என்னைத் தேடும் நான்
அத்தியாயம் ...19
சில சமயம் எதிராளியின் கேள்விகள் மனதை பாதிக்கும். சசி கேட்ட கேள்வி ஆதிக்கு எப்படியிருந்தது? அவன் மனம் பாதித்ததா? சசி பயந்தாள். பாவம் யாரோ ஒருவனின் மனதை நாம் ஏன் காயப்படுத்த வேண்டும்? நாக்கை கடித்துக் கொண்டவள் “தப்பா நினைக்காதீங்க. என் மன நிலை அப்படி.:” என்றாள். அவன் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் ஒரு பொருள் இருந்தது. அவன் முகத்தை அது அழகாக்கியது.
“ஏற்கனவே நாம இருவரும் காயப்பட்டிருக்கோம். புதுசா காயப்பட என்ன இருக்கு? சசி நானும் உங்களைப் பார்த்து அதே கேள்வியை கேக்க நினைக்கிறேன். இந்த சந்திப்பு தேவை தானா?”
“அப்போ, உங்களை இந்த சந்திப்புக்கு கட்டாயப்படுத்தியது ராபர்ட் தானா?”
“உண்மை தான். என் வலி அவனை ரொம்பவே வருத்திவிட்டது. ஏதாவது ஒரு வழி பிறக்காதா என்று ஏங்குகிறான். அந்த அன்புக்கு நான் மரியாதை கொடுக்கவே உங்களை சந்திக்க ஒப்புக் கொண்டேன்.”
“சரி.....ஒரு அழகான சூழ்நிலையில் நாம் பேசலாம். இங்க வேண்டாம். நம் வாழ்க்கை தான் அழகில்லாமல் போய்விட்டது. அதைப் பற்றி பேசும் இடமாவது அழகாக இருக்கட்டுமே.” என்றாள் சசி.
“ரொம்ப அழகா சொன்னீங்க. வாங்க போலாம் அஷ்டலட்சுமி கோவிலுக்கு.” மாலை மயங்கிய நேரம். கடவுளை கும்பிட வந்த மனிதர்கள்
எல்லோரையும் பார்த்தாள் சசி. அமைதி தேடி வருபவர்களே அதிகம் என்று பட்டது. மனித வாழ்க்கையில் எந்த பேதமுமில்லாமல் கிடைக்கும் ஒரே சங்கதி கவலை தான். பணக்காரர்களுக்கும் கவலை உள்ளது. பணம் இல்லாதவனுக்கும் கவலை உள்ளது.
லக்ஷ்மி தரிசனம் பண்ணும் போது இருவரும் பேசவில்லை. அவரவர் சிந்தனையில் அவரவர் மூழ்கி இருந்தனர். இள நிலா ஒன்று பிறை வடிவில் கோபுரத்தின் மேல் முளைத்திருந்தது. அது இன்னும் வளர்வேன் என்று கட்டியம் கூறியது. இவர்கள் சந்திப்பு வளருமா இத்தோடு முடியுமா என்று அவர்களுக்கே தெரியவில்லை.
ஒவ்வொரு லக்ஷ்மியாக கும்பிட்டு வந்தார்கள். கடைசியாக கும்பிட வந்த லக்ஷ்மி தைரியலக்ஷ்மி. .
“எனக்கு தைரியத்தை கொடு தாயே. நான் என்னைத் தேடும் நேரம் வந்துவிட்டது. ஸ்ரீ மேல் உள்ள நம்பிக்கை மறைந்து கொண்டு வருகிறது. எந்த திக்கில் நான் போக என்று தீர்மானிக்கும் நான்கு வழி சாலைக்கு வந்திவிட்டேன். எனக்கு வழி காட்டு தாயே.” என்று மனமுருக வேண்டிக் கொண்டாள் சசி. கோவில் விட்டு அவர்கள் எலியட் பீச் நோக்கி நடந்தார்கள். கடற்காற்று உப்பு சுமந்து வீசியது. உப்பு சப்பு இல்லாத உன் வாழக்கைக்கு உப்பு தேவை என்று சொல்கிறதோ?
“இந்த பீச் காத்துக்கு ஒரு விஷேஷம் உண்டு.” என்றான் ஆதி.
மணலில் கால்கள் பின்ன நடந்த சசி “என்ன விஷேஷம்?” என்று கேட்டாள். “வாழ்க்கையில் விஷேஷமில்லை. காற்றிலாவது இருக்கே.” என்றும் சொன்னாள். அவன் மெல்லிதாக சிரித்தான். லேசான நிலவொளியில் அவன் முகம் நிழலும் வெளிச்சமுமாகத் தெரிந்தது.
“எட்டுவகை லட்சுமிகளையும் சுற்றி விட்டு வருகிற இந்தக் காற்றில் ஒரு தெய்வீகம் இருக்கு. இல்லையா?” என்றான்.
அலைகளை பார்த்துக் கொண்டு உட்கார்ந்தார்கள். சுகமாக வீசிய காற்றில் தெய்வீகம் இருந்ததோ இல்லையோ ஒரு இதம் இருந்ததை சசி உணர்ந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு அதை ரசிக்கவும் செய்தாள். சிறு பிள்ளைகள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே காதலர்கள் நெருக்கமாக அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
சுண்டல் பையன் டின்னோடு கண்களில் கெஞ்சல் தெரிய வந்து நின்றான். ஆதி சுண்டல் வாங்கிவிட்டு அவனை அனுப்பினான்.
“பீச் என்றால் சுண்டல் இல்லாமலா? சாப்பிடுங்க.” என்று ஒரு பொட்டலத்தை நீட்டினான்.
“பஞ்ச பூதங்களில் எனக்கு நெருப்பு பிடிக்காது.” என்று ஆரம்பித்தான் ஆதி. அவளுக்கும் நெருப்பு ஒரு துரோகம் பண்ணிவிட்டதாக நினைத்தாள். அக்னி சாட்சியாகத் தானே அவள் ஸ்ரீயை கை பிடித்தாள்? அப்புறம் ஏன் அது காவலாக இல்லை? நெருப்பு சீதைகளை மட்டும் தான் காப்பாற்றுமா? சசிகளுக்கு அந்த புண்ணியம் கிடையாதா?
“என்ன யோசனை சசி.? எதுக்குன்னு நீங்க கேக்கலையே.” என்றான்.
“சரி சொல்லுங்க. நெருப்பை உங்களுக்கு ஏன் பிடிக்காது.?” என்றாள்
“அது தான் என் மனைவி ஊர்மிளாவின் உயிரை கருக்கிவிட்டது. உயிரை விட அவள் தேர்ந்தெடுத்த இந்த வழி எவ்வளவு கொடூரமானது தெரியுமா?” .அவன் குரலில் நெருப்பு கங்குகளை மிதித்துவிட்ட வலி.
சசிக்கு திடுக்கென்றது. நெருப்பில் முடிவை தேடிக் கொள்வது எவ்வளவு வேதனை! சுண்டு விரலில் லேசாக தீ பட்டாலே உயிர் போவது போல் எரியுமே! தேக்கத்தையே எரிவூட்டினால்?
“மாடி ஹாலில் ஒரு பூஜை அறை உண்டு. அங்கு தன்னை கொளுத்திக் கொண்டு விட்டாள். ஒரு சத்தம் போடவில்லை. உட்கார்ந்த நிலையில் கும்பிட்ட வண்ணம் அவள் உயிர் போய்விட்டது. கண் முன் பார்த்த அவள் கருகிய உருவம் எனக்குள் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் பற்றிய சிந்தனை எனக்கு வரவே இல்லை.”
“இதில் உங்கள் தவறு எதுமில்லையே?. அந்த வகையில் நீங்க ஆறுதல் கொள்ளக் கூடாதா?” மென்மையாக சசி சொன்னாள். அந்த மிருதுவான பட்டு போன்ற வார்த்தை அவன் நெஞ்சில் தகித்துக் கொண்டிருந்த தீ மேல் நீராக பொழிந்தது. இப்படி ஒரு சமாதானமா? அதற்கு இத்தனை வலிமையா? எத்தனை பேர் சமாதானப் படுத்தினார்கள். ஆனால் இது போல் அது நெஞ்சில் பதியவில்லையே.! நிச்சயமாக இவளிடம் எதோ இருக்கு.! அந்த குரலா? இல்லை அந்த முக பாவமா?
“என் குற்ற உணர்வுக்கு காரணம் இருக்கு சசி. அவள் முதல் இரவன்றே சொன்னாள். அவள் காதலைப் பற்றி. அதை மறக்க முடியாது என்பது பற்றி. என்னை நேசிக்க முடியாது என்பது பற்றி. நான் ஒரு மடயன். இவ்வளவு தீவிரம் என்று புரிந்து கொள்ளாமல் தத்துவம் பேசினேன் கண்ணதாசனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு .....நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை.”
“சொல்வது எளிது. அவ்வளவு சுலபமாக மறந்தா போகும் ஆதி?. சின்னக் குழந்தைகளிடம் உனக்கு அம்மாவை எவ்வளோ பிடிக்கும் என்று கேட்டால், கையை விரித்து வானம் வரை பிடிக்கும் என்பார்கள். அது போல் என் கணவரை வானம் வரை பிடிக்கும்னு சொல்வேன். ஆனால் அவருடைய பாராமுகம் என்னை கொன்றுவிட்டது.”
“இன்னமும் நேசிக்றீங்களா சசி?”
“மனம் செத்துவிட்டது ஆதி. ஊர்மிளாவுக்கும் அப்படித் தான் இருந்திருக்கும்......அவள் செத்துப் போனாள். எனக்கு சாக விருப்பமில்லை. என் குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும் உயிரை மாய்த்துக் கொள்ள நமக்கு என்ன உரிமை இருக்கிறது.? தாயும் கடவுளும் கொடுத்த வரம் அல்லாவா நம் இன்னுயிர். காதல் சிறு வானவில் மாதிரி தான். அது வந்து போய்விட்டது. நீங்க நார்மலா ஆகுங்க, நீங்க காதலையே உணராத ஆளு. உங்களுக்கு எதிர்காலம் இருக்கு. பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க வாழணும். உங்களுக்கு என் மாதிரி காதல் தோல்வி இல்லை. உங்களை நேசிக்க ஒருத்தி வராமலா போய்விடுவாள்?” கண்களை மலர்த்தி இதமாக அவள் பேசினாள். பட்டாம்பூச்சி மலரில் அமர்வது போல் அவள் வார்த்தைகள் அவன் நெஞ்சில் உட்கார்ந்தன.
“நிஜமாவா சொல்றீங்க? அப்படி நடக்குமா?. என்னையும் ஒருத்தி நேசிப்பாளா? உங்க கூட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. இனிப்பு சாப்பிடாத சர்க்கரை நோயாளி மாதிரி இருந்தேன். வாழ்வென்னும் இனிப்பு எனக்கு இல்லை என்று நினைத்திருந்தேன். இருக்குன்னு நம்பிக்கை கொடுக்றீங்க. “
“பின்னே.....உங்களுகென்ன? சும்மா ஸ்வீட் சாப்பிடுங்க.”
“நீங்க ஸ்வீட்டா பேசறீங்க. உங்க குழந்தைகள் பத்தி சொல்லுங்க.”
“லவ்லி சில்ட்ரன். நான் ஒரு அம்மாவா எப்பவும் சந்தோஷமா இருப்பேன். அவங்க எதிர்காலம் தான் எனக்கு முக்கியம்”
வானம் முழுவதுமாக கருத்துவிட்டிருந்தது. சின்னச் சின்ன நட்சத்திரங்கள் மினுக்கி கொண்டு இருட்டை பழித்தது. சுகமான காற்றும் இதமான பேச்சும், முதல் முறையாக, ரொம்ப நாள் கழித்து கேட்கிறான் ஆதி. நட்சத்திரங்களையும் பிறை நிலாவையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். பேச்சு நின்று போனது. அந்த மௌனம் கூட பேசியது. அலைகள் புதிய ராகம் இசைத்தது. இருவருக்குள்ளும் வெள்ளி முளைத்தது. தொட்டி மீன் கடலைக் கண்டது போல......
“போலாமா? அம்மா காத்திட்டு இருப்பாங்க. இந்த அந்தி வேளை எனக்கு ஒரு புதிய உதயத்தை தேடிக் கொடுதிருக்கு. சசி..என் கூட போனில் பேசுவீங்களா?” இரஞ்சுவது போல் அவன் கேட்க அவள் அகலமாக புன்னகைத்தாள். “வொய் நாட்? எனக்கும் உங்க கூட பேசணும் போல இருக்கு. மனசை வாஷிங் மிஷினில் போட்டு வெளுத்தது மாதிரி இருக்கு.:” இருவரும் வாய் விட்டுச் சிரித்தார்கள்.
வீடு வந்து சேர்ந்தாள் சசி. ஆதி தான் தன் காரில் அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனான். பார்கவி அவளை எதிர்பார்ப்பான புன்னகையுடன் வரவேற்றாள். “வா சசி. உன் கூட சாப்பிடனும்னு காத்திட்டு இருக்கோம்.” என்றாள்.
“எதுக்கும்மா எனக்காக காத்திட்டு இருந்தீங்க? சுகர் பேஷண்ட் நீங்க. கால காலத்தில் சாப்பிட வேண்டாமா?”
உடை மாற்றிக் கொண்டு வந்து அமர்ந்தாள் சசி. அநந்துவும் அமர்ந்தார். பார்கவி பரிமாறினாள்.
“இன்னிக்கு..கோஸ் கறியும்.., உருளை தக்காளி சேர்த்து செய்த மசாலும் செஞ்சிருக்கேன். நல்லாயிருக்கா.?”
பரிமாறிக் கொண்டே கேட்டாள் பார்கவி.
“இப்ப உன் சமையலை புகழனும். அதானே? ஜோராயிருக்கு.” என்றார் அநந்து. சசி ரசித்து சாப்பிட்டாள். அவள் முகத்தில் ஒரு தெளிவு இருந்ததை பார்கவி ஆர்வமுடன் பார்த்து பூரித்தாள். சாப்பாடு முடிந்து அநந்து “நான் சற்று உலாத்திட்டு வரேன்.” என்று சொல்லி வெளியில் போனார். சமயலறையை சுத்தம் செய்ய பார்கவி முனைந்த போது
“அம்மா....விடுங்க நான் பார்த்துக்கறேன்.” என்று சொல்லியபடி மேடையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
“சசி.....என்னாச்சு?”
“எது என்னாச்சு?” என்று கேட்டாள் சசி. என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொண்டே.
“உன் முகத்திலே ஒரு தெளிவு தெரியுது. ஆதியோடு உன் பேச்சு நன்றாக போனதா? உனக்கு என் மேல் கோபம் இல்லயே? என்னடா அம்மா நம்மை இக்கட்டில் மாட்டிவிட்டு விட்டாளேன்னு யோசிக்றியா?”
“மாட்டிவிட்டது என்னவோ உண்மை தான்.” கழுவிய தம்பளர்களை ரேகிக்கில் அடுக்கி வைத்துக் கொண்டே பேசினாள் சசி.
“போச்சு.. அப்ப ஊத்திக்கிச்சா?”
“உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லறேன் அம்மா.”
பார்க்கவியின் முகம் மலர்ந்தது. புன்னகை அரும்பியது.
“ஆனா.....நீங்க நினைக்கிற மாதிரியான கோனத்தில் இல்லை. ஆதி பாவம். குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். ஊர்மிளாவின் தற்கொலைக்கு காரணம் அவர் தான் என்று நினைக்கிறார்.. ரொம்ப மென்மையான மனசு அவருக்கு. இந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து அவர் விடுபடணும். தானும் செத்து அவரையும் மனசாலே சாகடிச்சிட்டு போயிருக்கா அந்த ஊர்மிளா. அதான் அவர் மேல் தவறு இல்லன்னு சொல்லிட்டு வந்தேன்.”
“ஆமா. பாவம் ஆதி. ராபர்ட் அதான் சொன்னான். சசியும் பாவம். இருவருக்கும் நேர்ந்த விபத்து இது. அவங்களுக்குள்ளே ஒரு ஒற்றுமை இருக்கு. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அது உதவும்ன்னு சொன்னான்.” பார்கவி சசியின் முக அசைவுகளை கவனித்தபடி சொன்னாள். சமயலறையை விட்டு வெளியே வந்தார்கள்.
வெளியே உலாவப் போயிருந்த அனந்து வந்துவிட்டார்.
“தூங்கப் போறேன். நீங்களும் போய் படுங்க. நாளைக்கு பேசிக்கலாம்.. பார்கவி அவளை ரொம்ப இம்சிக்காதே.” என்று விட்டு தன் அறைக்குள் போனார். பார்கவி சசியை சம்மதிக்க வைக்க போராடுவாள் என்று அவருக்குத் தெரியும். சசியே தான் முடிவு எடுக்க வேண்டும்.
டெரசில் நின்று கொண்டிருந்தார்கள் சசியும் பார்க்கவியும். சசியும் பேசத் துடிக்கிறாள் என்று பார்க்கவிக்கு தோன்றியது. அது நல்ல அறிகுறி.
“சசி ஆற அமர நீ முடிவெடுக்கலாம். ஒரு கேள்விக்கு மட்டும் நீ சின்ஸியரா பதில் சொல்லு. நீ இன்னமும் ஸ்ரீ திருந்துவான் என்று நம்பரையா? அவனுக்கு உன் மனசில் இன்னும் இடம் இருக்கா.”
சசி கண்களில் வலி எட்டிப் பார்த்தது. அவன் மேல் அவளுக்கு இருந்த காதல் கரைந்து போய்விட்டிருந்தது. அவன் சறுக்கிவிட்டான் என்று எண்ணுவதற்கில்லை. அவன் உறுதி எடுத்து விட்டான் என்று தெரிந்தது.
“அம்மா.....உங்க பிள்ளை ஒரு முடிவோடு தான் இருக்கார். பிள்ளைகளை வேண்டாம் என்றுவிட்டார். அதன் பிறக்கும் நான் அவரை தொங்கி கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கு.? எல்லாம் முடிந்து விட்டது.”
நிலவு மேகமில்லா வானத்தில் நீந்திக் கொண்டிருந்தது. தடையின்றி ஓளியை சிந்தியது. எல்லா தடையும் நீங்கி விட்டது. சசி அந்த நிலவு போல், ஒரு புதிய வாழ்வில் நீந்த வேண்டும் என்று விரும்பினாள் பார்கவி.. சசியே பேசினாள். அவள் குரலில் உறுதி.
“எனக்கு இன்னொரு வாழ்க்கை இனி தேவையில்லை அம்மா.. எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும் ஒரு தந்தையே பிள்ளைகளை ஏற்றுக் கொள்ளாத போது, யாரோ ஒருவன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது அதிகம். ஆதி மனசுக்கு ஏற்ற மாதிரி அவருக்கு பெண் பார்க்கப் போறேன்.” என்றாள்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் உணர்ந்தாள் பார்கவி.
“ஏன் அந்தப் பெண் நீயாக இருக்கக் கூடாது?” என்றாள் பார்கவி.
“ஏன்னா எனக்கு மகள்கள் இருக்காங்களே. அவர்களுக்கு தந்தையாக இரு என்று நான் அந்த உறவை அவர் மேல் திணிக்க முடியாதே.” என்றாள்
“அவன் அப்படி ஏற்றுக் கொண்டால்? உன் பதில் என்ன?”
“அவ்வளவு பரந்த மனம் அவருக்கு இருக்குமா என்ன? எனக்கு நம்பிக்கை இல்லை அம்மா. ஒரு மாற்றாந்தாய் பிள்ளைகளை கொடுமை படுத்துவாள் என்பது தான் நியதி. ஒரு பெண்ணே அப்படி என்றால், ஒரு ஆண் எப்படி ஸ்டெப் ஃபாதராக பொருந்துவான்? நிழல் நிஜமாகாது.”
இதற்கு பதில் சொல்ல பார்க்கவிக்குத் தெரியவில்லை.
தேடல் தொடரும்...