என்னைத் தேடும் நான்.
அத்தியாயம்—1
கருக்கல் அழியாத இனிய வைகறை பொழுது. மணி நான்கை தாண்டியிருந்தது. சசி கண்விழித்து விட்டாள். கணவனை எழுப்புகிறாள்.
“ஸ்ரீ எந்திரிங்க...” அவன் முனங்குகிறான்.
“அதுக்குள்ளேயா?.....”
“நான் குளிச்சிட்டு உங்களை மறுபடியும் எழுப்றேன். அதுவரை தான் உங்களுக்கு டைம். ...”
“அப்ப ரொம்ப நேரம் குளி...” என்றுவிட்டு போர்வையை இழுத்து மூடிக் கொள்கிறான்.
“விளையாடாதீங்க...நமக்கு இன்னிக்கு தலைப் பொங்கல். உங்கம்மா கீழே பொங்கப் பானைகளை ரெடி பண்ணிட்டு இருக்காங்க...”
அவன் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்கிறான். சசி அவசர அவசரமாக ஜில்லென்ற நீரில் குளித்துவிட்டு சந்தன சோப் வாசனையுடன் வெளியில் வந்தாள். தலையில் சுற்றிய துண்டுடன், அவனை ஒரு ஸ்கேலால் தட்டி எழுப்புகிறாள். அவன் விசுகென்று எழுந்து உட்காருகிறான்.
“என்ன சசி....நான் என்ன தீண்ட தகாதவனா?” பொய் கோபம் கொள்கிறான்.
“ஆமா. குளிச்சிட்டு வாங்க. அதுவரை தீட்டு தான்.”
“பட்டிக்காடு....தள்ளி நில்லு...நான் குளிக்கப் போறேன்.”
அவன் குளிக்கச் சென்று விட, சசி ஹேர் ட்ரியரால் தலையை உலர்த்திவிட்டு, புதுப் புடவையை அணிந்து கொள்கிறாள். அழகான முகத்தில் குங்குமம் இட்டுக் கொள்கிறாள். வகிட்டிலும் வைத்துக் கொள்கிறாள். ஒரு சின்ன முத்துமாலையை அணிந்து...முத்துத் தோடுகளும், வளைவிகளும் போட்டுக் கொண்டாள். அவள் கண்ணாடியில் தன்னைத் தானே ரசித்துக் கொண்டிருக்கும் போது பார்கவியின் குரல் நீண்டு ஒலித்தது.
“சசி....இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கே? நேரமாவுது. சூரியோதயம் வரும்போது பொங்கல் பானைகள் பொங்க விடனும். வாசலில் முதலில் கோலம் போட்டிட்டு வா...” அவசரப்படுத்தினாள்.
மேலிடத்து ஆர்டர் வந்துவிட்டது. “வரேன் அத்த...” அவள் அறையை விட்டு அவசரமாக கிளம்பும் போது ஸ்ரீகாந்த் குளித்துவிட்டு வந்துவிட்டான்.
“இப்ப தீட்டு இல்லே தானே?” என்று அவளை வளைத்துப் பிடித்தான்.
“அய்யோ விடுங்க. உங்கம்மா சைரன் ஊதிட்டாங்க. இப்ப போலே...அப்புறம் வீடியோ கால் போட்டுடுவாங்க. அப்புறம் இந்தக் கோலத்தைப் பார்த்தா...வாசலில் என்னை கோலம் போட விடமாட்டங்க...” அவள் படக்கென்று அவன் பிடியை தளர்த்திக் கொண்டு ஓட்டமெடுத்தாள். “இரு இரு உன்னை கவனிச்சுக்கறேன்...” என்ற அவன் குரலை, கேட்டும் கேளாமல் அவசரமாக வாசலுக்கு சென்று கோலம் போட ஆரம்பித்தாள்.
“வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்...” என்று பாடியபடி அவள் கோலம் போட.....இன்னும் மறையாத நட்சத்திரங்கள் உற்று கவனித்தன. தென்றல் வேறு சுகமாக மல்லிப் புஷ்பங்களின் மனதை இழுத்துக் கொண்டு வந்து அவள் நாசிக்கு இதமளித்தது.
“சசி...நம் வீட்டுக்கு மட்டும் கோலம் போடறயா? இல்லே இந்தத் தெருவாசிகள் வீட்டுக்கெல்லாம் கோலம் போடறயா?” என்ற அதட்டல் வந்ததும்.....முடிஞ்சிடுச்சு அத்த என்று ராகம் பாடினாள்.
வானமே காத்திரு...மேகமே காத்திரு...நட்சத்திரங்களே வெயிட். உங்க சசி சாவகாசமா நாளை உங்களை ரசிப்பாள்...என்று பேசிவிட்டு உள்ளே ஓடினாள்.
தலைப் பொங்கல் என்பது விசேஷம் தான். சசியின் அப்பா சுகுமாரும், அம்மா அருந்ததியும் அவளுக்கும் மாப்பிள்ளை ஸ்ரீகாந்துக்கும் பொங்கல் சீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். கரும்பும் அரிசியும், கிழங்கும்...என்று அந்தக் காலத்து முறைப்படி வந்து கொடுத்தார்கள். காரணம் அவர்கள் கிராமத்து மனிதர்கள். வயல் வரப்பு, சாகுபடி என்ற வாழ்வியலில் ஊறியவர்கள். தட்டில் வெற்றிலை பாக்கு, பூ பழம் தேங்காய் மஞ்சளோடு பத்தாயிரம் பணம் வைத்துக் கொடுத்தார்கள்.
“புள்ளைகள் தங்களுக்கு பிடிச்சமான உடையை வாங்கிக்கட்டும். கிராமத்திலே நவீன மோஸ்தர் உடை எல்லாம் கிடையாது...அதான் பணமா வச்சிட்டோம்.” என்றார் சுகுமார்.
“அதுக்கென்ன சம்மந்தி?....அவங்களே போய் வாங்கிக்கட்டும். ரொம்ப சந்தோசம். நீங்க இருந்து சாப்பிட்டிட்டு போணும்...”
சசியின் மாமியார் பார்கவியும், மாமனார் அனுமந்தும் உபசரித்து மகிழ்ந்தார்கள். இருவருக்கும் சசி செல்லப் பெண் ஆகியிருந்தாள்.
“உங்க பொன்னைப் பத்தி கவலைப்படாதீங்க. உங்க வீட்டில் இருந்தது மாதிரியே அவ இங்கேயும் சுதந்திரமா இருக்கலாம்...” என்றாள் பார்கவி.
சசிக்கு மனம் நிறைந்து போயிற்று.
“கடவுளுக்கு என்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு அதான் இப்படிப்பட்ட நல்ல இடத்தில என்னை கொண்டு வந்து சேர்த்திருக்கார்டீ...” என்று சசி தன் தோழி விஜியிடம் சொல்லி மகிழ்ந்தாள்.
தலைப் பொங்கலுக்கு அவளும் ஸ்ரீகாந்தும் பிரபல கடையில் உடைகள் வாங்கினார்கள்.
“ஸ்ரீ...அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உடை எடுக்கணும்...” என்றாள் சசி.
“உங்கம்மா அப்பாவுக்கு எடுக்கப் போறியா? அவங்களுக்கு பிடிச்ச கலர் என்னன்னு உனக்குத் தெரியுமா.? அப்ப எடு.” என்றான் அவன்.
“நான் சொன்னது எங்கப்பா அம்மாவுக்கு இல்லே. உங்க அப்பா அம்மாவுக்கு. அவங்க எனக்கும் அம்மா தானே.?” சசி சொல்லி முடிக்கவில்லை.....
“அட....நான் ரொம்ப கொடுத்து வச்சவன். என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் திணறிக்கிட்டு இருக்காங்க....மனைவிக்கும் அம்மாவுக்கும் பஞ்சாயத்து பண்ணியே நொந்து போயிருக்காங்க. நல்ல வேள நா பொளச்சேன். உங்களுக்குள்ளே ராசியா இருந்தா எனக்குத் தான் குஷி.” என்றான்.
பார்கவிக்கு என்ன கலர் பிடிக்கும் என்று ஏற்கனவே நாசூக்காக கேட்டு தெரிந்து வைத்திருந்தாள் சசி. நல்ல மெரூன் கலர் பிடிக்கும்ன்னு சொல்லியிருந்தாள் பார்கவி. அது போலவே எடுத்துக் கொண்டு...மாமனாருக்கும் சரிகை வேட்டி எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார்கள். பார்கவியிடம் உடையை காண்பித்தான் ஸ்ரீ.
“அம்மா...இது உனக்கு.”
“என்னடா சொல்றே? நீயா வாங்கினே? பிரமாதமா இருக்கே.? என்னங்க எம் பிள்ளைக்கு என் மேல் எவ்வளவு பாசம் பாருங்க! பொண்டாட்டி வந்தும் கூட, எனக்கும் புடவை வாங்கி வந்திருக்கான்...” பூரித்தாள் பார்கவி.
“அவன் எங்க வாங்கியிருப்பான்? சசி வாங்கச் சொல்லியிருப்பா. இவனுக்கு ஏது அந்த புத்தி எல்லாம்.” என்றார் அனுமந்து.
“என்னடா அப்படியா?”
தலையை சொரிந்தான் ஸ்ரீ. புரிந்துவிட்டது.
“அப்படியா சங்கதி.? அப்ப சரி. இனி சசி தான் எனக்கு மக. அவளுக்குத் தான் இந்த வீட்டில் முதல் ப்ரிஃபரன்ஸ். இப்படிப்பட்ட மருமகளுக்குத் தான் நான் காத்திட்டு இருந்தேன். சசி...இந்த வீட்டில் இதுவரை உன் மாமனார் தான் ஆல் இன் ஆல். இனிமே நீ வந்தாச்சா...நாம ரெண்டு பேரும் ஒரே கட்சி. இவங்க எதிர் கட்சி. பின்னிடலாம் என்ன.?”
“எதிர் கட்சி ஒ.கே. எதிரி கட்சி இல்லையே?. அது போதும்.” இது அனுமந்து.
“அய்யோ...அரசியல் வாடை வீசுது. கொஞ்சம் குடும்ப பாசம் உள்ள மனுஷங்களா பேசுங்க...” என்றாள் சசி.
அந்த வீட்டுக்கு சசி வந்து ஆறு மாசம் ஆகிறது. பார்கவியும் அனுமந்தும் அவளிடம் ஒரு தாயும் தந்தையும் போலவே நடந்து கொண்டார்கள்.
“நீ வந்தாலும் வந்தே...என் அம்மா அப்பா என்னையே மறந்திட்டாங்க. என் வாய்ஸ் எடுபடவே இல்ல. உனக்கே சப்போர்ட் பண்றாங்க. நடத்து நடத்து அம்மணி. நான் இனி உன்னிடம் கை கட்டி வாய் பொத்தி இருக்கணும் போல...” என்றான் ஸ்ரீ.
“ஏதாவது தத்து பித்துன்னு உளறாதீங்க. இங்க அம்மா தான் எல்லாம். எனக்கு ஒ.கே. உங்களுக்குத் தான் ஒ.கே இல்ல போலிருக்கே...” என்று சொல்லியிருந்தாள். என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்...என்று அவள் வாய் அடிக்கடி முணுமுணுக்கும். இப்படித்தான் அவள் வாழ்க்கை இந்த ஆறு மாதமாக இனிமையாக போய்க் கொண்டிருகிறது. இன்று அவள் வாழ்க்கைக்கும் மகுடம் கிடச்சா மாதிரி பொங்கல் என்ற நன்னாள்.
கிழக்கில் சூரியோதயம் வானை பிரித்துக் கொண்டு வந்த அதே வேளையில் இங்க பார்கவி வைத்த மூன்று பானைகளும் பொங்கியது. பார்கவி குலைவை இட்டாள். சூரிய நமஸ்காரம் பண்ணிவிட்டு....வீட்டில் உள்ள குதுவிளைகையும் ஏற்றி வழிபட்டார்கள். மகனுக்கும் மகளுக்கும் திருநீறு பூசிவிட்டாள் பார்கவி. சசிக்கு பூசும் போது “அடுத்த வருஷம் நம்மோடு பொங்கல் கொண்டாட என் பேரனோ பேத்தியோ வரணும்....” என்று ஆசீர்வதித்தாள். சசிக்கு வெட்கமாகிவிட்டது. ஓரக் கண்ணால் கணவனைப் பார்த்தாள். அவனின் குறும்பு சிரிப்பு மேலும் அவள் கன்னத்தை செம்மை ஆக்கிவிட்டது.
அன்றிரவு ஸ்ரீ அவளை சீண்டினான்.
“எனக்கு மகள் தான் வேண்டும்...உன்னைப் போல...” என்றான்.
“நோ...எனக்கு மகன் தான் வேண்டும். உம் முகம் போல, எம் மடிமேலே முத்து முத்துப் பாப்பா.....” அவள் ராகம் பாடினாள்.
“எதற்கு வம்பு.? ரெண்டும் பிறக்கட்டும். டிவின்ஸ். ஜாலியா இருக்கும்.”
அவள் அவனை செல்லமாக அடிக்க வந்தாள்...
“உங்களுக்கென்ன? சொல்லிட்டேங்க. ரெண்டு குழந்தைகளை ஒண்ணா பெத்துக்கறது, பார்த்துக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? ஒன்னு போதும். உங்க மாதிரி கியூட்டா....ஸ்வீட்டா குலோப்ஜான் மாதிரி...” அவள்
சொல்லிவிட்டு அவன் மார்பில் சாயிந்தாள். அவள் மனம் திகட்ட திகட்ட அன்று பேசினார்கள். என்ன பேர் வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்? ஒரு நோட்டு முழுக்க சசி ஆண் குழந்தைகள் பேராக எழுதினாள். அவன் பெண் குழந்தைகள் பேராக எழுதினான்.
விஜியிடம் மறுநாள் அவள் அதை பகிர்ந்து கொண்டாள்.
“ஏண்டி கல்யாணமாகி ஆறு மாசம் தானே ஆகுது. என்ன அவசரம்? பேசாம மூணு வருஷம் கழிச்சு பெத்துக்கோ. நீ வேலைக்கு வேற போறே. புள்ள வந்தா நை நைன்னு அழுதிட்டு இருக்கும். அப்புறம் உனக்கு மூச்சு விடக் கூட நேரமிருக்காது. ஒரு கொடைக்கானல் ஊட்டி இல்லே வெளிநாட்டுக்குன்னு ஜாலியா போயிக்கிட்டு...வாழ்கையை என்ஜாய் பண்ணுவியா? அம்பாளை புள்ளை பேரெல்லாம் எழுதிக்கிட்டு...லூஸ் மாதிரி உன்னை லூஸ் பண்ணப் பார்க்கிறயே....” என்றாள் விஜி.
“ஏய்...ரொம்ப சுயநலக்காரிடீ நீ. நீ மட்டும் கல்யாணமாகி பத்தாம் மாசம் அழகான ஆண் குழந்தையை பெத்துக்கலாம்...நான் மட்டும் தள்ளிப் போடணுமா?” என்று சூடாக கேட்டாள் சசி.
சசியும் விஜியும் பள்ளியிலும் தோழிகள், கல்லூரியிலும் தோழிகள். வேலை பார்க்கும் அலுவலகத்திலும் தோழிகள்.
“யாம் பெற்ற துன்பம் இவ்வையகத்தில் யாரும் பெற வேண்டாமுன்னு நல்ல எண்ணத்திலே சொல்றேன்டீ. என் மாமியாருக்கு பேபி சிட்டிங் புடிக்கலை. என் பிள்ளைக்கு பாட்டியை பிடிக்கலை. ‘நீ உன் பிள்ளையையும் ஆபீசுக்கு கூட்டிப் போன்னு..’ அந்த கிரேட் கேடி, ஸாரி லேடி சொல்லுது. என்ன செய்யச் சொல்றே? யாழ் இனிது குழல் இனிது தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்ன்னு சொல்வாங்க. காத்து கிழிய கத்திட்டே இருக்கு. என்னமோ போ என் அனுபவம் அப்படி....” நொந்து முடித்தாள் விஜி.
“அப்ப...வேலையை விட்டுடேன் விஜி. பிள்ளையை விடவா வேலை முக்கியம்.?” என்றாள் சசி.
“என் அருமை புருஷன் அதுக்கும் சம்மதிக்க மாட்டேங்கறார்...” அவள் லேசான விசும்பல் கேட்டது.
“நான் அவர் கிட்டே பேசறேன்...” என்றாள் சசி.
“நிஜமாவா சொல்றே? உனக்கு புண்ணியமா போகட்டும். வந்து கொஞ்சம் அட்வைஸ் பண்ணு. அவர் தான் நம் கல்லூரியில் லெக்சரர் ஆச்சே. உனக்கும் எனக்கும் வகுப்பு எடுத்தார். இப்ப அவருக்கு வகுப்பு எடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. தேங்க்ஸ் சசி...”
“நோ வொர்ரீஸ். நான் அவர் கிட்டே பேசறேன். டன்.” சசி வாக்கு கொடுத்தாள். இதை கணவனிடம் சொன்னாள். அவன் முகம் இறுகியது.
தேடல் தொடரும்.

Last edited: