கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா -13

Status
Not open for further replies.

Jothiramar

Moderator
Staff member
❤என் வானம்❤-13



சந்தோஷ் புலம்பிக் கொண்டிருக்கும் நேரம், அர்ஜுன் காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் மனதில் சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்தவை அனைத்தும் மனக்கண்ணில் படம் போல் ஓடியது.


தங்களை நெருங்கி வந்த லாரியை கடைசி நொடியில், கண்ட அர்ஜுன் அதிர்ந்தது ஒருநிமிடமே, லாரி காரை இடித்ததும், சாலையில் இருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தில் தாறுமாறாக இறங்கிக் கொண்டிருக்க… கார் இடிக்கப்பட்டது கூட தெரியாமல் யோசனையிலேயே இருந்த தேவாவின் நெற்றி, காரின் முன்பக்கத்தில் இடித்த அடுத்த நொடி, அர்ஜூ என்று அதிர்ச்சியில் கத்தியவள், தன்னவனின் கையை பற்றியவுடனே மயங்கினாள்.


தன்னவள் திடிரென மயங்கியதை, பார்த்தவன் வேகமாக, அவளது பக்க கார் கதவை திறந்தவன், தேவாவை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு, உடனடியாக காரில் இருந்து குதித்தான். கீழே குதிக்கும் போது மறக்காமல், தேவாவின் டைரியையும் தன் கையோடு எடுத்துக் கொண்டான் அர்ஜுன்.


"காரில் இருந்து, கீழே விழுந்த வேகத்தில் தேவாவின் தலை ஒரு கல்லில் இடித்துவிட, அவளுடைய தலையில் இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. இதையறியாத அர்ஜுனோ, திடிரென பற்றி எரிய ஆரம்பித்த காரையும், தங்களை மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்ற லாரியையும், அதை தொடர்ந்து வந்த காரையும் பார்த்தவன், உதவி செய்ய வருவார்கள் என்று எண்ணியிருக்க அந்த காரில் இருந்தவர்களோ, சிறிது நேரம் ரோட்டில் நின்றபடியே, தன் காரை வெறித்து பார்த்துவிட்டு பிறகு வேகமாக செல்வதை கண்டவனுக்கு இவையணைத்தும், எவனோ ஒருவனின் திட்டமிட்ட சதி என்ற முடிவுக்கு வந்தான்.


வேவு பார்த்த காரும், சில நொடிகளில் தங்களை கடந்து சென்றதை உறுதி செய்து கொண்டவன் மெதுவாக தேவாவின் அருகே சென்றான்.


நடந்துவிட்ட அசம்பாவிதத்தில் இயற்கையும், தன்னுடைய ஆவேசத்தை காட்ட ஆரம்பித்தது. நிர்மலமாக இருந்த மேகத்தின் நடுவே, திடிரென உருவான காரிருள், மாலைப் பொழுதையே மங்க செய்தது. அதோடு நில்லாமல் கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்து பற்றி எரியும், காரின் தீயை தன்னுடைய குளிர் நீரால் தடுக்க ஆரம்பித்தது.


நி நி லா நிலா என்றவனின் குரலில் இருந்தது, என்னவென பிரித்தரிய முடியாத உணர்வு இருக்க, அர்ஜுனின் கண்களும் வான் மழைக்கு போட்டியாக கண்ணீரை உகுக்க ஆரம்பித்தது.


தன்னவளின் நிலையை பார்த்தவனது இதயம், துடிக்க மறந்தது சில நொடிகளே தான்! தன்னுடைய முழு பலத்தையும், சேர்த்து ஒன்று திரட்டியவன் தேவாவை, தன் கைகளுக்குள் ஏந்திக் கொண்டு, சாலையை நோக்கி ஓடிவந்தவனின் முன்பு, திடிரென ஒரு கார் வந்து நிற்கவும், போன கயவர்களின் கார் தான் திரும்பி வந்துவிட்டதா, என நினைத்து அதிர்ந்தவனின், செவ்விழிகள் மேலும் சிவக்க நின்றவனின் முன்பு வந்து நின்றவர்களை பார்த்து நீங்களா??? என்ற அர்ஜுனின் குரல் கூட மழையின் சத்தத்தில் அமிழ்ந்து போனது.


அர்ஜுனையும் தேவாவையும், காரில் ஏற்றியதும் மருத்துவமனையை, நோக்கி சீறி பாய்ந்தது.


மருத்துவமனையை அடைந்ததும், அனைத்தும் வேகமாக நடப்பதை பார்த்தவனுக்கு, முன்னரே சொல்லி வைக்கப்பட்டது போல தோன்றியது. கார் நின்ற உடனே ஸ்டெரெக்சருடன் மருத்துவமனை ஆட்கள் விரைவாக வந்து தேவாவை, அழைத்துக் கொண்டு அவசர சிகிச்சைக்கு சென்றனர். ஆனால் அர்ஜுனை எவ்வளவு வற்புறுத்தியும் சிகிச்சைக்கு மறுத்துவிட வந்தவர்களும், டாக்டரிடம் தனியாக பேசிவிட்டு அங்கேயிருந்து வெளியேறினர்.


"தனக்கே தெரியாமல் தன்னை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையமா? ஏன்? எதற்காக? யார்? இதை செய்தது! என மனதுக்குள் உண்டான குழப்பங்களுடன், சிந்தனை வயப்பட்டிருந்தவனின் அருகே வந்த நர்சின் முகம் பயத்தில் இருந்தது.


ஐசியூவில் எந்த விதமான சுய உணர்வும் இன்றி, தலையிலும் கையிலும் கட்டுக்களுடன் மயக்கத்தில் படுத்திருந்த தேவாவை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் அர்ஜுன்.


வெளியே பேரிரைச்சலுடன் பெய்து கொண்டிருக்கும் மழையை போலவே அர்ஜுனின் உள்ளத்தில் புயல் வீசிக் கொண்டிருந்தது. அவனால் இப்போதும் நம்ப முடியவில்லை, தங்களை கொல்ல குறி வைத்திருப்பது யார்? என தெரியாமல் மனதில் பலவிதமான குழப்பங்களுடன், இருந்தான்.



சா.. சா ர்..! என்று அழைத்தவளின் குரலில் இருந்து காற்று மட்டுமே வர, தன்னில் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட நர்ஸ், சார் என்று மறுபடியும் சத்தமாக அழைக்கவும், கண்களில் கனலுடன் திரும்பியவனின் முகத்தில், கோபத்தை பார்த்து உடல் நடுங்கினாலும், சார் ப்ளீஸ் உங்களுக்கும் டிரீட்மென்ட் செய்யனும் கொஞ்சம் கோஆப்ரேட் பன்னுங்க! ப்ளட் நிறைய லாஸ் ஆகி இருக்கு என்று திக்கி திணறி சொன்னவளை உற்று பார்த்தவனின், அக்னிபார்வையில் நடுங்கிய நர்ஸ் பயத்தில், நேராக டாக்டரிடம் சென்று, விசயத்தை சொன்னாள்.


"சரி, நீங்க போங்க சிஸ்டர், நான் பார்த்துக்கிறேன் என்று அவரை அனுப்பிவிட்டு அறையில் இருந்து வெளியே வந்தார்.


இரண்டு மூன்று வார்டு பாய்களுடன் அர்ஜுனை நெருங்கிய டாக்டர், அர்ஜுனை காண்பித்து, இவரை அந்த வார்டுக்கு கொண்டு வாங்க" என்று கட்டளையிட, இரத்த வழிய இருந்தவனை அலேக்காக தூக்கவும், ஏய் விடுங்கடா, இப்ப மட்டும் நீங்க விடல, நான் என்ன பன்னுவேன்னு எனக்கே தெரியாது" என்று கத்தியவனின் குரல் காற்றில் கரைந்தது.


அர்ஜுன் திமிர திமிர அவனுடைய காயங்களுக்கு சிகிச்சையை அளித்த டாக்டர், லுக் மிஸ்டர் அர்ஜுன் என்றதும், அர்ஜுனின் விழிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒன்றாக கலந்து டாக்டரை நோக்கி வெறித்தது.


"என்ன பார்க்கிறீங்க? நீங்க யாருன்னு ரொம்ப நல்லாவே தெரியும், என்ற டாக்டரிடம் மௌனத்தை மட்டுமே விடையாக கொடுத்தான்.


இதோ பாருங்க, "அர்ஜுன்" உங்க வொய்ஃப் இந்த ஹாஸ்பிடலில் பாதுகாப்பா இருப்பாங்க! என்று சொல்லும் போது டாக்டரின் போன் ஒலிக்கவும், எடுத்து பேசியவர், இது உங்களுக்காகத் தான் மிஸ்டர் அர்ஜுன், என்று போனை கொடுக்கவும், தயக்கத்துடன் வாங்கி காதில் வைத்தவன், எதிர்முனையில் பேசிய குரலை கேட்டதும், உடல் விரைப்புற உடனே வெளியேறினான்.


போனில் அவசர அழைப்பு வரவும், வெளியேறிய அர்ஜுனின் முன்பு கார் கீயை நீட்டியபடி நின்றவனை, அழுத்தமான பார்வையை பார்த்தவன், எதுவும் பேசாமல் கார் கீயை பெற்றுக் கொண்டு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி அமர்ந்து வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றான்.


அவன் கார் ஓட்டிக் கொண்டு போகும் வேகத்திற்கு எதிரே வந்த வாகனங்கள் தப்பித்ததே கடவுள் கருணையினால் தான், என்று சொல்லும் அளவிற்கு வேகமாக ஓட்டினான். அர்ஜுன்.


"அவன், மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டுமே, திரும்ப திரும்ப உதித்தது. இத்தனை வருடங்கள் கழித்து, ஏன் அழைக்க வேண்டும்? அதுவும் உடனே பார்க்க வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? என்று மனதுக்குள் எண்ணமிட்டபடியே அறைமணி நேரம் பயணம் செய்ய வேண்டிய இடத்தை, பதினைந்தே நிமிடத்தில் போய் சேர்ந்தான்.


"காரில், இருந்து இறங்கியவன் தான் வந்து சேர்ந்த இடத்தை பார்த்ததுமே, பழைய நினைவுகள் ஒவ்வொன்றும் முட்டி மோத, ஒரு தலை குலுக்கலுடன், அந்த நினைவுகளை உதறிவிட்டு உள்ளே சென்றான்.


அர்ஜுன் வந்து சேர்ந்த இடம் ஒரு தனி வீடு, வெளியே பார்ப்பதற்கு சாதாரண வீடு போல தெரிந்தாலும், உள்ளே அதற்கு எதிர்பதமாக காட்சியளித்து கொண்டிருந்தது.


ஒரு அறையின் வாயிலுக்கு வந்து நின்றவன் தன்னை கட்டுக்குள் வைத்துக் கொண்டு தன் பார்வையை இயல்பாக்கி, முகத்தை சாந்தமாக வைத்து, குரலில் ஒரு நிதானத்துடன், மே ஐ கமீன் சார் என்றதும்,


எஸ் கமீன், என்று கம்பீரமான குரலை கேட்டதும், இவனுடைய உடலில், ஒரு மிடுக்கு நிமிர்வு உண்டானது.


நான் வருவேன் என்று அவர் எதிர்பார்த்து காத்திருந்ததை போலவே இருப்பதை உணர்ந்தவன், மெதுவாக கதவை திறந்து கொண்டு, உள்ளே சென்ற அர்ஜுன், அந்த அறையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தவரின் முன்பு போய் அமைதியாக நின்றான்.


அடடே!! என்ன சார்? போன் பன்ன உடனே வந்துட்டிங்க!!! அப்படியே ஏசிபி கிருஷ்ணா மாதிரியே!! என அர்ஜுனை ஆழ்ந்து பார்த்து சொல்லவும் சற்று சுதாரித்தான் அர்ஜுன்.


நோ சார், இத்தனை வருடம் கழித்து முக்கியமான விசயம் பேசனும்னு சொல்லவும், தான் உடனே வந்தேன் என்று திணறலுடன் சொன்ன அர்ஜுனை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்.,


ஹாஹாஹா அர்ஜுன், நல்லாவே ஆக்ட் பன்றீங்க!!


அடச்சே இப்படி சொதப்பிட்டேனே, நம்மல கண்டுபிடிச்சிருப்பாரா, என நினைத்தவன், சார் அது என தயங்க!


ப்ளீஸ் பீ சீட்டர்டு அர்ஜுன் என்று சிரித்தபடி சொல்லவும், ச்சே மனுசன் ஒருவேளை நம்மல, கண்டுபிடிச்சிருப்பாரா என்ற யோசனையுடன் இழுத்து மூச்சை விட்டுக் கொண்டு அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தான் அர்ஜுன்.


வெல், என்ன மேன் குடிக்கிற? காபி ஆர் டீ?


நோ தேங்க்ஸ் சார்! என்றான் அர்ஜுன்.,


சிகாரை தன் வாயில் வைத்து, அதனை ஆழ்ந்து இழுத்தார் வாஞ்சிநாதன்.


"ம்ஹ்ம், உன் அண்ணன் கிருஷ்ணா, கோழைத்தனமா முடிவெடுத்து தற்கொலை செய்துப்பானு, நாங்க யாருமே எக்ஸ்பெட் பன்னல, எத்தனையோ கேஸ்களை வெற்றிகரமா முடிச்சி, அக்யூஸ்ட்டை அரெஸ்ட் செஞ்சவன், தவறு செய்ற குற்றவாளிகளுக்கு எல்லாம் எமனா இருந்தவன், சடனா சூசைட் பன்னிக்கவும், டிபார்ட்மெண்ட் ஒரு சிறந்த போலீஸ் ஆபீசரை இழந்துட்டு நிற்குது என அர்ஜுனின் முகத்தை பார்த்துக் கொண்டே சொன்னார் கமிஷ்னர் வாஞ்சிநாதன்.


"இங்கே அர்ஜுன், தன்னுடைய கட்டுப்பாட்டை சிறிது சிறிதாக இழந்து கொண்டிருந்தான்.


அப்புறம் அர்ஜுன், ஒரு வழியா மேரேஜ் பன்னிட்டிங்க!! உங்க அண்ணன் கிருஷ்ணா தற்கொலை செய்துட்டு சாகவும், காதலிச்ச பெண்ணை கூட, நீங்க மறந்துட்டதாகவும், அப்பா அம்மாவோட வற்புறுத்தல் அதிகமான பிறகு தான், அவங்களை மேரேஜ் பன்னிக்க ஒத்துக்கிட்டிங்கன்னு கூட கேள்விப்பட்டேன், எல்லாத்துக்கும் காரணம் கோழைத்தனமாக இறந்து போன 'கிருஷ்ணா' தானே, என நக்கலாக சொன்னார் கமிஷ்னர்.


ஸ்டாப் இட், கமிஷ்னர் சார்! சும்மா எல்லாமே தெரிஞ்ச மாதிரி சொல்றதை முதல்ல நிறுத்துங்க!! கிருஷ்ணா கோழைத்தனமா சூசைட் பன்னி இறந்துட்டான்னு வார்த்தைக்கு வார்த்தை, 'நீங்க சொல்றதை கேட்கும் போது, எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? என அடிக்குரலில் சீறினான்.


அவனின் கோபத்தை கண்டு, சிரித்தவர், என்ன "அர்ஜுன்" , இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க? பீ கூல் மேன், நான் உண்மையை தானே சொன்னேன் என்று மேலும் அவனுடைய கோபத்தை தூண்டினார். டிபார்ட்மெண்ட்ல, உங்க அண்ணன் பேரை சொன்னாலே, எல்லாரும் நடுங்குவாங்க, ஆனால் அவன் சூசைட் பன்னிட்டு செத்துப் போகவும், எப்படி எல்லாம் அசிங்கமா, என் காதுபடவே பேசினாங்க!! ஏன் இப்போ கூட பேசிகிறாங்க தெரியுமா? என்று சொல்லியபடியே அர்ஜுனின் முகத்தை பார்க்க, அவனின் முகத்தில் அதிர்ச்சி, கோபம் இரண்டும் அளவுக்கு அதிகமாகவே அப்பட்டமாக தெரிந்தது. அவனின் கோபத்தை தூண்டும் விதமாகவே பேசினார் கமிஷ்னர்.


என்ன அர்ஜுன், உங்க முகத்தில் இவ்ளோ ஷாக்? நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லை போலருக்கு, என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னார்.


அவர் சொன்னதை கேட்டவனின் முகம் கோபத்தில் சிவந்தது. தன் கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியாமல், சிரமப்பட்டுக் கொண்டிருந்தான்.


நிமிடத்தில் தன்னை ஒருவாராக கட்டுப்படுத்திய அர்ஜுன், சார் எனிதிங் அர்ஸ், நான் உடனே போகனும், என்று இருக்கையில் இருந்து எழுந்தான்.


என்ன மேன், உன் வொய்ப் ரொம்ப சீரியஸா இல்லைனு கேள்விப்பட்டேனே, அவுட் ஆஃப் டேஞ்சர்னு சொன்னதால தானே, உன்னை இங்கே வரவழைத்தேன், என்று அர்ஜுனை ஆழ்ந்து பார்த்தபடி சொல்ல, அர்ஜுனின் விழிகள் எதிரே இருந்தவரின் மனதுக்குள் என்ன இருக்கிறது என ஆராய்ந்தது.


ம்ஹும் உன்னிடம் சொல்ல என்ன தயக்கம் அர்ஜுன், உன் அண்ணனிடம் ஒரு கேஸை கொடுத்திருந்தேன், ரொம்ப கான்பிடன்சியல் ஆன கேஸ் அது... அதை பற்றின இன்வெஸ்டிகேஷன் செய்துக் கொண்டிருக்கும் போதே சூசைட் பன்னிட்டு செத்து போய்ட்டான். ராஸ்கல், என முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு அதிருப்தியான பார்வையை அர்ஜுனின் மீது செலுத்தவும்,


அர்ஜுனின் பொறுமை காற்றில் பறந்தது, இருக்கையில் இருந்து எழுந்த வேகத்தில், மேஜையை கையால் வேகமாக அடித்தவன், ஸ்டாப் இட்!! ஜஸ்ட் ஸ்டாப் இட்!!! கமிஷ்னர் சார்!!! போதும் நிறுத்துங்க!! என் அண்ணன் ஒன்றும் கோழை இல்ல! என்று ஆங்காரமாக கத்திய அர்ஜுனின் விழிகள் இரத்தமென சிவந்தது.


அர்ஜுனின் கோபத்தை சற்றும் பொருட்படுத்தாத கமிஷ்னரோ, மேலும் அவனை சீண்டினார்.


நோ, அர்ஜுன்! யூ ஆர் ராங், அவன் ஒரு கோழை தான், என அவரும் கோபத்துடன் சிடுசிடுத்தபடியே சொல்லிக் கொண்டிருந்தார்…


அதனை தாங்கிக் கொள்ள முடியாமம், போதும் நிறுத்துங்க, நான் கோழையா? நானா கோழை? என்று கர்ஜித்தவனை, முகத்தில் புன்னகை ததும்ப வெற்றி களிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் வாஞ்சிநாதன்.


"கிருஷ்ணா, 'நீ' யார்? என்னவென்று ஆரம்பத்திலேயே தெரியும் என்ற உண்மையை அவருடைய வாயால் சொல்லி கேட்டதும், அதிர்ந்தவன் தன் வாயை திறந்தான்.


"அப்போ, இத்தனை வருடம் நீங்க அமைதியாக இருந்ததுக்கு என்ன காரணம் கமிஷ்னர் சார்" என தொய்ந்து போன குரலில் கேட்டான் கிருஷ்ணா...


நாங்க அமைதியா இருந்ததுக்கு காரணம், "எங்க ஏசிபி கிருஷ்ணா, இழப்பை எண்ணி தன்னை வறுத்திக் கொள்ளாமல், சீக்கிரமே தன்னோட உண்மையான இடத்துக்கு வருவார்னு நினைத்து தான், பட் நான் நினைத்த மாதிரி நடக்கல, அதற்கு பதிலா வேற ஒன்று தான் நடந்தது. இதை சொல்லும் போதே கமிஷ்னரின் குரலில் வருத்தம் இழையோடியது.


ம்ஹ்ஹ என்று தன் குரலை சரி செய்தவர், மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தார். கிருஷ்ணா தன்னோட வாழ்க்கையை வாழாமல், தன் தம்பியோட வாழ்க்கைக்கு உயிர் கொடுத்துட்டு, தன்னோட வாழ்க்கைக்கு என்ட் கார்டு போடுவார்னு நாங்க நினைக்கல, என்னால அதை ஏற்றுக் கொள்ளவே முடியலை, என்று கிருஷ்ணாவை உறுத்து பார்த்துக் கொண்டே சொன்னவர், திடிரென என்ன நினைச்ச மேன்" நீ அர்ஜுன்னு சொன்னா நான் நம்பிடுவேனா? யார் வேணாலும் உன்னை அர்ஜுன் என்று நம்பலாம், ஆனால் என்னால், நோ வே, அதற்கு அத்தாட்சி இது தான் என அர்ஜுனாக இதுவரை இருந்த கிருஷின் சட்டையை விலக்கி தோள் பகுதியை காட்ட... அங்கே புல்லட்டின் அடையாள தழும்பு இருந்தது.


இது எப்படி ஆச்சின்னு உன் பேமிலிக்கு வேணா தெரியாமல், இருக்கலாம் ஆனால் எனக்கு, என்று சொல்லிவிட்டு நிறுத்த


தளர்ந்து போய் இருக்கையில் சரிந்தான் கிருஷ்ணா.


கிருஷ்ணாவின் தோளை ஆதரவாக தட்டிவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தார் கமிஷ்னர் வாஞ்சிநாதன்.


வெல் கிருஷ்ணா, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்தை சொல்லனும், அதுவும் அர்ஜுனைப் பற்றி என சொல்லவும் கிருஷின் உடல் விறைத்தது..


என்ன சொல்லனும் சார், என கண்களில் கேள்வியுடன் கேட்டான் கிருஷ்ணா...


"அர்ஜுனோட, சாவு சூசைட் கிடையாது. அது ஒரு மர்டர் என சொன்ன அடுத்த நொடி,, நோஓஓஓஓஓ!! நோஓஓஓ!! என கத்தியபடி இருக்கையில் இருந்து எழுந்தான் கிருஷ்ணா. அவன் எழுந்த வேகத்தில் நாற்காலி தூர சென்று விழுந்தது.


"கிருஷ்ணாவின், கத்தலை பொருட்படுத்தாமல் தொடர்ந்தார் கமிஷ்னர். உனக்கு நியாபகம் இருக்கா கிருஷ்ணா, சென்னை டூ செங்கல்பட்டு ஹைவேயில் நடந்த, ஒரு பேமிலியோட ஆக்சிடென்ட் கேஸ், ஐந்து வருடத்திற்கு முன்னாடி நீ கடைசியா டீல் பன்ன கேஸ்... ஆனால் நான் உன்னை அந்த கேஸ்ல இருந்து ரிலீவ் பன்னிட்டேன்னு என் மேல கோபத்தில் இருந்தாய்...


எஸ் சார்' ஐ க்நோ! ஒரு குடும்பமே ரொம்ப கொடூரமாக கொல்லப்பட்டு இறந்து கிடந்தாங்க... அவங்க உடல் கருகி இருந்தாலும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல, அது ஆக்சிடெண்ட் இல்லை, மர்டர்னு ரிசல்ட் வந்துடுச்சி என சொல்லவும்,,


எக்ஸாட்லி கிருஷ்ணா, நீங்க உண்மையை கண்டுபிடிச்சிங்க! பட் எனக்கு இந்த கேஸை ஸ்டாப் பன்ன சொல்லி அவ்ளோ ப்ரஷர், ப்ச் அதனால் தான் உங்களை, அந்த கேஸ்ல இருந்து ரிலீவ் பன்னேன், ஆனால் உங்க பிரதர் உங்களோட கெட்டப்ல அந்த கேஸை இன்வெஸ்டிகேட் பன்னார் என்று சொல்லி நிறுத்த


வாட்!! என அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் கிருஷ்ணா.


எஸ்" அந்த கேஸ்ல அவர் குற்றவாளியை நெருங்கவும், கொல்லப்பட்டார் ஆனால் கல்ப்பிரிட் அதை சூசைட் கேஸா மாத்திட்டாங்க... அவங்களை போலவே இறந்தது ஏசிபி கிருஷ்ணா தான்னு உங்க பேமிலி மெம்பர்ஸ் எல்லாருமே நம்பிட்டாங்க. இன்க்ளுடிங் தட் கல்ப்பிரிட் அல்சோ, இறந்தது ஏசிபி தான்னு நம்பினான்


அர்ஜுன், ஏன் இப்டி செஞ்சான்.. ஏன்?? ஏன் என கமிஷ்னரிடம் கேட்பது போல தன்னையே கேள்விக் கேட்டுக் கொண்டான் கிருஷ்ணா?.


ஏன்னா, அர்ஜுனோட காதலி' அதாவது உங்க மனைவி தேவநிலாவோட, பேமிலி மெம்பர்ஸ் தான்! அந்த ஆக்சிடென்ட்ல இறந்து போனவங்க என்றதும்,


வாட்!!! என்றவனின் குரல் அதிர்ச்சியில் சத்தமாக ஒலிக்க அந்த இடமே அதிர்ந்தது.
 
Status
Not open for further replies.
Top