என்னைத் தேடும் நான்
அத்தியாயம் ==15
சசி சகஜமாக நடந்து கொள்வதைப் பார்த்து பூரித்துப் போனான் ஸ்ரீ. பரவாயில்லையே....குழந்தையை அபார்ட் பண்ணியும் கூட அவள் எந்த வித முறைப்பும் இல்லாமல் தன்னிடம் இனிமையாக நடந்து கொள்கிறாளே! குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை என்ற பொய்யை நம்பிவிட்டாள். சபாஷ். அவள் என்னை சந்தேகிக்கவில்லை என்று தானே அர்த்தம்?. அந்த ராபர்டின் குழந்தை ஒருவழியாக செத்து தொலைந்தது. அந்த டாக்டரிடம் நன்றி சொல்லிவிட்டு அவன் கூடுதலாக பணம் கொடுத்து “ரொம்ப நன்றி டாக்டர்” என்றான். அவன் கொடுத்த பணத்தை வாங்காமல் அனுப்பிவிட்டாள் அவள். டாக்டர் மல்லிகா ஏன் கொடுத்த பணத்தை வாங்கவில்லை? அது பற்றி ஸ்ரீ நினைத்துப் பார்க்கவில்லை. ஏற்கனவே அஞ்சு லட்சம் வாங்கி விட்டாள். இன்னும் எதுக்கு என்று விட்டுவிட்டாள் போலும் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் விஷயம் வேறு விதம் என்று அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.
சசிக்கு ஸ்ரீயின் குணம் ஓரளவு பரிச்சியம் ஆகிவிட்டது. இவன் ஏதோ சதி திட்டத்துடன் தான் தன்னை இந்த டாக்டரிடம் கூட்டி வந்திருக்கிறான் என்ற சந்தேகம் அவளுள் வலுத்தது. ஆப்ரேஷன் ரூமுக்கு அழைத்து வந்தவுடன் சசி கேட்டாள்.
“டாக்டர் எனக்கு கரு கலைப்பு செய்ய என் கணவரிடம் எவ்வளவு வாங்கினீர்கள்?”
டாக்டர் மல்லிகா ஒரு கணம் திகைத்து, மறுகணம் சுதாரித்துக் கொண்டு
“என்னம்மா பேசற நீ? நான் அப்படிப்பட்ட டாக்டர் இல்லை.” என்றாள். படபடப்புடன். அவள் முகம் வேர்த்துவிட்டது.
“உங்க மகள் மாசமாக இருக்கிறாள் தானே?”
“ஆமாம்.....உனக்கு எப்படி தெரிந்தது?”
நர்ஸ் ஹேமா அவளிடம் உண்மையை சொல்லிவிட்டிருந்தாள். அதனால் சசிக்கு விவரம் தெரிந்து விட்டது.
“எப்படியோ தெரிந்தது. அதுவா முக்கியம்? அவளுக்கு யாராவது அபார்ஷன் பண்ணினால் உங்களுக்கு எப்படியிருக்கும்?”
தலை குனிந்தாள் மல்லிகா. மகள் பத்து வருஷம் கழித்து இப்பொழுது தான் குழந்தை உண்டாக்கி இருக்கிறாள்.!
“வெட்கமாக இல்லை உங்களுக்கு? பெண்ணுக்கு பெண்ணே செய்யும் துரோகம் இது. உங்க மகள் என்றால் வெல்லக் கட்டி. அடுத்தவன் பெண்டாட்டி என்றால் எக்கேடும் கெட்டும் போகட்டும் என்ற எண்ணம் தானே? இதுக்கு தான் டாக்டர் பட்டம் வாங்கினீங்களா? சொல்லுங்க நீங்க எனக்கு அபார்ட் பண்ணத் தானே குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை என்று சொன்னீங்க?” சசியின் நேரடிக் கேள்விக்கு பதில் சொல்லாமல் கண்ணீர் வழிய நின்றாள் அந்த அம்பது பிளஸ் வயதுள்ள டாக்டர்.
உண்மையை ஒப்புக் கொண்டாள் அவள். தன் பணத் தேவைக்காக இப்படி ஒப்புக் கொண்டதை அவமானமாக உணர்கிறேன் என்று வேறு ஒப்பாரி வைத்தாள். ஸாரி வெளியில் சொல்லிவிடாதே என்று மண்றாடினாள்.
அவளை வெறுப்புடன் பார்த்துவிட்டு சசி சொன்னாள்..
“நீங்க அபார்ட் பண்ணப் போவதாகவே என் கணவர் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் பண்ணவேண்டாம். என் குழந்தைக்கு எந்தவித குறையும் இல்லை அல்லாவா? பொய் தானே சொன்னீர்கள்?”
தலையாட்டினாள் அவள்
“என் கணவரிடம் சொல்லாமல் இருக்க உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?”
“எதுவும் வேண்டாம் சசி. நான் என் தொழிலுக்கு பண்ணிய துரோகமே என் நெஞ்சை அறுக்கிறது. இது தான் முதலும் கடைசியுமாக இந்த இழி செயலை செய்ய ஒப்புக் கொண்டேன். இனி இது போல் பண்ண மாட்டேன். என்னை மன்னித்துவிடு அம்மா.”
சசி தன் கணவனின் துரோக முகம் தெரிந்ததும் ரொம்பவே அப்-செட் ஆகிவிட்டாள். தூக்கமே வரவில்லை. இவனுடன் இனி வாழ வேண்டுமா என்ற எண்ணம் அவளுள் வலுத்தது. ஏதோ சந்தேகப் படுகிறான்....அது கூட தன் மேல் உள்ள அதீத காதலால் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் அவன் மனசில் இவ்வளவு வக்கிரம் இருக்கும் என்று நினைக்கவில்லை. அவள் ஒரு தீர்மானத்துக்கு வரும்வரை எதுவும் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று சகஜமாக இருப்பது போல் நடந்து கொண்டாள். அது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அவன் அழகான முகம் இனி அழகற்று போனது அவள் பார்வையில்.
அழகு என்பது வெளி தோற்றத்தில் இல்லை என்று சொல்வார்கள். அதை இப்பொழுது நன்கு உணர்ந்தாள் அவள். கிரேக்க சிற்பம் போல் தான் இருக்கிறான். அதே பொலிவான லட்சணமான முகத் தோற்றம் தான். ஆனால் அதன் கொடூரம் அவன் உள்ளத்தின் பிரதிபலிப்பு என்று தெரிய அந்த முகத்தை வெறுத்தாள் அவள்.
பார்கவி சசியின் முக வாட்டத்தையும் அதே சமயம் கோபத்தையும் துல்லியமாக கண்டுபிடித்து விட்டாள்.
“உன் முகத்தில் கடுகு போட்டால் பொறிந்து விடும் போல. என்னாச்சு சசி?” என்று கேட்டாள். ஒரு மாசமாக சொல்லாமல் மறைத்தது சசிக்கே சங்கடமாக இருந்தது. அவள் உள்ளம் வெடிக்க அழுது விட்டாள். பதறிப் போனாள் பார்கவி.
“சசி......அழாதே. இந்த மாதிரி சமயத்தில் நீ உன் தாயார் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக் கொள்வது நல்லது. நான் வேணா ஸ்ரீயை கொண்டு விடச் சொல்லவா?” என்றால் அன்புடன்.
விரக்தியுடன் சிரித்த சசி “அதுக்கு அவசியமில்லை அத்த. அவரைப் பொறுத்தவரை நான் மாசமாக இல்லை.”
“என்ன சொல்றே சசி?”
நடந்த விஷயத்தை சொல்லிவிட்டு வலியுடன் சிரித்தாள் அவள். பார்கவி திடுக்கிட்டுப் போனாள். தன் மகன் இவ்வளவு கேவலமானவனா? அவள் ஒன்றுமே சொல்லாமல் ஸ்ரீயின் வரவுக்காக காத்திருந்தாள்.
ஸ்ரீ மாலை அஞ்சு மணிக்கு உல்லாசமாக வீட்டினுள் நுழைந்தான்.
“சசி......படத்துக்கு போலாம். டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு வந்திருக்கேன்.” என்றபடி சோபாவில் அமர்ந்தான். வழக்கமாக அவன் வந்தவுடன் இன்முகத்துடன் வரேவிர்க்கும் அம்மா பார்கவி அவனைப் பார்த்து
“ஏந்திரிடா......” என்றாள் கடுமையாக.
“என்னாச்சு பாரு? ஏன் வந்ததும் வராததுமாக பையனை விரட்டற.?” என்றார் ஸ்ரீயின் அப்பா.
“நீங்க சும்மா இருங்க. இவன் நம்ம மகனே இல்லை. இவன் சமுதாயத்துக்கே கேடானவன். இவன் இந்த வீட்டில் இருக்கவே கூடாது” என்றாள். ஸ்ரீ சசியை பார்த்தான். அவள் சொல்லிவிட்டாள் என்று யூகித்துக் கொண்டான். அவன் மனம் அவசர அவசரமாக தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும் காரணங்களை தேடிக் கொண்டது.
“அம்மா......நீ என் மேல் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை. உன் மருமாகளிடமே உண்மையை கேளு. எனக்கு மட்டும் அப்பாவாக ஆணாதில் சிக்கல் என்று தெரிந்ததும் வருத்தம் இருக்காதா?” என்றான். “சிக்கல் உன் மனசில் தான் டா. பொய் சொல்லி அவளை கூட்டிப் போய் அபார்ட் பண்ணப் பார்த்தியே. அது உன் குழந்தை டா.”
“அப்ப அபார்ட் ஆகலையா?” என்றான் மிகுந்த ஏமாற்றத்துடன்.
“சில விஷயங்களை அபார்ட் பண்ணி விடுவது நல்லது. நீ இனிமேல் என் மகன் இல்லை. பிளீஸ் போய்விடு. சந்தேகம் என்ற உன் வியாதியை குணப்படுத்திக் கொண்டு வா.”
விஷயம் தெரிந்துவிட்டது என்றவுடன் ஸ்ரீ வேறு மாதிரி பேச ஆரம்பித்தான். அவன் இளகிய குரலில் சொன்னான்.
“அம்மா......குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை என்று சொன்னார் டாக்டர். அதை கேட்டு துடித்துவிட்டேன். என் குழந்தை குறையுடன் பிறந்தாலும் பரவாயில்லை என்று சசியிடம் மண்றாடினேன். அவள் தான் அபார்ட் பண்ணிவிடலாமுன்னு சொல்லிட்டா. பண்ணலையா?”
“உன் நாடகம் எல்லாம் என்னிடம் பலிக்காது ஸ்ரீ. நாளை விடிவதற்குள் நீ வீட்டை விட்டுப் போக வேண்டும். இங்கிருந்து கொண்டு சசிக்கு என்ன தீங்கு செய்யலாம் என்று தான் யோசிப்பே. எங்களுக்கு எங்க பேரக் குழந்தை வேண்டும். புரியுதா?”
அனந்து அவனை அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“ஏண்டா.....நீ திருந்தவே மாட்டியா? நீ தான் சசியை ராபர்ட் வீட்டில் கொண்டு விட்டே. அப்புறம் சந்தேகப் படறே. அறிவிருக்கா உனக்கு? உங்கம்மா சொல்வது தான் சரி. நீ கொஞ்ச நாள் வீட்டை விட்டு போய் இரு. அப்ப தான் உனக்கு உறவுகளின் மேன்மை புரியும். சசி என்ன பொம்மையா? உன் அட்ராசிட்டீஸ் எல்லாம் கடந்து போக.? சே....உன்னை மகன் என்று சொல்லிக்கவே எனக்கு அவமானமா இருக்கு.”
அதன் பிறகு அவனுடன் யாரும் பேசவில்லை. ஒரு வாரம் கடந்தது. சசி அவன் அறையில் அவனுடன் வந்து படுக்கவில்லை. அவனுக்கு அம்மாவோ சசியோ காபி டிபன் என்று எதுவும் தரவில்லை. மதிய உணவு
தயாரித்து கொடுக்கவில்லை. அவன் அந்த வீட்டில் இல்லை போலவே நடந்து கொண்டார்கள். இதை விட பெரிய தண்டனை அவனுக்கு வேறு என்னவாக இருக்க முடியும்?
“என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் செய்துவிட்டேன். இனி எதுவும் செய்ய மாட்டேன்.” என்று கெஞ்சினான்.
அவன் சொற்கள் காற்றோடு போயிற்று. அவனை ஜடம் போல் பாவித்தார்கள். அவனுக்கு கோபம் வந்தது.
“இப்ப என்ன நான் வீட்டை விட்டுப் போகணும். அதானே?” என்று கத்தினான். அதற்கும் பதிலில்லை.
ஸ்ரீக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்படியாவது சசியை தன்னுடன் பேச வைத்து விட வேண்டும் என்ற ஆத்திரம் வந்தது அவனுக்கு. அன்று இரவு சசி படுத்துக் கொண்டிருந்த அறைக்கு சென்று கதவை தட்டினான். சசி வந்து கதவு திறக்கவில்லை. வீட்டை சுற்றிக் கொண்டு ஜன்னல் பக்கம் வந்து சசி சசி என்று அழைத்தான். சசி ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். என்ன என்பது போல் திரும்பிப் பார்த்தாள். “கதவை திற.....நான் உன்னுடன் பேசணும்.”
அவள் ஜன்னல் கதவை மூட யத்தனித்தாள். அவள் கையை பிடித்துக் கொண்டான். கண்ணில் கோபம் மின்ன பேசினான்.
“சசி......நான் உன் புருஷன். நான் உன்னை கேள்வி கேட்கக் கூடாதா? நீ செய்யும் எல்லா காரியத்தையும் தட்டிக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கு.” என்றான்.
கையை உதறிப் பார்த்தாள். முடியவில்லை. அவன் பிடி இரும்புப் பிடியாக இருந்தது. “விடுங்க....உங்க கூட பேச நான் தயாராயில்லை.” என்றாள்.
“பரவாயில்லை. இப்பவாவது வாயை திறந்தியே. சசி பிளீஸ்.......புரிஞ்சுக்ககோ. நான் சந்தேகபட்டது தப்பு தான். உன் மேல் உள்ள காதல் தான் நான் அப்படி செய்ய காரணம்.”
சசி பலமாக சிரித்தாள். அவள் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
“சந்தேகம் எப்ப வரும் தெரியுமா? ஒருவர் மேல் காதல் இல்லாத போது தான். இது நாள் வரை என் மேல் உள்ள அதீத காதல் தான் உங்களை அப்படி பேச வைத்ததுன்னு நானும் நம்பினேன்.. ஆனா எப்ப நீங்க என் கருவை கலைக்க....... அதுவும் எனக்குத் தெரியாமல் திட்டமிட்டு விட்டீர்களோ......அப்பவே உங்களின் சந்தேகப் புத்தி எல்லை மீறிவிட்டதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். சந்தேகம் என்பதை தாண்டி உறுதியா நான் ராபர்ட் குழந்தையைத் தான் சுமக்கிறேன்னு நிச்சயம் பண்ணிட்டு தான் இந்த கொலை வெறி ஆக்க்ஷன்....... இனியும் நான் ஏமாறத் தயாரா இல்லை ஸ்ரீ. பிளீஸ் கோ அவே......” அவள் குரலில் திடம் இருந்தது.
அவள் ஜன்னலை சாத்த முயற்சிக்கவில்லை. ஆனால் ஒரேயடியாக தன் மனதை சாத்திவிட்டாள் என்று புரிந்து கொண்டான். இனி இவளுடன் பேசிப் புண்ணியமில்லை என்று அவனுக்கு தோன்றியது.
கடந்த பதினைந்து நாட்களாக அவன் வெளியில் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வீட்டில் அப்பா அம்மா கூட அவனை லட்சியம் செய்யவில்லை. அவன் பொருமிக் கொண்டிருந்த அதே நேரம் இன்னும் கடுப்பு ஏற்படும்படி சம்பவங்கள் நடந்தன. ராபர்ட் வீட்டுக்கு வந்தான். நடந்து கொண்டிருக்கும் விவகாரம் ஏதும் அவனுக்குத் தெரியாது. ஆன்லைன் வேலையை கூட அவள் பார்க்கவில்லை என்றதும் அவன் சசிக்கு ஃபோன் பண்ணி காரணம் கேட்டான். தன் மன உழச்சல்களை காட்டிக் கொள்ளாமல் அவள் மிருதுவான குரலில் சொன்னாள்.
“மார்னிங் சிக்னஸ் ராபர்ட். நான் மாசமா இருக்கேன்.”
“ஓ......ரொம்ப சந்தோஷம் சசி. ரெஸ்ட் எடு. கங்ராட்ஸ். எனக்கு மருமான் பிறக்கப் போறான். வெரி குட்.”
இங்கு எல்லாம் வெரி பாட் என்று சொல்ல முடியுமா? சிரித்துவிட்டு போனை வைத்துவிட்டாள். அன்று மாலையே அவன் பழங்கள் ஸ்வீட்ஸ் சகிதம் வீட்டுக்கு வந்துவிட்டான். ஸ்ரீ அவனைக் கண்டதும் வெறுப்பு கொண்டான். அதனைக் காட்டிக் கொள்ளாமல் வரவேற்றான்.
“கங்ராட்ஸ் ஸ்ரீ....” என்று கை குலுக்கினான் ராபர்ட். தேங்க்ஸ் என்று முணுமுணுத்தான் ஸ்ரீ. போலியாக சந்தோஷ முகம் காட்டினான்.
மறுநாள் ஸ்ரீ வீட்டில் இல்லை.
“உன் ஆசைக் காதலன் வீட்டுக்கே உன்னை பார்க்க வந்துவிட்டான். இனி உனக்கு நான் எதுக்கு?” என்று எழுதி வைத்துவிட்டு ஸ்ரீ போய் விட்டிருந்தான்.
சசி அந்த வரிகளை வலியுடன் பார்த்தாள். “கண்ணே......நீ பிறக்கும்போது நான் மட்டுமே உனக்கு அம்மாவாக அப்பாவாக இருக்கும் நிலைமை ஆகிவிட்டது. என்னை மன்னித்துவிடு குட்டிப் பாப்பா.” என்று நெஞ்சுருக வயிற்றில் இருக்கும் தன் குழந்தையிடம் மன்னிப்பு கேட்டாள் சசி. அவள் இதுநாள் வரை சிந்தாமல் அடக்கி வைதிருந்த கண்ணீரை தாராளமாக வழிய விட்டாள்.
தேடல் தொடரும்
.
.
. . .