என்னைத் தேடும் நான்
அத்தியாயம் --20
என்னைத் தேடும் நான்
அத்தியாயம் –20
லட்சியம் இல்லாத வாழ்க்கை நீர் இல்லாத உலகம் போல வரண்டது என்று சொல்லலாம். சசிக்கு சின்னதாக ஒரு லட்சியம் உண்டு.
“பிறரிடம் எவ்வளவு ப்ரியமாக இருக்க முடியுமோ அவ்வளவு ப்ரியமாக இருக்க வேண்டும். அடுத்தவரை புரிந்து கொள்ள வேண்டும். பகை உணர்வு என்பதே மனசில் இருக்கக் கூடாது.” இது தான் சசியின் லட்சியம். சக மனிதர்களை எந்த எதிர்பார்ப்பும் இன்றி நேசிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்லவே! இதன் அடிப்படையில் தான் அவள் ஸ்ரீயை மன்னித்துக் கொண்டே வந்தாள். கல்யாணம் ஆன புதிதில் ஸ்ரீயிடம் அவள் தன் லட்சியத்தை சொன்னாள். அவன் சிரித்தான்.
“என்ன சிரிக்றீங்க? கேலி பண்றீங்க.” என்று சிணுங்கினாள். அப்ப அவன் சொன்ன பதில் இப்பொழுது புரிகிறது. அப்பொழுது புரியவில்லை.
“அப்ப நான் என்ன தவறு செய்தாலும் கவலை இல்லை. நீ என்னை மன்னிச்சு விடுவே. இல்லே?” என்றான். அவனின் அன்புப் பிடியில்...... அன்புப் பிடி என்று நினைத்துக் கொண்டாள்.....அந்த அழகான முகத்தை பார்த்துக் கொண்டு காதல் வழிய நின்ற போது புரியவில்லை, இவன் அவளை வைச்சு காப்பாற்றும் எண்ணம் உடையவன் இல்லை என்று.
சந்தேகம்.....இது ஒரு வியாதி. அந்த வியாதி குணமாக அவளும் தான் நிறைய டீரிட்மெண்ட் கொடுத்துவிட்டாள். மன்னிப்பு என்பது ஒரு வகை டிரீட்மெண்ட் தானே? கேள்விகள் கேட்டுவிட்டாள். பதில்களில் சுத்தம் இல்லை. அப்புறம் எதுக்கு நேசிப்பது? பகை கொள்ள விருப்பமில்லை. விலகி விடுவது நல்லது.
“சசி......மாமாவுக்கு லேசாக ஜுரம். ஆஸ்பத்திரி போயிட்டு வரேன்.” என்று கிளம்பினாள் பார்கவி.
“அம்மா எனக்கு இன்று லீவ் தானே?....இருங்க நான் மாமா கூட போயிட்டு வரேன்.” என்று முன் வந்தாள் சசி.
குழந்தைகள் இருவரும் ஓடி வந்தார்கள். “நாங்களும் வருவோம் உன் கூட.”
“ஆஸ்பத்திரிக்கு நீங்க எதுக்கு பட்டுஸ்? கேம்ஸ் விளையாடிட்டு இருங்க அம்மா அறை மணியில் வந்திடுவேன்.” என்றாள் சசி.
“சசி எதுக்கும் அவங்களையும் டாக்டரிடம் காண்பித்துவிட்டு வா. விடாது சளி. இனியா, ரம்யா வாங்க பாட்டி உடை மாத்தி விடறேன்.”
இருவரும் கூடவே கிளம்பி விட சசி வேறு வழி இல்லாமல் அவர்களையும் கூட்டிக் கொண்டு போனாள். ஆஸ்பத்திரியை அடைந்தார்கள். “பட்டுஸ். நோ ஷவுட்டிங்க....” என்றாள். .
சசி டோக்கன் வாங்கிக் கொண்டு வர உட்கார்ந்திருந்தார்கள். சின்னதாக ஒரு தேக அசௌகரியம் வந்தாலே போதும் மனிதர்கள் முகம் செத்துவிடுகிறது. மனிதர்கள் போக விரும்பாத ஒரு இடம் உண்டு என்றால் அது ஆஸ்பத்திரி தான். தோல்வி அடைந்தது போன்ற உணர்வும், உள்ளுக்குள் ஒரு பயமமும் வாரம் சிலருக்கு. உடம்பில் நல்ல ரத்தம் இருக்கும் வரை தானே ஆட முடியும்!
நாலு பேர் உள்ளே சென்று வந்த பின் இவர்கள் முறை வந்தது.
“வாங்க மாமா. ரம்யா இனியா அமைதியா இருக்கணும். வாங்க.” டாக்டரை பார்த்தபடி உட்கார்ந்தார்கள். டாக்டர் ஒரு வட நாட்டு மனிதர். சரியாக தமிழ் பேசவும் தெரியவில்லை. ஆங்கிலமும் அரைகுறை.. தமிழ நாட்டுக்கு வேலைக்கு வரும் இவர்களுக்கு தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் வருவதில்லை.? குறிப்பாக மருத்துவர்கள். ஏனென்றால் நோயாளிகளின் நோய் தெரிந்து மருத்துவம் செய்ய வேண்டும். ஒன்று கிடக்க ஒன்று செய்து வைத்தால், உடல் நிலை கெடும். அநந்து அவருக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் தன் பிரச்சனையை சொன்னார். அச்சா அச்சா என்று சொல்லி எதுவோ மருந்து எழுதிக் கொடுத்தான்.
“டாக்டர் இந்தப் பிள்ளைகளுக்கு சதா சளி. கொஞ்சம் பாருங்க.” என்று அவள் சொல்ல. டாக்டர் சுதீர் பிள்ளைகளிடம் வாஞ்சையுடன் பேசினார். பரிசோதனை பண்ணிவிட்டு சிரப் எழுதிக் கொடுத்தார்.
“வெரி ஸ்வீட் சில்ட்ரன்.” என்று சொல்லி இருவருக்கும் தன் இழுப்பறை திறந்து சாக்லேட் எடுத்துக் கொடுத்தார். பிள்ளைகள் அம்மாவை பார்க்க, சசி ஓ. கே என்று தலை ஆட்டியதும்....
“தேங்க்ஸ் டாக்டர்.” என்று சொல்லி மகிழச்சியுடன் வாங்கிக் கொண்டார்கள். கை கோர்த்துக் கொண்டு வெளியில் வந்தார்கள். அதை பார்த்து சசி கண்களில் நீர் நின்றது. இவ்வளவு அழகான குழந்தைகளை வேண்டாம் என்று ஒதுக்க ஸ்ரீக்கு எப்படி மனசு வருகிறது?
“இவன் என் வியாதிக்கு மருந்து எழுதிக் கொண்டுத்திருக்கானா? இல்லை இவன் கொடுத்திருக்கும் மருந்துக்கு ஏற்ப எனக்கு வியாதி வரணுமா?” என்று மாமனார் தமாஷாக சொல்ல சிரித்துவிட்டாள் சசி. எவ்வளவு நாளாச்சு இப்படி சிரித்து என்ற எண்ணம் வந்தது.
“மாமா குழந்தைகளோடு நீங்க காரில் போய் உக்காருங்க நான் ஆஸ்பத்திரி டீஸ்பென்சிரியில் மருந்து வாங்கிட்டு வரேன்.” என்றாள் சசி.
“சரிம்மா....” என்று விட்டு அவர் செல்ல சசி மருந்து வாங்கச் சென்றாள். அங்கே ஆதி நின்று கொண்டிருந்தான்.
“ஹாய் ஆதி.....இங்க என்ன பண்றீங்க? யாருக்கு மருந்து வாங்க வந்தீங்க?”
“சசி நீங்களா? உங்களுக்கு உடம்புக்கு என்ன.?”
“எனக்கு ஒன்றுமில்லை ஆதி. மாமாவுக்கு நல்ல ஜுரம். ரெண்டு நாளா மெட்டாசின் சாப்பிட்டார். குணமாகலை. அதான்.......ஆமா நீங்க யாருக்கு மருந்து வாங்க வந்தீங்க.?”
“அம்மா டிப்ரஷனில இருக்காங்க. ஊர்மிளா போனதிலிருந்து அம்மா பிரமை பிடித்தது போல இருக்காங்க. அதனாலே பி.பி கூடிடுச்சு. மயக்கம் வருது. டாக்டர் பார்த்திட்டு மருந்து கொடுதிருக்கார். அதே மாத்திரைகள் தான். டோஸ்சை கூட்டி இருக்கார். அம்மா காரில் இருக்காங்க. சசி......எவ்வளவு நாள் இப்படி அல்லாடனுமோ? அம்மாவை பார்த்துக்க வீட்டில் வேலைக்காரி இருக்காங்க.. நான் வேலைக்குப் போகணும் இல்லையா? அதான்.” என்றான்.
“கவலைப் படாதீங்க ஆதி. நீங்க ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோங்க. எல்லாம் சரியாயிடும். நான் ஒரு நாள் வந்து அம்மாவை பார்க்கிறேன். குழைந்தைகள் அருகில் நின்று இருக்க, அவர்களி கொஞ்சினான்.
“இனியா ரம்யா ரெண்டு பேரையும் கூட்டி வாங்க. அம்மாவுக்கு குழந்தைகள்ன்னா ரொம்ப பிடிக்கும்.” என்று ஒரு வேண்டுகோள் வைத்தான். “ஆகட்டும் ஆதி கட்டாயம் கூட்டி வரேன்.” விடை பெற்று கிளம்பினாள் சசி. “பை அங்கிள்.....” என்று குழந்தைகள் கை அசைத்தன. பதிலுக்கு அவனும் கை அசைத்தான். ஸ்வீட் சில்ட்ரன் என்று அவன் வாய் முணுமுணுத்தது. அம்மா நிச்சயம் இந்தப் பிள்ளைகளைப் பார்த்தால் மகழ்வாள். அவள் டிப்ரேஷன் குறையும். ஒரே அறையில் ஒன்றுமே எண்ணாமல் கிடந்ததால் கவலை அதிகம் ஆகிவிட்டது அவளுக்கு. .
சொல்லியபடி ஒரு நாள் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு ஆதி வீட்டுக்குச் சென்றாள் சசி. ஆதிக்கு பயங்கர சந்தோஷம்.
“வாங்க வாங்க...... வாங்க சசி. ரம்யா இனியா லவ்லி டூ ஸீ யு.” என்றான்.
“அங்கிள்......என்ன நீங்க இன்னும் தாடியை எடுக்கலையா? பூச்சாண்டி மாதிரி இருக்கீங்க.” என்று சிரித்தாள் இனியா.
“என்னமோ தெரியலை கண்ணு. தாடியை எடுக்கத் தோனலை.”
“இனியா....அப்படியெல்லாம் பேசக் கூடாது. நாட்டி கேர்ள்..”
ஆதியின் அம்மா புவனா குழந்தைகளை பார்த்ததும் முகம் மலர்ந்தார்.
“டுவீன்ஸ்சா.? ஹாய் செல்லம்ஸ். வாங்க வாங்க.” என்று இன் முகம் காட்டினாள். ஆதிக்கு ஆச்சரியம். இது நாள் வரை இறுகிய முகத்துடன் இருந்த அம்மாவா இது?
“எங்கம்மாவுக்கு சிரிக்கவே மறந்து போச்சுன்னு நினைச்சேன். பட்டாம்பூச்சி போல இவங்களை பார்த்ததும் வண்டாகிட்டாங்க.” என்று சொன்னான் ஆதி.
ரெண்டு மணி நேரம் போனது தெரியலை. புவனா பிள்ளைகளோடு பிள்ளையா பேச ஆரம்பித்தாள். கதை சொன்னாள். விடுகதை போட்டாள்.
“எறும்பை விட சின்னது எது?” என்று கேட்டாள். இருவரும் விழித்தார்கள்.
“எறும்பை விட சின்னது அது தீங்கற தீனி..” என்றவுடன் அவர்கள் கை தட்டி சிரிதார்கள். பார்க்கவியின் அறிவு விழித்துக் கொண்டது. பல விடு கதைகளை சொல்லி அவர்ளை சந்தோஷப்படுத்தினாள்.
ஆதி அவர்களுக்கு குளோப் ஜாமூன், முறுக்கு தட்டை என்று வாங்கி வைத்திருந்தான். எல்லாம் சாப்பிட்டுவிட்டு கேட்பரிஸ் வேணும் மாமா.. என்றாள் ரம்யா.
:”உதை வாங்கப் போற. அதெல்லாம் வேண்டாம் ஆதி. ரொம்ப சேட்டை அதிகமாகிவிட்டது.” என்றாள் சசி. அவள் சொல்வதை பொருட் டுத்தாமல் ஆதி ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு போய் சூப்பர் மார்க்கெட்டில் கை நிறைய சாக்லேட்ஸ் வாங்கி வந்து கொடுத்தான்.
“ஆதி.....இதுகள் அட்டகாசம் தாங்கலை. பல் டாக்டரிடம் தான் போகனும் இவ்வளவு சாக்லேட்ஸ் சாப்பிட்டா..” என்று கூறினாள்.
புவனா பிள்ளைகளை பிரிய மனம் இல்லாமல் விடை கொடுத்தாள். “இன்னொரு நாள் வரணும் சரியா குட்டிஸ்.” என்றாள்.
வீட்டுக்கு வந்தும் பிள்ளைகள் குஷியாக ஆதி பற்றியும் புவனா பற்றியும் பேசினார்கள். “அந்த பாட்டியும் அங்கிளும் ரொம்ப ஸ்வீட் பாட்டி.” என்று பார்க்கவியிடம் சொன்னார்கள்.
“இதுவரை இவங்க எந்த உறவு வீட்டுக்கும் போனதில்லை. யாரும் இவங்களை கொண்டாடியதில்லை. அதான் அவங்களுக்கு ஒரே உற்சாகம். பாரு, பிள்ளைகள் முகத்தில் எத்தனை சந்தோஷம்!” என்று மகிழ்ந்தாள் பார்கவி. அனந்துவும் சந்தோஷப் பட்டார்.
சசி வேலைக்குப் போவதால், அவளுக்கு சண்டே மட்டும் தான் விடுமுறை. அன்று தான் வாஷிங் டே....ஸ்பெஷல் குக்கிங் டே என்று அவளுக்கு நேரம் சரியாக இருக்கும். அதனால் மாலை நேரம் எப்போதாவது வெளியில் அழைத்துக் கொண்டு போவாள். ஆதிக்கு சனிக்ழமையும் விடுமுறை.
“சசி குழந்தைகளை தீம் பார்க் கூட்டிப் போகலாம்னு இருக்கேன். ஓ. கே யா.?” என்று கேட்டான்.
“உங்களுக்கு எதுக்கு சிரமம் ஆதி? அவங்களை சமாளிக்க முடியாது. ரொம்ப குறும்பு. பண்ணுவாங்க....” என்றாள்.
“குழந்தைகள் அப்படித் தான். அது தானே அழக்கு.” என்றான்.
ஒவ்வொரு சனிக் கிழமையும் ஆதி பிள்ளைகளை கூட்டிக் கொண்டு அவுட்டிங் போனான்.’
உண்மையில் அந்த நேரங்கள் பொன்னான நேரமாக அமைந்தது. ஆதிக்கும் பிள்ளைகளுக்கும் அழகானதோர் பிணைப்பை ஏற்படுத்தியது.
“சசி.....ஆதி ரொம்ப நல்ல மனுஷன்.” என்று பாராட்டினாள். இப்படியே ஒரு மாதம் போனது. ஒரு நாள் சசி பிள்ளைகளுடன் புவனாவை பார்க்கச் சென்றாள். புவனாவைப் பார்த்து ஆச்சரியப் பட்டுவிட்டாள். நோயாளியை போல் உயிரில்லா கண்களுடன் சோக சித்திரமாக இருந்த புவனா, இன்று மலர்ந்த சித்திரமாக இருந்தாள்.
“அம்மாவை பார்த்து ஆச்சர்யமா இருக்கா சசி.? அதுக்கு காரணம் குழந்தைகள் தான். ரொம்ப தேங்க்ஸ் சசி.”
“எதுக்கு தேங்க்ஸ் ஆதி? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
“இல்லே சசி. உனக்கு நன்றி சொல்லியே ஆகணும். நீ குழந்தைகளை அனுப்ப சம்மதித்திருக்காவிட்டால் இந்த மேஜிக் நடந்திருக்காது.”
“இனியா ரம்யாவிடம் கூட நல்ல மாற்றங்கள் தெரியுது. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ஆதி.” என்றாள் சசி.
சசிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனம் சீர் அடைய ஆரம்பித்தது. நிஜமாக இருந்த அவளின் துயரம் இப்பொழுது நிழலாக ஆகிவிட்டது. ஆதி குடும்பத்தோடு உறவு வலுக்கத் தொடங்கியது. பார்கவி மகிழச்சி அடைந்தாள். உள்ளூர அவளுக்கு ஒரு வேதனை இருந்து கொண்டே இருக்கிறது. அழகான அன்பான மனைவி. அருமையான குழந்தைகள். இவர்களோடு வாழ மகன் ஸ்ரீக்கு கொடுத்து வைக்கவில்லையே.! மகனை நினைத்து அந்தத் தாய் ரகசியமாக கண்ணீர் உகுக்கிறாள். சசிக்கு ஒரு வேளை ஆதியோடு கல்யாணம் ஆகிவிட்டால், அவள் சசியையும் குழந்தைகளையும் பிரிய நேரிடும். வாழ்க்கை வெறுமை ஆகிவிடும். ஸ்ரீ நீ ஏன் புத்தியில்லாமல் நடந்து கொள்கிறாய்? என்ற கேள்வியோடு துக்கம் சுமக்கிறாள் பார்கவி.
தேடல் தொடரும் .
.
..
.
.”

Last edited: