கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா-1

Status
Not open for further replies.

Jothiramar

Moderator
Staff member
♥️என் வானம்♥️-1

"அதிகாலை வேலை, விடியலுக்கு முன்னதான எங்கும் இருள் சூழ்ந்து இருக்கும் நேரம், ஒருவன் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக கடற்கரையோரம் ஓடிக் கொண்டிருந்தான்.

"அவனின் வேகத்தை பார்த்தால், ஜாகிங் போவதை போல இருந்தாலும், அவனுடைய மனமோ குதிரை வேகத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

"கடல் அலைகளின், இரைச்சலை விட அவனுடைய மனம் பேரிரைச்சலுடன், கொதித்து கொண்டு இருந்தது.
"இப்படியே எங்காவது சென்றுவிடலாமா? என்று கூட அவன் மனம் கிறுக்குத்தனமாக யோசிக்க ஆரம்பித்தது.

"அவளை, பழிவாங்கிட துடித்த மனதை கட்டுப்படுத்தி வைத்திருந்தவன்" அதற்கான நேரம் வரும் போது, 'அவனால் அதை செயல்படுத்த முடியுமா? என கோணலாக யோசித்தது.

"காதலித்து ஏமாற்றிய, நயவஞ்சகியின் முகம்!! அவன் மனுதுக்குள் விஸ்வரூபம் எடுப்பதை பார்க்க!!! பார்க்க!!! அவன் உள்ளம் உலைக்களமாக கொதித்தது".

"அவளுடைய பால்வடியும் முகமும், பார்ப்பவரை சட்டென கவரும்படியான, அழகான திராட்சை கண்களை உடையவளை" கொலைக்காரி!! என்று எவருமே, நம்பமாட்டார்கள். "அவளின் ஏமாற்று செயலால், அநியாயமாக ஒரு உயிரை பறித்த ராட்சசி!!! அவள் என்று சொன்னால், "யாரும் நம்பவே மாட்டார்கள்" என பலவாறாக அவன் மனதுக்குள் தோன்ற" இரும்பை விட அதிக திறன் கொண்ட, எஃகிலான அவனின் இதயத்திற்குள், ஒருவனின் புன்னகை ததும்பும் முகம் வந்து போக" இவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருந்தவனின் ஓட்டம் சட்டென நின்றது.

"ஈரக்காற்று, அவன் முகத்தில் மோத அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த தீ சற்று குளிர்ந்தால் போல ஆனது. அதனாலோ, வியர்வையில் குளித்திருந்தாலும், பார்ப்பதற்கு புத்துணர்ச்சியுடன் காட்சியளித்தவனின் கண்களில் இருந்த இரத்த சிவப்பை யாரேனும் கண்டிருந்தால், பயத்தில் மயங்கியே போயிருப்பார்கள். அத்தகைய தீரா, கோபத்தில் உலன்றவனின் மனம்" ஒரே ஒரு பெயரை மட்டுமே உருட்டிக் கொண்டிருந்தது.

"அந்த ஒருவனுடன், பயணித்த இனிமையான நாட்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போக அவனின் இழப்பை, இத்தனை வருடங்கள் கடந்த பின்னும், தன்னால் ஏற்க முடியவில்லையே!! என்று மருகியவனின் கண்களில் இருந்து இரு துளி நீர் கீழே விழுவதற்கு முன்னால் ஊதி தள்ளியவன்... அர்ஜுன்... அர்ஜுன்... என்று அந்த இடமே அதிரும்படி கத்தினான்.

"கடல் அலைகளின், பேரிரைச்சலையும் தாண்டி அர்ஜுன் என்ற பெயர் எதிரொலித்தது.

"அதே நேரம், அர்ஜுன்!!! அர்ஜுன்!!! என கத்திக் கொண்டே சட்டென உறக்கத்தில் இருந்து, விழித்தவளின் உடல் தெப்பலாக நனைந்திருந்தது. ஏசி அறையிலும் தெப்பலாக நனைந்திருந்த அவளுடைய உடலும், கூடவே தடதடக்கும் இதயமும் அர்ஜுன்!!! அர்ஜு!!! என ஓயாமல் கூவிக் கொண்டிருந்தது.

"அறையின் விளக்கை, ஒளிரவிட்டவள் நேரத்தை பார்க்க!!! அதுவோ மூன்று என்று காட்டவும், "அவள் மனம், சற்று நிம்மதியானது. அதே நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவளை பார்த்ததும், இதழ்விரித்தாள்.

"அறைக்குள் வந்தவளோ, கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, என்ன தேவா இது!!! நீ அசந்து தூங்கிட்டு இருப்ப!! உன்னை எழுப்பலாம்னு வந்தா, எனக்கு முன்னாடி எழுந்துட்டியா? அவ்வளவு அவசரமா? என அதட்டியவளின் முகத்தில் இருந்த புன்னகையில், "தேவாவின் முகம், வெட்கத்தில் சிவந்து இருந்தது.

"அட டா!! என் தேவா வெட்கப்படுறாளே? "இந்த பூ, முகத்துல சந்தோசத்தையும் சிரிப்பையும் பார்த்து எத்தனை வருடமாகிடுச்சிடி, என்றவளின் மனமோ, இந்த சந்தோசம் உனக்கு வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கனும்டி என இறைவனிடம் வேண்டுதலை வைத்தவளுக்கு தெரியவில்லை.... "தன் தோழியின், வாழ்க்கையில் இதைவிட பெரிய சுனாமியே வீசப் போகிறது என்று!!! "இளாவை பார்த்து, காலன் நக்கலாக சிரித்தான்.

"இளா!! என்றழைத்தபடியே அறைக்குள் வந்தார் அவளின் அம்மா அகல்யா! தேவாவையும் தன் மகளையும் பார்த்துவிட்டு, ஏய் என்னடி இரண்டு பேரும் அப்படியே மசமசனுநிற்கிறீங்க!!! "காலை முகூர்த்தம், நியாபகம் இருக்குல்ல சீக்கிரம் தேவாவை தயார் பன்னுவனு உன்னை அனுப்பி வைத்தால், கதையா அடிச்சிட்டு இருக்க!!!... அதட்டினாலும் அவரின் பேச்சில் இருந்த அக்கரையில் தேவாவின் உள்ளம் நெகிழ்ந்தது.

"தன்னுடைய திருமணத்தை, பார்க்க தன்னை பெற்றவர்கள் இல்லையே என்ற குறையை போக்கும் அளவிற்கு இளாவின், பெற்றோர் பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்தனர்.

"கண்கள் கலங்கி, நின்ற தேவாவின் அருகே வந்த அகல்யா, தேவா!! அழாதடா, உனக்கு எல்லாமாமும் நாங்க இருப்போம், இன்னைக்கு உன் வாழ்க்கையோட பொன்னான நாள், மட்டும் இல்ல, மறக்க முடியாத நாளும் கூட!!! இன்னைக்கு உன் முகத்தில் சந்தோசம் மட்டுமே, நிலைத்து இருக்கனும்!! என்று அவளுடைய முகத்தை தன் கைகளில் ஏந்தி சொன்னவர், அவளின் விழி நீரை துடைத்து விட்டு" போடா போய் குளிச்சிடு!!! ஹீட்டர் போட்டுருக்கேன் என்று தேவாவை பாத்ரூமிற்குள் அனுப்பி வைத்தார்.

"இளா, நீ தேவா கூடவே இரு!! இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு அலங்காரம் செய்ய ப்யூட்டிசியன் வந்துடுவாங்க!! அதுக்கு முன்னாலேயே தேவாவுக்கு, பால் குடிக்க கொடுத்துடு!! தெம்பா இருக்கும். கல்யாணம் முடிந்த பிறகு தான் ஒழுங்கா சாப்பிடவே முடியும், புரியுதா? என்று சொல்ல!!...

"அய்யோ அம்மா!! உங்க செல்ல மகளை பத்திரமா பார்த்துக்கிறேன் நீங்க போங்க" என்று சொன்னதும்,

"அகல்யாவோ" வாய் வாய் கல்யாணம் ஆகியும் இந்த வாய் மட்டும் குறையல, என கோபத்துடன் சொன்னவரின் இதழோரம் புன்னகையில் விரிந்தது.

"அர்ஜுன்!!! அர்ஜுன்!!! இன்னும் எத்தனை நாள் தான் "நான், இந்த பெயரில் இருக்க போகிறேன். டேய் அர்ஜுன் நான் அவளை பார்க்கும் போதெல்லாம் என் இதயம் பழி உணர்ச்சியை அதிகப்படுத்துதுடா. "அவளை என், கையாலேயே கொன்று விட வேண்டும் என்று என் இதயம் உரக்க கத்துகிறதுடா!!. நான் நீ இல்லை என்ற உண்மை அம்மாவுக்கு தெரியவந்தால் அவர்களின் உடல்நிலை என்னவாகும்னு யோசித்தே இவ்வளவு நாளும் உண்மையை சொல்ல, தயங்கினேன். ஆனால் இன்று நான் நீயாகவே மாறி, உன் சாவிற்கு காரணமானவளை உன்னை கொன்றவளை, உயிரோடு தினம் தினம் கொல்வேன் என்று தன் மனதுக்குள் சூளுரைத்து கொண்டவன், தன்னுடைய காரை நோக்கி சென்றான்.

"அர்ஜுன், காரை நெருங்கவும், அவனுடைய மொபைலில் ரிங் முழுவதுமாக அடித்து முடிந்தது. "அலட்சியமாக, தன்னுடைய மொபைலை, எடுத்து பார்த்தவன், நூறுக்கும் மேற்பட்ட மிஸ்டுகாலை பார்த்தவனின், இதழின் ஓரத்தில் சிறு கீற்றாய் புன்னகை வந்து போனது.

"மிஸ்டு கால், வந்த நம்பரை தொடுதிரையில் சென்று அழுத்திவிட்டு காதில் வைத்தவன்.. எதிர்முனை எடுக்கப்பட்டதும், என்ன மச்சி!! நான் ஓடிபோயிட்டேனு நினைச்சி பயந்துட்டியா? என்று நக்கலான குரலில் கேட்கவும்,

"டேய் இத்தனை நாள், நீ செய்ததை கூட நான் பாசத்துக்காகனு எடுத்துப்பேன்" ஆனால் நீ இப்போ செய்ய போறது கொடுமையான செயல், அந்த பெண் மேல நீ வீணா பழியுணர்ச்சியை வச்சிட்டு இருக்க... தயவு செய்து கிறுக்குத்தனம் பன்னாமல் மண்டபத்துக்கு வா, உன் அப்பா அம்மாவை என்னால சமாளிக்கவே முடியலைடா, மாப்பிள்ளை, மண்டபத்தில் இல்லைனு தெரிஞ்சாலே, இளா வீட்டு ஆளுங்க சும்மா இருக்க மாட்டாங்கடா? டேய் க்...... என்றழைக்கப் போனவனை தடை செய்தான் அர்ஜுன்.

டேய்!! ஸ்டாப் இட்!!! டோன்ட் கால் மீ தட் நேம்... நவ் ஐ அம் அர்ஜுன்!! அர்ஜுன்!! அன்டர்ஸ்டேன்ட் என கர்ஜிக்க... சரிடா சரி சரி நீ அர்ஜுன் தான் இல்லைனு சொல்லலை, அவனை மாதிரி பேர் மட்டும் வச்சிக்கிட்டா போதாதுடா, அர்ஜுனாவே நீ வாழ்ந்தா நான் சந்தோசப்படுவேன்" ஆனால் உன்னால அவனோட பேரை மட்டும் தான் வச்சிக்க முடியும்" என விரக்தியாக பேசியவனை கண்டுக் கொள்ளாமல், இன்னும் ஃபிப்டீன் மினிட்ஸ்ல அங்கே இருப்பேன்டா என்று சொல்லிவிட்டு சந்தோஷின் பதிலை கூட கேட்காமல் மொபைலை அணைத்தவன் அதை காரில் தூக்கிப் போட்டுவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்து மண்டபத்தை நோக்கி சீறி பாய்ந்தான்.

"சென்னையில், மிக பெரிய மண்டபம் தொழிலதிபரின் மகனின் திருமணம் ஆதலால், வண்ண வண்ண விளக்குகளால் ஜொளித்துக் கொண்டிருந்தது.

"எப்படி மண்டபத்தில், இருந்து யாரும் அறியாமல் வெளியே சென்றானோ, அதே போலவே உள்ளே நுழைந்தான் அர்ஜுன். (இப்போதைக்கு இவனுடைய பெயர் அர்ஜுனாகவே இருக்கட்டும் பிரண்ட்ஸ்)

"திடிரென அறைக்கதவு திறக்கப்படவும், அச்சத்தில் திரும்பிய சந்தோஷின் முன்பு புன்னகையுடன் நின்றிருந்தான் அர்ஜுன்".

"டேய் சிரிக்காதேடா!! எனக்கு வர கோபத்துக்கு, உன் பல்லை உடைக்கனும் போல இருக்கு, கல்யாண மாப்பிள்ளையாச்சேன்னு பார்க்கிறேன் என பல்லைக்கடித்தான் சந்தோஷ்".

"கல்யாண மாப்பிள்ளை, என்று சொன்னதும், "அர்ஜுனின், முகம் இறுகியது.

தன் நண்பனின் இறுகிய முகத்தை பார்த்தவனுக்கு, தன் மேலேயே கோபம் எழ, டேய் அர்ஜுன் சீக்கிரம் போய் குளிச்சிடு!!! அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க, ஏற்கனவே இரண்டு மூன்று முறை உன்னை பார்க்கிறதுக்காக, ரூமுக்கு வந்துட்டு போய்ட்டாங்க" என பேச்சை மாற்றிய சந்தோஷ் அர்ஜுனை வேறு ஏதும் யோசனை செய்ய விடாமல், அவனை குளியல் அறைக்குள் தள்ளினான்.

"நேரம் யாருக்கும், காத்திராமல் வேகமாக சென்றது. நெருங்கிய சொந்தபந்தங்கள் தொழில் துறை நண்பர்கள் என பலர் அந்த மண்டபத்திற்கு வருகை புரிந்த வண்ணம் இருக்க காலை நேரமே பரபரப்புடன் இருந்தது .

"மாப்பிள்ளை வீட்டு சார்பில், அர்ஜுனின் அம்மா அம்பிகையும், அப்பா கைலாஷும் தம்பதி சமேதராய் நின்று வரவேற்றுக் கொண்டிருக்க... "பெண் வீட்டு சார்பாக, தேவாவின் அத்தை அகல்யாவும் மாமா அமுதவாணனும் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

"பெண் வீட்டை விட, மாப்பிள்ளை வீடு வசதியில் உயர்ந்தவர்களாகவே இருந்தனர். தேவாவைப் பற்றிய உண்மை, இளாவின் கணவன் சந்தோஷ் மூலமாக தெரிய வர, தன் மகன் ஆசைப்பட்ட பெண் என்ற ஒரே காரணத்திற்காக தேவாவை அர்ஜுனுக்கு பேசி முடிவு செய்தனர்.

"கடந்த ஐந்து வருடங்களாக, தன்னவனை வலுக்கட்டாயமாக பிரிந்து துயரத்தை தனித்து அனுபவித்த தேவாவும், "அர்ஜுனை கண்ணால் கண்ட பிறகு, அவனை இனி ஒரு நொடிகளும் பிரிந்திருக்க முடியாது என்ற நிலை வர!! கல்யாணத்திற்கு சம்மதித்தாள். "தான் காதலித்தவனையே கரம் பிடிக்க போகும் சந்தோசத்தில், சிறகை விரித்து பறந்து கொண்டிருந்தாள் தேவா. "ஆனால் தன்னுடைய, சந்தோசத்திற்கு சில மணித்துளிகளே ஆயுள் என்று அறியாத பெண்ணவளோ, மணமேடைக்கு எப்போது செல்வோம் என்று ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தாள்.

"ஆனால் அர்ஜுனின் மனமோ, அவளை நேரில் பார்க்கும் போது, கோபத்தை எவ்விதம் கட்டுப்படுத்துவது, என்று யோசனை செய்து கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு தெரியவில்லை தன்னால் கோபத்தை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் ஒன்று என்று. "அவளை மணமேடையில், பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தபடியே கிளம்பிக் கொண்டிருக்க... வெளியே மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ! என்ற குரலில் ஒருவித பரபரப்புடன் மணமகன் அறைக்குள் நுழைந்தான் சந்தோஷ்.

"வாவ் மச்சி, ஹேண்ட்சம்மா இருக்கடா! தேவா மட்டும் உன்னை பார்த்தா ப்ளாட் ஆகிடுவா! என சந்தோசத்தில் உலற"

"அர்ஜுனின் முகம், இரத்த சிவப்பென கோபத்தில் சிவந்தது. ஐய்யோ நான் ஒரு கிறுக்கன் அப்பப்போ அந்த பெண்ணை, பற்றி பேசி இவனோட கோபத்தை அதிகரிக்கிறேன் என தன்னையே திட்டிக் கொண்டான்.

"சாரிடா அர்ஜு.... என்க

"வாயை மூடுடா!! என சுள்ளென விழுந்தான் அர்ஜுன்.

"டேய் சந்தோஷ், அங்கே ஐயர் கத்திட்டு இருக்கார்" இவனை அழைச்சிட்டு வராமல் என்ன கதை பேசிட்டு இருக்க என தாய்க்கே உரிய பதற்றத்துடன் கேள்வி கேட்டுக் கொண்டே உள்ளே வந்த தன் அம்மாவை பார்த்ததும், வழிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் நின்றான் அர்ஜுன்.

"அம்பிகையின் மனம், மகனை மணக்கோலத்தில் பார்த்ததும் குளிர்ந்து போனது. அர்ஜுனின் முகத்தை கைகளில் ஏந்தியவர், "அர்ஜு, எங்கே போனவனையே நினைச்சி நீ" இப்படியே இருந்துடுவியோனு நான் கவலைப்படாத நாள் இல்லை... உன் உருவத்தில் தான்டா அவனையே நானும் உன் அப்பாவும் பார்க்கிறோம் என்றவரின் கலங்கிய கண்களை துடைத்துவிட்டான் அர்ஜுன்.

"ம்மா ப்ளீஸ்!! என்றவன், பேச முடியாமல் திணறினான்.

"அய்யோ, என் பிள்ளையை நல்ல நாளும் அதுவுமா, இப்படி அழவச்சிட்டேனே" என தன்னையே திட்டிக் கொண்டவர், நீ ஆசையாய் காதலிச்சவளையே உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறதில நானும் அப்பாவும் ரொம்ப சந்தோசமா இருக்கோம்பா, என்று தன் கண்ணை துடைத்துக் கொண்டவர், சந்தோஷிடம் திரும்பி, சீக்கிரமா அழைச்சிட்டு வாடா என அதட்டலாக சொல்லிவிட்டு சென்றார்.

"இதோ அழைச்சிட்டு வரேன்மா என்றவன், அர்ஜுனோடு மணவரையை நோக்கி சென்றான். மணமேடையை நெருங்கும் வேலை அர்ஜுனின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. தன்னுடைய பதற்றத்தை மறைத்தபடி ஐயர் சொல்ல சொன்ன மந்திரங்களை சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

"பொண்ண அழைச்சிட்டு, வாங்கோ என்ற ஐயரின் உரத்த குரலில் "அர்ஜுனின் இதயம் காரணமே இன்றி படபடப்பானது. அதனை நினைத்து அவனின் மீதே கோபம் எழ தன் இதயத்தை பாறைப் போல கடினமாக்கினான்.

"அதே நேரம், இளா தேவாவை அழைத்துக் கொண்டு வந்து அர்ஜுனின் அருகே அமர வைக்கவும், முகத்தில் சந்தோசம் மிளிர தன்னவனை, ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் வெட்கத்தில் இதழ் கடித்து கீழே குனிந்து கொண்டாள்.

"ஐயர் மந்திரங்களை, சொல்ல பொன் மஞ்சள் தாலியை இளாவிடம் கொடுத்து... ஆசிர்வாதம் வாங்கிண்டு வாங்கோ!! என கொடுத்த தாம்பூல தட்டை கைகளில் வாங்கிக் கொண்டு கீழே சென்றவள், அதில் உள்ள அட்சதையை அனைவரிடம் கொடுத்து ஆசி வாங்கிக் கொண்டு மறுபடியும் ஐயரிடமே கொடுத்தாள்.

கல்யாண மண்டபத்தில், மங்கள வாத்தியங்கள் முழங்க... ஐயர் கெட்டி கெட்டி மேளம் என்று உரக்க சொல்ல" மண்டபத்தில் குழுமியிருந்த பலரின் நல்லாசியுடனும் சிலரின் வெறுப்புகளுடனும் ஆசிர்வாதம் வாங்கி வந்த... அந்த தாலியை, மணமகனிடம் ஐயர் நீட்டவும்...

"கட்டிளம் காளையாய், ஆண்களே பொறாமைப்படும் ஆணழகனாய் கம்பீரமாய் அமர்ந்திருந்தவனின் முகத்திலோ, கல்யாணத்திற்கான சந்தோசம் ஏதும் இல்லாமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தவனுக்கு... அந்த தாலியை தொட்டதும் உண்டான நடுக்கத்தை சரி செய்தவன், தன் அருகில் இருந்தவளை பார்க்க... அவளோ!

"இந்திரலோகத்து சுந்தரியே, நேரில் வந்தது போல அழகோவியமாய்" தன் மனம் கவர்ந்தவனையே கைபிடிக்க போகும் சந்தோசத்தில் அவளுடைய வதனம் புன்னகையாலும், பொன்னகையாலும், ஜொளித்து கொண்டிருந்த மங்கையவளின்' முகத்தை பார்த்தவனுக்கு! ஏற்கனவே இறுகி இருந்தவனின் மனம், பாறை போல கடினப்பட்டு கொண்டிருக்க... "தீயை தீண்டியது போல் இருந்த, "அவளது அருகாமையில், அவன் கண்களோ செந்தனழை கொப்பளித்து கொண்டிருக்க".. அவனின் பார்வையை தவறாக புரிந்து கொண்ட ஐயரோ!

"தம்பி, என்ன பெண்ணையே பார்க்கறேள்! சீக்கிரம் தாலியை கட்டுங்கோ" நல்ல நேரம் முடியப்போறது என்று சொல்ல... அருகில் நின்றிருந்தவர்கள் களுக்கென சிரிக்கவும்"...

"பெண்ணவளுக்கோ, நாணத்தில் கண்ணம் சிவந்து" குனிந்த தலையை நிமிராமல் இருந்தாள்'.

"ஆனால் அவளின், மணாளனுக்கோ கோபத்தில் கண்கள் சிவக்க! தாலியை கொண்டு போனவன், கழுத்தில் கட்டாமல் விடப்போனவனின் கண்களில் அவனுடைய அம்மாவின் சந்தோசமான முகம் தெரியவும், வேண்டா வெறுப்பாக அவளுடைய கழுத்தில் தாலியை கட்டி மூன்று முடிச்சையும் போட்டான்".

"அதன் பிறகு, நடந்த சடங்குகளை எந்திரம் போல, செய்து முடித்தவன் விடுவிடுவென கீழே இறங்கவும், மங்கையவளின் கல்யாணப்புடவையின் முந்தானை "அவனது, அங்கவஸ்திரத்துடன் இணைத்திருக்க" அவனின் வேக நடைக்கு ஈடுகொடுத்தபடி இவளும் நடந்து போனவளின் மனமோ!

"தன் மனங்கவர்ந்தவனின், திடீர் விலகலுக்கான காரணம், தெரியாமல் பெண்ணவள் தவிக்க"... அதற்கு காரணமானவனோ, எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நடந்து கொள்ள"... மங்கையவளின் உள்ளமோ கலங்கி தவித்தது".


 
Status
Not open for further replies.
Top