எதிர்மறை வினையெச்சம்
அத்தியாயம் 9
அடுத்த வகை ஆன்ட்டி ஹீரோக்கள், 'தி நைட் இன் சோர் ஆர்மர்' (The knight in sour armour) வகை. அதாவது தேவைப்பட்டால் மட்டுமே வாளை உருவும் வகை ஆன்ட்டி ஹீரோக்கள்.
ஒழுக்கத்தைப் பொறுத்தவரை, இந்த ஹீரோ மிகவும் நல்லவர். அவர்கள் சரி எது, தவறு எது என்று பகுத்தறியத் தெரிந்தவர்கள். ஆனால் பொதுவாக மிகவும் சுயநலவாதிகளாக இருப்பதோடு, பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வர எந்த முயற்சியையும் எடுக்க நினைக்க மாட்டார்கள்.
மற்றபடி 'தயக்கமில்லாத ஹீரோ' என்று அழைக்கப்படும் அவர்களுக்கு வில்லனுக்கு எதிரான போராட்டத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போ உத்வேகமோ இருக்காது. பொதுவாக தங்கள் சொந்த காரியத்தைச் செய்வதில் மட்டுமே அதிக அக்கறை காட்டுபவர்களாக இருப்பார்கள்.
ஆனால் தேவைப்படும் போது களத்தில் குதிக்கச் சட்டென்று முன்வருவார்கள்.
EXAMPLE: Han Solo in A New Hope
டிஸ்னி வகை ஆன்ட்டி ஹீரோ என்றும் இவர்களை அழைக்கலாம். இன்று பெரும்பாலான மக்கள் ஆன்ட்டி-ஹீரோவைப் பற்றி நினைக்கும் போது இதைத்தான் நினைக்கிறார்கள்.
ஒரு கிளாசிக்கல் ஹீரோவின் தளராத நம்பிக்கை இவர்களிடம் இருப்பதில்லை.
இவர்கள் மிகவும் யதார்த்தமானவர்களாக இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் விவாதம் செய்து தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தத் தயங்க மாட்டார்கள். ஆனால் ஒழுக்க ரீதியில் தெளிவற்ற செயல்களை நேரடியாக செய்ய மாட்டார்கள். கிளாசிக்கல் ஆன்ட்டி- ஹீரோவைப் போலவே,
இந்த வகையான ஆன்ட்டி- ஹீரோவும் கதையின் முடிவில் ஒரு கிளாசிக்கல் ஹீரோவாக உருவாகும் வாய்ப்புகள் உண்டு.
'ஹங்கர் கேம்ஸ்' முத்தொகுப்பில் இருந்து ஹேமிட்ச் அபெர்னாதி மற்றும் ஹாரி பாட்டர் புகழ் செவெரஸ் ஸ்னேப் ஆகியவை இந்த வகையான ஆன்ட்டி-ஹீரோவுக்கு இரண்டு சிறந்த எடுத்துக்காட்டுகள்.
நமது இந்திய திரைப்படங்களிலும் இந்த மாதிரியான இந்த வகை ஆன்ட்டி ஹீரோக்கள் உண்டு. ஷோலே படத்தில் வரும் அமிதாப், தர்மேந்திரா கதாபாத்திரங்கள் இந்த வகை என்று சொல்லலாம். சமீபத்தில் வந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் கூட ஒருவிதத்தில் இந்த வகை தான்.
ஜில்லா படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம், மிஷ்கின் அவர்கள் இயக்கிய சைக்கோ படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரம், நோட்டா (NOTA) படத்தில் விஜய் தேவரகொண்டா கதாபாத்திரம் போன்றவையும் இந்தத் தன்மை உடையவை.
இவற்றைத் தவிர பொதுவாக இரட்டை வேடத்தில் ஹீரோ வரும் படங்களில், முதலில் பொறுப்பின்றி இருக்கும் ஒரு ஹீரோ உண்மை தெரிந்ததும் களத்தில் குதிப்பதும் இந்த வகையே.
எடுத்துக்காட்டாக, எங்க வீட்டுப் பிள்ளை, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படங்களைச் சொல்லலாம்.
அத்தியாயம் 9
"மாறா என்ன சொல்ற? நீ சொன்னது நிஜம் தானா?" என ஆச்சர்யத்தோடு கேட்டார் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான அவன் அப்பா அய்யாச்சாமி.
"ஆமா! நம்ம ஆட்கள் நல்லாத் தெளிவா விசாரிச்சிட்டாங்கப்பா. நிலா வளர்க்குற பொண்ணு நம்ம எதிர்க்கட்சி 'பெரிய கை'யோட பொண்ணு தானாம்" என ஆர்வம் மின்னச் சொன்னான் மாறன்.
'அவனுக்குப் பொறந்த பொண்ணா?!' என்று ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்த அய்யாசாமி, "என் மகனாப் பிறந்ததுக்கு இன்னிக்குத் தான் உருப்படியான வேலை செஞ்சிருக்க டா நீ" என்று தன்னுடைய உத்தமபுத்திரனை மெச்சிக் கொண்டார்.
தன் அரசியல் வாழ்வில் மெல்ல மெல்ல எழுப்பிய சாம்ராஜ்ஜியத்தையும் தனக்கிருந்த அரசியல் செல்வாக்கையும் ஒரே ஒரு தேர்தலில் அடித்து துவம்சம் செய்தவன் அந்தப் பெரிய கை. ஒரு சாதாரண இளைஞன் அவரை எதிர்த்து தேர்தலில் நிற்க, இவனால் தன்னை என்ன செய்துவிட முடியும் என்ற அசாத்திய தைரியத்தில் இருந்தவரின் கனவுக் கோட்டையை சிதைத்து, அவரது கோட்டையாக வைத்திருந்த தொகுதியில் அவரையே மண்ணைக் கவ்வ வைத்து இருந்தான் அவன்.
அவன் தலையெடுத்த பின் தன்னுடைய சொந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தலில் நிற்க தைரியமற்று வேறு தொகுதியில் நிற்க வேண்டிய நிலை வந்துவிட்டது அவருக்கு. இன்றும் கூட சொந்தக் கட்சிக்காரர்கள், 'சொந்தத் தொகுதியில் நிற்க வக்கில்லாத பய' என அவரது காதுபடவே சொல்லி சிரிக்கும் அவலத்தை உண்டாக்கியவன் அவன். அவனைப் பழிவாங்க இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் அவருக்கு வாய்க்குமா என்ன?
ஆனால்.. தன்னுடைய திட்டத்தை மாறனிடம் சொன்னால் அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். அவனின் எண்ணமெல்லாம் நிலாவின் மேல் தான் இருந்தது. குழந்தையைக் கடத்தி அதை விக்னேஷின் கார் டிக்கியில் போட்டு வைத்து மாறன் அவளைக் காப்பாற்றுவது போல நிலாவிற்கு காட்ட நினைத்தான். அதே சமயம் போலீஸ் பயம் காட்டி விக்னேஷையும் தங்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்ய வைக்கலாம் என்பது அவனது திட்டம்.
மாறன் அவனது திட்டத்தை விவரிக்கையில் முதலில் சரியெனவே பட்டது அய்யாச்சாமிக்கு.
ஆனால் இப்போதோ அந்தக் குழந்தை யாருடையது என்பதை அறிந்ததில் இருந்து தன் தொழில் லாபம், மகனின் காதல் என்பதையெல்லாம் விட பழிவாங்கும் உணர்ச்சியே மேலோங்கியிருந்தது அவருக்கு.
சில ஆண்டுகளுக்கு முன் செய்ய இயலாத காரியத்தை இப்போது செய்யலாம். அவனைத் துடிக்கத் துடிக்க அணுவணுவாய் சித்திரவதை செய்ய வேண்டும். தன் தொகுதியில் நேரடித் தேர்தலில் பெற முடியாத வெற்றி, ஐந்தாண்டுகள் வெளியில் தலை காட்டவே இயலாமல் பட்ட அவமானம், அடுத்த தேர்தலில் வேறு தொகுதியில் சீட் கிடைக்க பட்ட பாடு என அவர் அனுபவித்த துன்பங்களுக்கெல்லாம் மூலகாரணம் அவன் தான்.
அவன் தேர்தலில் முழு கவனம் செலுத்தக் கூடாதென சென்ற முறை அவர் செய்த இலைமறை வேலைகளையெல்லாம் தாண்டி அதிக பிரச்சாரம் இல்லாமலே ஜெயித்து விட்டானே! அவன் நிம்மதி இழந்து தவிக்க வேண்டும். தன்னுடைய அடிமையாய் தன் காலை நக்கிக் கொண்டு கிடக்க வேண்டும். அதற்கு அவன் குழந்தை தான் அவருக்குக் கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு.
இந்த நல் வாய்ப்பை இழக்க விரும்பாத அய்யாச்சாமி மாறனுக்குத் தெரியாமல் அவன் அறியாமல் பிரபாவைக் கடத்த திட்டமிட்டார்.
..
இரண்டு நாட்கள் நேரம் கொடுத்திருந்த வெண்பா, அதற்கு முன்பே நிலாவிடம் இருந்து வந்த அழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லை.
அவள் கூடுதல் அவகாசம் கேட்பாள், இது நிறைய நாட்கள் எடுக்கும் என்று தான் எண்ணியிருந்தாள்.
பலகாலமாகவே நிம்மதியான நித்திரை என்பது கிடையாது வெண்பாவிற்கு. போலீஸ் க்வாட்டர்ஸில் வேலை முடித்து வந்து சோர்வோடு கட்டிலில் விழுந்தாலும் மனம் என்னவோ நிலை கொள்ளாமல் தவித்தபடி இருக்கும்.
கண்களுக்கு ஓய்வு வேண்டுமே என அவற்றை இறுக மூடிக் கொண்டாலும் மனமென்னும் சாத்தான் ஒரு நொடியும் தன் இருப்பை வெளிக்காட்டாதிருக்காது.
ஏதேதோ நினைவுகள் வந்து அவளை இம்சை செய்யும். அவள் கையாண்ட வழக்குகளும் அதன் குற்றவாளிகளும் கண் முன்னே வந்து நக்கலாக சிரிப்பார்கள். அவள் உயிரைக் கொடுத்து பிடித்து வந்த கைதி, தன் செல்வாக்கால் விடுபட்டுச் செல்லும் போது இவளைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பது எல்லாம், ஏதோ பெரிய்ய இராட்சச உருவம் கொண்டு அவளெதிரே நின்று ஏளனமாக நகைப்பது போல பிரமை தோன்றும்.
அவள் சந்தித்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் வந்து அவளுக்கு நன்றி சொல்வது போலவும் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கதறுவது போலவும் நிழற் படங்களாக அசைந்தாடும். அவளால் காக்க இயலாது போன வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அவள் கண்ணெதிரே மடிந்து போவதாகவும் கற்பனைகள் தோன்றி பயமுறுத்தும்.
இப்படிப் பல்வேறு சிந்தனைகளில் அவள் மனம் உழன்று கொண்டே இருக்க, சரியாக தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தாள் வெண்பா.
அப்படி நிம்மதி இல்லாமல் புரண்டு கொண்டிருந்த நேரத்தில் தான் நிலாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
"ஹலோ!"
"வணக்கம் மேடம்! நாம இன்னைக்கு மீட் பண்ணலாமா? அந்த காபி ஷாப் வந்துருங்க.. காலையில பத்து மணிக்கு வந்துடுங்க. உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்" என்றவள் அதற்கு மேல் வார்த்தைகளை வளர்க்காமல் அலைபேசியை அணைத்து விட்டாள்.
'இந்த வேலை கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. எனக்கு இன்னும் நேரம் வேண்டும்' என்று ஏதாவது கேட்பாள் அதற்குத் தான் வரச் சொல்கிறாள் என்று சலித்தபடி தான் கிளம்பினாள் வெண்பா.
காபி ஷாப்பில் நிலாவோடு அமர்ந்திருந்த குட்டிப் பெண்ணைப் பார்த்து அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது வெண்பாவிற்கு.
"ஹாய் நிலா, யார் இந்த அமுல் பேபி? உங்க பொண்ணா?" என்று ஒ கேட்ட வெண்பாவிற்கு பிரபாவின் மேலிருந்து கண்களை அகற்றவே இயலவில்லை.
அன்று போல காக்கி பேண்டும் கட்டம் போட்ட சட்டையுமாக வருவாள் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக எளிமையான பூனம் சேலை கட்டிக் கொண்டு சாதாரண ஒரு பெண் போல் வந்திருந்தாள் வெண்பா. போலீஸ் அதிகாரிக்கான மிடுக்கும் கம்பீரமும் இல்லாமல் எளிமையான குடும்பத்துப் பெண்ணாக தெரிந்த வெண்பாவின் அழகை ரசித்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்த நிலா அவளது கேள்வியில் சுயநினைவிற்கு வந்து புன்னகைத்தாள்.
"சொல்றேன் மேடம்!" என்றவள் நிலாவின் கையில் டேப்பைக் கொடுத்து அவளது காதுகளில் ஹெட்போனை மாற்றி விட்டாள்.
"பேபி நீ உனக்கு பிடிச்ச கேம் விளையாடு. எனக்கும் ஆன்ட்டிக்கும் முக்கியமான டிஸ்கஷன் இருக்கு.. எங்களை டிஸ்டர்ப் பண்ணாம விளையாடனும் சரியா?" என்று பிரபாவிடம் டீலிங் பேசினாள்.
"நிலா! நீ சொல்றதை நான் கேட்கணும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு" என்று முத்து முத்தாகப் பேசிய அமுல் பேபியை அப்படியே தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல இருந்தது வெண்பாவிற்கு. அவளை அள்ளி எடுத்து மடியில் வைத்து முத்தமிட்டாள்
நிலாவையும் அருவியையும் தவிர வேறு யாரிடமும் அவ்வளவாக அண்டாத பிரபா தன்னை தூக்கி மடியில் வைத்து முத்தமிட்ட வெண்பாவை இயல்பாக ஏற்றுக் கொண்டது நிலாவிற்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது
"அவ யார்கிட்டயும் சாதாரணமா இப்படி இருக்க மாட்டா, உங்ககிட்ட இயல்பா நடத்துகிறது எனக்கே ஆச்சரியமாக இருக்கு" என சொல்லிச் சிரித்தாள் நிலா.
"தினம் தினம் கொலை கொள்ளைன்னு பார்க்கிறோம். எப்பயாவது இந்த போல குழந்தைகளைப் பார்க்கும்போது ஆசையா இருக்கு" என்று ஏக்கப் பெருமூச்சு வெளியிட்டாள் வெண்பா.
"இந்த பேபி யாருன்னு நீங்க சொல்லவே இல்லையே" என்று மீண்டும் விட்ட இடத்திற்கே வந்து நின்றாள்.
வெண்பா ஹேக் செய்ய சொன்ன தகவல்களோடு வெண்பாவைப் பற்றியும் கூட கொஞ்சம் தெரிந்து வைத்திருந்த நிலாவிற்கு அவள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வந்திருந்தது. மேலும் எளிமையான புடவையுடன் கர்வம் இல்லாது தன் எதிரே அமர்ந்து ஒரு சகோதர பாசத்துடன் கேட்பவளிடம் மறுக்கவும் தோன்றாமல் பிரபாவைப் பற்றி சொல்லத் துவங்கினாள்.
அவள் சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டிருந்த வெண்பாவிற்கு ஆச்சரியமாகவும் இருந்தது. மென்னிலாவின் மேல் தனியாக மதிப்பு கூடியது. ஆனாலும் நேர்மையான காவல்துறை அதிகாரியாக அவளைக் கண்டிக்கவும் தவறவில்லை.
"ஒரு குழந்தை உங்க கையில கிடைச்சா அதைப் பற்றி முறையாக முதலில் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கணும் நிலா. போகட்டும், ஏதோ அனாதையா விட்டுட்டுப் போன குழந்தை என்று நினைத்து வளர்த்து இருக்கீங்க. ஆனா நீங்க அந்தக் குழந்தையை முறையாக அடாப்ட் செய்து விட்டீர்களா? அதற்கான ஃபார்மலிட்டீஸ் எல்லாம் தெரியுமா உங்களுக்கு? இப்படி முறையா செய்ய வேண்டியதெல்லாம் செய்யாம குழந்தையை வளர்க்கிறது உங்களுக்கே பெரிய ஆபத்தை உண்டாக்கும்" என்றாள்.
"நான் சிங்கிள்.. என்னால அடாப்ட் செய்ய முடியுமா மேடம்? " என்று சிறு சந்தேகத்தோடு கேட்ட நிலாவை வாஞ்சையோடு பார்த்தாள் வெண்பா.
'எவ்வளவு பெரிய நிறுவனத்தை நடத்துகிறாள், எவ்வளவு திறமைசாலியாக இருக்கிறாள், ஆனால் தான் பாசம் வைத்திருக்கும் ஒரு குழந்தையின் விஷயம் என்று வரும் போது அறியாத பெண்ணைப் போல் கேள்வி கேட்கிறாள்' என்று நினைத்துக் கொண்டவள்,
"அதெல்லாம் செய்யலாம் நிலா. நம்ம நாட்டுச் சட்டப்படி ஒரு பெண், ஆண் குழந்தை பெண் குழந்தை எதை வேணுமானாலும் தத்து எடுத்துக்கலாம்.. அதுக்கு உங்களுக்குக் கல்யாணம் ஆகி இருக்கணும்னு அவசியம் இல்லை/ நீங்க சிங்கிளா இருந்தாலும் உங்களுக்குத் தத்துக் குடுப்பாங்க. ஆனா இப்போ ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையை தத்து எடுக்கணும்னா அதுக்கு அனுமதி இல்லை. அவர் கல்யாணம் ஆனவரா இருந்தா அவருடைய மனைவியோட சம்மதத்தோட தத்தெடுக்கலாம். ஒரு ஆண், ஆண் குழந்தையை தத்தெடுக்க எந்த தடையுமில்லை. பெண் குழந்தையை ஒரு சிங்கிள் ஆண் தத்தெடுக்கிறது தான் இயலாத காரியம்.
அதுவும் நீங்க இந்த பேபியை பல வருஷமா வளர்த்துக்கிட்டு இருக்கீங்க. அவளை ரொம்ப பத்திரமாகவும் பாத்துட்டு இருக்கீங்க. அதனால தத்தெடுக்குறது ரொம்ப சுலபமா முடிஞ்சிடும். இந்த விஷயத்துல உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேட்கலாம்" என்று உத்தரவாதம் அளித்தாள் வெண்பா.
அதன் பின் அவள் கொடுத்த பைலையும் அவர்களைப் பற்றி தான் சேகரித்த தகவல்கள் அடங்கிய கோப்பையும் அவள் முன்னால் வைத்தாள் நிலா.
"என்ன நிலா இதெல்லாம்?"
"நீங்க சொன்ன வேலையை நான் முடிச்சிட்டேன் மேடம். நான் சாதாரணமா ஏதாவது போதைப்பொருள் கடத்தல், ஸ்விஸ் பேங்க் பணம் மாதிரியான விஷயங்களா இருக்கும்னு நினைச்சேன். ஆனால் இந்த அய்யாசாமி செய்யுற தொழில் எல்லாம் பார்த்தா படு பயங்கரமா இருக்கு மேடம்" என்றவள் அந்த கோப்புகளில் இருந்த ஒவ்வொன்றையும் எடுத்து வெண்பாவிடம் காட்டினாள்.
அதை பார்த்துக் கொண்டிருந்த வெண்பாவின் பார்வை சட்டென திரும்பியது. அடுத்த நொடி திடீரென சட்டென எழுந்து தான் அமர்ந்திருந்த நாற்காலியை தூக்கி பிரபா அமர்ந்திருந்த நாற்காலிக்கு நேராக வீசினாள். ஒரு நொடி ஆடிப் போன நிலா சட்டென திரும்பிப் பார்த்தாள்
5-6 குண்டர்கள் கையில் கூர்மையான ஆயுதங்களோடு அவர்களை நோக்கி விரைந்து வருவதும் வெண்பா வீசிய நாற்காலி பட்டு ஒருவன் மல்லாக்க விழுந்து கிடப்பதையும் பார்த்தாள் நிலா.
ஒரு நொடியும் தாமதிக்காமல் பிரபாவை கைகளால் உசுப்பி சுய நினைவிற்குக் கொண்டு வந்தவள், அவளை டேபிளின் அடியில் அமர்ந்து கொள்ளச் சொல்லி சைகை செய்தாள். கற்பூரம் எனப் பிடித்துக்கொண்ட குழந்தை உடனே உணவு மேசைக்கு அடியில் சென்று பாதுகாப்பாய் அமர்ந்து கொண்டாள். அடுத்த நொடி நிலாவும் தன் கையில் ஒரு நாற்காலியை எடுத்துக்கொண்டு சரமாரியாக வீசத் துவங்கினாள்.
அவள் கை பட்டு இருவர் மடங்கிச் சரிய அவள் மீது கடும் ஆத்திரமுற்று ஒரு பெரிய வீச்சரிவாளுடன் அவளை நோக்கி ஓடி வந்தான் ஒரு தடியன். அதைப் பார்த்துவிட்ட வெண்பா உடனே தன் இடுப்பு மடிப்பில் செருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனது கை மணிக்கட்டைக் குறி பார்த்துச் சுட்டாள்.
ஒரு நொடி என்ன ஏது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்த அந்த குண்டர்கள், கைகளில் துப்பாக்கியுடன் கம்பீரமாக நின்ற வெண்பாவை அப்போதுதான் கூர்ந்து கூர்ந்து கவனித்தார்கள்.
அவர்களில் ஒருவன், "டேய் இது ஐபிஎஸ் வெண்பா டா. 'என்கவுண்டர் எமகாதகி' பட்டம் வாங்கினவங்க. இவங்க கையில் சிக்கினால் நம் எல்லாரையும் சல்லிசல்லியா நொறுக்கிடுவாங்க. வாங்க ஓடிடலாம்" என்று தன் சகாக்களை இழுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்தான்.
"மேடம் இவங்க எல்லாம் யாரு? இந்த கேஸ் விஷயமாத் தான் உங்களை அட்டாக் பண்ண வந்தார்களா? என்று கேட்டாள் நிலா.
"இல்லை நிலா! அந்த குண்டாஸ்களின் பார்வை எல்லாம் இந்த பேபி மேல தான் இருந்தது. அவளைக் கடத்துறதுக்காக வந்தது போலத் தான் தெரியுது. உனக்கு பர்சனலா யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?" என்று கேட்டார் வெண்பா.
ஒரு நொடி உடல் இறுக அமைதியாக இருந்தவள் பின் மெதுவாக வாயை திறந்து சொன்னாள். "இந்த அய்யாச்சாமியோட மகன் மாறன் எனக்கு ரொம்ப நாளா தொல்லை குடுத்துட்டு இருக்கான். அவனை நான் கல்யாணம் செய்துக்கணும்னு சொல்லிக் கட்டாயப்படுத்துறான். அதுக்காக அவன் என்ன வேணா செய்வான். எனக்கு அந்தத் தடித் தாண்டவராயன் மேல தான் சந்தேகம். நான் வேணா கம்ப்ளைன்ட் குடுக்கிறேன்" என்று உடல் நடுங்க ஆவேசத்தோடு கூறினாள் நிலா.
"நீ குடுத்த ஆதாரமே போதும். யாராலும் அசைக்க முடியாது. இதுக்குஷமேல நீ எதுவும் பர்சனலா கம்ப்ளைன்ட் எல்லாம் கொடுக்க வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். என் கைல மட்டும் அப்பனும் மகனும் சிக்கட்டும்.. ரெண்டு பேரையும் சில்லி பரோட்டா போட்டு சால்னால ஊறவெச்சு உரிச்சிடுவேன்" என்று வெண்பா கூறவும் குலுங்கிச் சிரித்தார்கள் நிலாவும் பிரபாவும்.
தொடர்வாள்,
பைரவி.

Last edited: