என்னில் தன்னை இணைத்தவன் அத்தியாயம் -1
இருள் எனும் கருப்பு நிறம் விலகி வெளிச்சம் எனும் ஒளியை பகலவன் எல்லா இடங்களிலும் பரவச் செய்யும் விடியற் காலையில் எப்பொழுதும் போல் எல்லா இடங்களிலும் நடைமுறையாக நடக்கும் அதே பரபரப்புடன் அவர்களின் வீடும் இயங்கிக் கொண்டிருந்தது.
அந்த வீட்டின் தலைவியான சாந்தனா தனது அம்மாவிடம் கத்திக் கொண்டிருந்தார்.
"அம்மா சீக்கிரம் ரெண்டு பேரையும் எழுப்பி விடுங்க, நேரமாயிடுச்சு என்ன சொன்னாலும் கடைசி நேர வரைக்கும் தூங்குறதே வேலையா போச்சு "என்று புலம்பிக் கொண்டே அன்றைக்கான ஸ்பெஷல் தங்களுடைய உணவை சமையலறையில் தயாரிப்பதில் மும்மூரமாக இருந்தார் சாந்தனா.
சாந்தனா சொன்னார் என்பதற்காக வீட்டின் பின் பக்கம் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த காந்திமதி பாட்டி தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி விட்டு மெதுவாக நடந்து வந்து தன் பேத்திகளின் அறையை நோக்கி நடந்தார்.
காந்திமதி பாட்டி கதவை லேசாக தள்ள… அது திறந்துக் கொண்டது.உள்ளே எட்டிப் பார்க்க…
அறையில் உள்ளே வெளிச்சமே வராத அளவிற்கு எல்லா இடங்களையும் துணியை வைத்து அடைத்து வைத்து இருட்டறையில் போர்வையையும் மூடிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.
காந்திமதி உள்ளே வந்து அறையில் உள்ள ஜன்னல்களின் திரைச்சீலைகளை விலக்கி விட்டு விளக்கை போட்டு விட்டதும் போர்வையை சிறிதளவு விலக்கி விட்டு ஒற்றைக் கண் மட்டும் திறந்து பார்த்து "பாட்டி நான் எப்பவோ முழிச்சிட்டேன் கண் முழித்ததும் உங்களைத் தான் முதல்ல பார்க்கனும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன், கரெக்ட்டா வந்து தரிசனம் கொடுத்தீட்டீங்க பாட்டி தாங்க்யூ "என்று தன் போர்வையை மொத்தமாய் விலக்கி விட்டு எழுந்து வந்து பாட்டியைக் கட்டிக் கொண்டாள் அவள்
அவள் அப்படி செய்ததும் காந்திமதி பாட்டி சிரித்துக் கொண்டே "ஏன் எப்பவுமே நான் தான் வந்து எழுப்பி விடணுமா? ஏன் நீயாக எழமாட்டாயா?"
"ம்ம்..ஹீம்…என் பாட்டி வந்து எழுப்பாமல் நான் எழுந்திருக்கவே மாட்டேன் "என்று இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டு தன் முகத்தை எடுத்து பாட்டியின் கன்னத்தில் தேய்த்து விட்டாள் "
அவளது செயலைப் பார்த்து "ஐயோ தூங்கி எழுந்து முகத்தை கூட கழுவாமல் ப்ரெஷ்ஷா இருக்கிற என் மேல தேய்க்கிற ச்சீ… போம்மா போய் முதல்ல ப்ரெஷ் பண்ணி குளிச்சுட்டு வா "
"முடியாது பாட்டி "
"ஏன்"
"தினமும் நீங்க வந்து எழுப்பி விடுவேன்னு சொல்லுங்க அப்போ தான் குளிக்கப் போவேன்" என்று அவள் அடம் பிடிக்க…
சரி நானே வந்து உன்னை தினமும் எழுப்புறேன் உன் புருஷன் வீட்டுக்கு போனாலும் இந்த பாட்டி இந்த வேலையை தவறாமல் செய்றேன் சரியா?நீ போ என் செல்லம்"
"ம்ம்ம்… இது தான் குட் பாட்டி இப்போ நான் போறேன்"
இஇஈஈஈ… என்று விலக்காத பல்லை நன்றாக திறந்து காட்டி விட்டு அவள் செல்ல…
காந்திமதியோ தன் தலையில் அடித்துக் கொண்டு "ப்ரெஷ் பண்ணாத பல்லை எப்படித் தான் இஇஈஈ...ன்னு வெக்கமே இல்லாமல் காட்டிட்டு போறாளோ?தெரியலையே இதை வேற இந்த வயசுல நான் பார்க்க வேண்டியதாக இருக்கே,இவளுக்கு வரப் போறவன் என்னச் செய்யப்போறானோ?"என்று வாய் விட்டு புலம்பி விட்டு அவளை பிடித்து தள்ளாத குறையாக அவளை குளியலறையில் அனுப்பி விட்டு திரும்பவும் கட்டிலுக்கு அருகில் வந்தார்.
இங்கே இவ்வளவு நேரம் நடந்த கலவரத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று போர்வையை இழுத்து மூடித் தூங்கிக் கொண்டிருந்தவளின் போர்வையைப் பிடித்து இழுத்து விலக்கி விட்டார்.
அப்பொழுதும் அவள் அசையாமல் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டிருக்க…
"உன் அக்காவை கூட சமாளிச்சிடலாம், ஆனால் உன்னை என்னச் செய்யப் போறேனோ தெரியலை, எழுந்திரு மானவி இன்னைக்கு நல்லநாள்ஆச்சே சீக்கிரம் எழுந்திருக்கனும்னு தெரியாதா? எழுந்திரும்மா …"என்று அவர் அவளை எழுப்ப…
படுத்துக் கொண்டே கைகள் இரண்டையும் மேலே தூக்கி சோம்பல் முறித்துக் கொண்டே "ஹ்ஹ்ஹ்ஹாஹா"என்று பெரிதாக ஒரு கொட்டாவி விட்டப்படி…
"பா...ட்டி இவ்வளவு சீக்கீரமவா விடிஞ்சிடுச்சு "
"ஆமாம் சூரிய பகவான் எப்பவோ தன் வேலையை ஆரம்பிஞ்சுட்டாரு, நீ இப்பத் தான் சோம்பலே முறிக்கிற இன்னும் உன் வேலை எதுவுமே ஆரம்பிக்கலை "
"பாட்டி எனக்கு சூரிய பகவானோடு வேலை செய்வதை விட சந்திர பகவானோடு வேலை செய்றதது தான் ரொம்ப பிடிச்சிருக்கு, ஏன்னா நேற்று நைட் புல்லா டைட் வொர்க்"
"அப்படி என்ன வொர்க்? என் பேத்தி அவர்களே! "
"கேளுங்க அப்படி கேளுங்க இன்னைக்கு தீபாவளி பண்டிகையாச்சே அதான் ஒரு கவிதை எழுதலாம்னு யோசிச்சேன்,எல்லோரும் எழுதுற மாதிரி எழுதாமல் வித்தியாசமாக எழுதனும்னு ரொம்ப நேரமா யோசிச்சு இருந்தேன் "
பாட்டியோ ஆர்வமாக கட்டிலில் அமர்ந்துக் கொண்டு "அப்படியா! பரவாயில்லை மானவி இப்போ நீ கூட கலக்குறியே, என்ன எழுதின? " என்று கேட்க…
"பாட்டி நானும் இந்தப் பக்கம் அந்தப்பக்கம் எல்லாப் பக்கமும் நின்னுக்கிட்டு, உட்கார்ந்துக்கிட்டு ஏன் படுத்துக்கிட்டு கூட யோசிச்சு பார்த்தேன், ஒன்னும் வரலை அதான் எப்பவும் போல எல்லோருக்கும் ஹாப்பி தீபாவளின்னே அனுப்பிட்டேன் பாட்டி "என்று அவள் சோகமாய் சொல்ல…
பாட்டியோ செம கடுப்பில் அவளைப் பார்க்க…
"பாட்டி ஒரு வயசுக்கு வந்த பொண்ணை இப்படி பார்க்கிறது தப்பு "என்று அவள் சொல்ல…
"உன்னை என்ன செய்யலாம்? "என்று உட்கார்ந்து இருந்த மானவியை அடிக்க பொருளைத் தேடுவதற்கு அவர் அங்கும் இங்கும் பார்வையை விட கடைசியில் பக்கத்தில் இருந்த தலையணையால் அவளை அடிக்கச் செல்ல… அவளோ ஒரே துள்ளலாம் பெட்டிலிருந்து தரைக்கு தாவினாள்.
"பாட்டி பேசிட்டு இருக்கும் போது வெப்பன்ஸ் எடுக்கிறது தப்பு, இதெல்லாம் சரி கிடையாது"
"என்னது சரி கிடையாது எப்ப பார்த்தாலும் என்னை ஏமாற்றுவதே உன் வேலையா போச்சு "
"அப்படி எல்லாம் இல்லை பாட்டி உண்மையை சொன்னேன் இதுக்கு போய் என் மேல கோபம் படுறீங்க " என்று அவள் சிரித்துக் கொண்டே சொல்ல…
அப்பொழுது குளியலறையில் குளித்து விட்டு புத்தம் புது மலராய் மஞ்சள் நிலவாய் வெளியே வந்தாள் அவள்.
"அக்கா குளிச்சு புது டிரெஸ் போட்டுட்டி...யா…! என்று மானவி அவளை வேகமாய் வந்து கட்டிக் கொள்ள வர…
"ஏய் என்கிட்ட வராதே! நான் இப்போ தான் எண்ணெய் தேய்ச்சி குளிச்சுட்டு வரேன் சோ டோண்ட் டச் மீ, போய் குளிச்சிட்டு வந்து கட்டிப் பிடிச்சு புரலாம்" என்றாள்.
"ம்ஹிம் " என்று சிணுங்கிக் கொண்டு குளியலறையை நோக்கி சென்றாள்.
பாட்டி அவளைப் பார்த்து "எனக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாயமா?நல்லா இருக்குடி உன் பழக்கம் "என்றார்.
"பாட்டி போய் நீங்களும் குளிச்சு புது துணி உடுத்தி வாங்க, அப்போ தான் பட்டாசு வெடிப்பேன் "என்றாள்.
"நான் குளிச்சுட்டேன் "
"பொய் சொல்லாதீங்க பாட்டி நீங்க குளிச்சிருந்த தலையில சீயக்காய் வாசம் தூக்குமே, நான் கட்டிப் பிடிக்கும் போது எனக்கு வாசனையே வரலையே வாங்க பாட்டி"என்று அவரை அவரது அறையில் விட்டுட்டு "பாட்டி நான் வாங்கி வந்த புடவையை தான் கட்டிட்டு வரணும்" என்று அன்பாய் கட்டளையிட்டாள்.
நடந்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் மெல்லிய புன்னகையோடு மகளைப் பார்க்க… அவளோ நேராய் அம்மாவிடம் வந்து "அம்மா போய் புது துணி உடுத்திட்டு வாங்க, மிச்ச வேலையை நான் முடிச்சிட்டு எல்லா தயாராக வைக்கிறேன் எல்லோரும் வந்தவுடன் சேர்ந்து பூஜை செய்யலாம்" என்றாள்.
"எனக்கு எதுக்குமா இதெல்லாம்?"
"அம்மா சொன்னா கேளுங்க போய் புது புடவையை உடுத்திட்டு வாங்க, அம்மா நான் உங்களுக்கு பிடிச்ச கலர்ல வாங்கிட்டு வந்திருக்கேன் போங்கம்மா"என்று அவரையும் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள்.
மூவரும் ஒன்றாக புதுத்துணி உடுத்தி வந்து அவள் முன்பு வந்து நின்று "அத்தும்மா புது டிரெஸ் எப்படி இருக்கு?" என்று மானவி கேட்க…
"எல்லோருக்கும் அழகா இருக்கு"என்று தன் கையால் திருஷ்டி விட மூவரும் அவளுக்கு திருஷ்டி சுத்தி விட்டனர்.
நால்வரும் ஒன்றாக பூஜை செய்து சாமி கும்பிட்டு ஒன்றாக சாப்பிட்டு முடித்ததும் மானவி வாங்கி வைத்த பட்டாசுகளை வெடிக்க வெளியில் எடுத்துக் கொண்டு ஓடினாள்.
அவள் பின்னே மூவரும் செல்ல…
வெடியை பற்ற வைத்து விட்டு சத்தத்திற்கு பயந்து இவர்கள் பின்னாடி வந்து ஒளிந்துக் கொண்டு நின்றாள்.
அவள் பட்டாசு வெடிக்கும் அழகைக் கண்டு ரசித்தப்படி மூவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
இன்பமாய் இனிக்கும் தீபாவளித் திருநாளை நால்வரும் மத்தாப்பூவாய் சிரித்து மகிழ்ந்து கொண்டாடினர்.
(தொடரும்)