" என்னை தீண்டும் நிழலே - 1"
இரவின் அழகை மெருகேற்றிக் கொண்டிருந்த சந்திரன் மறைந்து,சூரியன் அனைவரின் கண்களையும் தழுவிக் கொண்டிருந்தார்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவன் ! திடீரென நிழல் போல் ஒரு உருவம் தெரிய அதை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் நெருங்க நெருங்க அந்த நிழல் பின்னே சென்றது.
இரு கைகளும் அந்த நிழலை தொட நினைத்து நீள, அவன் கண்களும் திறந்தன.. "போச்சுடா இன்னைக்கும் ஓடிட்டியா" என முணுமுணுத்துக் கொண்டே மீண்டும் படுக்கையில் படுத்தான் அவன். இவன்தான் "முகிலன்".
நடுத்தரமான உயரமும் கட்டுமஸ்தான உடலும் பெற்றிருந்தான். அவனின் சிவந்த இதழ்களே அவனிடம் புகைபிடிக்கும் பழக்கம் இல்லை என்பதை உணர்த்தும். பிறை போன்ற நெற்றியையும் அகன்ற காதுகளையும் உடையவன். துருதுருவென இருக்கும் அவனது இயல்பிற்கும் குறுகுறுவென பார்க்கும் அவனது பார்வைக்கும் மயங்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். தன் பேச்சிற்கே அனைவரையும் அடிமை ஆக்கி விடுவான். அவனே நம் முகிலன்.
சில நாட்களாகவே நம் முகிலனுக்கு காலை கண் விழிக்கும் முன் நிழல் போல் ஒரு உருவம் தெரிய ஆரம்பித்தது. அவன், கண் விழித்தாலோ இல்லை அதைத் தொட நினைத்தாலோ அந்த உருவம் மறைந்து விடுகிறது. அந்த நிழல் ஒரு பெண்ணின் நிழல் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. அந்த நிழலின் பிரதிபலிப்போ அழகிய பெண் தேவதையாய் காட்சியளித்தது.
முதலில் அந்த நிழலை பார்த்து அவன் பயந்தாலும், பின் நாளுக்கு நாள் அதை ரசிக்கவே தொடங்கினான். அந்த நிழலில் உள்ள எதோ ஒன்று அவனை ஈர்க்க தொடங்கியது. அந்த முகத்தின் வடிவமும் நீண்ட கழுத்தும் அவனை மெய்மறக்க செய்தது.
இந்த உலகத்தில் யாரும் காரணமின்றி பிறக்க மாட்டார்கள் என நம்புபவன் முகிலன். அதேபோல் நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் என நினைப்பான்.
படுக்கையில் படுத்திருந்த முகிலன் யோசனையில் மூழ்கினான்....
"ஏன் இந்த நிழல் என்னை இப்படி படுத்துகிறது?. அதை பார்க்கும் பொழுது என்னுள் ஏதோ மாற்றம் நிகழ்கிறதே ! ஒரு வேலை இவளே எனக்கானவளா இருப்பாளோ!.அதை தான் கடவுள் சொல்லாமல் சொல்கிறாரோ" என எண்ணினான்.
நிழலாய் வருபவளை, என்று? நாம் நிஜமாய் காண்போம் என தினமும் ஏங்கி கொண்டிருந்தான். ஆனால் அந்த நிழலோ தினமும் நிஜத்தை காட்டாமல் அவனை ஏமாற்றிக்கொண்டிருந்தது. முகிலனோ இன்று பார்த்து விடுவோமோ இல்லை நாளை பார்த்து விடுவோமோ என நாட்களை கடத்திக்கொண்டிருந்தான். அந்த நிழலில் தன்னை மறந்து அதை காதலிக்கவும் ஆரம்பித்தான்.
"நீ எங்க இருக்கையோ தெரியல டி, ஆனா என் உசுரோட கலந்துட்ட..! உன்னை கண்டுபிடித்து உன் பிம்பத்தையும் காதல் செய்வேன் டி "என முனவி கொண்டிருந்தான் முகிலன்.
"....
என்னை தீண்டும் நிழலே !
உன்னை கண்ணுக்குள் வைத்து உனக்காக காத்திருப்பேன் நானே !!
என்னை அறியாமலே என் நிழலும் உன் நிழலும் இணைய விரும்புதே !
நிழல் எது நிஜம் எது என மனம் புரிய மறுக்குதே !!
பல ஆயிரம் முறை உன் நிழலை பார்த்து ரசித்தேனே!
இன்னும் உன் முழுமதி முகம் காண என் உயிர் துடிக்குதே !
நிலவின் வெளிச்சத்தில் இருள் என உன்னை கண்டேனே !
கனவில் கூட உன் விழி காண காத்திருக்கிறேன் நானே !!
உன் நிஜம் காண காத்திருக்கும் என் கண்களும் தானே !
நிஜம் கண்ட நொடி முதல் என் நிழலும் நீதானே !!
....."
"டேய் முகிலா ! சீக்கிரம் கீழே வாடா நேரம் ஆச்சு இன்னும் பத்து சிமிஷத்துல நாம கோவில்ல இருக்கனும்" என உரக்க கூறிக்கொண்டிருந்தாள் முகிலனின் தாய் செல்வி.
"டோன்ட் ஒர்ரி செல்லிம்மா இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்" என கூறினான் முகிலன்.
"சே! நம்மள நிம்மதியா கனவு காண கூட விடமாட்டாங்க போல " என சலித்து கொண்டே குளிக்க சென்றான் அவன் .
நிழல் நிஜமாகும்....
-நந்தினி மோகனமுருகன்