என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம் -3
வீட்டிற்கு வரும் வரை யாரும் எதுவும் பேசவில்லை.அவர்கள் நான்கு பேருக்குள் நடந்த விஷயத்தை இன்னொருவரும் அறிந்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை.
வீட்டிற்கு வாசலில் இறங்கி டிரைவருக்கு அவருக்கான பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு உள்ளே வந்து எல்லோரும் நுழைந்ததும் சாந்தனா கதவை தாழிட்டுக் கொண்டு நால்வரும் ஒவ்வொரு இடமாக அமர்ந்தனர்.
பலத்த அமைதி நிலவியது.சாந்தனா தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.
"அத்து அங்கே நம்மளை வரச் சொன்னது யாராக இருக்கும்னு நினைக்கிற? "
அதுவரை யோசனையில் இருந்தவள் அம்மா கேட்டதும் பதில் சொன்னாள்."தெரியலைம்மா யாருன்னு எனக்கு தோணலை"
அவள் சொன்னதைக் கேட்ட பாட்டி "அத்து உன்னைத் தேடி வந்து இருப்பாங்களா? "
அவர் கேட்ட கேள்வியைப் புரிந்து அவரை ஆழ்ந்துப் பார்த்தவள் "பாட்டி நான் இங்கே இருக்கேன்னு அவங்களால எப்படி கண்டுபிடிக்க முடியும்?இத்தனை வருஷமாக என்னைத் தேட என்ன அவசியம் இருக்குது? "
"அப்படி சொல்லாதே அக்கா.உன்னுடைய தேவை அவங்களுக்கு தேவைப்பட்டு இருக்கலாம்" என்று மானவி சொல்ல…
அவளது அமைதியான யோசனை திரும்பவும் தொடர்ந்தது.மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு அவளையும் பார்த்தனர்.
சாந்தனா தயக்கத்தோடு "அத்தும்மா திரும்பவும் நாம வேற இடத்துக்கு போகலாமா? " என்று தயக்கத்தோடு கேட்க….
அவரை நிமிர்ந்து பார்த்தவள் "வேண்டாம் நாம ஓடி ஒளிஞ்சு இருந்தது எல்லாம் போதும்.திரும்ப என்னால முதல்ல இருந்து ஆரம்பிக்க முடியாது, அதோடு இப்போத்தான் ஒரு நிலைமைக்கு என்னால வர முடிஞ்சது அதனால எங்கேயும் போக வேண்டாம்"
பாட்டி பயத்தோடு "இது தான் உன்னோட முடிவுன்னு தான். அ...டுத்து?" என்று அவர் நிறுத்த….
"என்ன நடக்கப் போகுது? எதுவாக இருந்தாலும் அதை சமாளிக்கிற முடிவோடத் தான் இந்த முறை இருக்கிறேன்.உங்களுக்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கிறேன்"என்றாள்.
சாந்தனா அத்துவின் அருகில் வந்து அமர்ந்து அவளது தலையை மெதுவாக வருடிக் கொடுத்து "அத்து எங்களுக்கு எதாவது ஆபத்து வரும் என்ற கவலையை விட நீ எங்களை விட்டுப் போகக் கூடாதுன்னு என்று தான் நாங்க மூணு பேரும் நினைக்கிறோம்"என்றார்.
அதைக் கேட்ட அத்து பாட்டியையும் மானவியையும் பார்க்க… அவர்களும் அதற்கு ஆமாம் என்பது போல் தலையசைத்தனர்.
அவர்களது உண்மையான அன்பை உணர்ந்துக் கொண்டவள் சாந்தனாவைக் கட்டிக் கொண்டவள் "அம்மா உங்க மூணு பேரையும் நான் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன், விட்டுப் போகவும் மாட்டேன்" என்றாள்.
அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த சாந்தனா அவளது நெற்றியில் அன்பாய் முத்தமிட்டவர் "இது போதும் அத்து இந்த ஒரு வார்த்தை எங்களுக்கு போதும்" என்றார் சிரித்தபடி….
உடனே பாட்டியும் மானவியும் அவளை வந்து அன்பாய் கட்டிக் கொண்டனர்.
அங்குள்ளவர்களின் ஒவ்வொருவர் மனதிலும் ஆயிரம் கேள்விகள் மனதில் இருந்த போதிலும் அன்பு என்ற ஒற்றுமை உணர்வால் நடப்பதை மறந்து ஆதரவாய் இருந்தனர்.
மறுநாள் காலை வழக்கம் போல் அத்து தன் ஆபிஸ் வேலைக்கு கிளம்பினாள்.ரோட்டில் நடந்துக் கொண்டு இருந்தவளுக்கு யாரோ தன்னை பின் தொடர்வது போல் உணர திரும்பிப் பார்த்தாள்.ஆனால் அங்கே யாரும் இல்லை.திரும்பவும் அதே எண்ணம் தொடரவே எல்லாப் பக்கங்களிலும் தன் பார்வையை சுற்றி சுழல விட்டப்படியே நடந்தாள்.
மனதினுள் "ரொம்ப நாள்களுக்கு முன்னால் தொலைத்த நிம்மதியை திரும்ப கண்டெடுத்த எனக்கு திரும்ப அதே நிம்மதியை கொஞ்சம் நாள் தான் சுமக்க முடிந்தது.இப்போ அதே நிம்மதியை நான் கொஞ்சம் கொஞ்சமா இழந்திடுவேனோ?"என்று மனதில் தோன்றிய கேள்விகளோடு நடக்கத் துவங்கினாள்.
யாரோ பின் தொடர்வது அவளுக்கு தோன்றத் தான் செய்தது.ஆனால் அதை பெரிதாக எண்ணாமல் வேகமாக நடக்கத் துவங்கினாள்.உள்ளே சென்றதும் எப்போதும் போல் மாலா அவளை எதிர்க் கொண்டு "மேடம்" என்றழைக்க… அதற்கு பதில் அளிக்காமல் தன் அறையை நோக்கி நடக்கத் துவங்கினாள்.அத்துவை அவள் இப்படி பார்ப்பது இதுவே முதல்முறை.
மாலா யோசனையோடு அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டு பின்னால் வர ரேகா அறையில் அமர்ந்திருந்தாள்.
ரேகா அத்துவை புன்னகை முகமாய் வரவேற்க அதற்கும் அவளிடம் எந்த வித பதிலும் இல்லை. எங்கோ யோசனையோடு பார்த்த வெறித்த முகம் இருந்தது.மாலா ரேகாவைப் பார்க்க ரேகா மாலாவைப் பார்த்து "என்ன?" என்பது போல் சைகையால் கேட்க… மாலா "தெரியாது" கைககளை விரித்துக் காட்டினாள்.
ரேகா "அத்து என்ன யோசனை? ஏன் இப்படி அமைதியாக இருக்க?"
அவளது அதட்டலான குரலில் யோசனை கலைந்தவள் "எப்போ வந்த ரேகா?"
"நான் எப்போதோ வந்தாச்சு. நான் பார்த்துக் கூட நீ பார்க்காமல் இருக்கிறதுக்கு காரணம் என்ன? அத முதல்ல சொல்லு"
"அ...து…"என்று அவள் தயங்க….
மாலாவும் உடனே "மேடம் நான் உங்களை கூப்பிடுறேன். அதுக்கு கூட பதில் சொல்லாமல் போறீங்க?"
"அ...ப்படியா!"என்று யோசனை பதில் தந்தவள் பார்த்து ரேகா "அத்து புது கம்பெனியில் இருந்து ஆர்டர் வந்திருக்கு.அதைப் பற்றி பேசலாமா? "என்றதும்
"ம்ம்… பேசலாம் ரேகா என்ன விஷயம்னு சொல்லு?"
மாலா புறமாக திரும்பிய ரேகா "மாலா நான் எடுத்து வைச்ச பைல்ஸ்ஸோட நான் உனக்கு அனுப்பின மெயிலோட பிரிண்டவுட்டும் எடுத்து வா" என்று அவளை வெளியே அனுப்பி விட்டு…
அத்துவின் அருகில் வந்தமர்ந்து அவளது கை மேல் தன் கை வைத்து "அத்து என்ன பிரச்சினை? கொடைக்கானல் போயிட்டு வந்த பிறகு எதாவது பிரச்சினையா?"
அவள் வாய் திறந்து சொல்லாமலே புரிந்துக் கொண்ட தன் தோழியின் நட்பைப் புரிந்து அவளை ஆறுதலாய் இறுக்கமாய் கட்டிக் கொண்டவள் "ரேகா எப்படி நீ மட்டும் என் பிரச்சினையை பார்த்துக்கிட்டே புரிஞ்சிக்கிற?"
"என் அத்து எப்படி என்னுடைய கஷ்டத்தை நான் சொல்லாமலே புரிஞ்சு சரி பண்ணாலோ அதே குணம் தான் அவளுடைய தோழிக்கும் இருக்கும்" என்றாள்.
அணைத்திருந்தவள் லேசாக விலகியபடி ஆனால் அத்து ரேகாவுடைய கையை கெட்டியாகப் பிடித்தபடி "ரேகா எனக்கு பயமா இருக்கு"
"என்ன? என் அத்துவிற்கு பயமா? அதெற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது"
"இல்லை ரேகா அ...து" என்று நிறுத்த...
"அதெல்லாம் விடு அத்து.கொடைக்கானல் போய்ட்டு வந்த சந்தோஷமே உன் முகத்தில இல்லையே!அங்கிருந்து கிளம்பும் போது எனக்கு போன் போட்டு சந்தோஷமாக பேசிட்டு தானே கார்ல ஏறினே. வர்ற வழியில என்னாச்சு?"என்று சரியான காரணத்தை கண்டுபிடித்துக் கேட்க…
அதற்கு மேல் மறைக்க முடியாமல் அத்து நடந்த அனைத்தையும் சொன்னாள்.அதைக் கேட்ட ரேகாவும் யோசனையோடு அமைதியாய் இருக்க…அத்துவே தொடர்ந்தாள்.
"ரேகா என்னைப் பொறுத்தவரை எனக்கு என்ன ஆனாலும் அதைப் பத்தி நான் கவலைப் பட மாட்டேன்.ஆனால் என் குடும்பத்துல உள்ளவங்களுக்கு எதாவது ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது,அதை நினைச்சு தான் எனக்கு கவலையா இருக்கு"
அவள் சொன்னதைக் கேட்ட ரேகா "அத்து உன்னைத் தேடித் தான் யாராவது வந்து இருப்பாங்களா? "
"இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம் ஆனால் யாருன்னு எனக்கு சரியான தெரியாமல் நான் முடிவெடுக்க முடியாது. அதோடு நான் வந்ததற்கு இவங்க தான் காரணம்னு நினைச்சு இவங்களை எதுவும் செய்யக் கூடாது, இதை நினைச்சுத் தான் எனக்கு கவலையாகவும், பயமாகவும் இருக்கு"
அதற்கு ரேகா "நீ நினைக்கிற மாதிரி எல்லாம் அவங்க செய்ய மாட்டாங்க அத்து"
"அதைத் தான் நானும் நினைக்கிறேன்.ஆனால் என் உள் மனசு ஏதோ பெரிய பிரச்சினை வரப்போகுதுன்னும் யாரோ பின் தொடர்வது போலவும் தோணுது ரேகா"
"அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது அத்து.நீ தைரியமா இரு எதாவது தப்பு நடக்கிற மாதிரி அவங்க செய்ய மாட்டாங்க"
"அந்த ஒரு தைரியம் தான் என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. அவங்க இனிமேல் என்னைச் சந்திக்கிறதா இருந்தால் என்னை நேரடியாகத் தான் பார்ப்பாங்கன்னு நான் முழுசா நம்புறேன் ரேகா"
"அப்ப விடு அத்து. நடந்த விஷயங்களையே நாம திரும்ப யோசிக்கும் போது குழப்பம் தான் வரும்.நாம நடக்கப் போற விஷயத்துல கவனம் செலுத்தலாம்" என்று பேசி முடிக்கவும் மாலா பைல்ஸ் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
"சரி ரேகா நீ சொன்னதையே முதல்ல பார்க்கலாம்"என்றாள் அத்து.
அத்துவிடம் டி.ஆர் கம்பெனியிடம் இருந்து வந்த பேப்பர்ஸ்களை மாலா அவள் முன்பு வைக்க… அதை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் அத்து.
சிறிது நேரத்தில் படித்து முடித்தவள் ரேகா புறம் திரும்பி "என்ன இது? பிராஜக்ட் ஆரம்பிக்க இன்னும் ஒருவாரம் இருக்கும் போது இவங்க என்ன ஒரு வாரத்துக்குள்ள இதுக்காக நாம ஆறு மாசத்துக்கு ரெடி பண்ண மாடல்ஸ்ஸ அனுப்ப சொல்லுறாங்க.இதைப் பத்தி டீலிங்ல பேசவே இல்லையே!"
உடனே ரேகா "ஆமாம் அத்து அதே கேள்வி தான் எனக்கும் தோணுச்சு.அதனால நேற்று மெயில் வரவும் நான் உடனே போன் போட்டு பேசினேன்"
"அதுக்கு அவங்க என்னச் சொன்னாங்க?"
"இந்த டீலிங்க்கு சைன் போட்டவங்க தான் பேசனும். அவங்ககிட்ட நாங்க பேசுக்கிறோம்னு சொல்லிட்டாங்க அத்து"
அவள் சொன்னப் பதிலைக் கேட்டு இவள் அதிர்ந்தவள். "நீ என்ன சொன்னே? "
"நான் தான் இந்த கம்பெனியோட ஓனர்.அதனால எனக்கு காரணத்தைச் சொல்லுங்கன்னு கேட்டேன், அதுக்கு அவங்க உங்க பாட்னர் தானே அதனால எல்லா ரைட்ஸீம் அவங்களுக்கும் இருக்கு அவங்களை பேசச் சொல்லுங்கன்னு அந்த டி.ஆர் கம்பெனியோட பி.ஏ சொன்னாங்க.நான் பர்ஸ்னல் விஷயமா வெளியே போய் இருக்காங்க நாளைக்கு கால் பண்ண சொல்லுறேன்னு சொல்லிட்டேன்"என்றாள்.
"அப்படியா! என்னவோ எனக்கு இடிக்குது ரேகா.நான் எதுக்கும் ஒருதடவை அந்த அக்ரீமெண்ட் ஒரு தடவை க்ளீயரா ரீட் பண்ணுறேன்" என்று அந்த பைலை எடுத்து அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் உற்றுநோக்கி படிக்க ஆரம்பித்தாள்.
அதில் ஒரு கண்டிஷனில் இரண்டு கம்பெனியின் நலனுக்காக தேவைப்படின் எதாவது அவசர முடிவைகளை எடுக்க இரண்டு கம்பெனியில் எந்த கம்பெனியின் நிர்வாகம் முதலில் ஒரு திட்டத்தை கொடுக்கிறதோ அதை
மற்றொரு கம்பெனியின் நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று போட்டு இருக்க… அதைப் படித்து அந்த வார்த்தையை கோடிட்டவள் ரேகாவிடம் அதைக் காட்டினாள்.
அதைப் பார்த்த ரேகா ஆச்சரியத்தோடு அத்துவிடம் "அத்து என்ன இந்த கம்பெனி நம்ம தலையிலேயே மசாலா அரைக்க வைச்சுட்டாங்க.இவங்களே ஒரு காண்ட்ராக்ட் போட்டு அதை அவங்களுக்கே சாதகமா மாத்திட்டாங்க,இப்போ என்னச் செய்ய?"
"நாம ஒன்னும் பண்ண வேண்டாம் ரேகா.அவங்க கொண்டு வந்த இந்த அக்ரீமெண்ட்லா நமக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலேயே அவங்க நமக்கு பெய்மெண்ட் கொடுத்தாகனும் அதனால நமக்கும் நம்ம எம்ப்ளாயிஸ்க்கும் லாபம் தானே அதனால இந்த வொர்க்க்கு நான் ஓகேன்னு சொல்லப் போறேன்" என்றாள்.
அவளின் பதிலைக் கேட்டதும் ரேகாவிற்கு டி.ஆர் கம்பெனியின் பி.ஏ சொன்னது தான் நினைவிற்கு வந்தது. அந்தப் பெண் ரேகாவிடம் "மேம் நீங்க தான் இந்த வொர்க்கை இப்போ முடிக்க முடியாதுன்னு சொல்லுறீங்க.பட் எங்க பாஸ் இந்த அக்ரீமெண்ட் ஓகே பண்ண மேடம் இந்த புது வொர்க்கை அசெப்ட் பண்ணுவாங்கன்னு சொல்லுறாங்க அதனால நீங்க பேசிட்டு போன் பண்ணுங்க" என்று இவளின் பதிலை எதிர்ப்பாராமல் வைத்து விட்டாள்.
'அந்த டி.ஆர் கம்பெனியின் எம்.டி ஆல் எப்படி அத்துவின் மனதை முன்னரே புரிந்துக் கொள்ள முடிந்தது? 'என்று எண்ணி வியந்தாள். 'அந்தளவுக்கு அவனோட கணிப்பு சரியா இருக்குமா? ஆனால் அத்துவின் முடிவை அவ்வளவு எளிதாக கணிக்க முடியுமா?'என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டாள்.
அவளது யோசனையைக் கவனித்த அத்து "ரேகா என்னாச்சு நான் சொன்ன விஷயம் எதாவது தப்பாக இருந்தால் உடனே எனக்கு சொல்லிடு"
"அப்படி எல்லாம் எதுவும் கிடையாது.நீ எப்பவும் நம்ம எம்ப்ளாயிஸ்க்கு நல்லதைத் தான் நினைப்பேன், அதனால நீ சொன்ன மாதிரியே செய்யலாம்" என்றாள்.
அத்து வேற எந்த விஷயங்களுக்கும் இடம் தராமல் வேலையை தொடர ரேகா அத்துவிடம் "அத்து டி.ஆர் கம்பெனிக்கு போன் போட்டு நீங்க சொன்ன மாதிரி டீலிங்க்கு ஒத்துக்கிறோம்னு ஒரு போன் போட்டு இன்பார்ம் பண்ணிடு" என்றாள்.
அவளும் சரியென்று ஒத்துக் கொண்டு போன் செய்யும் நேரம் கம்பெனியின் பி.ஏ போன் செய்தாள்.அவளது நம்பரைக் கண்டதும் புன்னகை முகமாய் எடுத்து "ஹலோ"என்று சொல்ல….
"மேம் உங்க முடிவு என்னன்னு பாஸ் கேட்கச் சொன்னாங்க"
"எங்களுக்கு இந்த டீலிங் முடிக்கிறதுல விருப்பம் தான் நீங்க சொன்னமாதிரியே ஒரு வாரத்துக்குள்ளே டிசைன்ஸ் ரெடி பண்ணிட்டு நானே வந்து கொடுக்கிறேன்"என்றாள்.
பி.ஏவும் "ஒகே மேம்" என்று போனை வைத்து விட்டாள்.
அத்து எந்தவித தேவையில்லாத பேச்சுகளையும் பேசாமல் தன் வேலையில் மும்மூரமாக இருந்தாள்.
அதனால் அவள் வீட்டிற்கு தாமதமாகச் சென்றாள்.இங்கே மானவியும் காலேஜ்லிருந்து தாமதமாக வீடு திரும்பினாள்.அவளிடம் சாந்தனா "ஏன் லேட்டா வர்ற?" என்று கேட்டாள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.பாட்டி கேட்டும் சரியாக பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.அவளுடைய அமைதி இருவருக்கும் ஏனோ ஒருவித பயத்தை தந்தது.
மானவியைப் பற்றி சாந்தனா அத்துவிடம் சொல்ல வரும்பொழுதெல்லாம் அத்து போனில் பேசிக் கொண்டும் கம்ப்யூட்டரை பார்த்துக் கொண்டும் இருந்தாள்.
வீட்டில் இரவு நேரங்களில் தாமதமாக தூங்குவதும் காலையில் முதல் ஆளாக எழுந்து பழைய படி வேலையிலேயே மூழ்கி இருப்பாள்.அத்து தன் வேலையை இன்னொரு அறையில் முடித்து வந்து மானவியுடன் படுக்க வரும் பொழுது அவள் தூங்கிப் போவாள்.அதனால் அத்துவிற்கு மானவியைப் பற்றி எதுவும் தெரியவில்லை.அவளது வேலைப் பளுவினால் சாந்தனா மானவியைப் பற்றி பேசவில்லை.இப்படியே நான்கைந்து நாட்கள் சென்றுக் கொண்டிருக்கையில் ஒருநாள் இரவில் மானவி வீட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே வந்தவள் நான்கைந்து நாட்களாக வீட்டில் உள்ளவர்களிடம் சரியாக பேசாமல் இருந்ததினால் வந்தமர்ந்தவள் மானவியை அழைத்தாள்.
"மானவி மானவி அம்மா மானவியை எங்கே சத்தமே காணோம்?"
அங்கே வந்த சாந்தனா அத்துவிடம் "அத்து மானவி இன்னும் வீட்டுக்கு வரலை"
"அம்மா என்னச் சொல்லுறீங்க? எதுக்காக இவ லேட் ஆகுதுன்னு சொன்னாளா? "
"ஒன்னும் சொல்லலை. இப்படித் தான் நாலைந்து நாளா லேட்டா வீட்டுக்கு வர்றாள்"
"என்னம்மா சொல்லுறீங்க? இத்தனை நாளா இதை ஏன் என்கிட்ட சொல்லலை? "
அதற்கு பாட்டி "நீ தான் சரியான சாப்பாடு தூக்கம் இல்லாமல் வேலைப் பார்த்துட்டு இருந்தே. இதுல இந்த விஷயத்தையும் சொல்லி உன்னை டென்ஷன் ஆக்க விரும்பலை அதான் சொல்லலை"
"என்ன பாட்டி இது? இதெல்லாம் ஒரு பதிலா? வேலையை விட எனக்கு நீங்க தான் முக்கியம். இன்னைக்கு மானவி வரட்டும் என்ன விஷயம்னு விசாரிச்சுட்டு தான் என்னோட வேலையை பார்க்க ஆரம்பிப்பேன்" என்று மானவியின் போனுக்கு கால் செய்தாள்.
அவளுடைய போன் ரிங் அடித்ததே தவிர அவள் எடுத்தபாடில்லை. அரை மணிநேர காத்திருப்பிற்குப் பின் மானவி வந்தாள்.
உள்ளே வந்தவள் ஹாலில் மூவரும் ஹாலிலேயே நிற்பதைக் கண்டு பயந்தவள் தயங்கியபடியே உள்ளே வந்தாள்.
வந்தவள் நேராக தனது அறையை நோக்கி நடக்க…. அத்து மானவியைப் பார்த்து "மானவி என்ன இது? புதுசா வீட்டிற்கு லேட்டா வர்ற பழக்கம்? ஏன் அக்கா கண்டுக்க மாட்டான்னு ஒரு நினைப்பா?"
"இ...ல்லை"
"இல்லையா? அப்போ ஏன் அம்மாவும் பாட்டியும் காரணத்தைக் கேட்கும் பொழுது பதில் சொல்லாமல் போறியாமே!"
"அ...க்கா.. அது வந்து"
"என்ன ஒரு பதிலும் வரமாட்டேங்குது? எப்போ நீ அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பிச்ச? நான் என்னோட தங்கச்சியை அப்படி வளர்க்கலைன்னு நினைக்கிறேன் சரிதானே"
அவள் அமைதியாக இருந்தாள்.
"மானவி நாம எல்லோரும் ஒரே குடும்பம். ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரையாக இருக்கனுமே தவிர ஒருத்தர் இன்னொருத்தரை தவிர்க்க கூடாது, இத்தனை வருஷம் இல்லாத புது பழக்கம் இப்போ எதுக்கு? இப்போ அம்மா கேட்பாங்க ஒழுங்கா பதில் சொல்லு" என்றாள் கோப முகமாக…
"அம்மா அவகிட்ட நீங்க என்ன கே கேட்கனுமோ கேளுங்க"என்றாள்.
சாந்தனா கண்ணீரை உள்ளே தேக்கி வைத்தபடி "மானவி ஏன் லேட்டா வீட்டுக்கு வர்றே? "
மானவி சாந்தனா பக்கம் நிமிர்ந்து "அம்மா காலேஜ்ல எக்ஸாம் அதனால ப்ரெண்ட்ஸ்ஸோட குரூப் ஸ்டடி பண்ணிட்டு வரேன்.அதான் லேட்டாயிடுச்சு" என்றாள்.
சாந்தனா "சரி" என்றாள்.
ஆனால் அத்துவிற்கு அவள் பொய் சொல்கிறாள் என்பது புரிந்தது.அதனால் மானவியிடம் "உன்னோட குரூப் ஸ்டடி பண்ண மத்த பொண்ணுங்க நம்பரை கொடு.நான் அவங்ககிட்டேயும் ஒருதடவை பேசிக்கிறேன்"
"அக்கா உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? "
"இருக்கு அதனாலத் தான் உன் பிரெண்டோட நம்பரை உன்கிட்டே கேட்கிறேன்.இல்லை உனக்கே தெரியாம நான் கால் பண்ணி பேசி இருப்பேன்" என்றதும் மானவி நம்பரைக் கொடுத்தாள்.
அவள் கொடுத்த நம்பருக்கு போன் போட்டு பேச அந்தப் பெண்ணும் குரூப் ஸ்டடி என்றே சொல்ல இவளும் சரியென்று போனை வைத்து விட்டாள்.
இருந்தாலும் மனதிலோ ஏதோ ஒரு நெருடல் இருந்தது.மானவி அத்துவைப் பார்க்க…" சரி போ" என்றாள்.
இரவு எல்லோரும் ஒன்றாக அமைதியாக சாப்பிட்டனர்.யாரும் எதுவும் பேசவில்லை.படுக்கையில் மானவியிடம் அத்து "மானவி என்னாச்சு? ஏன் முகமே சரியில்லை எதாவது பிரச்சினையா? "
"ஒன்னும் இல்லை அக்கா எக்ஸாம் நெருங்குதுல்ல அதான் ஒரே பதற்றமா இருக்கு.எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு தூங்கப் போறேன்" என்று அவளுடைய பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் கண்ணை மூடித் தூங்கி விட்டாள்.
அவளுடைய செய்கையைப் பார்த்து அத்துவிற்கு வித்தியாசமாக இருந்தது.மானவியிடம் இவ்வளவு அமைதி இருப்பதற்கு காரணம் எஎன்னவென்று யோசித்தும் அவளுக்கு தெரியவில்லை.தூக்கம் வராமல் போகவே வேலையைத் தொடர்ந்தாள்.
மனதினுள் "இரண்டு நாள்ல இந்த ப்ராஜக்டை முடிச்சு வைச்சுட்டு மானவிக்கு என்ன பிரச்சினைன்னு உட்கார்ந்து பேசி கண்டுபிடிக்கனும்" என்று எண்ணிக் கொண்டாள்.
மறுநாள்… எப்போதும் காலை நேரம் செல்ல… மானவியை காலேஜ்க்கு அத்துவே ஆட்டோவில் தன்னோடு அழைத்துச் சென்று அவளை வாசலில் இறக்கி விட்டு தன் ஆபிஸிற்குச் சென்றாள்.
மாலை நேரத்தில் ரேகாவும் மாலாவும் பிரிண்டிங் கம்பெனிக்கு சென்று இருந்தார்கள்.அத்து மட்டும் ஆபிஸில் வேலையில் மும்மூரமாக இருந்தாள்.அப்பொழுது அவளுடைய போனுக்கு புது எண்ணிலிருந்து போன் வந்தது.போனை எடுத்துப் பார்த்தவள் புது நம்பராக இருக்க அதை அவள் எடுக்கவில்லை.திரும்பவும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர யாரென்று பார்க்க அந்த அழைப்பு எடுத்து "ஹலோ யாருங்க"
"மானவி இங்கே ஒரு பிரச்சினைல வந்து மாட்டிட்டு இருக்காள்,உடனே வந்து அவளை காப்பாத்துங்க"
போனின் மறுபக்கம் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் பாதி புரிந்தும் புரியாமலும் தவித்தவள் "ஹலோ யாரு? நீங்க யாரு பேசுறீங்க?"
"நான் யாருன்னு தெரிவது இருக்கட்டும் நீங்க முதல்ல வந்து மானவியை காப்பாத்துங்க அட்ரஸ் உங்க நம்பருக்கு அனுப்பி இருக்கேன்.சீக்கிரம் வாங்க ரொம்ப அர்ஜண்ட்" என்று போனை வைத்து விட்டாள்.
கேட்ட வார்த்தைகளே மனதிலே ஓட ஒரு நிமிடம் அசையாமல் உட்கார்ந்தபடியே மனதினுள்
போனில் பேசியது ஒரு பெண்ணின் குரல் தான். ஆனால் அவள் பேசியதை இவளால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாதே! அவள் சொன்னது அவள் தங்கையின் பெயரை சரியாகத் தானே சொல்லி இருக்கிறாள் மானவியை நான் தானே காலேஜ்ஜில் இறக்கி விட்டேன்.அதுக்குள்ளே அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று மனதில் பல எண்ணங்கள் தோன்ற முதலில் மானவியின் நம்பருக்கு அழைத்தாள்.
அது 'தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வந்தது'.உடனே நேற்று போன் செய்த அவளுடன் படிக்கும் பெண்ணிற்கு போன் செய்ய அவளுடைய நம்பருக்கும் இதே பதில் வந்தது.அடுத்து யோசிக்க ஒருதடவை மானவியின் தோழி இன்னொருத்தியின் நம்பரை வாங்கியது நினைவுக்கு வர அந்த பெண்ணிற்கு அழைத்தாள்.அவளை அழைத்ததும் அந்தப் பெண் போனை எடுத்தாள்.
"ஹலோ நான் மானவி அக்கா பேசுறேன்"
"ம்ம்… சொல்லுங்க அக்கா"
அவளோ பதற்றத்தோடு "மானவி"என்று பெயரை மட்டும் சொல்லி நிறுத்த…
"அக்கா இன்னைக்கு ஏன் மானவி காலேஜ்க்கு வரலை உடம்பு சரியில்லையா? அதை சொல்லத் தான் போன் பண்ணிங்களா?"
அந்தப் பெண் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தவள் அதை வெளிக் காட்டாமல் "ஆமாம் அதை சொல்லத் தான் போன் போட்டேன். மானவியை அப்புறமா பேசச் சொல்லுறேன்" என்று போனை வைத்து விட்டாள்.
அடுத்து அவளுக்கு வந்த மெஸேஜ்ஜை எடுத்துப் பார்த்தாள்.அதில் அரைமணி நேரத் தொலைவில் உள்ள இடத்தைக் காட்ட... உடனே அவள் எதுவும் யோசிக்கவில்லை அதில் இருந்த விலாசத்தை நோக்கி வேகமாக கிளம்பினாள்.
(தொடரும்)