கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா -16

Jothiramar

Moderator
Staff member
என் வானம்-16


தேவாவின் கையை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு துயில் கொண்டிருந்தவனை பார்த்த அகல்யாவின் உள்ளமோ, கிருஷ்ணாவின் மனநிலையை கணிக்க முடியாமல் திணறியது.


அமுதவாணனுக்கு சற்று முன்பு இருந்த தயக்கம் மறைந்து என் வீட்டு பெண்ணின் கையை எந்த உரிமையில் பிடித்து இருக்கின்றான் என்று நினைத்தவருக்கு அவன் தாலி கட்டிய கணவன் என்பதையே மறந்து விட்டிருந்தார்.


கிருஷ்ணாவின் மீது கையை வைத்து எழுப்புவதற்காக செல்ல முயன்ற தன் கணவனை உடனே தடுத்து நிறுத்தினார் அகல்யா.


ஏய் எதுக்குடி என்ன தடுக்கிற? அவனை முதல்ல இந்த அறையில் இருந்து வெளியே அனுப்பனும், அவன் முகத்தை பார்த்தாலே கோபம் கோபமா வருது என எகிறியவரை சாந்தப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றானது அகல்யாவிற்கு.


அகல்யா தன் கணவனை சமாதானப்படுத்தி, தேவாவின் அறையில் இருந்து வெளியேறியதும், அதற்காகவே காத்திருந்தது போல மூடியிருந்த விழியை திறந்தான் கிருஷ்ணா.


தேவாவின் அத்தையும் மாமாவும் பேச ஆரம்பிக்கும் போதே அவனுடைய துயில் கலைந்து விட, என்னதான் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவே கண்களை மூடி உறங்குவது போல பாசாங்கு செய்தான் கிருஷ்ணா.


தேவாவின் அத்தைக்கு தன் மீது ஷாஃப்ட் கார்னர் இருப்பதை கண்டுக் கொண்டவனின் இதழில் புன்முறுவல் தானாக ஒட்டிக் கொண்டது விந்தையிலும் விந்தையாக இருந்தது. அதற்கான காரணத்தை அவன் அறிய முற்படவில்லை.


புன்னகை மாறாத முகத்துடன் இருந்த கிருஷின் பார்வை இப்போது தேவாவின் முகத்தில் படிந்தது.


அழகு பதுமையாய் துயில் கொண்டிருப்பவளின் முகத்தை பார்த்ததுமே அவனுக்குள், ஏதோ இனம்புரியாத உணர்வுகள் எழ, தன்னையும் அறியாமல் அவளின் முகத்தையே ரசித்துக் கொண்டிருந்தான்.


கண்களும் பேசுமா? கவி பாடுமா? என்று உன்னை பார்த்தவுடனே தெரிந்து கொண்டேனடி பெண்ணே! உன் மௌனத்தை நான் வேறாக நினைத்துக் கொண்டிருக்க, நீயோ பேசாமடைந்தையாக இருந்ததை கூட அறியாமல் போனேனடி கண்ணே! உன் கண்ணில் இருந்து விழுகின்ற கண்ணீரை கூட காணப் பொறுக்க முடியவில்லையடி பெண்ணே!

இது எதனால், என்று அவளை நினைத்து மனதுக்குள் புலம்பியவனின் பார்வை, அவளின், வெண்பிஞ்சு விரல்களின் மீது சென்றது. நீண்ட மெல்லிய விரல்களில் இருந்த மருதாணியின் சிவப்பில் அழகாக இருந்தது. மருதாணியை இரசித்தவனின் மனம் திருமணத்தின் முன் தின நாட்களை நினைவூட்டியது.


அம்பிகை போன் பேசிவிட்டு புன்னகையுடன் திரும்பவும், அதை கவனித்த அவருடைய மாமியார் என்ன மருமகளே முகம் பிரகாசமா இருக்குது என்று கேட்டார்.


அத்தை அது நம்ம தேவா இருக்காளே, அவளுக்கு மருதாணி இலையை அரைச்சு கையில் போட்டா தான் பிடிக்குமா? அதனால சம்பந்தி அலையோ அலையோனு அலைஞ்சி எங்கிருந்தோ வாங்கிட்டு வந்தாங்களாம், அதை பற்றி தான் சொல்லிட்டு இருந்தாங்க!!


சரி இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு, என்று கேட்டதுமே அம்பிகையின் முகம் சுருங்கியது. உடனே மெதுவான குரலில், இல்ல அத்தை இந்த காலத்து பொண்ணுங்க எல்லாருமே கோன் தானே, அத கூட பியூட்டி பார்லர் போய் போட்டுக்கிறாங்க! அதான் நம்ம வீட்டுக்கு வர போற மருமகள், மருதாணி மேல ஆசைப்படவுமே எனக்கு சந்தோசமாக இருந்தது என்று முடித்தவரின் கண்கள் கலங்கியது.


இப்போ என்ன சொல்லிட்டேன்னு கண்ணு கலங்குற, முதல்ல கண்ணை தொடச்சிக்கோ, என்றார் ரங்கநாயகி. தன் முகத்தை வேறு பக்கமாக திருப்பிய படி, கண்ணை துடைத்துக் கொண்டார்.


அத்தை மருதாணியை பற்றி பேசவுமே, எனக்கு நம்ம கிருஷ்ணாவோட நியாபகம் வந்துவிட்டது என்று சொல்லவும், அம்மூதாட்டியால் வாயை திறக்க முடியவில்லை.


கையில் மருதாணியை அப்பிக் கொண்டு தன் மேலே வந்து விழுபவனின் நினைவுகளில் மூழ்கினார் பாட்டி.


அம்மா மற்றும் பாட்டியின் சம்பாஷனையை கேட்டும் கேட்காதது போல கம்பெனிக்கு தயாராகி வந்த மகனின் முகத்தை பார்த்த அம்பிகை, உடனே கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையுடன், என்ன அர்ஜுன் சாப்பிடாமலேயே போகிறாய் என்று கேட்டதும், அவனுடைய கால்கள் நின்றது.


அம்மா தன் முன்னால் அழுகையை கட்டுப்படுத்துவது தெரிய, இதயத்தின் உள்ளே சுருக்கென தைத்தது. பின் தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டவன், மாம் இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு, நான் வெளில சாப்பிட்டுக்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினான். என்னை மாதிரியே இவளுக்கும் மருதாணி தான் பிடிக்குமா? ஆனா அர்ஜுக்கு என்று நினைத்தவனின் மனதில் இறுக்கம் உண்டாக, தேவாவை பற்றியிருந்த கையை சட்டென விட்டான்.


இவ்வளவு நேரமாக தான் செய்து கொண்டிருந்த செயல் அனைத்தும் நினைவுக்கு வர வெட்கி போனவனாய் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.


அங்கே இருந்த கண்ணாடியின் முன்பு போய் நின்று தன்னையே உருத்து பார்த்தவனின் கண்கள் கோவைப்பழமென சிவந்தது.


இந்த கை, இந்த கை தானே, அவளை தொட்டது, என்று கர்ஜித்தவன் கண்ணாடியில் ஓங்கி குத்தினான். அவன் குத்தியதால் கண்ணாடியோ சில்லு சில்லாக உடைய, கையிலோ சதை கிழிந்து இரத்தம் பீறிட்டது.


அப்போது தான் தேவாவின் அறைக்குள் கிருஷ்ணாவை தேடி வந்த சந்தோஷ், பெட்டில் தேவா மட்டும் இருப்பதை பார்த்தவன், அவனை காணாது வெளியேற போக, அதே நேரம் பாத்ரூமிற்குள், இருந்து சத்தம் கேட்டதும், உள்ளே போய் பார்த்தவன் அதிர்ந்து நின்றான்.


கிருஷின் கைகளில் இருந்து இரத்தம் வெளியேறுவதை கண்டவன், டேய் அறிவிருக்கா? ஏன்டா இப்படி செய்த என்று கோபத்தில் கத்தியவனின் பார்வையோ, உடைந்திருந்த கண்ணாடியில் நிலைத்தது.


யூ இடியட் இது என்ன உன் வீடா? என்று கத்தியவன், கிருஷை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.


சந்தோஷ் இழுத்த இழுவைக்கு நடந்து கொண்டிருந்தான் கிருஷ். காரில் அவனை அமர வைத்தவன், கைகளில் கண்ணாடி சில் இருக்கிறதா என காயத்தை பரிசோதித்தான்.


அப்பாடா நல்ல வேளை கண்ணாடி சில்லு எதுவும் உள்ளே போகல என்று நிம்மதியாக உணர்ந்தவன், வாயை திறடா ஏன் இப்படி செய்தாய்? என்று கிருஷின் தோளை பற்றி உலுக்கவும், சுயத்திற்கு வந்தவன், என்ன சொல்ல சொல்றடா? என்று கத்திவிட்டு காரை விட்டு இறங்கினான்.


கிருஷின் செய்கையில் குழப்பமான சந்தோஷும் காரில் இருந்து வேகமாக இறங்கி அவனுடைய கையை பிடித்து தடுத்து நிறுத்தினான்.


டேய் என்று வலியில் கத்தவும், சாரிடா மச்சி ஏன்டா உன்னையே இப்படி காயப்படுத்திக்கிற என்று ஆற்றாமையுடன் கேட்டான் சந்தோஷ்.


நான் அவள் கையை தொட்டுட்டேன்டா என்று விரக்தியான குரலில் சொன்னவனை, கொலைவெறியுடன் பார்த்தான் சந்தோஷ்.


என்ன உலர்ற? என்னமோ தெருவுல போறவளை தொட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கு உன்னோட பேச்சு,


டேய் அவள் அர்ஜுவை காதலிச்சி ஏமாத்துனவடா என்றவனிடம், அது தெரிந்து தானே தாலி கட்டின, அப்புறம் என்ன புதுசா சொல்ற? என்றான் நக்கலான குரலில்,


டேய் அவள் அது என கிருஷ் தடுமாற!!


என்ன மச்சி உன் மனசுல தேவா நுழைந்து விட்டாளா! அதனால தான் இப்படி பிகேவ் பன்றியா? பாயின்ட்டை பிடித்து விட்டான் சந்தோஷ்.


கிருஷின் முகத்தில் இருந்த தவிப்பை கண்டு சந்தோஷின் முகத்தில் மகிழ்ச்சி பெருகியது. மச்சான் நான் ஹேப்பியா இருக்கேன்டா, என்று அவனை கட்டிக் கொள்ள, இவனோ டேய் விடுடா என்று எரிச்சலில் கத்தினான்.


டேய் எதுக்கு இப்போ கத்துற, நீ தேவாவை லவ் பன்ன ஆரம்பிச்சிட்ட அதானே உண்மை.


ஆமாடா நான் அவளை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அவள் கண்ணை பார்த்தால் நான் நானாகவே இல்லை இதெல்லாம் தவறுன்னு புத்திக்கு தெரியுது. ஆனால் இந்த பால போன மனசுக்கு தெரியலை, என்றவனின் இமையோரம் ஈரமானது


டேய் லூசா நீ அவள் என்ன யாரோ ஒருத்தியா நீ தொட்டு தாலிக்கட்டின பொண்டாட்டி, உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. கேனத்தனமா உலர்றதை நிறுத்திட்டு கையை டாக்டர்கிட்ட காட்டலாம் வா என அழைத்துச் சென்றான்.


இருவரின் பேச்சையும் ஒன்று விடாமல் கேட்ட உருவத்தின் கண்களோ கோபத்தில் பளப்பளத்தது.


டாக்டரிடம் கையை காட்டி கட்டுப் போட்டுக் கொண்ட கிருஷ், தேவாவின் அறைக்கு வெளியே வந்து நின்றான்.


அவர்கள் வந்ததை அறிந்த இளாவோ, கிருஷின் அருகே வந்து நின்றவள் அவன் முகத்தை பார்த்து, உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என் கூட வாங்க என்று சொல்லிவிட்டு, முன்னால் செல்ல, அவள் வழக்கமாக விளிக்கும் அண்ணன் என்ற அழைப்பு காணாமல் போயிருந்தது.


என்னடா உன் பொண்டாட்டி முகமே ஒரு மாதிரியா இருக்கு என்றான் கிருஷ்.


தெரியலடா வா போகலாம் எதுக்கு கூப்பிட்டானு போய் கேளு என்று கிருஷ்ணாவை அனுப்பி வைத்தான்.

கிருஷ்ணாவை அனுப்பி வைத்த சந்தோஷுக்கு இருப்பு கொள்ளவில்லை என்ன பேச போறா? ஒன்னும் புரியலயே என சிந்தனையில் உழன்றவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் அமுதவாணன்.


என்ன மாப்பிள்ளை என்னாச்சு நீங்க இளா கூட போகாமல் இங்கேயே நிற்கிறீங்க என்று சந்தோஷின் அருகே வந்து கேட்டதும்


ஹாங் ஒன்றுமில்லை மாமா என்றவன், இதோ போறேன் மாமா என்று வேகமாக அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான்.


அப்போது தான் அங்கே வந்த அகல்யா சந்தோஷ் போவதை பார்த்து, என்னாச்சுங்க மாப்பிள்ளை ஏன் இவ்ளோ வேகமாக ஓடுறார். அவரா நம்ம பொண்ணு கூப்பிட்டதை கூட கவனிக்காமல் நிற்கிறார் என்றவர், ஆனால் அவன் ஏன் போனான் என்று மனதுக்குள் யோசித்தார்


ஹாஸ்பிடலில் அமைக்க பெற்றிருந்த கார்டன் ஏரியாவுக்கு வந்து சேர்ந்தனர் இளாவும் கிருஷும். உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எப்படி என் தேவா மேல இப்படி ஒரு பழியை சுமத்தினீங்க? என்று பத்ரகாளியாய் மாறி நின்றாள்.


தன்னை கேள்விக் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன், அப்படி என்ன குற்றம் சுமத்தினேன்னு தெளிவா சொன்னா, எனக்கு பதில் சொல்ல சரியா இருக்கும்னு நினைக்கிறேன் என்றான் இவனும் அவளைப் போலவே,


அர்ஜுனோட இறப்புக்கு தேவா தான் காரணம்னு சொல்றீங்க! தேவா அர்ஜுனை காதலிச்சி ஏமாத்திட்டதா சொல்றீங்க? அவங்க காதலை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று பொங்கினாள் இளா.


நான் உண்மையை தானே சொல்றேன். உயிரோட இருக்கும் போதே செத்துட்டதா, அர்ஜுவை நம்ப வைத்து ஏமாற்றியது மட்டுமில்லாமல், அவனோட இறப்புக்கு காரணமே உன் தேவா தான் என்ற கிருஷின் முகத்தில் இருந்த கோபத்தை பார்த்து அதிர்ந்து விட்டாள் இளா.


சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதிங்க? அன்னைக்கு அப்படி ஒரு முடிவு எடுக்கிறதுக்குள்ள அவள் தவித்த தவிப்பு உங்களுக்கு எங்கே தெரியப் போகுது. முதல்ல என் தோழியைப் பற்றி தெரிஞ்சிக்கிட்டு அதன் பிறகு ஒரு முடிவுக்கு வாங்க என்றவள், அவன் கைகளில் டைரியை திணித்து விட்டு வேகமாக சென்றாள்.


தன் கைகளில் இருந்ததையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். இது எப்படி இளா கைக்கு போச்சு என்று யோசனையில் நிற்க, வீசுகின்ற காற்றில் டைரியின் பக்கங்கள் புரட்டப்பட முதல் பக்கத்தில் இருந்த உருவத்தை விழியகலாது பார்த்தான்.


முத்துப்பல் வரிசை தெரிய அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் தேவா(எ)தேவநிலா.


அடுத்தவர் டைரியை படிக்கிறது ரொம்ப தப்பு, கண்ணத்துல இரண்டு அடி போட்டுக்கங்க என்ற மிரட்டலோடு ஆரம்பித்து இருந்தாள்.


என் பிரண்ட்ஸ் சிலர் டைரி எழுதுவோம்னு சொல்லி கேட்டுருக்கேன். அப்போலாம், எதுக்குடி டைரிலாம் எழுதுறீங்க!! தேவையில்லாமல் உங்க நேரத்தை வீணடிக்கிறீங்களேனு, அவங்களை நான் கேலி செய்துருக்கேன். ஆனால் இப்போ நானே டைரி எழுத ஆரம்பிப்பேனு நினைச்சு கூட பார்க்கல, இதை நான் எழுத காரணமே, அந்த பெயர் தெரியாதவனை பற்றி பகிரத்தான் என்று எழுதியிருந்ததை படித்தவனின் கண்களில் ஆர்வமும், இதழில் புன்னகையும் வந்து ஒட்டிக் கொண்டது.


அடுத்த பக்கத்தை புரட்டியவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது. இது இது என வார்த்தைகள் வெளிவர முடியாமல் தொண்டை அடைத்துக் கொள்ள நாக்குழறியது. கைகள் நடுங்க டைரியின் பிடிமானத்தை கீழே தவறவிட்டான் கிருஷ்ணா.


அதுல அங்கே அப்படி என்ன இருந்தது என்று யோசிக்கிறீங்களா? அதை கதையோட ஓட்டத்தோடு தெரிந்து கொள்ளலாம்.


கோவையின் பிரதான சாலையில் ஒருவன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தான். அவன் முகம் பயத்தில் வெளிறிப் போய் இருந்தது. உடலெங்கும் வியர்வையில் குளித்து இருந்தவன், பின்னால் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான். அவன் யாருக்கோ பயந்து கொண்டு ஓடுவது போல இருந்தது.


சாலையிலிருந்து விலகி அவன் மார்க்கெட்டிற்குள் ஓடவும், அவனை துரத்திக் கொண்டு வந்த உருவமும் அதே மார்க்கெட்டுக்குள் நுழைந்தது. ஓடுபவனை தடுத்து நிறுத்துவதற்காக கீழே கிடந்த ஒரு செங்கல்லை கையில் எடுத்து குறிப்பார்த்து எறிய, அது குறி தவறி வேறொருவனின் முன் நெற்றியை பதம்பார்க்க, துரத்திக் கொண்டு வந்த உருவமோ விரட்டுவதை நிறுத்திவிட்டு, அடிப்பட்டு நின்றவனின் அருகே வந்தது.


அய்யோ இந்த தம்பி நெத்தியில இரத்தத்தை பாருங்க என்று ஒருவர் படபடக்க, இட்ஸ் ஓகே என்றவன் நெற்றியில் கைக்குட்டையை வைத்து அழுத்தி ஒரு கட்டை போட்டவன் அந்த இடத்தில் இருந்து மாயமாய் மறைந்து விட்டான்.


ஹேய் தேவா என்னாச்சுடி அந்த ராஸ்கலை பிடிச்சியா என பின்னால் ஓடி வந்த தோழிகள் கேட்டதும், அதிர்ச்சியில் இருந்து விலகியவள், நோ டி அந்த இடியட்டை மிஸ் பன்னிட்டேன் என்றவளின் குரலில் வருத்தம் குற்றவுணர்வு இழையோடியது.


ஹேய் அவனை இன்னொரு நாள் கவனிச்சிக்கலாம்டி நீயேன் ஃபீல் பன்ற?


இல்லடி அந்த எருமையை அடிக்க கல்லை எறிந்தேன் ஆனால் அது தவறுதலா வேற ஒருத்தர் மேல பட்டு பிளீடிங் ஆகிடுச்சி, ஹேய் கூல் தேவா எங்கே அந்த ஆள் என்று சுற்றிலும் பார்வையை சுழலவிட்டனர் தோழிகளின் கூட்டம், ஆனால் ஒருவன் அடிப்பட்டதற்கான சுவடே இல்லாதது போல இருக்க தேவாவை பார்த்து சிரித்தனர்.


ஏய் ஏதுக்குடி சிரிக்கிறீங்க? நானே ஒருத்தனை அடிச்சிட்டேன்னு எவ்ளோ ஃபீல் பன்றேன் ஆனால் நீங்க என்று குறைபட!


அடிச்ச நீயே இங்கே நிற்கிற அடிவாங்கினவன் எங்கே? என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கேட்க!


அவனைத் தான்டி நான் தேடுறேன் பயப்புள்ள எங்கே போச்சுன்னே தெரியலை என்று உதட்டை பிதுக்க!! சரி நாம கிளம்பலாம் அப்புறம் க்ளாஸ் கட்டாகிச்சு ஹச்சோடி கிட்ட யாரு டோஸ் வாங்குறது. வா போகலாம் என்று தேவாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர்.


அன்று நாள் முழுவதுமே தேவாவின் மனதில் அடிப்பட்டவனின் முகமே பிரதிபிலிக்க எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் சண்டித்தனம் செய்தது.


அய்யோ அவனுக்கு அடி பலமா இருந்திருக்குமா? இரத்தம் வேற நிறைய போச்சே என்று கவலைப்பட்டதும் இல்லாமல் தோழிகளிடம் புலம்ப ஆரம்பிக்க, அவர்களோ தேவாவுக்கு என்னவோ ஆகிவிட்டது என்பது போல கிசுகிசுத்தனர்.


அதை கேட்டவளோ, ஏன்டி நான் பொய் சொல்லுறேன் லூசு மாதிரி உலருறேனு தானே சொல்றீங்க உன்னால தான்டி அவனை அடிக்க வேண்டியதா போச்சு என்று அருகில் இருந்தவளின் முதுகில் தட்ட, தேவநிலா என்ற ஆசிரியரின் குரலில் அதிர்ந்து நின்றவள்.


எஸ் மேம் என்று பவ்யமாக சொல்ல,


என்ன எஸ் மேம் கிளாஸை கவனிக்காமல் அரட்டை அடிச்சிட்டு இருக்கிற


நோ மேம் என்று கண்ணை சுருக்கி சொல்ல,


தீபிகா ஸ்டேண்ட் அப் என்று தேவாவின் அருகே இருந்தவளை அழைத்ததும், எஸ் மேம் என்று எழுந்தாள்.


இப்போ தேவநிலா உன்னை அடிச்சா தானே? என்று கோபமான குரலில் கேட்க!


தேவா சாரிடி இன்ட்டேர்னல்ல கையை வச்சிடுவாங்கடி என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னவள் மேடமை பார்த்து பூம்பூம் மாடு போல தலையை 360° க்கு சுழற்றினாள்.


தேவநிலா கெட் அவுட் மை கிளாஸ் என்று கத்த, சோடாபுட்டி வெளியே வாடி உன்ன கவனிச்சிக்கிறேன் என்று அந்த தீபிகாவை மிரட்டி விட்டு பேக்கோடு வெளியேறினாள் தேவநிலா.
 
Top