என்னைத் தேடும் நான் .
அத்தியாயம் ==9
என்னைத் தேடும் நான்
அத்தியாயம்==9
சசி பயந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தாள். கணவனின் பார்வை அவளுக்குப் பிடிக்கவில்லை. திருடனை பிடிக்கிற போலீஸ் போல் அவன் கண்கள் குற்றம் சொல்லும் விதமாக சினந்து பார்த்தது.
“என்ன இவ்வளவு லேட்?” குரலிலேயே அவளை அரெஸ்ட் பண்ணினான்.
“அத்த எங்கே காணும்? மாமா கூட இல்லை.”
“நீ பண்ணும் பாவத்துக்கு பிராயச்சித்தம் தேட கோவிலுக்குப் போயிருக்காங்க. இந்த வீடு கோவில் மாதிரி இருந்தது. நீ இதில் அந்தக் காலத்து தேவதாசி மாதிரி வந்திட்டே. பொட்டு கட்டி உன்னை நான் விடலை சசி. எவனோடவோ என்ன குலாட்டல் வேண்டி இருக்கு.? போனாப் போவுதுன்னு வேலைக்கு அனுப்பினா, இப்படித்தான் அட்வான்டேஜ் எடுத்துப்பியா.?”
தாய் பார்கவி வீட்டில் இல்லாத தைரியத்தில் அவன் தன் ரௌத்திரம் தணியும் வரை ஆசை தீர திட்டித் தீர்த்தான். சசி பதில் ஏதும் பேசவில்லை. கை கால் முகம் கழுவி, சூடாக காப்பி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். அவள் நிதானம் அவனுக்கு மேலும் எரிச்சலைக் கிளப்பியது. அது ஆணவம் என்று அவன் எண்ணினான்.
“ஒன்றும் வேண்டாம். நீயே கொட்டிக்க. கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. என்ன உபசாரம் வேண்டியிருக்கு தர்மபத்தினி மாதிரி?. அந்த ராபர்ட் உனக்கு என்ன மந்திரம் போட்டான்.?”
“சந்தேகம் ஒரு வியாதி ஸ்ரீ. அந்த வியாதியை போக்கணும்ன்னா நீங்க ஒரு மனநல மருத்துவர் கிட்டே போவனும். அவர் தான் உங்க கேளவிக்கெல்லாம் பதில் சொல்வார். அவ்வளவு தான் சொல்வேன்.”
“அது சரி உன்னோட உல்லாச நடவடிக்கையை நான் கண்டுபிடிச்சதும் நீ என்னையே பைத்தியக்காரன்னு சொல்ல துணிஞ்சிட்டே இல்லே?’
“ராத்திரிக்கு உங்களுக்கு என்ன வேணும்? தோசையா உப்புமாவா? சொல்லுங்க, நான் பிரேபர் பண்ணிட்டு.....கொஞ்சம் ஆபீஸ் வர்க் இருக்கு பார்க்கணும். உங்க கிட்டே மல்லுக்கட்ட எனக்கு நேரமில்லை.”
“எவ்வளவு திமிர் உனக்கு? எல்லாம் அம்மா கொடுக்கிற இடம். உன்னை.....” அவன் கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்தான், அவன் கையை ஒரு கரம் பிடித்தது. பார்கவி உள்ளே வந்து விட்டிருந்தாள்.
“என்னடா நடக்குது இங்கே? கொஞ்ச நேரம் நான் வீட்டில் இல்லேன்னா, ரவுடி மாதிரி பிகேவ் பணனுவியா? சே..... உன்னை என் மகன்ன்னு சொல்லவே அவமானமா இருக்கு. பொத்திக்கிட்டு இரு.”
பிரசாத தட்டில் இருந்த விபூதியை எடுத்து சசி நெற்றியில் பூசி ஆசீர்வதித்தாள். மல்லிகை பூவை அவள் தலையில் சூட்டினாள்.
“சசி......என் மகன் செய்த தப்புக்கு நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன். என்னங்க......உங்க மகன் திருவிளையாடலை ரசித்து பார்த்திட்டு இருக்கீங்களா?. கொஞ்சம் தேங்காயை துருவித் தாங்க. சட்னி அரைக்கணும்,” என்றுவிட்டு பார்கவி அடுக்களைக்குள் சென்றாள்.
“ஏண்டா இப்படி உங்க அம்மாக் கிட்டே வாங்கி கட்டிக்கிறே.? பொண்டாட்டியை சந்தோஷமா வச்சுகுக்கணும் டா. அப்ப தான் வம்சம் விருத்தி அடையும். வீடு கலகலன்னு இருக்கும்.” அப்பா இப்படி சொல்வார் என்று ஸ்ரீ எதிர்பார்க்கவில்லை. இதுவரை அம்மா தான் சசியின் வால் என்று எண்ணியிருந்தான். இன்று அப்பாவும் அந்த லிஸ்ட் என்று புரிந்து கொண்டான். “போங்க போங்க.....காலடியில் போய் விழுங்க. இந்த வீட்டிலே ஆம்பளை யாருமில்லை.” என்று முணுமுணுத்தான் ஸ்ரீ.
“என்னாடா சொல்றே? சத்தமா தான் சொல்லேன்.” என்றார் அப்பா.
“உங்களை இனிமே ஃபாலோ பண்ணறேன்னு சொன்னேன். போங்க தர்ம பத்தினிக்கு தேங்காயை துருவிக் கொடுங்க. இல்லே உங்களை துருவீடுவாங்க.....மேடம் பார்கவி.” என்றான் அவன் ஆத்திரத்துடன். அதை ஓரு ஜோக் என்று எடுத்துக் கொண்டு சத்தமாக சிரித்தார் அவர். சசியும் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டாள்.
“அப்ப......நீங்க தேங்காய் துருவ ரெடி ஆக்கிட்டீங்க. நல்ல மாற்றம்.” என்றும் சொல்லி மேலும் சிரித்தாள்.
இனி வாலாட்ட முடியாத கோபத்தில் உம்மென்று சோபாவில் சாயிந்து, செய்தித் தாள் வாசிப்பது போல் உட்கார்ந்து கொண்டான் ஸ்ரீ.
இரவு உணவு முடிந்த கையோடு சிறிது நேரம் மாமியாரோடு சீரியல் பார்த்துவிட்டு உறங்கப் போனாள் சசி. அவள் உள்ளே நுழைந்தது தான் தாமதம் அவன் அவளை உள்ளே இழுத்து கதவை அடைத்தான்.
“என்னடி கிண்டலா பண்ணி சிரிக்கிறே? இப்ப வாலாட்டு பார்ப்போம்.? படுக்கை அறையில் உன் ஜம்பம் சாயாது கண்ணு.”
“ஏன்? இது தானே தலையணை மந்திரம் போடும் இடம்.”
“அதெல்லாம் என்னிடம் பலிக்காது. நீ என்ன தான் பல்லை இளித்து வேசி போல் ஆட்டம் போட்டாலும் நான் ஒண்ணும் ராபர்ட் இல்லே மயங்க.” என்றான். அவளுக்கு ஆத்திரத்தை வரவழைக்க, மனசை புண்படுத்தவே அவன் அந்த தகாத வாரத்தைகளை சொன்னான்.
ஒரு கணம் சசி உடைந்து போனாள். அப்பொழுது பார்கவி அவளுக்கு சொன்ன வார்த்தைகள் அவளைக் கட்டிப் போட்டது.
“சசி........ஸ்ரீ ஏன் கோபமா இருக்கான்னு கேட்டேன். நீயும் சொல்லிட்டே. இனி நீ படுக்கப் போனதும் அவன் உன்னை அடிக்க வரலாம். பேசாமல் எழுந்து வந்துவிடு. நான் இருக்கேன் உனக்கு. வீணா கத்தி உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதே. அவனை நான் பார்த்துகறேன்.”
கத்துவாள் ஆர்ப்பாட்டம் பண்ணுவாள் என்று அவன் காத்திட்டு இருக்க சசி சொன்னாள். “நீங்க மயங்க வேண்டாம் விஸ்வாமித்திர பிரபு. எனக்கு தூக்கம் வருது. ஓவர் டூ மை சிலிப்பிங் தேவதை.”
படுத்துக் கொண்டாள். கண்களை மூடினாள். அவள் கண்ணீர் அவள் இதயத்தில் விழுந்தது. அவன் இதயத்தில் வன்மம் கூடியது.
பார்கவி தூங்காமல் விழித்துக் கொடிருந்தாள். சசியை அவள் தன் மகளாக நினைக்கிறாள். சசியை அவள் ஆதரிப்பதற்கு அது மட்டுமல்ல காரணம். ஸ்ரீயின் அப்பா, அதாவது அவள் கணவர் அவளுக்கு செய்த கொடுமை.......பல ஆண்டுகள் முந்தி ஏற்பட்ட வலியான அனுபவங்களே அதுக்கு முக்கிய காரணம். தான் அவதிப்பட்டு நின்றது போல் சசி நிற்கக் கூடாது என்கிற நல்லெண்ணமே உண்மையான காரணம்.
இருபது வயது பார்கவி. சிட்டு போல் பரபரத்து ஓடி ஆடி வேலை செய்யும் பார்கவி. மரியாதையும் கருணையும் கொண்ட பார்கவி புகுந்த வீட்டுக்கு வந்தபோது அவளை தென்றலாக எண்ணாமல்....... சுனாமியாக நினைத்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்தவள் அவள் மாமியார் சாம்பவி.
“தரையை மெழுகச் சொன்னால், தரைக்கு வலிக்குமோன்னு துடைக்கிறே. பாரு எவ்வளவு அழுக்கு இருக்கு? இது தான் உன் ஆத்தா கத்துக் கொடுத்தாளா? நல்ல பொண்ணு மருமகளா வந்து சேர்ந்தே......”
நாம் தான் நல்ல துடைக்கவில்லை போல என்று பார்கவி கவனம் எடுத்து துடைத்த போதும், அதே வசை பாடி நின்றாள். விரைவில் புரிந்துவிட்டது வேண்டுமென்றே தான் குற்றம் கண்டுபிடிக்கிறாள் என்று. ஒரு முறை கணவனிடம் அது பற்றி பிரஸ்தாபித்தாள்.
“என்னங்க.......உங்கம்மா இன்னிக்கு என்னை மூதேவி, பழ ராட்டுன்னு எல்லாம் திட்டறாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.”
கல்யாணமாகி மூன்று மாதம் ஆகவில்லை. எனவே மெருகு கலையாத அழகு மனைவியின் கண்ணீர் கண்டு ஆனந்து மெழுகாக உறுகிவிட்டார். நேராக அம்மாவிடம் போய் “அம்மா......வீட்டுக்கு வந்த மகாலட்சுமியை எதுக்கு மூதேவின்னு திட்டற.? இனிமே அப்படி எல்லாம் சொன்னே நான் சும்மா இருக்க மாட்டேன். என் பெண்டாட்டி என்ன மூதேவியா?”
சாம்பவி இதை எதிர்பார்க்கவில்லை. தலையணை மந்திரம் வேலை செய்கிறது என்று கணக்கு போட்டாள். மிகவும் நைச்சியமாக சொன்னாள்.
“தப்பு தாண்டா. ஏதோ கோபத்திலே சொல்லிட்டேன். உன் உடைகளை துவைக்கிறேன்ன்னு கிழிச்சிட்டா. வாங்கி ஆறு மாசம் கூட ஆகலை. அதான் கவனமா இருன்னு கொஞ்சம் அழுத்தி சொல்லிட்டேன். வீட்டு வேலை நல்ல செய்வா, நமக்கு ஒத்தாசையா இருப்பான்னு நினச்சேன். பராவயில்லே நானே உன் உடைகளை துவைக்கிறேன், வழக்கம் போல. அப்ப சண்டை வராது பாரு. நீ விசனப்படாதே ராஜா. இனிமே அப்படி சொல்ல மாட்டேன். உன் மனசு புண்படும்படி உன் பெண்டாட்டியை திட்ட மாட்டேன்.” உண்மையில் வருந்துவது போல் உருகி சொன்ன அம்மாவை அசடு வழிய பார்த்த அனந்து......
“அதுக்கில்லேம்மா பாவம் சின்னை பொண்ணு. அதான். நாம தானே அவளுக்கு இனி எல்லாம்.” என்றான். அது தான் அவன் கடைசியாக மனைவிக்கு பரிந்து பேசிய வார்த்தைகள். சாம்பவிக்கு குயுக்தியான புத்தி பார்க்கவியை மறைமுகமாக ஜாடையாக திட்டுவது, சாப்பிட பழசு பட்டையை கொடுப்பது என்று சித்திரவதை செய்தாள். பயந்து கொண்டே இருந்த பார்கவி என்ன செய்வது என்று கலங்கினாள். சும்மா சும்மா கணவனிடம் புகார் சொன்னால் சண்டை ஆகிவிடும் என்று மென்று விழுங்கினாள். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மாமியாரை எதிர்த்து பேசிவிட்டாள். மௌனமாக இருந்த சாம்பவி மகன் வந்ததும் இல்லாததும் பொல்லாததும் சொல்லி கண்ணீர் வடித்தாள்.
“ஏன்டீ.....எங்கம்மாவையே மூதேவின்னு சொல்லுவியா?” என்று அடி பின்னிவிட்டான். அதிர்ச்சியில் உறைந்து போனாள் பார்கவி.
“நான் அப்படி சொல்லவே இல்லைங்க. பொய் சொல்றாங்க.” என்றாள். எங்கம்மா பொய் சொல்றாளா? அடிப் பாவி. எங்கம்மா சொன்னது சரிதான். நீ சாகசக்காரி தான்..” என்று சொல்லி மேலும் ரெண்டு சாத்து கொடுத்தான்.
முப்பது வருஷத்து முந்திய கதை. அனந்து திருந்தியது கூட ஒரு அதிசயம் தான். ஆட்டம் போட்ட சாம்பவிக்கு நோய் வந்து படுத்த படுக்கை ஆனாள். பார்கவி தான் கருணை மனதோடு பார்த்துக் கொண்டாள். மூன்று வருடம் ஆகிவிட்டது சாம்பவிக்கு குணமாகவில்லை. அந்த சமயம் அவள் கர்பம் தரித்தாள். சோர்ந்து சோர்ந்து வந்தது அவளுக்கு.. வீட்டு வேலையும் பார்த்து, மாமியாரையும் கவனித்து சுழன்று சுழன்று வேலை பார்த்த பார்க்கவிக்கு, மசக்கையினால் ஒன்றுமே பார்க்க முடியவில்லை.
ஒரு நாள் சாம்பவி தண்ணீர் வேண்டுமென்று கேட்டு கேட்டு பார்த்துவிட்டு, பார்கவி வராததால் தானே தரையில் உட்கார்ந்து இழுத்து இழுத்து சென்று தண்ணீர் பானை அருகே போய் மோந்து குடிக்க முயன்றாள். அவள் கை தட்டி பானை கவிழ்ந்து ஜில்லென்ற நீர் அவள் மேலெல்லாம் அபிஷேகம் ஆனது. மண்பானையின் ஜில் தண்ணீர் கிழவியை நடுங்க வைத்தது பார்கவி வாந்தி எடுத்து மயக்கத்தில் கட்டிலில் கிடந்தாள். அப்பொழுது வந்த அனந்து.......அம்மாவின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அம்மாவை தூக்கி கட்டிலில் கிடத்தி......
“என்னம்மா நீ பார்க்கவியை கூப்பிட்டிருக்க கூடாதா? பார் தண்ணி கொட்டி உடையெல்லாம் நனைந்திருக்கு. ஜுரம் வரப் போக்குதுமா.” என்றான்.
“கூப்பிட்டேன்ப்பா. அவ பாட்டு கேட்டிட்டு இருந்தா. என் கத்தலை கேர் பண்ணவே இல்லை. அப்படியே தன் அறைக்கு ஓடிட்டா. எனக்கு தாகம் நாக்கை வரட்டியது......” ஈனஸ்வரத்தில் சொன்னாலும் நன்றாக போட்டுக் கொடுத்து விட்டாள் கிழவி. குளிரில் நடுங்க வைத்து விட்டாள் என்று குமறிக் கொண்டு வந்த கோபம் அப்படி சொல்ல வைத்தது.
“பாட்டா கேக்கறா.? அந்த ரேடியோவை உடைக்கிறேன் பாரு.” ஆவேசமாக அவன் சென்று பார்க்கவி முடியை பிடித்து இழுத்து தரையில் தள்ளி விட்டான். அதில் அவள் மயங்கி கிடைக்க பயந்து போனான். டாக்டரிடம் போன போது பார்கவி கர்பம் என்று தெரிய வந்தது.
“முடியலைங்க. நான் மயங்கிட்டேன் அதான் தப்பு நடந்து போச்சு.” என்றாள் தனக்கு தெரிந்த டாக்டரிடம் போய் கர்பத்தை கலைத்து விட ஏற்பாடு பண்ணிவிட்டான் அனந்து.
“அம்மா இனி நீ கவலைப்பட வேண்டாம். அவள் கர்பமாக இருந்தாள். அதான் உன்னை கவனிக்காமல் இருந்துவிட்டாள். எனக்கு உன்னை விட வாரிசு பெரிசில்லை அம்மா. அதான் கலைத்து விட சொல்லிட்டேன். இனிமேல் தப்பு நடக்காது.” என்று பெருமை பொங்க சொன்னான்.
“என்னடா சொல்றே? அவள் இதுக்கு எப்படி சம்மதித்தாள்.?”
“அவள் சம்மதம் எதுக்கு? எனக்கு நீ தான் முக்கியம் அம்மா.”
“முட்டாப் பயலே. நம்ம குலவிளக்கை அழிச்சிட்டியே. நான் சாகறதுக்குள்ளே பேரனை பார்த்திட்டு சாகலாமுன்னு இருந்தேன். அவளை மலடி மலடின்னு குத்தி காட்டிட்டு இருந்தேன். இப்படி பண்ணிட்டியேடா. முதல்ல ஒரு ஆளைப் போடு என்னை பார்த்துக்கறதுக்கு.” என்று மனம் இளகி அவள் சொல்லவும் தான் அவனுக்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கோம் என்று உறுத்தியது.
கிழவிக்கு அதன் பின் தான் மனம் இளகியது. தனக்காக மகன் தன் வாரிசையே அழிச்சிருக்கான். அவன் நல்ல மனசுக்கு ஒரு வாரிசு வேண்டாமா? இனி பார்கவியை துன்புறுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள். மருமகள் மேல் கொஞ்சம் கருணை காட்டினாள்.
ஸ்ரீ பிறந்து பேரனை பார்த்துவிட்டுத் தான் கிழவி மண்டையை போட்டாள். அதற்கு பின் தான் அனந்து திருந்து புது மனிதனாக ஆனான்.
பார்கவி இதனால் தான் சசியை எப்பொழுதும் ஆதரித்து வந்தாள். அப்பனை போலவே தப்பாம வந்திருக்கான். அப்பனாவது அம்மா பேச்சைக் கேட்டு கொடுமை படுத்தினான். இவன் எதுக்கு இப்படி நடந்துக்கறான் என்று அவளுக்குப் புரியவில்லை. அவனுடன் பேசணும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
பாசம் ஒரு புறம். மகனின் மூர்க்கம் கண்டு வெறுப்பு ஒரு புறம் என்று பார்கவி மனதுக்குள் போராடிக் கொண்டிருந்தாள்.
தேடல் தொடரும்
.