கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை தீண்டும் நிழலே ! -5

என்னை தீண்டும் நிழலே! - 5


காயத்ரியும் அருணும் தனியாக பேசட்டும் என முகிலனும் கயல்விழியும் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தனர்.

முகிலனுக்கு கயல்விழியை எங்கயோ பார்த்தது போல் இருந்தது. எங்கே பார்த்திருப்போம் என யோசித்து கொண்டிருருந்தான்.

கயல்விழி முகிலனிடம், "அப்பறம் சார் என்ன பண்றீங்க" என கேட்டாள்.

"உன்ன மாதிரி அழகான பொண்ணுங்கள பாத்தா மொக்க போடுவேன்"என கண் சிமிட்டி கூறினான்.

கயல்விழி முகிலனை முறைத்து விட்டு முதுகு காட்டி திரும்பி நின்றாள்.

"ஏய் கயல் ! நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நான் சாப்ட்வேர் என்ஜினீயர், பேசிக்கா ரொம்ப நல்ல பையன் பா " என பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறினான்.

"யாரு நல்லவன் நீங்களா! நம்பிட்டேன்" என கயல்விழி நக்கலாக கூறினாள்.

"சரி கயல், நீ என்ன பண்ற?", என முகிலன் கேட்டான்.

"நான் நேச்சுரோபதி( இயற்கை மருத்துவம் ) இறுதி ஆண்டு ப்ராக்ட்டீஸில் இருக்கிறேன்" என்று கூறினாள்.

"வாவ்! டாக்டர் அம்மாவா நீ, பட் சூப்பர் எல்லார் மாதிரியும் மெடிசின் சைடு போகாம நம்ம கலாச்சாரத்தை உணர்த்தர நேச்சுரோபதி ச்சூஸ் பன்னிருக்க. கிரேட் கயல்!" என கை குலுக்கினான் முகிலன்.

கயல்விழியின் கையை தொட்டதும், முகிலனின் இதயம் படபடவென வேகமாக அடித்து கொண்டது. ஒரு இனம் புரியாத உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.

அப்பொழுது காயத்ரியின் தாய் கனகா அங்கே வந்து, "பெரியவங்க கூப்பிடறாங்க எல்லோரும் வாங்க" என அழைத்து சென்றாள்.

"உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா காயத்ரி? " என கனகா கேட்டாள்.

"பிடிச்சிருக்கு அம்மா" என கூறி வெட்க பட்டு சிரித்தாள் காயத்ரி.

கனகா சந்தோசத்துடன் காயத்ரிக்கு பையன பிடிச்சிருக்காம் என தனத்திடம் கூறினாள்.

அருணும் காயத்ரியை பிடிச்சிருக்கு என கூற, பெரியோர்கள் அனைவரும் சேர்ந்து திருமண நிச்சியம் செய்ய தேதி குறித்தனர்.

அனைவரும் மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

அருணும் காயத்ரியும் தொலைபேசியில் உரையாடி கொண்டிருந்தனர்.

கயல்விழி அன்று நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

"அந்த முகிலனை இப்போதான் முதல் தடவை பார்க்கிறோம் ஆனால் பல நாள் பார்த்து பழகுன மாதிரி ஒரு பீல் வருதுல்ல" என நினைத்து கொண்டாள்.

முகிலன் தன் அறையில் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்து கொண்டிருந்தான். கயலின் கையை பிடித்ததும் ஏன் என் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது என யோசித்து கொண்டிருந்தான்.

பின் தன் கனவில் தோன்றும் அந்த நிழலாகிய 'நிலா'விடம் பேச தொடங்கினான்.
(தன் கனவில் வரும் அந்த நிழலிற்கு 'நிலா ' என பெயர் சூட்டி ரசிக்க ஆரம்பித்திருந்தான்)

"கவலை படாதே நிலா, உன்னை தவிர வேறு யாருக்கும் என மனதில் இடம் இல்லை. கண்டிப்பாக உன்னை கண்டு பிடித்து உன் கை பிடிப்பேன்" என தனக்குத்தானே சொல்லி கொண்டிருந்தான்.

மறுநாள் காலை செல்வி முகிலனை அழைத்து, ஒரு புத்தகத்தை குடுத்து "இதில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நிரலை ஜோசியர் குறித்து குடுத்திருக்கிறார். இதை காயத்ரி வீட்டில் குடுத்து விட்டு வா" என கூறினாள்.

முகிலன் காயத்ரி வீட்டிற்கு சென்றான் !.

அங்கே கயல்விழி வீட்டு முற்றத்தில் யோகா செய்து கொண்டிருந்தாள்.

முகிலனை பார்த்த கயல்விழி, "வாங்க சார்! என்ன இந்த பக்கம்? அருண் மாமா ஏதாவது அக்காகிட்ட குடுக்க சொன்னாங்களா "என கேட்டாள்.

"இல்லை, அம்மா இந்த புத்தகத்தை உங்க அப்பாவிடம் குடுக்க சொன்னாங்க" என கூறி குடுத்தான்.

"சரிங்க குடுத்தரேன்"" என கூறினாள் கயல்விழி.

கயல்விழி பேச பேச கூடவே பேசும் அவள் அழகிய கண்களில் தன்னை அறியாமலே மூழ்கினான் முகிலன்.

"நிலாவின் மேல் அவன் கொண்ட காதல் நிஜமா?... இல்லை

கயல்விழியை கண்டு மயங்கும் அவன் மனம் நிஜமா?.... "

நிழலின் நிஜத்தை காண்போம்....

-நந்தினி மோகனமுருகன்

 
Top