கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை தீண்டும் நிழலே! - 11

என்னை தீண்டும் நிழலே! - 11



நிச்சயம் முடிந்து அனைத்து உறவினர்களும் உணவருந்தி விடை பெற்று சென்றுகொண்டிருந்தனர்.

கயல்விழியை தனம் அழைத்து தன் உறவினர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது அவளை பார்த்த அந்த கூல் ட்ரிங்க்ஸ் சப்ளையர் முகிலனை அழைத்து இவங்க தான் உங்ககிட்ட இந்த கார்டை குடுக்க சொன்னார்கள் என்று கயல்விழியை காமித்து கூறினான்.

"இவங்களா குடுக்க சொன்னாங்க நல்லா பார்த்து சொல்லு"என கயல்விழியை காமித்து மறுபடியும் கேட்டான் முகிலன்.

அந்த சப்ளையர் "இவங்க தான் குடுத்தாங்க" என உறுதியாக கூறினான்.

முகிலனுக்கு ஆச்சர்யம் மற்றும் குழப்பமாக இருந்து, எதுக்கு கயல் நம்மகிட்ட அதை குடுக்க சொன்னாள் என யோசித்தான்.

சரி அவகிட்டயே கேட்ருவோம் என நினைத்து அவளை காண சென்றான்.

கயல்விழி காயத்ரியுடன் பேசி கொண்டிருந்தாள்.

முகிலன் கயல்விழியிடம் மொட்டை மாடிக்கு வா உன்கிட்ட தனியா பேசணும் என அவள் காதில் மட்டும் விழுமாறு பேசி சென்றான்.

இதை கேட்ட கயல்விழிக்கு, இவன் இப்போ நிஜமா நம்மகிட்ட பேசுனானா இல்லை நம்மளோட பிரமையா என யோசித்தாள்.

தனியா பேசணும்னா சொன்னான்? சரி மேல போய் தான் பாப்போம் என எண்ணி மேலே சென்றாள்.

மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது அங்கே யாரும் இல்லை. அட நம்ம பிரமை தான் போல என கூறிக்கொண்டு கீழே இறங்க திரும்பினாள்.

அவள் பின்னால் முகிலன் நிற்க, அதை சற்றும் எதிர்பாராத கயல்விழி கீழே விழ சென்று பின் சுதாரித்து நின்றாள்.

முகிலன் நீங்களா ! என திகைப்பும் ஆச்சர்யமுமாய் கேட்டாள் கயல்விழி.

ஆமாம் நான் தான் பிரமை இல்லை நிஜம் என முகிலன் பதில் கூறினான்.

ஏன் இப்படி இருக்கான், எதுக்கு நம்மல இங்க வர சொல்லிருப்பான் என குழப்பத்துடன் நின்றாள் கயல்விழி.

முகிலன் தன் கையில் இருந்த கார்டுகளை கயல்வியிடம் காண்பித்து என்ன இதெல்லாம் என கேட்டான்.

அதை பார்த்த கயல்விழி, " போச்சு கண்டுபிடிச்சுட்டான் எப்படி சமாளிப்பது" என மனதில் பேசி கொண்டிருந்தாள்.

"பேசாம இருந்தா என்ன அர்த்தம் கயல், இதெல்லாம் நீதான் குடுத்தனுப்பினைனு தெரிஞ்சிடுச்சு பதில் சொல்லு" என முகிலன் கூறினான்.

மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு, " ஆமாம் நான் தான் குடுத்தேன், நான் உங்களை ரொம்ப லவ் பண்றேன். எப்போ எப்படினு தெரில ஆனா உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு " என முகிலனிடம் கயல்விழி கூறினாள்.

இதை கேட்ட முகிலனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவளை பிடிக்கவில்லை என்று சொல்லவும் முடியவில்லை ஏனென்றால் அவனுக்கு கயல்விழியை நிறைய பிடிக்கும் இருந்தும் தன்னவள் யார் என்றும் தெரியாததால் தவித்து கொண்டிருந்தான்.

பின் முகிலன் கயல்விழியிடம் "நான் வேறொரு பெண்ணை காதலிக்கிறேன். உன் மனசுல இந்த மாதிரி எண்ணம் வர நான் காரணம் என்றால் என்னை மன்னித்து விடு" என்று கூறிக்கொண்டிருந்தான்.

"பொய் சொல்லாதீங்க என்னை பிடிக்கலைன்னா பிடிக்கலைனு சொல்லுங்க அதுக்காக வேறொரு பெண்ணை காதலிக்கறேன்னு பொய் லாம் சொல்லாதீங்க. எனக்கு தெரிஞ்சவரைக்கும் நீங்க யாரையும் லவ் பண்ணல" என்றாள் கயல்விழி.

"என்ன பத்தி அவ்ளோ தெரியுமா உனக்கு கயல், நிஜமா நான் நிலாவை காதலிக்கிறேன்" என்று கூறிக்கொண்டிருந்தான் முகிலன்.

அப்பொழுதுதான் கவனித்தான், சூரிய ஒளியால் கயல்விழியின் நிழல் சுவரில் விழுந்தது.

ஆம் அதே நிழல் அவன் கனவில் கண்ட அதே நிழல், அவன் உருகி காதலித்த அதே நிழல் ! அவன் கண்ணையே அவனால் நம்ப முடிய வில்லை கயல் தான் என்னவளா என இனம் புரியாத உணர்வுகளோடு அவளின் நிழலை பார்த்து கொண்டிருந்தான்.

இவளே ! அவளோ !!

என் தேகத்தை தீண்டியவளோ !

என் ஸ்பரிசத்தை உரசியவளோ !

என் உதிரத்தை உரைத்தவளோ !

என் மௌனத்தை கலைத்தவளோ !

என் இதயத்தை தொட்டவளோ !

என் உறவென வந்தவளோ !

என் உயிரென கலந்தவளோ !

நான் கண்ட நிழலின் நிஜமோ !!

அவளே இவளோ !!

நிழல் நிஜமாகும்......


-நந்தினி மோகனமுருகன்
 
Top