எதிர்மறை வினையெச்சம்
அத்தியாயம் 6
ஆன்ட்டி ஹீரோ, வில்லனுக்கு எதிராக எப்படி வேறுபடுகிறார்?
எளிதில் குழப்பமடைய வைக்கும் விவாதம் என்றாலும், இருவருக்கும் நல்ல வித்தியாசம் இருக்கிறது.
ஆன்ட்டி-ஹீரோ பொதுவாக சரியான விஷயத்தைச் செய்கிறான், ஆனால் எப்போதும் சரியான காரணங்களுக்காக அல்ல .மேலும் பாரம்பரிய ஹீரோக்களிடம் நாம் எதிர்பார்க்கும் பல குணாதிசயங்கள் அவனிடம் இல்லை. தான் நினைத்ததை எப்படி வேண்டுமானாலும் சாதிப்பவன். வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளையோ, நீதி நெறிகளையோ பின்பற்றாமல் எப்படி வேண்டுமானாலும் செயல்பட்டு சாதித்து விடுவான். இங்கு தான் பாரம்பரிய ஹீரோவிடம் இருந்து வேறு படுகிறான்.
வில்லனை எதிர்ப்பதை ஆன்ட்டி ஹீரோவும் செய்கிறான். தவறான காரியத்தைத் தவறான வழியில் கையாண்டு எதிர்க்கிறான். ஆனால் நீதி, நேர்மை என்று பாரம்பரிய ஹீரோ போன்று வகுக்கப்பட்ட பாதையில் செல்வதில்லை.
முள்ளை முள்ளால் எடுக்கலாம் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு வில்லனின் வழிமுறைகளையே கையாள்கிறான். ஆனாலும் அவனுடைய நோக்கங்கள் பெரும்பாலும் உன்னதமானவை . மற்றும் மக்களின் நலனுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவை. சில நேரங்களில் தன்னல நோக்கத்துடன் கூட செயல்படுகிறான். எடுத்துக்காட்டாகத் தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ நேர்ந்த அநீதிகளுக்கு எதிராகப் பழி வாங்கும் செயல்களில் இறங்கும் போது.
என்றாலும், அவன் எப்போதும் சரியான காரணங்களுக்காக செயல்பட மாட்டான்.
சூப்பர்மேன் போன்று நலிந்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய சரியான காரணங்களுக்காக எப்போதும் சரியானதைத் தவறான வழிமுறைகளில் செய்யும் ஹீரோவைப் பற்றி ஏதோ ஆறுதல் இருக்கிறது. ஆனால் கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் குள்ளனான டைரியன் லானிஸ்டர் போன்று சில சமயங்களில் சரியான காரணங்களுக்காகவும், சில சமயங்களில் தவறான காரணங்களுக்காகவும் செய்யும் ஒழுக்க ரீதியில் முரண்பாடான ஆன்ட்டி ஹீரோவும் உண்டு.
ஆன்ட்டி-ஹீரோ கதாபாத்திரம் என்றால் என்ன, அவை ஏன் கதைகளில் மிகவும் பரவலாகிவிட்டன என்பதை இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தொடர்ந்து ஆராய்வோம்.
ஆன்ட்டி-ஹீரோ, வில்லனுக்கு எதிராக எப்படி வேறுபடுகிறார் என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.
பைரவி.
***
வெய்யோன் வரலாமா வேண்டாமா என்று மேகங்களோடு விவாதம் நடத்தி நேரம் தள்ளிக் கொண்டிருந்த அதிகாலை நேரம்.. புறவழிச்சாலையின் ஓரமாய் லப்டப் என்று நூறைத் தொடும் வேகத்தில் இதயம் துடிக்க, அந்த லயத்திற்கு கால்களின் வேகத்தைக் கூட்டியபடி காலையில் குடித்த ஒரு லிட்டர் தண்ணீரையும் ஓடி ஓடி வியர்வையாக மாற்றிக் கொண்டிருந்தான் விக்னேஷ்.
சத்தமே இல்லாமல் அவன் செல்ஃபோன் அதிர்ந்தது. கழுத்தில் தொங்கிய இயர்ஃபோனை எடுத்து காதில் மாட்டியவன், "சொல்லுங்க மாறன் சார்!" என்றான்.
கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த மாறன், "என்ன தம்பி.. அவளைக் கடத்துவோம்; நீங்க வந்து காப்பாத்துங்க.. அதுல பொண்ணு மயங்கிடும்னு சொன்னீங்க.. பாத்தா உங்களைக் காப்பாத்துறதுக்குதான் நான் வரணும் போல!" என்று நக்கலாகக் கேட்டான்.
ஓடுவதை நிறுத்தி மூச்சு வாங்க நின்ற விக்கி, கால்சட்டையின் பின்னே செருகி இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் பாதியும் மற்றதை முகத்திலும் ஊற்றினான்.
எதிர்ப்பக்கம் பதில்குரல் வராததில், "ஹலோ! ஹலோ!" என்று மாறன் இரண்டு முறை குரல் கொடுக்க, வந்த கடுப்பை கஷ்டப்பட்டு அடக்கி பேச ஆரம்பித்தான்.
"நான் என்ன பண்றது மாறன் சார்? நீங்க ஏற்கனவே பல காதல் அம்புகளை ஏவி இருக்கீங்க போல.. அதான் பொண்ணு ரொம்ப கவனமா இருக்காங்க.. ரெண்டு நிமிசம் அவங்க கம்பெனி முன்னே வண்டி நின்னதுக்கே அவங்களுக்கு ரெட் அலர்ட் காட்டிடுச்சி.."
"இதையெல்லாம் முன்னமே நீ யோசிச்சிருக்க வேண்டாமா?"
"யோசிச்சிருக்கணும் தான்.."
ஏதாவது சமாளிப்பான்.. எகிறலாம் என்ற எண்ணத்தில் அழைத்திருந்த மாறன், சட்டென்று அவன் ஒத்துக் கொண்டதில், ஒரு நொடி பேசாதிருந்தான். பின் விக்கியைப் போலவே அமைதியாக, "இப்போ என்ன பண்ணப் போறதா இருக்கே.. அதைச் சொல்லு.." என்றான்.
"ம்ம்ம். அந்தப் பொண்ணு உங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்றது எல்லாம் சான்சே இல்லை.."
"என்னடா சொல்ற!!" உறுமும் அவன் குரலில் காதிலிருந்த இயர்ஃபோனில் ஒரு பக்கத்தைக் கழற்றி தோளில் தொங்க விட்ட விக்னேஷ், "உண்மையைச் சொல்றேன் மாறன் சார்.. உங்க காதல் இதயத்தைக் கழட்டி வச்சிட்டு, அரசியல்வாதி மூளையை வச்சி யோசிச்சிப் பார்த்தீங்கன்னா அது உங்களுக்கும் புரியும்.." என்றான்.
மறுபக்கம் சத்தம் வராமல் இருக்க, "ஏற்கனவே புரிஞ்சுதான் இருக்கீங்களோ?.." என்று சொல்லியபடி மீண்டும் தன் ஓட்டத்தை மெதுவாக ஆரம்பித்தான்.
"இப்ப என்ன செய்யலாம் சொல்லு விக்கி! எனக்கு கண்டிப்பா நிலா வேணும்." மாறனின் குரலில் கொஞ்சம் இளக்கம் தென்பட்டது.
தலையைக் கோதியபடி விக்கி அமைதியாக ஓட்டத்தைத் தொடர, மாறன் தொடர்ந்தான், "நிலா எப்போ மென்னிலா மாறனா மாறுறாளோ, அடுத்த நிமிசம் ப்ராஜெக்ட் உன் கையில் இருக்கும். உனக்கே தெரியும்.. அந்த ப்ராஜெக்ட் அள்ள அள்ள, அள்ளித் தர்ற மகாலட்சுமின்னு"
நெஞ்சில் தோன்றிய நெருடலைத் தூக்கி ஓரமாய் வைத்துவிட்டு விக்கி பேசினான், "அந்தப் பொண்ணு லவ் பண்ணி உங்களைக் கல்யாணம் பண்றது நடக்காத காரியம். ஏதாவது இக்கட்டுல அவளை நிப்பாட்டி வேறுவழியில்லாம உங்களைக் கல்யாணம் பண்ண வைக்கலாம்."
மாறன் கொஞ்சம் பரபரப்படைந்தான், "என்ன பண்ணலாம் சொல்லு.. அவ அப்பா அம்மாவை.."
"ஹலோ.. மாறன்.. பாத்துப் பேசுங்க.. அந்த பொண்ணு இப்போ உங்க நம்பரைக் கூட ஹேக் பண்ணி நீங்க பேசுறதை ரெக்கார்ட் பண்ணிகிட்டு இருந்தாலும் இருப்பா.. தூக்கி உள்ளே வச்சிடுவாங்க.." என்று ஒரு நொடி இடைவெளி விட்ட விக்னேஷ், "நாம நேர்ல பாக்கலாம்..", என்றான்.
"எங்கே?"
"எங்கேன்னு நான் மெசேஜ் பண்றேன். வந்துடுங்க.. "
"ம்..சரி" மெலிதாய் வந்த மாறனின் குரலில் வந்த எள்ளல் சிரிப்பை அடக்கியபடி அழைப்பைத் துண்டித்து, யூ வளைவடித்து வீட்டை, அதாவது அவர்கள் கம்பெனியை நோக்கி ஓடினான்.
மென்னிலாவைப் பற்றி யோசித்தான். இந்தப் பொண்ணுக்காக இவ்வளோ உருகுறானே.. அந்த அளவுக்கு என்ன இருக்கு அவள்ட்ட? கொஞ்சம் லட்சணமான பொண்ணுதான். ஷப்பி சீக்ஸ் வகையும் கிடையாது; ஒட்டிப் போன கன்னங்கள் வகையும் கிடையாது. இரண்டுக்கும் நடுவில் ஒரு தனிவகை; ரோஸி லிப்ஸா இல்லாம அவளது மாநிறத்துக்கு ஏற்ற சப்போட்டா நிற உதடுகள். ஊரே தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறவ, தன் முடியை மட்டும் அது இஷ்டத்துக்கு விடுவாளா? கர்லி ஹேர்க்கு வாய்ப்பே இல்லை. இழுத்து வாரி, நீண்ட நெடிய பின்னலாகத் தொங்கியது முடி. இப்பொழுது யோசித்தால் இவையெல்லாம் கண்முன் வருகிறது. ஆனால் இவை எதுவும் அவளை முதலில் பார்க்கும்போது அவன் கருத்தில்படவில்லை. . வண்டி வண்டியாக தைரியமும் திமிரும் கொட்டிக் கிடந்த, அகன்று பெரிதாய் விரிந்திருந்த அவள் கண்கள் மட்டும் தான் முதன்முதலில் அவன் கருத்தில் பதிந்திருந்தது.
'என்னால் முடியும்' என்பது தன்னம்பிக்கை என்றால், 'என்னால் மட்டும்தான் முடியும்' என்பது திமிர். கொஞ்சம் திமிர் இருந்தால் அழகுதான். ஆனால் கூடை கூடையாகத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு சுமந்தால் அவளுக்கும் தலைவலி; அவளோடு இருப்பவர்களுக்கும் தலைவலி. ஆனால் யார் யாருக்கோ வரும் தலைவலி பற்றி வருத்தப்பட அவனுக்கு நேரமில்லை.
வி&பி என்ன பெயரிட்டிருந்த மூன்று மாடிக் கட்டிடம் தூரத் தெரிந்தது. விக்னேஷ்- பிரசன்னா கம்பெனி. கீழே தயாரிப்பு இயந்திரங்கள். மேலே அலுவலகம். அதற்கும் மேலே உள்ள அறைகளை அவனும் பிரசன்னாவும் தங்கள் வீடாக மாற்றிக் கொண்டார்கள். கம்பெனி ஆரம்பிக்கும் போது வேலை அதிகமான நாட்களில் பல நாள் அலுவலகத்திலேயே தங்கி, அதுவே வசதியாகத் தோன்ற, மாடியில் அறைகள் கட்டி வீடாக மாற்றிக் கொண்டார்கள். 'கொண்டார்கள்' என்று பன்மையில் சொல்வது தெரிந்தால் பிரசன்னா கம்பெடுத்து வந்து விடுவான். அவன் கதறக் கதற விக்னேஷ் முடிவெடுத்து அவனையும் கூட்டிக் கொண்டு வந்து அங்கேயே தங்க வைத்து விட்டான்.
"டேய்.. தூங்கும் போதாவது நிம்மதியா தூங்க விட மாட்டியா? எனக்கு என் ப்ரைவசி ரொம்ப முக்கியம்!" என்று பொங்கிய ப்ரசன்னாவை ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்து வைத்திருக்கிறான்.
இரண்டாவது மாடிக்கு கம்பெனியின் வெளியே இருந்துதான் படிக்கட்டுகள். இரண்டு வாசல்களுடன் இருவருக்கும் கிட்டத்தட்ட தனி வீடு போலத்தான். சமையலறை கூட இரண்டு வீடுகளிலும் உண்டு. ஆனால் மூன்று வேளையும் சாப்பாடு வெளியிலிருந்து வந்து விடுவதால் சமையலறை காபி போடும் அறையாக மட்டும் தன் பணியாற்றி வருகிறது.
தன் அறைக்குள் நுழைந்த விக்னேஷ், சந்திக்க வேண்டிய இடத்தை மாறனுக்கு தகவல் அனுப்பிவிட்டு குளிக்கச் சென்றான்.
அதே நேரத்தில் மைக்கேல் மதன காம ராஜன் கடமையே கண்ணாக உயரதிகாரிக்கு சல்யூட் அடிக்கும் காவலரின் விறைப்போடு நின்று தான் கொண்டு வந்த செய்தியை மென்னிலாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். பக்கத்தில் அருவி ஆர்வமாய் அமர்ந்திருந்தாள். பின்னே ப்ரசன்னாவைப் பற்றிய பேக் க்ரவுண்ட் செக் அல்லவா சொல்லப் போகிறான்.
அவள்கண்களில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து, சிரித்த படி, "அருவி.. நம்ம பேங்க் க்ளையண்ட் கேட்ட அப்ளிகேஷன் டெவலப்மென்ட் டீமிடமிருந்து டெஸ்டிங் டீம் போயிடுச்சான்னு கேட்டுட்டு வர்றியா?" என்றாள்.
சாக்லேட் பிடுங்கப்பட்ட குழந்தை போல உதடு அழுத்தி நிலாவைப் பார்த்தவள், "இப்போவே போகனுமா.. ஒரு ஃபைவ் மின்ட்ஸ் உட்கார்ந்துட்டு போறேனே! கால் வலிக்குது…" என்று இழுக்க, கண்களை சுருக்கி கேலியாய் முறைத்த நிலாவைப் பார்த்து அருவி தலையைச் சொறிந்தாள்.
"உன்னைப் பார்த்தா நீதான் அன்னைக்கு அவனைக் கார்ல வெயிட் பண்ண சொல்லிருப்பியோன்னு சந்தேகமா இருக்கே?" என்று பேனாவை விரல்களில் சுழற்றியபடி நிலா கேட்டாள்.
"அச்சோ.. இல்லை நிலா! அன்னைக்குதான் நான் ஃபர்ஸ்ட் அவனைப் பார்த்தேன்!"
"பார்த்ததும் பிடிச்சிடுச்சா?"
"பிடிக்கலைஐஐஐ.." என்று அவள் ராகமாய் இழுத்து, "கொஞ்சமா ஒரு இன்ட்ரஸ்ட்.. எனக்கே என்ன என்று தெரியலை.." என்று முடித்தாள்.
"சரி.. வா! உன் ஆளு எப்படி கேட்கலாம்.. முதலில் அந்த ப்ரசன்னாவைப் பற்றிச் சொல்லுங்க மைக்கேல்.." என்றாள் நிலா நல்ல தோழியாக.
"ரொம்ப க்ளீன் பார்ட்டி மேடம். பேங்க்ல வேலை பாக்குற அப்பா, வீட்டுல வேலை பாக்குற அம்மா, கல்யாணம் முடிஞ்ச ஒரு அக்கா. ஸ்கூல்ல டாப்பர். படிச்சது கவர்மென்ட் இஞ்ஜினியரிங் காலேஜ், படிச்சி முடிச்சதும் நண்பன் கூட சேர்ந்து கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்ஸ் தயாரிக்கும் கம்பெனி ஆரம்பிச்சிட்டான். அந்த கம்பெனியில் ஒன் ஆஃப் தி பார்ட்னர்."
முகமெல்லாம் பளீரெனக் கேட்டிருந்த அருவியைப் புன்னகையோடு பார்த்து விட்டு, மைக்கேலிடம் திரும்பிய நிலா , "ஓகே.. கூட இருந்தானே.. அவனைப் பத்தி சொல்லுங்க.." என்றாள்.
"ம்.. அவன் அளவுக்கு இவன் கதை நேர் கோடு இல்லை. அப்பா பெரிய சமூக சீர்திருத்தவாதி மேடம். பஞ்சநாயகம்னு அவங்க ஏரியாவின் சிகப்புத் துண்டுக்காரர். ஊரில் யாருக்கு என்ன பிரச்சனைன்னாலும் முன்னாடி நிப்பார். கெமிக்கல் கம்பெனி ஊருக்குள்ளே வராம இருக்குறதுக்காக அப்பா, தாத்தா சொத்தை எல்லாம் அழிச்சி போராடினவர். வெளியே இருந்து ரொம்ப செய்ய முடியலை. பதவி இருந்தா இன்னும் நிறைய செய்யலாம்னு தேர்தல்ல நின்னார்."
"நல்லது செய்யணும்னு தேர்தல்ல நின்னா எப்படி ஜெயிக்கிறது?" என்று அருவி கதை கேட்க, "அதே தான்! எதிர்க்கட்சிக் காரங்க பதவி ஆசை வந்துடுச்சி பஞ்சநாயகத்துக்குன்னு பிரச்சாரம் செஞ்சாங்க.. மக்களும் இதுக்குத்தான் இத்தனை நாள் நல்லது செஞ்சாரான்னு தோக்கடிச்சுட்டாங்க.."
"அதுவரை செழிப்பாயிருந்த குடும்பத்துக்குப் பணக் கஷ்டம். அதைவிட மனக்கஷ்டம். ஒரே பையன். உலகம் தெரியாத மனைவி. சொத்து போனதுக்குக் கூட மனுசன் கவலைப்படலை. யாரும் தன்னைப் புரிஞ்சிக்கலையேன்னு நொந்துட்டார். வீட்டோடே முடங்கிக் கொஞ்ச நாள்ல ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டார். கொஞ்ச நாளில் அவங்க அம்மாவும் இறந்துட்டாங்க"
"அச்சோ!" அருவியேதான்.
"ம்.. விக்னேஷ்தான் அவங்களோட ஒத்தப் பையன் பையன். முதல் லட்சியம் அப்பா மாதிரி ஏமாளியாக இருக்கக் கூடாதுங்குறது தான். இரண்டாவது லட்சியம் பணக்காரனாகுறது. அப்படி பணக்காரனா ஆகுறதுக்கு நேர்வழி, குறுக்கு வழின்னு ரெண்டு இருந்ததுன்னா அதுல குறுக்கு வழியைத் தான் தேர்ந்தெடுப்பான். அது மூலமா ஏதோ இந்த சமூதாயத்தைப் பழி தீர்க்கிறதா அவனுக்கு ஒரு எண்ணம். பல கம்பெனிகள்ல பிரசன்னா விக்னேஷ் ரெண்டு பேருக்கும் வேலை குடுக்க ரெடியாக இருந்தும், சொந்தமாய் கம்பெனி ஆரம்பிச்சதுக்கு விக்னேஷோட பிடிவாதம் தான் முக்கிய காரணம்."
"ம்.. இவங்க ரெண்டு பேருக்கும் மாறனுக்கும் அப்போ எந்த சம்பந்தமும் இல்லை."
"இருக்குது மேடம்.."
"என்ன?" மென்னிலா , அருவி இருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
பல நேரங்களில் குரங்குச் சேட்டைகள் பண்ணினாலும் மைக்கேலை இந்த மாதிரியான முக்கிய அந்தரங்க வேலைக்குத் தேர்ந்தெடுத்த மென்னிலாவின் தேர்வு சரிதான் என மைக்கேல் தன் அடுத்த வார்த்தைகளில் மீண்டும் உறுதி செய்தான்.
"இப்போ அவங்க கம்பெனி அப்ளை பண்ணியிருக்கிற கவர்மென்ட் ப்ராஜெக்ட்க்கு மாறனோட அப்பாதான் முடிவெடுக்குற இடத்தில் இருக்கார்.."
அருவி கண்களை அகலத் திறந்து நிலாவைப் பார்க்க, நிலாவிற்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் இதெல்லாம் வாழ்க்கைப்பாடங்கள். பார்த்த சில நிமிடங்களில் வரும் சிறு சலனங்கள் சலனங்களாகவே போவதற்குத்தான் தகுதியுடையவை என அவளும் தெரிந்து கொள்ளட்டுமே.. ஒரு சதவீத வாய்ப்பாக அவன் உண்மையிலேயே அவளுக்காகக் காத்திருந்தால், நடப்பது நடக்கட்டும்.
குனிந்து கண்களை இறுக மூடி சில விநாடிகள் யோசித்தாள். "எனக்கு இப்போ இந்த மாறனின் தொல்லை போகணும். முள்ளை முள்ளால் எடுக்குற மாதிரி அதுக்கு சரியான ஆட்கள் இவங்க ரெண்டு பேர்தான். நான் அந்த விக்னேஷை மீட் பண்ணனும். அவன் கிட்டப் பேசணும். ரெடி பண்ணுங்க மைக்கேல்.." என்று சொல்லி எழுந்து சென்றாள்.
அடுத்த சில மணி நேரங்களில் காபி கஃபே என்று கண்ணாடியில் இழைக்கப்பட்டிருந்த இடத்தின் நடு இருக்கைகளில் மாறனும் விக்கியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
"எந்த மாதிரி இக்கட்டில் நிறுத்தலாம் விக்கி? ரேப் பண்ணிடவா?"
ஏதோ மிட்டாய் வாங்கலாமா என்பது போல அசால்ட்டாகக் கேட்டவனை மேலும் கீழும் பார்த்த விக்கி, "அப்படி ஏதாவது ட்ரை பண்ணா, ஒன்னு உன்னைக் கொன்னுடுவா.. இல்லை ஜெயில்ல வச்சிடுவா.."
"எங்க அப்பா யாரு தெரியும்தானே?" என்று சண்டையைத் தூக்கி விட்டுக் கொண்டவனைப் பார்த்து மனதுக்குள், மேய்க்கிறது எருமை.. இதுல என்ன பெருமை.. என தலையில் அடித்துக் கொண்டாலும் வெளியே எதுவும் காட்டிக் கொள்ளாமல், "நீங்க ஒரு தைரியமான அறிவாளிப் பொண்ணோட மோதுறீங்கன்னு நியாபகம் வச்சிக்கோங்க மாறன் சார். அந்த பொண்ணு ப்ரஸ் கிட்டப் போவாங்க; உங்க எதிர்க்கட்சிகிட்டப் போவாங்க.. வேற வழியில்லாம உங்களை உள்ளே வச்சிடுவாங்க.. என் கெஸ் சின்னா, ஜெயிலுக்குப் போய் தன் அரசியல் வாழ்க்கையை அழிச்சதுக்காக உங்க அப்பாவே உங்களைக் கொன்னுடுவார்.."
"ம்.. நீயே அவளுக்கு ஐடியா குடுப்பே போல?"
'காசு குடுத்தா கழுதைக்குக் கூட குடுப்பேன்' என்று மனதுக்குள் கவுன்ட்டர் கொடுத்தவன், "சரி.. இப்போ அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாமா?"
"ம்.."
"அம்மா அப்பாவைக் கடத்தி வச்சு கல்யாணம் பண்ணினாத் தான் விடுவேன் சொன்னீங்கன்னா, கல்யாணம் பண்ணிட்டு உடனடியா உங்களுக்கு சாப்பாட்டுல விஷம்வச்சிக் குடுத்துடுவாங்க..."
குடிப்பதற்காக வாய் அருகில் கொண்டு போன முன்னூறு ரூபாய் காபி, கை ஜெர்க் ஆகிக் கீழே சிந்த, தன்னை முறைத்தவனைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்தான் விக்கி, "அதனால் எப்போவுமே அவங்களைக் கத்தி முனையில் வச்சிருக்கிற மாதிரி ஒரு விஷயத்தைக் காட்டித்தான் ப்ளாக் மெயில் பண்ணனும்"
"அது என்னன்னு கண்டுபிடிச்சிட்டியா? இல்லை இனிமேதான் கண்டுபிடிக்கனுமா?"
"கண்டுபிடிச்சிட்டேன்!"
"என்ன?"
சொல்லலாமா என்று சிறிது யோசித்தவன், அடுத்த நொடி தன் தயக்கத்திற்குத் தன்னையே மனதுக்குள் கடிந்தபடி சொன்னான், "நிலா ஒரு குட்டிப் பொண்ணுக்கு கார்டியனா இருக்காங்க. அது எந்த சொந்தம்னு யாருக்கும் தெரியாது. ஆனா அவளுக்கு ஒண்ணுன்னா நிலாவால தாங்க முடியாது."
சதுரங்க விளையாட்டில் மென்னிலா தன் யானையை நேர்கோட்டில் முன்னே செலுத்த, தன் குதிரையை டகரம் போட்டு முன்னே வைத்தான் விக்னேஷ். எந்த ராஜா முதலில் விழுவார்கள் என்று நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்போம்.
தொடர்வாள்