கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னைத் தேடும் நான்: அத்தியாயம்-3

sankariappan

Moderator
Staff member
என்னத் தேடும் நான்
அத்தியாயம் ==13

என்னைத் தேடும் நான்

அத்தியாயம் ==13

காலை நேரம். சுமார் ஆறு மணியிருக்கும். சசி பவளமல்லி செடிக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். நிறைய பூக்கள் தரையெங்கும் சிதறியிருந்தது. குட்டியூண்டு பூ தான், ஆனால் என்ன வாசனை! வேலைக்கு போக ஆரம்பித்ததிலிருந்து அவள் இந்த செடிக்கு நீர் ஊற்ற நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள். இப்பொழுது தான் அவள் வேலைக்குப் போக வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டாளே!. சாவகாசமாக செடிக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

பார்கவி எழுந்து கொண்டாள். அவள் பார்வை தோட்டத்துக்கு போன போது, அந்தக் காட்சியை கண்டாள். விரைந்து புறக்கடை வாசலுக்கு வந்தாள். சசி

வழக்கம் போல் குளித்து விட்டிருந்தாள். ஆனால் வழக்கம் போல் அலுவலகம் செல்லும் பரபரப்புடன் சமையல் அறையில் இல்லை.

“என்னாச்சு சசி?. நீ இந்நேரம் சமையல் அறையில் பிஸியா இருப்பே. இன்று என்ன செடிக்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கே? வேலைக்குப் போக நேரமாகலையா? “

“என் வாழ்க்கையில் தான் பூக்கள் பூக்கலை. செடியிலாவது நன்கு பூக்கட்டுமே. அதான் ஹவுஸ் வைஃப் ஆக இருக்கப் போறேன். உங்க புள்ள இனிமே என்னை சந்தேகிக்க இடமில்லே. அல்லவா?”

“என்ன சசி இது?. அவன் தான் இப்ப திருந்திட்டானே. உன்னை ராபர்ட் கம்பனியிலேயே வேலை பார்க்கலாம்ன்ணு சொல்லிட்டானே. உனக்கு சங்கடமா இருந்தா நான் சமையலை கவனிக்கிறேன். என்ன காய் பண்ணட்டும்.?”

சசி நீர் வாளியை போட்டுவிட்டு பார்கவி அருகில் வந்தாள்.

“அத்தே.. தப்பா நினைக்காதீங்க. நாய் வாலை நிமிர்த்த முடியாது. உங்க புள்ளக்கு செல்ஃப் கான்விடன்ஸ் கிடையாது. அதனாலே நான் எதிர் நீச்சல் போட முடியாது. உங்க சப்போர்ட் இருந்தாலும். அவருக்கு ஏது பிடிக்கும் தெரியுமா? அடக்க ஒடுக்கமா வீட்டில் உட்கார்ந்து கொண்டு......அவரின் தேவைகளை கவனித்து, அவர் சிரிக்கும் போது சிரித்து, கோபப்படும் போது அடங்கி, மாலை அவர் வரும் போது, தலையில் மல்லிப்பூ வச்சுக்கிட்டு.....முகத்தை அலங்காரம் பண்ணிக் கொண்டு சிரித்தபடி வரவேற்று..... “

“சசி.....நோ. அப்படியெல்லாம் நீ ஒடுங்கிடக் கூடாதுன்னு தான் உன் திறமையை வீண் ஆக்காமல் வேலைக்குப் போகச் சொன்னேன். வா வா. நானும் ஹெல்ப் பண்றேன். சமையலை முடிப்போம். நீ வேலைக்குப் போறே. வீட்டுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருந்தா பயித்தியம் பிடிக்கும்.”

சசி பதில் பேசாமல் மாமியாரை பின் தொடர்ந்தாள். வெண்டைக்காய் பச்சடி, மாங்காய் போட்ட சாம்பார் வைத்து இறக்கிய பின்னர் குக்கரில் அரிசியை போட்டு வைத்தாள் சசி. மணி ஏழு ஆனது. காப்பி கலந்து அவள் மாடிக்கு எடுத்துச் செல்ல போன போது பார்கவி சொன்னாள்.....

“அவன் கீழே வந்து காப்பி குடிக்கட்டும். இதோ உங்க மாமாவே காப்பி குடிக்க சமையல் அறையில் வந்து நிற்கிறார்.” என்றாள்.

“ஆமா சசி. ஆண்களை கெடுப்பதே இந்த பெண்கள் தான். காப்பியை அவன் இருக்கும் இடம் தேடி நீட்டுவது குளிக்க துண்டு முதல் கொண்டு போய் வைப்பது. அவன் துணிகளை துவைத்து காய வைத்து ஐயரன் பண்ணி வைப்பது.....இப்படி செஞ்சிட்டு இருந்தா எப்ப அவனுக்கு குடும்பப் பொறுப்பு வரும்? அவன் காரியத்தை அவனே பார்த்துக்கட்டும். நான் அவன் கிட்டே நேத்தே சொல்லியிருக்கேன். அவனே வந்திடுவான் பார்.” என்றார் அனந்து. அவர் சொல்லி வாய் மூடவில்லை ஸ்ரீ கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான்.

“குட் மார்னிங்க டூ ஆல். எனக்கா காப்பி?. கொடு சசி..” என்றான் ஸ்ரீ. சசியால் அவள் கண்களை நம்ப முடியவில்லை.

“சசி இன்னிக்கி ஆடிட்டிங் இருக்கு. நான் சீக்கிரம் கிளம்பனும். நீ வேலைக்குப் போக ரெடியாகு. நான் என் வேலைகளை பார்த்துக்கறேன்”

“அத்த.....என்ன அதிசயம்? அவர் உண்மையில் மாறிட்டாரா? நிஜம் தானா?” தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் சசி.

“அவன் நல்லவன் தான் சசி. உன் மேல் உள்ள அன்பால் தான் இப்படி நடக்கிறான். இப்ப தெளிவு வந்திருக்கு. சசி.....நீ கிளம்பு. உன்னை இப்படி வீட்டை சுற்றும் பூனை போல் பார்க்க என்னால் முடியாது சசி. கெட் ரெடி.”

“அத்த.....ஆர் யு சூர்?”

“டேம் சூர். சுறுசுறுப்பான ஜாலி சசி தான் என் சாயிஸ்.”

டப்பாக்களில் லஞ்ச் கட்டி வைத்த சசி, ஸ்ரீ சாப்பிட தோசை வார்க்க கல்லை காய வைத்தாள்.

அதற்குள் ஸ்ரீ குளித்து விட்டு வந்துவிட்டான். அவள் வார்த்த தோசையில் ரெண்டை சாப்பிட்டு விட்டு, லஞ்ச் பாக்ஸ் எடுத்துக் கொண்டு “சசி தேங்க்ஸ் உன் அருமையான தோசை சட்ணிக்கு’ என்று புகழ்ந்து விட்டு. அவள் கன்னத்தை தட்டி கொஞ்சிவிட்டு கிளம்பினான். அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டு சந்தோஷ ஸ்ரீயாக அலுவலகம் சென்று விட்டான். இதெல்லாம் கனவா நினைவா? என்றிருந்தது சசிக்கு.

வருந்தி வருந்தி அவனை எழுப்ப வேண்டும். வருந்தி வருந்தி பல் தேக்க வைக்க வேண்டும். குளிக்க துரத்த வேண்டும். அவன் உடுத்தப் போகும் உடைகளை எடுத்து வைக்க வேண்டும். ஷூ பாலிஷ் செய்து வைக்க வேண்டும். சிரிச்சுக்கிட்டே இருக்க வேண்டும்.....இவ்வளவு அல்லாடிய பிறகே அவன் அலுவலகம் செல்வான்.

இப்படியே இனி இருப்பானா? இது எவ்வளவு நிம்மதியாக இருக்கு. சிறு குழந்தையை கவனிப்பது போல் ஒரு முழு மனிதனை கவனிக்கும் இந்தப் பழக்கம் பழக்கி வைத்தது பெண்கள் தானே? எதற்கு தங்களை இப்படியெல்லாம் வருத்திக் கொள்கிறார்கள்? எங்கே அவன் நம் மேல் வைக்கும் அன்பு குறைந்து விடுமோ? அடுத்த பெண் மேல் அவன் கவனம் சென்று விடுமோ என்ற பயத்தாலா? கணவன் மனைவி உறவில் இருக்கும் சிக்கல்கள் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதைப் புரிந்து நடக்க சைக்காலஜி தெரியணும் போலிருக்கு.

“என்ன யோசிக்கிறே சசி? புருஷனை புரிஞ்சுக்க சைக்காலஜி படிச்சிருக்கணும் என்றா?”

“நீங்க என் மயிண்ட் வாய்ஸ் புரிஞ்சு பேசறீங்க. நீங்க சைக்காலஜி புக் படிச்சு இருக்கீங்களா?”

இருவரும் சாப்பிட உட்காரந்திருக்கிறார்கள். அனந்து ஒரு தட்டை எடுத்துக் கொண்டு அவரும் உட்காரந்து கொண்டார்.

“சைக்காலஜி என்பது என்னம்மா? அப்சர்வேஷன் தானே? நம் முன்னோர்கள் பல வருஷம் வாழ்ந்த வாழ்க்கையின் பலன் தான் சைக்காலஜி. அந்தக் கால வழக்கப்படி மனைவி கணவனை அனுசரித்து வாழ்ந்தாள். அதுக்கு காரணம் பெண்களின் படிப்பு முக்கியம் என்று கருட்கப்படவில்லை. சுயமா சிந்திக்க தைரியம் இல்லை. பொருளாதார சார்பு அடக்கி வாசிக்க வைத்தது. ஆண்களை நம்பி இருக்கணும். அப்ப அவனை பிளீஸ் பண்ணி வாழணும். அதான் நடந்தது. இப்ப பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். நான்கு படிக்கிறார்கள். சுயமா சிந்திக்கிறார்கள். அப்ப சைக்காலஜி மாறனும் தானே? ஆதனால் ஆண்களும் அனுசரித்து வாழ வேண்டிய சூழல். இதில் தப்பு ஒன்றும் இல்லை. இதெல்லாம் எனக்கு புரிய ரொம்ப வருஷம் ஆனது. ஸ்ரீ புரிந்து கொண்டிருப்பான் என்று நினைத்தேன். அவன் இன்னும் பழய ஆண் ஆதிக்க சிந்தனையிலேயே இருக்கிறான். அவனை வழிக்கு கொண்டு வர நாங்களும் உனக்கு ஹெல்ப் பண்ண வேண்டும் இல்லயா?”

சசி ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தாள். என் பையன் ஆம்பளை. நீ தான் அவனுக்கு அனுசரித்து போகணும்..... என்று டையலாக் அடிக்கும் பெண்கள் மாறாத வரை ஆண் ஆதிக்க சமுதாயம் மாறப் போவதில்லை. “தேங்க்ஸ் மாமா. நான் ரொம்ப கொடுத்து வச்சவ.” என்றாள் நெகிழ்வுடன்.

“நம்ம வீட்டை பொறுத்தவரை மகன் மருமகள் இருவருக்கும் ஈக்குவல் ரைட்ஸ் தான். அப்புறம் பெண்ணை பெற்றவர்கள் மகளிடம் புருஷனை முந்தானையில் முடிஞ்சு வை என்று சொல்வதையும் நாங்க ஆதரிக்கலை.” என்றார்.

“நீங்க இருவரும் தான் எனக்கு அப்பா அம்மா.” என்றாள் சசி. மன நிறைவுடன் அவள் வேலைக்குச் சென்றாள். ராபர்ட்டுடன் மதியம் லஞ்ச சாப்பிடும் போது அவள் இதை அவனிடம் பகிர்ந்து கொண்டாள்

“ஆன்ட்டி அன்ட் அங்கிள் செம ஜோடி. யு ஆர் ரியலி லக்கி.” என்றான் அவன். ஒரு மாசம் சசிக்கு வாழ்க்கை எல்லோருக்கும் போல் இயல்பாக போய்க் கொண்டிருந்தது. ஸ்ரீ உண்மையில் பழைய ஸ்பாயில்ட் பிராட் இல்லை. அவனை அவனே கவனித்துக் கொண்டதும் அல்லாமல் அவளையும் கவனிக்கும் கூடுதல் குணத்தையும் வளர்த்துக் கொண்டிருந்தான்.

தடம் புரளுமோ என்று பயந்த கல்யாண வாழ்க்கை இனிய திருப்பத்துடன் செல்வது குறித்து சசி சந்தோஷமானாள். இவரிடம் இவ்வளவு நல்ல மறுபக்கம் உள்ளதா என்று அவளே அசந்து போனாள். கல்யாணம் ஆனா புதிதில் இருந்த அந்நியோன்யம் சொற்கத்தைக் காட்டியது.

“நீ ரெஸ்ட் எடு. நான் போய் உனக்கு பால் எடுத்து வரேன்.”

“நீ உக்காரு. நான் யாருன்னு பார்க்கிறேன்.”

“நீ முதல்லே சாப்பிட்டு படு. தலைவலி குறையும். நான் எடுகத்துப் போட்டு சாப்பிட்டுக்கிறேன்.”

சொன்னது ஸ்ரீ தானா என்று அவள் நினைத்தது போய், அவளும் அவன் கொடுத்த செல்லத்தில் பெண்மையின் பூரணத்துவத்தை உணர்ந்தாள். இன்னும் அது பூரணம் ஆக அவளுக்கு உணவு உமாட்டா ஆரம்பித்தது. தாய்மையின் முதல் படியில் அவள் கால வைக்கிறாள்.

“முதலில் ஸ்ரீயிடம் சொல்ல வேண்டும்.” என்று அவள் அவன் வருகைக்காக காத்திருக்கிறாள்.

தேடல் தொடரும்

.





.

. . .
 
Top