கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா-10

Jothiramar

Moderator
Staff member
என் வானம்❤-10


அமுதவாணனின் வீடு:


டைரியில் இருந்த படத்தையே கைகள் நடுங்க பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும், டைரியை மறைத்து வைத்துவிட்டு பெட்டில் கண்களை மூடியபடி படுத்துக் கொண்டான்.


அர்ஜுன் இன்னும் உறக்கத்தில் இருப்பதை பார்த்த தேவா, அவனின் முகத்தையே ஒரு நிமிடம் நின்று பார்த்துக் கொண்டிருக்க… படபடவென ஜன்னல் கதவின் சத்தத்தில், அர்ஜுனுடைய தூக்கம் கலைந்துவிடுமோ என நினைத்து கதவை சாத்தியவள், இறைந்து கிடந்த பொருட்களை எடுத்து வைத்து விட்டு, அர்ஜுனின் உறக்கம் கலையாதவாறு அறையில் இருந்து வெளியேற போன தேவாவின் கால்கள் நின்றது.


வேகமாக மேஜை அருகே வந்தவள், தன்னுடைய டைரி அங்கே இல்லாமல் இருப்பதை பார்த்து பதறியவள், மேஜை டிராயரை திறந்து தேட ஆரம்பித்தாள். எங்கு தேடியும் டைரி கிடைக்காமல் போகவும், தேவாவின் கண்கள் கண்ணீரை உகுத்தது. தன்னுடைய பொக்கிஷமான நினைவுகள் அனைத்தும் அதில் தானே இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக தன்னுடனே இணை பிரியாமல் இருந்த டைரியை காணாமல் இதயமே நொறுங்கிவிடும் போல இருந்தது.


தேவாவை தேடிக் கொண்டு அறைக்கு வந்த இளா அவளுடைய அழுகையை பார்த்ததும், தேவா என்னடி என்ன ஆச்சி என கேட்க, அர்ஜுனை காண்பித்து காணவில்லை என்று சைகையில் சொல்ல… ஏய் லூசா நீ, அர்ஜுன் அண்ணா தான் உன் கண்ணு முன்னாடி இருக்கிறாரே அப்புறம் என்ன? என்றவளின் தலையில் குட்டிய தேவா அவளிடம் டைரியை பற்றி சொல்ல,


தலையில் வலித்த இடத்தை தடவிக் கொண்டே, அடியே அறிவு கொழுந்தே, அதான் அர்ஜுன் அண்ணாவே உன் கூட இருக்கும் போது, டைரியை ஏன் தேடுற, என இளாவும் கடுப்படிக்க, ஏனோ தேவாவின் மனம் அதை ஏற்க மறுத்தது.


டைரி காணாமல் போனது அர்ஜுனே தன்னை விட்டு பிரிந்தது போல உணர்ந்தாள் தேவா. கண் முன்னே கணவனாக அர்ஜுனை பார்த்தும், கூட ஏனோ தேவாவின் மனம் தவித்தது.


பெட்டில் படுத்திருக்கும் அர்ஜுனின் அருகே அமர்ந்தவள் அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் கை தானாகவே அவனின் சிகையை கோதி விட, அவளின் பார்வை ஓர் இடத்தை வெறித்து பார்த்தபடியே இருந்தவளின், கை நடுங்க ஆரம்பிக்க… அவளுடைய தொண்டைக் குழி உள்நோக்கி அமிழ்ந்து, பேச துடித்த வாயிலிருந்து காற்று மட்டுமே வர, பெண்ணவளின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிய இருக்கையில் இருந்து சட்டென எழுந்தவள், தன் ஆள்காட்டி விரலை நீட்டியபடியே அ… அ…. அர்ஜு என கத்திக் கொண்டே மயங்கி விழப்போனவளை சட்டென தாங்கிப் பிடித்தான் அர்ஜுன்(கிருஷ்ணா).


தேவாவின் முகத்தையே குழப்பமும் அதிர்ச்சியுமாக கவனித்த இளாவுக்கு, ஒன்றுமே புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க… கடைசியாக தேவா அர்ஜு!! என கத்தியபடி மயங்கி கீழே சரியவும், அவளை கீழே விழாமல் பிடிக்க வந்த இளா அதிர்ந்தாள்.


இவ்வளவு நேரமும் தூங்கிக் கொண்டிருந்த அர்ஜுன் சட்டென தேவாவை தாங்கிப் பிடித்ததும் நிம்மதியடைந்தவள், அப்பாடா நல்ல வேலை அண்ணா தேவாவை கீழே விழாமல் தாங்கி பிடிச்சிட்டிங்க என்றவளின் மனதில் அப்போது தான் தேவா அர்ஜு என்று கத்தியது நினைவுக்கு வர,


அம்மா!! அப்பா!! தேவா, பேசிட்டா!! அம்மா, அப்பா சீக்கிரம் வாங்க!! நம்ம தேவா பேசிட்டா!! என்று சந்தோசமும் அழுகையுமாக கத்த… செய்து கொண்டிருந்த வேலையை போட்டு விட்டு வேகமாக அறைக்கு ஓடிவந்தனர்.


இளா என்னம்மா சொல்ற? தேவா பேசிட்டாளா! என ஆச்சரியமாக கேட்க,


ஆமாம்பா தேவா பேசிட்டா என்று அழுகையும் சிரிப்புமாக சொல்லவும்,


ஒரு நிமிடம் இங்கே என்ன நடக்குதுனு சொல்றீங்களா? என்று கடுமையுடன் ஒலித்தது அர்ஜுனின் குரல்.


அப்போது தான் அர்ஜுன் நியாபகம் வர, அண்ணா!! அது என இளா தடுமாறி நிற்க, அந்த நேரம் வேகமாக அறைக்குள் வந்த சந்தோஷ், தன்னவளின் தோளை திருப்பி, ஹேய் நீ இப்போ என்ன சொல்லி கத்தின? தேவா பேசிட்டாளா எப்போ? எப்டி? என அடுக்கடுக்காய் கேள்வியை கேட்க,, சந்தோஷ் என்றழைத்த அர்ஜுனின் இறுகிய குரலை கேட்டு திரும்பியவன், அதிர்ந்தான்.


மச்சி நீ!!! என வார்த்தை வராமல் தடுமாறி நின்றான் சந்தோஷ்.


கண்களில் கோபத்துடன் டேய், இங்கே என்ன நடக்குது, நான் தெரிஞ்சிக்கலாமா? என அனைவரையும் பார்த்துக் கொண்டு கேட்க, அர்ஜுனின் பார்வையை கண்ட அகல்யா மகளிடமும் மாப்பிளையிடமும் தனக்கெழுந்த சந்தேகத்தை கேட்டார்.


இளா, மாப்பிள்ளை, நீங்க இரண்டு பேரும் தேவாவால பேச முடியாதுன்ற உண்மையை, அர்ஜுன் தம்பிக்கிட்ட சொல்லலையா என அகல்யா அதிர்ச்சியுடன் கேட்க,


சந்தோஷும், இளாவும் தலையை குனிந்து இல்லை என்று சொல்லவும், இளாவின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார் அகல்யா.


ஏன்டி உண்மையை சொல்லலை? இது மறைக்கக் கூடிய விசயமா? அவருக்கு தானே தேவாவை பற்றி முதல்ல தெரிஞ்சிருக்கனும், தான் விரும்பின பெண் திடிரென பேசமுடியாமல் போனதைப் பற்றி முன் கூட்டியே சொல்லிருந்தா, அவருக்கு இது பெரிய அதிர்ச்சியா இருந்திருக்காதே! என்ற அகல்யா, மகளின் மீது உள்ள கோபம் தீராமல் மேலும் ஒரு அறை விட போகவும், அத்தை என்று அவரின் கையை பற்றி தடுத்தான் சந்தோஷ்.


சாரி அத்தை, இதுல இளா மேல எந்த தவறும் இல்லை. நான் தான் அர்ஜுனிடம் சொல்ல வேண்டாம்னு சொன்னேன் என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் அமுதவாணனும் அகல்யாவும்,


மாப்பிள்ளை நீங்க ஏன் மறைச்சிங்கன்னு காரணத்தை கேட்கமாட்டேன், ஆனால் ஒரு பொய்யோட ஆரம்பிக்கிற எந்த வாழ்க்கையும், நிலைத்து இருக்காது என சொல்ல அர்ஜுனும், சந்தோஷும், அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர்.


அகல்யா, நாம இளாகிட்ட அப்புறம் பேசிக்கலாம் முதல்ல தேவாவை பார் என அமுதவாணன் சொன்ன பிறகு தான் அவளையே கவனித்தனர்.


ஏய் இளா, மசமசனு நிற்காமல் தண்ணீர் எடுத்துட்டு வா என மகளை விரட்டினார் அகல்யா.


அம்மா அடித்தது கூட வலிக்கவில்லை அவளுக்கு, ஆனால் தன் அம்மா சொன்னதில் இருந்த உண்மை, இளாவை யோசிக்க வைத்தது. ஒருவேளை தேவாவுக்கு இந்த உண்மை தெரிய வந்தால், என்னை பற்றி என்ன நினைப்பாள், கல்யாணத்தன்று கூட கேட்டாளே அர்ஜுனுக்கு உண்மை தெரியுமா என்று நினைத்து பார்த்தவளுக்கு கவலையே அதிகமானது.


அம்மாவிடம் தண்ணீரை கொடுக்க, அவர் தேவாவின் முகத்தில் தெளிக்கவும், மெதுவாக இமையை பிரித்தவள் தன் எதிரே இருந்தவர்களை மிரட்சியுடன் பார்த்தாள்.


ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டே வந்தவளின் பார்வை அர்ஜுனிடம் வந்ததும் நிலைத்து நின்றது.


தேவா, என்னம்மா என்ன ஆச்சி? என பதறிய அத்தையை பார்த்தவளின் கண்கள் கண்ணீரை சுரந்தது.


தேவாவின் கண்ணீரை பார்த்ததும், பதறிய அமுதவாணன், தேவா என்னடா பெயினா இருக்கா என கேட்க, அ த்தை மா மா என மெதுவான குரலில் சொல்லும் போது குரல் வளையில் சுரீரென்ற வலி வர, கையால் தொண்டையை அழுத்திப் பிடித்து கொண்டாள்.


அமுதவாணனும் அகல்யாவும் தேவாவின் குரலை கேட்டு அவர்களின் அகமும் முகமும் மலர்ந்தது.


தேவா நீ பேசிட்ட டா, உன்னால இப்போ பேச முடியும் என அகல்யா சந்தோசத்தில் அவளை அணைத்துக் கொள்ளவும்,


அவர் சொன்னதை மெல்ல உள்வாங்கிய தேவாவோ இன்ப அதிர்ச்சியடைந்தாள்.


அத்தை, மாமா, வேணி, சந்தோஷ் அண்ணா என அனைவரின் பெயரையும் சொல்லி, அவர்களின் கையை பற்றிக் கொண்டு சிறு குழந்தையாய் பேசியவளை, இடுங்கிய கண்களுடன், பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.


தேவாவின் கண்களில் கண்ணீர் சுரக்க, என்னடா ஏன் அழற அகல்யாவின் அன்பில் தன் அன்னையின் நினைவு வர, அவரின் இழப்பை தாங்க முடியாத பெண்ணவளோ, அழுகையில் கரைந்தாள். திடிரென தேவாவின் அழுகை அதிகரிக்க, அதற்கான காரணம் தெரியாமல் தவித்தனர்.


தேவா, ஏன் அழற என்னடி ஆச்சி என கேட்ட இளாவை பார்த்ததும், சூழ்நிலை கருத்தில் பதிய, தன் அழுகையை நிறுத்தியவளின் முகத்தில் புன்னகை மிளிர்ந்தது.


ஹோ ஆனந்த கண்ணீரா என கேட்ட இளாவுக்கு தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.



அகல்யா தேவாவின் முகத்தை ஆதுரமாக தடவியர், இருடா வந்துடுறேன் என சொல்லிவிட்டு வேகமாக பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி, இறைவனுக்கு தன் நன்றியை, தெரிவித்தவர்.


பிறகு தேவாவுக்கும் அர்ஜுனுக்கும் தனிமையை கொடுத்துவிட்டு அனைவரும் சந்தோசமாக அறையில் இருந்து வெளியேறினர்.


அவர்கள் அனைவரும் சென்ற பிறகு அர்ஜுனின் புரம் திரும்பிய தேவா? அவன் அருகே வேகமாக வந்தவள், தன்னவனின் முகத்தை கண்களால் ஆராய்ந்தாள். பெண்ணவளின் திடிர் நெருக்கம் மன்னவனின் மனதை தடுமாற வைத்தது. தன்னவனின் தடுமாற்றம் அறியாது அவனின் இடது நெற்றியின் ஓரத்தில் மேல் பகுதியில், பரந்து கிடந்த முடியை விலக்கிவிட்டு, அங்கே இருந்த தழும்பை தொட்டுப் பார்த்தவளின் முகம் சற்று நிம்மதி அடைந்தது. பேபி ஒரு நிமிடம் என் உயிரே என்கிட்ட இல்ல தெரியுமா? உனக்கு இது நியாபகம் இருக்கா என நெற்றி தழும்பில் கையை வைத்து தவிப்புடன் பேசிய தேவாவை அதிர்ச்சியுடன் பார்த்தான் அர்ஜுன். அவன் மனமோ நெற்றியில் இருக்கிற தழும்பை பற்றி இவளுக்கு எப்படி தெரியும், சந்தோஷுக்கே தெரியாத விசயம் இவளுக்கு எப்படி தெரியும் என யோசித்தான்.


அர்ஜு, என் மேல உள்ள கோபம் இன்னும் போகலையா? தன்னவனின் முகத்தையே தவிப்புடன் பார்த்தபடி கேட்க, அப்போதும், அமைதியுடன் கற்சிலைப்போல நின்றிருந்தான்.


தன்னவனின் அமைதி பெண்ணவளின் இதயத்தை கத்தியால் குத்தி கிழிப்பது போல, வலியை ஏற்படுத்த, அர்ஜு என அழுகையில் கரைந்தவள், வேறு ஏதும் சொல்ல முடியாமல், இதழை கடித்து தன் வேதனையை நெஞ்சுக்குழிக்குள் புதைத்தாள். எங்கே தான் அர்ஜுனிடம் உண்மையை சொன்னால் அவன் உயிருக்கும் ஆபத்து வந்துவிடுமோ? என பெண்ணவளின் உள்ளம் கலங்கி தவித்தது.


தேவாவின் முகபாவனையை பார்த்து கொண்டிருந்தவனின் மனதுக்குள், அவள் எதையோ மறைக்கிறாள் என்பதை கண்டுக் கொண்டவன், தன் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியேறினான்.


தன்னவனின் கோபத்திற்கான காரணம் தெரியாத பேதையவளோ? அவனிடம் உண்மையை சொல்ல முடியாத கையாலாகாத நிலையை எண்ணி துடித்துக் கொண்டிருந்தாள்.


அர்ஜுனின் வீடு:


மாமியார் சொல்லவும் வேறு வழியின்றி அருகே இருந்த சோபாவில் அமர்ந்தார் அம்பிகை.


ரங்கநாயகி கொடுத்த ஜாதகத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்த பட்டாபியின் முகத்தில் குழப்பரேகையே ஓடியது.


அதே நேரம் கைலாஷும் கீழே இறங்கி வந்தவர் மனைவியின் அருகே அமரவும்,


என்னங்க இப்போ இது ரொம்ப முக்கியமா? இந்த ஆளை பார்த்தாலே எனக்கு கோபம் கோபமா வருது என கணவனின் காதில் சிடுசிடுக்க,


அம்மு, முதல்ல கோபத்தை நிறுத்து, அம்மா எது செய்தாலும் காரணம் இருக்கும் என சொல்லவும்,


அம்மு என்ற கணவனின் அழைப்பிலேயே அம்பிகையின் கோபம் குறைந்தது. அது தெரிந்ததாலேயே மனைவியை அம்மு என அழைத்து மனைவியை மனநிலையை மாற்றினார் கைலாஷ்.


ஜாதகத்தை பார்ப்பதும் தன்னை பார்ப்பதுமாக இருந்த பட்டாபியின் முகத்தை ஏறிட்டார் ரங்கநாயகி.


பட்டாபியையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரங்கநாயகியின் கண்களில் ஏதோ தவறாகப்பட்டது. ஏதோ ஒன்று உள்ளதாக உள் மனம் எச்சரிக்க… என்ன பட்டாபி ஜாதகத்தை பார்த்துட்டே இருக்க வயசாகிட்டதால ஜாதகத்துல இருக்கிற கட்டம் எதுவுமே புரிபடலயா என கேட்டதும், ரங்கநாயகியை தயக்கமாக பார்த்தார்.


அம்மாட்ட எப்படி இதை சொல்றது என யோசித்த பட்டாபிக்கு ரங்கநாயகியின் கிண்டல் பேச்சை கேட்டதும் இனியும் அமைதியாக இருக்கக் கூடாது என நினைத்தவர்,


நாயகிம்மா என் மேல ஏதாவது கோபம் இருந்தா அதை உங்க வாயாலேயே சொல்லிடுங்கோ, இப்படி ஒரு ஜாதகத்தை கொடுத்து என்னை சோதிக்கிறேலே அதை நினைச்சி தான் சித்தம் கலங்கி போய் இருக்கிறேன் என்று தடுமாற்றத்துடன் சொல்லவும்,


என்ன சொல்ற பட்டாபி, எனக்கு புரியிற மாதிரி சொல்லு, உனக்கு வயசு ஆகிட்டதால எப்படி ஜாதகம் கணித்து பார்க்கனுங்கிறதையே மறந்துட்டியா என்ன? என கடுமையாக ஒலித்தது ரங்கநாயகியின் குரல்,


தன் நாற்பது வருட அனுபவத்தை ஒரே நொடியில் கீழிறக்கிய நாயகி அம்மாவின் மீது கோபம் வர, என்ன நாயகிம்மா, நீங்க செத்தவன் ஜாதகத்தை கொடுத்து பொறுத்தம் பார்க்க சொன்னா நான் எப்படி பார்க்கிறது என பட்டாபியும் அதே கோபத்தோடு பதிலளிக்க…


பட்டாபி என்று உரக்க ஒலித்தது ரங்கநாயகியின் குரல். கைலாஷோ பலத்த அதிர்ச்சிக்கு தாக்கு உண்டார்.


அம்பிகையின் உடல் நடுங்க ஆரம்பித்தது. பட்டாபியின் கூற்று அவரின் செவி வழியே சென்று இதயத்திற்குள் நுழைந்ததும், சற்று துடிக்க மறந்த இதயத்துடன், வெற்று பார்வை பார்த்தவர், யோவ் நிறுத்துய்யா, நீ பெரிய ஜோசியக்காரன்னா, உன் இஷ்டத்துக்கு கதை விடுவியா உயிரோட இருக்கிற என் பிள்ளையை செத்துட்டான்னு எப்படி சொல்லுவ என பட்டாபியின் சட்டையை பிடித்து உலுக்கியபடியே, மயங்கி சரிந்த அம்பிகையை தன் அதிர்ச்சியில் இருந்து மீண்ட கைலாஷ், தாங்கி பிடித்தவர் மனைவியை பெரிய சோபாவில் படுக்க வைத்தவர் அவரை மயக்கம் தெளிய வைக்க முயன்றார்.


அம்பிகை அம்பிகை என்ன ஆச்சிம்மா என அவரின் கண்ணம் தட்ட, அவரோ தன் கண்ணை திறக்கமால் மயக்கத்தில் இருந்தார்.


மருமகளின் நிலையை எண்ணி ரங்கநாயகியின் உள்ளம் தவிக்க, அதிர்ச்சியில் நின்றிருந்த பட்டாபியை அழைத்தார்.


பட்டாபி நீ என்ன சொல்ற செத்தவன் ஜாதகமா? நல்லா பார்த்து சொல்லு, நீ செத்து போனதா சொல்றவன் உயிரோட தான் இருக்கான் என்றவரிடம்,


நாயகிம்மா என் தொழில் மேல சத்தியம் பன்னி சொல்றேன் இந்த ஜாதகக் காரன் செத்து ஐந்து வருடம் ஆகியிருக்கும் என ஆணித்தரமாக சொல்லவும், ரங்கநாயகியின் உடலும் நடுங்கியது.


பட்டாபியின் ஆவேசமான குரலில் மெதுவாக மயக்கத்தில் இருந்து தெளிந்த அம்பிகை, கணவனின் முகத்தை ஆவலுடன் பார்த்து, என்னங்க, இந்த பட்டாபி சொன்னதெல்லாம் பொய் தானே, என தன் கணவரின் வாயிலிருந்து ஆமாம் என்று சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.


நாயகி அம்மா நான் சொன்னது சத்தியமான உண்மை இந்த ஜாதகக்காரன் இப்போ உயிரோட இல்லை… இப்போ நான் சொல்ல போறதை கேட்கிற நிலைமையில் நீங்க இல்லைனு தெரியுது, நான் சொன்னது உண்மைன்னு என்னைக்கு நம்புறிங்களோ அன்னைக்கு எனக்கு போன் பன்னுங்க நான் வரேன், என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வெளியேறினார்.


அப்போ நம்ம கூட ஐந்து வருடமா அர்ஜுன் பெயரில் இருந்தது கிருஷ்ணா தானா? என்று நாயகியின் குரல் நடுக்கத்துடன் அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்தது.


அமுதவாணன் வீடு:

மதிய விருந்தை மணமக்களுக்கு என தடபுடலாகவே செய்திருந்தார் அகல்யா. சைவம் அசைவம் என இரண்டிலும் தன் கைப்பக்குவத்தில் அசத்தியிருந்தார். தேவா, முகத்தில் காலையில் வீட்டிற்கு வந்த போது இருந்த சந்தோசம், மறைந்து துணி கொண்டு துடைத்தது போல இருந்தாள். காலம் முழுவதும் தான் பேச முடியாமல், ஊமையாக இருந்திருக்கலாம் என குதர்க்கமாக யோசிக்க வேறு செய்தவள், தான் பேச முடியாமல் போனதுக்கான காரணமும் அந்த நாளும் நினைவுக்கு வர, தொண்டைக்குழியில் உணவு இறங்க மறுத்தது.


தேவா, என்னடா ரொம்ப காரமா இருக்கா? சாப்பாடு அப்படியே இருக்கு என அவளுடைய கலங்கிய கண்களை பார்த்து அகல்யா கேட்க!


அத்தை, அது என பதில் சொல்ல முடியாமல் மென்று முழுங்கியவள், அனைவரின் பார்வையும் தன் மீது இருப்பதை உணர்ந்தவள், கஷ்டப்பட்டு உணவை வாய்க்குள் தள்ளி, அகல்யாவை பார்த்து இ இ ல்லத்த கா காரமா இல்லை என்றவள், அர்ஜுனையே பார்த்தபடி இருந்தாள்.


தேவாவின் கண்கள் தன்னையே தொடருவதையும், அனைவரின் முன்பும் சந்தோசமாக இருப்பது போல தன்னை காட்டிக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருந்தான் அர்ஜுன்.


ஐயோ கடவுளே, எந்த காலத்திலேயும் அர்ஜுனுக்கு உண்மை தெரியக் கூடாது. நான் இழந்த வரை போதும், எனக்குனு இருப்பது அர்ஜுன் மட்டும் தான், அவனையும் இழக்க என்னால் முடியாது. அவன் இல்லாத உலகத்தில் நான் இருக்கமாட்டேன் என தனக்குத் தானே உறுதியுடன் சொல்லிக் கொண்டவளுக்கு தெரியவில்லை இங்கே இருப்பது அர்ஜுன் இல்லை என்று. (நெற்றியில் அர்ஜுனுக்கு உண்மையிலேயே தழும்பு இருக்குமா? தேவாவுக்கும் அர்ஜு தழும்பிற்கும் என்ன சம்பந்தம்💃அய்யோ கன்ப்யூஸ் பன்னிட்டேன்)


எத்தனையோ ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம், கடந்த ஐந்து வருடங்களில் சிகிச்சையை செய்தும் வராத பேச்சு, இன்று வந்ததும், அகல்யாவும், அமுதவாணனும் சந்தோசத்தில் மிதந்தனர். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் போக இறுதியாக டாக்டர்களே சோர்ந்து போகினர். கடைசியாக பார்த்த டாக்டர், அமுதவாணனிடமும், அகல்யாவிடமும், பிறவி ஊமையாக இருந்திருந்தால், கடைசி வரைக்கும் இவங்களுக்கு, பேச்சு வரப் போறது இல்லை… ஆனால் நல்லா பேசினவங்க ஒரு ஆக்ஸிடென்டால தன்னோட குரலை இழந்துட்டாங்க... இவங்களும் எங்களோட டிரீட்மெண்ட்க்கு சப்போர்ட் பன்னமாட்டேங்கிறாங்க.. பேஷன்ட் முழு மனசோட தனக்கு பேச்சு திரும்பவும் வரனும் என்ற எண்ணமோ ஆசையோ இல்லாமல் இருக்கிறாங்க, இப்படி இருந்தா நான் தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் அது தோல்வியில் தான் முடியும் என சொல்லிவிட, அமுதவாணனும் அகல்யாவும் அதிர்ச்சியடைந்தனர்.


தேவாவிடம் எவ்வளவோ கெஞ்சியும், மேற்கொண்டு எந்த சிகிச்சையும் செய்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட அவர்களாலும் எதுவும் செய்ய முடியாமல் போனது.

தேவாவின் திருமணம் நடந்த உடனே பேச்சும் வந்துவிட அவர்களின் சந்தோசத்திற்கு அளவே இல்லை.

மறுவீட்டு விருந்து முடிந்து மாலையும் நெருங்கி விட அர்ஜுனும் தேவாவும் தங்களுடைய வீட்டிற்கு கிளம்ப தயாராகினர்.


மணமக்கள் இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவர்களை வாழ்த்தியவர்கள் இருவரிடமும் புத்தாடைகள் பழம் பூ நகைகள் அடங்கிய தாம்பூல தட்டை கொடுக்கவும், தேவாவின் கண்கள் அதிர்ந்தது.


அத்தை இது என தயங்கியவளிடம், தேவா எந்த மறுப்பும் சொல்ல கூடாது என கண்டிப்புடன் சொல்ல இருவரும் இணைந்து வாங்கினர்.


இதற்கிடையிலேயே தேவாவுக்கு தெரியாமல் டைரியை தன்னுடைய காரில் பத்திரப்படுத்தி வைத்தான் அர்ஜுன்.


இளாவும் சந்தோஷும் தங்கள் வீட்டிற்கு செல்ல போகிறோம் என்று சொல்லி அர்ஜுன் தேவாவோடு வர மறுத்துவிட அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினர். அவர்களும் சந்தோசமாக வழியனுப்பி வைத்தனர்.


காரில் தன்னவனின் அருகே அமர்ந்திருந்தாலும், தேவாவின் மனம், இங்கே இல்லை. அர்ஜுன் தன்னிடம் கேள்விக் கேட்டால் என்ன பதிலை சொல்வது என மூளையை போட்டு கசக்கிக் கொண்டிருந்தாள். அர்ஜுனின் மனமும் தேவாவை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. அளுடைய டைரியில் இருந்த வரைப்படங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக கண் முன்னே தோன்ற, தங்களின் காருக்கு பின்னால், ரொம்ப நேரமாக பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த லாரியை கவனிக்க தவறினான்.


ஆள் அரவமற்ற இடம் வர ஒரு திருப்பத்தில் வலது புறமாக காரை திருப்பியவனின் பார்வை, காரில் இருந்த ரிவர்யூ மிர்ரரில் பட, தங்கள் காரை இடிப்பது போல நெருங்கி வந்த லாரியை கவனித்தவன், சுதாரிக்கும் முன்பு லாரி அர்ஜுனின் காரை மோதிவிட்டு நிற்காமல் அதி வேகமாக அந்த இடத்தில் இருந்து சென்றது.
 
Top