கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -21

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம் -21



மறந்தாயே மறந்தாயே…

பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…

கடந்தேன் தான் நடந்தாயே…

யாரோ என்று ஏன் கடந்தாய்…

நினைவுகள் யாவும் நீங்கிப் போனால்…

நான் யார் மறதியா … அவதியா… சகதியா…

நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்…

நீ யார் ஜனனமா… சலனமா … மரணமா…

தனியாய் நான் வாழ்ந்தேனே…

வானாய் நீ ஆனாய்…

உன்னில் ஏறப் பார்த்தேனே...

காணாமல் போனாய்…


காண்பது எல்லாம் கனவா? நினைவா? என்ற குழப்பத்தோடுக் கூடிய ஆனந்தத்தில் பின்னால் சென்றவள் யாரோ மீதோ இடித்து நிற்பதை உணர்ந்து திரும்பி பார்க்க… அங்கே அவன் தான் நின்றுக் கொண்டிருந்தான்.


அவன் அவளுக்காக அவனாய் காத்திருந்தான்.அவனைக் கண்டதும் முதல்முறை வெட்கத்தோடு நாணலாய் குனிந்துக் கொண்டவள் சட்டென்று மனதில் தோன்றிய ரணத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் பார்வை அர்த்தம் புரிந்தும் புரியாமலும் அவனைக் கண்டவள் அவனிடம் "எல்லோர்க்கிட்டயும் இந்த வார்த்தையை நான் கேட்டுட்டேன் ரூபா, ஆனால் ஏனோ உன்கிட்ட மட்டும் எனக்கு இந்த வார்த்தையை நான் கேட்கனும்னு எனக்கு தோன்றவும் இல்லை, ஏன் அந்த யோசனையும் இல்லை. ஏன் தெரியுமா? கடைசி வரைக்கும் உன்னை நான் புரிந்துக் கொள்ளவே இல்லை ரூபா" என்று அவன் கையைப் பிடித்து தன் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டவள் மன்னிச்சிடு ரூபா என்னை மன்னிச்சிடு என்னோட மனதை யோசித்த நான் சுயநலமா உன் மனதைப் பற்றி யோசிக்கவே இல்லை மன்னிச்சிடு ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுடா" என்று அவன் கையைப் பிடித்து அழுதாள்.


அவளின் அழுகையைக் காண பிடிக்காதவன் அவளது கையைப் பிடித்து இழுத்தவன் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.


அவனது அந்த இறுக்கமான அணைப்பு அவளுக்கும் தேவையாய் இருந்தது.அதனால் அவனோடு இன்னும் நெருக்கமாய் தன்னை இணைத்துக் கொண்டாள்.


சிறிது நேரம் அப்படியே இருவரும் அப்படியே நின்றனர். இத்தனை வருட அன்போடு கூடிய காதலை அந்த ஒற்றை அணைப்பில் இருவரும் அதை தெரிவித்தனர்.


அதுவரை அமைதியாய் இருந்தவன் அவளது முகத்தை தன் இரு கரங்களால் தூக்கி அவளைப் பார்த்தான்.அவளோ தன் பார்வையை தாழ்த்திக் கொள்ள…


"நீ என்கிட்ட கேட்ட மன்னிப்பு அனைத்திற்கும் பதிலா நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்.முதல்ல தப்பு செய்தது நான் தான்,உன்னோடு நேரில் வந்து வெளிப்படையாய் பேசி இருந்தால் நம்மக்குள்ளால உள்ள மிஸ் அன்டர் ஸ்டான்டிங் இப்போ இல்லாமல் ரெண்டு பேரும் நம்மக் காதலை புரிந்து இருப்போம் அதைப் பற்றி பேசத் தான் அன்று உனக்காக நான் வந்தேன் ஆனால் என்னை விட்டு நீ போயிட்டே வதா"என்றான்.


"என்னச் சொல்லுற ரூபன் நான் போய்ட்டேனா?"

"ஆமாம் இந்த அரண்மனையை விட்டே இந்த ஊரை விட்டே நீ போயிட்டே எனக்கு அப்புறமா தெரிந்தது"

"என்னச் சொல்லுறீங்க ரூபன்? எனக்கு ஒன்னுமே புரியலை"


நடந்த அனைத்தையும் அவன் அவளிடம் விவரமாய் சொன்னான்.


நான்கு வருடங்களுக்கு முன்... அத்வதா கடைக்குச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு சென்றவள் வெகு நேரமாகியும் வராததால் காரின் டிரைவர் அவள் வந்த கடை முழுவதும் தேடிப் பார்க்க… அங்கே அவள் இல்லாததால் மாதேவிக்கு அரண்மனையின் வீட்டு அலைபேசிக்கு அழைத்து அத்வதா காணாமல் போனதை அவரிடம் சொல்கிறார்.


ஆனால் மாதேவி அதை நம்பவில்லை.அவள் வேறு எங்கோ சென்று இருக்கிறாள் என்றெண்ணி இல்லத்திற்கு போன் செய்து கேட்கிறார்.அங்கே அத்வதா வரவில்லை என்று சொல்லுகின்றனர்.


அடுத்து அத்வதாவின் தோழிகள் என்று பார்த்தால் சில பேர் மட்டும் தான் இருக்கின்றனர்.அவர்களுக்கும் போன் செய்து விசாரிக்கின்றனர் அங்கும் அவள் வராததால் பதற்றம் அடைந்தவர் ரதனை அலைபேசியில் அழைத்தார்.


"என்னங்க கடைக்கு போன அத்வதா இன்னும் திரும்பி வரலை"


"வேற எங்கேயாவது வெளியே போய் இருப்பாள், இன்னும் கொஞ்ச நேரத்தில் திரும்ப வந்து விடுவாள்" என்றார்.


"இல்லைங்க அவ போற எல்லா இடத்துக்கும் போன் போட்டு கேட்டுட்டேன், அவளோடு படிக்கிற பொண்ணுங்களுக்கும் போன் போட்டு கேட்டேன் எங்கேயும் வரலைன்னு சொல்றாங்க"


"அப்படியா! நீ பயப்படாதே நான் பார்த்துக்கிறேன் அதற்கு இடையில் அவ திரும்ப வந்து விட்டாள் என்றால் எனக்கு போன் போட்டு ஒரு வார்த்தை சொல்லி விடு" என்று அவர் மாதேவிக்கு சமாதானம் சொன்னாலும் அவர் மனம் ஏனோ ஒருவித பதற்றத்தைக் கொண்டிருந்தது.


அவரும் தன்னிடம் உள்ளவர்களில் நெருக்கமானவர்களுக்கு மட்டும் அத்வதாவைப் பற்றி சொல்லி தேடச் சொன்னார்.வெளியே தெரிந்தால் அது குடும்ப மானத்தையே போக்கி விடும் என்பதால் அவர்களுக்கு மட்டும் சொன்னார்.


நேரம் போனதே தவிர… அத்வதா வீட்டிற்கு திரும்பவில்லை.அன்றைய இரவு வெளியூருக்கு சென்றிருந்த தவரூபன் திரும்ப அரண்மனைக்குத் திரும்பி இருந்தான்.


அத்வதாவிற்கும் அவனுக்கும் தாத்தா திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தது அவன் ஏற்கனவே அறிந்த விஷயம்.ஆனால் பிருந்தா வந்து சம்பந்தம் பேசி அதற்கு அத்வதாவும் ஒத்துக் கொண்டது அவன் இப்போது அறிந்த விஷயம் என்பதால் மிகுந்த சந்தோஷத்தோடு வந்தான்.


அரண்மனையில் அவளை சந்தித்து பேசி தன் காதலை அவளிடம் சொல்லி அவன் வரைந்திருந்த ஓவியத்தை அவளிடம் காட்டுவதற்காக ஆர்வமாய், சந்தோஷமாய் அரண்மனைக்கு வந்தான்.


அங்கே உள்ளே நுழைந்தவனுக்கு எல்லோரும் வரவேற்பறையில் பதற்றமும் சோகமாய் அமர்ந்திருக்க கண்டவன் யோசனையோடு உள்ளே நுழைந்தான்.


ஆரலிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.தன் திட்டம் சரியாய் நடப்பதை நினைத்து மகிழ்ந்தாள்.அதன் முதல் வேலையாக அத்வதா அங்கிருந்து ஓடிப் போய் விட்டாள் என்ற செய்தி தான் தான் நினைப்பதை நடத்த முடியும் என்பதற்கான முதல் படி.

தவரூபன் உள்ளே நுழைந்தது அவனைக் கண்டதும் மாதேவி வந்து அவனிடம் அத்வதா காணாமல் போன விஷயத்தைச் சொன்னார்.


அதைக் கேட்ட ரூபனால் நம்ப முடியவில்லை."என்ன அத்தை சொல்லுறீங்க? அத்வதாவை காணவில்லையா? எங்கே போனாள்? யாராவது கடத்திட்டு போய் இருப்பாங்களா? "என்று பலவகையில் அவன் யோசித்து மாதேவியிடம் கேட்டார்.


அந்த கேள்விகளுக்கெல்லாம் அவரின் ஒரே பதில் தெரியவில்லை என்பது தான்.


"அத்தை அத்வதா விரும்பாத விஷயம் எதாவது நடந்ததா?"என்று கேட்டான்.


அதற்கு அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு பின்னர் நினைவு வந்தவராய் "ரூபா அவளுக்கு இப்போ பிடிக்காத விஷயமா நடந்துச்சுன்னா கல்யாண விஷயம் தான்"


அதைக் கேட்டதும் தவரூபனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

"என்ன சொல்லுறீங்க அத்தை வதாவிற்கு கல்யாணத்துல விருப்பம் இல்லையா? ஏன் நீங்க கட்டாயப்படுத்துனீங்களா?" என்று அவன் வெளிப்படையாய் கேட்டாலும் மனம் முழுவதும் வலிக்கத் தான் செய்தது.வதாவும் தன்னைப் போல் விரும்பி இருப்பாள் என்று நினைத்திருந்தவனுக்கு அது பேரிடியாக இருந்தது.


"இல்லைப்பா அவ விருப்பம் இல்லைன்னு சொல்லலை இப்போ வேண்டாம் படிப்பு முடியட்டும் அதற்குப் பிறகு பார்க்கலாம் என்றாள்.நான் தான் அப்பாவோட விருப்பம் மாத்த முடியாது,அதோட தாத்தாவோட ஆசையை நிறைவேற்றி வைன்னு சொன்னேன்" என்றார்.


அவர்கள் இவ்வாறாய் பேசிக் கொண்டிருக்கும் போது… அரண்மனையில் அலைபேசி அழைத்தது.என்னவென்று ரூபன் விசாரிக்க...இல்லத்திலிருந்து போன் வந்தது.அதில் இல்லத்தில் உள்ள காந்திமதி பாட்டி, சாந்தனா, மானவி மூவரும் கல்யாணத்திற்கு போய் வருகிறோம் என்று சொன்னவர்கள் திரும்பி வரவில்லை என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது.


இதை கேட்ட எல்லோரும் ஏன் இப்படி தவறுக்கு மேல் தவறு நிகழ்கிறது என்று புரியாமல் தவித்தனர்.


அப்பொழுது தான் ரூபனுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.அன்று இல்லத்திற்கு தாத்தாவோடு சென்றிருக்கும் போது அவள் அவர்ளோடு நெருக்கமாய் பேசிக் கொண்டிருப்பதை அவனே பார்த்து அவர்களுக்கு அருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்தும் போது பாட்டி சொன்ன பெயரும் நினைவுக்கு வர ஒருவேளை அவர்ளுக்கும் அத்வதா சென்றிருப்பதற்கும் தொடர்பு இருக்குமோ என்று யோசித்தவன் காணாமல் இவர்கள் மூவரைப் பற்றி காவல் துறையில் சொல்லி தேட முடிவெடுத்தான்.


அன்றைய இரவு அப்படியே கழிய...
அரண்மனையில் உள்ள எல்லோருக்கும் பெருத்த கவலையாக இருந்தது.அடுத்த ராணியாக அத்வதாவை அறிவித்து இருக்க… இதில் இவள் காணாமல் போன விஷயம் வெளியே தெரிந்தால் … நிச்சயம் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.


ஏற்கனவே ஏற்பட்ட சாபத்தில் இருந்து விமோச்சனம் கிடைக்காமல் இன்னும் வேதனைகளை அனுவித்து இருக்க… இதில் அத்வதா சென்றிருப்பது மேலும் தலைக்குனிவை ஏற்படுத்தி விடுமோ? என்று பயந்தனர்


தவரூபனுக்கு அத்தை சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்க முடியவில்லை, ஆனால் அவன் மனதில் தோன்றிய கேள்வி ஒன்றே ஒன்று தான் கல்யாணத்திற்கு விருப்பம் இல்லை என்பதற்காகவா அத்வதா வீட்டை விட்டு சென்றிருப்பாள் என்ற யோசனைதான் அவனுக்கு நெருடலாய் இருந்தது.


சாப்பிடாமல் இருந்த ரூபனை ஆரலி நன்றாக கவனிக்கத் தொடங்கினாள்.அவனை சிரத்தையாய் கவனமாய் பார்த்துக் கொண்டாள்.அவன் வதாவை தேடுவதில் முனைப்பாய் இருக்க… அவர்களும் எல்லா விதத்திலேயும் தேடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.


நாட்கள் வேகமாய் செல்ல ஆரம்பித்தது.மூன்று மாதங்ள் ஆனது.ஆனால் வதாவை தேடுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.பாட்டியும் அவள் வேண்டுமென்றே குடும்பத்திற்கு அவப்பெயரை வாங்கித் தரத் தான் சென்றிருக்கிறாள் என்று நம்பத் தொடங்கினர்.


அதனால் இனிமேல் அத்வதா அரச குடும்பத்தில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று பாட்டி கோபத்தில் முடிவெடுத்து வைத்து அதை செயல்படுத்த எண்ணி வைத்தார்.

ஏற்கனவே தேவி மஹாராஜாவான ரதனை எதிர்த்து பேசியதால்அதற்கு தண்டனை உண்டு என்றவர் அத்வதாவின் திருமணம் கழித்துக் கொடுக்கலாம் என்று நினைத்தவர் அது நடைபெறாமல் போக… அவரின் மகளான தேவிக்கு தண்டனை கொடுக்க எண்ணினார்.


அதன்படி தேவி, அவள் கணவன், பிள்ளைகள் என எல்லோரும் ஐந்து வருடங்களுக்கு அரண்மனைக்குள் வரக் கூடாது என்றும் அவர்கள் எந்த குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளக் கூடாது.அதோடு ராஜ வம்சத்தினருக்கு உள்ள எந்த வசதிகளை அனுபவிக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


தங்களுக்கு தேவையானதை அவர்களே சம்பாதித்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு தேவியும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நால்வரும் வெளியூரில் உள்ள வீட்டில் தனியாக தங்க வைக்கப்பட வேண்டும் எனவும், அங்கே அவர்கள் கண்காணிக்க ஆட்களையும் ஏற்பாடு செய்தனர்.



ஏற்கனவே அத்வதா சென்ற வேதனையே தொடர்ந்து இருக்க… மாதேவி தன் அம்மாவிடம் தன் தங்கையான தேவிக்காக பரிந்து பேசினார்.


"அம்மா அப்பா நம்மையும் இந்த அரண்மனையை விட்டு என்றைக்கு போனாங்களோ அன்றையிலிருந்து இந்த அரண்மனையோட சந்தோஷமும்,நிம்மதியும் போன மாதிரி இருக்கு, ஏற்கனவே அத்வதா தொலைந்து போன வேதனையில இருக்கும் போது இந்த அரண்மனையில் இருந்து ஏன்ம்மா தேவியையும் குழந்தையையும் தள்ளி வைக்கிறீங்க?".


அத்வதா இது என்னோட முடிவு கிடையாது இந்ந அரண்மனையில் ஏகனவே இந்த மாதிரி தப்பு செய்தவர்களுக்கு இதே தண்டனை தான் கொடுக்கப்பட்டு இருக்கு"


"அது எனக்கும் தெரியும் அம்மா, ஆனால் அவளை மன்னித்து கூட திரும்ப ஒரு வாய்ப்பை கொடுக்கலாம் தானே"


"நிச்சயம் வாய்ப்பு கொடுக்கலாம் தான் ஆனால் தேவிக்காக நீ பரிந்துப் பேசக் காரணம் நாளைக்கு இதே மாதிரி அத்வதாவிற்கு தண்டனை கிடைக்கும் என்று பயந்து தானே?"


"இல்லை அம்மா அந்த சுயநலத்தோட நான் தேவிக்காக பேசலை, அத்வதா தப்பு செய்து திரும்ப வந்தால்… அவளுக்கு என்ன தண்டனை கொடுக்கனுமோ?அதைக் கொடுங்க அவளுக்காக இந்த மாதிரிக் கூட நான் பரிந்து பேச மாட்டேன்.தேவி செய்த தப்பிற்கு ஏன்ம்மா அவ பிள்ளைகளுக்கும் சேர்ந்து தண்டனை கொடுக்கிறீங்க? அதோட இந்த தண்டனை ரொம்ப பெரியது இன்னும் கொஞ்சம் வருஷங்களை குறைக்கலாமே" என்று தேவிக்காக மாதேவி பரிந்து பேசினார்.

அங்கே வந்த ரதனுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது.அவரும் குமாரி ராணியிடம் தேவிக்காக பேசினார்.


"அத்தை தேவி எதிர்த்து பேசியது என்னைத் தானே நானே அதை மறந்தும், மன்னித்து விட்டேன்.இதோட இதைப் பற்றி விட்டுவிடுங்கள்" என்று அவரும் தேவிக்காக பேசினார்.


ஆனால் குமாரி ராணி எதையும் கேட்காமல் தேவிக்கு நிச்சயம் தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தார்.


தேவிக்காக மாதேவியும் ரதனும் மாறி மாறி பரிந்து பேசியதைக் கண்ட தேவி அப்பொழுது தான் மாதேவியும் ரதனும் அவள் மீதும் அவளுடைய பிள்ளைகள் மீதும் எவ்வளவு அன்பும், அக்கறையும், பாசத்தையும் வைத்திருக்கிறார்கள் என்று உணர்ந்துக் கொண்டார்.


உணர்ந்துக் கொண்டவர் உடனே தனது அக்காவிடமும் மாமாவிடமும் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டார்.


"அக்கா, மாமா என்னை மன்னிச்சிடுங்க, உங்களைப் பற்றி ஆரம்பத்தில் இருந்தே நான் தான் தப்பா புரிந்து இருக்கிறேன். பணத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும் பேராசை இருந்த எனக்கு உங்க அன்பும் அக்கறையும் கண்ணுக்கு தெரியாமல் போய் விட்டது, எனக்கு இந்த தண்டனை தேவை தான் உங்களை தப்பா புரிந்துக் கொண்ட எனக்கு இந்த தண்டனையை அனுபவித்து வந்தால் தான் சரியாக இருக்கும்" என்று இருவரிடமும் மன்னிப்பு கேட்டார்.


தவறை உணர்ந்த தேவி ஆரலியிடம் "ஆரலி உன் அப்பா அம்மாவைப் பற்றி உன்கிட்டேயே நான் தப்பா சொல்லி இருக்கேன் ஆரலி, அதை எல்லாம் மனசுல வைச்சுக்காத எந்த தப்பும் செய்யாதே! இதோ தப்பு செய்து உணர்ந்த நானே உனக்கு சாட்சி அதனால் நிம்மதியா இரு" என்று அவளுக்கு புத்திமதி சொல்லி விட்டு தேவி அரண்மனையில் இருந்து வெளியேறினார்.


ஆனால் ஆரலி எந்த புத்திமதியையும் தலையிலோ மனதிலோ ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.அவளைப் பொறுத்தவரை அவள் நினைத்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் நடக்க ஆரம்பித்துள்ளதால் அந்த மமதையில் இருந்தாள்.


தேவியின் தண்டனைக்கு அடுத்து அத்வதாவிற்கும் தண்டனை கொடுக்க முடிவு செய்தார் பாட்டி.முதல் தண்டனையாக அதற்கு முதல் வேலையாக அத்வதா உபயோகப்படுத்திய பொருட்களைக் கொண்ட அவளது அறை அப்படியே மூடப்பட்டது.அவள் அந்த அரண்மனை விட்டு சென்றதும் அங்கு யாருமே செல்லவில்லை.


அதன்படி பட்டத்து இளவரசன் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டதால் அடுத்த ராணியாக அத்வதாவிற்கு அடுத்து உள்ள ஆரலி தான் ராணியாகவும், ரூபனின் மனைவியாகவும் வேண்டும் என்று முடிவு செய்தார்.


அதை ரதனிடம் சொல்ல… அவரால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.சொல்ல வேண்டும் என்றால் அதற்கு அத்வதா வேண்டும் அவள் தான் அங்கே இல்லையே? பின்னே எதுவும் செய்ய இயலாதவராய் அமைதியானார்.


மாதேவி அத்வதாவை நினைத்து நினைத்து அழுது அழுதே தன் உடல்நிலையை கெடுத்துக் கொண்டிருந்தார்.


தவரூபன் அத்வதாவை எங்கெல்லாமே தேடி அலைந்து நிம்மதியை தொலைத்தான்.


அந்த அரண்மனையில் எந்த வித கஷ்டமோ, கவலையோ இல்லாமல் நிம்மதியாக இருந்தவள் ஆரலி மட்டுமே.


அவள் மட்டுமே முகத்தில் பிரகாசத்தோடும், சந்தோஷமாகவும் இருந்தாள்.


ரதன் குமாரி ராணி எடுத்த முடிவினைப் பற்றி மாதேவியிடம் சொன்னார்.



அதைக் கேட்ட மாதேவிக்கு இன்னும் வேதனையாக இருந்தது.அவர் ரதனிடம் "என்னங்க அம்மா ஏன் இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்துட்டாங்க? இதனால அத்வதாவுடைய நிலைமை என்னவாகிப் போகிறதுன்னு நினைத்தாலே எனக்கு கவலையா இருக்கே"என்று மாதேவி இன்னும் மனமுடைந்தார்.



"என்னால என்னச் சொல்ல முடியும்? ஒரு பெண்ணோட வாழ்க்கையை அழித்து இன்னொரு பெண்ணின் வாழ்வு நல்ல இருக்க போகது எனக்கு என்ன செய்றதுன்னே புரியலை" என்று ரதனும் கவலையடைந்தார்.



பாட்டியின் முடிவு ரூபனுக்கு தெரிவிக்கப்பட்டது.அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ளாமல் சட்டென்று முடிவெடுத்து அதை நடத்துவதில் அவனுக்கு விருப்பம் இல்லை.


ஆரலிக்கு தெரிய வந்தது அவள் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று விட்டாள்.ரூபன் இப்பொழுதாவது அத்வதாவின் எண்ணத்தை விட்டு தன்னை பற்றி நினைப்பான் என்று அவனைக் காணச் சென்றாள்.


இரவு நேரம் அவன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தான்.அங்கே வந்த ஆரலி ரூபனிடம் "அத்தான் ஏன் இன்னைக்கு நைட் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டீங்க"


"எனக்கு பசியில்லை அதான் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டேன்"


"என்ன அத்தான் நீங்க அவளை நினைச்சு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க, இந்தாங்க பாலாவது குடிச்சிட்டு படுங்க" என்று பாலை அவனிடம் நீட்ட…


"ஆரலி ப்ளீஸ் எதுவும் எனக்கு வேண்டாம் முதல்ல இங்கிருந்து போ"

"ஏன் அத்தான் என்னை போகச் சொல்லுறீங்க? இனிமேல் உங்களோடு வாழப் போறது நான் தான் அதனால நான் சொல்றதை கேளுங்க"


அவன் பொறுமையாக அவளிடம் "ஆரலி நீ சின்னப் பொண்ணு இந்த மாதிரி எல்லாம் பேசாதே! அதோட என்னால வதாவைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது, அதனால இந்த மாதிரி நினைப்பெல்லாம் மனசுல வைச்சுக்காதே"


"அத்தான் நீங்க இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க,அவ தான் உங்களை வேண்டாம்னு தானே போயிட்டாள் அவளைப் போய் நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மேல நான் இப்போ இல்ல சின்ன வயசுல இருந்து காதலை வைச்சு இருக்கேன், அதனால என்னால அதை எல்லாம் மறக்கவும் முடியாது. மறக்கவும் மாட்டேன் இந்த பாலை குடிச்சிட்டு அவளைப் பற்றி நினைக்கிறதை விட்டுட்டு நல்லா தூங்குங்க" என்று அவளுக்கு வந்த மொத்த ஆத்திரத்தில் சின்னதாய் அவனிடம் காட்டிச் சென்றாள்.


ஆரலி இந்த மாதிரி பேசி அவன் இப்பொழுது தான் பார்த்திருக்கிறான்.


எப்பொழுதும் சின்னப் பிள்ளைத் தனமாக பேசுபவள் இன்று இத்தனை அகங்காரத்தோடு அவனிடம் பேசியது அவனுக்கு மிகுந்த யோசனையை தந்தது.


அதோடு அவள் சொன்ன வார்த்தைகளை திரும்ப திரும்ப யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


தலைவலி அதிகமாக பால்கனியில் நடந்துக் கொண்டிருந்தான்.ஆரலி பேசியதை யோசித்தவனுக்கு கிடைத்த கேள்வி ஒன்றே ஒன்று தான்.'அவளே உங்களை வேண்டாம்னு தானே போயிட்டா அவளை ஏன் நினைச்சுட்டு இருக்கீங்க' என்ற வார்த்தை தான் அவனை ரொம்ப யோசிக்க வைத்தது.


'அத்வதா எதற்காக வீட்டை விட்டு வெளியேறினாள்? என்று யாருக்குமே தெரியாத பொழுது ஆரலியால் எப்படி சரியாக சொல்ல முடியும்? அப்போ அவளுக்கு அத்வதாவைப் பற்றி ஏதோ ஒன்று தெரியும்' அதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவன் அவளை கண்காணிக்க முடிவெடுத்தான்.


அப்பொழுது அவன் நின்ற இடம் அத்வதாவின் அறை.அறையைக் கண்டதும் அவளின் நினைவு வர… கதவை திறக்கலாம் என்று திறக்க முயற்சிக்கும் போது கதவு பூட்டியிருந்தது தெரிந்தது.


சாவி எங்கே என்று தேடும் கதவின் மேல்புறத்தில் உள்ள ஒரு சின்ன இடைவெளியில் அது இருக்க… சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றான்.


உள்ளே சென்றதும் மின்விளக்கு போட்டதும் அறை முழுவதும் வெளிச்சம் வர அவர்கள் இருவருக்குமான நடந்த நிகழ்வுகள் கண்முன்னே தோன்றி மறைந்தன.


அறை முழுவதும் தூசி படிந்திருந்தது.மேலோட்டமாக பார்வை செலுத்தியவனுக்கு அங்கே ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஓவியங்களுக்குச் செல்ல அதை எடுத்து பார்த்தான்.


ஒவ்வொரு ஓவியமும் வரைந்து அதன் கீழ் எதாவது அழகான வார்த்தைகள் எழுதி இருப்பதை படித்தவன் கடைசியாக ஓரத்தில் ஒரு வரைபடத்தை கசக்கி ஓரமாய் தூக்கி எறியப்பட்டு இருப்பதைக் கண்டவன் என்னவென்று அவன் எடுத்துப் பார்க்கும் பொழுது அங்கே அதில் அவனது ஓவியம் அதில் இருந்தது.


அந்த ஓவியம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.அதைக் கண்டு அவனே அசந்துப் போய் பார்த்தவன் எல்லா ஓவியத்தின் அடியில் எதாவது ஒரு வார்த்தை எழுதி இருப்பதை கவனித்தவன் இந்த ஓவியத்தில் அந்த மாதிரி எதுவும் இல்லை.ஆனால் ஓவியத்தின் இன்னொரு விஷயத்தையும் கண்டு பிடித்தான்.


அவனது ஓவியத்தின் ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஆங்கில எழுத்து இருந்தது.அதைக் கண்டுபிடித்து ஒன்று சேர்த்தால் அவனுக்கு கிடைத்த வார்த்தை "I LOVE YOU RUBA".


அதைப் படித்தவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை இத்தனை நாட்களாய் தேடிக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது.அப்படி என்றால் அத்வதா ரூபனை பிடிக்காமல் செல்ல வில்லை வேறு ஏதோ காரணத்திற்காக சென்றிருக்கிறாள் என்ற உண்மையை அறிந்தவன் இதற்கான பதில் ஆரலியிடம் மட்டும் தான் இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டன் நாளைக்கே இதற்கு தீர்வுக்கான நினைத்தான்.


மறுநாள் ஆரலிக்கு பாட்டி அவர்களின் பரம்பரை வளையல் இரத்தினங்கள் பதித்த வளையலை அடுத்த ராணியாக வருபவருக்கு மூத்த ராணி அணிவிக்க அதன் மூலம் அவர்களின் வம்சம் விருத்தி பெறும் என்பது நம்பிக்கை அதன்படி ஆரலிக்கு அந்த வளையலை அணிவிக்கும் போதே பட்டத்து இளவரசனுக்கு மோதிரமும் அணிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


அதன்படி சில சடங்குகளை செய்து தவரூபனுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது.அடுத்து ஆரலிக்கு வளையலை அணிவிக்கும் பொழுது தவரூபன் ஆரலியிடம் "ஆரலி நான் கேட்கிற கேள்வி ஒன்றே ஒன்றுக்கு மட்டும் எனக்கு உண்மையைச் சொல்லு"

"ம்ம்ம்… சொல்றேன் "

"அத்வதா இங்கே அரண்மனையை விட்டு போறதுக்கு காரணம் நீ தான் என்று நான் சொல்கிறேன், நீ இல்லை என்று மறுத்தால் நம் குல தெய்வத்தின் மீதும், அலமேலம்மாள் சாமி மீதும் சத்தியம் செய்து உன் மேல் எந்த தவறும் இல்லை என்று சொல்லு,அதற்கு முன்னாடி நான் எப்படி கண்டுபிடித்தேன்னு சொல்றேன்" என்று அத்வதா வரைந்த ஓவியத்தை அவள் முன் காட்டினான்.

ஆரலி அந்த ஓவியத்தை பார்த்ததும் முகம் மாறிப் போனது.ரூபன் அத்வதாவின் அறைக்குச் சென்று கண்டுபிடித்திருப்பான் என்று நினைத்தவள் தான் அது தான் தேடும் பொழுது கிடைக்கவே இல்லை என்று நினைத்து அமைதியாக நின்றாள்.


அதோடு ரூபன் இப்படி ஆரலியிடம் கேட்பதை பார்த்து எல்லோரும் அதிர்ந்து இருந்தனர்.ஆனால் அவன் சொன்ன விஷயம் உண்மையாக இருக்க காரணமாக அவன் கையில் ஓவியம் இருந்தது தான்.ஏனென்றால் அந்த அரண்மனையிலேயே ஓவியம் வரையும் பழக்கம் அத்வதாவிற்கு மட்டுமே உண்டு அதோடு ரூபனை அவள் இவ்வளவு தத்ரூபமாக வரைந்திருக்கிறாள் என்றால் அவன் மேல் பிரியம் இல்லாமல் வரைந்திருக்க மாட்டாள்.



அவள் எதன் மீது அதிகம் லயித்து விரும்புகிறாளோ? அதைத் தான் அவள் வரைவாள் என்பது இது அத்வதாவின் பெற்றோருக்குத் தெரியும். அதனால் ரதன் ஆரலியிடம் "ஆரலி உண்மையைச் சொல்லு அத்வதா ஏன் போனால் என்று தெரியுமா? " என்று கேட்டார்.


"இல்லை அப்பா எனக்கு தெரியாது"என்று சாதித்தாள்.


ஆனால் ரூபன் அவளை விடுவதாக இல்லை.தெய்வங்களின் மீது சத்தியம் செய்யச் சொன்னான்.காரணம் என்னவென்றால் அவர்களின் குடும்பத்தில் மேல் சாபம் இருப்பதால் அரசவம்சத்தை சேர்ந்தவர்கள் தெய்வத்தின் மீது பொய் சத்தியம் செய்தால் அவர்களுக்கு உடனடியாக சாபத்தினால் ஏற்கனவே தவறு செய்தவர்கள் ஆனதால் நிச்சயம் வேறு தண்டனை கிடைக்கும் அது அவர்கள் சிறுவயதிலிருந்தே கொடுக்கப்படும் தெய்வ நம்பிக்கை.


ஆரலி சின்னப் பெண் ஆனதால் அவள் தெய்வத்தின் மீதும் அதோடு ஏற்படும் சாபத்திற்கு பயந்தாள்.அதோடு ரூபன் இவ்வளவையும் கண்டுபிடித்தவன் நிச்சயம் மற்ற உண்மைகளையும் கண்டு பிடித்து விடுவான் என்று எண்ணியவள் உண்மையை ஒத்துக் கொண்டு அவனிடம் மன்னிப்பு கேட்டு தன்னை ஏற்றுக்கொள்ளக் கேட்டு கெஞ்சி மிரட்டலாம் என முடிவெடுத்தாள்.


"ஆமாம் அத்தான் நான் தான் அத்வதாகிட்ட கேட்டேன் உங்களை கேட்டேன்"என்று நடந்த உண்மைகளைச் சொன்னாள்.அதைக் கேட்ட எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.அவளது சதித்திட்டத்தை நினைத்து எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.


அவள் ரூபனின் கையைப் பிடித்து "அத்தான் அத்வதா எங்கே போறேன்னு என்கிட்ட சொல்லிட்டு போகலை, அதோடு அவ திரும்ப கிடைக்கவும் இல்லை அத்தான் உங்க காதலுக்காக தான் நான் இவ்வளவு செய்தேன் என்னை மன்னித்து என்னை ஏத்துக்கோங்க அத்தான்" என்று கெஞ்சினாள்.


அவன் வெறுப்போடு முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவள் தன் தாய் மாதேவியின் காலில் விழுந்து "அம்மா நான் செய்தது தவறு தான் என்னை மன்னிச்சிடுங்க அத்தானை என்னை ஏற்றுக்க சொல்லுங்க அம்மா நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கிறேன்" என்று மாதேவியிடமும் ரதனிடமும் கெஞ்சினாள்.


யாரும் அவளது கெஞ்சலை செவி கொடுத்து கேட்பதாய் இல்லை.கடைசியில் அவள் தன்னைத் தானே வருத்திக் கொண்டு எல்லோரிடமும் "என்னை அத்தான் கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்றால் என்னை நானே கொன்று விடுவேன்" என்று பக்கத்தில் இருந்த கூர்மையான பொருளை எடுத்து வயிற்றில் குத்துவதுபோல் காட்டினாள்.


அவளை யாரும் தடுக்காமல் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்துச் சென்றனர்.அவர்களின் இந்தச் செயல் ஆரலிக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்தது. உன் உயிர் கூட எங்களுக்கு தேவையில்லை என்று அவளின் பெற்றோரின் நிராகரிப்பே அவளை இன்னும் அசிங்கப்படுத்தியது.


யாரிடமும் எதுவும் சொல்லாமல் அவள் தன்னுடைய ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள்.


பாட்டிக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.அவரின் முடிவு முதன்முறையாக தவறாய் போனதை நினைத்தே வருந்தியவர் தவறே செய்யாத அத்வதாவிற்கு தண்டனை கொடுக்க போனதை எண்ணியே வருந்தியவர் அவளிடம் இந்த வளையலை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.ஒன்றாய் இருந்த குடும்பம் சிதறிப் போனதை எண்ணி வருந்த ஆரம்பிக்க அதிலிருந்தே அவருடைய உடல்நிலை மோசமாக ஆரம்பித்தது.


ரூபன் அத்தையிடமும் மாமாவிடமும் உறுதியாகச் சொன்னான்."என்றைக்கு ஆனாலும் அத்வதா தான் என்னுடைய மனைவி அவளை திரும்ப உங்ககிட்ட அழைத்து வருவேன்" என்று வாக்களித்தான்.


அத்வதாவை தேடுவதை அவன் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

ரூபன் தன்னுடைய புதுத் தொழிலாக டெக்ஸ்டைல் துறையில் தொழில் தொடங்க நினைத்தவன் சென்னையில் ஆரம்பித்து அதற்கான வேலையாட்களை தேர்ந்தெடுக்க தொடங்கினான்.அதில் பிரிண்டிங் பிரிவில் பெரிய கம்பெனியாக இல்லாமல் சின்ன கம்பெனியாக தேடும் பொழுது தான் அத்வதாவை தன்னுடைய அலுவலகத்தின் வெளியே உள்ள கண்காணிக்கும் கேமராவில் அத்வதாவைக் கண்டவனுக்கு சந்தோஷமோ தாளவில்லை.நான்கு வருட காத்திருப்பிற்கு பின் அவளைக் கண்டவன் நேராக அவள் முன்னால் நின்றால் எங்கேயாவது சென்று விடக்கூடாது என்றெண்ணி அவளை கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்து அத்வதாவை தன் பார்வையிலே வைத்திருந்தான்.


அதோடு அவளுக்கு தன் கம்பெனியிலே ஆர்டரையும் கொடுத்து அவளை தன்னருகே வைத்து இப்பொழுது அவளை தன் கையருகே வைத்திருப்பதை வரை எல்லாவற்றையும் சொன்னான்.


எல்லாவற்றையும் கேட்ட அத்வதாவிற்கு விளங்கியது ஒன்றே ஒன்று மட்டும் தான்.அவளுக்காக தன்னின் காதலோடு அவளின் காதலையும் சேர்த்து காத்திருந்தவன் அவன் மட்டுமே என்பதை அறிந்து அவளால் எதுவும் சொல்லாமல் முடியாமல் அவனின் பேரன்பின் காதலில் மூழ்கி பேச மடந்தையானாள்.



ரூபன் அவளிடம் "இப்பொழுதாவது என்னை புரிந்து இருப்பே" என்று அவன் தயக்கமாய் கேட்க…

அதற்கு அவள் ஆமாம் என்பது போல் வேகமாய் தலையசைக்க…

அதைப் பார்த்து சிரித்தவன் "அன்றைக்கு என் காதலை சொல்லவில்லை என்றால் என்ன? இப்போ எனக்கே எனக்காக நீ இருக்கிறாயடி பெண்ணே…
தவமாய் தவமிருந்து மீண்டுக் கொண்டு வந்த என் காதலை நீ முழுமையாய் உன் இதயத்தில் நிரப்பிக் கொண்டு அதே காதலை உன் அன்போடு கலந்து எனக்கும் அந்த பேரன்பின் காதலை தருவாயா!" என்று தன் காதலை கவிதையாய் அவளிடம் சொல்லி சம்மதம் கேட்டான்.


அதற்கு அத்வதா "எந்த தவமும் செய்யாமல் பெற்ற உன் காதலை இனி எந்த தவம் செய்தாவது உன் அன்பை நான் முழுதாய் வாங்கி அதை உன்னிடமே திருப்பி தருவேன்" என்று அவள் தன் பதிலை அவனைப் போலவே பதிலளித்தாள்.


சுரங்கத்தை போல என்னுள் போக போக…

பெருகிடும் பெருகிடும் நினைவிலே…

உன்னைக் காண உலகத்தில் எதுவுமே மெய்யில்லை...

உலகெல்லாம் பொய் இந்த காதல் பொய் இல்லை…

நீ என்னுள் பேரலை போலே நீ பாய்கிறாய் பாரடா...



அவளின் சம்மதத்தை கேட்டு சந்தோஷத்தில் அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றி விட்டு இறக்கி விட்டான்.அவனது இந்தச் செயல் அவளையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.


இருவரும் ஒருவர் பார்வையோடு இன்னொரு பார்வை பரிமாறக் கொண்டிருக்கும் பொழுது ரூபனின் கண்கள் அவளின் அதரத்தை மொய்த்தது.


அவளது முகத்தை தன் கையில் ஏந்தியவன் குனிந்து அவளின் முகத்திற்கு அருகே கொண்டுச் சென்றான்.அவனின் இந்த திடீர் செயலில் பயத்தில் அவளின் செக்கச் சிவந்த உதடுகள் துடிக்க...அதை அவன் தன்னுடையதாக்கும் முயற்சியில் தன் உதடுகளால் மென்மையாய் அதை சிறைப் பிடித்தான்.

கண்களை மூடி அவளும் அதை முழுமையாய் ஏற்றுக் கொண்டாள்.


உயிரே என் உறவே…

உன்னை விட்டு போவதும்

சாவதும் ஒன்றும் தான்

இரவே என் பகலே

இனி வரும் நாளெல்லாம்

உன் விழி முன்பு தான்

பிழை எனும் துயர்தீண்டாமலே

துணை இருந்திடும் என் காதலே

இலக்கணம் எதும் பாராமலே

அடைக்கலம் நான் உன் மார்பிலே…

உயிர் விடும் வரை உன்னோடு தான்

உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்

நான் என்பது நான் மட்டுமா?

நீ கூடத் தான் ஓடோடி வா…


(தொடரும்)
 
Top