கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -2

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன் அத்தியாயம் - 2



மறுநாளும் அதே போல் பாட்டி வந்து பேத்திகளை எழுப்ப வர அத்து தன் ஹேண்ட் பேக்கை எடுத்து எதையோ தேடி எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்ட பாட்டி "என்ன அத்து இவ்வளவு சீக்கிரமா எங்கே கிளம்பிட்டே? "


"ஆபிஸ்க்குத் தான்"


"என்ன சொல்ற? மூணு நாள் லீவுன்னு தானே சொன்னே இப்போ என்ன உடனே கிளம்பனும்னு சொல்றே? "


"பாட்டி ஆபிஸ்ல இருந்து போன் வந்துச்சு அர்ஜன்ட் வொர்க் இருக்கு அதனால உடனே வரச் சொன்னாங்க" என்று வேக வேகமாக கபோர்ட்டில் உள்ள பைல்களை தேடி எடுத்துக் கொண்டிருந்தாள்.


பாட்டி ஒன்றும் சொல்லாமல் சாந்தனாவிடம் போய் "சாந்தனா நீயாவது அத்துகிட்ட சொல்லு நாள் முழுக்க வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்காள் ஒரு ரெண்டு நாள் கூட லீவு எடுக்க மாட்டேங்கிற நீயாவது சொல்லும்மா"


அதற்கு சாந்தனா "நான் காலைல அவ சாப்பாடு செய்ய சொல்லும் பொழுதே கேட்டுட்டேன். அதுக்கு அவ கம்பெனிக்கு புதுசா எதோ டீலிங் பத்தி பேச புது கம்பெனியிலிருந்து ஆளுங்க வராங்களாம் அதனால கண்டிப்பா போயே ஆகனும்னு சொல்லிட்டாள் அம்மா என்னை என்னச் செய்யச் சொல்லுறீங்க?"


"அவ பிரெண்ட்டு அத்துகிட்ட கம்பெனியைக் கொடுத்துட்டு ஊர் சுத்தப் போயிட்டாள்.இவ வேலை வேலைன்னு போனால் எங்களை வெளியே கூடிட்டு போறேன்னு சொன்னது அவ்வளவு தானா? " என்று காந்திமதி கவலையாக கேட்க…


"அம்மா நீங்க மானவியை விட ரொம்ப கவலைப்படுறீங்க!"

"ஐய்யய்யோ நீ மானவின்னு தான் ஞாபகம் வருதுன்னு எழுந்த உடனே வெளியே போக முடியலைன்னு என்னைத் தொல்லைப் பண்ணப் போற"


அவர் பேசியதைக் கேட்ட சாந்தனா "இனி நீங்களாச்சு அவளாச்சு"என்று அங்கிருந்து செல்ல…


வெளியே வந்த அத்து அம்மாவிடம் இருந்து டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டு பாட்டியைப் பார்க்க… காந்திமதியோ கோபத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.


"என்ன பாட்டி கோபமா? "


அவர் பதில் சொல்லாமல் இருக்க…


அவரது நாடிப் பிடித்து தன் பக்கம் திருப்பியவள் "பாட்டி வெளியே கூடிட்டு போக முடியலைன்னு கோபமா இருக்கீங்களா? இன்னைக்கு முக்கியமான வேலை இருக்கு அதனால நான் கண்டிப்பா போகனும்.இன்னைக்கு போக முடியாததுனால ஒரு ஸ்பெஷல் இருக்கு அது என்னன்னு போய்ட்டு வந்து சொல்றேன்"


"என்னப் பெரிய ஸ்பெஷல் இருக்கப் போகுது? எதாவது சாப்பிட வாங்கிட்டு வந்து ஏமாத்துவ அதானே"


"இல்லை பாட்டி இந்த தடவை நீங்க ஆசைப்பட்டதை நான் ரெண்டுதடவை நிறைவேற்றப் போறேன். ஆனால் எங்கே போறேம் அப்படிங்கிறதை மட்டும் வந்து சொல்றேன்" என்று கன்னத்தைக் கிள்ளி விட்டுச் சென்றாள்.


அவள் சொன்னதைக் கேட்ட பாட்டியோ "சொல்லிட்டு போ"
அதற்கு அவள் சிரித்துக் கொண்டே சென்று விட்டாள்.


அவள் சென்றதும் சாந்தனா காந்திமதியிடம் "அம்மா ஏன் அவளை வெளியே கூடிட்டு போகச் சொல்லி கட்டாயப்படுத்துறீங்க?அவ என்னவெல்லாம் தான் பார்ப்பாள்"


"சாந்தனா நான் என்ன என் சந்தோஷத்துக்காகவா வெளியே போகனும்னு சொல்றேன்? வீடு வீடு விட்டால் ஆபிஸ்ன்னு இப்படியேத் தான் அவ தன்னோட நாட்களை சுருக்கிக்கிறாள்.நம்ம கட்டாயப்படுத்திறதுனாலத் தான் கொஞ்சமாவது வெளியே வருகிறாள்.அதையும் கெடுக்க எனக்கு மனசு இல்லை.எப்படி இருக்க வேண்டிய பொண்ணு நமக்காக கஷ்டப்படுற அவளை சந்தோஷமா நாம வைச்சுக்கனும் சாந்தனா நான் சொல்றது சரிதானே"


"ஆமாம் அம்மா நீங்க சொல்றது உண்மைத் தான்.அவ நினைச்சா எங்கே வேண்டுமானாலும் போகலாம் ஆனால் நமக்காக இந்த வயசுல கஷ்டப்படுறாள் அதனால நாம அவளுக்கு சந்தோஷத்தைத் தான் தரனும் அவளும் கொஞ்சம் எங்கேயாவது வெளியே போய்ட்டு வந்தால் கண்டிப்பா பெட்டரா பீல் பண்ணுவாள்" என்று சாந்தனா அதை ஆமோதித்தார்.


சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்து வந்த மானவி நேராக பேப்பர் பார்க்க உட்கார "துரையம்மா தூங்கின நேரம் போதுமா? " பாட்டி கேட்க…


மானவி "பத்தவில்லை பாட்டியாரே இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருந்தால் நன்றாக இருக்கும்"



"அப்பொழுது ஏன் துரையம்மா அவசரமாக எழுந்துக் கொண்டீர்கள்"


"பசி தாளமுடியவில்லை.அதான் சாப்பிட்டு முடித்து விட்டு திரும்ப தூக்கத்தை தொடரலாம் என்று முடிவெடுத்துள்ளேன்"


"உ...ன்னை " என்று பாட்டி கோபப்பட…


"சரி சரி கோபப்படாதீங்க நீங்க விளையாட்ட பேசுனீங்க நானும் பதில் பேசினேன் அவ்வளவு தான்"


"ம்ம்ம்… இருக்கட்டும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் விஷயத்தைப் பத்தி சொல்லவா? வேண்டாமா? " என்று அவர் கேள்வியோடு கேட்க….


அவரைப் பார்த்து சிரித்த மானவி "என்ன அக்கா வெளியே கூடிட்டு போற விஷயந்தானே எனக்கு தெரியும்" என்று அசால்ட்டாக சொல்ல…


அவளை ஆச்சரியத்தோடு பார்த்த பாட்டி "நீ இவ்வளவு நேரம் தூங்கிட்டுத் தானே இருந்தே. எப்படி உனக்கு அத்து சொன்னது தெரிஞ்சது?"


"அக்கா வெளியே கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு இதைப் பத்தி மெஸேஜ் அனுப்பிட்டு தான் இங்கிருந்து போனாள்.ஏன்னா இந்த மானவியைப் பார்த்தால் பயம் என்ன சொல்லுங்க பயம்? " என்று அவள் முகத்தை பயங்காட்டுவது போல் பாவனைச் செய்ய…


அவளது காதைப் பிடித்து திருகிய சாந்தனா "யாருக்கு யாரைப் பார்த்தால் பயம்?"


"ஐயோ… அ...ம்மா காது வலிக்குதே விடுங்க " என்று அவள் வலியில் கத்துவதைப் பார்த்து சிரித்த பாட்டி

"சொல்லு கண்ணு யாருக்கு பயம்"


"எனக்குத் தான் பயம். உங்க எல்லோரையும் பார்த்து பயம் அம்மா விடுங்கம்மா வலிக்குது தாங்க முடியலை"


"ம்ம்…. சரி இப்போ விடுறேன் இனிமேல் அத்துவை கிண்டல் பண்ணே இருக்குது உனக்கு எழுந்துப் போய் குளிச்சுட்டு சாப்பிடவா" என்று கண்டித்து விட்டுச் செல்ல…


காந்திமதி பாட்டி அவளுக்கு எதிரே வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க….


அவரைப் பார்த்து முறைத்த மானவி "ஏய் பாட்டியம்மா என்னை மாட்டிவிட்டுட்டு சிரிச்சுகிட்டு இருக்கீங்களா? உங்களை அப்புறமா கவனிச்சுக்கிறேன்"


"சாந்து உன் பொண்ணை கொஞ்சம் கவனி" என்று சாந்தனாவிடம் சொல்ல…

"என்னம்மா என்னாச்சு?"


"ஐயோ பெற்ற தாயே! ஒன்னுமில்லை ஒன்னுமில்லை நான் இங்கிருந்தே போறேன் அடுத்து பிரம்பு அடிதான் " என்று பாட்டியைப் பார்த்து முறைத்து விட்டு ஒரே ஓட்டமாக தன் அறைக்குச் சென்றாள் மானவி.


இப்படித்தான் வீட்டில் பாட்டியும் பேத்தியும் அடித்துக் கொள்வார்கள். பின்பு சேர்ந்துக் கொள்வார்கள்.காந்திமதியைப் பொறுத்தவரை மானவி அவள் அப்பா இல்லாத குறை தெரியக் கூடாது என்றெண்ணி அவளை எப்பொழுதுமே கலகலப்பாக வைத்துக் கொள்வார்.


அத்துவை பொறுத்துவரை குடும்பத்தையே தாங்கும் தூண் அவள்.படிப்பை பாதியிலேயே விட்டுட்டு குடும்பத்தை கவனித்துக் கொண்டிருக்கிறாள்.அதனால் அவளுக்கு சுற்றி இருக்கும் சூழ்நிலை தெரிந்து நடந்துக் கொள்வாள் .அதனால் அவளைப் பற்றி பெரிதாக கவலையில்லை.ஆனால் எத்தனை நாட்கள் தான் அவள் இப்படியே இருப்பாள் என்ற கவலை காந்திமதிக்கும் சாந்தனாவிற்கும் உண்டு. ஆனால் இதைப் பற்றி அவளிடம் கேட்டால் கோபித்துக் கொள்வாள் என்றே அவர்கள் அமைதியாக இருந்து விட்டனர்.


ஒருசில நேரம் அதைப் பற்றி பேசச் சென்றால் கொஞ்சம் எனக்கு அவகாசம் வேண்டும் என்று சொல்லி விடுவாள் இப்படித் தான் நாட்களும் நகர்கிறது.


ஆபிஸிக்குச் சென்ற அத்து உள்ளே நுழைந்ததும் அங்கு நின்று டேபிளில் எல்லாத்தையும் சரியாக வைத்துக் கொண்டிருந்த மாலா அவளைக் கண்டதும் "குட் மார்னிங் மேம்"


"குட் மார்னிங் மாலா.என்ன முகமே சரியில்லை?"


தலையை தொங்க போட்டபடி … "வேற என்ன மேம்? மூணு நாள் மூணு நாள் லீவுன்னு சொல்லிட்டு மறுநாளே வரச் சொல்லுறீங்க.இதெல்லாம் ரொம்ப அநியாயம்"என்று அவள் சோகமாய் சொல்ல…


அவள் சிரித்தபடி… "அது என்ன மூணு நாளை ரெண்டு தடவை சொல்லுற? "

"வேற என்ன மேம்? ஏமாற்றத்தை இப்படித்தான் போக்கிக்க வேண்டி இருக்கு"


"ஓ இப்போ உனக்கு லீவு கிடைக்கலைன்னு வருத்தமா? நான் என்ன நினைச்சேன்னு தெரியுமா? மாலாக்கு லீவுவிட சம்பளத்துல போனஸ்தான் விரும்புவான்னு நினைச்சுத் தான் வரச் சொன்னேன்.இன்னைக்கு வர்ற கம்பெனி பெரிய கம்பெனி அவங்க மட்டும் நம்ம கான்ட்ராக்ட் போட்டுடாங்கன்னா நீ கேட்ட இன்க்கிரீட்மெண்ட் தரலாம்னு நினைச்சேன் வேண்டாம்னா விடு"



அத்து அப்படிச் சொன்னதைக் கேட்டதும் மாலா அவளுக்கு அருகில் வந்து "என்ன மேடம் நீங்க? நான் சொன்ன விஷயத்தை பெரிசா எடுத்துக்காதீங்க. நான் விளையாட்டாத் தான் சொன்னேன்.என் அத்து மேம் எப்பவுமே எனக்கு நல்லதைத் விரும்புவாங்க" என்று அவள் தாஜாப் பண்ண…


"சரி சரி எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல வேலையைக் கவனி.நான் ரெடி பண்ணி வைச்சிருக்க டிசைன்லாம் கம்ப்யூட்டர்ல இருக்கு அதை கலர் பிரிண்ட் எடுத்துடு" என்றாள்.


"ஓகே மேம்" என்று மாலா தன் வேலையில் மும்மூரமாக இருந்தாள்.அத்து தான் செல்ல வேண்டிய கம்பெனிக்கு போன் செய்தாள்.


போன் அடித்த கொஞ்ச நேரத்தில் மறுமுனையில் போனை எடுத்தனர்.

அத்து "ஹலோ"

"ம்ம்… சொல்லுங்க"

"நான் பிரிண்டிங் கம்பெனியில் இருந்து பேசறேன்"


"ம்ம்… சொல்லுங்க என்ன விஷயம்?"


"இன்னைக்கு எங்களோட டிசைன்ஸ் பார்க்கிறதா மெயில் வந்துச்சு.ஆனால் எங்கே எப்போ பார்க்கனும்னு எதுவும் சொல்லலை அதைப் பற்றி கேட்கத் தான் போன் பண்ணேன்"


"ஓகே மேம் ஒரு நிமிஷம் லைன்ல வெயிட் பண்ணுங்க .நான் என் பாஸ்க்கிட்ட கேட்டுட்டு உங்ககிட்ட லைன்ல வரேன்"


"ஓகே" என்று அவளும் லைனில் காத்திருக்க....


இரண்டு நிமிடம் கழித்து அந்த பெண் பேசினாள்."மேம் பாஸ் சொன்னாங்க இன்னைக்கு பன்னிரெண்டு மணிக்கு உங்க பிரிண்டிங் பேக்டரில வைச்சு பாஸே சந்திக்க வரேன்னு சொல்லி இருக்காங்க"


"ஆனா..ல் இன்னைக்கு கம்பெனி லீவ் ஆச்சே?"


"இட்ஸ் ஓக்கே நோ ப்ராப்ளம் மேம்.பாஸீம் அதான் சொன்னாங்க இன்னைக்கு பேக்டரி லீவ்ல தான் இருக்கும்.இந்த மாதிரி டைம்ல போனால் தான் பென்டிங் வொர்க் எவ்வளவு வைச்சு இருக்கீங்கன்னு பார்க்க முடியுமாம் இல்ல எந்த ஆர்டஸீம் வர்றதே இல்லையான்னு தெரியுமாம்னு அப்போத் தான் தெரியும்னு சொல்றாங்க"


இந்த பதிலைக் கேட்டு கடுப்பானவள் அந்தப் பெண்ணிடம் "இது நீங்களா சொல்லுறீங்க? இல்ல உங்க பாஸ் சொல்லச் சொல்லி பேசுறீங்களா? "


"நான் கேட்ட கேள்விக்கு பாஸ் இந்த பதிலைத் தான் சொன்னாங்க.அதையேத் தான் உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க"


"ஓ… அப்படியா! ரொம்ப ப்ராங்கா பேசுறாங்கன்னு நான் சொன்னேன்னு சொல்லுங்க.மற்றபடி பேக்டரியில சந்திக்கலாம்"என்று போனை வைத்து விட்டாள்.


போனை வைத்து விட்டு புலம்ப ஆரம்பித்தாள்.'இந்த ஆளுக்கு எவ்வளவு திமிரு இருந்தால் சின்ன கம்பெனிங்கிறதுனால என்னோட வேலையை மட்டம் தட்டுறான்.இரு அவனை நேர்ல பார்த்த பிறகு இருக்கு கச்சேரி இனிமேல் என் கம்பெனியை எதாவது சொல்லட்டும் நானே இந்த ஆர்டர் வேண்டாம்னு சொல்லிடுறேன்.எல்லாம் இந்த ரேகாவால வந்துச்சு' என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் இருந்த மாலா "மேம் என்ன காலையிலே டென்ஷன்"

"எல்லா இந்த புது டீலிங்சிப் பத்தித் தான்.பார்த்துக் கொள்ளலாம் " என்று யோசனையில் இருந்தவளுக்கு வேகமாக நேரம் செல்ல…

பிரிண்டிங் பேக்டரிக்கு கிளம்பத் தயாரானாள்.சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடம் முன்னதாகவே சென்றாள்.சரியாக பன்னிரெண்டு மணிக்கு வாசலில் வந்து ஒரு கார் வந்து இறங்கியது.அதிலிருந்து ஒரு பெண் வெளியே வந்து வாசலில் நுழைந்து இவளைக் காண வந்தாள்.


அத்து வாசலில் நின்று "வாங்க"
என்று அழைக்க…


அந்தப் பெண் கையில் பைலோடு ஓரமாக நிற்க…. ஐம்பது மதிக்கத்தக்க ஒருவர் வெளியே வந்தார்.அவரைப் பார்த்ததும் அத்துவிற்கு 'இவர் தான் அந்த பாஸாக இருக்க வேண்டும்' என்று நினைக்கும் பொழுது அவர் அவளிடம் "வாங்க மேம் உள்ளே கம்பெனியை ஒரு ரவுண்டு பார்த்துட்டு வரலாம்" என்றழைக்க… அவளோ மனதினுள் 'அப்போ பேசுன மாதிரி எதாவது பேசட்டும் அப்புறம் இருக்கு' என்று அவளும் எதுவும் சொல்லாமல் அமைதியாக பின்னே சென்றாள்.


வந்தவர் எல்லா இடங்களையும் பார்க்க…. அந்தப் பெண்ணோ எல்லாத்தையும் வீடியோவாக எடுத்தாள்.முழுதாக பார்த்தவர் "மேம் எங்களுக்கு இந்த டீலிங் ஓக்கே தான். பாஸ் கான்ட்ராக்ட்ல சைன் பண்ணிட்டாங்க நீங்களும் சைன் பண்ணிடுங்க" என்று பைலை நீட்ட…



அப்பொழுது தான் வந்தவர் பாஸ் இல்லை என்று புரிந்து தயக்கத்தோடு "நீங்க?"


"நான் பாஸோட பர்ஸ்னல் பி.ஏ.அவரால வர முடியாத மீட்டிங்க்கு நான் தான் வருவேன் மேம்" என்று சிரித்துக் கொண்டுச் சொல்ல…


அவளும் சரி என்று பைலை வாங்கி அதில் உள்ள கான்ட்ராக்ட் விஷயங்களைப் படித்து அதில் அவள் திருப்தியாக சரியென்று கையெழுத்திட்டாள்.


அவளது மூன்று வருட உழைப்பிற்கான பலன் இது.
ரேகாவும் அத்துவும் தோழிகள்.ரேகாவின் அப்பா நடத்தி வந்த கம்பெனி தான் இது. கார்மென்ஸ் கம்பெனிகளிலிருந்து வரும் ப்ளேய்ன் துணிகளை இவர்கள் பிரிண்டிங் கம்பெனி சிறிய அளவில் உள்ள கடைகளுக்கு அதற்கு ஏற்ற டிசைன்களை பிரிண்டிங் செய்து அனுப்புவார்கள்.இது ஓரளவிற்கு நட்டத்தில் செல்ல ஆரம்பிக்கும் பொழுது தான் அத்து இதில் வந்தூ சேர்ந்தாள்.சேர்ந்த முதலிருந்து இவளது ஆர்வத்தை பார்த்த ரேகாவின் அப்பா இவளது கண்காணிப்பிலேயே அனைத்தையும் கொடுக்க இவளே அதை நிர்வகிக்கின்றாள்.


இதில் சில புதுமைகளை புகுத்தி இப்பொழுதுள்ள மாடர்ன் டிசைன்களை கொண்டு வந்து எப்பொழுதும் தரும் கடைகளை விடுத்து மேலும் சில கடைகளிலும் குறைந்த அளவில் விற்க ஆரம்பித்தனர்.அதில் நல்ல முன்னேற்றம் வரவே பெரிய கார்மென்ஸ் கம்பெனிகளுக்கும் செய்யலாம் என்ற முடிவில் இந்த கம்பெனியே அதற்கு வாய்ப்பு தர அதுவே இப்பொழுது அவளுக்கு வெற்றியாக முடிந்தது.


இதுவரை சிறிய கடைகளுக்கு செய்ததினால் சில மாதங்களுக்கு வேலை இல்லாமல் போகவே வேலை விட்டு நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தது.ஆனால் இந்த பெரிய கார்மெண்ஸ் கம்பெனிகளுக்கு வேலை செய்வதன் மூலம் குறைந்தது இரண்டு வருடங்களாவது தொடர்ந்து வேலை இருக்கும். அதனால் வேலையாட்களும் பாதியில் செல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்திலேயே இவ்வளவு பெரிய முடிவை அவள் எடுத்தாள். எடுத்ததிற்கான பலன் அதில் கிடைக்க.... மகிழ்ச்சியடைந்தவளாய் அவரிடம் "எல்லாம் ஓக்கே சார்.நான் எப்போ உங்க பாஸைப் பார்க்கப் போறேன்"


"கூடிய சீக்கிரமே அது நடக்கும்" என்று அவர் சொல்லி விட்டு அந்த கான்ட்ராக்ட்டின் இன்னொரு காப்பியை அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்துச் சென்றார்.



அவர்கள் சென்றதும் ரேகாவிற்கு போன் செய்தாள் அத்து."ஹலோ ரேகா"


"என்ன மீட்டிங் சக்ஸஸ்ஸா முடிஞ்சிடுச்சா? "


"ஆமாம் ரேகா"


"ரொம்ப சந்தோஷம்.வாழ்த்துக்கள் ரெண்டு நாள்ல நானும் அப்பாவும் வந்து உன்னை பார்க்கிறோம்"

"ஏய் ரேகா எந்த விஷயத்தைப் பத்தியும் நீ கேட்லை"


"அத்து அந்த கம்பெனியை எங்களை விட நீ தான் அதை நல்லா பார்த்துக்கிற சோ நோ க்கொஸ்டின்ஸ்.எல்லாம் ஓகே தான்" என்று அவளும் சந்தோஷமாய் பேசி முடித்து வைத்தாள்.


அத்துவோ இனிமேல் தான் நினைத்தது இனிமேல் நடக்கப் போகிறது என்று நினைக்க…அதை எல்லாம் தடுப்பதாய் அந்த நிகழ்வு நடக்க காத்திருந்தது.


(தொடரும்)
 
Top