கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை தீண்டும் நிழலே! -12

என்னை தீண்டும் நிழலே ! -12

முகிலன் தனது கனவில் வந்த நிழல் கயல்விழி உடையதா என்பது புரியாமல் அந்த நிழலையே பார்த்து கொண்டிருந்தான்.

அப்பொழுது அந்த நிழலை மற்றொரு நிழல் அழைத்து செல்வதை உணர்ந்தான். ரம்யா அவர்கள் பேசியதை கேட்டு கயல்விழியின் நிலை உணர்ந்து அவளை அங்கிருந்து அழைத்து சென்றாள்.

அனைவரும் நிச்சயதார்த்தம் முடிந்து வீடு திரும்பினர்.
கயல்விழி தன் காதலை முகிலன் மறுத்ததையே எண்ணிக்கொண்டிருந்தாள். அவளை அறியாமலே அவள் கண்களில் நீர் வடிந்து கன்னங்களை நினைத்து கொண்டிருந்தது.

முகிலனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை ஒரு புறம் தன் கனவில் வந்தது கயல்விழிதான் என்கிற ஆனந்தம், மறுபுறம் அவளிடம் தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாக கூறியதால் தன்னை தவறாக நினைத்து விடுவாள் என்ற எண்ணம்.

என்ன செய்யலாம் என யோசித்தவன் எல்லாத்தையும் கயல்விழிகிட்ட சொல்லிறவேண்டியதுதான் என நினைத்து கயல்விழிக்கு கால் செய்தான்.

முகிலனின் தொலைபேசி என்னை பார்த்த கயல்விழி, அதை எடுக்கலாமா வேண்டாமா என யோசித்தாள்.

பின் காலை அட்டென்ட் செய்து, " நான் எனக்கு தோணுனதை சொன்னேன், அதான் பிடிக்கலைனு சொல்லிடீங்கல்ல இனி உங்களை தொந்தரவு செய்யமாட்டேன் ", என முகிலனை பேச விடாமல் பேசினாள் கயல்விழி.

"ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு கயல் ", என முகிலன் கூற, " நீங்க ஏதும் சொல்ல வேணாம் நான் இனி உங்களை தொந்தரவு செய்யமாட்டேன் உங்க வாழ்க்கைல வரமாட்டேன் " என கூறி போனை கட் செய்தாள் கயல்விழி.

கயல்விழி போனை கட் செய்ததும் முகப்பு பக்கத்தில் தெரிந்த அவளது புகைப்படத்தை பார்த்து, " என்ன சொன்ன இனி என் வாழ்க்கைல வரமாட்டியா? அட லூசு இனி என் வாழ்க்கையே நீ தாண்டி! " எனக் கூறி அவளை பார்த்து ரசித்தான் முகிலன்.

மறுநாள் முகிலன் ஆபீஸ் செல்வதற்கு தாயார் ஆகி கொண்டிருந்தான்.

அப்போது செல்வி முகிலனிடம் "கொஞ்சம் இருடா நானும் வரேன் போற வழில என்னை ட்ராப் பண்ணிடு" என்று கூறினாள்.

"போங்கம்மா எனக்கு நேரம் இல்லை அவசரமா போகணும்" என்று பதில் கூறினான்.

"சம்மந்தி வீட்டுக்கு பலகாரம் குடுக்கலன்னா நல்லா இருக்காதுன்னு பார்த்தேன், போற வழில இறக்கி விட்டா என்னவாம் ! நானே போய்க்கிறேன் போடா" என முகிலன் காதில் விழும்படி முணுமுணுத்தாள் செல்வி.

இதை கேட்ட முகிலன் "என்னது சம்மந்தி வீடா ! இதை முதலியே சொல்லமாட்டியா மா? பொறுமையா கிளம்பி வாங்க நான் வெயிட் பன்றேன்"என்றான்.

"என்னமோ வேலை இருக்குனு சொன்ன இப்போ வெயிட் பண்றேன்னு சொல்ற!" என்னடா ஆச்சு என செல்வி கேட்டாள்.

"வேலை கிடக்குது வேலை நமக்கு சொந்தம் தான் முக்கியம் வாங்க போலாம்" என செல்வியிடம் கூறினான் முகிலன்.

எதோ சரி இல்லையே என மனதில் நினைத்து கொண்டு முகிலனை முறைத்தவாறே உள்ளே சென்றாள் செல்வி.

செல்வியும் முகிலனும் கயல்விழியின் வீட்டிற்கு சென்றனர். கயல்விழி தான் வீட்டின் முகப்பில் நின்றுகொண்டிருந்தாள்.

"வாங்க அத்தை உள்ளே வாங்க" எனக்கூறி அவர்களை உள்ளே அழைத்து சென்றாள் கயல்விழி.

கயல்விழி முகிலனை திரும்பி கூட பார்க்கவில்லை, முகிலனுக்கு அது என்னவோ போல் இருந்தது.

முகிலன் கயல்விழியவே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். குறுகுறுவென தன்னை பார்க்கும் அவளது விழிகள் இன்று தன்னை பார்க்காதது முகிலனுக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

செல்வி காயத்ரியின் அருகில் அமர்ந்து பேசி கொண்டிருந்தாள். "இன்னும் திருமணத்திற்கு இரண்டு வாரங்களே உள்ளது, எதாவது வேணும்னா சொல்லுங்க நாங்க ஏற்பாடு பன்றோம்" என செல்வி அனைவரிடமும் கூறினாள்.

தேவைன்னா கண்டிப்பா சொல்றோம் மா என்றார் வீட்டின் மூத்தவரான கயல்விழியின் அப்பா காயத்ரியின் தந்தையை பார்த்தவாறே.

காயத்ரியின் தந்தையும் அதற்கு தலை ஆட்டினார்.

"சீக்கிரம் எங்க வீட்டுக்கு வா மருமகளே" என காயத்ரியின் நெற்றியில் முத்தமிட்டாள் செல்வி.

சரிங்க அப்போ நாங்க கிளம்பறோம் என கூறி செல்வியும் முகிலனும் விடை பெற்றனர்.

வீட்டு வாசலில் வந்தும் தன்னை பார்க்காத கயல்விழியை எண்ணி மனம் வருந்தினான் முகிலன்.
அவள் வருவாள் ஒரு முறை தன்னை பார்ப்பாள் என திரும்பி திரும்பி பார்த்த முகிலனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

" உன் ஒற்றை விழி பார்வையிலே என்னை கைது செய்தாயோ !

உன் காந்த கருவண்டு விழிகளிலே நான் தொலைந்து போனேனோ !

இமைகள் தீண்டா உன் கண் முடிகளும் என்னை உரசிப்போனதேனோ !

இவை காணா என் கண்களும் கலங்கித்தான் போனதடி கண்ணே !!!

ஒரு முறை உன் மின்சார பார்வையால் தொலைந்த என் ஜீவனை மீட்டுக்கொடு பெண்ணே !!!"

அவள் வருவாளா விழி பார்ப்பாளா... பாப்போம்

நிழல் நிஜமாகும்.........



-நந்தினி மோகனமுருகன்
 
Top