கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் 21

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 21
(Epilogue )

"ஹாய்!" வாட்சப்பில் தகவல் அனுப்பி கட்டிலில் சாய்த்து வைத்திருந்த தலையணையில் சாய்ந்து, தலை முடியை பின்னே கோதி விட்டான் விக்னேஷ். பதில் சொல்வாளா? ம்ப்ச்.. என்றபடி உள்ளத்துக்குள் சலித்துக் கொண்டவனை, 'டொயிங்' என்ற சத்தம் பரபரப்பாக்கியது.. பார்த்து விட்டாள்; பதிலும் அளித்திருக்கிறாள், "ஹாய்!" என்று.

மணி இரவு ஒன்று என்று‌ காட்டிய கடிகாரத்தைப் கண்டு புருவங்களை நெற்றியின் உச்சி மேட்டுக்குக் கொண்டு சென்றவன், "தூங்கலையா? " என்றான். "ம்கூம் .. அருவிக்கு மெஹந்தி வச்சிகிட்டு இருக்காங்க."

"மேடம் மெஹந்தி வைச்சுக்கலையா?"

"வைக்கலை.."

புன்னகைத்தபடி அவள் பதிலைப் பார்த்திருந்தவனுக்கு அவளது அடுத்த கேள்வி, இதழ்களை இன்னும் விரிய வைத்தது, "வைக்கணுமா?"

ஒரு நொடி யோசித்தவன், தலை சாய்த்தபடி தன் பதிலை பதிப்பித்தான், "வேணாம்."

"ஏன்?"

"நீ யார்கிட்டேயும் ஹெல்ப் கேட்க மாட்ட.. மருதாணி வச்சா சொறியிறதுல இருந்து, தலைமுடியை காதுக்கு பின்னாடி சொருகுற வரை எல்லாமே யாராவது செய்யனும். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் போட்டுக்கோ. நான் பார்த்துப் பார்த்து செய்யுறேன்."

முகம் சிவந்தாலும், புன்னகை விரிய, "பொண்ணுங்களுக்குப் பிடிக்கிற மாதிரி பேசுறவங்க பெரிய ப்ளே பாயா இருந்துருப்பாங்களாம்."

"பொண்ணுங்களுக்குப் பிடிச்ச மாதிரி எல்லாம் பேச மாட்டேன்." என்ற பதிலை அனுப்பி அடுத்த வரியை தனி பதிலாக அனுப்பினான், "ஒரே ஒரு பொண்ணுக்குப் பிடிச்ச மாதிரி மட்டும்தான் பேசுவேன்."

கண்களை மேலே சுழற்றி, "ப்ளே பாய்!" என்று பதிலனுப்பியவளை, டீ ரெக்ஸ் வீட்டுக்குள் வந்து கீரைச் சாப்பாடு சாப்பிடுவதைப் பார்ப்பது போல, நம்ப முடியாமல், "ஆ!" வெனப் பார்த்திருந்தாள் அருவி.

நிமிர்ந்து தன் தோழியைப் பார்த்த நிலாவின் புன்னகை சின்னச் சிரிப்பாக மாறிக் கரையைக் கடக்க, ஃபோனைக் கீழே வைத்து , தள்ளி அமர்ந்து சோஃபாவில் இடம் கொடுத்தாள், "வச்சாச்சா அருவி? காட்டு.."

தன்னைப் பற்றிய கேலி கிண்டலை திசை திருப்புகிறாள் என்று தோன்றினாலும் அவள் காட்டிய திசைக்குப் பேச்சை மாற்றி, அருவியும், "ம்..‌நல்லா இருக்கா நிலா?" தன்‌கைகள் இரண்டையும் அவள் முன்னே நீட்டினாள். முழங்கை தாண்டி இரு கைகளுக்கும் செய்திருந்த டிசைனைப் பார்த்தவள், "ம்.. அழகா இருக்கு. தாகமா இருக்கா? தண்ணீ வேணுமா? எங்கேயாவது சொறியணுமா?" என்று அக்கறையாய் விசாரிக்க, புளகாங்கிதமடைந்த அருவி, கண்களில் சிறிதாய் நீர் கட்ட, "அச்சோ நிலா.. எப்படி இப்படியெல்லாம்? நான் மட்டும் மருதாணி கையில் இல்லைன்னா அப்படியே ஓடி வந்து கட்டிப் பிடிச்சிருப்பேன். உன்னைப் போல் ஒரு ஃப்ரெண்ட் கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கனும்."

"எல்லாம் உன் நல்ல மனசு அருவி. உன்னோட கோல்டன்‌ இதயத்துக்கு ஏத்த மாதிரி உனக்கு எல்லாமே பெஸ்ட்டாதான் கிடைக்கும்."

சந்தடி சாக்கில் தன்னை பெஸ்ட் என்று அவளே முத்திரை குத்திக் கொண்டாள் என்று எண்ணி சிரித்தபடி, "விக்கி அண்ணா ப்ரபோசலுக்கு எப்போ ஓகே சொல்லப் போற நிலா?' என்று மெதுவாய் மூக்கை நுழைத்துப் பார்த்தாள்.

தோளைக் குலுக்கினாள் நிலா. அனைத்துப் பிரச்சனைகளும் முடிந்த பின்னும் அவனுக்கு மட்டும் காதல் சொல்ல மூன்று மாதங்கள் தேவைப்பட்டது. நான் காத்திருந்தேனே! காத்திருக்கட்டும்! என்று மனதிற்குள் பொறிந்தவள், சிரித்தபடி அருவியைப் பார்த்து, "எப்போ முடிவு பண்றேனோ அப்போ சொல்றேன்."

"அஞ்சு மாசமா அண்ணா உன் பின்னே சுத்துறாங்க. அவர் அத்தனை பொறுமையானவர்லாம் இல்லை. அப்புறம் ஏதாவது தப்பான முடிவு எடுத்துடப் போறார்.."

"அவன் எங்கே என் பின்னாடி சுத்துறான். அங்கே மீட்டிங்.. இங்கே டெண்டர்னு பறந்துகிட்டு இருக்கான். அதுவும் அரசியல்வாதிங்க தயவு கிடைச்சதும் அள்ளுறான்" கடுப்புடன் வந்தது அவள்‌ குரல்.

"எத்தனை பிஸியா இருந்தாலும் உன்னைப் பார்க்க அப்பாயின்மென்ட் போட்டுடறார் இல்லையா?"

"வாரம் ஒரு முறை.. அரை மணி நேரத்துக்கு அப்பாயின்மென்ட் போட்டு வந்து பார்க்குறதுதான் சுத்துறதா? அப்போ உங்க ஆளு பிரசன்னா சார் காலையில் வந்து பிக் அப் பண்ணி சாயங்காலம் நீங்க ரெண்டு பேரும் ஆபிஸ்ல இருந்து டேக் ஆஃப் ஆகி ராத்திரி வந்து டிராப் பண்றதுக்கு பேர் என்னம்மா?"

"உனக்கு இப்படியெல்லாம் எக்ஸ்பெக்டேசன் இருக்கா.. மருதாணி கழுவினதும் அண்ணாக்கு கால் பண்ணி சொல்றேன், " என்று வீராவேசமாகப் பேசியவள்
"டொயிங்" என்ற வாட்சப்பின் அழைப்பு வர, மென்னிலாவையும் அலைபேசியையும்,"ஹிஹி!" என அசட்டு சிரிப்புடன் பார்த்தாள்.

அருவியின் முகத்தைப் புரியாமல் ஒரு நொடி பார்த்த நிலா, அவள் கோரிக்கை புரிய, ஜெர்க்காகி, "நோ!நோ!" என்று சோபாவிலிருந்து எழுந்து ஓர் அடி பின்னேயே எடுத்து விட்டாள்.

"ம்ப்ச்.. நிலா ப்ளீஸ்.."

"உன் ஆளுதானே. அவன் காதல் தத்துபித்துக்கெல்லாம் என்னால் பதில் டைப்ப முடியாது." சும்மாவே காதல் கரை புரளும். இதில் நாளை மறுநாள் கல்யாணம்.

"அச்சோ.. இல்லை நிலா.. ஜஸ்ட் எடுத்து கால் பண்ணி என் காதுல வை.."

கண்கள் சுருக்கிப் பார்த்தவள், ப்ளூடூத் ஹெட்செட் எடுத்து அவள் காதில் வைத்து அழைப்பை ஏற்று அலைபேசியை அவள் அருகில் வைத்து ஓடிவிட்டாள், 'ரெண்டு பேரும் சொட்டச் சொட்ட காதல் மழை பொழிவாங்க. இவங்க ரெண்டு பேரும் கூட இருக்கத்தான் நானும் விக்னேஷும் கெட்டுப் போயிடுறோம்' கையில் விக்னேசின், 'டொயிங்' வர புன்னகையோடு தன் அறை திறந்து உள்ளே சென்றாள். சந்திப்புகளுக்குத் தான் பஞ்சம். ஆனால் அரை மணி நேரத்திற்கொரு முறை விக்னேஷிடமிருந்து ஓர் அப்டேட் இவளுக்கு வந்துவிடும். என்ன செய்கிறான்.. யாரோடு இருக்கிறான்.. என்ன மனநிலையில் இருக்கிறான்.. என்று ஏதோ ஒரு தகவல் நிலாவிற்கு வந்துவிடும். நிலாவின் நாட்குறிப்பும் அவன் வாட்சப் பெட்டியானது.
அந்தந்தப் பொழுதின் மனநிலையை அவனோடு பகிர்வது, எளிதாய் வந்தது. இந்த மின்னணு இணைப்பு மற்றவர் அறியாமல் தங்களுக்குள் இருப்பது, இணைப்பை மேலும் இனிப்பாக்கியது.

மாலையைக் கையில் வைத்துக் கொண்டு தன் முன்னே இருந்தவர்களைப் பார்த்த, அரச்சகர், "கல்யாணப் பையன் இங்க இருக்கீங்க.. மாலை இருக்கு; தாலி இருக்கு.. பொண்ணு எங்கே?" என்று பாவமாய் கேட்டார்.

பிரசன்னா ஏக்கமாக தன் முன்னே இருந்த நிலாவின் முகத்தைப் பார்க்க, நிலா முகத்தில் லேசாய் பதற்றம். "பார்லர் போயிட்டு வர்றேன். நீ போன்னு சொன்னா!"

"எந்த பார்லர் தெரியுமா.. நான் போய் பார்க்க சொல்றேன்" வெண்பா முன்வந்தாள்.

"தெரியலையே. என்கிட்டே சொல்லலை."

"பொண்ணுக்குப் பிடிச்சிதான கல்யாணம் பண்றீங்க.." என்று வெண்பா கேட்க, "அருவியை கட்டாயப்படுத்துனியா நிலா?" என்று கனகசபாபதி தன் மகள் மேல் சந்தேகக் கண்ணைத் திறந்தார்.

"என்னது?!" என்று பிரசன்னா ஜெர்க் ஆக, நிலா, "என்ன வெண்பா.. கண் இருக்கிற எல்லாருக்குமே தெரியும். இவங்க ரெண்டு பேரும் ஓடவிட்ட காதல் நதியை.. நீங்களே கேட்களாமா?"

"அது சரிதான். என்ன பிரசன்னா? நேத்து ஏதாவது சண்டையா இரண்டு பேருக்கும்?" என்று பிரபா தன் போலிஸ் மூளை கொண்டு புதுப் புது காரணங்கள் கொண்டு வர, பாவமாய் முகத்தை வைத்தபடி, "இல்லீங்க.. காலையில் நாங்க பேசிக்கிட்ட வாட்சப் சேட் வேணும்னா பாருங்க.. சண்டையே இல்லை. சந்தோசமாதான் பேசுனா.."

"உங்களைப் பத்தின புது உண்மை ஏதாவது கடைசி நேரத்துல அருவிக்கு தெரிஞ்சிருக்குமோ?" தமிழரசன்‌ கேள்வி கேட்க, இப்போது நிலாவின் கண்களிலும் சிறு சந்தேகத்துடன் அவனை மேலிருந்து கீழ் பார்க்க, பிரசன்னா பொங்கினான், "அடப்பாவிங்களா!! எல்லாரும் என்னையே சந்தேகமா பார்க்குறீங்களே!! உங்களுக்கே இதெல்லாம் நியாயமா?" அப்பாவியாய் பார்த்திருந்த தன் தாய் தந்தையைப் பார்த்தவன், " என் பக்கத்துல பேச யாரும் இல்லாம போயிட்டாங்களே! என் உயிர் நண்பன் விக்கி ஃப்ளைட்ல வந்துகிட்டு இருக்கான்.‌ வந்ததும் உங்களை எல்லாம் நிற்க வச்சி கேள்வி கேட்பான். அதுக்கு முன்னாடி அருவியைக் கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணலாம்." என்றபடி ஃபோன் எடுத்தவன் ஒரு நொடி நின்றான். 'இருக்குமோ!! ச்சே..ச்சே.. அப்படி எல்லாம் இருக்காது!!" மனதிற்குள்ளேயே பேசியபடி அருவிக்கு அழைத்தான்.

அவன் காதில் அழைப்பு மணி அடிக்க, எதிரில் இருந்த நிலா கையிலிருந்த அலைபேசியிலும் அழைப்பு வந்தது. இமைகள் உயர்த்தி பிரசன்னா நிலாவைப் பார்க்க, இது என் ஃபோன். ஏதோ புது எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்கு.. " என்றபடி எடுத்து காதில் வைத்தாள்.

அடுத்த நொடி அவள்‌ முகம் ரத்தமென சிவக்க, "ராஸ்கல்!" என்றாள். என்ன.. அந்த ராஸ்கல்தான் 'ராஆஆஸ்கல்' என்ற கோப ஸ்ருதியில் இல்லாமல் குழைந்து வந்தது.

"யாரும்மா?" கனகசபாபதி அவள் பக்கத்தில் வந்தார்.

"மாறனா?" தமிழரசனின் கேள்வி.

"ஏன்டா இப்படி?"

"ம்ப்ச்.. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க மேடம். முகூர்த்த நேரம் முடிஞ்சிடப் போகுது. சீக்கிரம் ஓகே சொல்லுங்க."

" மானத்தை வாங்காதே! அருவியைக் கூப்பிட்டுட்டு உடனே இங்கே வா.. அவ பயந்துடுவா!"

தன் முன்னே அமர்ந்து சாக்லேட் மில்க் ஷேக் ஐ ருசித்துக் குடித்துக் கொண்டிருந்த அருவியைப் பார்த்து சிரித்தபடி தன் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவன், "ஆமா.. பயந்து நடுங்குறாங்க உங்க‌ ஃப்ரெண்ட். அதனால் உடனே நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லுங்க. இல்லைன்னா இந்த கல்யாணத்துக்கு பொண்ணு வர மாட்டாங்க. "

"விக்கி!!" இதுவரை குசு குசுவென்று பேசிக் கொண்டிருந்தவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரசன்னா, அவள் இதழசைவில் தன் நண்பன் பெயரைக் கண்டுபிடித்து, கண்களை விரித்து, "அவ்வா.. அவ்வா.. இந்த அநியாயம் எங்கேயாவது நடக்குமா!! டேய்.. உயிர்த்தோழன் உயிர்த்தோழன்னு சொல்லிட்டு என் கல்யாணத்து அன்னைக்கு பொண்ணைக் கடத்திட்டுப் போய் ப்ளாக் மெயில் பண்றியே.. இது நியாயமா! அடுக்குமா! எங்கேயாவது நடக்குமா!" என்று சத்தமாய் புலம்ப, எங்கே தன் முகத்தை மறைப்பது எனத் தெரியாமல் நிலா, "விக்கி.. என் கையில் மாட்டின நீ அவ்ளோதான்.." என்றாள்.

"உன் கையில் மாட்டுறதுக்கு உன் சம்மத்தைத்தான் கேட்குறேன் நிலா பேபி.."

"நீ கல்யாணத்துக்கு முதல்நாள் அவசரமா பெங்களூர்ல மீட்டிங்.. ஷார்ப்பா காலையில் வந்திடுவேன்னு சொன்ன போதே சந்தேகப்பட்டிருக்கனும்டா!" பிரசன்னாவின் புலம்பல் தொடர்ந்தது.

எல்லோரும் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, "சரி.. ஓகே.. அருவியைக் கூட்டிட்டு வா.."

"ஓகேவா?"

"ம்!"

"எதுக்கு?"

கடித்த பற்களுக்கிடையே வார்தைகள் வெளி வந்தன, "நம்ம கல்யாணத்துக்கு.."

"ஹேஏஏஏ!" என்று அருவி கூச்சலிட, பல்லைக் கடித்தாள் நிலா, கூடவே இருந்துட்டு எனக்கு தெரியாம அவன் கூட சேர்ந்து பிளான் பண்ணியிருக்கா.. இடியட்..

"வாட்.. என்ன? கேட்கலை.. திருப்பி சொல்லு.."

"விக்கி இடியட்.. வாடா.."

"பக்கத்திலே இருக்கிற ஐஸ்க்ரீம் ஷாப்லதான் இருக்கோம். அஞ்சே நிமிசத்தில வந்திடறோம்" என்று அவன் உல்லாசக் குரலில் அழைப்பைத் துண்டிக்க, கோபமாய் தன் அலைபேசியை நிலா முறைக்க, அங்கிருந்த அனைவரும் அவளை கோபமாய் முறைத்தார்கள்.

எதுவும் சொல்லாமல் அனைவரும் வாசலைப் பார்த்தபடி நிலா நிற்க, சொன்னதற்கு ஒரு நிமிடம் முன்னேயே வந்து அந்தக் கோவில் முன் தன் இருசக்கர வண்டியை நிறுத்தியவன் பின்னிருந்து பச்சை நிறப் பட்டு சேலை கட்டி, மிதமான அலங்காரத்துடன் புன்னகையும் பொன்னகையும் ஜொலிக்க அருவி இறங்கி நடந்து வந்தாள்; நேரே பிரசன்னா அருகில் போய் நின்றாள், " சாரி பேபி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று கண்களில் குறும்போடும் டன்டன்னாய் காதலோடும் சொல்லியவளைக் கண்டு மாத சம்பளக்காரரின் அக்கௌன்ட் போல அவன் கோபம் கரைந்து போக, பொய்க்கோபத்தைக் கண்ணில் காட்டி முறைத்தான்.

"பொண்ணு வந்தாச்சு.. சீக்கிரம்.. சீக்கிரம்.. அப்புறம் பாத்துகிட்டே இருக்கலாம்டா.. இப்போ மாலையை மாத்துங்க.. நல்ல நேரம் முடிஞ்சிடப் போகுது.." என விக்கி சொல்லியபடி உள்ளேவர, அவனை அடித்துக் கொல்லும் அளவுக்கு கோபமாய் இருந்தாலும் அதற்காக மேலும் சில நிமிடங்களை வீண் செய்ய விருப்பமில்லாமல், அருவியின் கழுத்தில் பொன்தாலி இட்டு திரு பிரசன்னா, திருமதன் பிரசன்னாவாக பதவி உயர்வு பெற்றான்.

கோவில் பதிவேட்டில் சாட்சியாக கையெழுத்திட விக்னேஷ், மென்னிலா, பிரபா, தமிழரசன் என பலரும் போட்டியிட மகிழ்ச்சியுடன் பார்த்திருந்த அருவி மெல்ல பிரசன்னாவின் தோளில் சாய, அவளை தோளோடு அணைத்தவன், "வாட்டர் ஃபால்ஸ் கண்ணில் இருந்து வாட்டர் ஃபால் ஆகக் கூடாதே!" என்று கன்னத்திலிருந்த சிறுதுளி நீரைத் தட்டி விட்டான்.

விக்னேஷ் சிரித்தபடி தன் நண்பன் அருகில் வந்து, நான்கு அடிகளை முதுகில் வாங்கினான். "உன் சுயநலத்துக்காகத்தான் என் காதலை சப்போர்ட் பண்றேன்னு நீ சொல்லும்போது நான் நம்பலைடா..இப்போ புரியுது..நீ என் ஃப்ரெண்ட்டே இல்லை..‌போடா!"

"ம்ப்ச்.. பிரசன்னா.. பேச்சு மாறிப் பேசக் கூடாது"

"என்னடா சொல்ற?"

"நிலா இன்னும் ஓகே சொல்லலைன்னு ரெண்டு நாள் முன்னே நான் ஃபீல் பண்ணப்போ நீதானே சொன்ன, உன் காதலுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்னு. திருப்பி திருப்பி கேட்டேனே, நிஜமாவா.. நிஜமாவான்னு.. ஆமாடா ன்னு சட்டை காலரைத் தூக்கிவிட்டதானே.. சோ.. உன் சம்மதத்தோடுதான் நான் இதை செஞ்சேன்."

"கைகேயி வேலை பார்த்துட்டு இதில் என்னடா உனக்கு பெருமை!!"

சிரித்தபடி அருவியுடன் ஹைஃபை செய்து, அவன் அம்மாவிடம் இரண்டு அடி வாங்கி, நிலாவின் அம்மா அப்பாவிடம் ஆசி வாங்கி, வெண்பாவின் கை குலுக்கி, பிரபாவை அவன் தலையை விட சற்று தூக்கிப் போட்டு பிடித்து, தமிழரசனின் தோள் அணைத்து என் எல்லோரையும் சமாளித்துக் கொண்டிருக்க, சற்றுத் தள்ளியிருந்த பிள்ளையார் சந்நிதானத்தின் முன்னிருந்த மென்னிலா அவனையே பார்த்திருந்தாள். சில நொடிகளில் அவளைப் பார்த்தவன், மெல்லிய சிரிப்போடு அவளை நெருங்கினான்"

அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு காதல் பார்வை, கோபப் பார்வையாக மாறிவிட்டிருந்தது. அவள்‌முன் நின்றவன் கைகளை மார்பில் கட்டி, "எனக்கு வேற வழி தெரியலை நிலா மேடம்.. நான் என்ன பண்றது?"

"அதுக்காக இப்படியா பண்ணுவ?


"பின்னே.. எத்தனை மாசமா கேக்குறேன்.. உன் சம்மதத்தை.. உன்னோட எழுந்திருக்கனும் நிலா; உன் கூட சாப்பிடனும், ரெண்டு பேரும் ஒன்னா கிளம்பனும்.. நைட் உன்னோடு தூங்கனும். என்னுடைய ஒவ்வொரு நாளும் உன் கூட இருக்கனும்."

"ம்ப்ச்.. " என திரும்பிக் கொண்டவளைப் பார்த்து, "இப்படிதான் என்னை பயத்துலேயே வச்சிருக்க.. சரி விடு.. இப்போ சொல்லு.. ஓகே சொல்றதுல உனக்கு என்ன தயக்கம்? உனக்கு என்னைப் பிடிக்கும்தானே?"

"ஓவர் கான்ஃபிடன்ஸ் விக்னேஷ் உனக்கு!"

"ம்ப்ச். சொல்லு மென்னிலா.. பிடிக்கும் தானே?"

தன் பின்னால் இருந்த சுவரில் சாய்ந்தபடி அவளும் அவனைப் போல் கைகளை குறுக்கே கட்டி, "பிடிக்கும்" என்று எந்த அலட்டலும் இல்லாமல் சொல்ல மீண்டும் ஒரு முறை அவளிடம் காதலில் விழுந்தவன், "வேறு யாரையும் லவ் பண்றதா நினைக்கிறீயா?"

"இல்லை.."

"என்னைக் கல்யாணம் பண்ணி வாழ்கிற வாழ்க்கை நினைச்சா பிடிக்கலையா?"

முகம் லேசாக செம்மையுற, காதில் கம்மல் ஆடும்படி இடம் வலம் தலையசைத்து, "இல்லை!" என்றாள்.

"அப்போ.. ஓகே‌ சொல்ல வேண்டியதுதானே?"

"உன்னாலேதான்.. " கோபமாய் வந்தது குரல்.

"நான் என்ன பண்ணினேன்?"

"யாரோ ஒருத்தனுக்குத் தூதா என்னைப் பார்க்க வந்து, பார்த்த பிறகும் அதுக்கு ட்ரை பண்ணினதானே? எனக்கு ஒரு பயம்.. நான் ஓகே சொன்னதும், 'ஹாஹா!" ன்னு சிரிச்சி, 'ஏமாத்திட்டேன் உன்னை. ஜெயிச்சிட்டேன் உன்னை'ன்னு "சொல்வியோன்னு பயம். அதான் அந்தப பயம் போக டைம் எடுத்துக்க நினைச்சேன். ஆனா உன் மேல் பிடித்தம் அதிகமாக அதிகமாக பயமும் அதிகமாகிக்கிட்டேதான் போகுது" என்று பெரிதாய் அவள் சொன்ன விளக்கம் கேட்டு, விக்கி தன் இடது நெஞ்சினில் தன் வலக்கையை வைத்துக் கொண்டு, "என்னைப் பார்த்தா இதிலே எல்லாம் நடிக்கிறது போலவா தெரியுது.." என்று பாவமாய் கேட்க,
"ஆமா!" என்று அசால்ட்டாக அவள் பதில் சொன்னாள்.

"நான் எப்பவோ ஆன்ட்டி ஹீரோல இருந்து ரொமான்ட்டிக் ஹீரோவா பதவி உயர்வு வாங்கிட்டேன் மேடம்.. இப்போ நோ பழி, பாசாங்கு. ஒன்லி காதல், காதல் மற்றும் மென்னிலா.."

"நம்ப மாட்டேன்!"

"எப்படி நம்ப வைக்க?"

"இதோ இன்னைக்கே என் அம்மா அப்பா, உன் அம்மாகிட்ட பேசி கல்யாணத்துக்கு டேட் சொல்லு.."

"வாவ்.. என் செல்லம்.. " என்று குடும்பமே ஓரக்கண்ணில் தங்களைத்தான் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தாலும் , மெல்ல பக்கம் வந்து அவள் முகத்தின் இருபக்கமும் தன் கரங்களை வைத்து நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான் விக்னேஷ்.

தன்னை மறந்து சில நொடிகள் நின்றாலும் சில நொடியில், "டேய்.. என்ன பண்ற? எல்லோரும் பார்க்குறாங்க!" என்றபடி விலக எத்தனித்தாள்.

"ஓகே சொல்லிட்டீல்ல!? இனிமே எல்லாம் இப்படித்தான்!" என்றபடி தோள்மேல் கை போட்டபடி தங்கள் குடும்பம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.


நிறைவு.

பைரவி

டாக்டர்.அகிலாண்ட பாரதி,
புவனா சந்திரசேகரன்,
பூர்ணிமா கார்த்திக்,
ராஜலட்சுமி நாராயண ஸ்வாமி,
And
டாக்டர். வித்யா.



 
Top