அத்தியாயம்—10
காலை நேர சுறுசுறுப்புடன் சசி அடுக்களையில் டிபன் தயாரித்துக் கொண்டிருந்தாள். கூடவே சமையலும் ஆக்கிக் கொண்டிருந்தது. அனந்து பேப்பரில் மூழ்கி இருக்க, ஸ்ரீ சசி சசி என்று கத்தினான். குளித்து விட்டு வந்து கொண்டிருந்த பார்கவி “என்னடா வேணும் உனக்கு? சசி வேலையா இருக்கா? நீ முதல்லே குளிக்கப் போ.”
“அம்மா......அவ இன்னிக்கு வேலைக்கு போக வேண்டாம்.” என்றான் கடுமையாக. பார்கவிக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை.
“ஸ்ரீ.....எதுக்காக இப்ப அவளை வேலைக்கு போக வேண்டாமின்னு சொல்றே? நினைச்ச மாதிரி லீவ் போட முடியாதுன்னு உனக்குத் தெரியாதா? வம்பை ஆரம்பிக்காதே.” என்றபடி பார்கவி குத்து விளக்கை ஏற்ற சென்றாள். ஸ்ரீக்கு தெரியும், அம்மா பூஜை அறையுள் சென்றால், வெளியே வர அரை மணி நேரம் ஆகும். எனவே அவன் நேராக அடுக்களைக்குள் நுழைந்தான். நெற்றியில் முத்து முத்தாக வேர்வை பூத்திருக்க சசி மும்முரமாக தாளித்துக் கொண்டிருந்தாள். கடுகு பொரிவது போல் ஸ்ரீ பொரிந்தான்.
“சசி......இன்று லீவ் போட்டுவிடு.”
தாளிதம் முடிய சசி அடுப்பை அணைத்தாள்.
“என்ன உங்க பிரச்சனை.? எதுக்கு லீவு போடணும்? ஏதாவது முக்கியமான காரணம் இல்லாமல் நான் அப்படி செய்ய முடியாது.”
“தெரியும் எனக்கு......நீ இந்த பதிலைத் தான் சொல்லுவேன்னு. சசி இன்று அலுவலகம் முடிந்ததும் மாலை ஒரு பார்ட்டி இருக்கு தானே?”
“ஆமா.....ராபர்ட்க்கு இன்று பிறந்த நாள். அவரை வாழ்த்தி ஒரு கெட் டுகெதர் இருக்கு. ஸ்டாஃப் எல்லோரும் இதில் கலந்து கொள்ள இருக்கோம். ஸ்ரீ கொஞ்சம் குளிச்சிட்டு வாங்க. உங்களுக்கு டிபன் ரெடி.”
“உன் டிபன் யாருக்கு வேணும்? நீ அந்த பார்ட்டிக்கு போகக் கூடாது. நான் இது பத்தி கேள்விப்பட்டு தான் நீ போக வேண்டாமுன்னு சொல்றேன்.”
“ஓ.....ஒற்றர் எல்லாம் வச்சிருக்கீங்க போலிருக்கு. கிரிமினலை ஃபாலோ பண்ணற மாதிரி இருக்கு.” சசி சொல்லிவிட்டு உதடு சுழிய சிரித்தாள்.
“இந்த பல்லைக் காட்ற வேலையெல்லாம் வேண்டாம். நீ அந்த பார்ட்டியில் கலந்து கொள்ளக் கூடாது. அவ்வளவு தான்.”
இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அனந்து பேப்பரை மடக்கிவிட்டு “ஸ்ரீ.....” என்று கூப்பிட்டார். எரிச்சலுடன் ஹாலுக்கு வந்த ஸ்ரீ என்ன என்பது போல் அப்பாவை முறைத்தான்.
“ஸ்ரீ..... தயவுசெய்து சீக்கிரம் அலுவலகம் கிளம்பு. மனைவியை அங்க போகாதே இங்க போகாதேன்னு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு? அவளுக்கு என்ன செய்யணும்னு தெரியும். நம்ம குடும்பத்துக்கு தலை குனிவு வரும்படி நடக்க மாட்டா. அவளை நம்பு. இப்ப கிளம்பு.”
அதுக்கு மேல் பேச அவனுக்கு நா எழவில்லை. ஆனால் அவன் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.
பூஜை முடித்துவிட்டு பார்கவி வருவதற்குள் சசி எல்லா அடுக்களை வேலையும் முடித்துவிட்டாள்.
“வீடே மணக்குது உன் ரசம். ப்பா இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.” என்று பார்கவி குழந்தை போல் சொல்லி கொஞ்சம் ரசத்தை கையில் ஊற்றி குடித்தாள். சசி ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு....என்று பாராட்டினாள். மதியம் ஸ்ரீக்காக சின்ன கேரியரில் உணவை அடைத்துக் கொண்டிருந்த சசி வேடிக்கையாக சொன்னாள்.
“அத்த......வாழ்க்கையிலே தான் ரசம் இல்லாம போயிடுச்சு. சமையலிலாவது ரசம் நல்லா இருக்கட்டுமே.” என்றாள். சில சமயம் வலியை சமாளிக்க நகைச்சுவை ஒரு மருந்து என்று தோன்றுகிறது பார்க்கவிக்கு. அவள் லேசாக புன்னகைத்தாள். அது புன்னகையா இல்லை புண்ணகையா என்று சொல்ல முடியாது. நாம அனுபவித்த வலியை இவளும் அனுபவிக்க வேண்டி வந்துவிட்டதே என்று தான் அந்த வலியான புண்னகையின் பொருள் என்று சசிக்கு தெரியும். அத்தையின் வாழ்க்கையின் வலியான பக்கங்களை பார்கவி தன் மருமகள் சசியிடம் பகிர்ந்திருக்கிறாள். அதுவே இருவருக்குள்ளும் ஒரு பந்தம் ஏற்பட காரணமாயிருந்தது.
“வருத்தப்படாதே சசி. சீக்கிரமே அவனிடம் ஒரு மாற்றம் ஏற்படும்.”
நேரமாகிவிட்டதை உணர்ந்த சசி “சரி அத்த.....உங்க புள்ள அங்கே மாடியிலே என்ன பண்ணிட்டு இருக்கார்ன்னு தெரியலை. அலுவலகம் போக கிளப்பிவிட்டிட்டு வரேன்.” என்று சொல்லி மாடிக்கு ஓடினாள் சசி. கண்ணாடி முன்னால் நின்று கொண்டு ஸ்ரீ எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். தன் உருவத்தை தானே பார்க்காமல் சலிப்புடன் எங்கோ பார்த்துக் கொண்டு தலையை சீவி கொண்டிருந்த அவனை பார்க்க பாவமாக இருந்தது சசிக்கு. அவன் அருகில் சென்று அன்புடன் அவன் தோளை தொட்டு திருப்பினாள்.
“என்ன என் மன்னனுக்கு கோபமா? எனக்கு உங்களை தவிர வேறு சொந்தம் கிடையாது ஸ்ரீ. நீங்க தான் முதல் உறவு. அலுவலகம் முழுக்க ராபர்ட்டை வாழ்த்தி அந்த பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது நான் மட்டும் கலந்து கொள்ளலைன்னா அதுவே ஒரு பேசுப் பொருளா இருக்கும். என்னை நம்பு கண்ணா.”
அவன் திரும்பி அவளை கட்டிப் பிடித்துக் கொண்டான்.
“நீ என்னை விட்டு போய்விடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு சசி. அது ஏன் உனக்கு புரியலை?”
“புரியுது. ஆனா நீங்க பயப்பட தேவையில்லை. ஐ ஆம் ஆல்வேஸ் யவுரஸ்.” என்றாள்.
“அப்ப.......வேலைய விட்டுடேன். இந்த தொல்லை எல்லாம் இருக்காது.”
சசி மெதுவாக அவன் பிடியிலிருந்து விடுபட்டு யோசனையுடன் மெதுவாக சொன்னாள். “உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காகங்க தானே?”
“ம்ம்......அதுக்கு என்ன?”
“நான் சொல்றது கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்.....இருக்கா இல்லயா?”
“இருக்காங்க. ஆனா யாரும் என்னை மயக்க எந்த மாதிரியும் நடந்துக்கலை. ஆனா உன் விஷயம் அப்படி இல்லையே.”
“ராபர்ட் பத்தி நீங்க தப்பாவே யோசிக்கிறீங்க.”
“சரி அப்படியே இருக்கட்டும். எதுக்கு உனக்கு ஆண் நட்பு?’
“உங்க கிட்டே ஷேர் பண்ணிக்க முடியாததை அவர் கிட்டே ஷேர் பண்ண முடியுது. இப்ப உள்ள காலக் கட்டத்திலே ஆண் நட்பு ஒன்றும் கிரைம் இல்லே ஸ்ரீ. அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியுது. பேசுவதே ஒரு மகிழச்சியா இருக்கும். அதுக்கு பேர் தான் பிரெண்ட்ஷிப். ஐ நீட் இட்.” அவள் இப்படி சொன்னதும் ஸ்ரீ அதிர்ச்சி அடைந்தான்.
“அப்ப என் சொல்லுக்கு மதிப்பு இல்லே. உன் பிடிவாதம் தான் முக்கியம். இல்லயா? சம்பாதிக்க ஆரம்பிச்சதும் உன் போக்கே சரியில்லை. நீ போக வேண்டாம். அவ்வளவு தான் சொல்வேன். பிறகு உன் இஷ்டம்.”
“கொஞ்சம் பரந்த மனசுடன் யோசிங்க. ராபர்ட் ரொம்ப நல்ல மாதிரி. எங்க நட்பை கொச்சை படுத்தாதீங்க. என்னால் கலந்துக்காம இருக்க முடியாது. சரின்னு சொல்லிட்டு அங்கே திருட்டுத்தனமா உங்களுக்குத் தெரியாம கலந்துக்கிட்டு மறைக்கும் ஜாதி நானில்லை. சரி நேரமாச்சு கிளம்புங்க. ஷர்ட் பேண்ட் எடுகத்து வச்சிருக்கேன். சீக்கிரம் குளிச்சிட்டு வந்து போட்டுக்கிட்டு சாப்பிட வாங்க.”
அவள் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் நடந்து கொள்வதைப் பார்த்து இன்னும் கொஞ்சம் கோபத்தை உருவேற்றிக் கொண்டு குளிக்கப் போனான் ஸ்ரீ. குளிக்கும் போது அவன் மனம் கொதித்தபடியே இருந்தது.
அலுவலகம் வந்துவிட்டாள் சசி. ராபர்ட் அவளை வரவேற்று “எனக்கு என்ன பரிசு வாங்கிட்டு வந்திருக்கே?” என்றான்.
“அதெல்லாம் சஸ்பென்ஸ். மாலை நிகழச்சியின் போது பார்த்துக்கோங்க. இப்ப சொன்னா சுவாரஸ்யம் போயிடும். இப்ப வொர்க் ஃபர்ஸ்ட்.”
“என்ன பெரிய பரிசு வாங்கியிருக்கப் போறே? ஒரு வாட்ச் அல்லது ஒரு கூலிங்க கிளாஸ். அதுக்கு இந்த பந்தாவா?” என்று கிண்டல் அடித்தான்.
சசி பதில் சொல்லாமல் மர்மமாக புன்னகைத்தாள். அப்ப.....ஏதோ புதுமையான பரிசு தான் போலிருக்கு என்று ராபர்ட் நினைத்துக் கொண்டான். மாலை இப்போதே வந்து விடக் கூடாதா என்று இருந்தது அவனுக்கு. மதிய சாப்பாடு சாப்பிடும் போது கூட சசி பரிசு பற்றி சொல்ல மறுத்துவிட்டாள்.
“இருக்கட்டும்.....உன்னை பார்த்துக்கிறேன்.....சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டே இல்லே.” என்று ஒரு சிறுவன் போல் கோபித்துக் கொண்டான். மாலையும் வந்தது.
அனைவரும் ஆபீஸ் வளாகத்தை ஒட்டி இருந்த ஒரு கட்டிடத்தில் நிகழச்சிக்காக சென்றனர். முன் கூட்டியே சில அலுவலக நண்பர்கள் மேடை ஒன்றை அமைத்து. பூ அலங்காரம் எல்லாம் செய்திருந்தனர்.
அனைவரும் குழுமியதும், மேஜையில் பெரிய கேக் கொண்டு வந்து வைக்கப்பட்டது. ராபர்ட் ஸுப்பராக உடை அணிந்து வந்து நின்றான். அனைவரும் ஆகி தட்டினர். “கேக் வெட்டுங்க சார்.” என்றார் தாமோதரன்.
கேக் வெட்டியதும் ஹாப்பி பர்த்டே டூ யு என்று பாடினர். ஒவ்வொருவராக பரிசிப் பொருள்களை நீட்டி வாழ்த்தினர். ராபர்ட் ஆவலுடன் சசியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கடைசியாக வந்தாள்.
“நீங்க எல்லோரும் சாருக்கு பரிசு கொடுத்தீங்க. எல்லாமே அன்போடு கொடுத்த பரிசுப் பொருட்கள். அதில் குறை ஒன்றுமில்லை. ஆனால் நான் கொடுக்கும் பரிசு விலை மதிப்பற்றது. சாரின் உயிரில் கலந்த ஒரு ஜீவனின் எழில் ஓவியம் கொடுக்கப் போறேன். நீங்க யாராவது அது என்ன ஓவியம் என்று கெஸ் பண்ண முடியுமா? எனி ஒன்?..” என்று கூட்டத்தைப் பார்த்தாள். ஓவியமா? யாரோட ஓவியமாக இருக்கும்? குழம்பிப் போய் நின்றனர். சிலர் தெரியலை என்றனர். சிலர் கை விரித்தனர். இன்னும் சிலர் ‘நீங்களே சொல்லிடுங்க மேடம்’ என்றனர்.
“ஓ. கே நானே சொல்லிடறேன். நம்ம எல்லோருக்கும் பிடித்த உறவு அம்மா தான். அம்மா இல்லேன்னா நாம இல்ல. கருணையும் அன்பும் சுரந்து நிரம்பு வழியும் அட்சய பாத்திரம் தான் அம்மா. சார் அம்மாவை தெய்வமா மதிக்கும் தன்மை உடையவர். சமீப காலமா அவர் அம்மாவுக்கு மறதி நோய் வந்து மகனையே அடயாளம் தெரியாம இருக்காங்க. அவங்க எங்க காலேஜ் விழாவுக்கு வந்த போது மேடையில் பேசியது என் கிட்டே வீடியோவா இருக்கு. சார் அவருக்கு கொடுத்ததை தொலைச்சிட்டார் என்றார். வீடு மாறும்போது அது கை நழுவி போய்விட்டதுன்னு வருத்தப்பட்டார். அந்த வீடியோ காப்பி என்னிடமும் ஒன்று இருக்கு. நாங்க ஒரே கல்லூரியில் படிச்சோம்ன்னு உங்களுக்கு சொல்லிக்கிறேன். இதோ போட்டுக் காட்டறேன். அதுவே நான் அவருக்கு கொடுக்கும் பரிசு.” என்றாள் சசி. பலத்த கரகோஷம் தொடர்ந்தது. பிறகு வீடியோவை டி. வி ஸ்கிரீனில் போட்டுக் காட்டினார்கள். ராபர்டின் அம்மா ரோசி பேசுகிறார்கள்.
“சின்ன வயசில் ராபர்ட் ரொம்ப குறும்பு செய்வான். என் கிட்டே நிறைய அடி வாங்கியிருக்கான். அவனை அடித்துவிட்டு அவனுக்குத் தெரியாமல் நான் அழுவேன். விவரம் தெரிந்த பிறகு நான் அழுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவன் சேட்டை செய்வதை விட்டு விட்டான். அவ்வளவு அன்பு அவனுக்கு என் மேல். இன்று அவன் இந்தக் கல்லூரியின் லீடர் ஆக இருக்கான். படிப்பில் கோல்ட் மெடல் வாங்கியிருக்கான். எங்களை பெருமை படுத்தியிருக்கான். ராபர்ட்.....இப்ப நீயே எனக்கு ஒரு பரிசு.....” அம்மையார் சொல்லிவிட்டு கண் கலங்க, ராபர்ட் ஓடி வந்து அம்மாவை கட்டிப் பிடித்து எதுவும் பேச முடியாமல் சிறிது நேரம் நீர் நிரம்பிய கண்களுடன் நிற்கிறான். அம்மா கையால் பரிசு வாங்கிக் கொள்கிறான்.
“என் மகனுக்கு நானே பரிசு கொடுக்க, எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி.” என்று சொல்லி புன்னகை நிரம்பிய முகத்துடன் ரோசி நிற்கிறார். அதை தொடர்ந்து “காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா. அன்பென்றாலே அம்மா. என் தாய் போல் ஆகிடுமா?” என்று ராபர்ட் பாடுகிறான். சுற்றி நின்ற அனைவரும் எழுப்பிய கரகோஷத்தோடு அந்த வீடியோ முடிந்தது. காட்சியும் பேச்சும் முடிந்ததும் ராபர்ட் ஓடி வந்து சசியை கட்டிப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டான். ‘”ரொம்ப ரொம்ப நன்றி சசி. நீ எனக்கு என் உயிரையே கொடுத்திட்டே. அம்மா பேசறதை லைவா பார்க்கும்போது கண் கலங்குது. என அம்மாவுக்கு இப்ப எனனி அடயாளமே தெரியலை. அந்த வலி இந்த வீடியோ பார்க்கும் போது போகுது. நன்றி சசி நன்றி......”
சசியை ராபர்ட் கட்டிப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டதை அங்கு வந்த ஸ்ரீ பார்த்து விட்டான். அவன் கண்கள் ரத்த சிவப்பாக மாறியது.
தேடல் தொடரும் .
.