என்னைத் தேடும் நான்.
அத்தியாயம்----2
நூலகத்தில் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தாள் சசி. சின்ன வயதிலிருந்தே அவளுக்கு புத்தக வாசிப்பு ஒரு பிடித்தமான சமாச்சாரம். அம்மா தான் அவளுக்கு அந்த பழக்கத்தை கற்றுக் கொடுதாள். அம்மா வார இதழ்களில் வரும் சிறுகதைகள், கவிதைகள், தொடர் கதைகள் எல்லாம் படிக்கும் வழக்கம் கொண்டிருந்தாள். அது தாண்டி நூலகம் சென்று படிக்க ஆரம்பித்தது மிக நல்ல அனுபவமாக அமைந்தது.
“சசி.. நீயும் வரியா? அம்மா நூலகம் போறேன்..” ஆறு வயது சசி அம்மாவோடு நூலகம் சென்று வந்தது இப்படித்தான். வழ வழ அட்டை படத்துடன் வரும் சிறுவர் நூல்களை அவள் படிக்க ஆரம்பித்தாள்.
அவர்கள் இருந்த கிராமமான அரசப்பட்டியில், ஏதோ ஒரு புண்ணியவான் ஒரு நூறு புத்தகங்களோடு தொடங்கிய நூலகம் அது, பின் படிப்படியாக வளர்ந்து பல இலக்கிய புத்தகங்கள், சிறுகதை தொகுப்புகள், பிரபல எழுத்தாளரின் நாவல்கள் என்று விரிந்தது. இந்த நூலகத்தில் தான் அவள் பொன்னியின் செல்வன் படித்தாள். பார்த்திபன் கனவில் முழ்கினாள், இந்துமதியின் மணல் வீடுகளை வாசித்தாள். இந்த புத்தக கடலில் ஏராளமான முத்துக்களை எடுத்து கபளீகரம் செய்தாள். கையில் ஒரு அருமையான புத்தகதோடு உட்கார்ந்து படிக்கும் போது மனசே தெளிவாகிவிடும் அனுபவம் பெற்றாள். புத்தகங்கள் நல்ல வழிக்காட்டி என்பது அவளின் எண்ணம்.
மதுரையில் கல்லூரியில் சேர்ந்த போது விஜியும் புத்தக பைத்தியமாக இருந்தது அவளுக்கு சௌகரியமாக போய்விட்டது. சிம்மக்கல் நூலகத்தில் சென்று புத்தகங்கள் எடுத்து வாசிக்க போட்டி போடுவார்கள். அவர்களின் வகுப்பு ஆசிரியராக வந்து சேர்ந்த தமிழரசன் தமிழ் இலக்கியங்களில் உள்ள நுண்ணிய அழகினை நயம் பட எடுத்துக் கூறினான்.
பல மாணவிகளுக்கு அந்த நயம் புரிந்ததோ இல்லயயோ....அவன் உருவத்தின் நயத்தை ரசித்தார்கள். அதில் விஜியும் ஒருத்தி. தமிழரசனுக்கும் அவள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. தோழி விஜியின் காதலுக்கு தூது சென்று, அவர்களை சேர்த்து வைத்தது சசி தான்.
இப்பொழுது அந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டு அவள் அவனை சந்திக்க காத்திருக்கிறாள். நேற்றே ஃபோன் செய்து.....
“சார்.. கொஞ்சம் சிம்மக்கல் நூலகத்துக்கு வரமுடியுமா? பிளீஸ்..” என்றாள்.
“சசி.. இன்னும் என்ன சார்? அண்ணா என்று கூப்பிடேன்..” என்றான்.
சசிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு சகோதரன் இல்லை. ஒரே ஒரு தங்கை விபா தான். அவளும் சிறு வயதிலிருந்தே அருந்ததியின் தங்கை, கவிதாவின் வீட்டிலேயே வளர்ந்தாள். கவிதாவுக்கு குழந்தை இல்லை. குழந்தை விபாவை, தங்கை கவிதாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டாள் அருந்ததி. கவிதாவின் மகளாகவே வளர்கிறாள் விபா. இருந்தாலும் அவள் பள்ளி விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது இருவரும் கொட்டம் அடிப்பார்கள். சகோதரி உறவு இருந்தது சசிக்கு. சகோதரன் உறவுக்கு அவள் ஏங்கினாள் என்றே சொல்ல வேண்டும். தமிழரசனை அண்ணா என்று அழைப்பதில் அவளுக்கு சம்மதமே.
மணியைப் பார்த்தாள் சசி. பத்தை தாண்டிவிட்டது. தமிழரசன் வருகிறானா
என்று பார்த்தாள். அதோ வந்து கொண்டிருக்கிறான். அவள் புரட்டிக்
கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டு வெளியே ஓடினாள்.
“சசி..நூலகத்தில் பேச முடியாது. வா எதிரில் இருக்கும் காப்பி ஷாப்புக்கு போகலாம்..” என்றான் தமிழரசன். இருவரும் காப்பி ஷாப்புக்குள் நுழைந்தனர். அதிக கூட்டமில்லை. ஒரு ஒரமான டேபிளில் அமர்ந்து கொண்டு காப்பி ஆர்டர் பண்ணினான் அவன்.
“சசி.. அரை நாள் லீவ் போட்டிருக்கேன். கல்லூரிக்கு போகணும். அரை மணி தான் டைம். சொல்லு என்ன பேசணும்.?” நேரடியாக விஷயதுக்கு வந்தான் தமிழ். அவன் முகத்தில் ஒரு கவலை தெரிந்தது.
“என்ன சொன்னாள் உன் அருமைத் தோழி விஜி?”
“அண்ணா.. அவளை ரொம்ப புலம்ப வச்சிட்டீங்க.”
“சசி.. எனக்கு ரெண்டு காது ஏன் இருக்குன்னு நான் நொந்துக்கிட்டு இருக்கேன். ஒரு காதில் அம்மாவின் புராணம், இன்னொரு காதில் மனைவியின் புராணம். ரெண்டும் ஒற்றை மனசுக்குள் போய், இப்ப கலவர பூமியா இருக்கு மனசு.” என்றான் சலிப்புடன்.
“என்ன செய்றது அண்ணா.? பெண்களுக்கு பல பிரச்சனைகள் என்றால், ஆண்களுக்கு இது தான் ஒரே பிரச்சனை. அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் கருத்து மோதலை சமாளிக்க முடியாமல் ஒரு சந்நியாஸ மனநிலைக்கு போய்விடுகிறார்கள்..”
“அப்பாடி.. நீ என் பிரச்சனையை சரியா புருஞ்சுக்கிட்டியே. அதுவரை சந்தோஷம்..” என்றான் ஒரு நிம்மதியுடன்.
“பிரச்சனையை சரியா புரிஞ்சுக்கிட்டா நீங்க நொந்து போக வேண்டாம்.”
“வகுப்பில் கிளாஸ் எடுக்கணும். அதுக்கு வீட்டில் குறிப்பு எடுக்கணும். மனுஷனுக்கு இருக்கறது ஒரு மனசு தான். எதுக்கெல்லாம் அதை பயன்படுத்த முடியும்? அம்மா மனைவி பண்ணும் கூத்துக்கு இடையில் ஒரு குட்டி மனுஷன் வேற.... போட்டு பிக்கிறாங்க சசி..”
“குட்டி மனுஷனுக்கு கொஞ்சம் வரவேற்பு கொடுங்க பாஸ். ஒண்ணு அவனைப் பார்த்துக்க ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணுங்க. இல்லே விஜியை வேலையை விடச் சொல்லுங்க.. அவ்வளவு தான் சிம்பிள்..”
காப்பி குடிக்கப்படாமல் ஆறிக் கொண்டிருந்தது. சசி அவனுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்கு சிரிப்பு வந்தது. அவன் பாடம் எடுப்பதை கேட்ட சின்னப் பெண் இப்ப அவனுக்கே பாடம் எடுக்கிறாள்.
“விஜி வேலையை விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை சசி. காரணம் அவள் சம்பளத்துக்காக அல்ல. அவளின் எதிர்காலத்துக்காக. எதுவானா நடக்கலாம்.. நானே மண்டையை போட்டுவிட்டால்? அவள் திண்டாடக் கூடாது. இப்படி நினைக்கக் கூடாதுன்னு சொல்லலாம்.. அது தானே யதார்த்தம்? குழந்தையை அம்மாவால் பார்த்துக்க முடியலை, வேலையாள் வைப்பதிலும் விருப்பமில்லை. நான் என்ன தான் செய்வது.?”
“அப்ப உங்க சொந்தத்தில் அநாதரவா யாராவது ஒரு பெண்மணி இருந்தால், குழந்தையை பார்த்துக்க அவங்களை நியமச்சிட்டா போச்சு.. அம்மா ஆட்சேபனை செய்ய மாட்டாங்க..” இந்த தீர்வு வேலை செய்யுமா? என்று அவன் முகத்தைப் பார்த்தாள் சசி. அவன் முகம் மலர்ந்தா மாதிரி தெரிந்தது.
“தேங்க்யூ டீச்சர்.. இது நல்ல யோசனை... இந்த கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லை. அம்மாவின் தூரத்து சொந்தமான தம்பி மனைவி இருக்காங்க. கணவனை இழந்தவங்க. ஆதரவு இல்லாம இருக்காங்க. பேசிப் பார்க்கறேன்.” அவன் முகத்தில் குழப்பம் மறைந்து தெளிவு தெரிந்தது.
பக்கத்து டேபிளில் ஸ்ரீகாந்த வந்து உட்கார்ந்து, இவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்ததை இருவரும் கவனிக்கவில்லை. மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
தமிழரசன் நல்ல ஆரோக்கியமும் அழகும் கொண்ட, கண்ணுக்கு நிறைந்த ஆணாக இருந்ததை ஒரு வித அலட்சியத்தோடு பார்த்தான் ஸ்ரீ. பெரிய ஹிந்தி பட ஹீரோன்னு நினைப்பு. சொல்லிக் கொடுக்கறது தமிழ்....கெட்டப்பு பாலிவுட் ரேஞ்சில்....அப்படி என்ன தீர்க்க முடியாத பிரச்சனை இவனுக்கு? தன் வீட்டு பிரச்சனையை தானே தீரத்துக் கொள்ள முடியாத கையாலாகாதவனா இவன்? அவனுக்கு சகோதரி இல்லயா? வேறு பெரியவங்க இல்லயா? போயும் போயும் தன்னிடம் படித்த மாணவியிடம் அட்வைஸ் கேக்க வந்திருக்கான். இதெல்லாம் ஒரு சாக்கு. பொண்டாட்டி அதுக்குள்ள அலுத்துப் போயிட்டா போலிருக்கு.. சைட் அடிக்க வந்திட்டான். ஸ்ரீ பொருமிக் கொண்டிருக்கும் போதே பேரர் வந்து கேட்க, ஐஸ்கிரீமுக்கு ஆர்டர் செய்தான். அவன் கவனம் பூராவும் அவர்கள் மேல் தான் இருந்தது. ஹீரோ ஏதோ தலையை ஆட்டுகிறான்,.. இவள் ஏதோ கெஞ்சுகிறாள். பிறகு அவன் கையை விரித்து முடியலை என்பது போல் அவளைப் பார்க்கிறான்.. கூல் என்று அவள் சொல்வது போல் படுகிறது...ஒரு ஊமை திரைப்படம் போல் அவன் முன் காட்சிகள் விரிகிறது. கடைசியில் பேரர் பில்லை வைத்து விட்டுப் போகிறான். அப்பாடா பேசி முடித்து விட்டார்கள் என்று ஸ்ரீ நிம்மதி அடைய... அதற்குள்.... எழுந்து கொள்கிறார்கள்.. அவர்கள் பேசுவது இப்பொழுது தெளிவாக கேட்கிறது. ஸ்ரீ கவனிக்கிறான்..
“சசி.. உன் மூக்கில் இருக்கு உன் பொட்டு..” அவள் சிரித்து சரி பண்ணப் பார்க்கிறாள்.. அது வேறு இலக்கில் செல்ல தமிழரசன் பொட்டை சரியாக அவள் நெற்றியில் வைக்க.. அதிர்ந்து போனான் ஸ்ரீ..
அந்த நிமிஷமே எழுந்து அவனை பளார் என்று அறைந்து விட துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்து இருப்பது சிரமமாக இருந்தது அவனுக்கு. இவளுக்கு மூளை எங்கே போச்சு? பல்லை இளித்துக் கொண்டு காட்டிக் கொண்டிருக்கிறாள்.
“தேங்க்ஸ்..” என்று சொல்லிக் கொண்டே அவள் நகர, அவனும் கூடவே நகர்ந்தான். அவனை கடந்து போகிறார்கள். அவன் தலை குனிந்து தன்னை மறைத்துக் கொள்கிறான். கடைசியில் ஸ்ரீ ஐஸ்கிரீமை சுவைக்காமல் இருக்க, அது உருகிக் கொண்டிருந்தது.
அவள் அனுமதி கேட்கும் போதே வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும். அப்போ முகத்துக்கு நேரே அப்படி சொல்ல முடியவில்லை ஸ்ரீயால். அவள் அவனை கேவலமாக எடை போட்டுவிட்டால்? பிரெஸ்டிஜ் தடுத்தது....இப்போ அதன் பலனை அனுபவிக்கிறான். தமிழ் விடை பெற்று பைக்கில் செல்ல.. அவள் பஸ் ஸ்டாப் நோக்கிப் போனாள். இவன் மேஜையில் ஒரு குத்து குத்திவிட்டு, பில்லை கொடுத்துவிட்டு கிளம்புகிறான். “சார் டிப்ஸ்..” என்று தலை சொறிந்த பேரரை முறைத்துவிட்டு நகர்ந்தான்.
மாலை வந்தது. சசியும் ஸ்ரீயும் ஒருவர் பின் ஒருவராக வர, பார்கவி சூடாக காப்பி கொண்டு வந்து கொடுத்தாள்.
“அத்த.. நான் போன காரியம் சக்சஸ். எனக்கு பாடம் நடத்தியவருக்கே நான் பாடம் நடத்திட்டேன்.. எப்படி?” என்று சசி மாமியாரிடம் சொன்னாள்.
“அப்படியா? நீ ரொம்ப கிளவர் ஆச்சே? கை கொடு..” என்று பார்கவி சொல்ல சசி கை கொடுக்க.. அதை குலுக்கி பாராட்டினாள் பார்கவி.
“அம்மா.. அவ ஆழம் தெரியாம காலை விட்டிருக்கா. பாராட்டிட்டு இருக்கீங்க. இன்னொரு வீட்டின் பொல்லாப்பு நமக்கு எதுக்கு? மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டிக்கப் போறா..” என்றான்.
“சும்மா இருடா. உனக்கு என்ன தெரியும்? தோழிக்கு ஒரு சங்கடம்னா, அதை பார்த்திட்டு சும்மா இருக்க முடியுமா? எல்லோரும் இப்படி ஒதுங்கினா அப்புறம் விஜிக்கு நிம்மதி எப்படி கிடைக்கும்? சசி செஞ்சது சரி.” பார்கவி சசிக்கு வக்காலத்து வாங்கினாள்.
ஸ்ரீ அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவன் சொன்னது போல விஜியின் மாமியாரிடமிருந்து ஃபோன் வந்தது.. சசி திடுக்கிட்டாள்.
தேடல் தொடரும்.