எதிர்மறை வினையெச்சம்
அத்தியாயம் 12
ஆன்ட்டி ஹீரோக்களின் ஐந்தாவது வகை
5. பெயருக்கு மட்டும் ஹீரோ
இந்த வகை ஆன்ட்டி ஹீரோக்கள், ஹீரோக்களாகக் கருதப்படவே லாயக்கில்லாதவர்கள். தகுதியில்லாதவர்கள். வில்லனுக்கும் இவர்களுக்கும் மிகவும் குறைந்த அளவில் தான் வேறுபாடு இருக்கிறது.
இந்த வகை ஆன்ட்டி ஹீரோக்கள் முதலில் இருந்தே தவறான வழியில் தான் செல்கிறார்கள். நான்காவது வகை ஆன்ட்டி ஹீரோக்கள் முதலில் ஏதோ ஒரு நியாயமான காரணத்துக்காகப் பழி வாங்கும் எண்ணத்துடன் தவறான வழியில் இறங்கி விட்டுப் பின்னர் அந்த நேர்மையற்ற வழியையே தங்களுடையதாக்கிக் கொள்பவர்கள்.
ஆனால் இந்த ஐந்தாவது வகை ஆன்ட்டி ஹீரோக்களுக்கு எந்தவிதமான நியாயமான காரணமும் இருப்பதில்லை. தவறான வழியைத் தான் முதலில் இருந்தே தேர்ந்தெடுத்து செயல்படுகிறார்கள்.
பெண்களைத் தொடர்ந்து ஸ்டாக்கிங் ( stalking) செய்து தொந்தரவு செய்யும் ரோட் ஸைட் ரோமியோக்கள் இந்த வகை ஹீரோக்கள். பெண்ணுக்கு விருப்பமில்லை என்கிற போது இவர்கள் ஒருதலையாகக் காதலிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம், சேது படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் மற்றும் ஹிந்தியில் வந்த
ராஞ்சனா(raanjhana) படத்தில் தனுஷின் கதாபாத்திரம் எல்லாமே இந்த வகையைச் சேர்ந்தவையாக எடுத்துக் கொள்ளலாம். மற்றும் பழைய படமான நெற்றிக்கண் படத்தில் வரும் வயதான ரஜனிகாந்த் கதாபாத்திரம் இந்த வகை. ஆங்கிலப் படமான, " Face off" படத்திலும் இதே வகை ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரம் தான்.
நேர்மையற்ற வழியில் முதலில் இருந்தே நடக்கும் இவர்களும் வில்லன்களைப் போன்று மோசமானவர்களே.
தங்களுடைய நடிப்புத் திறனுக்கு சவாலாக இருக்குமென சில நடிகர்கள் இந்த மாதிரி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கலாம். ஆனால் ஹீரோக்களாக இவர்கள் சமுதாயத்திற்கு எந்தவிதமான நீதியும் சொல்வதில்லை.
அத்தியாயம் 12
வால்பாறை!
நாற்பது கொண்டை ஊசி வளைவுகளில் ஏறி வந்தால் வாயு பகவானுக்கே தலை சுற்றி விடும். அப்படியும் சுற்றாமல் வரும் அசகாயசூர வீரர்களுக்கும் மலை மேல் இருக்கும் வால்பாறை பார்த்தால் அதன் அழகில் தலை சுற்றி விடும்.
மென்னிலாவுக்கு வேலையில் பயங்கர டென்ஷன். எல்லோரிடமும் கத்தினாள். எதற்கெடுத்தாலும் திட்டினாள்.. அருவியே இவற்றைக் கண்களில் பயத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டாள். தனக்கு கொஞ்சம் சூழ்நிலை மாற்றம் தேவையென பல மாதங்களாக யோசித்துக் கொண்டிருந்ததுதான். எண்ணெயில்லாமல் ஓடும் இயந்திரம்போல திறன் குறைவோடு வேலை செய்யக் கூடாது என்றும் தோன்றியது.. இதுதான் இங்கே வரும் முதல் முறை.
யாரோ எப்போதோ, அழகான இடம் என்றுசொன்னது மனதில் தங்கிட, இப்போது அந்த பல்ப் எறிய, கார் எடுத்து வால்பாறை வந்து விட்டாள்.
மாலை வானின் அழகான மஞ்சள் நிறம் அந்த இடத்தையே கனவுலகமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்க, சாலையோரத்துக் கல் இருக்கையில் அமர்ந்திருந்தாள் நிலா..
அப்போது, குடுகுடு வென்று ஓடிவந்து மூச்சிறைக்க நின்றாள் ஒரு குட்டி தேவதை. "ஆன்ட்டி.. நான் இங்கே ஒளிஞ்சிக்கிறேன்.. இங்கே இருக்கேன்னு சொல்லாதீங்க.. ப்ளீஸ்!"
பதட்டமாய் சொல்லி இவள் பின்னே ஒளிந்து கொண்டாள் வாண்டு. என்ன நடக்கிறது என்று புரியாமல் நிலா திகைத்தது ஒரு நொடிதான். அடுத்த நொடி தன் மேல் கழுத்தைச் சுற்றிக் கிடந்த மஃப்ளரை எடுத்து தன் தோள் மேல் தளர்த்திப் போர்த்தி சின்ன இருக்கைக்கு மறையாமல் தெரிந்த குழந்தையின் ஆடை தெரியாமல் போர்த்தினாள்.
அவள் உடல் ஒரு போராட்டத்திற்குத் தயாராக விறைப்பாக நின்றது. ஆனால் கண்கள் எதுவும் காட்டிக் கொள்ளாமல் எதிரே இருந்த பூங்கொத்துகள் மேல் நின்றன.
ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் ஓடி வந்தாள்.. அங்கும் இங்கும் பார்த்தவள் சிறிது தயங்கி நிலா அருகே வந்து, "மேடம்.. இந்த பக்கம் ஒரு குழந்தை போச்சா?" என்றாள்.
"இல்லையே.. ஏன் காணுமா?"
"ஆமா மேடம்.." அந்தப் பெண்ணின் கண்களில் கவலையும் பதட்டமும் அப்பியிருந்தது. குழந்தையைக் கடத்துபவர்கள் குழந்தை காணவில்லை என்றால் இப்படிப் பதறுவார்களா? சொந்தக் குழந்தை போல தவிப்பார்களா? நிலாவின் கண்கள் சந்தேகத்தில் சுருங்கின.
அதற்குள் முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் ஓடிவந்தான், "என்ன மித்ரா.. இவ்வளோ கவனக்குறைவா இருப்பியா?" என்று சாடியவாறே.
இப்போது அந்த மித்ராவின் கண்கள் கலங்கிவிட்டன. "ஷ்யாம்.. உனக்கே தெரியுமே.. பாரதி எத்தனை வாலுப் பொண்ணுன்னு.. அந்த 'கலர்ஸ்' கடையில் போய் கேக் வாங்கனும்னு ஒரே வம்பு.. உள்ளே போய்ட்டு வர்றதுக்குள்ளே காணோம்".
ஷ்யாமால் சமாதானமாக முடியவில்லை. "இப்போ பாரதி எங்கே இருக்கான்னு தெரியலை.. இரு.. நான் அண்ணாக்கு கால் பண்ணி சொல்றேன் முதல்ல.. "
"பாரதிக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காதே ஷ்யாம்.. அவளுக்கு ஒன்னுன்னா நான் உயிரோடே இருக்க மாட்டேன்.."
"ம்ப்ச்.. ஏன் பெரிய வார்த்தை எல்லாம் பேசுற?.. ஒன்னும் ஆகாது. இங்கேதான் எங்கேயாவது போயிருப்பா"
அதற்குமேல் நிலாவிற்குத் தாங்க முடியவில்லை. ஆனால் முழுக்க சந்தேகமும் தெளியவில்லை.. எப்படி இவர்கள் குழந்தையின் அம்மா அப்பா என்று தெரிந்து கொள்வது? ஒன்றும் பேசாது அவர்கள் இருவரையும் பார்த்திருந்தாள்.. அந்த ஷ்யாம் கைப்பேசி எடுத்து ஒரு நொடி யோசித்தான். பின் மறுபடியும் பாக்கெட்டில் வைத்து, "அண்ணாகிட்டே சொன்னா, பயந்துடுவாங்க.. நாம இன்னும் கொஞ்சம் தேடலாம். வா.. அந்த பக்கம் தானே பாரதிக்கு பிடிச்ச பார்க் இருக்கு.. அங்கே போயிருக்காளா பார்க்கலாம்.." என்று சொல்ல அவனுக்கு முன் வேகமாக மித்ரா ஓடினாள்.
அவரகள் இருவரும் கண்ணிலிருந்து மறையும் வரை அமைதியாக அமர்ந்திருந்த நிலா, பின் மெதுவாக எழுந்து கைகளைக் கட்டியபடி பாரதி என அழைக்கப்பட்ட அந்தக் குழந்தையை முதலில் பார்த்தாள். பின், கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி முறைத்தாள்.
கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் எழுந்த பாரதி, இளம்பச்சை நிற ஃப்ராக்கில் ஒட்டியிருந்த மண் துகள்களை நகாசாகத் தட்டிவிட்டாள்.. இதுவா கடத்தப்பட்ட குழந்தை.. இவள் ரெண்டு பேரைக் கடத்தி வைத்து ப்ளாக் மெயில் செய்வாள்!! 'எந்தத் தப்பும் செய்யாதது போல எத்தனை சீன் போடுறா?' என்ற எண்ணத்தில், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளையே பார்த்திருந்தாள்.
"ஓகே பேபி.. தேங்க் யூ!" என்று சொல்லி மித்ரா, ஷ்யாம் போன பக்கம் கால்களை எட்டிப் போட்டவளின் காதைப் பிடித்து நிறுத்தினாள் நிலா.. "ஆஆஆ.. என்ன பண்றீங்க! வலிக்குது.."
"பாவம் உன்னைத் தேடி அவங்க ரெண்டு பேரும் எவ்ளோ டென்ஷன் ஆகுறாங்க.. நீ என்ன இவ்வளோ அசால்ட்டா பேசுற.. தப்பில்லையா?"
"இன்னைக்கு ஹோட்டல் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டுப் போகாம ஏமாத்துறாங்களே.. அது தப்பில்லையா?"
"சரி.. சீக்கிரம் வா.. உங்க அம்மா அப்பா கிட்டப் போய் விடுறேன். உங்க அம்மா ஏற்கனவே அழ ஆரம்பிச்சிட்டாங்க.."
அவளோடு நடந்தபடியே பாரதி பேசினாள், "அது எங்க அம்மா இல்லை.. மித்ரா.. கூட இருப்பது என் அப்பா இல்லை.. ஷ்யாம்.. "
முன்னே நடந்த நிலா திரும்பி பாரதியைப் பார்த்தாள். "உங்க அம்மா, அப்பா யார்?"
"அது பெரிய சீக்ரெட்.. யார்கிட்டேயும் சொல்லக் கூடாது."
கண்களைச் சுருக்கி பாரதியைப் பார்த்தாலும் அதற்கு மேல் அதைப் பற்றி என்ன கேட்பது என்று நிலாவிற்குத் தெரியவில்லை. எத்தனையோ விதமான பிரச்சனைகளில் இவர்கள் வீட்டில் என்ன பிரச்சனையோ!
"மித்ரா! மித்ரா! ஷ்யாம்!" என்று கைகளை வாயின் மேல் குவித்து வைத்து, சத்தமாக அழைத்தபடியே முன்னே நடந்தாள். அங்கங்கே நின்று தேடியபடி சென்றதால் இருவரும் வெகுதூரம் சென்றிருக்கவில்லை. தங்களைப் பேர் சொல்லி அழைப்பது கேட்டதும் திரும்பி நடக்கத் தொடங்கிவிட, சில நிமிடங்களில் நால்வரும் சந்தித்துக் கொண்டார்கள்.
பாரதியை அணைத்து மித்ரா முத்தமிட ஷ்யாமிடம் நிலா நடந்ததைச் சொன்னாள்.
"சரியான வாலுங்க இவ.. திடீர்னு முக்கியமான வேலை வந்துடுச்சி.. ஏற்கனவே முடிவு பண்ணியிருந்தது போல ஹோட்டல் போக முடியலை.. அதென்ன சொன்ன பேச்சைக் காப்பாத்தலைன்னு ஒரே கோபம்.. நல்லாச் சுத்த விட்டுட்டா" ஏதோ பொண்ணு பெரிய சாதனை செய்தது போல பெருமையாகச் சொன்னவனைப் பார்த்து இமை உயர்த்தினாள் நிலா. மனதில் தோன்றியதைச் சொல்லவும் செய்தாள், "எங்க அப்பாவா இருந்தா முதுகிலேயே நாலு போட்டிருப்பாங்க."
நால்வரும் சிரித்துப் பேசியபடி அருகிலிருந்த ஐஸ்க்ரீம் கடைக்குச் சென்றார்கள். அடுத்த ஒரு வாரத்தில் பாரதியும் நிலாவும் நெருங்கிய தோழிகளாகி விட்டார்கள். அழகான, குட்டித் தோழி! பாரதியோடு பேசுவது, விளையாடுவது, சாப்பிடுவது, சின்னச் சின்னச் சண்டையிடுவது என அவர்கள் நேரம் இறக்கை கட்டிப் பறந்தது.
ஒரு காட்டேஜில் தான் ஷ்யாம், மித்ரா தங்கியிருந்தார்கள். மாலை நான்கு மணிக்கு அங்கு போனால் நால்வரும் சேர்ந்து எங்காவது செல்வார்கள். ஏற்கனவே அந்த இடங்களுக்குப் பலமுறை சென்று வந்த அனுபவத்தில் பாரதிதான் பெரிய ஆளாக எல்லாவற்றையும் விளக்கு, விளக்கு என்று விளக்குவாள். பாவம்.. முதல்நாளே வேலை அதிகம் என்று சொன்னானே என்று தான் மட்டும் குழந்தையை அழைத்துச் செல்வதாக நிலா கேட்டுப் பார்த்தாள். இருவருமே ஒரு நொடி தாமதிக்காமல் அழகாக மறுத்து விட்டார்கள். பாரதியின் பாதுகாப்பில் இருவருமே ரொம்பவுமே கவனமாக இருப்பது போல் நிலாவுக்குத் தோன்றும். அப்செஷன் என்பார்களே, அந்த அளவிற்கு என்று கூட சொல்லலாம். பாரதியோடு யாராவது பேசினாலே ஷ்யாம் எழுந்து அருகில் போய்விடுவான். மித்ராவும் அவள் கண் பார்வையிலிருந்து பாரதி ஒரு நொடி மறைந்தாலும் பதறி விடுவாள்.
அதை ஒருமுறை கிண்டலாக நிலா சொன்னதற்கு, மித்ராவின் முகம் மிகவும் உணர்ச்சிகளின் குவியலாய் மாறிவிட்டது, "எங்க வாழ்க்கைக்கே அர்த்தம் கொடுக்கிறா நிலா.. எங்க உயிர் அவதான்.." என்று கண்கள் கலங்கக் கூற, நிலாவுக்குத் தான் வருத்தமாகிவிட்டது.
குழந்தை இல்லாமல் தத்தெடுத்திருக்கிறார்கள் என்று மூளை முடிவுக்கு வர, அதற்குப் பின் அது பற்றி நிலா எதுவும் பேசவில்லை. இரண்டு வாரங்கள் அழகாக ஓடின. சென்னைக்குச் சென்றால் பாரதியைப் பார்க்க முடியாதே என்று மனம் பரபரக்க, நிலாவிற்கே ஆச்சர்யமாகிவிட்டது.
இதை மட்டும் அருவியிடம் சொன்னால் மயங்கி விழுந்து விடுவாள். கண்களில் சிரிப்புடன் அதிகாலையில் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது, படபடவென்று கதவு தட்டப்பட்டது. யார் இது.. இத்தனை காலையில்.. அதுவும் இவ்வளவு வேகமாகத் தட்டுவது? "நிலா மேடம்.. நான் ஷ்யாம். இதைத் திறங்க ப்ளீஸ்.."
குரலில் தெரிந்த பதற்றத்தில், ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். வால்பாறை குளிரில் வியர்வையில் குளித்த படி நின்ற ஷ்யாமின் கைகளில் இருந்த பாரதியின் கண்களில் பயம் அப்பியிருந்தது. அவன் கைகளில் கொடுக்கும் முன் ஓடிச் சென்று குழந்தையை வாங்கி அணைத்துக் கொண்டாள்.
"என்னாச்சு? மித்ரா எங்கே?"
"நிலா.. பாரதி உயிருக்கு ஆபத்து.. நீங்க கார்ல தானே சென்னை போறீங்க.. இவளைக் கூட்டிப் போறீங்களா?"
"வாட்.. என்ன சொல்றீங்க?"
"எதுவும் கேட்காதீங்க.. யார்கிட்டேயும் பாரதி யாருன்னு சொல்லாதீங்க..(அவங்களுக்கே தெரியாதே.. தெரிஞ்சாத் தானே சொல்ல முடியும்!) எங்கே கிடைச்சான்னு சொல்லாதீங்க.. அவ அம்மா, அப்பாவைக் கண்டுபிடிக்க ட்ரை பண்ணாதீங்க.. உங்க கூட வச்சிருங்க. அவங்க அப்பா, அம்மா எப்படியாவது அவளைக் கண்டுபிடிச்சு உங்களைத் தேடி வருவாங்க..அது வரைக்கும்.. ப்ளீஸ்"
எந்த சம்பந்தமும் இல்லாத வாக்கியங்களைத் தொகுத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.
"மி..மித்ரா எங்கே?"
"நான் இங்கே வர்றதுக்காக அந்த கும்பலை முடிஞ்ச அளவுக்கு டைவர்ட் பண்ணிகிட்டு இருக்கா.."
என்ன சொல்வது? "ரொம்ப ஆபத்துன்னா நீங்க ரெண்டு பேரும் என்னோட சென்னை வந்துடுங்க.. கார்ல போயிடலாம்."
அவன் கண்களில் சின்னதாக ஒரு ஆர்வம் தோன்றி, தோன்றிய அந்த நொடியிலேயே அது மறைந்தது.
"ம்ஹூம். அது ரிஸ்க்.. பாரதி ஃபோட்டோ அவங்க கிட்ட கிடையாது. எங்க ஃபோட்டோவைத்தான் போலீஸ் வைத்து செக்போஸ்ட்டில் செக் பண்ணுவாங்க.. நீங்க பாரதியை எதுக்கும் சீட்டுக்கு அடியில் படுக்க வைச்சிக்கோங்க.."
பாரதியைப் பார்த்தாள். முகம் முழுக்க பயம் இருக்க, கண்கள் கலங்கியிருந்தாலும் அழாமல் இருந்த அந்த குட்டி தேவதையைக் காண உள்ளம் பதறியது.
"கவலைப்படாதீங்க.. இந்த மாதிரி சிச்சுவேசன் வந்தா எப்படி ஹேண்டில் பண்ணனும்னு பாரதிக்கு சொல்லிக் கொடுத்திருக்கோம். ஷீ வில் மேனேஜ். நீங்க சீக்கிரம் கிளம்புங்க. நான் வர்றேன். பல இடங்களுக்குப் போய் அவங்களைக் குழப்பிவிடணும்." என்றபடி வெளியேறினான்.
எதுவும் யோசிக்காமல் பெட்டிகளை காரில் ஏற்றி ஓட்ட ஆரம்பித்தாள். அவள் சீட்டுக்கு அடியில், கால்களின் பின்னே பாரதி சுருண்டு படுத்திருந்தாள். 'யார் இவள்? இந்த சின்ன வயதிலேயே இத்தனை தெளிவோடு வளர்த்திருக்காங்க; இந்த சூழ்நிலைக்கெல்லாம் தயார் படுத்தியிருக்காங்க; இவளைப் பிடிக்க போலீசையே கைக்குள் வைத்துக் கொண்டு யாரோ முயற்சிக்கிறாங்க; எல்லாவற்றிற்கும் மேலாக இவளுக்காக இரண்டு உயிர்கள் தங்கள் உயிர்களையே பணயம் வைச்சிருக்காங்க. இவளுக்காகவா? இவளைப் பெற்றவர்களுக்காகவா? யார் இவள்? இவள் அம்மா, அப்பா யார்?'
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு நிலாவிற்குத் தயக்கமாக இருந்தது. ஒரு வாரம் அமைதியாக இருந்தாள். அப்படியே விடுவதா? சென்னை வந்த ஒரு வாரம் கழித்து, வால்பாறையின் நிகழ்வுகள் சொல்லும் ஒரு தினப் பத்திரிக்கையை வாங்கிப் படித்தபோது, நான்காம் பக்கத்தில் காரில் சென்ற இளம் ஜோடி லாரி மோதி உயிருக்கு போராடுகிறார்கள் என்று பத்திரிக்கைச் செய்தி படித்த போது உடல் பதறி, பத்திரிகையைத் தூக்கி எறிந்து விட்டாள்.
என்ன நடக்கிறதோ பார்த்துக் கொள்ளலாம். பாரதி தன்னோடே இருக்கட்டும்; அவள் பெற்றோர் பற்றியும் விசாரிக்கும் முயற்சியைச் செய்வதில்லை என்று முடிவு செய்தாள். பிரபா என்ற புதிய பெயரிட்டு அருவிக்கு அறிமுகப்படுத்தினாள். என்னதான் தயார்படுத்தினாலும் பாரதி சின்ன குழந்தைதானே! சில பல நாட்கள் ரொம்பவும் அமைதியாக இருந்தாள். "அம்மா, அப்பா சீக்கிரம் உன்னைத் தேடிவருவாங்க..கவலைப்படாதே பாரதி." என்றவளை நிமிர்ந்து பார்த்து, "மித்ரா, ஷ்யாம்.. ரெண்டு பேரும் சேஃப் தானே நிலா?" என்று அமைதியாகக் கேட்டாள்.
"நிச்சயமா பத்திரமா இருப்பாங்க பேபி.. நீ எதைப் பற்றியும் யோசிக்காதே!" என்று அணைத்துக் கொண்டாள் தன் தேவதைத் தோழியை!
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை என்ற பெரிய எழுத்துகள் கொண்ட பலகையின் கீழ் நின்று கொண்டிருக்கும் பிரசன்னாவைப் பார்த்ததும் விக்னேஷ் முகத்தில் நக்கலான சிரிப்பு வந்து உட்கார்ந்து கொண்டது.
கொலைவெறி கண்களில் மின்ன முறைத்துக் கொண்டிருந்தவனின் பக்கம் வந்ததும், "என்னடா? பத்து நாள் ஃபாரின் போனாலே கண்டுக்க மாட்ட.. இப்போ ஒரு வாரம்.. இதோ இருக்கிற ஹைதராபாத் போயிட்டு வந்ததுக்கு நைட் பத்து மணிக்கு ரிசீவ் பண்ண வந்திருக்க.. மிஸ் பண்ணிட்டியா?" என்றான்.
"வேணாம்.. எதுவும் பேசாதே.. நான் இருக்கிற எரிச்சல்ல கொன்னுடுவேன்.." என்று விறைத்துக் கொண்டு நின்றான் பிரசன்னா.
சிரித்தாலும் அதற்குப்பின் விக்னேஷ், காரை எடுத்து தங்கள் அறை வரும் வரை எதுவும் பேசவில்லை. இந்த ஒரு வாரத்தில் தான் அறியவந்த தகவல்களை எல்லாம் மனதிற்குள்ளே தொகுத்துக் கொண்டிருந்தான். இதில் எந்த இடத்தில் தான் இறங்கி ஆட வேண்டும் என்றும் முடிவெடுத்தாக வேண்டும்.
அறைக்குள் வந்து கதவைச் மூடித் திரும்புவதற்குள் இரண்டு கைகள் அவன் கழுத்தைச் சுற்றி அழுத்தின..
"டேய்.. பிரசன்னா.. விடுடா.. என்ன பண்ற?"
"ம்.. உன்னைக் கொலை பண்றேன்.. தெரியலை?"
"கொல்றியா? கிச்சு கிச்சு காட்ற மாதிரி இருக்கு.. விடு முதல்ல.."
கைகளை எடுத்து முன்னே வந்து சோஃபாவில் போய் தொப்பென்று விழுந்தவன், "ஆமாடா.. நான் காட்டினா கிச்சு கிச்சு காட்ற மாதிரிதான் இருக்கும்.. இது ட்ரைலர்.. மெயின் பிக்சர் மாறன் ஆளுங்க வந்து காட்டுவாங்க.. அப்போ எப்படி இருக்குதுன்னு சொல்லு"என்றான்.
"ஆமா..அவன் ஆளுங்க வர்ற வரைக்கும் நான் பூ பறிச்சிகிட்டு இருப்பேன் பார்.. "
"விக்கி..எனக்கு என்னமோ இந்த மாறன் இஷ்யூ நம்மை ரொம்ப உள்ளே இழுக்கிற மாதிரி இருக்கு.. நீ எப்போவும் போல கான்சென்ட்ரேஷனோட இதில் இருக்கியான்னு எனக்கு சந்தேகமாக இருக்கு..", குளிர்சாதனப்பெட்டியிலிருந்து விக்னேஷ் எடுத்துப்போட்ட தண்ணீர் பாட்டிலை கேட்ச் பிடித்தவன் தொடர்ந்தான், "நீ இல்லாதப்போ இங்கே என்ன என்ன நடந்தது தெரியுமா.. நீ பாட்டுக்கு ஆந்திரா போய் உட்கார்ந்து கிட்ட?"
தனக்கு ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு பிரசன்னாவிற்கு எதிரே இருந்த ஒற்றை சோஃபா இருக்கையில் அமர்ந்த விக்னேஷ் கால் மேல் கால் போட்டு பின்னே சாய்ந்து கொண்டான், "இங்கே நடந்தது எல்லாம் தெரியும்.. உன்னை விட நிறையவே தெரியும்.. நான் சொல்லவா?"
சந்தேகமாய்ப் பார்த்த விக்கியைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "நம்பலையா பிரசன்னா? சொல்றேன் கேளு.. பிரபாவைக் கடத்த யாரோ முயற்சி செஞ்சாங்க.. நிலா அந்த புது ஐபிஎஸ் உதவியோட அந்த ஆளுங்களை அடிச்சி விரட்டிட்டா.. ரைட்ஆ?"
"ஆமா… அது மாறன் ஆளுங்களா.. அய்யாசாமி ஆளுங்களா தெரியலை.."
"நிலா, வெண்பா ஐபிஎஸ் கூட இருக்கும்போது அந்த பிள்ளையைக் கடத்த சொல்ற அளவுக்கு மாறனும் அய்யாசாமியும் முட்டாள் வில்லன்கள்னு நினைச்சியா?"
"பின்னே.. யாரு அனுப்பினாங்க.. இன்னோரு வில்லன் இருக்கானா?"
"அவங்க நான் அனுப்பின ஆளுங்க.."
"வாட்?" வாயில் ஊற்றிய தண்ணீர் புரைக்கேற நிமிர்ந்த பிரசன்னாவைப் பார்த்து விக்னேஷ் வெறுமே தோள்களைக் குலுக்கினான். " அய்யாசாமிக்கே இன்னும் தெரியாது. தன்னோட ஆட்கள் கடத்தினதா நம்பிட்டிருக்காரு. நிலா, அருவி ரெண்டு பேரும் இப்போ கொஞ்சம் அலர்ட் ஆகி இருப்பாங்க இல்ல.. பிரபாவுக்கு செக்யூரிட்டியை நிலா எப்படியும் ஸ்டெப் அப் பண்ணிடுவா.. மாறன் மேலேதான் எல்லா சந்தேகமும் இருக்கும். மாறன் ஆளுங்களும் அய்யாசாமி ஆளுங்களும் கையில் பிரபா இனி மாட்டுறதுக்கான வாய்ப்பு கம்மி"
"நல்லவன் மாதிரி பேசுறியே விக்கி.. சும்மா கரை ஓரமா நின்ன பொண்ணைத் தண்ணிக்குள்ளே தள்ளி விட்டதே நீதானே?" விக்கி முறைக்க, "ஓகே..ஓகே.. நாமதானே!" என்று முடித்தான்.
"கரெக்ட் தான். தூண்டில் மீன் போட்டு சுறா பிடிக்கிறோம். அப்படியே முடிஞ்ச அளவுக்கு அந்த தூண்டில் மீனையும் காப்பாத்த ட்ரை பண்றேன். யூ சீ.. நாளைக்கு மறுபடியும் வேற திமிங்கலம் பிடிக்க இந்த குட்டி மீன் தேவைப்படலாமில்லையா." வார்த்தைகள் அலட்சியமாக வந்தாலும் அவன் முகம் தீவிரமான சிந்தனையில் இருந்தது.
அவனை ஒரு நொடி பார்த்த பிரசன்னா அடுத்த பிரச்சனையை முன்னே வைத்தான். "மாறன் கால் பண்ணி பயங்கரமா கத்தினான். பாலைவனத்துல ஒட்டகத்து கால்ல உன்னையும் என்னையும் கட்டி ஓட விடுவானாம்.."
"அவனுக்கும் ஒரு பயங்கரமான பட்டாசு ஆந்திரால இருந்து கொண்டு வந்திருக்கேன்."
"என்னடா?"
"ம்ம்..அதை சரியாப் பத்தவைக்கணும். நீ என்ன பண்ற.. உன் ஆளுக்கு கால் பண்ணி நிலாவோட ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணச் சொல்லு.."
"ஆமா..நான் சொன்னதும் உடனே பண்ணிடுவா.. போடா.."
"பிரபா யாருன்னு எனக்குத் தெரியும். அதைப் பத்தி நிலா கிட்ட டிஸ்கஸ் பண்ணனும்னு சொல்லு..
"அது எனக்கே தெரியுமே.. அன்னைக்கு தண்ணி போட்டு மாறன் சொன்னானே.."
"தண்ணீ போட்டாலும் மாறன் உஷார்டா.. குழந்தை நிலா கைக்கு வந்ததும் அம்மா அப்பா லாரி மோதி இறந்துட்டாங்க. குழந்தையை நிலா தூக்கிட்டு வந்துட்டான்னு சொன்னான். யார் குழந்தைன்னு சொன்னானா?"
"அவனுக்கே தெரியாதா இருக்கும்.."
"அவனுக்குத் தெரியும்.."
"எப்படி சொல்ற?"
"அதைத்தான் டிஸ்கஸ் பண்ணனும். அருவி கிட்ட சொல்லி மீட்டிங் அரேஞ்ச் பண்ணு. நம்ம இடம், அவங்க இடம் எதுவும் வேணாம். எங்கேன்னு நான் சொல்றேன். எப்போன்னு மட்டும் அவங்களை முடிவு பண்ணிச் சொல்லச் சொல்லு.."
"ம்.. என்னமோ சொல்ற. நான் பேசிப் பார்க்குறேன்." என்று ஃபோனை எடுத்து அறைக்குள் செல்லப்போனவனை விக்கியின் குரல் நிறுத்தியது, "எங்கேடா போற? இங்கேயிருந்தே பேசு."
"ஹலோ.. லவ்வர்ஸ் மா.. அப்படி எல்லாம் பேச முடியாது. ஆயிரம் பேசுவோம். அதை எல்லாம் உன் முன்னாடி பேச முடியாது." சொன்னபடி கதவைச் சாத்தினான்.
"ஆயிரம் என்ன பத்தாயிரம் பேசு. ஆனா மீட்டிங் டைமோட வா!" என்று மூடிய கதவைத் தாண்டி கேட்கும்படி கத்தினான்.
சட்டென்று கதவைத் திறந்து எட்டிப் பார்த்த பிரசன்னா, "விக்கி.. மனசாட்சி தொட்டு சொல்லு. உன்னோட ப்ளான்ல நானும் ஒரு தூண்டில் புழு தானாடா?"
கண்களில் குறும்பு மின்ன, மெதுவாக கால் மேல் கால் போட்டு இருக்கையின் பின்னே சாய்ந்து தீவிரமான குரலில் சொன்னான், "சேச்சே..புழுவா! நீ என் நண்பன்தான்டா!"
சந்தோசத்தில் பிரசன்னாவின் முகம் பளிச்சென்று ஆவதைப் பார்த்தபடி தொடர்ந்தான், "தூண்டில் புழு, உனக்கும் உன் வாட்டர் ஃபால்ஸ்க்கும் நடுவில் பூத்திருக்கிற காதல்தான்!"
முகம் சுருங்கிட, "போடா!" என்று கதவு அதிரும் படி மூடினான் பிரசன்னா.