
'அப்பாட்ட தப்பிச்சு அம்மாட்ட மாட்டிகிட்டோமோ?!' என்று நெற்றியை நீவிக் கொண்டு நிற்க,
அம்மாவுக்குப் பக்கத்தில் நக்கல் சிரிப்புடன் நின்றிருந்த தம்பியைப் பார்த்த அதியனுக்கு, 'எல்லாம் இந்தப் பிசாசோட வேலைதான்..' என்று விளங்கிவிட்டது.
அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவன் கையிலிருந்த வாட்ச் அலுங்காமல் நழுவி இறங்கியது.
அதை உணர்ந்தவன், 'எதிரில் இருப்பவர் இருவரில் யாராவது அதைக் கவனிக்கறாங்களா?' என்று பார்த்தான்.
இரண்டு பேருமே அதைக் கவனிக்காமல், அவனிடம் வண்டியைப் பற்றிக் கேட்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
அதியன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க, அவனுடைய அம்மா, "இங்க வா.." என்று அவன் கையைப் பிடித்து இழுத்துப் போனார்.
'எங்க கூட்டிட்டு போறாங்க?..' என்று யோசனையுடன் பின்னே சென்றான்.
நேராக அவன் பைக்கை நிறுத்தியிருந்த சந்துக்குள் அவனை அழைத்துச் சென்றார்.
'செத்தான்டா சேகரு..' என்று அதியன் உள்ளுக்குள் அலற, அங்கே அவன் பைக்கோ பளிச்சென்று முழுதாய் உருவம் கொண்டு நின்றது..
குப்பைக் குவியலாய் இருந்த இடத்தில், கழுவி வைக்கப்பட்டதைப் போலப் பளபளப்புடன் பைக் நிற்பதைக் கண்டதும் கிரகலக்ஷ்மி மட்டுமல்ல, பின்னாடியே அண்ணன் திட்டு வாங்குவதைப் பார்க்கலாம் என்று ஆர்வத்துடன் ஓடி வந்த, கபிலனும் அதிர்ந்து போனான்.
"இது எப்படி? டேய் கபிலா, நாம பார்க்கும் போது இங்க பைக் இல்லதானே? இல்ல, நான் எதாவது கனவு கண்டேனா?" என்று அவன் அம்மா இளையவனிடம் விசாரிக்க, தன் வாட்ச்சை நன்றியுடன் பார்த்தான் அதியன்.
கபிலனும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறிட,
அதியன் அவர்கள் இருவரையும் பார்த்து, "என்னமா பேசுறீங்க? எனக்கு ஒன்னும் புரியல. ஆபீஸ்க்கு இன்னைக்கு லேட்டா கிளம்பனும். வாசல்ல பைக்க வச்சா வெயிலடிக்கும், உட்கார்ந்து ஓட்ட முடியாதுனு என் பைக் இங்க கொண்டு வந்து நிறுத்தினேன்.
அதுக்குள்ள இந்த நாய் உங்ககிட்ட என்னத்த வத்தி வச்சான்? அவனப் பத்தி தெரிஞ்சும் நீங்க கொஞ்சம் மெச்சூர்டா இருக்க வேணாமா? இந்தப் பொடிப் பயலோட சேர்ந்துகிட்டு என்ன சந்தேகப்படறது சரியில்லம்மா.." என்றான்.
கபிலன் அம்மாவின் காதில், "அப்ப காலையில எங்க போனான்னு கேளுங்கம்மா" என்று கோர்த்து விட்டான்.
கிரகலட்சுமி கேள்வி கேட்கும் முன்னாலேயே அதியன், "ப்ரெண்டுக்கு கொரோனா சிம்டம்ஸ் இருந்தது, அவனுக்கு வேண்டிய மருந்து மாத்திரைகள் எல்லாம் வாங்கி தர போயிருந்தேன். அப்படியே உங்கள தொட்டுப் பேசினா, உங்களுக்கும் காய்ச்சல் ஒட்டிக்கும். அதனால குளிச்சிட்டு வந்து பேசலாம்னு என் ரூம்லயே இருந்துட்டேன், அவ்வளவுதான்.." என்றான்.
கிரகலட்சுமி அதியன் பேசுவதை, தன் காதில் போட்டுக் கொள்ளாமல் பைக்கைப் பார்த்துக் கொண்டே நின்றார்..
"சரி தள்ளுங்க, எனக்கு ஆபீஸ்க்கு லேட்டாகிடுச்சு.." என்று பைக்கில் சாவியை நுழைத்து ஸ்டார்ட் செய்வது போல பாவ்லா செய்தான் அதியன்.
அப்போதுதான் அவன் அறிவில் திடீரென்று பல்பு எரிந்தது.
'ஆத்தி, ஆபீஸ் பார்க்கிங் ஏரியால சிசிடிவி இருக்குமே. இதக் கொண்டுபோய் நிறுத்தினதும் மறுபடியும் பைக் சல்லி சல்லியா நொறுங்கி விழுமே..' என்று தெரிய, ஏறிய வேகத்திலேயே பைக்கிலிருந்து கீழே இறங்கினான்.
செய்து வைத்த சிலை போல நின்றிருந்த தன் அம்மாவையும் தம்பியையும் பார்த்து, 'உங்களுக்கு இந்த பைக் மேல ஏதோ காண்டு, அதான் இத குறை சொல்லிட்டு இருக்கீங்க.
அடிக்கடி இதுவும் பாதிவழியில பிரேக் புடிக்காம சதி பண்ணுது, பேசாம நான் வேற பைக் வாங்கப் போறேன், இனிமே இந்த பைக்கே எனக்கு வேண்டாம்..
என்கிட்ட பணம் கொஞ்சம்தான் இருக்கு. அம்மா, உங்க அக்கவுண்ட்ல இருந்து எனக்கு பணம் போட்டுவிடுங்க. கபிலா பைக் வாங்கினதும் உன்னத்தான் முதல்ல அதுல உக்காரவச்சு கூட்டிட்டு போகப் போறேன், உனக்கு எதாவது வேணுமாடா" என்றான் அதியன்.
அண்ணன் தனக்கு ஏதோ ஆஃபர் தருகிறான் என்று புரிந்துகொண்ட கபிலன், "ஆமாண்ணா, என் மொபைலும் இப்பல்லாம் ரொம்ப மக்கர் பண்ணுது, எனக்கு புது மாடல் மொபைல் வாங்கித்தா" என்றான்.
"சரிடா சாயங்காலம் நான் வந்த பிறகு, புது பைக்ல நாம ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வரலாம். இப்ப நடந்தது எதையும் அப்பா காதுக்கு போகாம பார்த்துக்கடா.." என்று தம்பியிடம் மனு போட்டான்.
முழுதாய் புரிந்துகொண்ட கபிலன், "சரிண்ணா, ஆனா எனக்கு கண்டிப்பா மொபைல் வாங்கித் தருவீல்ல?" என்று கராராய் பேரம் பேசினான்.
"கண்டிப்பா வாங்கித் தரேன்" என்று சொன்னவன்,
"அம்மா சீக்கிரமா கூகுள் பே ல பணம் போட்டு விடுங்க, நான் இப்ப நேரா ஷோரூம்க்குதான் போகப் போறேன்" என்று சொல்லிக் கொண்டே, பைக்கில் மீண்டும் ஏறினான்.
அவன் பைக் வாசல் கேட்டை தாண்டிப் போனதும் கிரகலக்ஷ்மி, "டேய் கபிலா, நாம பைக் உடைஞ்சு கிடந்ததை பார்த்தோம்ல?" என்று தன் இரண்டாவது மகனிடம் கேட்க,
அவனோ மொபைல் வேண்டுமென்ற ஆசையால், "அம்மா உங்களுக்கு இன்னுமா புரியல? அவன் நம்மள வச்சு பிராங்க் பண்ணி இருக்கான். அவன் பைக்க ஓட்டிட்டு போறத இப்ப நீங்களே உங்க கண்ணால பார்த்தீங்கள்ல, அப்புறம் என்னம்மா?.." என்று லஞ்சம் வாங்குவதற்காக இப்போதிருந்தே கடுமையாய் உழைக்க ஆரம்பித்துவிட்டான்.
"ஆனா.. அது.. எப்படிடா?.." என்று கிரகலக்ஷ்மி இன்னும் எதுவும் புரியாமல் பிதற்றிக் கொண்டிருக்க,
"ம்ச்சு, அம்மா முதல்ல உங்க போன குடுங்க, அவனுக்கு பைக் வாங்க பணம் போட்டு விடலாம்.." என்று பேசிப் பேசியே அம்மாவை ஏமாற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.
குழப்பத்துடனே மகனின் பின்னால் கிரகலஷ்மியும் சென்றுவிட்டார்..
அதியன் நேராக ஒரு பழைய இரும்புக்கடை இருக்கும் இடத்திற்குச் சென்று, யாருமில்லாத இடத்தில் பைக்கை நிறுத்தினான்.
அவன் கீழே இறங்கியதும், பழையபடி பைக் பிரிந்து உடைந்த பாகமாக மாறிட, அதியனின் வலது கையை வந்து சேர்ந்தது வாட்ச்.
வாட்ச்சை ஆசையுடன் முத்தமிட்டவன், "தேங்க்ஸ் என்னை காப்பாத்திட்ட.." என்றான்.
அந்த வாட்ச்சும் சற்றே மேலே எழும்பி, அவன் கன்னத்தை உரசிச் செல்ல, அதியன் வியப்பாக, "உனக்கு முத்தம் கொடுக்கக் கூடத்தெரியுமா? என் தீட்சுவுக்கும் கொஞ்சம் சொல்லித் தாயேன்.." என்று அதனுடன் பேசிக் கொண்டிருந்தான்.
வாட்ச் அவன் பேச்சைப் புரிந்து கொண்டதாய் தன் நீல வண்ண ஒளியால் கண்சிமிட்ட, மீண்டும் அதனுக்கு ஒரு முத்தம் தந்துவிட்டு, உடைந்த பைக்கின் உதிரி பாகங்களை கோணியில் அள்ளிக் கொண்டு கடைக்குச் சென்றான்.
ஒரு பெரும் இரும்புக் குவியலைக் கடைக்கு முன்னால் அவன் கொட்ட, பெருமகிழ்ச்சி கொண்ட கடைக்காரர் என்ன ஏதென்று கேட்காமல் அதற்கு உண்டான காசை கொடுத்துவிட்டார்.
அடுத்து அதியன் நேராக பைக் ஷோரூமை நோக்கிச் சென்றான்.
அங்கே அவன் எந்த பைக் வாங்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்க, வாட்ச் ஒரு அதிநவீன பைக் இருந்த திசைக்கு அவனை கையைப் பிடித்து இழுத்தது..
"ஓ, உனக்கு இது தான் பிடிச்சிருக்கா? அப்போ இதையே நாம எடுத்துக்கலாம்.." என்று வாட்சைப் பார்த்து நட்பாய்ச் சிரித்தான் அதியன்.
புது பைக்கோடு ஆபீஸிற்குச் சென்றவன் தன் இருப்பிடத்திற்கு வந்ததும், அவனுக்குப் பக்கத்துச் சீட்டில் அமர்ந்திருந்த அவனுடைய காதலி விழிகளால் வலை விரித்தாள்.
அதில் வீழ்ந்திடத் துடித்தவனைத் தடை செய்யும் விதமாய் தீபக் இடையில் புகுந்து, "சார், நீங்களா? உங்கள மாதிரி சூப்பர் மேன்லாம் ஆபீஸ்க்கு வரவேண்டியது இல்ல.. வீட்டுல இருந்துட்டே சம்பளம் வாங்கலாமே!! ஏன் அலைஞ்சு திரிஞ்சு சிரமப்படறீங்க?" என்றான் போலி மரியாதை காட்டி.
அவன் பேசி முடிக்கும் முன்பே, தீபக்கின் கைபேசி மெஸேஜ் வந்ததாய்ச் சிணுங்கிட எடுத்துப் பார்த்தான்.
"அது எனக்கு தெரியும்டா, நீ போய் உன் வேலைய பாரு, வந்துட்டான் எனக்கு புத்தி சொல்ல.." என்ற வார்த்தைகள் ஒளிர்ந்தது.
தீபக், 'இவன் என் பக்கத்துல தானே உக்காந்திருக்கான்? கையில போனும் இல்ல, அப்புறம் எப்படி இந்த மெஸேஜ அனுப்புனான்? ஒருவேள இதுவும் அவனோட வாட்ச் வேலையா இருக்குமோ?' என்று மிரண்டவன்,
அதியனிடம், "டேய், இது என்னடா புது பிரச்சனை" என்று அவனிடம் காட்டினான் தீபக்.
அதைப் பார்த்து விழியை விரித்து வியந்த அதியன், "மச்சி, எனக்கு பதிலா அதுவே பதில் சொல்லவும் ஆரம்பிச்சிருச்சுடா" என்றான்.
அதுவரை அதியன் மனதில் நினைக்கும் வார்த்தைகளை மட்டும் அதற்கு உரியவரிடம் மெஸேஜாக அனுப்பிக்கொண்டிருந்த வாட்ச், அவனுடைய ஒரு முத்தத்தில் கிறங்கிப்போய், அவனுக்குப் பதிலாக இதுவே பதில் சொல்ல ஆரம்பித்திருந்தது.
"இனி உனக்கு பேசுற வேலை கூட இல்லடா.." என்று கையெடுத்துக் கும்பிட்டான் தீபக்.
தீட்சண்யாவோ வந்ததிலிருந்து தன்னைப் பார்க்காமல் தீபக்குடன் பேசி விளையாடும் அதியனால் கடுப்பாகி, முகத்தை ஒரு முழத்திற்குத் தூக்கி வைத்துக் கொண்டாள்.
வெகுதாமதாய் தன்னவள் முகம் பார்த்த அதியன், 'இவ வேற, நேரம் காலம் தெரியாம கோச்சுக்குறா.. இவள எப்பிடி சமாதானம் பண்ணுறது?..' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, தீட்சண்யா தன் கைப்பேசியில் ஒளிர்ந்த மெஸேஜ்ஜை எடுத்துப் பார்த்தாள்.
'என்னடா செல்லம், கோபமா? நான் என்ன பண்ணட்டும்? அந்த மடையன் கரடி மாதிரி குறுக்கக் குறுக்க வந்துட்டே இருக்கான். அவன நாலு சாத்து சாத்துறத விட்டுட்டு என் தங்கம் எங்கிட்ட கோபிக்கலாமா?
நானே எத்தனை மணி நேரம் கழிச்சு உன்ன பார்க்க வந்திருக்கேன்? உனக்காகத்தான் ரொம்ப பெரிய ரிஸ்க் எடுத்து வந்தேன், நீ இப்படி முகத்த தூக்கி வச்சிருந்தா நல்லாவா இருக்கு? கொஞ்சம் சிரிடா, ப்ளீஸ்டா செல்லம்' என்றிருக்க,
'தன்னவன் தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறான்!!..' என்றறிந்த பேதைக்கு மனம் ரெக்கை கட்டிப் பறந்தது.
ஆசை தாளாமல் அவளும் அவனைப் பார்த்துச் சிரித்தாள். அதியனுக்கு விளங்கிவிட்டது..
'போனை பார்த்துட்டு சமாதானம் ஆகிட்டா, அப்படினா வாட்ச் அவளுக்கும் மெஸெஜ் அனுப்பி இருக்கும்... என்ன அனுப்புச்சுனு தெரியலையே?! சமாளிப்போம்..' என்று அவளை நெருங்கிச் சென்றான்.
அஞ்சன விழியாள், தன் ஆசைக் காதலனின் மீசை தவழும் வதனத்தை மெதுவாய் நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் விழியில் தோன்றிய நயனங்களால் தன்வசம் தொலைத்திருந்த அதியன், "தீட்சண்யா.. நான்.." என்று பேச ஆரம்பித்த நேரத்தில், அவனுக்கு போன் வந்துவிட்டது..
'அந்த சொட்டைதான்.. இர்றா உன்ன இன்னிக்கி பொலி போடுறேன்..' என்று போனை எடுத்துப் பேசினான்.
"எஸ் சார், இதோ வரேன் சார்" என்று சொல்லி போனை வைத்தவன், அவளிடம் பார்வையாலேயே விடை பெற்றுவிட்டு, அவருடைய ரூமிற்குச் சென்றான்.
அவன் உள்ளே வந்ததும், "என்னடா நினைச்சுகிட்டு இருக்க நீ? பரதேசி, சொட்ட மண்டை, வெளங்காதவன்னு உன் இஷ்டத்திற்கு மெஸேஜ் அனுப்பற? அவ்ளோ கொழுப்பாயிடுச்சா உனக்கு? நான் நினைச்சா இந்த நிமிஷமே உன்னை இந்த வேலையிலிருந்து தூக்க முடியும் தெரியுமா?" என்றார்.
'எங்கே தூக்கிப்பாரு, அதுக்கப்புறம் இந்தக் கம்பெனியே இருக்காது..' என்ற மெஸேஜ் அவருடைய செல் போனில் வந்து விழுந்ததிற்கு அடையாளமாய் அது ஒளிர்ந்து அடங்கியது.
அதைப் பார்த்து டீம் ஹெட்டுக்கு இன்னும் கோபம் வர, "உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணுடா, இனிமே நீ வேலைக்கு வரவேண்டாம்" என்றார்.
அவ்வளவு தான், அங்கிருந்த எல்லா கம்ப்யூட்டரும் ஒரே நேரத்தில் செயலிழந்து விட்டது..
அனைத்தும் ஒருமிக்க தன் உயிரோட்டத்தை நிறுத்தியதைக் கண்டு அலுவலகமே ஸ்தம்பித்துப் போனது..