கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை தீண்டும் நிழலே! - 14

என்னை தீண்டும் நிழலே ! - 14



கயல்விழியும் முகிலனும் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.

கிஷோர் அவர்கள் இருவரையும் பார்த்து, " ஹலோ ! நீங்க ரொமான்ஸ் பண்ணதெல்லாம் போதும் கொஞ்சம் எங்களையும் கவனிங்க" என்றான்.

அவன் கூறியதை கேட்டு இருவரும் தங்கள் நிகழ்காலத்திற்கு வந்தனர்.

கயல்விழி கிஷோரை பார்த்து, "சொல்லுங்க என்ன விஷயமா வந்தீங்க" என்று கேட்டாள்.

"பிளட் டொனேட் பண்ண வந்திருக்கோம்" என முகிலன் பதில் கூறினான்.

கயல்விழி முகிலனை பார்க்காதவாறே ரம்யாவை அழைத்து இவர்களுக்கு பிளட் எடுக்குமாறு கூறினாள்.

முகிலன் ரம்யாவிடம் "நாங்க அவங்க பிளட் எடுத்தாதான் டொனேட் பண்ணுவோம்" என்று கூறினான்.

ரம்யா கயல்விழியிடம் சென்று நீடிலை குடுத்து, "நீயாச்சி அவனாச்சி உங்க விளையாட்டுக்கு நான் வரல ஆள விடுங்க சாமி " என கூறி வெளியே சென்றாள்.

கயல்விழியும் வேறு வழியின்றி முகிலனின் அருகில் சென்று இருவரின் கையிலும் நீடிலை குத்தினாள்.

கிஷோரோ வலியில் கத்த முகிலன் கயல்விழியின் ஸ்பரிச தீண்டலாள் வலியை மறந்து ரசித்து கொண்டிருந்தான்.

பிளட் டொனேட் செய்த பின் கிஷோரும் முகிலனும் வீடு திரும்பினர்.

வீட்டில் அருண் அவசர அவசரமாக துணியை பெட்டிக்குள் அடுக்கி கொண்டிருந்தான்.

அதை கவனித்த முகிலன் "என்னடா பண்ற, ஊருக்கு எங்கயாவது போறியா? " என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

ஆமாம் டா ஆபீஸ் வேலையா உடனடியா நேபால் செல்ல வேண்டும் என்று கூறினான்.

"டேய் என்னடா இது இவ்ளோ அவசரமா! திடிர்னு கிளம்ப சொல்றாங்க" என்று முகிலன் கேட்டான்.

"ஆமாம் டா கண்டிப்பா போயாகணும் முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இரண்டு நாள்ல வந்துருவேன்"என பதில் கூறினான்.

அப்போது அங்க வந்த செல்வி, "கல்யாணத்த பக்கத்துல வெச்சுகிட்டு மீட்டிங்ன்னு ஊற சுத்துறான்! வேணான்னு சொன்னா கேட்க மாட்டேங்கறான்" என புலம்பினாள்.

"ஆபீஸ் ஒர்க் மா போய்தான் ஆகணும் சீக்கிரம் வந்திறேன்" எனக்கூறி சமாதானம் செய்தான் அருண்.

சூழலை மாற்ற நினைத்த முகிலன், "விடுமா அவன் சிங்கிளா போய் சைட் அடிச்சுட்டு வரட்டும். கல்யாணத்துக்கு அப்பறம் அதுக்கு வாய்ப்பில்லையே" என்று கிண்டல் செய்தான்.

" நான் என் பொண்டாட்டியோட போய் சைட் அடிப்பேன்டா" என அருண் பதில் கூறினான்.

"அப்படியா பிரதர்! முதல்ல நீ ஊருக்கு போறத அண்ணிகிட்ட சொல்லி பாரு அப்பறம் தெரியும் எப்படி அடிப்பாங்கனு " என கூறி நக்கலாய் சிரித்தான் முகிலன்.

"போகும்போது அப்படியே அவளை பார்த்து சொல்லிட்டு போய்டுறேன்" என கூறி கிளம்பி சென்றான் அருண்.

காயத்ரியை வீட்டின் தெரு முற்றத்தில் இருக்கும் கோவிலுக்கு வர சொல்லியிருந்தான் அருண்.

அதுவே அவர்கள் முதல் முதலில் சந்தித்த கோவில்.

அருணின் வரவிற்காக காத்திருந்த காயத்ரி, தாங்கள் முதன்முதலில் சந்தித்த நினைவுகளை நினைத்து வெட்கபட்டுக்கொண்டிருந்தாள்.

அருண் அங்கே வர, நாணமும் காதலும் கலந்த பார்வையால் அவனை பார்த்தாள்.

காயத்ரியின் அருகில் வந்த அருண், "என்னடி பொண்டாட்டி இன்னைக்கு இவ்ளோ அழகா இருக்க" என காயத்ரியை பார்த்து கண் சிமிட்டினான்.

காயத்ரி வெட்கத்தில் பேச வார்த்தை இல்லாமல் தலை குனிந்தாள் .

"இப்படியே நின்னுட்டு இருந்தீன்னா மாமா எப்படி டி ஊருக்கு போவேன்" எனக்கூறினான் அருண்.

"ஊருக்கா! எந்த ஊருக்கு போறீங்க" என்று ஆச்சரியமாக கேட்டாள் காயத்ரி.

"அதை சொல்லத்தான் உன்னை வர சொன்னேன், ஆபீஸ் விஷயமா நேபால் போறேன் இரண்டு நாள்ல வந்துருவேன் " என்று கூறினான் அருண்.

அப்பொழுதுதான் மலர்ந்த ரோஜா போல் இருந்த காயத்ரியின் முகம் திடீரென வாடியது.

காயத்ரியின் முகமாற்றத்தை கண்ட அருண் அவளின் கையை பிடித்து, " எனக்கு மட்டும் உன்ன விட்டுட்டு போக ஆசையா ! இந்த மீட்டிங் நல்லா முடிஞ்சா ப்ரோமோஷன் கிடைக்கும் அப்பறம் உன் மாமா உன்கூடவே இருப்பேன் " எனக்கூறி சமாதானம் செய்தான்.

அவன் கூறியதை கேட்டு பொய்யாய் புன்னகைத்தாள் காயத்ரி.

தனக்காக கனத்த மனதுடன் புன்னகைக்கிறாள் என்பதை அருணும் உணராமலில்லை.

"விலையில்லா உன் புன்னகையும் சொல்லுதடி என் மேல் நீ கொண்டுள்ள காதலின் ஆழத்தை !!

என் மனம் கனக்காமலிருக்க உன் மனதை கல் ஆக்கி இதழ் சுளித்தாயே, இதற்கு ஈடு இணை ஏதும் இல்லையே !!

குளமான உன் கண்களையும் வெட்கமென கூறி தலை குனிந்து மறைத்தாயே, இமைக்காமல் நானும் அதை கவனிக்க மறக்கவில்லையே !!

பொய் புன்னகையும் உனதானதடி ! அந்த புன்னைகை தரும் நிஜங்களும் எனதானதடி!!! "


அருண் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

சீக்கிரம் வந்துருங்க மாமா என மனதில் நினைத்து கொண்டு வீடு திரும்பினாள் காயத்ரி.

நிழல் நிஜமாகுமா.....
பார்ப்போம் அடுத்த பாகத்தில்....

-நந்தினி மோகனமுருகன்
 
Top