என்னை தீண்டும் நிழலே ! - 7
கயல்விழி, ஐஸ்கிரீம் பார்லரில் முகிலனுக்கு எதிரே வந்து அமர்ந்தாள்.
"சொல்லுங்க, காலைல தான வீட்டுக்கு வந்தீங்க இப்போ அதுக்குள்ள என்னை பார்க்க வந்திருக்கீங்க! என்ன விஷயம்" என கயல்விழி கேட்டாள்.
"எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்!" என கூறினான் முகிலன்.
"சொல்லுங்க, என்னால முடிஞ்சா கண்டிப்பா பண்றேன்" என்றாள் கயல்விழி.
"என் அண்ணன் அருணுக்கு உங்க அக்கா கூட தனியா பேசணுமாம், நாளை எப்படியாவது அண்ணியை எங்கயாவது தனியா கூட்டிட்டு வர முடியுமா? " என கேட்டான் முகிலன்.
"நிச்சயதார்தம் ஆக போறதால தனியா விடமாட்டாங்க, நான் ட்ரை பன்னி பாக்கறேன்" என்றாள் கயல்விழி.
"சரி கயல், அப்பறம் என்ன சாப்பிடுற! இந்தா மெனு கார்டு பார்த்து ஆர்டர் பண்ணு" என கார்டை கயல்விழியிடம் நீட்டினான் முகிலன்.
எனக்கு ஒரு பட்டர்ஸ்காட்ச் என கயல் கூற, "வாவ் தட்ஸ் மை ஃபேவரட்" என முகிலன் கூறினான்.
வெயிட்டர் டூ பட்டர்ஸ்காட்ச் என முகிலன் ஆர்டர் செய்தான். இருவரும் ஆர்டருக்காக காத்திருந்தனர்.
வெளியில் ஒரு பெண்மணி பூ விற்றுக் கொண்டிருந்தாள். அவளது ஆறு வயது பெண் குழந்தை பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்தது.
ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வெளியில் போடும் கப்பில் மீதம் இருக்கும் ஐஸ் க்ரீமை எடுத்து அந்த சிறுமி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
இதை பார்த்த முகிலனுக்கு அது என்னவோ போல் கஷ்டமாக இருந்தது.
அவர்கள் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் வந்ததும், அதை கொண்டு போய் அந்த சிறுமியிடம் குடுத்து சாப்பிட சொன்னான் முகிலன்.
"இந்த மாதிரி அடுத்தவங்க சாப்பிட்டு போட்ட எச்சியை சாப்பிட கூடாது சரியா" என கூறினான் முகிலன்
அந்த சிறுமி ரொம்ப நன்றி அங்கிள் என கண்கலங்க கூறினாள்.
"பரவால்ல டா குட்டி நீ சாப்பிடு" எனக்கூறி அவள் முடியை வருடி விட்டான் முகிலன்.
இதை பார்த்து கொண்டிருந்த கயல்விழி "சே என்ன ஆளுடா இவன்" என உள்ளுக்குள் முகிலனை புகழ்ந்து கொண்டிருந்தாள்.
முகிலனுக்கு அவசரமாக வரும்படி ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தது.
முகிலன் உள்ளே சென்று கயல், "எனக்கு வேலை இருக்கு அவசரமா வர சொல்லி கால் வந்துச்சு நான் கிளம்பறேன்" என கூறினான்.
"என்ன இது! இருங்க இன்னொரு ஐஸ்கிரீம் ஆர்டர் பன்றேன் சாப்பிட்டு போங்க" என்றாள் கயல்விழி.
அதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்லை, வேணும்னா உனக்காக ஒரு வாய் சாப்பிடறேன் எனக்கூறி அவள் சாப்பிட்டு கொண்டிருந்த ஸ்பூனை பிடுங்கி ஒரு வாய் சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.
சிறிது தூரம் சென்றவன் தன் மொபைல் நம்பரை கூறி நாளைக்கு என்ன பிளானு அண்ணிகிட்ட கேட்டுட்டு கால் பண்ணுங்க என்று சொன்னவாறே வண்டியில் ஏறி சென்றான்.
அந்த மொபைல் நம்பரை தன்னை அறியாமலே தன் மூளையில் ரெஜிஸ்டர் செய்து கொண்டாள் கயல்விழி.
"இங்க எவ்ளோ பேரு இருக்கோம் யாருக்கும் அந்த குட்டி பொண்ணு மேல இரக்கம் வரல. உதவணும்னு யாருக்கும் தோணல. ஏன் !நான் கூட வேடிக்கைதான பார்த்துகிட்டு இருந்தேன். இவனுக்கு மட்டும் எப்படி உதவணும்னு தோணுச்சு" என தனக்குள்ளயே பேசி கொண்டிருந்தாள் கயல்விழி.
"ஏய் கயல்விழி, உன் ஹார்ட டச் பண்ணிட்டான்டி விழுந்தாராத!" என மனசாட்சி கூறியது.
அதை காதில் வாங்காமல், அவன் சாப்பிட்டு குடுத்த அந்த ஸ்பூனையே பார்த்துக்கொண்டிருந்தாள் கயல்விழி.
முகிலனை நினைத்து கொண்டே அந்த ஸ்பூனால் ஐஸ்கிரீமை எடுத்து சுவைத்தாள் கயல்விழி.
முன்பை விட ஐஸ்கிரீம் தித்திப்பாய் இருக்குதே என யோசித்தவள், "ஏய் என்னடி ஆச்சு உனக்கு" என சிரித்து கொண்டே தன் தலையில் அடித்து கொண்டு அங்கிருந்து சென்றாள் கயல்விழி.
வீட்டிற்கு வந்த கயல்விழி, "அக்கா நாளைக்கு நீ மாமாவை பார்க்க போற" என கூறினாள்.
"என்னடி உளற ! நான் எப்படி பாப்பேன்" என்று புரியாமல் கேட்டாள் காயத்ரி.
"உன் புருஷனுக்கு உன்னை பாக்கணுமாம், உன்ன எப்படியாவது வெளில கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க" என்றாள் கயல்விழி.
"அவன் இவனு சொன்ன அடி வாங்குவ!" என கயல்விழியை அதட்டினாள் காயத்ரி.
"புருஷன சொன்னதும் பொண்டாட்டிக்கு கோவம் வருதோ! சரிங்க மேடம் இனி அவருனே சொல்றேன்" என்றாள் கயல்விழி.
"சரிடி எப்படி வெளில போகிறது, என்னதான் தனியா வெளில விடமாட்டாங்களே!" என கூறினாள் காயத்ரி.
"அத விடு நான் அம்மாகிட்ட பேசிக்கறேன்" என்று சொன்னாள் கயல்விழி.
கயல்விழி, நாளை மாலை ஐந்து மணிக்கு காபி டேக்கு வருகிறோம் என முகிலனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
முகிலனின் ப்ரொபைல் போட்டோவையே பார்த்து கொண்டிருந்தாள் கயல்விழி.
"கண்ணை பாரு! எப்போ பாரு துரு துருனு எதையாவது பார்த்துட்டே இருக்குது. இந்த கண்ண வெச்சு தான் என்னை மயக்கிட்டியாடா? எப்போ, எப்படி எனக்குள்ள நீ வந்தன்னு தெரில ஆனா இப்போ மூச்சுல, இதய துடிப்புல என எல்லாத்துலயும் மொத்தமா நீ தாண்டா இருக்க. ஐ லவ் யூ டா முகில்!" என தனக்கு தானே பேசி உருகிக்கொண்டிருந்தாள் கயல்விழி.
"...
என்னை என்ன செய்தாயோ ! என்னை அறியாமலே உள்ளுக்குள் காதல் புகுந்ததடா !!
உன் ஓர பார்வையோ ! என்னை உன்னிடத்தில் மயக்கி விட்டதடா !!
உன் துறுதுறு கண்களிலோ ! என் வார்த்தைகள் பேச மறந்ததடா !!
படுத்ததும் உறங்கியவளோ ! உன்னால் விடிந்த பின்னும் தூங்காமல் தவிக்கிறேனடா !!
அழகிய உன் நினைவுகளோ! நினைக்க நினைக்க இனிமையானதடா!!
இனி வரும் வாழ்க்கை பயணமோ ! உன் கைகள் கோர்த்து செல்ல பல கோடி ஆசைகள் தோணுதடா !!
உன்னோட காதலோ ! என் நெஞ்சுக்குள் உன்னை வைத்து உத்திரத்தில் கலந்ததடா !!
......"
"மெசேஜ் பண்ணி எவ்ளோ நேரம் ஆகுது இன்னுமா பாக்காம இருக்கான்? ஒருவேளை தூங்கிருப்பானோ ! வாலு பையா " என முகிலனை திட்டி கொண்டிருந்தாள் கயல்விழி.
இதை அறியாது கனவில் தன் நிழலாகிய நிலாவின் நினைவில் மூழ்கி இருந்தான் முகிலன்.
நிழல் நிஜமரியுமா !!
-நந்தினி மோகனமுருகன்