என் வானம்-14
மொபைலுடன் வெளியே போன அமுதவாணன் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் கோபத்துடன் கைலாஷின் நம்பருக்கு தொடர்பு கொண்டார்.
அப்போது தான் அழுகையில் கரைந்த தன் மனைவியை சமாதானப்படுத்திவிட்டு, அறையில் இருந்து வெளியே வந்தவரின் மனமெங்கும், கிருஷ்ணாவின் நினைவுகளே, கைலாஷால் இப்போது கூட நம்ப முடியவில்லை, தன் மகன் ஏன் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தான். யாருக்காக என நினைத்து குழம்பிப் போய் அமர்ந்திருந்தார்.
அடுத்து என்ன செய்வது என யோசித்தவரின் மொபைல் ரிங்காகவும், எடுத்து பார்த்தவர் தொடுதிரையில் அமுதவாணனின் நம்பராக இருக்கவும், வேகமாக ஆன் செய்து காதில் வைத்தார்.
ஹலோ, சொல்லுங்க சம்பந்தி நம்ம பசங்களை பற்றி தகவல் தெரிஞ்சிதா, என கைலாஷ் கேட்டதும், கோபத்தில் இருந்தவருக்கு, என்ன சார், புள்ளைய வளர்த்து வச்சிருக்கீங்க, கட்டின பொண்டாட்டியை ஹாஸ்பிடலில் விட்டுட்டு, எங்கே போய் தொலைஞ்சான்?. எங்க வீட்டு பொண்ணு, பக்கத்துல யாருமே இல்லாத அனாதை, மாதிரி கிடக்கிறா? என சொல்லும் போதே அமுதவாணனின் குரல் கரகரத்தது.
அவரின் கோபத்தை கூட கண்டுக் கொள்ளாமல், சம்பந்தி என்ன சொல்றீங்க? எந்த ஹாஸ்பிடல் இப்போ நம்ம பசங்களுக்கு எப்படி இருக்கு என அடுக்கடுக்காக கேள்வியை கேட்டதும், நேரில் பேசிக் கொள்ளலாம் என்ற முடிவோடு அட்ரஸை சொல்லி வைத்து விட, இங்கே கைலாஷோ ஹலோ, ஹலோ என உரக்க கத்திக் கொண்டிருந்தார்.
கணவன் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்த அம்பிகை என்ன ஆச்சு என்று விசாரிக்க, அமுதவாணன் சொன்னதை, அப்படியே சொல்லி முடிக்கவும், அம்பிகையின் தலை கிறுகிறுத்தது.
"ஐயோ கடவுளே, இது என்ன சோதனை ஒன்னுமாத்தி ஒன்னா, என் பிள்ளை வாழ்க்கையில் பிரச்சனையா வந்துக்கிட்டு இருக்கே, தேவா ஹாஸ்பிடலில் இருக்கிறாள் என்றால் கிருஷ்ணா எங்கே? என்று கேட்டுவிட்டு கணவனின் முகத்தையே பார்த்தார் அம்பிகை.
"கிருஷ்ணாவை, பற்றி தெரியல அம்பிகை, சம்பந்தி பேசுறதை கேட்டபோது ரொம்ப கோபமா இருக்கிற மாதிரி தோனுது என்று தன் மனதில் எழுந்த சந்தேகத்தை சொன்னார் கைலாஷ்.
"தன் கணவன், சொன்னதை கேட்ட அம்பிகை, "என்னங்க என்னால இனி ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க முடியாது வாங்க ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று அவசரப்படுத்தினார்.
நீ வீட்டிலேயே இரு அம்பிகை நான் மட்டும் போய் பார்த்துட்டு போன் பன்றேன் என்று சொன்னவரிடம் மறுப்பை சொல்லியவர், வாங்க போகலாம் என வேக வேகமாக கீழே இறங்கினார்.
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றார் கைலாஷ். அம்பிகையின் மனமோ மகனையும், மருமகளையும் நினைத்து ஊமையாய் அழுதது.
கடவுளே! ஏன் என் குழந்தைங்களுக்கு இவ்வளவு சோதனைகளை கொடுக்கிறீங்க? என்று ஆற்றாமையுடன் இறைவனிடம் மனதுக்குள் முறையிட்டு கொண்டிருந்தார் அம்பிகை. வெளியே கொட்டித் தீர்க்கும் மழைக்கு போட்டியாக அவர் கண்கள் கண்ணீரை சுரந்தது.
அமுதவாணன் சொன்ன மருத்துவமனை வரவும், காரை உள்ளே விட்டவர், நேராக பார்க்கிங்கில் சென்று நிறுத்திவிட்டு இறங்கியவர்கள், ஹாஸ்பிடல் என்ட்ரன்ஸ்க்கு வந்து சேர, அண்ணா என்றழைக்கும் குரல் கேட்க, திரும்பிய இருவரும், இளாவையும், அவள் அம்மாவையும் பார்த்ததும், அண்ணி உங்களுக்காவது தேவாக்கும் கிருஷ்ணாவுக்கும் என்னாச்சுன்னு தெரியுமா? என் மகன் கிருஷ்ணா எங்கே? அம்பிகையின் கேள்வியில் அதிர்ச்சியுற்று நின்றது அகல்யாவும் இளாவும் மட்டும் அல்ல மனைவி மகளை அழைக்க வந்த அமுதவாணனும் தான்!!
முதலில் அதிர்ச்சியில் இருந்து விலகிய இளா, தான் காதால் கேட்டது உண்மையா? "என்று தெரிந்து கொள்ள", அம்மா" இப்போ என்ன பேர் சொன்னீங்க!! கிருஷ்ணாவா! என்று அவரின் முகத்துக்கு நேராக நின்றபடி கேட்டாள்.
"கலங்கிய கண்களில், இருந்த கருமணிகள் இரண்டும் ஓரிடத்தில் நில்லாமல் நர்த்தனம் ஆடியபடி இருக்க, தன்னிடம் பதிலை எதிர்பார்த்து கொண்டு நிற்கும் சிறு பெண்ணை, இதற்கு மேல் ஏமாற்ற மனமின்றி, ஆமாம் என்று தலையை ஆட்ட, அதிர்ச்சியில் கீழே சரிந்தாள் இளா. அம்மாடி இளா என்ற கூவலோடு மகளை தாங்கி நின்றார் அமுதவாணன்.
அவள் மனமெங்கும் அம்பிகை சொன்னவற்றையே நினைத்து பார்த்தவளுக்கு, புரியாத பல விசயங்கள் தற்போது புரிவது போல இருந்தது.
அறிந்து கொண்ட உண்மையின் வீரியத்தை தாங்க முடியாத பேதையவளோ, அப்போ அ அர்ஜுன் எங்கே அழுத்தமாக ஒலித்தது இளாவின் குரல். சேலை முந்தானையால் வாய் பொத்தி அழுதாரே தவிர அம்பிகையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
"இதுவரை, அமைதியாக இருந்த கைலாஷ்' இனியும் தான் பொறுமையாக இருந்தால் அது நல்லதுக்கு இல்லை என்ற முடிவுக்கு வந்தவர், அமுதவாணன் குடும்பத்தினரின் கோபத்தை குறைத்து தங்களுக்கு தெரிந்த வரையில் நடந்ததை சொல்ல அனைவருமே அதிர்ச்சியின் விளிம்பிற்கு சென்றனர்.
அனைத்தையும் கேட்டவர்களுக்கு, மொத்த கோபமும் அர்ஜுனாக நடித்து ஏமாற்றி தங்கள் பெண்ணை திருமணம் செய்த கிருஷ்ணாவின் மீதே சென்றது.
பிறகு தேவாவை பார்க்க என்று மொத்த குடும்பமும் வார்டை நோக்கி சென்றனர்.
நினைவு திரும்பாமல், மயக்கத்தில் இருந்தவளின் உடம்பில் இருந்த, கட்டுக்களை பார்த்தே சாதாரண விபத்தில்லை என்ற முடிவுக்கு வந்தவர்கள், டாக்டரிடம் தேவாவின் உடல்நிலையை கேட்க, அவரோ நினைவு திரும்பிய பிறகே சொல்ல முடியும் என சொல்லிவிட்டார். ஏனேன்றால் பேஷன்ட்டுக்கு தலையில் பலமாக அடிபட்டு இருப்பதால் முழுமையாக சொல்ல முடியாத நிலை, சில டெஸ்ட்டுகளுக்கு பிறகே சொல்ல முடியும் என்றிட, கவலையில் ஆழ்ந்தனர். தேவாவுக்கே இப்படி ஒரு நிலை என்றால் கிருஷ்ணாவுக்கு என நினைத்தே உள்ளுக்குள் மறுகினார் அம்பிகை.
மருமகளின் நிலையை பார்த்து பயந்து போன அம்பிகையின் மனம் மகனை தேடியது. தேவாவை தனி அறைக்கு மாற்றி மூன்று மணி நேரத்தை கடந்த பிறகும் மகனை பற்றிய எந்த தகவலும் தெரியாமல் இருக்கவும், இவர்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட சந்தோஷின் நிலை சங்கடமாகி போனது.
ஏற்கனவே அர்ஜுனாக நடித்து கொண்டிருந்தவன், கிருஷ்ணாவா? என்று அனைவரும் ஒருமித்த குரலில் கேட்டதும், வேறு வழியின்றி ஆமாம் என்று சொன்ன சந்தோஷை தன் கண்களால் வெறித்தாள் இளா.
அனைத்திற்கும் காரணமானவன் தன் கணவன் என்று, என்னும் போதே கோபம் அதிகரிக்க… பார்வையாலேயே அவனை விலக்கி நிறுத்தினாள் பெண்ணவள்.
***
அம்பிகையும் கைலாஷும் மருத்துவமனையில் இருக்க… கிருஷ்ணாவோ,
தன்னை பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்பதை அறியாமல், கமிஷ்னருடன் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தான்.
என்ன? இறந்து போன குடும்பம் நிலாவோடதா! என்று அதிர்ச்சி விலகாமலே கேட்டான் கிருஷ்ணா.
ஆமா, கிருஷ்ணா, தேவநிலாவோட பேமிலி தான் என்று சொன்னவரின் குரலில் இருந்தது என்ன என்று பிரித்தறிய முடியாத அளவிற்கு இருந்தது.
கமிஷ்னர் சொன்னதை கேட்டவனுக்கு மனதில் குழப்பமே உருவானது.
கிருஷ்ணாவின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை கண்டும் காணாமல், தன்னுடைய பேச்சை தொடர்ந்தார் கமிஷ்னர் வாஞ்சிநாதன்.
நான் உனக்கு வேற ஒரு கேஸை கொடுத்து வெளியூருக்கு அனுப்பி வைத்தேன். இந்த உண்மையை எப்படியோ தெரிந்து கொண்ட அர்ஜுன், உன்னோட நேம்ல, இந்த கேஸை இரகசியமா இன்வெஸ்டிகேட் பன்னிருக்கார். தன்னோட காதலியையும் அவளோட குடும்பத்தையும் கொலை செய்தது ஏன்? எதற்கு? என்று கண்டுபிடிச்சி அவங்களை தண்டிக்க ஆசைப்பட்டு இருக்கார்... அவங்க இறப்பிற்கு காரணமானவங்களை தன் கையாலேயே கொன்று விடனும் என்கிற முடிவோட இருந்துருக்கார், என்று அர்ஜுனுடைய திட்டத்தை பற்றி சொல்லவும், அதிர்ந்தான் கிருஷ்ணா.
"ஆனால், அவள்(நிலா) தான் சாகலையே, இன்னும் உயிரோட தானே இருக்கா" என பல்லை கடித்தபடி சொல்பவனை ஆழ்ந்து பார்த்த கமிஷ்னர் வாஞ்சிநாதன்,
"எஸ், கிருஷ்ணா, தேவநிலா சாகலை, அவங்க உயிரோட இருக்கிற விசயம் அர்ஜுனுக்கு தெரியாதே, தேவநிலா தான் நடந்து முடிந்த கொலைக்கு ஒரே ஐ விட்னெஸ்... எங்கே தான் உயிரோட இருப்பது அர்ஜுனுக்கு ஆபத்தாக மாறிடும்னு நினைத்து, தான் இறந்து போனதா அர்ஜுனுக்கு மட்டும் இல்லாமல், இந்த உலகத்துக்கே காமிச்சிக்கிட்டாங்க, ஆனால் அது எல்லாமே, வேஸ்டாகி போச்சு என்றதும்,
"சார், ஐ விட்னஸ் ஆக நிலா இருக்கும் போது ஏன் குற்றவாளி யார்னு நீங்க கண்டுபிடிக்கல? அவனின் கேள்வியில் தடுமாறி போனார் கமிஷ்னர் வாஞ்சிநாதன்.
அதுது என தடுமாறிய கமிஷ்னரை கேள்வியாக பார்த்தவன், ம்ம் சொல்லுங்க சார், ஏன் குற்றவாளியை அரெஸ்ட் பண்ணல, இந்த முறை கிருஷ்ணாவின் குரலில் அழுத்தம் அதிகமாக இருந்தது. ம்ம் அப்புறம் என்ன சொன்னீங்க, நிலா தலைமறைவாகி இருந்தது வேஸ்டாகி போச்சுன்னு சொன்னது ஏன்? அதை எந்த அர்த்தத்தில் சொல்றீங்க?
தேவநிலா இருந்தும் ஏன் குற்றவாளியை அரெஸ்ட் பன்னாததுக்கான காரணத்தை என்னால இப்போ சொல்ல முடியாது கிருஷ்ணா. ஆனால் நீ கேட்ட இரண்டாவது கேள்விக்கான பதிலை கண்டிப்பாக சொல்ல முடியும், அதற்காக தானே இத்தனை வருடம் கழிச்சி, உன்னை வரவழைத்தேன் என்றார் கமிஷ்னர்.
கமிஷ்னர் சொன்னதை கேட்ட கிருஷ்ணாவுக்கு புரிந்தும் புரியாத நிலையாக இருந்தது. அதனால் எதிரே இருந்தவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவரும் "கிருஷ்ணாவையே, சிறிது நேரம் உற்று பார்த்தவர், மெதுவாக தன் வாயை திறந்தார். அதாவது ஏசிபி கிருஷ்ணா" இன்னும் சாகலை அர்ஜுன் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு இருக்கிறான்னு கொலைக்காரன் நினைக்கிறான் என்று சொல்லவும், குழப்பம் அடைந்த கிருஷ்ணாவோ,
சார், நீங்க சொல்றது எனக்கு புரியலை, நான் அர்ஜுனாக தானே இருந்தேன், என்னை எப்படி கிருஷ்ணானு கொலைக்காரன் நினைப்பான் என்று கேட்க
"கிருஷ்ணா" போலீஸ் மூளை துருப்பிடிச்சி போய்டுச்சா என்ன? என நக்கலாக கேட்ட கமிஷ்னர் வாஞ்சிநாதனை முறைத்தான்.
நீயூம் அர்ஜுனும் ட்வின் பிரதர்ஸ்னு இங்கே இருக்கிற யாருக்காவது தெரியுமா கிருஷ்ணா? என்று கமிஷ்னர் வாஞ்சிநாதன் கேட்ட பிறகே கிருஷ்ணாவுக்கு உண்மை புரிய ஆரம்பிக்க, தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
இதுமட்டுமா உன் மேரேஜிக்கு வீதிக்கு ஒரு கட் அவுட் நீயும் தேவநிலாவும் சேர்ந்து இருக்கிற மாதிரி வச்சிங்களே அது ஒன்று போதாது, அதோட நிறுத்தியிருந்திங்களா? இன்டஸ்டிரியலிஸ்ட் கைலாஷ் ஓட ஒரே மகன் அர்ஜுனுக்கும், தேவநிலா என்ற கன்னிகைக்கும் திருமணம்னு பேப்பர்ல முழுபக்கத்திற்கும் ஆட் கொடுத்திருந்திங்களே, அதுவும் ஒருகாரணம் என்று சொல்லவும்,
இதுவரை புரியாமல் இருந்த கிருஷ்ணாவுக்கு அனைத்தும் தெளிவாகியது. தான் கல்யாணத்தில் ஈடுபாடில்லாமல் இருந்த காரணத்தால், தன் அப்பா திருமண ஏற்பாட்டை செய்யும் போது என்னென்ன ஏற்பாடுகளை செய்கிறார் என்று கவனிக்காமல் இருந்த தன் மடத்தனத்தை எண்ணி இப்போது நிந்தித்துக் கொண்டான் கிருஷ்ணா.
எப்போ உன் தம்பி அர்ஜுனோட இறப்பு கொலை என்று தெரிந்ததோ, அப்போவே உன்னை சுற்றி உனக்கே தெரியாமல் நான் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்பாடு செய்திருந்தேன்.
அவங்க நிழல் போலவே தொடர்ந்துக்கிட்டு இருந்தாங்க, திருமணம் நடந்த அன்றே, தேவநிலாவுக்கு புல்லட் ஃபையர் நடந்த உண்மை டாக்டர் மூலமா தெரிய வரவும், நாங்க உஷாராகிட்டோம், அடுத்த முயற்சியும் கண்டிப்பா நடக்கும்னு நினைச்சோம் அதே மாதிரி உங்களை கொல்ல முயற்சியும் நடந்தது என்று சொல்லிவிட்டு நிறுத்தினார் கமிஷ்னர்.
என் தம்பியை கொன்றவன் யாருன்னு தெரிஞ்சிதா சொல்லுங்க, அந்த லாரியோட நம்பரை வச்சி அவனை யார் அனுப்புனாங்கன்னு ட்ரேஸ் பன்னிட்டிங்களா, என்று படபடத்தவனை கவலையான முகத்துடன் பார்த்தார் கமிஷ்னர் வாஞ்சிநாதன்.
நோ யூஸ் கிருஷ்ணா, அந்த நம்பர்ல எந்த லாரியுமே ரிஜிஸ்டர் ஆகலை, அப்புறம் ஒரு பேட் நியூஸ், அந்த லாரி டிரைவர் இஸ் டெட் என்று சொல்லவும், அதிர்ந்தான் கிருஷ்ணா.
வாட்!!! அந்த லாரி டிரைவர் செத்துட்டானா, என்ற கிருஷ்ணாவின் கண்களில் அதிர்ச்சியே மேலோங்கி இருந்தது.
எஸ் கிருஷ்ணா, இட்ஸ் அ க்ரூட்டல் மர்டர். இன்வெஸ்டிகேஷன் நடந்துட்டு இருக்கு. இறந்தவனோட ஐடிடென்ட்டிபிகேஷனுக்கு ஆதார் கார்டோ, இல்ல ட்ரைவிங் லைசன்ஸ், இப்படி எதுவுமே இல்ல! அதுமட்டுமில்லாமல் அவனோட முகமும் சிதைந்து போய் இருக்கு? என்றவரை இடைமறித்தான் கிருஷ்ணா.
சார் செத்தவன் தான், எங்களை கொலை செய்ய முயன்றான்னு எதை அடிப்படையா வச்சி சொல்றீங்க?
இதை வைத்து தான் என்று ஒரு கவரை நீட்டினார் கமிஷ்னர்.
அதில் உள்ளதை பார்த்தவன், அமைதியாக அவரிடமே திருப்பி கொடுக்க, அதை வாங்கி பைலில் வைத்தார்.
கமிஷ்னர் சொன்னது அனைத்தையும் யோசித்துக் கொண்டே காரை செலுத்தியவனின், காதில் அவரின் இறுதி வார்த்தைகளே எதிரொலித்தது. இரவு நேரம் வாகனங்கள் ஏதும் இன்றி சாலையே வெறிச்சோடி கிடக்க,,. மருத்துவமனையில் இருந்து கிளம்பும் போது வீசிய பேய் மழையும் நின்றிருக்க கிருஷ்ணாவின் மனதிலோ சூறாவளி வீசிக் கொண்டிருந்தது.
சொல்லு கிருஷ்ணா! என்ன முடிவு செய்து இருக்கிறாய்?
எதை பற்றி சார்? ஒன்றும் புரியாமல் கேட்டவனை ஆழ்ந்து பார்த்த வாஞ்சிநாதன்,
எப்போ ஏசிபி கிருஷ்ணாவை பார்க்கலாம் என்றிட, அது இந்த ஜென்மத்தில் நடக்காது சார் என்றான் கிருஷ்ணா.
அவன் முகத்தில் பல உணர்வுகள் வந்து போனது அதை பார்த்த வாஞ்சிநாதன்.
லுக் கிருஷ்ணா, நீ தாமதிக்கிற ஒவ்வொரு நிமிடமும் உனக்கும் தேவநிலாவுக்கும் ஆபத்துன்றத நியாபகத்துல வச்சிக்க" சீக்கிரம் இந்த வேஷத்தை கலைத்துவிட்டு டியூட்டில ஜாயின் பன்ற வேலையை பார் என்றதும், நோ சார், இந்த காக்கி சட்டையை போட்டு தான் நான் குற்றவாளியை கண்டுபிடிக்கனும்னு அவசியம் இல்லை, அதை போடாமலேயே என் தம்பியை கொன்றவனை கண்டுபிடிச்சி காட்டுறேன் என்று சவால் விட்டு வெளியேறினான்.
ஆனால் கிருஷ்ணாவுக்கு தெரியவில்லை, வெகு சீக்கிரத்திலேயே இதே காக்கி சட்டையை போட வேண்டிய நிலை வரும் என முன்னரே தெரிந்திருந்தால், வர போகும் ஆபத்தை தவிர்த்திருப்பானோ? என்னவோ? காலம் கடந்து யோசித்து வருத்தப்பட்டு என்ன பலன், எல்லாம விதி வழியாக நடக்கும் என்று எழுதி வைத்ததை யாரால் மாற்ற முடியும். நடப்பது அனைத்தும் நடந்தே தீரும்.
கமிஷ்னரோடு கிருஷ்ணாவின் சந்திப்பு, மிக இரகசியமானதாக இருந்தது. அர்ஜுன் தான் ஏசிபி கிருஷ்ணா" என அறிந்தவர்கள் வெகு சிலரே, அவர்கள் அவனை நிழல் போல இப்போதும் கூட பின்தொடர்ந்து கொண்டிருந்தனர்.
அதை அறியாத கிருஷ்ணா, கமிஷ்னர் சொன்னதையே மனதுக்குள் போட்டு உருட்டிக் கொண்டிருந்தான். யார் மூலம் குற்றவாளியை நெருங்கலாம் என யோசித்தவனுக்கு நிலாவின் முகம் தெள்ள தெளிவாய் மனதிரையில் தெரிய ஆரம்பிக்க, நீ வாயை திறந்தால் தான் பல கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் என்ற முடிவோடு ஹாஸ்பிடலை நோக்கி, காரை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு போனான். மனதின் வலியை விட கையில் இருக்கும் வலி அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. ஹாஸ்பிடலை நோக்கி காரை செலுத்தினான் கிருஷ்ணா.
வணக்கம் நண்பர்களே
நிறைய கேள்விகள் வரும் அதற்கான விடைகள் அனைத்தும் அடுத்தடுத்த அப்டேட்டில் தெரியவரும்
இந்த பகுதி எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கமெண்ட் செய்யுங்கள்.