என்னைத் தேடும் நான்
அத்தியாயம்...18
சசி கிளம்பிவிட்டாள். யாராலும் அவளை தடுக்க முடியவில்லை. அவள் மனசுக்கு ஒரு ஆறுதல் என்னவென்றால்,. கல்யாணம் பண்ணிக்கோ என்று தான் ராபர்ட் சொன்னானே தவிர, தன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லவில்லை. ராபர்ட் மேல் உள்ள மரியாதை கூடியது.
“சசி......அந்த காலத்து நளாயினி நீயா? இல்லை கண்ணகியா? அந்தக் காலக் கட்டத்தில் அதெல்லாம் எப்படியோ, இப்போ நீ வெட்கமில்லாமல் பொண்டாட்டியை பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடியது மட்டுமல்லாமல் இன்னோர் பொண்ணோட குடும்பம் நடத்தற ஒருவனை தேடி போறியே, உனக்கே அவமானமா இல்லே?” சூடாக பார்கவி கேட்ட கேள்விக்கு சசி சொன்ன பதில் கேட்டு அனந்துவே விக்கித்து நின்றார்,
“நீங்க உங்க புருஷனை விட்டு அந்த காலத்தில் ஒடலை ஏன்? இப்ப ஆதர்ச தம்பதியா வாழறீங்க. அது மாதிரி எனக்கு நடக்காதா? எனக்குள் ஒரு நம்பிக்கை. அதை தடுக்காதீங்க.”
“சசி. என் கணவர் என்னை புரிந்து கொள்ளாமல் இருந்தார். உன் புருஷன் மாதிரி துரோகம் செய்யலை அப்படி மட்டும் செய்திருந்தா திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன்.” பார்க்கவியும் சூடாக பதில் தந்தாள்.
“அத்த.....உண்மை என்னன்னு முழுசா தெரிஞ்சா தான் ஒரு முடிவுக்கு வர முடியும். அவர் எனக்கு துரோகம் செய்வார் என்று என்னால் கற்பனை கூட பண்ண முடியவில்லை. நேரடியாக கேட்டு தெரிஞ்சிட்டு வரேன். விலாசம் கொடுத்ததுக்கு நன்றி.”
“சரி. உன் நம்பிக்கை பலிக்கட்டும்.” என்று அவளை ஆசீர்வதித்து அனுப்பினார் பார்கவி. நம்பிக்கை தானே வாழ்க்கை. ராபர்ட்டும் வந்திருந்தான். அவன் சொன்னான்.....
“நான் வேணா உனக்கு துணையா வரட்டுமா சசி? தெரியாத ஊர். புரியாத பாஷை. நீ திண்டாடிவிடக் கூடாது.”
அதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை சசி. பிள்ளைகள் இருவரும்
“அம்மா அப்பாவோட வருவாங்க. ஹய்.” என்று குதித்தார்கள் சசி அவர்களிடம் அப்படி சொல்லி வைத்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டார்கள். சசிக்கு தான் எவ்வளவு நம்பிக்கை! ராபர்ட் மனம் கசிந்தது.
தலை நகரம் டில்லி. பரபரப்பான விமான நிலயம் விட்டு வெளியே வந்து ஒரு டாக்சி பிடித்தாள். அவளுக்கு ஓரளவு ஹிந்தி தெரியும். அவள் மணம் திக் திக் என்று அடிதூக்க கொண்டிருந்தது. ஸ்ரீ உண்மையில் ஒரு பெண்ணுடன் வாழ்கிறானா? அவளால் நம்ப முடியவில்லை.
வீட்டை கண்டு பிடித்துவிட்டாள் சசி. “இந்த வீடு தான் மா.” என்றான் கால் டாக்சி டிரைவர் ஹிந்தியில்.
நன்றி சொல்லிவிட்டு அவள் வீட்டுக் கதவை தட்டினாள். கதவு திறந்த வடநாட்டுப் பெண்ணை பார்த்து திடுக்கிட்டாள் சசி. அந்தப் பெண்ணுக்கு மிஞ்சிப் போனால் பதினெட்டு வயது இருக்குமா? ஆனால் உயரமும் நிறமும் கண்ணை பறித்தது. ஓங்கு தாங்கான உடல் வாகு. முகத்தின் குழைந்தைத்தனம் அவள் வயதை காட்டிக் கொடுத்துவிட்டது.
“நீங்க யார்? உங்களுக்கு யார் வேணும்?” என்று அவள் தமிழில் பேசியது சசிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அவரைப் பார்க்கணும்.”
“யார்?”
சசி பதில் சொல்வதற்குள் சேவிங்க செய்த முகத்தை துடைத்துக் கொண்டே வந்தான் ஸ்ரீ. அவனைப் பார்த்ததும் சசிக்கு கண்ணீர் பொங்கியது. வந்துவிடு ஸ்ரீ வந்துவிடு.. என்று அவள் மனம் ஜபிக்கத் தொடங்கியது. “நல்லா இருக்கீங்களா?” என்றாள் குரல் நடுங்க. தொண்டையில் ஒரு பந்து வந்து அடைத்தது போல் இருக்க, மேலே பேச முடியாமல் தினறினாள். மூன்று வருஷம் பிரிந்திருந்தும் அவள் கண்களில் அதே அன்பை பார்த்தான் ஸ்ரீ. அவனுக்கும் ஒரு நிமிடம் மனம் நெகிழந்தது. அடுத்த நிமிடம் அவன் மனக்கண் முன் ராபர்ட் தோன்றினான். அவன் இளக்கிய மனம் இறுகியது.
“எங்க வந்தே சசி? என் நிம்மதியை கெடுக்க வந்திருக்கியா? நான் தான் உன்னை வேண்டாமுன்னு விலகி வந்திட்டேனே. போயிடு.”
“ஸ்ரீ.....உங்களுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்புன்னு நான் கேக்கப் போறதில்லை. ஏன்னா எனக்குத் தெரியும்.”
“தெரியுமா? என்ன தெரியும்?”
“இவளை நீங்க தொட்டு கூட பார்த்திருக்க மாட்டீங்க. என்னைத் தவிர உங்களால் வேறு பெண்ணை தொடவே முடியாது. உடம்பாலையும் சரி மனசாலையும் சரி. யு லவ் மீ சோ மச். ஐ நோ ஐ நோ.....”
“வில் யு ஸ்டாப் திஸ். துரோகம் செய்றவங்க சவகாசம் எனக்குத் தேவையில்லை. இவ பேர் அஸ்ரத். எனக்கும் இவளுக்கும் கல்யாணம் ஆகப் போறது. நீ நடையை கட்டலாம்.”
“இல்லே ஸ்ரீ. நீங்க பொய் சொல்றீங்க. அவ சிறுமி. என்னை விரட்டி விடாதீங்க. இதோ பாருங்க.....”
சொல்லிக் கொண்டே சசி குழந்தைகளின் படங்கள் நிரம்பிய ஆல்பத்தை காட்டினாள். பிறந்தது முதல் இந்த மூன்று வயதுவரை உள்ள படங்கள். இரு ரோஜாக்கள், அள்ளி எடுத்துக் கொள்ளலாம் போல் அத்தனை உயிர்ப்பு. அதை வாங்கி வீசி அடித்தான். அவள் நெஞ்சில் அடித்தது போல் இருந்தது. ஒட்டாமல் இருந்த சில படங்கள் சிதறி விழுந்தன. அந்தச் சிறுமி அதை எடுத்துப் பார்த்தாள். அவள் கண்களில் மகிழச்சி.
“உங்க பிள்ளைகளா? எவ்வளவு அழகு.” என்றாள் வியப்புடன்.
“அஸ்ரத்..... அதை திருப்பிக் கொடுத்துவிடு. அது யாருக்கோ பிறந்த குழந்தைகள். என் குழந்தைகள் இல்லை. இவ நாடகமாடறா. காலை நேரம் வந்து உயிரை எடுக்கிறா. அவளைப் போகச் சொல்லு. இல்லே இங்க ஒரு கொலை விழும்.” இவன் ஸ்ரீ இல்லை வேறு யாரோ. அவளின் ஸ்ரீ செத்துவிட்டான். சசி கண்களில் துயரம் கட்டி நின்றது. கோபமாக நாலு வார்த்தை சொல்ல வேண்டும் போல் பொங்கிப் பொங்கி வந்தது. ஆனாலும் அவள் எதுவும் சொல்லவில்லை. என்ன பிரயோஜனம்? காட்டில் காயும் நிலவின் அருமை காட்டு மிருங்கங்களுக்கு எப்படி தெரியும்?
சூரியன் வந்து கொஞ்ச நேரம் தான் ஆகியிருந்தது. அதற்குள் எல்லாமே இருட்டாக தெரிந்தது சசிக்கு. இதுக்கு மேல் வாதாட என்ன இருக்கு? கீழே குனிந்து சிதறி விட்ட புகைப்படங்களை அள்ளிக் கொண்டு ஆல்பத்தை அப்பெண்ணிடமிருந்து பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
“ஒரு நிமிஷம்.” என்றான் அவன். மனம் மாறிவிட்டானோ? கடைசி துளி நம்பிக்கையுடன் பார்த்தாள்.
“திரும்ப வந்துவிடாதே. அசிங்கப்படாதே. போ.”
இவ்வளவு தானா நீ? சீ அவள் சொல்லவில்லை. அவள் கண்கள் சொல்லியது. அவள் மறைந்து போக்கும்வரை அவள் முதுகையே பார்த்தான் அவன். அவன் கண்களிலும் நீர் சம்பந்தமில்லாமல் ஆஜார் ஆனது. துடைத்துக் கொண்டான். இந்த சில நீர் துளிகள் தான் அவனை இன்னும் மனுஷன் என்று காட்டியது.
சில காயங்கள் ஆறாது. மேலும் ரணமாக்க விரும்பாமல் பார்க்கவியும் அனந்துவும் சசியிடம் கனிவான வார்த்தைகளையே பேசினர். பிள்ளைகள் முகம் பார்த்து சசி மனம் தேறினாள். ஒரு நாள் இரவு பார்கவி மீண்டும் வந்து பேசினார்.
“சசி.....உன் வாழ்க்கை முகாரி ஆனதுக்கு நானும் ஒரு காரணம். ஒரு கேடு கெட்ட மகனை பெற்றது மட்டுமல்லாமல் பூமாலையை குரங்கிடம் கொடுத்துவிட்டேன்.” இரவு சாப்பாடு முடிந்து சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு முந்தானையை கையில் துடைத்தபடியே சொன்னார் பார்கவி. சசி வெறுமனே சிரித்தாள்.
“என் மகளாக இருந்தால் என்ன செய்வேனோ அதை நான் உனக்கு செய்ய ஆசைப்படறேன்.”
“என்ன அத்த மீண்டும் கல்யாணப் பேச்சா?”
“ம்ம். வேறு என்ன? காலம் பூரா நீ இப்படியே இருக்கப் போறியா? நாங்க உனக்கு ஒரு நல்ல வரன் பார்த்திருக்கோம். ராபர்டின் நண்பன் ஆதிகேசவன். ராபர்ட் மாதிரி நல்ல குணம்.” என்றாள் பார்கவி.
“அத்த நான் இளமை சுகத்துக்கு ஏங்கலை. உங்க மகன் என் கிட்டே காட்டிய அன்பும். பிறகு காட்டிய வெறுப்பும் என் நெஞ்சில் ஈட்டியா குத்திட்டு இருக்கு. அதை மறக்க முடியுமா? எப்படி நான் வேறு துணையோடு வாழ முடியும்? என் வாழ்வில் ஏற்பட்ட தவறு மீண்டும் ஏற்படுமோன்னு தானே நான் அஞ்சி அஞ்சி வாழ முடியும்.”
“உண்மை தான் நான் இல்லேன்னு சொல்லலை. ஆதி எங்களோடு பழகிக் கிட்டு தான் இருக்கான். அவன் கல்யாணமும் ஒரு டிரேஜிடி. விருப்பமில்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்தப் பொண்ணு. பிறகு தற்கொலை செஞ்சுக்கிட்டா. இவன் மேல் தான் தப்புன்னு இந்த சமுதாயம் தீர்ப்பு சொல்லுது. பாவம்.......”
“ஸோ.....ரெண்டு உடைந்த மனதுகள் ஓட்டும்ன்னு நினைக்றீங்க.?’
“என்ன தப்பு சசி.? அன்பு செலுத்தி அக்கறையோட வாழ இது கூட ஒரு பொருத்தம் தான். பிளீஸ் சசி. எங்களுக்காக ஒத்துக்கோ.”
“உங்க மனசு ஒரு அம்மாவின் மனசு தான். மாமியார் மனசு இல்லே. அதை பாராட்டறேன். ஆனா இது நடக்காது அம்மா. என் பிள்ளைகளை வரவன் நேசிக்கணும்ன்னு நான் கட்டாயப் படுத்த முடியாது. பெற்ற தந்தையாலேயே நேசிக்க முடியாத போது யாரோ ஒருவன் அப்பாவின் அன்பை தருவான் என்று நினைப்பது பயித்தியக்காரத்தனம்.”
‘சரி நான் மறுத்துப் பேசலை. ஆனா ஒரு வேண்டுகோள்.”
“என்ன அத்த ?”
“அம்மான்னே சொல்லேன் பிளீஸ்.”
சசி நெகிழ்ந்தாள் அம்மா என்று சொல்லி பார்க்கவியை அணைத்துக் கொண்டாள். பார்கவி முகம் மலர்ந்தது.
“குழந்தைகள் பாவம் ஏமாந்துட்டாங்க. அப்பா ஏம்மா வரலைன்னு துளச்சி எடுத்திட்டாங்க. அப்பா போட்டோ காட்டுமான்னு கேக்கறாங்க. உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றாள் சசி சோர்வுடன்.
“நீ என் மகன் போட்டோவை காட்டிவிடாதே. நீ மனசு மாறினால் ஆதி போட்டோவை காட்டு.”
“இந்த மாதிரி டகால்டி வேலை எல்லாம் என்னால் செய்ய முடியாது. வீண் பேச்சு எதுக்கும்மா? ஏதோ வேண்டுகோள்ன்னு சொன்னீங்களே.”
“ஆதியை நீ மீட் பண்ணி பேசணும். ஒரு ஃபிரெண்டா எண்ணி பேசு. பிளீஸ் சசி. இது உன் அம்மாவின் கட்டளை.”
அவளுக்காக இவ்வளவு மெனக்கெடும் மாமியாருக்கு ஏமாற்றம் தர விரும்பாமல் சரி என்றாள் சசி அரை மனதோடு.
மறு நாள் ஆதி வந்தான். அவன் முகம் திருத்தமாக இருந்தது. ஆனால் கன்னங்கள் ஒட்டி, கவனிக்கப்படாத ஆரோக்கியம் பறிபோன நோயாளி மாதிரி இருந்தான். கட்டிய மனைவி தற்கொலை பண்ணிக் கொண்ட ஷாக் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அவனை பார்க்க அவளுக்கே பரிதாபமாக இருந்தது. ஒரு வேளை தானும் அப்படித்தான் அவன் கண்களுக்கு தெரிகிறோமோ? என்றும் நினைத்தாள். அவள் தன்னை கண்ணாடியில் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.
“உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழச்சி” என்றான். அவன் கண்களில், குரலில் அந்த மகிழச்சி இல்லை. சசி “இந்த சந்திப்பு தேவையா?” என்றாள்.
தேடல் தொடரும்
.
..