கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உலக உணவு தினமாம்

உலக உணவு தினமாம் இன்று...

ஒருவேளை உணவுக்கு
மூன்று லட்சம் செலவிடும்
சிக்கனமான கூட்டத்தின் நடுவில்

ராத்திரிக்கு அரைஇட்லி வேண்டுமென
பதுக்கி வைக்கும் பணக்கார
கும்பலும் அலைகிறது நம்மோடு...

வகைவகையான பதார்த்தங்களை
வரிசையாக வைத்துக்கொண்டு
செல்ஃபி எடுத்து அனுப்பிக்கொண்டு
பாதி உணவை குப்பைக்கு செல்ல
சேவை உணர்வுடன் சிலர் இருக்க

குப்பைத்தொட்டிக்குள் விழும் உணவை
குடும்பத்தோட சாப்பிட
நாய்களுடனும் போராடி
மகிழ்ச்சி கொள்கிறது ஒரு கூட்டம்...

சோற்றுக்கு வக்கில்லாத உனக்கு
குடும்பம் எதற்கு?
குழந்தை எதற்கு?
வசைபாடி காரி உமிழ்ந்து
எட்டி உதைத்திடும் நல்லவர்கள் மத்தியில்

பிஞ்சு குழந்தையின்
நஞ்சு பசியினை போக்கிட
மனைவியின் நெஞ்சமிர்தத்திற்கு
இரத்தத்தை சிந்திடும் ஆண்மகனின்
கண்ணீரிலும் வியர்வையிலும்
காய்கிறது பணம் படைத்தவனின்
தாரளமான சம்பள கொள்கைகள்....

ஆடவனின் உடல் பசி போக்கி
உதிரம் வழியும் யோனியோடு
உதட்டு சிரிப்பினில்
பிள்ளைக்கு சோறு போடுகிறாள்
விட்டு சென்ற கணவனையும்
விலகி சென்ற காதலனையும்
சபித்து கொண்டே பெண்ணொருத்தி....

தனக்கு பிடித்த உணவென்று
ஆர்பாட்ட நடந்திடும் உணவகத்தில்
தான் சமைத்தவற்றின் ருசிகூட
தெரியாமல் வாழ்ந்திடும்
ஊழியர்கள் எத்தனை பேரடா???

எங்கு தேடி பார்த்தாலும்
உல்லாச பயணங்களில்
மதுகிண்ணத்திடன் ஏழைகள் மகிழ்ந்திட
ஒட்டுபோட்ட ஆடையில்
வற்றிய வயிறோடு
ஆனந்த கண்ணீரில் அழுகிறது

சமநிலை கொண்ட
பிரபஞ்சத்தின் கொள்கையிலே
உணவினை பதுக்கி
உலவிடும் கூட்டத்தின்
நரகப்பிடியில் மாட்டிக்கொண்டு
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
உணவின்றி தவிக்கும்
உயிர்கள் வாழ்கிறது ஒவ்வொரு நொடியும்....

பசியால் போகும் உயிர்கள்
நிற்கும் வரை
பாரதியின் முழக்கம்
திக்கெட்டும் பரவட்டும்...

- சேதுபதி விசுவநாதன்


#உலக_உணவு_தினம்
 

Nagaveni A

New member
உலக உணவு தினமாம் இன்று...

ஒருவேளை உணவுக்கு
மூன்று லட்சம் செலவிடும்
சிக்கனமான கூட்டத்தின் நடுவில்

ராத்திரிக்கு அரைஇட்லி வேண்டுமென
பதுக்கி வைக்கும் பணக்கார
கும்பலும் அலைகிறது நம்மோடு...

வகைவகையான பதார்த்தங்களை
வரிசையாக வைத்துக்கொண்டு
செல்ஃபி எடுத்து அனுப்பிக்கொண்டு
பாதி உணவை குப்பைக்கு செல்ல
சேவை உணர்வுடன் சிலர் இருக்க

குப்பைத்தொட்டிக்குள் விழும் உணவை
குடும்பத்தோட சாப்பிட
நாய்களுடனும் போராடி
மகிழ்ச்சி கொள்கிறது ஒரு கூட்டம்...

சோற்றுக்கு வக்கில்லாத உனக்கு
குடும்பம் எதற்கு?
குழந்தை எதற்கு?
வசைபாடி காரி உமிழ்ந்து
எட்டி உதைத்திடும் நல்லவர்கள் மத்தியில்

பிஞ்சு குழந்தையின்
நஞ்சு பசியினை போக்கிட
மனைவியின் நெஞ்சமிர்தத்திற்கு
இரத்தத்தை சிந்திடும் ஆண்மகனின்
கண்ணீரிலும் வியர்வையிலும்
காய்கிறது பணம் படைத்தவனின்
தாரளமான சம்பள கொள்கைகள்....

ஆடவனின் உடல் பசி போக்கி
உதிரம் வழியும் யோனியோடு
உதட்டு சிரிப்பினில்
பிள்ளைக்கு சோறு போடுகிறாள்
விட்டு சென்ற கணவனையும்
விலகி சென்ற காதலனையும்
சபித்து கொண்டே பெண்ணொருத்தி....

தனக்கு பிடித்த உணவென்று
ஆர்பாட்ட நடந்திடும் உணவகத்தில்
தான் சமைத்தவற்றின் ருசிகூட
தெரியாமல் வாழ்ந்திடும்
ஊழியர்கள் எத்தனை பேரடா???

எங்கு தேடி பார்த்தாலும்
உல்லாச பயணங்களில்
மதுகிண்ணத்திடன் ஏழைகள் மகிழ்ந்திட
ஒட்டுபோட்ட ஆடையில்
வற்றிய வயிறோடு
ஆனந்த கண்ணீரில் அழுகிறது

சமநிலை கொண்ட
பிரபஞ்சத்தின் கொள்கையிலே
உணவினை பதுக்கி
உலவிடும் கூட்டத்தின்
நரகப்பிடியில் மாட்டிக்கொண்டு
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
உணவின்றி தவிக்கும்
உயிர்கள் வாழ்கிறது ஒவ்வொரு நொடியும்....

பசியால் போகும் உயிர்கள்
நிற்கும் வரை
பாரதியின் முழக்கம்
திக்கெட்டும் பரவட்டும்...

- சேதுபதி விசுவநாதன்


#உலக_உணவு_தினம்
True words😒
 
Top