எதிர்மறை வினையெச்சம்
அத்தியாயம் 7
வில்லன்-கதாநாயகனில் இருந்து எதிர் ஹீரோ எப்படி வேறுபடுகிறார்?
அதாவது வில்லனை மையப்படுத்தி அவனையே ஹீரோவாக்கி எழுதப்படும் கதைகளும் உண்டு. அவற்றில் வரும் கதாநாயகர்கள் தான் வில்லன் கதாநாயகர்கள். ஆன்ட்டி ஹீரோக்களில் இருந்து இவர்கள் மாறுபடுகிறார்கள்
முற்றிலும் மீளமுடியாத, தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்க முக்கிய கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் சில புத்தகங்கள் வெற்றிகரமாக எழுதப்பட்டுள்ளன.
லொலிடாவில் இருந்து ஹம்பர்ட் ஹம்பர்ட் , அமெரிக்கன் சைக்கோவில் இருந்து பேட்ரிக் பேட்மேன் மற்றும் டி டெலண்டட் மிஸ்டர் ரிப்ளியில் இருந்து டாம் ரிப்லி இந்தப் பிரிவில் அடங்குவர் .
ஆன்டிஹீரோக்கள் தார்மீக ரீதியில் சாம்பல் நிற கேரக்டர்கள். ஆனால் ஒரு வில்லன் கதாநாயகன் ஒரு "கெட்டவன்"- கதையின் முக்கிய கதாபாத்திரமாக வருகிறான். சாம்பல் நிறம், ஆன்ட்டி-ஹீரோவைக் குறிக்க இன்றைய கால கட்டத்தில் எழுத்துலகில் பயன்படுத்தப்படுகிறது.
5 வகையான எதிர்ப்பு ஹீரோக்கள்
அனைத்து ஆண்ட்டி ஹீரோக்களும் சமமாக உருவாக்கப்படவில்லை. உண்மையில், கதைகளில் குறிப்பாக டி. வியில் பிரபலமாக வந்த தொடர்களில், இந்த தார்மீக ரீதியான தெளிவற்ற கதாநாயகர்களின் அளவு வரையறுக்கப்படுகிறது. அந்த அளவுகோலின் படி ஆன்ட்டி-ஹீரோக்கள் வரிசைப்படுத்தப் படுகின்றனர்.
ஆச்சரியப்படத்தக்க வகையில், முதல் வகை...
1. கிளாசிக் ஆன்டி-ஹீரோ
இவர்கள் பாரம்பரிய ஹீரோக்களைப் போன்று நல்ல குணங்கள் நிறைந்தவர்களாக இல்லையென்றாலும், ஓரளவு இருந்து வேறுபட்டு ஒரு பயந்தாங்கொள்ளியாகவோ, அபூர்வமாகத் தவறு செய்பவர்களாகவோ இருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றிய விரிவான விளக்கம் அடுத்த பகுதியில்.
அத்தியாயம் 7
மாறனிடம் பேசி விட்டு வந்ததில் இருந்து விக்னேஷின் மனம் என்னவோ அலை பாய்ந்து கொண்டே இருந்தது. அவனுடன் நடந்த உரையாடலையும் நிகழ்வுகளையும் மனதிற்குள் ரீவைண்ட் செய்து பார்த்தான்.
"நிலா ஒரு குட்டிப் பொண்ணுக்கு கார்டியனா இருக்காங்க. அது என்ன சொந்தம்னு யாருக்கும் தெரியாது. ஆனா அவளுக்கு ஒண்ணுன்னா நிலாவால தாங்க முடியாது."
"அந்தக் குழந்தையைக் கடத்திக் கத்தி முனையில் வச்சு நிலாவை மிரட்டலாம்னு சொல்றியா?" என்றவனை அலட்சியமாகப் பார்த்தான் விக்கி.
"பழைய வில்லத்தனத்தில் இருந்து மூளையைத் தூக்கி வெளியே எறிஞ்சுட்டு வாங்க மாறன் சார். காலத்துக்கு ஏத்தபடி அப்டேட் ஆகிக்குங்க மொதலில. அந்தக் கால நம்பியார் கூட பெட்டரா யோசிப்பாரு. கடத்தல் வேணாம். நாம வேற ஏதாவது யோசிக்கலாம்" என்றவனைக் குழப்பத்துடன் பார்த்தான் மாறன்.
"அந்தப் பொண்ணுக்கு என்ன வயசிருக்கும் தம்பி?"
"ஒரு இருபத்தி ஏழு, எட்டு இருக்கலாம். பட்டிக்காடு மாதிரி டிரஸ் பண்ணிக்காமக் கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணிக்கிட்டான்னா, இருபத்தி மூணு இல்ல நாலுங்கற ரெஞ்சுக்குத் தெரியலாம்"
"அடச் சீ, நான் என்னோட நிலாவைப் பத்திக் கேக்கலை தம்பி. அந்த நிலாவோட இலவச இணைப்பா ஒரு குழந்தை சுத்துதே? அதைப் பத்திக் கேக்கறேன்" என்று சொல்லும் போது 'என்னோட' என்பதில் தன்னையறியாமல் ஒரு அழுத்தத்தைக் கொடுத்தான்.
"அந்தக் குழந்தையா? அதுக்கு ஒரு ஆறோ, ஏழோ வயசு இருக்கலாம். பேரு கூட பிரபான்னு சொல்லிக் கூப்பிடதா ஞாபகம் இருக்கு மாறன் சார்"
"ஆமாம், அந்தக் குழந்தையோட வயசு எதுக்கு உங்களுக்கு?" என்று கேட்ட விக்னேஷின் மனதில் எங்கோ எச்சரிக்கை மணி அடித்தது. வஞ்சகம் சொட்டும் மாறனின் கண்களில் ஏதோ மான் குட்டியைத் தேடும் வேங்கையின் பார்வை பளிச்சிட்டது. கேவலமான எண்ணங்கள் சில அவனுடைய உள்ளத்தில் ஓடுவதை அவனுடைய அகத்தின் கண்ணாடியான முகம் காட்டியது. கூடவே உதடுகளில் கசிந்த, அந்தக் கோணல் சிரிப்பைப் பார்க்க சகிக்கவில்லை விக்னேஷிற்கு.
'இந்தக் கேடு கெட்டவன் கிட்டல்லாம், அந்த கான்ட்ராக்டுக்காகத் தொங்க வேண்டி இருக்கே?' என்று மனதுக்குள் நொந்து போனான். 'என்ன ஆனாலும் சரி, இவ்வளவு தூரம் வந்த பிறகு, மனசில் ஈவு, இரக்கம், கருணை எல்லாம் எட்டிப் பாத்தா வேலையை முடிக்க முடியாது' என்று நினைத்தவன், எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்சம் மனசாட்சியை வெளியே தள்ளி மனக்கதவை மூடினான்,
"சரி, கடத்த வேணாம்னா வேற என்ன செய்யலாம்? நீயே சொல்லறியா? இல்ல என்னோட ஆளுங்க கிட்டச் சொல்லி நான் ஏதாவது செய்யவா?"
"கொஞ்சம் பொறுமையா இருங்க மாறன் சார். இது காதல் விஷயம். அதுவும் இதில் சம்பந்தப்பட்ட பொண்ணு சாதாரணப் பொண்ணு இல்லை. நீங்க என்ன செய்யறீங்கன்னு உங்களைச் சுத்தி வாட்ச் பண்ணிட்டு அலர்ட்டா இருக்கற பொண்ணு. அதுக்கு உடம்பெல்லாம் மூளைங்கறதை மனசில் வச்சுக்கோங்க. உங்களோட அடியாளுங்க என்னமாவது செஞ்சு சொதப்பிட்டீங்கன்னா உங்களைத் திரும்பிப் பாக்கறதென்ன, உங்களை பெர்மனன்ட் எதிரியா நெனைச்சு எதிலயாவது மாட்டி விட்டுப் பழி வாங்காமல் நிறுத்த மாட்டா.
"நிலா மேடத்துக்கு அந்தக் குழந்தை, என்ன உறவுன்னு கண்டுபிடிக்கிறேன். அப்புறமா என் திட்டத்தைச் சொல்றேன்" என்றான்.
விக்னேஷ் மனதிற்குள் யோசிக்கத் தொடங்கினான். இந்த விஷயத்தை அப்ரோச் செய்ய இரண்டு சேனல்கள் பிரகாசமாகத் தெரிந்தன. ஒன்று அருவி. அவளைப் பார்த்தால், மென்னிலா அளவு ஸ்மார்ட்டாகத் தெரியவில்லை. பிரசன்னா மனதிலும் அவள் பேரில் ஒரு ஸ்ட்ராபெரிக் கனவு அப்பட்டமாகத் தெரிகிறது. அருவியின் பேரைச் சொல்லும்போதே அவனுடைய கண்களில் திடீர் மின்னல் பளிச்சிடுகிறது. அவனுடைய காதலுக்கு க்ரீன் சிக்னல் தந்து வளர்த்து விட்டு, அப்புறம் அதை சமயம் பார்த்து வெட்டி விடலாம். அருவியிடம் இருந்து குழந்தையைப் பற்றிய தகவல்களைக் கறக்கலாம். ஆனால் பிரசன்னா எவ்வளவு தூரம் இதில் வெற்றி அடைவான் என்பது இப்போதைக்குத் தெரியாது.
அடுத்த சேனல் மைக்கேல் மதன காமராசன். அவனைப் பார்த்தால் அவ்வளவு புத்திசாலியாகத் தெரியவில்லை. ஏற்கனவே ஒரு தடவை தனது வலையில் விழுந்து எளிதாக ஏமாற்றப்பட்டதால் இப்போது அலர்ட்டாகத் தான் இருப்பான். ஆனாலும் அவனிடம் ஏதோ கோமாளித்தனம் இருக்கிறது, அவனை எளிதில் மடக்கி விடலாம் என்று மனதில் நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன் மாறனிடம் விடை பெற்றான்.
ஆனால் மைக்கேல், பார்ப்பதற்குக் கோமாளியாகத் தெரிந்தாலும் எமகாதகன் என்பது விக்னேஷுக்குத் தெரியவில்லை. மைக்கேல் கழுவும் மீனில் நழுவும் மீன். அப்புராணிக்குச் சப்பிராணியான வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு பாலிலும் வெண்ணெய் எடுக்கும் பலே கெட்டிக்காரன். இல்லாவிட்டால் மென்னிலா போன்ற சுனாமியைச் சமாளித்துக் கொண்டு அவளிடம் நிரந்தரமாக வேலை செய்ய முடியுமா?
விக்னேஷ் அங்கிருந்து கிளம்பியதும், மாறன் தன் அலைபேசியை எடுத்தான்.
"அப்பா, நீங்க ஒரு புது பிஸினஸ் பத்தி சொன்னீங்களே? அதுக்குத் தேவையான ஒரு பட்சி வந்து தானா வலையில் விழுது" என்றான் ஆர்வத்துடன்.
"சபாஷ், இப்பத் தான்டா என்னோட வாரிசுன்னு ப்ரூவ் பண்றே.. பொறுப்பா யோசிக்க ஆரம்பிச்சிருக்கே! சரி, சரி, இதைப் பத்திலாம் ஃபோனில் வேணாம். நீ கிளம்பி, நம்ப நீலாங்கரை கெஸ்ட் ஹவுஸுக்கு வா. நேர்ல பேசிக்கலாம். காத்துக்கும் காது, மூக்கு, கண்ணுல்லாம் இருக்கு" என்று அய்யாசாமி, அழைப்பை கட் செய்தான். தனது கிரிமினல் மூளையை இன்னும் கொஞ்சம் கசக்க ஆரம்பித்தார்.
அரசியல்வாதி தனது கிரிமினல் மூளையைக் கசக்கும் போது பாலாறும் தேனாறும் நிச்சயமாக ஓடப் போவதில்லை. சுவிஸ் பேங்க் அக்கவுண்டின் பேலன்ஸ் தான் கூடும். அந்த மாதிரி பணம் கொழிக்கக் கூடிய ஒரு புது பிஸினஸில் தான் மூக்கை நுழைத்திருக்கிறார் அய்யாசாமி இப்போது. மகனும் அதில் ஆர்வம் காட்டியதும் புளகாங்கிதம் அடைந்து, தான் பெற்ற (அ)சிங்கக்குட்டியின் (!!!) வரவுக்காகக் காத்திருந்தது அந்தக் குள்ளநரி.
"அப்பா, அப்பா" என்று அலறிக் கொண்டே வந்த மாறன், தனது மனதில் இருந்த திட்டத்தைத் தன் அப்பாவின் முன்னே எடுத்து வைத்தார். விக்னேஷை வேறு ரூட்டில் திசை திருப்பி விட்டுவிட்டு, இதில் தானே களமிறங்க முடிவு செய்திருந்தான்.
"நல்ல பிளான் தான்டா. நமக்கு சக்ஸஸ் ஆச்சுன்னா நல்லது. ஆகலைன்னா அதை விட நல்லது. அந்தப் புதுப் பையன் அது தான்டா விக்கி, கொக்கின்னு ஏதோ பேர் சொன்னயே, அவன் மேலே பழியைத் தூக்கிப் போட்டுட்டு, நல்லது செஞ்சு காப்பாத்தின மாதிரி நடிச்சு, உனக்குப் பிடிச்சவ மனசில் நீ இடம் பிடிச்சுடலாம்" என்ற வில்லத்தனமான ஐடியாவை மாறனுக்கு அள்ளி வழங்க, அவனும் மனம் மகிழ்ந்து, முகம் மலர்ந்து போனான்.
சதுரங்கத்தில் காய்கள் வேகவேகமாக நகரத் தொடங்கி விட்டன. குதிரையையும், யானையையும் வீழ்த்த சேனாதிபதி இறங்கி விட்டார். ஒருத்தருத்தருக்கொருத்தர் சளைக்காமல் மற்றவர்களைக் குறி வைத்து நகர்கிறார்கள்.
வண்ண வண்ண டெட்டி பியர்கள் தங்களைச் சுற்றிச் சிதறிக் கிடக்க, விதவிதமான சாக்லேட் ரேப்பர்கள் காற்றில் பறக்க, தன் மனம் கவர்ந்தவளுடன் கை கோர்த்து டூயட் பாடிக் கொண்டிருந்தான் பிரசன்னா. முகத்தில் சுரீரென்று வெந்நீர் விழா, விருட்டென்று எழுந்தான்.
"சே, என்ன அருமையான கனவு! கலைச்சுட்டியேடா பாவி! அருவியோட பேசிச் சிரிச்சு டூயட் பாடினதில மனம் ஜில்லுன்னு இருந்துச்சு. அதில் வெந்நீரை ஊத்திட்டயே கொடுங்கோல, ராட்சசா, நீயும் ஹீரோவா மாற மாட்ட, என்னையும் ஹீரோவாக விட மாட்டே! ஃப்ரண்டுன்னா எப்பயும் சைட் ரோல் தானா? உன்னோட கதையையே நான் மாத்தி ஹீரோவாக்கலாம். நினைச்சேன்.கனவைக் கலைச்சுட்டியேடா இப்படி?என்னோட பாவம் உன்னைச் சும்மா விடாது.தற்கொலை பண்ணிக்கிட்டுப் பேயாக மாறி உன்னையே சுத்திச் சுத்தி வரப் போறேன் பாரு.எங்க கத்தி, எங்க ஸ்லீப்பிங் பில்ஸ், எங்க தூக்கு மாட்டிக்கக் கயிறு, ஸ்டூல்?” என்று கத்திக் கொண்டே சுற்றிலும் கண்களைச் சுழல விட்டான். பிரசன்னாவின் கைகளில் அவன் கேட்ட அனைத்தையும் மொத்தமாகக் கொண்டு வந்து திணித்தான் விக்னேஷ், ஸ்டூலைத் தவிர. அதையும் கொண்டு வந்து பட்டென்று கீழே வைத்தான்.
"இந்தா, நீ கேட்டதோட சேத்து, பாய்சன், முட்டைப் பூச்சி மருந்து, வேற ஏதாவது மிஸ் ஆயிருந்தாச் சொல்லு. இதோ வாங்கிட்டு வர்றேன். அப்புறம் யாராவது தற்கொலை பண்ணிக்கறதை லைவ்வாப் பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அதைக் கூடத் தீத்து வச்சுட்டுப் போகப்போறயே? உன்னை மாதிரி ஃப்ரண்ட் யாருக்குடா கிடைக்கும்? இதெல்லாம் வேணாம். சொல்றதைக் கேளு. பேசாம மொட்டை மாடிக்குப் போகலாம். அங்கேருந்து குதிச்சுடு. அப்படியே நான் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் லைவாப் போடறேன். பயங்கர வைரலாயிடும். என்ன ஒரே ஒரு ரிஸ்க், உசுரு போகாம, எலும்பெல்லாம் நொறுங்கி உடம்பெல்லாம் வலிக்கும் பாரு, அது செமயா இருக்கும்" என்று சொன்ன விக்கியை வெறித்துப் பார்த்தான் பிரசன்னா. குனிந்து தனது உடம்பைப் பார்த்து பயத்தில் நடுங்கிப் போனான்.
"என்னடா, இருக்கற ஒரே ஃப்ரண்ட், சூசைட் பண்ணிக்கறதாப் பேசறானேன்னு கொஞ்சம் கூட இரக்கப்படாம, நீயே மாடியில இருந்து தள்ளி விடுவ போல இருக்கே? உனக்கே நியாயமா இருக்கா?" என்று விக்னேஷைப் பார்த்துக் கேட்டபோது, பிரசன்னாவின் முகம் பரிதாபத்தின் ஒட்டுமொத்தக் கூடாரமாக இருந்தது.
"எதுக்குடா? எதுக்கு நிறுத்தணும்? நல்லதை நினைக்காம, நெகட்டிவ்வாப் பேசினா நான் வேற என்ன பண்ண முடியும்? காதல் உன் மனசில புகுந்துடுச்சு. உன் மனசை ஒரு பொண்ணு அசைச்சிருக்கான்னா, அடுத்த ஸ்டெப்பை நீ தானே எடுத்து வைக்கணும்? நீ என்ன அந்த கேடு கெட்ட மாறனை மாதிரியா? என்னோட பிரசன்னா எவ்வளவு புத்திசாலி! ஐடியாக்கள் அப்படியே அருவியாக் கொட்ட வேணாமா அருவிக்காக?
'இவனைப் புரிஞ்சுக்கவே முடியலையே! நேத்து வரை வேற மாதிரி நடந்துக்கிட்டவன், இன்னைக்கு டைரக்ட் ஆப்போஸிட்டா நம்ம காதலை அடுத்த லெவலுக்கு கொண்டு போகச் சொல்லி அட்வைஸ் பண்ணறானே? இதில் ஏதோ உள்குத்து இருக்கோ? ' என்று யோசித்த பிரசன்னாவிற்குத் தலை சுற்றியது.
உள்குத்து இருப்பது உண்மை தான் என்று விரைவில் பிரசன்னா புரிந்து கொள்வான். 'எந்த கலரில் அருவிக்காக அவளுக்குப் பிடிச்ச டெட்டி வாங்கலாம்? பிங்க் வேணாம். லேவண்டர் கலரில் கெடைக்குதான்னு பாக்கலாம். என்ன சாக்லேட் வாங்கலாம்? ' என்று பிரசன்னா யோசித்துக் கொண்டிருக்கும் போது, விக்னேஷ் மனதிலோ,
'அந்தக் குழந்தையைப் பத்தி மாறன் முன்னாலே போட்டுக் குடுத்து ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரியே தோணுது.. என்ன தான் இருந்தாலும் ஒரு பச்சைக் குழந்தையை மாட்டி விடறது தப்புத் தான்' என்று திரும்பத் திரும்ப யோசித்ததில், இனம் புரியாத ஒரு கலக்கம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.
மென்னிலாவுக்கும் மனதில் ஏதோ ஒரு பயம் வந்தது. 'கெஸ்ட் ஹவுஸ் பத்தி வெளியே தெரிஞ்சதுனால விக்கணும்னு நினைச்சயே? பிரபாவைப் பத்தின தகவல்களை யாருக்கும் தெரியாமல் இவ்வளவு நாட்களா ரகசியமா வச்சது, இந்த அருவியோட முட்டாள்தனத்தால அந்த ரெண்டு கழிசடைகளுக்கும் தெரிஞ்சுடுச்சே! பிரபாக் குட்டியைச் சுத்திச் சீக்கிரமே ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கணும். இல்லைன்னா அவளை எங்கேயாவது வெளியூருக்கு அனுப்பணும். பேசாமல் அப்பா கிட்ட விடலாமா? வேண்டாம், என்ன, ஏதுன்னு கேட்டுத் துளைச்சு எடுத்துடுவாரு' என்று மென்னிலாவும் குழம்பிக் கொண்டிருந்தாள். அவளது உள்ளுணர்வு எப்போதும் போல எச்சரிக்கை மணியை மீண்டும் அடித்து ஏதோ ஆபத்து நெருங்குவதைச் சுட்டிக் காட்டியது.
சென்னை மண்டலக் காவல் துறை தலைமை அலுவலகம். ஏ. ஸி. பி. வெண்பா, ஐ.பி.எஸ் தனது உயர் அதிகாரியைச் சந்திக்க, அவருடைய அறைக்கு வெளியே பொறுமை இல்லாமல் உலாத்திக் கொண்டிருந்தாள். உள்ளேயிருந்து அவளுக்கு அழைப்பு வர,
"மே ஐ கம் இன் சார்" என்று கதவுக்கருகில் ஒரு நிமிடம் நிதானித்தாள்.
"யெஸ் கம் இன்சைட் வெண்பா " கையில் இருந்த கோப்பில் இருந்து கண்களை எடுக்காமல் பேசினார் அந்த உயரதிகாரி.
"குட் ஆஃப்டர் நூன் சார்" என்று சொல்லிக் கொண்டே விறைப்பான ஒரு போலீஸ் சல்யூட்டை நேர்த்தியாக அடித்தவளை உட்காரச் சொல்லி, அந்த அதிகாரி சைகை காட்ட, அவளும் உட்கார்ந்து கொண்டு தன் தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டாள். அவளுடைய யூனிஃபார்மின் தோள்பட்டையில் பளபளத்த நட்சத்திரங்கள், அவளுடைய தகுதியையும், திறமையையும் தொலைக்காட்சி அறிவிப்பாளர்களைப் போலக் கலகலவென்று பறைசாற்றின.
"உன்னைப் பத்தி நிறைய கம்ப்ளைண்ட் வருது வெண்பா. அக்யூஸ்டுகள் கிட்ட அதிக வன்முறை காட்டறதா எனக்கு தினமும் கம்ப்ளைன்ட் வருது. ஏற்கனவே ஒரு என்கவுண்டர் விஷயத்தில் உன்னை நான் தான் காப்பாத்தினேன். மறந்துடாதேம்மா. அந்த ஆளும் கட்சி எம். எல். ஏ. மச்சினன் விஷயத்துல நீ தேவையில்லாமல் அவனைப் பிடிச்சு வச்சுக் கண்ணு மண்ணு தெரியாம அடிச்சேன். அந்த ஆளு பொலம்பறாரு"
"அந்த ராஸ்கல் என்ன காரியம் செஞ்சிருக்கான்னு உங்களுக்குத் தானே தெரியும்? சின்னக் குழந்தைன்னு கூடப் பாக்காம... .. , எனக்கு வந்த ஆத்திரத்தில் குழந்தையைத் தொட்ட கையை ஒடச்சுட்டுக் கண்ணைத் தோண்டி எடுக்கணும்னு தான் நினைச்சேன். அதுக்குள்ள உங்க ஃபோன் வந்து என்னை நிறுத்திடுச்சு" சிவந்த கண்களுடன் பேசியவளின் கண்கள் ரௌத்திரம் காட்டின.
"கூல் கூல், எனக்கு உன் கோபம் புரியுது. உன் வயசில் நானும் இப்படித் தான் இருந்தேன். ஆடி ஆடி அடிபட்டு அனுபவத்தால் இப்ப அடங்கிட்டேன்" என்று பெருமூச்செறிந்தார் அந்த ஐ. ஜி.
"அதே தான். உங்க மாதிரி நேர்மையானவர்கள் கூட அமைதியாப் போறதுனால தான் இவங்க செய்யற அட்டூழியங்கள் கூடிக்கிட்டே போகுது" என்றவளின் குரலில் கோபம் கொப்பளித்து.
"என்னம்மா செய்யறது? மேலிடத்துக்கு சரி, சரின்னு தலையாட்டிட்டு இங்கே உங்களுக்கு சப்போர்ட்டாத் தான் நடந்துக்க முயற்சி பண்றேன். வயசாயிடுச்சு. இளரத்தமா இருந்தபோது எனக்கும் தான் கொதிச்சது. சரி, அடுத்து கொஞ்சம் அன்னஃபிஷியலாப் பேசுவோமா?" என்று அவர் கேட்டதும்,
"யெஸ் அங்கிள்" என்ற அவளது குரலில் உற்சாகம் பீறிட்டது. சட்டென்று அங்கு வீசிய காற்று கூடத் தென்றலாக மாறி, அவர்களுக்கு நடுவில் இருந்த வேறொரு பந்தத்தை உணர்த்தியது.
"உன்னோட சீக்ரெட் மிஷன் என்ன ஆச்சு? எனி பிரேக் த்ரூ?" என்றார் ஆர்வத்துடன். தனது நண்பனின் மக்களைப் பெருமிதத்துடன் பார்த்தார்.
"இல்லை அங்கிள். எந்தப் பக்கம் போனாலும் ஒரு டெட் என்ட் வந்து முட்டுது. எனக்கு ஏதாவது ஒரு எக்ஸ்டர்னல் ஹெல்ப்பை எப்படியாவது தேடி எடுக்கலாமான்னு தோணுது. நல்லா ஹேக்கிங் தெரிஞ்ச ஒரு எக்ஸ்பர்ட் வேணும்."
"ஏம்மா, நம்ப டிபார்ட்மெண்ட்ல இல்லாத எக்ஸ்பர்ட்களா?"
சிரித்தாள் வெண்பா.
"எந்தக் காலத்துல இருக்கீங்க அங்கிள்? உலகம் எவ்வளவோ முன்னாடி போயிடுச்சு. இங்கே இன்னும் பழைய ரூல்ஸை ஃபாலோ பண்ணிட்டு, ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் அப்ரூவலுக்காக வெயிட் பண்ணிப் பண்ணி, ஐ ஆம்ஸோ ஃபெட் அப் வித் தி சிஸ்டம் அங்கிள். அதுமட்டுமில்லாமல் இங்கே நம்ப எடுக்கற ஒவ்வொரு ஸ்டெப்பும் வெளியே நம்ம எதிரிகளுக்குக் கசிஞ்சுடுது. நமக்கு நடுவில் சில கறுப்பு ஆடுகள் உலாவுதுங்க" என்று வெண்பா சொன்னதும் திடுக்கிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தார் ஐ. ஜி. கரிகாலன்.
-பைரவி தொடர்வாள்.

Last edited: