கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -20

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம் -20


சேவகி இனிப்பு கொண்டு வர… அதை வாங்கி அத்வதாவின் வாயில் கொடுத்தார்.


"உன்னுடைய வாழ்க்கையில் இனிமேல் என்றைக்கும் சந்தோஷம் மட்டுமே நிறைந்து இருக்கனும் அத்வதா" என்று மனம் முழுவதும் மகிழ்ச்சியோடு சொன்னார்.


அத்வதாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.அவளிடம் அவர்கள் இருவரும் எதுவும் கேட்கவில்லை.ஏன் அத்து போனாய்? எங்கே இருந்தாய்? இது போன்ற எந்த கேள்வியையும் அவர்கள் கேட்கவில்லை.மாறாக பெற்றோர்கள் இருவரும் அவள் மேல் அன்பை மட்டும் தான் பொழிந்தனர்.



மாதேவி அத்வதாவிடம் "அத்வதா வா பாட்டி அறைக்கு போகலாம், நீ நிச்சயம் வந்து பாட்டியை பார்க்க வருவேன்னு அவங்க எவ்வளவு நம்பிக்கையோடு உன்னை பார்க்க காத்திருங்காங்கன்னு தெரியுமா? வா போகலாம்" என்று பாட்டி அறையை நோக்கி எல்லோரும் சென்றனர்.


உள்ளே சென்றுப் பார்க்க… பாட்டி கண்களை மூடி படுத்திருந்தார்.பாட்டிக்கு அருகில் சென்று அத்வதா மெதுவாக "பாட்டி… பாட்டி… அத்வதா வந்து இருக்கேன் கண்ணை திறந்து பாருங்க" என்று அவர் அருகில் போய் சொல்ல…


அவரோ கண்களை மூடிய படி…. "அத்தும்மா நீ பொய் சொல்றே.தினமும் இப்படித் தான் வந்து சொல்றே நானும் கண்ணைத் திறந்துப் பார்க்கும் போது உடனே காணாமல் போற போம்ம நான் கண்ணை திறக்க மாட்டேன்" என்றார்.


அவருடைய பதிலைக் கேட்டு அத்வதாவிற்கு அழுகையாய் வந்தது.இத்தனை வருடங்களாய் பாட்டியை இப்படித் தான் வேதனைப் படுத்திக் கொண்டிருக்கிறோமா? என்று நினைக்கும் போது அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுகை வந்து அம்மாவைப் பார்த்தாள்.


மாதேவி மெதுவாய் "கூப்பிடும்மா பாட்டி உன்னைப் பார்த்ததும் சந்தோஷப்படுவாங்க" என்றார்.


அத்வதா பாட்டியின் கையைப் பிடித்து அழுதுக் கொண்டே "பாட்டி நான் உண்மையிலே வந்துட்டேன் பாருங்க" என்று அவளது தொடுதலை உணர்ந்த பாட்டி கண்களைத் திறந்துப் பார்க்க…


அங்கே அத்வதா இருப்பதைப் பார்த்தவர் உடனே எழுந்துக் கொள்ள முடியாமல் எழுந்து அமர்ந்தவர் கட்டிலில் மேல் சாய்ந்து இருந்தபடியே அத்வதாவை தன் அருகிலேயே இருக்க வைத்தவர் தன் இருகரங்களால் அவளின் முகத்தை ஏந்தியவர் "வந்துட்டியாம்மா இந்த பாட்டியைப் பார்க்க வந்துட்டியா ஏன் என்னை விட்டு பிரிந்து போயிட்டே? தாத்தா தான் என்னை விட்டு போய்ட்டாங்க போகும் போது தாத்தா என்னச் சொன்னாங்கன்னு தெரியுமா? நீ என் கூட எப்பவும் இருப்பேன்னு தாத்தா சொன்னாங்க" என்று அவர் அழுதார்.



அவரின் அழுகையைப் பார்த்த மற்றவர்களும் அழுதனர்.இத்தனை வருடங்களாய் ஒரு வார்த்தை பேசுவதே அரிதாகிப் போனவருக்கு இன்று பேத்தியைக் கண்டதும் மனம் நிறைவாக பேசினார்.


அத்வதாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.அன்பான உறவுகளின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி இருக்கின்றாள்.அவர்களின் அன்பை வாங்காமல் நிராகரித்திருக்கிறாள் என்பதை நினைக்க நினைக்க அவள் மேலேயே அவளுக்கு கோபமாய் வந்தது.


"பாட்டி என்னை மன்னிச்சிடுங்க.நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்"


"நீ தப்பு பண்ணலைம்மா நீ என்றைக்கும் எல்லா விஷயத்தையும் சரியாகத் தான் செய்வே. ஏன்னா நீ என் புருஷனோட வளர்ப்பு அவருடைய வளர்ப்பு என்றைக்கும் தப்பாகாது" என்றார்.


தன் தலையணைக்கு அடியில் இருந்து எதையோ தேடினார்.பின்னர் அதை மெதுவாக எடுக்க… அவர் கையில் ஒரு சின்னப் பெட்டி இருந்தது.அதை திறந்து பார்க்க அதில் இரண்டு பெரிய சிவப்பு கற்களால் ஆன வளையல் இருந்தது



அதை எடுத்து அத்வதாவின் கையில் போடச் செல்லும் போது அத்வதா தடுக்க நினைத்து வேண்டாம் என்று சொல்ல வரும் பொழுது மாதேவி அத்வதாவின் தோளில் கைவைத்து "அம்மா கொடுக்கிறதை மாட்டேன்னு மறுக்காமல் வாங்கிக் கொள்" என்றதும் அவள் எதுவும் சொல்லாமல் கையை நீட்ட…


பாட்டி அந்த வளையலை அவளுக்கு போட்டு விட்டார்.போட்டு முடித்ததும் "எங்கே இதை உனக்கு போடுவதற்கு முன்னே நான் இந்த உலகத்தை விட்டு போய் விடுவேனோன்னு நினைத்தேன்,அதோட நம்ம முறை மாறிப் போய்டுமோ நினைத்து கவலைப்பட்டேன் ஆனால் நம்ம முன்னோர்கள் அதை எப்படியும் செய்ய வைப்பார்கள்" என்றார்.


அத்வதாவிற்கு பாட்டி சொல்வது ஒன்றும் விளங்கவில்லை.ஆனால் மறுப்பேதும் சொல்லாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள்.


ரூபனின் கையில் இருந்த குழந்தை கைத்தட்டி பாட்டி பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.பாட்டி வசியைப் பார்த்து "என் பூட்டனை இங்கே கொண்டு வா " என்றதும் ரூபன் பாட்டிற்கு அருகில் வசியை கொண்டு சென்றதும் பாட்டி வசியின் நெற்றியில் முத்தமிட்டார்.


உடனே வசி "தாங்க்யூ ...தாங்க்யூ" என்று மழலை மொழியில் சொன்னது.


"டாடி…டாடி.. கா...ர்டனுக்கு போலாமா?" என்று வசி கேட்க…

"ம்ம்… போலாமே" என்று அவன் தன்னோடு குழந்தையை அழைத்துச் சென்றான்.


மாதேவி அத்வதாவிடம் "பாட்டி இவ்வளவு நேரம் எழுந்து பேசியதே பெரிய விஷயம் அதனால் அவங்க நல்லாத் தூங்கி ஓய்வெடுக்கட்டும் வா போகலாம்" என்று அவளை அழைத்துச் சென்றார்.


அவர்களோடு ரதனும் வெளியே வந்தார்.அத்வதாவின் மனதில் 'அரண்மனையில் யாரும் இல்லையா? எல்லோரும் எங்கே போய்ட்டாங்க?ஆரலி, சித்தி, சித்தப்பா, பிரகத்தன், விண்கா என்று அரண்மனையில் யாருமே இல்லாததை பார்த்த அத்வதாவிற்கு யோசனை வந்து அதை அம்மாவிடமே கேட்கலாம்' என்றெண்ணி அம்மாவிடம் "அம்மா அரண்மனையில் யாருமே இல்லை எல்லோரும் எங்கே போயிட்டாங்க" என்று அவள் அடுத்தது கேட்கும் முன்…

மாதேவி அத்வதாவிடம் "அத்வதா அம்மா அறைக்குப் போய் குளிச்சிட்டு வா ரொம்ப தூரமா பயணம் செய்து இருக்கல்ல அதனாலத் தான் சொல்றேன் அதற்கு பிறகு நாம் ஒன்றாக சாப்பிடலாம்" என்றார்.


அம்மாவின் பதில் அவள் கேட்டதற்கு சம்பந்தமே இல்லை என்றாலும் ஒன்றும் சொல்லாமல் அம்மா சொன்னதை அப்படியே கேட்க முடிவெடுத்து அம்மாவின் அறைக்குச் சென்றாள்.


அம்மாவின் அறை அவள் எப்படி கடைசியாக பார்த்தாளோ? அதே மாதிரி தான் இருந்தது.ஆனால் சுவற்றில் இவர்கள் நால்வரும் இருந்த குடும்பம் அங்கே இல்லாமல் அத்வதாவின் சிறுவயதில் அத்வதாவை ரதன் கையில் தூக்கி வைத்தபடி நிற்க… அதற்கு அருகில் மாதேவி இருக்கும் புகைப்படம் மட்டுமே இருந்தது.


அத்வதா அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த மாதேவி கையில் ஒரு புது உடையுடன் வந்து அவளிடம் கொடுத்தார்.


"இந்த அத்வதா உன்னோட பிறந்த நாளுக்கும் ஒவ்வொரு பண்டிகைக்கும் நானும் அப்பாவும் வருஷம் வருஷம் புதுத்துணி வாங்கி வைப்போம்.இந்த வருஷம் தீபாவளிக்கு உனக்காக நாங்க வாங்கி வைத்தது குளிச்சிட்டு இதை போட்டுட்டு வா,அப்பா ரொம்ப சந்தோஷப்படுவாங்க" என்று அவளிடம் அதைக் கொடுத்தார்.


அதை வாங்கி வைத்தவள் அப்பொழுது தான் சாந்தனாவின் நினைவு வர…சாந்தனாவிற்கு போன் செய்தாள்.


சாந்தனாவின் அழைபேசியில் அத்வதாவின் பெயர் காட்ட… அவளின் அழைப்பை எடுத்து பேசினார்.

"ஹலோ அத்து"

"அம்மா நான் அரண்மனைக்கு வந்துட்டேன், அம்மாவையும் அப்பாவையும் இப்போத் தான் பார்த்து பேசினேன்" என்று நடந்தவைகளைச் சொன்னவள் "அம்மா மானவி வீட்டுக்கு வந்துட்டாளா? ".


"ம்ம்… வந்து விட்டாள்.அப்படியா! ரொம்ப சந்தோஷம் நீ உன் குடும்பத்தோடு நேரத்தை செலவு பண்ணு எங்ககிட்ட அப்புறமா பேசலாம்" என்றார்.


அவர் சொன்னதும் தான் அத்வதாவிற்கு நினைவுக்கு வந்தது. அவளுக்காக அம்மாவும் அப்பாவும் சாப்பிட காத்திருப்பது நினைவுக்கு வர …"ஆமாம் அம்மா நான் அப்புறமா பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்தாள்.


குளித்து முடித்து விட்டு மாதேவி கொடுத்த உடையை எடுத்து அணிந்தாள்.அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.அம்மா எப்பொழுதும் அவ்வளவு கனமாக, வேலைப்பாடுகள் நிறைந்த உடையை அவளுக்கு வாங்கி வைத்து உடுத்த கட்டாயப்படுத்துபவர் இன்று அவள் விரும்பிய படி லைட்டாக சின்ன வேலைப்பாடுடன் கூடிய நீண்ட மேக்ஸி உடையை அணிந்திருந்தாள்.


அதில் இருந்த காதணியையும் காதில் அணிந்தவள், அதற்கு ஏற்றார் போல் சின்ன நெக்லஸ் என்று அவள் விரும்பிய படியே அனைத்தும் இருந்தது.அவள் தன் கையைப் பார்க்கும் போது பாட்டி சொல்லி அணிவித்த வளையலை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.


அப்பொழுது உள்ளே வந்த மாதேவி மகளைக் கண்டு ஆச்சரியமடைந்தவராய் "எவ்வளவு அழகா இருக்கேன்னு தெரியுமா?" என்று அவளை திருஷ்டி கழித்து விட்டவர் தலை நிறைய பூக்களை வைத்து விட்டார்.


"வாம்மா போய் சாப்பிடலாம்" என்று கையோடு அவளை அழைத்துச் சென்றார்.


எல்லாம் நன்றாகவே நடக்கிறது.ஆனால் இன்னும் அவள் மனதில் உள்ள கேள்விகளுக்கு மட்டும் அவளிடம் பதிலில்லை.

சாப்பிட்டு முடித்தவுடன் எல்லாவற்றையும் கேட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.'தெரிந்துக் கொள்ளவில்லை என்றால் அரண்மனையில் உள்ள அனைவரின் அமைதி அவளது நிம்மதியை குலைத்து விடும்'


அவளுக்கு பிடித்த உணவு வகைகளால் அவர்களுடைய நீண்ட பெரிய மேஜை முழுவதும் நிரம்பி இருக்க… அவளுக்கு அப்பொழுது நினைவுக்கு வந்தது காந்திமதி பாட்டி, சாந்தனா, மானவியோடு எதாவது ஒரு வகை உணவை ஒன்றாய் சாப்பிடுவது தான் நினைவுக்கு வந்தது.


அவர்கள் மூவர் மட்டுமே சாப்பிட அமர்ந்தனர்.

ரதன் "சாப்பிடும்மா" என்று சொல்ல… மாதேவி சாப்பாட்டை அத்வதாவிற்கு பரிமாறினார்.


சாப்பாட்டை தட்டில் வைத்ததும் அதை எடுத்து மகளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார் ரதன்."அப்பா" என்றழைக்க…


"நான் உனக்கு ஊட்டி விடுறேன்டா சாப்பிடு,நான் அப்பொழுதே உன்கிட்ட இந்த மாதிரி பாசம் காட்டி ஊட்டி வளர்த்து இருந்தேன் என்றால் நான் உனக்கு உற்ற தோழனாக இருந்திருப்பேன், நீயும் என்கிட்ட எல்லாத்தையும் மனசு திறந்து பேசி இருப்பேல்ல"என்று அவர் மனதில் உள்ளதை வெளிப்படையாய் அவளிடம் சொல்ல… சங்கடத்தில் பார்த்த அத்வதா "அப்...பா சாரிப்பா நான் வேணும்னு செய்யலை"


"அப்புறமா நிறைய பேசலாம், நான் ஒருத்தன் சாப்பிடும் போது தேவையில்லாததை பேசிக்கிட்டு இருக்கேன் நீ சாப்பிடும்மா" என்று அவர் அவளுக்கு ஊட்டி விட்டார்.


மூவரும் சாப்பிட்டு முடித்ததும் ரதன் அத்வதாவை தாத்தாவின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.


அத்வதாவிற்கு பேசும் வாய்ப்பை அவர்கள் இடமளிக்காமல் அடுத்தடுத்து ஒவ்வொன்றாய் செய்தனர்.


தாத்தாவின் அறைக்கு சென்றதும் தாத்தாவின் நினைவு வர… ஒவ்வொன்றாய் தொட்டுப் பார்த்து தாத்தாவின் நினைவை தன்னுள் நிறைத்துக் கொண்டாள்.


அவர்களும் எதாவது கேட்பார்கள் என்று பொறுத்துப் பார்த்தவள் அவர்கள் எதுவும் கேட்காமல் இருக்க… பொறுக்க முடியாதவளாய் "அப்பா நான் எங்கே போனேன்? ஏன் போனேன் என்று இதுவரைக்கும் ஒரு வார்த்தைக் கேட்கலை? ஏன்ப்பா என் மேல கோபப்பட உங்களுக்கு உரிமை இல்லைன்னு நினைச்சுட்டீங்களா? ஏன் அமைதியா இருக்கீங்க? "என்று இருவரிடமும் ஒன்றாய் கேள்வி கேட்டாள்.


அதற்கு ரதன் "என்னன்னு கேட்க சொல்லுற? ஏன் நீ இங்கிருந்து போனே? என்று எல்லாமே எங்களுக்கு தெரியும்" என்று அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள் அத்வதா.


"அப்பா என்னச் சொல்லுறீங்க? உங்களுக்கு எல்லாமே தெரியுமா? எப்படி தெரியும்? ஆரலி சொன்னாளா?" அவள் பதற்றத்தோடு கேட்டாள்.


"அவளுடைய பெயரை இங்கே வைத்து சொல்லாதே அத்வதா, நம்ம குடும்பத்துக்கே அது அசிங்கம்" என்றார் வெறுப்போடு மாதேவி.


"அம்மா என்ன நடந்தது? சொல்லுங்க அம்மா"


"உனக்கு என்னத் தெரியனுமோ? அதற்கான பதில் எல்லாம் உன் அறைக்குப் போனால் பதில் கிடைக்கும்.அங்கே போ" என்றார்.


அத்வதாவிற்கும் அவள் வீட்டிலிருந்து வந்த பின் நடந்தது எதுவும் தெரியாததால் அதை தெரிந்துக் கொள்ளும் ஆவலில் தன்னுடைய அறையை நோக்கி வேகமாகச் சென்றாள்.


அங்கே வாசலில் போய் நின்று தன்னுடைய அறையைப் பார்க்க… அது எப்பொழுதும் போல் இருந்தது.அப்பாவும் அம்மாவும் சொன்னதற்கான அர்த்தம் புரியாமல் உள்ளே சென்றுப் பார்க்க… அவள் எப்படி அந்த அறையை வைத்திருந்தாளோ? அப்படியே சுத்தமாக அவளுடைய அறை இருந்தது.


ஆனால் அன்று அரண்மனை விட்டு வெளியேறும் போது ரூபனை வரைந்த ஓவியத்தை எடுத்து தூக்கி வீசிவிட்டு சென்றிருந்தாள்.ஆனால் இன்று அவள் வைத்திருந்ததைப் போலவே அங்கே ஒரு ஓவியப்பலகை மூடி வைக்கப்பட்டு இருந்தது.


அது என்னவென்று பார்க்க… அதன் அருகில் சென்று அந்த துணியை விலக்கி திறந்துப் பார்த்தவளுக்கு பேரதிர்ச்சியும், ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும், அழுகையாகவும் என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளுக்கு உடல் முழுவதும் பரவி அவளை மெய்சிலிர்க்க வைத்தது.


அங்கே அவள் கண்டது. அன்று அவள் வரைந்த தவரூபனின் ஓவியமும் அதற்கு அருகில் அவள் சிறுவயதில் பாதியில் வரைந்த நீர்வீழ்ச்சி ஓவியத்தின் முழு ஓவியம் அங்கு இருந்தது.அதில் ரூபன் நின்றிருக்க… அவனைக் கட்டியணைத்த படி நெஞ்சில் அவள் சாய்ந்திருக்க… அவள் நெற்றியில் குங்குமமும் கழுத்தில் தாலியும் போட்டிருக்க… அவர்கள் இருவரும் நீர்வீழ்ச்சியிலிருந்து வந்த சாரலை இருவரும் கண்மூடி அதை ரசிப்பது போல் இருந்தது அந்த ஓவியம்.


அந்த ஓவியத்தைக் கண்டதும் அன்று அவளிடமிருந்து ரூபன் ஓவியத்தை எடுத்துக் கொண்டு ஓடியதும் இன்று அவன் மனதில் உள்ளதை அவன் ஓவியமாய் வரைந்திருப்பதைக் கண்டு அவள் மெய்சிலிர்த்துத் தான் போனாள்.

கண்கள் முழுவதும் முதல் தடவை ஆனந்தக் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.
அதைக் கண்டதும் அவள் புரிந்துக் கொண்டது இது தான் அவனும் தன்னைப் போலவே சிறு வயதிலிருந்தே விரும்பி இருப்பதை புரிந்துக் கொண்டாள்.


முகிலும் இல்லை புயலுமில்லை
மழை வருமா?


இதயத்திலே இனம் புரியா கலவரமா?


விதையும் இல்லை உரமும் இல்லை மரம் வருமா?


நினைவுகளில் கிளை விரித்தேன் சுகம் தருமா?


இதுவரை அறியா ஒருவனை விரும்பி இதயம் இதயம் துடி துடித்திடுமா?


தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு பிரிவைக் கடந்துமே என்னைத் தொடர்ந்திடுமா?


ஜென்மம் உண்மை இல்லை
உன் வேர் என்ன?


காதல் கொண்டேன் உன் மேல் உன் பெயர் என்ன?


அணுவெல்லாம் அணுவெல்லாம் நிறைவென நிறைந்தாய்….


அவள் திரும்பிப் பார்க்கும் பொழுது அவன் அவளிற்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்தான்.


(தொடரும்)
 
Last edited:

Mohanapriya M

Well-known member
🙄🙄ungamela kovama iruken sister ipudi kuttyundu epi podringaa😏😏😏 Evolo interesting ah poitu irukum pothu sudden break pottamari thodarumnu podringa😏😏😏
 
Top