எதிர்மறை வினையெச்சம்
அத்தியாயம் 14
இது வரை இவ்வளவு அழகாக ஒரு விடியல் நிகழ்ந்ததில்லை எனத் தோன்றியது விக்னேஷிற்கு.
பின்னே நிலாவில் கால் பதிக்கப்போகிறானே! இல்லை நிலாவைத் தன் இதயத்தில் குடியேற்றப்போகிறான்..
அப்படியும் சொல்ல இயலாது. நிலவொடு வையம் வலம் வரப் போகிறான். லல்லல்லல்லல்லலலா... என பின்னனியில் உற்சாகமான இசை ஒலிக்கத் துயிலெழுந்தான் விக்னேஷ்.
எப்பொழுது இந்த எண்ணம் அவன் மனதில் விழுந்தது என்று அவனுக்கே தெரியவில்லை.. ஒருவேளை பிரசன்னாவும் அருவியும் காதலிக்கத் தொடங்கி விட்டார்களே, அவர்கள் இருவரின் உடன் பிறந்த சகோதரர்கள் போல் இதுவரை சுற்றி வந்த தானும், நிலாவும் இணைவது தானே பொருத்தமாக இருக்க வேண்டும் என்று அவனது உள்மனது கணக்கிட்டு விட்டதோ என்னவோ, நிஜம் போலவே இரவு முழுவதும் அப்படி ஒரு கனவு. நிலாவும் அவனும் கமிட்டாகி விட்டது போல. ஒரு அதிகாலை வேளையில் மென்னிலா அன்னமென நடந்து வந்து ஒரு மோதிரத்தை நீட்டி, 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' என்று விக்னேஷைக் கேட்கிறாள். அது நிஜம் என்றே நினைத்திருந்தான் வழக்கமான நேரத்தில் அவனது உயிரியல் கடிகாரம் விக்னேஷை எழுப்பும் வரை.
'இந்த பிரசன்னா எங்க போய் தொலைஞ்சான் நைட்ல இருந்து ஆளையே காணோம்.. இரு டா.. கிளம்பிட்டு வந்து உன்னை கவனிக்கிறேன்' என முணுமுணுத்தபடி குளியலறைக்குள் நுழைந்தான்..
பூத்தூறலாய் பனித்தூறலாய் தேகத்தில் பட்டுத் தெறித்து அவன் உடல் சூட்டில் உள்ள சூட்டையும் அடித்து விரட்டுவது போல பொழிந்தது நீர்.
சட்டென ஒரு யோக நிலைக்கு சென்றது போல மனம் குளிர நீருக்குள் நின்றவன் அந்த அமைதியோடு வந்து தனது உடைமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான். வேலைகளோடு உடைமைகளை எடுத்து வைத்தபடி பிரசன்னாவிற்கும் தொடர்புகொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான்
எப்போதும் விக்னேஷின் அழைப்பை முதல் இரு ரிங்க்களிலேயே எடுத்து விடுவான் பிரசன்னா. அவன் விக்னேஷை ஒருபோதும் அலட்சியப்படுத்தியது கிடையாது. ஆனால் இன்று இவன் அழைத்துக் கொண்டே இருக்கிறான் அவனது அலைபேசி ஓயாது சப்தமிட்டும் அதை எடுக்கவில்லை பிரசன்னா. மனம் தத்தெடுத்த அமைதியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது.
'என்னதான் ஆச்சு இவனுக்கு எங்க போய் தொலைஞ்சான்' என்று முதலில் அலட்சியமாக நினைத்தபடி மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தவன் பின் தங்களது அறையையே சுற்றி ஒரு முறை நோட்டமிட்டான். ஏதாவது குறிப்பு வைத்திருக்கிறானோ என்னவோ என்று சுற்றி சுற்றித் தேடினால் பிரசன்னாவின் அலமாரியில் அவனது கைபேசி கிடந்தது.
கைபேசியை அறையில் விட்டு விட்டு எங்கு போனான் என்று அவனைத் திட்ட ஆரம்பித்த மனது ஏதோ ஒரு நொடியில் திடீரென பதட்டம் கொண்டது. ஒருவேளை அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ? ஏற்கனவே மாறன் பிரசன்னாவை மிரட்டி விட்டுச் சென்றிருந்தான். அவனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ? என்று பதற்றம் தொற்றிக் கொண்டது அந்த பரபரப்பு உடலுக்குள் மீண்டும் தீயை பரவச் செய்தது.
மனம் மூளை உடல் எல்லாம் தீயாய் பற்றி எரிய என்ன செய்வது என்று புரியாது பரபரத்துக் கிடந்தான் சிறிது நேரம்.
'நிதானமா இரு விக்னேஷ் நிதானமா இரு யோசிப்போம்.. வேற ஏதாவது கூட.. வேற ஏதாவது வேலையாக கூட இருக்கலாம்.. ஒருவேளை அந்த அருவி பொண்ணு கூட எங்காவது போய் இருப்பானோ? போன் எடுத்துட்டு போனா நாம கண்டுபிடிச்சிடுவோம்னு அதை இங்க போட்டுட்டு அவ பின்னாடி ஊர் சுத்த போய் இருப்பானா என்னவோ? முதல்ல அந்த அருவியைப் பிடிக்கலாம்' என்று சற்றே நிதானப்பட்டவன் அருவியின் எண்ணத்திற்கு அழைத்தான்.
அவளது எண்ணிலும் அழைப்பு போய்க் கொண்டே இருந்ததே தவிர அவள் எடுத்தது போல தெரியவில்லை. வேகமாக தனது வீட்டிலிருந்து வெளிப்பட்டவன் காரை எடுத்துக் கொண்டு அசுர வேகத்தில் அருவியின் இருப்பிடத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தினான்.
மென்னிலாவின் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து ஒவ்வொரு அறையையும் திறந்து பார்த்துக் கொண்டு நுழைந்து கொண்டிருந்தான் விக்னேஷ். அங்கிருந்த பணியாட்கள் யாரும் அவனை தடுக்கவும் இல்லை, என்ன ஏதென்று கேட்கவும் இல்லை. அவர்கள் தன்னைத் தடுக்காதது கூட அவனது புலன்களுக்கு விழிப்பைக் கொடுக்கவில்லை. அருவியைப் பார்த்து விட்டால் போதும் என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு அறையாக திறந்து கொண்டிருந்தவன் எங்கேயும் யாரும் காணாது மாடியை நோக்கி புயல் வேகத்தில் ஓடினான்.
பார்த்துப் பார்த்து ரசித்து ரசித்துக் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் மேற்புறம் ஒரு சிறிய நந்தவனத்தைப் போல காட்சி அளித்தது. சுற்றிப் படர்ந்து இருந்த நித்திய மல்லிக் கொடிகளில் பூக்கள் பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அவ்விடமே மல்லிகையின் வாசத்தால் மயக்குமாறு செய்ய, நடுவில் ஓர் வெள்ளை நிற டீப்பாய், அருகிலேயே வெள்ளை நாற்காலி. மொத்தமும் கரு நிறப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரிய நிற கவுன் அணிந்து கையில் காபிக் கோப்பையும் செய்தித்தாளுமாக அமர்ந்திருந்தாள் நிலா.
வெள்ளை வானத்தில் கரிய நிலவும் மிளிரத்தானே செய்யும்? அந்த கரிய நிலத்திற்குள் பளிரிடும் பொன்னாய் மென்னிலாவின் முகம். அத்தனை நேரம் ஏற்பட்டிருந்த பரபரப்பு கோபம் எரிச்சல் அனைத்தும் போன இடம் தெரியாது கற்பூரமாய்க் கரைய அவளைப் பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தான்.
அவன் வரவை எதிர்பார்த்து இருந்தவள் போல அட்டகாசமான ஒரு புன்னகையை பரிசளித்தவள், "அழையா விருந்தாளி இப்படி காலங்காத்தால வந்து நிக்கிறீங்களே? நான் இந்த நியூஸ் பேப்பர் கூட பார்த்து முடிக்கலையே! சரி பரவால்ல வந்து உட்காரு டீ குடிக்கிறியா? ஜிஞ்சர் லெமன் டீ" என்றபடி ஒரு கோப்பையை நிரப்பி அவனது புறம் நகரத்தினாள்.
இந்த மொத்த அழகையும் இப்போதே அள்ளிப் பருகி விட மாட்டோமா என்ற காதல் போதை தாகமாய் தொண்டையில் அடைக்க, மெது மெதுவாய் நகர்ந்து வந்தவன் அவள் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
"டீ எடுத்துக்கோ! என்ன இந்நேரம் இந்தப் பக்கம் வந்திருக்க என்ன விஷயம்?"
"அருவி.. அருவி... எங்க?"
"அவளை ஏன் நீ தேடுற?"
"பிரசன்னா எங்க போனான்னே தெரியல ஒருவேளை அருவி கூட இருப்பானோன்னு பாக்குறதுக்காக வந்தேன்..?"
"போற வரவன் எல்லாம் என் வீட்டுக்குள்ள தங்க வைப்பேன்னு நினைக்கிறாயா? நான்சென்ஸ்!" காட்டமாக வெளிவந்தது மென்னிலாவின் குரல்.
அவளைப் பார்த்ததிலிருந்து ஏற்பட்ட இதமான மனநிலை சட்டென மாறி முகத்தில் வெந்நீர் ஊற்றியது போல நிமிர்ந்தான் விக்னேஷ்
"ஏய் யாரை வரவன் போறவன்ற.. அவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்.. அதனால அவள பாக்குறதுக்காக இங்க வந்திருப்பானோன்னு கேட்டேன்"
"நீ யாரை ஏய்ன்னு சொல்ற? இந்த ஏய் வா போ எல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோ.. மரியாதையா பேசு"
"ஆமா மேடம் ரொம்ப மரியாதையா தான் பேசுறீங்க..?"
"இப்ப ஏன் என்னை தேடி வந்து வம்பு இழுத்துட்டு இருக்குற? உனக்கு என்னதான் பிரச்சனை சொல்லு?"
“இன்னைக்கு நாம ரெண்டு பேரும் ஆந்திரா போகணும் ஞாபகம் இருக்கா இல்லையா? அதுக்காக வேலைகள் எல்லாம் பிரசன்னா கிட்ட ஒப்படைச்சிட்டு தான் கிளம்பனும். ஆனால் நேத்து சாயந்திரத்திலிருந்து அவனைப் பார்க்கவே இல்லை.. இப்ப பார்த்தா அவனுடைய போன் எங்க ரூம்ல கிடக்கு. அவன் எங்க போனான்னே தெரியலை. காணோம்" என வேகமாக சொல்லி முடித்தான்.
"ஆமா அவளையும் நேத்து சாயந்தரத்திலிருந்து காணோம். அவளும் போனை வீட்ல தான் போட்டு போயிருக்கா.. இதோ". என்று டீபாயை காட்டினாள் அங்கே அருவியின் கைப்பேசி சமர்த்தாய் அமர்ந்திருந்தது.
"அவ எங்க போனா? நீ தேடலையா அவளை?"
"அவ என்ன சின்ன குழந்தையா அவளை காணும்னு நான் தேடுறதுக்கு? போனவளுக்கு திரும்ப வர தெரியாதா?" என பற்றில்லாமல் பதில் சொன்னாள் மென்நிலா.
'இப்படிப் பேசக் கூடியவள் இல்லையே நிலா! என்ன தான் அருவி இவளிடம் வேலை பார்ப்பவளாக இருந்தாலும் தன்னுடைய சொந்த சகோதரி போல அவள் மீது அக்கறை கொண்டவள். இப்போது அவளை காணவில்லை என்று தெரிந்தும் இவள் பதறாமல் இருக்கிறாள் என்று ஒன்று அவள் எங்கு சென்றிருக்கிறாள் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அவளை அனுப்பியதே இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று யோசித்தவன் இவள் போக்கிலேயே போவோம் என்று முடிவு செய்தான்.
"அருவி இல்லைன்னா உன்னுடைய வேலைகளை யார் பார்த்துப்பா நிலா?"
"நான் என்ன தள்ளுவண்டிக் கடையா நடத்துறேன்? நான் பாக்கணும் இல்லாட்டி அவள் பாக்கணும்னு சொல்றதுக்கு? இது ஒரு எம் என் சி. நான் இல்லாட்டாலும் நடக்க வேண்டிய வேலை நடந்துகிட்டு தான் இருக்கும். மேனேஜ்மென்ட்டுக்கலாம் அதற்குறிய ஆட்கள் இருக்காங்க. உன் கம்பெனிக்கு வேணும்னா சொல்லு ஒரு நல்ல மேனேஜிங் டைரக்டரை, எம்ப்ளாயீஸை நானே செலக்ட் பண்ணிக் கொடுக்கிறேன்" என்றபடி தன்னுடைய டீயை மிடறு மிடறாக விழுங்கினாள்.
அவள் தொண்டைக்குள் இறங்கும் டீயாகத் தான் மாறிட மாட்டோமா என்று ஒரு கணம் நினைத்தவன் அடுத்த நொடியே இது என்ன விடலை பசங்க மாதிரி எண்ணம் போகுது வயசுக்கு ஏத்த மாதிரி சிந்திக்க வேணாம் எனத் தன் தலையைத் தானே உதறிக் கொண்டான்.
"மென்னிலா மேடம் நாம ஒரே டீம்மா ஒண்ணா வேலை செய்யணும்னு முடிவு பண்ணி இருக்கோம் தானே?" என்றவனது குரல் குழைந்து இருந்தது.
"ஆமா அதுக்கு என்ன இப்ப?"
"ஒரே டீமா ஒர்க் பண்றேன்னு சொல்லிட்டு என்கிட்ட எதையோ மறைக்கிறீங்க பாத்தீங்களா? அருவியைக் காணோம்னா நீங்க இப்படி அமைதியா உட்கார்ந்து ரசித்து ரசிச்சு டீ குடிப்பீங்களா? அருவி எங்கே இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியும் அப்படித்தானே? அப்படியே பிரசன்னா எங்க இருக்கான்னும் என்கிட்ட சொல்லிட்டீங்கன்னா நாம போய் நம்ம வேலையைப் பார்க்கலாம்"
"அது எப்படி எனக்கு தெரியும்? உன்னோட குரங்கு பிறந்து எந்த மரத்துல தாவிக்கிட்டு கிடக்கானோ..?"
"நிலா ப்ளீஸ்.... நீதான் அவங்கள எங்கேயோ அனுப்பி இருக்கேன்னு நினைக்கிறேன். பிரசன்னா அப்படி எல்லாம் என்கிட்ட சொல்லாம எங்கேயும் போறவன் கிடையாது. அவனை என்ன செஞ்ச? என்னுடைய பொறுமையை சோதிக்காமல் உண்மையை சொல்லிட்டேனா நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது" என்றவனின் குரலில் இப்போது கொஞ்சமாக கோபம் எட்டிப் பார்த்தது.
"விட்டா உன் நண்பனுக்காக என்னைப் பொசுக்கி சாம்பலாக்கிடுவ போலயே? உன்னை நம்பி எப்படி உன்னோட நான் ஆந்திரா வர்றது?"
"உன்னை யாராவது ஏதாவது செய்ய முடியுமா? நீ யாரு.. எவ்ளோ பெரிய ஆளு.. அப்புறம் நீ எனக்கு பயப்படுறேன்னு சொன்னா அதை பயமே நம்பாது"
சட்டென சிரித்தவள் "நான் யாருன்னு உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கே.. அதுதான் எனக்கு கொஞ்சம் யோசனையைக் கொடுக்குது. உன்னை நம்பி தனியா அவ்வளவு தூரம் வர்றதுக்கு ஏதாவது ஒரு சேஃப் கார்டு வேண்டாமா? அதனால உன்னுடைய நண்பனை நான் பத்திரமா வச்சிருக்கேன். எனக்கு எந்த சேதாரமும் ஆகாமல் பத்திரமா திரும்ப வந்துட்டேன்னா உன் நண்பனும் உன்கிட்ட பத்திரமா திரும்ப வந்துருவான்"
"சரி அவன் எங்க இருக்கான்னு சொல்லு"
"இருக்க வேண்டிய இடத்துல பத்திரமாக இருக்கிறான். நமக்கு நேரமாச்சு. வீட்டுக்கு வந்தவங்களை வெறும் வயிற்றோடு அனுப்பக் கூடாதுன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு. வந்தது வந்துட்டே.. இங்கேயே சாப்பிடு அப்படியே கிளம்புவோம்" என்றபடி எழுந்து சென்றாள்.
ஒரு எஜமானியை பின்தொடரும் நாய்க்குட்டியின் விசுவாசத்தோடு அவள் பின்னே அவன் செல்வது போலப் பட்டது தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த மைக்கேல் மதன காமராஜனுக்கு.
..
முந்தைய நாள்..
ஆந்திரா போக வேண்டும் என விக்னேஷ் சொன்னதும் நிலா நேராக வெண்பாவிடம் தான் போய் நின்றாள்.
"மேடம்! நான் அந்த மாறன் கேங் விசயமா விக்னேஷோட சேர்ந்து ஆந்திரா வரை போக வேண்டியதிருக்கு. அது வரைக்கும் பிரபாவையும் அருவியையும் நீங்க தான் பாத்துக்கனும்" என போய் நின்றாள்.
"உன்னோட யோசனையும் சரி தான் நிலா. உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதப்ப உன் சம்மந்தப்பட்ட குழந்தைய என்கிட்ட தேட மாட்டாங்க. அதனால அவங்களை நான் என் பாதுகாப்புல எங்க ஊர்லயே தங்க வைக்கிறேன். என் தாத்தா பாட்டி கிட்ட விட்டா அவங்க பத்திரமா பாத்துப்பாங்க" என்ற வெண்பாவின் முன் யோசனைப்படியே எங்கே எதில் சென்றார்கள் என்ற எந்தத் தடயமும் இல்லாமல் பிரபாவும், அருவியும் கிளம்ப, உடன் பிரசன்னாவும் கூட கிளம்பிவிட்டான். இதுவரை விக்னேஷ் சொல்லே மந்திரம் என்று இருந்தவன் இதோ இன்று அருவி சொல்லே மந்திரம் என்று மாறிவிட்டான்.
தொடர்வாள்
பைரவி.