கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா -18

Jothiramar

Moderator
Staff member
என் வானம்-18


இனிமையான குரலால் கவரப்பட்டு புன்னகையுடன் திரும்பியவன், தன் எதிரே நின்றவளை பார்த்ததும், அவள் அழகில் மதி மயங்கி போனான். எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறேன் ஆனால் எவரிடமும் தோன்றாத ஒரு உணர்வு இவளை பார்த்தவுடன் வருகிறதே என மனம் யோசித்தாலும், பார்வையை அகற்ற முடியவில்லை. எஸ் என்று வார்த்தையை உதிர்த்தான்.


அவனின் மனதில் ஓடுவதை அறியாத தேவாவோ, சார் சார் ரொம்ப ரொம்ப சாரி சார் இன்னைக்கு காலையில, மார்கெட்ல ஒரு எரும மாட்டை அடிக்கிறதுக்காக கல்லை எறிந்தேன், அது தவறுதலா உங்க மேல பட்டுடுச்சி, அந்த கடன்காரன் எப்படியோ என் அடியில் இருந்து எஸ் ஆகிட்டான். அவனால இடையில நீங்க வந்து அடிபட்டுட்டிங்க, நான் அப்போவே உங்களை தேடினேன், ஆனால் நீங்க எப்படி மாயமா மறைந்து போனீங்கன்னே தெரியலை, சாரி சார் என்று எதிரே பேச முயற்சித்தவனை பேசவே விடாமல், படபடவென சொல்ல வந்ததை சொல்லிவிட்டு எங்கே இன்னும் சிறிது நேரம் நின்றால் கூட கண்ணம் வீங்கிவிடுமோ என்ற பயத்தில் வெளியே வந்த இளாவோடு வேகமாக சென்று மறைந்தாள்.


அவள் போவதையே சுவாரஸ்யம் ததும்ப பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அர்ஜுன்.


தேவா நகர்ந்த சில நிமிடத்திலேயே அங்கே வந்து சேர்ந்தான் கிருஷ்ணா. அவன் அருகே வந்து நின்றது கூட தெரியாமல் தேவா போன பக்கமே பார்த்துக் கொண்டு சிலையென நின்றிருந்தான் அர்ஜுன்.


அர்ஜு அர்ஜு என கிருஷ் அழைத்தது கூட காதில் விழவில்லை அவனுக்கு… அர்ஜுனின் நினைவில் இருந்ததெல்லாம் தேவாவின் முகம் மட்டும் தான்.


அழகியே எனை நொடிதனில்

வீழ்த்தி சென்ற மாயம் என்னவோ, உன்னை

எங்கெனம் தேடி அடைவேன் கண்ணே!


என்று மனதில் புலம்பிக் கொண்டிருக்க, முதுகில் திடிரென வலி வரவும், ஆஹ் தேய்த்துக் கொண்டே பின்னால் திரும்பிய அர்ஜுன், தன் அண்ணனை பார்த்ததும் அதிர்ந்தான். உடனே பின்னால் திரும்பி அவள் வருகிறாளா என்று பார்த்தவன், அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வேறு இடத்திற்கு நகர்ந்திருந்தான் அர்ஜுன்.


டேய் ஏன்டா இழுத்துட்டு போற நீ கூப்பிட்டாலே நான் வருவேனே என்ற கிருஷின் கத்தலுக்கு கூட அவன் செவி சாய்க்கவில்லை.


அவனை பொறுத்தவரை தன்னிடம் வந்து பேசிய தேவதை, கிருஷையும் தன்னையும் சேர்த்து பார்க்கக் கூடாது என்று மட்டும் தான் மனதுக்குள் ஓடியது, அது ஏன் என்று அவனாலும் காரணத்தை அறியவோ உணரவோ, முடியவில்லை. இருவேறு மனநிலையில் இருந்தான் அர்ஜுன். அதனால் கிருஷின் கேள்வியை புறம் தள்ளிவிட்டு, இன்னைக்கு காலையில் மார்க்கெட்டுல உனக்கு அடிப்பட்டுச்சா? என்று கேட்டவன், அண்ணன் சொல்ல போகும் பதிலில் தான் தன் எதிர்காலம் இருக்கிறது என நினைத்தவன் கிருஷையே பார்த்தான்.


அர்ஜுன் திடிரென கேட்டதும் அதிர்ந்த கிருஷ் தன் தலையில் இருக்கும் ப்ளாஸ்டர் வெளியே தெரிகிறதா என அதிர்ந்து தன் கையை வைத்து பார்த்தவன், வெளியே தெரியவில்லை என்று தெரிந்ததும், இ இல்லையே என தடுமாற்றத்துடன் ஒலித்தது கிருஷின் குரல்.


அண்ணா பொய் சொல்லாதே, உண்மையை சொல்லு காலையில் உனக்கு அடிப்பட்டுச்சா இல்லையா? என்று அழுத்தமான குரலில் கேட்டதும், அவன் குரல் பேதத்தை கண்டே தெரிந்துவிட்டதை அறிந்த கிருஷ்ணா, எப்படி தெரியும்? என்றான்.


அ து அது என தடுமாறிய அர்ஜுன், ம்ஹாங் உன்னை அடிச்ச ஆளே நேரிடையா வந்து சொல்லிட்டு போயாச்சு என்று சொல்ல, கிரிஷின் விழிகள் உயர்ந்தது.


டேய் அர்ஜுன் யார் அவன்? ஒரு போலீஸ் ஆபீசரையே அடிச்சிட்டு, தைரியமா வந்து சொல்லிருக்கான். அவன் பார்ப்பதற்கு எப்படி இருந்தான்?. குள்ளமா இல்லை உயரமா இருந்தானா? தன்னை அடித்தவன் யார் என தெரிந்து கொள்ள அங்க அடையாளங்களை சொல்ல சொல்லி கேட்டவனை, பார்த்து அதிர்ந்த அர்ஜுனோ தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, அவன் சின்ன பையன் அண்ணா. ஸ்கூல் படிக்கிறவன், நான் தான் நீ என்று நினைத்து என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஓடியே போய்ட்டான் என்றான் அர்ஜுன்.


ஒஹ் சின்ன பையனா?


ம்ம் அ ஆமாண்ணா" என்றான் தடுமாறியபடி, "மேலும், உனக்கும் எனக்கும் தான் உருவத்திலேயும் சரி குரலிலேயும் சரி கொஞ்சம் கூட வித்தியாசமே இல்லையே என்றான் அர்ஜுன்.


அது என்னவோ உண்மை தான் அர்ஜுன் என்றவன், அவனை கட்டி அணைத்தான். சரி சரி வா வீட்டுக்கு போகலாம் இங்கேயே நின்று எவ்வளவு நேரம் தான் பேசுவது என்றான் கிருஷ். அண்ணன் தம்பி இருவரும் வெவ்வேறு மனநிலையில் தங்களுடைய வீட்டிற்கு பயணத்தை மேற்கொண்டனர்.


நல்ல வேளை அவனை இன்றே பார்த்துவிட்டேன் என்ற சந்தோசமும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்ற நிம்மதியும் சேர்ந்து கொள்ள சீட்டி அடித்தபடியே வண்டியை ஓட்டினாள் தேவா.


என்னடி சீட்டி அடிக்கிற? ரொம்ப ஹேப்பியா இருக்கிற மாதிரி இருக்கு.


இருக்காதா எங்கே மன்னிப்பு கேட்டா அறைஞ்சிடுவானோனு பயந்து கிட்டே பேசினேன் தெரியுமா? ஆனால் அவன் நான் சொன்னதை சிரிச்சிட்டே கேட்டான் என்று சொல்ல,


ஏன் சிரிக்க மாட்டான் அழகான பொண்ணு அடிச்சேன்னு வந்து சொல்லும் போது கோபப்படவா முடியும் என்ற கேள்வியை கேட்டு நிறுத்தினாள் இளா.


ஹேய் சும்மா கிண்டலடிக்காதே ஹோட்டலில் அவன் அடிச்ச பொண்ணு எவ்ளோ அழகா இருந்தாள் நீயும் பார்த்த தானே, வழியிறவனா இருந்திருந்தா அவளை அடிச்சிருக்கவே மாட்டான் தெரிஞ்சிக்கோ என்று அவனை பற்றி அவள் தவறாக பேசியது ஏனோ தேவாவுக்கு உவப்பாக இல்லை. அதனாலேயே அவனுக்காக பரிந்து கொண்டு பேசினாள்.


ஹேய் தேவா கூல், என் டவுட்டை நீயே க்ளியர் பன்னு என்று இளா சொன்னதும், உன் டவுட்டை முதல்ல சொல்லு தாயே என்றாள்.


சாதாரண சாஸ் நல்லா நோட் பண்ணிக்கோ அந்த பொண்ணு ஆஃப்ட்ரால் சாஸை தெரியாமல் கொட்டினதுக்கே ஓங்கி அறைந்தது மட்டுமில்லாமல் அத்தனை பேர் முன்னாடியும் அவமானப்படுத்தி பேசிட்டு வெளியே போய்ட்டான்.


ஆனால் நீ அவன் தலையை அடிச்சி இரத்த காவு வாங்கியிருக்க உன்னை ஒரு வார்த்தைக் கூட திட்டலனு சொல்றதை பார்த்தா ஒன்று அவன் சரியான ஆளா தெரியல? இல்லனா என்று சொல்லிவிட்டு இடையே நிறுத்தினாள் இளா.


இளா பேசியதை கேட்டதும் தேவாவுக்கு காரணமேயின்றி அவள் மீது கோபம் வந்தது. அவனை தவறானவனாக சித்தரித்தால் தனக்கு ஏன் கோபம் வருகிறது என யோசிக்க மறந்த தேவா. இளாவிடம், அதனால் இல்லனா என்று கடுகடுவென்ற குரலில் விருப்பமே இல்லாமல் கேட்டு வைத்தாள். அப்படி என்ன பொல்லாத காரணத்தை சொல்லப் போகிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.


இல்லனா நீ அடிச்சது ஒருத்தரை, அதுக்கு மன்னிப்பு கேட்டது வேற ஒருத்தரிடம் என்று நிறுத்தியவள், ஆனால் ஒரே மாதிரி இருவரா இருக்க சான்ஸே இல்லை என்று வேறு சொல்லி தேவாவை குழப்போ குழப்பு என்று குழப்பிவிட்டாள் இளா.

ஒருவேளை அவங்க டிவின்ஸா இருந்தால்... என்ற எண்ணமே தேவாவுக்கு கசந்தது. என்ன இவள் இப்படி சொல்றா என வீடு வந்து சேரும் வரைக்கும் யோசித்து யோசித்து மண்டை குழம்பியது தான் மிச்சம் என நொடித்துக் கொண்ட தேவாவோ, அதன் பிறகு இளாவிடம் எதைப்பற்றியும் பேசவில்லை. இருக்கிற குழப்பமே போதும் என நினைத்தவள், மற்ற விசயங்களை பற்றி பேச ஆரம்பித்தாள்.


அவளும் அந்த அவனை இவள் மறந்து விட்டாள் என நினைத்து, தான் இல்லாத இந்த ஒருவாரா கால நடப்பை பற்றி கேட்டு அறிந்தாள்.


இருவருமே தங்கள் இரவு உணவை வெளியே முடித்துக் கொண்டதால் ஒரு சில நல விசாரிப்புக்களுக்கு பிறகு அறைக்கு அனுப்பி வைத்தார் குணமதி.


அவருக்கு இளாவை பார்த்தவுடனே பிடித்து போனது காரணத்தை அவர் யாரிடமும் பகிரவில்லை. முதன் முதலாக அவளை கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு தான் பார்த்தார். தன் அண்ணனின் ஜாடையில் இருப்பவளை பார்த்ததுமே, மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.


தன் அண்ணனின் மகளாக இருப்பாளா என்ற சந்தேகம் எழுந்தாலும், அதை அவளிடம் கேட்டதே இல்லை.


ஒருவேளை அவள் தன் அண்ணனின் மகளாக இருந்து அவளின் மூலம் தன் அண்ணனுக்கு தன்னை பற்றி தெரியவந்தால், என்ன ஆகுமோ? என்ற பயமே அவரின் வாயை மூட வைத்தது.


அதுவும் அவளுடைய சொந்த ஊர் ஊட்டி என தெரிந்த உடனேயே தன் அண்ணன் மகளாக இருக்க வேண்டுமா? என்ற சந்தேகமும் எழத்தான் செய்தது. ஆனால் பேச்சுக்காக கூட, அப்பா பெயர் என்ன என கேட்டுக் கொள்ளவில்லை. காதல் திருமணம் செய்து கொண்டதாலேயே தன்னை அவர் விலக்கி வைத்தது நினைவுக்கு வந்து கண்கள் குளமாகியது.


தனக்காகவே கடுமையாக உழைத்து இன்று வரை கண் கலங்காமல் மகாராணி போல பார்த்துக் கொண்டிருக்கும் கணவனின் அன்பை எண்ணி மனதுக்குள் பூரித்து போனார் குணமதி.


இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட தன்னை அவர் தேடவில்லையே, என்ற உள்ளக்கிடக்கையும் எழாமல் இல்லை. ஆன்ட்டி கவி அக்கா எங்கே என கேட்ட இளாவிடம், அவள் வெளியூர் போயிருக்காமா என்றவருக்கு இப்போது தன் மகளை பற்றிய கவலை எழவும், இளாவைப் பற்றிய சிந்தனை சற்று நேரத்திற்கு மறக்க அடிக்கப்பட்டிருந்து.



அப்பாடா இப்போ தான்டி ஃபீல் ஃப்ரீயா இருக்கேன். எதையாவது சொல்லி என் மூளையை குழப்பி விடாதே நீ வரும் போது சொன்னதே கழுத்து வரைக்கும் இருக்கு என்ற தேவாவை யோசனையுடன் பார்த்தாள் இளா.


தோழியிடம் இருந்து பதில் வராமல் போகவும், என்ன இளா சத்தத்தையே காணோம்?


ம்ம் நான் இங்கேயே தான்டி இருக்கேன்.


இல்ல அமைதியா இருக்கியே அதான் என கேட்டு நிறுத்தினாள்.


அம்மா தாயே போதும்டி ஆள விடு, நான் எது சொன்னாலும் நீ கேட்க போறது இல்ல… எனக்கு டிராவல் பன்ன அலுப்பை விட, அவனை பற்றி பேச ஆரம்பிச்சா அதிகமாகிடுது சோ தூங்க போறேன் என்று பெட்டில் படுத்துக் கொண்டாள்.


ச்சீ போடி லூசு என்று திட்டிவிட்டு பால்கனி கதவை திறந்து முழு நிலவை இரசித்துக் கொண்டிருந்தாள் தேவா.


அதே போல அங்கே அர்ஜுனும் ஜன்னலின் வழியாக நிலவினையே பார்த்துக் கொண்டிருந்தான். எத்தனையோ நாட்கள் அவன் நிலவை பார்த்திருக்கிறான் அன்றெல்லாம் எதுவுமே தோன்றியதில்லை ஆனால் இன்று நிலவுக்குள், சற்று முன் கண்ட பெண் நிலவை தேடிக் கொண்டிருந்தான்.


கிருஷோ தான் வந்த வேலையை முடிக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தவன், தன் சகாக்களுக்கு சில உத்தரவுகளை இட்டுக் கொண்டிருந்தான்.


கைஸ் இன்னும் ஒன் வீக் தான் டைம் அதுக்குள்ள அக்யூஸ்ட்டை டிரேஸ் பண்ணியாகனும் என்று கட்டளை இட எஸ் சார் என்றனர்.


காலமும் நேரமும் யாருக்கு என்ன வைக்க காத்திருக்கிறதோ யாரும் அறியார். அதே போல அவர்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்த நாட்கள் எந்த இடர்பாடு இன்றி தெளிந்த நீரோடையாக சென்றது. அந்த நாள் வரும் வரைக்கும்.


மேலும் தேவாவுக்கு வீட்டில் என்ன நடக்கிறது என எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளவும் இல்லை அதை தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை.


தன் அக்கா ஒரு ரிப்போர்ட்டர் என்பது மட்டுமே தெரியும். அந்த வேலையை பற்றி தேவாவுக்கு தெரிந்தவரையில் என்னவென்றால், செய்தித்தாளில் வருபவை பற்றியதாக, அன்றாட நாட்டு நடப்பு, குற்றங்கள், அரசியல் பற்றிய தகவல், சினிமா துணுக்குகள் இவைகள் தான். ஆனால் அதற்காக தகவலை சேகரிக்க, என்று உண்மையான தகவலை திரட்டி தரவேண்டிய கடின உழைப்பை பற்றி தெரியாமல் இருந்தாள். ஆனால் அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்த போது, காலம் கடந்து இருந்தது. பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடந்துவிட்டது.


"அதே போல, தந்தையின் நடத்தையில் உண்டான மாற்றத்தையும், கவனிக்க தவறினாள். அவளை பொறுத்தவரை தன் அப்பா ஓய்வு இல்லாமல் உழைக்கிறார். அவளுடைய கம்பெனியை பற்றி கேட்டால் தெரியாது. ஆனால் தன் அப்பா ஒரு வேலையை கொடுத்து செய்து கொடும்மா என்றால் போதும், முதல் ஆளாக அதனை அவரின் எண்ணத்தின் படியே செய்து முடிப்பாள். அதனாலேயே மகளைப் பற்றி பெருமிதமாக மனைவியிடம் பகிர்ந்து கொள்வார் இளவேந்திரன். இப்போது தந்தை பிஸ்னெஸ் டென்ஷனில் இருக்கிறார் அதனால் அவரை தொந்தரவு செய்ய கூடாது என முடிவெடுத்தவள், கல்லூரிக்கு செல்வது, தன் அம்மாவிடம் வழக்கம் போல வம்புக்கு இழுப்பது, தோழிகளுடன் அரட்டை, கிளாஸ் கட் அடித்து விட்டு வெளியே சுற்றுவது என புள்ளி மானாய் துள்ளி திரிந்து கொண்டிருந்தாள்.


ஒருவாராக யூனியன் பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என கண்டறிந்தவர், அதனை பெரிதாக விடாமல் தடுத்து நிறுத்திய பிறகே ஆசுவாசமாக உணர்ந்தார். அவரை போலவே கவிநிலாவும் ஆங்காங்கே கிடைத்த சில தகவல்கள் அனைத்திற்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போல இருக்கவே அது என்ன என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினாள். இவர்கள் அனைவரும் தங்களுடைய உலகில் பயணித்துக் கொண்டிருக்க, விதியோ இவர்கள் தன்னுடைய பாதைக்கு மட்டுமல்லாது பார்வையில் படும் நாளுக்காக வலை விரித்து காத்துக் கொண்டிருந்தது.


அது ஒரு ஞாயிற்று கிழமை, தேவா தன் தோழிகளோடு காலையில் ஷாப்பிங், மதியம் லன்ச் ஹோட்டலுக்கு செல்வது, பிறகு ஃபர்ஸ்டு ஷோ சினிமா அது எந்த படம் புது ரிலீசோ அந்த படத்திற்கு செல்வது என அன்று ஒரு நாள் வெளியே போவதற்கான திட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே முடிவு செய்து வைத்திருந்தனர், ஐவர் அணியினர். மேலும் அன்று முழு நாளுமே டூவிலரை எடுத்துக் கொண்டு புறப்படலாம் என திட்டமிட்டு இருந்தனர்.


ஐவர் அணியில் இளா மட்டுமே காலேஜ் விடுதியில் தங்கி கல்லூரிக்கு வருபவள், மற்றவர்கள் அனைவருமே தங்கள் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருபவர்கள் ஆதலால், தேவாவின் டூவிலரில் இளா அமர்ந்து கொள்ள மற்றவர்கள் தங்களுடைய டூவிலரை எடுத்துக் கொண்டு வந்தனர்.


முதல் வேலையாக ஷாப்பிங் சென்றனர். எந்த பிரச்சனையும் இன்றி தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் ஹேர் பின் என அனைத்தையுமே பட்டியலிட்டு வாங்கியவர்கள், வெளியே வரும் போது மூன்று மணிநேரத்தை கடந்திருந்தனர்.


ஹேய் தேவா பசிக்குதுடி, ஏதாவது சாப்பிடலாம் என தீபிகா ஆரம்பிக்க,


ஆமாடி என காஞ்சியும் சொல்ல,


ஹேய் சசி, இளா, நீங்க ரெண்டு பேரும் மட்டும் ஏன் வாயை மூடிட்டு இருக்கிங்க? மணி இப்போ பனிரெண்டு ஆகுது லன்ச் முடிச்சிட்டு மேட்னி போகலாமா? இல்ல ஃப்ர்ஸ்டு ஷோ போகலாமா? என்ற தேவாவிடம், ஏய் மேட்னி பார்க்க முடியாது ஃப்ர்ஸ்டு ஷோ போகலாம் என்று தீபு சொன்னாள்.


நீங்க படம் பார்க்க போங்க என்னை ஹாஸ்டல்ல விட்ருங்க என்று குண்டை போட்டாள் இளா.


அவள் அப்படி சொன்னதும் அதிர்ந்த நால்வரும் கேள்வியாய் தோழியை பார்க்க, அவளோ அசௌகரியமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.


ஹேய் என்னடி ஆச்சு ஏன் இப்படி இருக்க… நாம சேர்ந்து போட்ட ப்ளான் தானே என்று சொல்ல, இளாவோ இதற்கு மேல் தன்னால் முடியாது என நினைத்தவள், தேவாவின் காதில் கிசுகிசுக்க, ஓஹ் சரிடி, ஹேய் நான் இவளை அழைச்சிட்டு போய் ஹாஸ்டலில் டிராப் பன்னிட்டு வரேன். நீங்க மூன்று பேரும் லன்ச்சை முடிச்சிடுங்க என்று சொல்லவும், ஏன் அவளுக்கு என்னாச்சுன்னு எங்ககிட்ட சொல்ல மாட்டியா? என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டனர்.


ஏய் எருமைகளா, அவளே பீரியட்ஸ் பெயின்ல அவதிப்படுறா "போதுமா ரீசன் தெரிஞ்சிட்டா, என்று சிடுசிடுக்க, அவர்களோ, தேவா சாரி டி இன்னைக்கு நம்ம புரோக்கிராம ஸ்டாப் பண்ணிடலாம், இன்னொரு நாள் இதே மாதிரி ப்ளான் பண்ணிக்கலாம் என்றவர்கள், அவரவர் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

இளாவுக்கு குடிப்பதற்கு என்று இளநீர் இன்னும் சிலவற்றை வாங்கி கொண்டு ஹாஸ்டலை நோக்கி வண்டியை செலுத்தினாள் தேவா.


அவளை பத்திரமாக ஹாஸ்டலில் இறக்கி விட்டபின், தன் வீட்டிற்கான பாதையில் போகும் போது, வழியில் ஓர் இடத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்த தேவா, தனது டூவிலரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த கூட்டத்திற்குள் சென்று பார்த்தவள் அதிர்ந்தாள்.

 
Top