எதிர்மறை வினையெச்சம்
அத்தியாயம் 2
ஆன்டி ஹீரோ பற்றி இன்னும் கொஞ்சம் அலசுவோம்.
நடிகர் திலகம் ஆன்ட்டி ஹீரோ பாத்திரங்களாக எடுத்துத் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார்.
பாகப்பிரிவினை படத்தில் வரும் மாற்றுத் திறனாளி, படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் முரடன், ஞான ஒளி படத்தில் சந்தர்ப்பவசத்தால் கொலை செய்து விட்டு ஓடி ஒளியும் குற்றவாளி, புதிய பறவை படத்தில் மனைவியின் மரணத்துக்குக் காரணமான கணவன் என்று விதவிதமான ஆன்ட்டி ஹீரோ பாத்திரங்களாகத் தத்ரூபமாக நடித்திருந்தார். ஆனால் எந்தப் பாத்திரமும் பெண்கள் மீது வன்முறை காட்டவில்லை.
'தி காட் ஃபாதர்' ( The God father) என்ற ஆங்கில நாவல், புகழ்பெற்ற நாவலாசிரியர் மரியோ பூஸோ ( Mario Puzo) அவர்களால் எழுதப்பட்டுத் திரைப்படமாகவும் வந்தது. நடிகர் மார்லன் பிராண்டோ கதையின் முக்கிய கதாபாத்திரம். ஒரு மாஃபியா குடும்பத்தின் தலைவன். இந்த ஆன்ட்டி ஹீரோ, தனது நடிப்பால் ஆஸ்கார் விருதையே வென்றார்.
இந்தப் படத்தைத் தழுவியே உலகெங்கும் பற்பல ஆன்ட்டி ஹீரோ கதைகள் வந்து வெற்றி நடை போட்டன.
தமிழில் பார்த்தால்
நாயகன், தேவர் மகன், ஹிந்தியில் தயாவான், சர்க்கார் இன்னும் பற்பல திரைப்படங்கள் இதை அடியொற்றியே வந்துவிட்டன. இன்னமும் வந்துகொண்டே இருக்கின்றன.
கொள்ளையடித்து மக்களுக்கு உதவும் ராபின் ஹுட் பாத்திரம் கூட ஆன்ட்டி ஹீரோ தான். 'ஓ சொல்லறியா மாமா' என்று பாடும் சமந்தாவுடன் சேர்ந்து ஆட்டம் போடும் புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனும் ஆன்ட்டி ஹீரோவாகத் தான் வருகிறார்.
ஆன்ட்டி ஹீரோயின் என்று பார்த்தால் முதன்முதலில் நம் நினைவுக்கு வருபவள், பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி தான்.
அலசல் தொடரும்.
அத்தியாயம் 2
சக்தி டிஜிட்டல் சொல்யூஷன்ஸின் மேனஜிங் டைரக்டர் அறை காற்று பதனாக்கியின் மூலம் குளிரூட்டப்பட்டிருக்க, அங்கு நின்று விழித்துக் கொண்டிருந்த அருவியின் முன் நெற்றி முத்து முத்தான வியர்வைத் துளிகளைத் தாங்கிக் கொண்டிருந்தன.
உலகப்புகழ் பெற்ற மார்வெல் சீரிஸின் பிரபலமான பெண் வடிவமான ‘ரோக்’கின் உலோக வடிவம் பச்சை நிற வண்ணத்தில் பாங்காய் ஜொலித்துக் கொண்டிருக்க, அதற்கு அருகே சம்மந்தமே இல்லாமல் ஒரு பிங்க் வண்ண ஆளுயர டெடி பியர் பொம்மை பெருமூச்சுவிடுவது போல் பருத்து அமர்ந்திருந்தது.
‘இது எப்படி இங்கே வந்தது?’ என அவள் ஆராயும் முன்னரே, மேஜையின் மேல் வீற்றிருந்த பெரிய சைஸ் பூங்கொத்து சுகந்த மணத்தை அவள் நாசியில் நிறைத்தது. அதன் அருகே ராயல் நிறமான ஊதா வண்ண சாக்லேட் பாக்ஸ் என்னையும் கொஞ்சம் கவனியேன் என்று கண்ணடித்துக் கொண்டிருந்தது.
‘ஆத்தாடி! இன்னிக்கு பெரிய வில்லங்கம் வரப் போகுதே!’ என நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டிருந்தவள் அறைக் கதவு திறக்கப்படுவதைக் கண்டு மேலும் பதட்டமடைந்தாள்.
“காலை வணக்கம் அருவி! இன்றைய நாள் இனிமையானதாக இருக்கட்டும்!” என்றபடி உள்ளே நுழைந்த மென்னிலா, அறையின் உள்ளே எம்மதமும் சமம் என்பது போல் அனைத்து மத குறியீடுகளும் வீற்றிருந்த சிறு மரப்பலகையின் முன் இரண்டு நிமிடங்கள் கண் மூடி நின்றாள்.
அவள் அணிந்திருந்த ஆகாய வண்ண பருத்தி உடையும், அதற்கு மிகப் பொருத்தமாக அணிந்திருந்த மேக்கப்பும் அவளை தேவதையாய் காட்டியது.
சிரித்தபடி முகம் திரும்பியவள், ரோக் சிலையின் பக்கத்தில் இருந்த டெடியைக் கண்டதும், முகம் சிறுக்க, “அருவி, யாரு இதை இங்க கொண்டு வந்தது? இது என்ன பூங்கொத்து? சாக்லேட்டு? சே இதெல்லாம் தூக்கிக் குப்பையில் போடு முதல்ல!” என்றவளிடம் மெல்ல மேஜையில் இருந்த கடிதத்தை எடுத்து நீட்டினாள்.
“என்னது இது? ஏதாவது ரெகமெண்டேஷன் லெட்டரா!” என்று அலட்சியமாகக் கடிதத்தைப் பிரித்தவள், அதே அலட்சியத்துடன் தோள்களைக் குலுக்கிய படி, அதைச் சுக்கு நூறாகக் கிழித்து காலின் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டாள்.
எதிரில் திருதிருத்திருந்த அருவியைப் பார்த்து, “ஹா என்ன பாக்குற! எவனோ மாறனாம் காதல் தூது அனுப்பியிருக்கான். அதுக்கு தான் இந்த சோம்பேறிக் கரடி பொம்மையையும், ஒரே நாள்ல வாடிப் போகுற பூக்களையும், பல்லுல சொத்தை உண்டு செய்யுற ஹை கேலரிஸ் சாக்லேட்ஸையும் அனுப்பியிருக்கான். நீ என்ன செய்யுற இதெல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, நம்ம செக்யூரிட்டியை வந்து ரிசைன் பண்ணிட்டுப் போகச் சொல்லு!” என்றாள் மென்குரலில்.
“என்ன நிலா! செக்யூரிட்டி விட்டதால தான் எவனோ ஒருத்தன் வந்து இதெல்லாம் வெச்சுட்டுப் போயிருக்கான், அதுனால அவங்களை டிஸ்மிஸ் தானே செய்யணும்” என்று கேட்டபடி, ‘உன் டிசைன் இத்தனை நாளா கூட இருந்தும் எனக்குப் புரியலியே!’ என்பது போல் விழித்தாள் அருவி.
“டிஸ்மிஸ் செஞ்சா வேற இடத்துல அவளுக்கு வேலை கிடைக்காதுல்ல அருவி, அவளுக்கு வேலை வேண்டாம். ஆனா அவ பசங்களுக்கு அதுல இருந்து வர காசு வேணுமே. சரி, நான் சொன்ன அந்த நாலு அங்கிள்ஸும் வந்துட்டாங்களான்னு பாரு!” என அருவியை வெளியே விரட்டியவள், தன் கணினியை உயிர்ப்பித்தாள்.
“நிலா! அந்த கிஃப்ட் அனுப்புனவனைப் பிடிக்கலைன்னா பரவாயில்லை, ஆனா கிஃப்ட்ஸ் எல்லாம் நல்லாத்தானே இருக்கு!” என பிங்க் வண்ண டெடியை இடுப்பில் வைத்துக் கொண்டபடி அருவி கேட்டாள்.
“கண்ணு அருவி! காதல் சோறு போடுமா பேபி? காசு தானே சோறு போடும்! இன்னிக்கு பொம்மையைக் குடுப்பானுங்க, நாளைக்கு பொம்மை மாதிரி அவன் பேச்சுக்கெல்லாம் தலையாட்டணும்னு சொல்லுவானுங்க. பீ கேர்ஃபுல் பேபி, உன் சோ கால்ட் முகம் தெரியாத பெத்தவங்க காதலால தானே நீ குப்பைத் தொட்டியில் கிடந்த, இன்னிக்குக் காசால தான் டபுள் பெட்ரூம் ஃப்ளாட் ஓனரா இருக்கன்னு மறந்துடாத!” என குரலில் குழைந்தாலும் முகத்தில் தீவிரம் காட்டினாள் மென்னிலா.
அன்றொரு நாள் அவளின் கம்பெனியைப் பற்றித் தவறாக பேசிய ஆண்கள் நால்வரும் மிகப் பதட்டத்துடன் வெளியே காத்திருந்தனர்.
“அந்த பொண்ணுக்கு இவ்வளவு வாய்ஸா! நம்ம எல்லாரும் இங்க எப்படி வேலை செய்யப் போறோம்? பயமா இருக்கே!” என்று நெற்றி வியர்வையை தன் கைக்குட்டையால் துடைத்தபடி அன்று மென்னிலாவை அவதூறாகப் பேசிய வாய் இப்போது தந்தியடித்துக் கொண்டிருந்தது.
“சும்மா இரு, பழைய ஆபீஸ்ல கிடைச்சதை விட இங்க டபுள் மடங்கு சம்பளம்!” என்றது வெள்ளைச் சட்டை
“அதுக்குன்னு திமிர் பிடிச்ச லேடி கிட்டல்லாம் என்னால வேலை பார்க்க முடியாது, ஆமாம்” என்று வீராப்புடன் சொன்னது மற்றொரு வாய்.
வெள்ளைச் சட்டை, “ஹா ஹா, அவங்க லேடி மட்டுமில்ல கேடியும் கூட, இப்ப நம்மகிட்ட இருக்குறது இரண்டே ஆப்ஷன், ஒண்ணு இந்த வேலையில ஜாயின் பண்றது இன்னொன்று...”
“அந்த இன்னொரு விஷயத்தை நான் தேர்ந்தெடுத்துக்குறேன்”.
“அப்போ உன் போட்டோவை நாளைக்கே வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்ல போட்டு ரிப்னு போட வேண்டியது தான்!” என்றது வெள்ளைச் சட்டை அலட்டிக் கொள்ளாமல்.
“என்னடா சொல்ற?”
“நமக்கு இதை விட்டா வேற வழியில்லைன்னு சொல்றேன். அப்படியே மெதுவா சைட்ல திரும்பிப் பாரு, தடி தடியா ரெண்டு காட்டெருமை ப்ளாக் கேட்ஸா நிக்கிறானுங்கள்ள, அவனுங்களை மீறி நீ நோ சொல்லிட்டு வெளிய போக முடியாது”.
“இவ கம்பெனி முழுக்கப் பொண்ணுங்க தான் இருக்காங்கன்னு நினைச்சோமே! ஆண்களும் இருக்காங்க போலயே, ம்ம் பாடி கார்ட்ஸ் எல்லாம் பயங்கரமான ஆண்களைத் தான் பிடிச்சு போட்டிருக்கா!”
‘தேவதை வடிவில் ஒரு சாத்தானா!’ என்று நொந்து கொண்டே அனைவரும், அவள் அழைப்பிற்காய் காத்திருந்தனர்.
“ஹாய் கைஸ்! மேடம் உங்களை செகண்ட் ப்ளோர்ல உள்ள ஹெச்.ஆரை பாக்கச் சொன்னாங்க, தாங்க்யூ!” என்றுவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டாள் அருவி.
“நாற்பது வயதில் இருக்கும் நாம கைஸா! நேரா போய் ஹெச்.ஆரைப் பார்க்கணுமா! வந்த முதல் நாளே நல்ல மரியாதை தான்” என அவர்கள் முணுமுணுக்கத் துவங்கியதுமே, ஒரு ப்ளாக் கேட் ஆசாமி அவர்களின் அருகே வந்து, “எனி ப்ராப்ளம் சார்? ” என முறைப்போடு கேட்க, சத்தமில்லாமல் மாடிக்குப் போனார்கள் அவர்கள்.
“அருவி எப்படி... நம்மளை தூத்துன வாய் இப்ப நம்ம போடுற பிச்சையில சாப்பிடப் போகுது. என்னை எதிர்த்து யார் நின்னாலும், அவன் என் பக்கம் வந்தாகணும் இல்லைன்னா எமன் பக்கம் தான் போகணும்” என்று காற்றுக்கும் கேட்காத மென்குரலில் அழகாய்க் கண் சிமிட்டிப் பேசுபவளைக் கண்டதும், தேவதை உருவில் ஒரு ராட்சசி என்று உற்ற தோழியான அருவியும் கூட நினைத்துக் கொண்டாள்.
“சரி அந்த கிஃப்ட்ஸ் எல்லாம் டிஸ்போஸ் பண்ணிட்டியா?”
“அது எல்லாம் நல்ல பொருள் நிலா, அதான் ஏன் வேஸ்டா ஆக்கணும்னு நம்ம வொர்கர்ஸ்குக் குடுத்துடச் சொல்லி இப்பத்தான் சூப்பர்வைசர் கிட்டக் குடுத்துட்டு வந்திருக்கேன்”.
“இடியட்! இடியட், அதைத் தூக்கி நம்ம கம்பெனிக்கு வெளியில் உள்ள குப்பைத் தொட்டியில போடு. நீ யாருக்குக் குடுத்தாலும், அவன் நான் எடுத்துக்கிட்டதாத் தானே நினைச்சுப்பான்? இந்த காமன் சென்ஸ் வேண்டாம். உன்னை எல்லாம்... ப்ரெண்டா போயிட்டியேன்னு சும்மா விடறேன். போ, போய் அதை எல்லாம் பிடிங்கி வெளிய எறிஞ்சுடு நீயே உங்கையால தூக்கிப் போட்டுட்டு, அதை உன் மொபைல்ல போட்டோவும் எடுத்துட்டு வா ம்ம்!” என்று நிலா உறுமும் குரலில் கூறினாலும், அவள் முகத்தில் சாந்தம் தவழ்ந்து வழிந்தது.
மென்னிலாவின் உறுமலில் அடுத்த பத்தே நிமிடங்களில், அனைத்துப் பொருட்களும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு, அந்தக் காட்சி அலைபேசி சட்டத்திற்குள் படம் பிடிக்கப்பட்டது.
“அய்யோ! ஆனாலும் அந்த டெடி ரொம்ப அழகா இருக்கே!” எனக் கடைசி கடைசியாய் அதன் முகத்தை இழுத்துப் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் அருவி.
“டேய் விக்னேஷ், நீ சொன்னது சரி தான்டா. மாறன் சார்பாக நான் அனுப்புன கிப்ட்ஸ் எல்லாம், இப்ப குப்பைத் தொட்டியில கிடக்கு” என சக்தி டிஜிட்டல் சொல்யூஷன்ஸின் வாயிலைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த காரின் உள்ளிருந்து அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் பிரசன்னா.
விக்கி, “சரி அப்ப என் ப்ளானை ஒர்க் அவுட் பண்ணு, அவளைத் தூக்கிடு”
“அவ என்ன லாலா கடை லட்டா அப்படியே அலேக்கா தூக்க, அவளைச் சுத்தி எப்போதும் நாலு பாடிகார்ட்ஸ் தடிதடியா இருக்காங்க. அதுவும் இல்லாம அவளுக்குத் தற்காப்புக் கலையும் அத்துப்படியாம்டா!”
“ம்ம் அன்பால அடக்க முடியலை. அடாவடி செஞ்சும் அடக்க முடியாதா! அப்படி யாருடா அந்தப் பொண்ணு, அவ பெயர் என்னடா?”
“தூக்க ப்ளான் போட்டியே! பெயரைக் கேக்காம விட்டுட்டியே! அவங்க பெயர் மென்னிலா”.
“நல்ல பேரு தான் போ”.
“ஆமாம் ஆமாம், உன் பேரு மாதிரி. வினை தீர்ப்பவன் விநாயகன் பெயரான விக்னேஷ்னு வெச்சுக்கிட்டு வினையை உருவாக்குற வேலையை மட்டும் தானே நீ செய்யுற? நானே ஏதாவது கஷ்டப்பட்டு யோசிச்சு ஐடியா பண்ணிக்கிறேன் விடு. இந்த ஜுஜுபியை நான் பாத்துக்குறேன். நீ மத்த கான்ட்ராக்ட் வேலைகளை கவனி” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்து விட்டு நெற்றியை தட்டியபடி அமர்ந்திருந்தவனுக்கு அருவி நினைவில் வந்தாள்.
கடைசியாகக் கரடி பொம்மையின் கன்னம் கிள்ளிப் போனவளின் கனிவான உள்ளம், அவனை வேறு ஒரு திட்டம் தீட்ட வைத்தது. பிரசன்னாவிற்கு கிடைத்திருந்த தகவல்களின் அடிப்படையில் நிலாவிற்கு சொந்தம் என்று யாரும் கிடையாது. அவளுக்கு ஆதரவாய் இருப்பது அவளின் உயிர்த் தோழி அருவி தான்.
‘செம்ம! அந்த அருவியைத் தூக்கி நம்ம கார் டிக்கியில் போட்டுட்டா காட்டாறு தானா நம்ம பின்னால வரப் போகுது! இவளை எப்படி தூக்குறது’ என ஸ்டியரிங் வீலின் மீது விரலால் தீவிரமாக தட்டிக் கொண்டிருந்தவனை கார் கண்ணாடியைத் தட்டும் ஒலி கேட்டது.
செக்யூரிட்டி சீருடையில் இருக்கும் ஒரு பெண்மணி கதவைத் தட்டிக் கொண்டிருந்தாள்.
கார் கண்ணாடியின் கதவை லேசாக கீழே இறக்கியவன் என்ன என்று பார்வையாலேயே கேட்க, “சார், கொஞ்சம் கீழ இறங்குங்களேன். உங்களை கம்பெனிக்குள்ள விட்டதால என் வேலை போச்சு சார்!” என அழுது அரற்றத் தொடங்கினாள்.
“என்னம்மா சொல்ற, இதுக்குப் போயா உன்னை வேலை விட்டுத் தூக்கினாங்க! சரி என் வண்டியில ஏறு. என் கம்பெனியில் உனக்கு வேலை தரேன்” என்று அவள் மூலம் ஏதேனும் துப்பு கிடைக்குமா என்பதற்காக அப்படி பேசினான்.
“வேண்டாம் சார்” என்று அவள் அழுததைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் வாய்க்குள் வலிய கரம் ஒன்று நொடிப் பொழுதில் துணி அடைத்தது. கைகள் இரண்டும் பின்புறம் கட்டப்பட்டு அவன் காருக்குள்ளேயே அவனை உள்ளே தள்ளினர்.
“மேடம்! அவனை அமுக்கியாச்சு” எனக் கருப்பு உடை ஆஜானுபாகு பேச, “ஓகே, அவனைக் கூட்டீட்டு நம்ம கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்க்கு போங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல நான் வரேன். இப்போதைக்கு செக்யூரிட்டி கிட்ட அவன் மொபைலை மட்டும் குடுத்து அனுப்புங்க! என்று சொல்லிவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அமர்ந்து பழரசம் பருகிக் கொண்டிருந்தாள் மென்னிலா.
--- பைரவி வருவாள் ---