என்னை தீண்டும் நிழலே ! - 3
அருண், முகிலன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே சென்றனர்.
தனமும் மோகனும் அவர்களை வரவேற்றனர்.
அருணின் கண்கள் காயத்ரியை தேடியது, அவளே, நாம பார்க்க வந்த பொண்ணா இருக்க கூடாதா என மனம் ஏங்கியது.
காயத்ரியின் நினைவில் அருணின் முகமே வந்தது. தான் அவனை காதலிப்பதாக கயல்விழியிடம் கூறினாள்.
"என்ன சொல்ற அக்கா, அதெப்படி ஒருத்தர பாத்ததும் காதல் வரும்? அவன் நல்லவனா கெட்டவனானு தெரியாம எப்படி காதலிப்ப" என்று கேட்டாள் கயல்விழி.
"அதெல்லாம் தெரிலடி, ஆனா அவனை பார்த்த அந்த நிமிஷம் தோணுச்சு இவன்தான் நமக்கானவனு" என்றாள் காயத்ரி.
மாப்பிள்ளை வந்துட்டாங்க, ராஜா மாதிரி இருக்காரு என்று யாரோ சொல்வது காதில் விழ, இருவரும் திரும்பி பார்த்தனர் அங்கே அருணும் முகிலனும் நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தனர்.
காயத்ரிக்கு அவர்களை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் இதில் யார் மாப்பிள்ளை என்று குழம்பித்தான் போனாள்.
காயத்ரியும் கயல்விழியும் எப்படியாவது மாப்பிள்ளை யாருனு கண்டுபிடிக்கணும் என எண்ணினர்.
கோவில் பூசாரி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அருணுக்கும் முகிலனுக்கும் கொடுத்தார். சாமி மாலையை எடுத்து அருணின் கழுத்தில் அணிவித்தார்.
காயத்ரியும் கயல்விழியும் மாப்பிள்ளை யாரு என்று உறவுகார பெண்ணிடம் கேட்க, அதோ மாலை போட்டிருக்காரே அவரு தான் என்று கூறினாள்.
அந்த சமயம் பார்த்து முகிலன் அருணிடம் உனக்கு மட்டும் மாலையா என அதை எடுத்து தன் கழுத்தில் போட்டு கொண்டான்.
பெண்கள் இருவரும் பார்க்கும் போது முகிலனின் கழுத்திலேயே மாலை இருந்தது. முகிலன் தான் மாப்பிள்ளை என முடிவு செய்தனர்.
அருண், பொண்ணு யாரா இருக்கும் என தேடினான்.
"என்ன அண்ணா! நீ பார்க்க வந்த பொண்ண தேடறயா, இல்ல நீ பாத்த பொண்ண தேடறயா" என நமட்டு சிரிப்புடன் கேட்டான் முகிலன்.
அப்போ அங்க வந்த செல்வி, "என்னடா பசங்களா பண்றீங்க! கோவிலுக்கு வருகிற பொண்ணுங்கள சைட் அடிக்கறீங்களா.."என்றாள்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல அம்மா என்று முகிலன் மழுப்ப, "எல்லாம் அம்மாக்கு தெரியும் டா "என புன்னகைத்தாள் செல்வி.
"டேய் அருண், கண்ட பொண்ணுங்கள பாக்காம ஒழுங்கா உனக்கு பத்த பொண்ண பொய் பாரு" என்றாள் செல்வி.
யாரு பொண்ணுன்னு சொன்னதான பாக்கறதுக்கு என முணுமுணுத்தான் அருண்.
என்ன சொன்ன அருண் என செல்வி கேட்க ஒன்னும் இல்லை என மழுப்பினான் அருண்.
"டேய் படவா நீ சொன்னது கேட்ருச்சு, பொண்ணு அம்மன் சன்னதில இருக்கா போய் பாரு" என்றாள் செல்வி.
வாடா முகிலா என முகிலனையும் கூடவே இழுத்து சென்றான் அருண்.
கடவுளே நான் பார்க்க போற பொண்ணு அவளாத்தான் இருக்கனும் என மனதில் பிராத்தனை செய்து கொண்டே சென்றான்.
"அருண் காயத்ரியை பார்ப்பானா !"
அடுத்த பாகத்தில் காண்போம்......
நிழல் நிஜமாகும் !...
-நந்தினி மோகனமுருகன்