கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஊரடங்கில் ஒருவன்....முகமது ஆசிக்

Latha S

Administrator
Staff member
ஊரடங்கில் ஒருவன்

கதிரவன் – உலகிற்கு முன் எழும்புவதலோ அவனுக்கு இப்பெயர் சூட்டினர். சிறு வயது முதலே சோர்வின் அர்த்தம் அறியாது கல்லூரி படிப்பு, தந்தையோடு மளிகை கடை வேலை, நண்பர்களோடு கொண்டாடம் என்று உலகம் சுற்றியவன் இன்று ஊரடங்கின் காரணமாய், அலுவலக பணி புரிய சென்ற இடத்தில் ஒருவனாய் சிக்கிக்கொண்டான். சுற்றம் சூழ வாழ்ந்தவன் தனிமையின் ருசி முதல் முறை காண்கிறான். உலகம் அறிந்தவனுக்கு இணையம் அறியாமலில்லை. வெளிநாட்டு தொடர் தொடங்கி நேரம் கடத்த ஆரம்பித்தவன், நாட்கள் செல்ல செல்ல அதன் நுணுக்கங்கள் கற்க ஆரம்பித்தான். சில நேர்ங்களில் வாழ்வதற்க்கு பச்சோந்தியின் வண்ணமும், நணபர்கள் மட்டுமே வாழ்வில் நடுநிலையானவர்கள் என தன் வாழ்வோடு ஒப்பிட்டு புரிந்து கொண்டான். தொடர்கள் சலிப்பு ஏற்படுத்த தொடங்கிய தருணம் சிறு வயதில் நேரம் கடத்த என் செய்தேன் என சிந்திக்க தொடங்கினான், கண் இமைக்கும் நேரத்தில் அவன் சிந்தையில் உதித்தது அவனை எப்பொழுதும் உற்ச்சாக படுத்தும் ஜப்பானிய நாட்டு கேலிக்கை சித்திரம். இணையம் அலசி அவற்றின் இணைய பதிவுகள் கண்டறிந்து காண தொடங்கினான். ஒவ்வொரு பதிப்பும் அவனுக்கு சிறு வயது ஞாபங்களை கொடுத்தன. சகோதரனோடு பிடித்த சித்திரத்திற்காக செய்த சண்டைகள், அம்மா செய்து தரும் மாலை நேர இனிப்புகள், தேர்வு நேரங்களில் அவற்றை பார்க்க கொண்ட ஏக்கங்கள் என அனைத்து ஞாபகங்களும் அவன் கண்ணில் ஆனந்த கண்ணீரை கொடுத்தன. சித்திரம் மொத்தமும் நிறைவு பெற, திரைப்படங்களின் பக்கம் அவன் திசை திரும்பியது, சிறு வயது முதல் குறுகிய திரைப்படங்கள் கண்ட அவனுக்கு கடல் அளவு திரைப்படங்கள் வரவேற்று நின்றது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என படித்தவன் அல்லவோ!! மொழி பாகுபாடின்றி அனைத்தும் பார்த்தான், சில நேரங்களில் கண்ணீரும், பல நேரங்களில் ஆச்சரியங்களும் அவனுக்கு பரிசாய் அமைந்தன. கவலையின்றி சென்று கொண்டிருந்த அவன் நாட்களோடு தனிமை விளையாட தொடங்கியது. அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு உணவு விடுதிகள் மூட, கதிரவன் உணவிற்க்கு என் செய்வதன குழம்பி நின்றான். சமையலில் அ-ஆ அறியாதவன் ஆதியாய் அடுப்பங்கறை நுழைந்தான், அம்மா சமையல் செய்வதை ஆண்டுகள் பல கண்டவன் ஆயிற்றே – அதன்படி பொருட்கள் பல வாங்கி அதே போல் சமையல் மேற்க்கொண்டான். சமையலின் முடிவில் ருசி அவனுக்கு கண்ணீரை வரவழைத்தது, ஆனால் இம்முறை ஆன்ந்த கண்ணீர் அல்ல காரத்தின் அனல் தாங்காது வந்த கண்ணீர். அன்று அவனுக்கு பழங்கள் மட்டுமே உணவாக, அடுத்த நாள் முதல் இணைய நன்பணின் உதவியோடு சமையலில் ஈடுபாடானான். நாட்கள் நகர அவன் சமையலினின் ருசியும் மெருகேறியது. 30 ஆண்டுகாலங்களாக அவனது அம்மா அனுபவிக்கும் சமையல் சிரமமும், உணவு பறிமாறும் நேரத்தில் அவளது சிரிப்பையும் எண்ணி பார்த்த போது கதிரவனின் கண்ணில் கண்ணீர் அருவி பெருக்கெடுத்தது. அலுவலக பணியோடு சமையல் பணியும் சேர்ந்து அவனது உடலையும் மனதையும் சோதிக்க தொடங்கின. தொடர்களும், கேலிக்கை சித்திரங்களும் அவனது சோர்வை போக்க முயன்று தோற்றுபோனது. கதிரவன் வாழ்வின் நிலை எண்ணி முதல் முறை கலங்கி நின்றான். அவனது கலக்கம் காதில் கேட்டாற் போன்று அவனது நண்பணின் அலைபேசி அழைப்பு அவனை அழைத்தது, கலங்கிய அவன் முகம் தாமரையாய் மலர்ந்தது, நண்பர்களோடு அலைபேசியில் அரட்டை அவனது அன்றாடம் ஆனது. அலுவலக வேலை, சமையல்,தொடர்கள், கேலிக்கை சித்திரங்கள், நண்பர்களோடு அலைபேசியில் அரட்டை என கதிரவனுக்கு தனிமையின் வாழ்க்கை இயல்பானது. அனைத்தும் இயல்பாக, அவன் மனம் புதிதாய் வேறொன்றை நோக்கி செல்ல ஆரம்பித்தது, தன்னை மட்டுமே சிந்தித்து கொண்டிருந்தவன் சமூகத்தின் மீது சிந்தனை கொண்டான், மதங்கள் தாண்டி மனிதமே நிலையானது என அறிவு பெற்றான். உயிர் கொல்லி நோயின் பரவும் முறைகள் குறித்தும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பாமர மக்கள் அறியும் வகையில் ஒளிப்படம் ஒன்று உருவாக்கி இனணயத்தில் பதிவு செய்தான். இனணய வழியில் நலிந்தோர் சிலருக்கு பண உதவியும் செய்தான். தனிமையை கடக்க அவன் எடுத்த ஒவ்வொரு முயற்சிகளும் அவன் வாழ்வில் கண்டிராத புதிய அனுபவங்களை பொக்கிஷமாய் கொடுத்தன. இவ்வாறு நாட்கள் செல்ல கதிரவனுக்கு தனிமை பழகி போனது, என்ற போதும் அவன் தன் குடும்பதை எண்ணி கண்ணீர் சிந்தா நாளில்லை. ஒவ்வொரு நாளும் அவன் தன் குடும்பத்தோடு இணையும் நாளாகவே கருதினான். அவன் காத்திருந்த அந்நாளும் வந்தது, இறுதியாக அவன் ஊருக்கு செல்ல அரசு அவனுக்கு அனுமதி வழங்கியது. அவனும் அடக்கிய ஆசைகளோடும் ஏக்கங்களோடும் தன் பயணத்தை சாலை வழி மார்க்கமாய் தொடங்கினான். அதற்கு முன் தன்னோடு ஒருவனாய் இருந்த அந்த அறையை கண்டு பெரு மூச்சு விட்டான், அந்த ஓர் மூச்சு கூறியது அவன் பெற்ற அத்தனை அனுபவங்களையும். அவனது பயணம் வான் உயர்ந்த கட்டிடங்களில் தொடங்கி, பரந்து விரிந்த மரங்களின் வழி நகர்ந்து, தூய ஆற்றுப்படுகைகளின் வழியே நுழைந்து, வெயிலின் வெப்பம் பிடித்து, காற்றின் ஈரம் கடிந்து, அன்பு மட்டுமே நிறைந்த அவனது இல்லதில் நிறைவடைந்தது. முகத்தில் ஏக்கத்தோடு காத்திருந்த அவனது அன்னைக்கு கதிரவனின் சிர்ப்பு புத்துணர்ச்சியை கொடுத்தது. அம்மாவின் முகம் கண்ட கதிரவன் கட்டியணைத்து கண்ணீர் விட்டான். அந்த கண்ணீரில் கரைந்தது அவன் தனிமையில் கொண்ட வலிகள், ஏக்கங்கள், அச்சங்கள் அனைத்தும்...





கட்டமைத்தவன்

முகமது ஆசிக்
 
Top