என்னை தீண்டும் நிழலே - 9
இருவரும் உள்ளே செல்ல அருணும் முகிலனும் அவர்களை வரவேற்றனர்.
பின் நால்வரும் சிறிது நேரம் பேசி கொண்டிருக்க, அருண் முகிலனின் தொடையை சுரண்டினான்.
அருண் சொல்ல வருவதை உணர்ந்த முகிலன் கயல்விழியிடம் இங்க இடம் நெருக்கமாக இருக்கு நாம அங்க போய் உட்காரலாம் என கூறி சைகை காட்டினான்.
அவர்களை தனியாக பேச வேண்டும் என்பதற்காகவே முகிலன் கூறுகிறான் என்பதை அறிந்து கயல்விழியும் எழுந்து சென்றாள்.
முகிலனும் கயல்விழியும் இரண்டு டேபிள் தள்ளி போய் அமர்ந்து கொண்டனர்.
முகிலனுடன் தனியாக தாம் அமர்ந்திருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தாள் கயல்விழி. தன் எதிரே அமர்ந்திருக்கும் முகிலனை பார்த்து அவனை ரசித்து கொண்டிருந்தாள்.
அருண் காயத்ரியிடம், "ஓய் பொண்டாட்டி! எப்படி இருக்க? உன்கிட்ட தனியா பேசத்தான் வர சொன்னேன்.இப்படி ஒன்னுமே பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என கேட்டான்.
"ம்ம் சொல்லுங்க" என மெல்லிய குரலில் தலையை நிமிராமலே கூறினாள் காயத்ரி.
"என்னடி வெக்கப்படறயா, இது கூட அழகா தான் இருக்கு" என கூறி தன் இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி தன்னை பார்க்க சொன்னான் அருண்.
கயாத்திரியின் கண்களில் தெரிந்த அழகான காதலை உணர்ந்தான் அருண்.
"நாணம் என்னும் புது மொழியை உணர்ந்தேன்....
அழகிய விழியை என்னை காண விடாமல் மூடி கொள்ளும் அவளது இமைகளின் மூலமாய் "
முகிலன் கயல்விழியிடம், என்ன சாப்பிடுற கயல் என கேட்டான்.
கயல்விழி, நீங்களே எதாவது ஆர்டர் பண்ணுங்க என முகிலனிடம் கூறினாள்.
முகிலன் இருவருக்கும் இரண்டு கோல்டு காபியை ஆர்டர் செய்தான்.
"அப்பறம் கயல், உன் ப்ராக்டிஸ்லாம் எப்படி போகுது, அடுத்து உன்னோட பிளான் என்ன" என கேட்டுக்கொண்டிருந்தான்.
கயல்விழிக்கு அவன் பேசுவது எதுவும் அவள் காதில் விழவில்லை, அவனது காந்த கண்களையும் அசையும் அந்த செவ்விதழ்களையுமே ரசித்து கொண்டிருந்தாள்.
அவன் கேட்ட கேள்விக்கு கயல் பதில் ஏதும் கூறாததால் "கயல் என்னாச்சு உடம்பு எதாவது சரியில்லையா? " என கேட்டான் முகிலன்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஆமா என்ன கேட்டீங்க !" என கயல்விழி கேட்டாள்.
"சரியா போச்சு போ, இவளோ நேரம் நான் பேசுனத நீ கேக்கலையா? பகலையே கனவா!" என கூறி முகிலன் சிரித்தான்.
அவன் சிரிக்கும் போது கூட அசைந்த அவனது அழகிய கம்பீரமான மீசையை பார்த்து, "இப்படி சிரித்தால் என்னால எப்படி டா நீ பேசறத கவனிக்க முடியும்" என மனதில் நினைத்து கொண்டாள்.
அவர்கள் ஆர்டர் செய்த காபி அங்கே வர இருவரும் அதை பருக தொடங்கினர்.
அருண் காயத்ரியிடம், "ஏய் காயு மா எனக்கு உன் கஷ்டம் புரியுது வீட்ல எல்லாரும் இருக்கும் போது உன்னால பேச முடியாது பட் என்னையும் கொஞ்சம் நினைச்சு பாரு டி! மாமா பாவம் இல்லையா, அட்லீஸ்ட் ஒரு ஒன் ஹௌர் பேசு போதும்" என கூறினான்.
"எனக்கு மட்டும் ஆசை இல்லையா, கூட யாரவது இருக்கும் போது கால் பண்றீங்க! அப்போ போய் லவ் யூ சொல்லுனா நான் எப்படி சொல்ல முடியும்" என்றாள் காயத்ரி.
ஹ்ம்ம் அப்போ என்ன பண்ணலாம் என யோசித்தான் அருண்...
"சரி நான் கால் பண்றப்ப யாராவது இருந்தால் ராங் நம்பர்னு கட் பண்ணிடு யாரும் இல்லைனா தனியா வந்து பேசு" என கூறினான் அருண்.
"சரி அப்படியே பண்றேன்" என்றாள் காயத்ரி.
"வீட்லதான் சொல்ல முடில அட்லீஸ்ட் இப்போவாது லவ் யூ சொல்லுடி" என கெஞ்சினான் அருண்.
"இப்போவா, எல்லாரும் பாப்பாங்க போங்க மாமா" என கூறினாள் காயத்ரி.
"என்ன சொன்ன மாமாவா" கியூட்டா இருக்குடி" என சிரித்தான் அருண்.
"அப்டியே அந்த லவ் யூ மட்டும் சொல்லிடீனா இன்னும் ஒரு வாரம் தாங்கும்" என மறுபடியும் கெஞ்சினான் அருண்.
"நேரம் ஆச்சு போலாம்" என எழுந்து நின்றாள் காயத்ரி.
"நீ சொன்னா தான் அதிசயம் ஆச்சே ! வா போலாம்" என இருவரும் முகிலனும் கயல்விழியும் அமர்ந்திருக்கும் டேபிள் அருகில் வந்தனர்.
அவர்களை பார்த்த முகிலன், "என்னடா பேசிமுடுச்சிட்டியா" என கேட்டான்.
"உன் அண்ணியையே கேளு" என காயத்ரியை கண் காட்டினான் அருண்.
"என்ன ஆச்சு அண்ணி! அதுக்குள்ள பேசியாச்சா" என கேட்டான் முகிலன்.
"நேரம் ஆச்சு வீட்ல தேடுவாங்க அதான்!" என கூறி கயல்விழியிடம் போலாம் என தலை ஆட்டினாள் காயத்ரி.
கயல்விழி யாரும் பார்க்காத போது முகிலன் குடித்து கொண்டிருந்த ஸ்ட்ராவ்வை எடுத்து தன் கைப்பைகுள் போட்டு கொண்டாள்.
பின் இருவரும் அருணிடமும் முகிலனிடமும் விடை பெற்று சென்றனர்.
முகிலன் போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க அவனை பார்த்துக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தாள் கயல்விழி.
காயத்ரி கயல்விழியிடம் ஒரு நிமிடம் இரு வரேன் என கூறி தன்னை பார்த்துக்கொண்டிருந்த அருணிடம் வந்து மாமா, 'ஐ லவ் யூ' எனக்கூறி திரும்பி பார்க்காமல் சென்றாள்.
அதை கேட்ட அருண் திகைத்து போய் நின்றிருந்தான்.
நிழல் நிஜமாகும்...
-நந்தினி மோகனமுருகன்