கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா -19

Jothiramar

Moderator
Staff member
என் வானம்-19


நடு ரோட்டில் இரண்டு வாலிபர்களை ஜட்டியுடன் மண்டியிட்டு அமர வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் நின்றாள் தேவா. அந்த இருவரின் முகமும் ஆங்காங்கே சிவந்து வீங்கி போய் இருந்தது. அவர்களின் உடலில் இருந்த காயத்தில் இருந்து இரத்தம் வெளியேறியும் உறைந்து போய் இருந்தது. இருவரின் கைகளுமே, அவர்கள் உடைகளை கொண்டே பின்னால் கட்டப்பட்டிருந்தது.


ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசிக் கொண்டிருக்க, தேவாவுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை, அருகில் இருந்தவரிடம் என்னாச்சு என்று கேட்க, “அவரோ,


தெரியலைம்மா நான் வந்தபோதே இப்படி தான் இருந்தானுங்க என்று சொன்னார்.


அவர் சொன்னதை கேட்டவளோ சுற்றி இருந்த கூட்டத்தை கண்களால் அளவிட்டாள்.


பெரியவர்கள் முதல் சிறியவர்கள், இளைஞர்கள் என அனைவருமே, வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்க, ஏன் எல்லோரும் அமைதியாக நிற்கிறார்கள் என்று தனக்கு தானே முனுமுனுத்து கொண்டவள், நடந்த எதுவுமே தெரியாமல், அந்த இருவரை நோக்கி முன்னேறி சென்றாள் தேவா.


இரு இளைஞர்களையும் நெருங்கியவளை பார்த்த சிலர், ம்மா போகாதம்மா இங்கே வந்திடுமா என கூட்டத்தில் இருந்த வயதான பெண்மணிகள் சொன்னதை கேட்டு, பொங்கி எழுந்தாள்.


எதுக்கு? நானும் உங்களை மாதிரி நின்று இந்த அநியாயத்தை வேடிக்கை பார்க்கனுமா? உச்சி வெயில் மண்டைய பிளக்குது, இப்படி அறை குறை டிரெசில் இரண்டு பேரை எவனோ ஒருத்தன் கட்டிப் போட்டிருக்கான், நீங்க வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறீங்க! என்று சத்தம் போட்டவள், அந்த பெண்மணிகள் சொல்வதை மீறி அவர்களின் பின்னால் கட்டியிருந்த முடிச்சிகளை அவிழ்க்க போகவும், "அக்கா! அக்கா! ப்ளீஸ்க்கா முட்டி ரொம்ப வலிக்குதுக்கா சீக்கிரமா அவுத்து விடுக்கா, அந்த ராட்சன் வந்திடப் போறான் என்று கண்களால் சுற்றிலும் பார்த்துக் கொண்டே தேவாவிடம் கெஞ்சினர் இருவரும்… சரி சரி அழாதிங்கடா கழட்டி விடுகிறேன் என்றவள், முடிச்சுக்களை அவிழ்க்க, சட்டையோடு போராடிக் கொண்டிருந்தாள்.


இதுவரை கேட்ட சலசலப்பு சத்தம் திடிரென குறைந்து விட்டதை கவனிக்க தவறினாள் தேவா. அவளுடைய கவனம் முழுவதுமே அந்த இளைஞர்கள் கட்டப்பட்டிருந்த முடிச்சிகளை அவிழ்ப்பதிலேயே இருந்தது.


"ச்சே, எவன் இந்த முடிச்சை போட்டான், அவிழ்க்கவே முடியல, என்று புலம்பியவள், தன்னருகே கேட்ட சிம்ம குரலில் விதிர் விதிர்த்து போய் நிமிர்ந்தாள்.


நான் தான் முடிச்சிட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னவனை விழியெடுக்காமல், பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் தேவா.


அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவனை அவள் எதிர்பார்க்கவே இல்லை என்பது அவளுடைய முகத்திலேயே தெரிந்தது.


கூர்மையான விழிகளால் தன் முன்னால் நின்றிருந்தவளை உறுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் விழி வீச்சில் பெண்ணவளின் உடல் நடுங்கியது இருந்தாலும், அவனுக்கு நிகராக சற்றும் சளைக்காமல் நின்றிருந்தாள் தேவா.


என்ன பண்ணிட்டு இருக்க? அவனுடைய கோபத்தை கட்டுப்பட்டுத்துவது நன்றாகவே தெரிந்தது.


ம்ஹாங் பார்த்தால் தெரியல கையில கட்டிருக்கிற கட்ட அவிழ்த்துவிட டிரை பண்ணிட்டு இருக்கேன் என்றாள் அவனை முறைத்தபடி,


ஹேய் உன்ன! என்று தேவாவை நெருங்க போகவும், சார் என்றபடி வந்து நின்ற காவலர்களை பார்த்து அதிர்ச்சியுடன் நின்றாள் தேவா.


இன்ஸ்பெக்டர் சார், அக்கியூஸ்ட் இவனுங்க தான், நான் பெயிலபுளில் கேஸை ஃபையில் பண்ணுங்க!!,


ஹலோ மிஸ்டர் எந்த கேஸ்ல போடணும்னு எங்களுக்கு தெரியும். உங்க வேலையை பார்த்துட்டு போங்க என்றார் இன்ஸ்பெக்டர்.


இன்ஸ்பெக்டர் சொன்னதை கேட்டதும் அவனுக்கு கோபம் வர, அந்த இருவரின் அருகேயும் சென்று அவர்கள் கண்ணத்தில் மாறி மாறி அறைந்தவன், அந்த குழந்தைகளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி, உங்களை எவனாலேயும் காப்பாற்ற முடியாது என்று விரலை நீட்டி எச்சரித்தவன், போகும் போது தேவாவை முறைத்துவிட்டு சென்றான்.


காவலர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு போவதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், இங்கே என்ன தான் நடந்துச்சி என்று புரியாமல், திருவிழாவில் காணாமல் போன பிள்ளைகளை போல மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தவளின் பார்வை அவனின் (கிருஷின்) மீது விழுந்தது.


ச்சே என்ன நடந்துச்சின்னே தெரியாமல் அவனுங்க கட்டை அவிழ்க்க போய்விட்டேனே என்று தன்னையே அடித்துக் கொண்டவள், அவன் தன்னுடைய காரில் ஏற போவதை கண்டு சார் சார் என்று வேகமாக ஓடினாள்.


தன்னை நோக்கி ஓடி வருபவளை அலச்சியம் செய்து விட்டு டிரைவர் இருக்கையில் ஏறி அமர்ந்தவன் காரை வேகமாக ஒட்டிக்கொண்டு சென்றான்.


ச்சே போயிட்டானே என்று காலை தரையில் ஓங்கி மிதித்தவளின் அருகே வந்தார் ஒரு வயதானவர்.


பாப்பா என்று அழைக்கவும் திரும்பிய தேவா, என்ன தத்தா என்றாள்.


ஏம்மா இங்கே என்ன நடந்துச்சின்னு தெரியாமல் அந்த பாவி பயலுகளை காப்பாற்ற போறியே அவனுங்க என்ன செய்தான்னு தெரியுமா? அவர் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.


தெரியாது தாத்தா என்றாள் தேவா. தவறு செய்துவிட்டோம் என்று அவள் முகத்தில் தெரிந்த குற்ற உணர்ச்சியை பார்த்த தாத்தாவும், தாயி இரண்டும் ஸ்கூல் படிக்கிற புள்ளைங்க, அவங்க அம்மாவோட வண்டில போச்சிங்க என்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தார் தாத்தா.


விடுமுறை நாளாக இருந்ததால் தன்னிரு மகள்களை வண்டியில் அமரவைத்து ஓட்டிக் கொண்டு சென்றார். தன் சின்ன மகளை முன்னாடியும் பெரிய மகளை பின்னால் அமர வைத்து ஒட்டிக்கொண்டு சென்றவர் தங்களுக்கு பின்னால் வந்த வண்டியை கவனிக்க தவறினார்.


பார்ப்பதற்கு கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் போல தெரிந்தனர். விடுமுறையை கொண்டாட நண்பர்கள் வர சொன்ன இடத்திற்கு போய் கொண்டிருந்தவர்களின் கண்களில், அம்மா பிள்ளைகள் பட்டுவிட, இந்த இருவரும் பின்னால் அமர்ந்து இருந்த பெண்ணை கிண்டல் கேலி செய்து கொண்டே வர, அந்த பெண்ணின் அம்மாவோ தன் சின்ன மகளோடு பேசிக்கொண்டே வந்ததால் இது தெரியாமல் போனது. ரொம்பவும் மோசமாக பேசவும் தன் அம்மாவிடம் சொல்லிவிட அவரோ வண்டியை நிறுத்திவிட்டு அந்த பசங்களை திட்டியதோடு நில்லாமல், அவர்களின் வரம்பு மீறிய பேச்சை கேட்டதும் கோபத்தில் அடித்து விட்டார்.


அந்த இருவரையும் அடித்து விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தவர் தன்னுடைய மகள் அமருவதற்காக காத்திருந்தார்.


அந்த பெண் அமரபோகவும் வண்டியில் வந்த இருவரும் அவளின் ஷாலை பிடித்து இழுத்துக்கொண்டே செல்ல தன் மகளின் அலறலை கேட்டு பதறியவரோ வண்டியை விட்டு வேகமாக இறங்கியவர் சிறிய மகளை மறந்துவிட்டார். அந்த பெண்ணின் அம்மா கத்திக் கொண்டே பெரிய பெண்ணின் பின்னால் ஓட சின்ன மகள் வண்டியோடு கீழே விழுந்ததை கூட அறியவில்லை. அப்போது தான் அந்த வழியாக வந்த கிருஷின் பார்வையில் பட்டுவிட வண்டியை நிறுத்தி கீழே கிடந்த சின்ன பெண்ணை தூக்கியவன், அவளின் அழுகையை பார்த்து, யாரோட வந்த பாப்பா என்று மென்மையாக கேட்க, அம்மா அக்கா என்று அழுதாளே தவிர வேறு ஏதும் சொல்லவில்லை, வலியில் அழுது கொண்டிருந்த பெண்ணை பார்த்தவன், தூக்கிக் கொண்டு காரில் அமர வைக்கப் போனவனின் அருகே வந்த பெரியவர், தம்பி அந்த பொண்ணை காப்பாத்துப்பா என்று சொல்லி காட்டிய திசையை பார்த்தவனின் விழிகளில் அதிர்ச்சியும், கோபமும் அதிகரிக்க, ஐயா சீக்கிரம் ஆம்புலன்சை கூப்பிடுங்க என்று தன்னுடைய மொபைலை எடுத்து அவரிடம் கொடுத்தவன், காரில் ஏறி பறந்தான்.


பெற்ற பெண்ணின் அலறலை கேட்டு தாயுள்ளம் கதறியது. டேய் எம்பொண்ண விடுங்கடா என்று கத்த? என்ன சொன்ன விடனுமா? விடனுமா? என்று வண்டியின் வேகத்தை குறைத்து கேட்க, அவரோ ஆமாம் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டதும், திமிராக சிரித்தவன், அவ்ளோ சீக்கிரம் உம் பொண்ணை விட மாட்டேன் என்று அரக்கத்தனமாக சொன்னவனை பார்த்து பயந்து போனவர், தம்பி எம் பொண்ணை விடுப்பா என்று கேட்க, இவையணைத்தையும் சாலையில் போவோரும் வருவோரும் பார்த்தபடியே இருந்தனரே தவிர காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்பது வேதனையானது.


அந்த பெண்ணோ மயக்கத்துக்கே சென்று விட, குருதி வெளியேறி கால்கள் ரோட்டில் தேய்ந்து இரத்தம் வழிய, இருந்தவளை கண்டு அதிர்ந்த கிருஷ்ணா அவர்களை நெருங்கவும், டேய் எவனோ வரான்டா வேகமா போடா என்று பின்னால் இருந்தவன் அவசரப்படுத்த, அப்போ நீ அந்த பிடியை விடுடா, அப்போ தான் வண்டியை வேகமாக விரட்ட முடியும் என்று சொன்னதும் அந்த பெண்ணை பிடித்து இருந்த ஷாலை விட அவளோ ரோட்டில் உருண்டு தலை தடுப்பு சுவரில் மோதியது.


அதில் கோபமுற்றவன், அவர்களை துரத்திக் கொண்டு போய், காரை விட்டே இடித்து கீழே தள்ளியவன் இரண்டு பேரையும் ஆத்திரம் தீர அடித்து நொறுக்கிய பிறகும் கிருஷ்ணாவின் கோபம் தீரவில்லை. அவர்களின் உடைகளை கழட்டி அதை வைத்தே கைகளை கட்டியவன், நடுரோட்டில் இழுத்துக் கொண்டு வந்து அந்த பெண்மணியின் காலில் தள்ளினான்.


அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட அந்த இரு பெண்களையும் ஏற்றி விட்டவன், கூடவே தன்னுடைய ஆட்களையும் அனுப்பி வைத்தான்.


அவன் அவர்களை பிடித்த உடனேயே கூட்டம் சேர்ந்துவிட, அவர்களை பார்த்து ஆத்திரம் தீர திட்டியவன், அருகே இருந்த காவல் நிலையத்துக்கு தகவர் தெரிவித்து விட்டு வரவும், யாரோ ஒரு இளம்பெண் கட்டுக்களை அவிழ்ப்பதை கண்டு வேகமாக வந்தான்.


தாத்தா நடந்ததை சொல்லி முடித்ததும், தேவாவின் நெஞ்சம் கனத்து போனது. ச்சே அந்த கேடுக்கெட்ட பசங்களுக்காக உதவி செய்ய போன தன் மடத்தனத்தை எண்ணி உள்ளம் வெதும்பி போனாள் தேவா.


சாரி தாத்தா அவனுங்க இப்படி செய்து இருப்பாங்கன்னு தெரியாமல் நான் பாட்டுக்கு கண்டபடி பேசிட்டேன் என்று வருந்தியவளிடம், பரவால்ல பாப்பா தெரியாமல் தானே பேசின என்று சொல்லிவிட்டு அவருடைய வேலையை பார்க்க சென்றார்.


மனதில் உண்டான குழப்பதொடவே தன் வீட்டிற்கு சென்றாள் தேவா.


ஆனால் கிருஷ்ணாவோ, நேராக மருத்துவமனைக்கு விரைந்தான். அங்கே அந்த பெண்களின் அம்மாவிடம் விசாரணை என்ற பெயரில் கண்டபடி கேள்வி கேட்ட போலீசை கண்டவனுக்கு ஆத்திரம் வர, என்ன இன்ஸ்பெக்டர் இதான் உங்க விசாரணையா என்று கேட்டவனிடம், ஏய் என்ன நீ நானும் அப்போதிருந்து பார்க்கிறேன் ரொம்ப திமிரா பேசுற என்று சொன்னவன் கிருஷின் சட்டை காலரை பற்ற, அப்போதுதான் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்கிக்கொண்டு வந்த கிருஷின் ஆட்கள் பார்த்து பதறி போனவர்கள், ஹேய் கையை எடு யாரு சட்டை காலரை பிடிச்சிருக்கனு உனக்கு தெரியுமா என்று கேட்டதும், எவனா இருந்த எனக்கு என்னடா ஒரு போலீஸ்காரனுக்கு எப்படி விசாரணை செய்யனும்னு இவன் சொல்லி தரானாம் என்று நக்கலுடன் பேசியவனின் பார்வை கிருஷ்ணா காட்டிய கார்டை பார்த்ததும் அவனின் காலரை பிடித்திருந்த கைகள் நடுங்கியது.


இன்ஸ்பெக்டர் கையை எடுத்ததும், அப்பறம் அந்த இரண்டு பேர் எங்கே என்று கேட்டதும், இன்ஸ்பெக்டரின் உடல் நடுங்கியது.


இரண்டு பசங்களும் பெரிய இடத்து பிள்ளைகள் என்று தெரிந்ததும், வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு, அவர்களை விடுவித்த உண்மை அறிந்த பிறகே கிருஷ்ணா, மருத்துவமனைக்கு வந்ததே, அது தெரியாத இன்ஸ்பெக்டர் திமிராக நடந்து விட்டதுமில்லாமல், சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டதை ஆதாரத்துடன் கமிஷனரிடம், கொடுத்து விட அந்த இன்ஸ்பெக்டரின் பதவி உடனேயே பறிக்கப்பட்டது.


இதை எதுவும் அறியாத தேவாவோ, அன்று இரவும் உறக்கம் வராமல் தவித்தாள். மனமெங்கும் அந்த பெயர் தெரியாதவனே நிறைந்து இருந்தான்.


அந்த பெயர் தெரியாதவனை தேடி ஊரெல்லாம் சுற்றியவளுக்கு தெரியவில்லை அவன் எதுக்காக இந்த ஊருக்கு வந்தானோ அந்த வேலையை முடித்துக்கொண்டு சென்றுவிட்டான் என்பதை அறியாமல் கல்லூரிக்கு செல்லாமல் அவனை தேடினவளுக்கு இளாவின் மூலமாகவே வீட்டில் உள்ளவர்களுக்கு தேவா கல்லூரிக்கு செல்லவில்லை என்ற உண்மை தெரிய வந்தது.


இளவேந்திரனும் குணமதியும் எப்படி எல்லாமோ கேட்டு பார்த்தும், தேவா வாயே திறந்தாளில்லை.


வெகுநேரத்திற்கு பிறகே வாயை திறந்தாள். அப்பா அம்மா நான் ஒரு தப்பு பண்ணிட்டேன், அந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாதான் என்னால நார்மலா இருக்க முடியும் என்ற மகளின் கண்களில் தெரிந்த தவிப்பு வலி பெற்றவருக்கு எதையோ உணர்த்த, தேவா நீ தெரிஞ்சி அந்த தவறை செய்தாயா என்று கேட்க,


இல்லப்பா என்று கண்ணிர் வடித்த மகளை பார்த்தவரோ பதறிவிட்டார். என் பொண்ணுக்கு அழுக தெரியும் என்று இன்னைக்கு தான்டா தெரியும் என்றதும் அவர் நெஞ்சில் சாய்ந்து அழுதவளின் முதுகை நீவிவிட்டார்.


தேவாவோ தன் அப்பாவிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள்.


மகள் சொல்லிமுடிக்கும் வரை அமைதிக்காத்தார். இப்போ என்ன? என் செல்ல குட்டி அந்த பையனிடம் சாரி கேட்கனும் அவ்ளோ தானே என்க.,


அவளோ ஆமாம் என தலையை ஆட்டவும், நீ அந்த பையனை பார்க்கனும்னு விதி இருந்தால் கண்டிப்பாக பார்ப்பாய் என்று சொல்ல,


நிஜமாவா டாடி என்று சிறு குழந்தை போல பேசும் மகளை பார்த்தவருக்கு, தேவாவின் இத்தகைய குணத்தை எண்ணி பெற்றவரின் உள்ளம் கலங்கியது. ஒருவாறாக தேவாவை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.


ஆனால் மகளை சமாதானப்ப்டுத்தியவர் மனைவியிடம் சொல்லி புலம்பினார். அவரின் அன்றைய கலக்கம் பின்னாளில் நிஜமாக போவதை அறியாமல் போனார் இளவேந்திரன்.


நாட்களும் விரைவாக ஓடியது. இரண்டு மாதம் எப்படி போனதென்று தேவாவிடம் கேட்டால் அவளோ திருதிருவென முழித்து கொண்டு நிற்பாள். அந்த நாளுக்கு பிறகு யாராலும் பழைய தேவாவை பார்க்க முடியவில்லை.


தேவாவின் தோழிகளுக்கு அவளின் தீடிர் மாற்றத்திற்கு காரணம் தெரியாமல் தவித்தனர். தேவாவிடம் இருக்கும் பழைய குறும்புத்தனம், துடுக்குத்தனம் எல்லாம் எங்கு போனதென்ற தெரியாத அளவிற்கு மாறியிருந்தாள். வீட்டிலும் சரி கல்லூரியிலும் சரி கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லிக்கொண்டு இருந்தவளை பார்த்து இளாவின் மனதில் சந்தேகம் வர ஆரம்பித்தது. அவளுடைய நடவடிக்கையில் மாற்றம் வந்தது எப்போது என யோசிக்க ஆரம்பித்தவளின் கண்களில், உண்மை புலப்பட கண்டுபிடிச்சிவிட்டேன் என்று இருக்கும் இடத்தை மறந்து சத்தமாக கத்தினாள், தான் கத்தியது வகுப்பறை என்பதையே மறந்துவிட்டாள்.


வகுப்பு மாணவிகள் அனைவரும் கொல்லென்று சிரித்துவிட அப்போதும் பொம்மை போல அமர்ந்திருந்த தேவா தான் அவளுடைய கண்களுக்கு தெரிந்தாள்.


தேவாவிடம் எப்படி எல்லாமா கேட்டு பார்த்தும் வாயை திறக்கவில்லை தன் அப்பா சொன்னது போல அவனை பார்க்க முடியும் என்ற விதி இருந்தால் கண்டிப்பாக பார்ப்பேன் என்று மட்டும் உறுதியாக நம்பினாள்.


மகளின் மாற்றத்தை நன்கு அறிந்த இளவேந்திரன், தேவாவை அப்படியே விட மனது இல்லாமல் தன்னுடைய கம்பெனி பொறுப்புகளை கொடுக்க ஆரம்பித்தார். படிப்போடு சேர்ந்து தொழிலிலும் அவளுடைய கவனத்தை திசை திருப்பினார். அது நன்றாக வேலையும் செய்தது.


அவனை நினைக்க முடியாத அளவிற்கு படிப்பு, வேலை என்று நாட்கள் வேகமாக சென்றது. இப்படியே நாட்கள் நகர, விழா ஒன்றிற்கு போகவேண்டும் அதனால் சீக்கிரமாக கல்லூரியில் இருந்து வந்துவிடு தேவா என தன் அப்பா சொன்னதும் சரிஎன தலையை ஆட்டி கல்லூரிக்கு சென்றாள்.


கவியோ தங்கையை நினைத்து தாயிடம் வருந்த, அவரோ நீ இந்த பத்திரிக்கை வேலையை விட்டு எப்போ நிற்க போகிறாய் என்றார் எடுத்த எடுப்பில், அம்மா கோபமாக இருப்பதை உணர்ந்தவள், ம்மா ப்ளீஸ் நான் முக்கியமான சீக்ரெட் ஆபரேன்ல இருக்கேன் அதை முடிச்சிட்டு, அதை முடிச்சிட்டு நாங்க பார்க்கிற பையனை மேரேஜ் செஞ்சிக்கனும் என்று கறாராக சொல்லிவிட, மகளோ திடுக்கிட்டாள்.


கவி நீ நினைக்கிறது நடக்காது, யார் யாரோ போன் பண்ணி மிரட்டுறாங்கடி, எனக்கு பயமா இருக்கு, நானோ இரண்டு பெண்பிள்ளைகளை பெத்து வச்சிருக்கேன் உங்களுக்கு ஏதாவது ஒன்றுன்னா இந்த அம்மா உயிரோடவே இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு செல்ல, கவியோ சிலையென நின்றாள்.


கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த தேவா விருப்பமே இன்றி விழாவிற்கு தயாரானாள். குணா கவி எங்கேம்மா என்று கேட்ட கணவரிடம், சீக்கிரம் வரேனு சொல்லிட்டு போனாங்க இன்னும் வரல, என்று புலம்பியவர் அவளுக்கு போன் செய்ய அதுவோ நாட் ரீச்சபுள் என்று வந்தது.


இதோ பாருங்க கவியை நம்ம கம்பெனி பொறுப்பை கொடுத்து நடத்த சொல்லுங்க, இந்த இன்வெஸ்டிகேன் ரிப்போர்ட்டர் வேலையெல்லாம் வேண்டாம் என்று கோபத்தில் ஆரம்பித்து அழுகையில் முடிக்கவும், குணா என்ன இது சின்ன புள்ள மாதிரி, கவிக்கிட்ட நான் பேசுறேன் என்று அந்த நேரத்திற்கு சமாதானப்படுத்தினார்.


தேவா இளமஞ்சள் நிறத்தில் தங்க சரிகையிட்ட சுடிதாரை அணிந்திருந்தாள். இடைதாண்டி நீண்டு தொங்கிக்கொண்டிருந்த கூந்தலில் மல்லிகை சரத்தை வைக்கவும், அய்யோ அம்மா என்ன இது? நாம என்ன மேரேஜ் பங்சனுக்கா போறோம் என்று தலையில் வைத்த பூவை எடுக்க போகவும், தேவா அது இருக்கட்டும் நீ வா என அழைத்துக் கொண்டு சென்றார்.


விழாவோ பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக ஆறு மணிக்கு ஹோட்டலை அடைந்தவர்கள் விழா நடக்கும் ப்ளோருக்கு குடும்பத்துடன் சென்றார் இளவேந்திரன். அவரை வரவேற்று ஸ்டேஜில் அமர பணித்தனர்.


ஆனால் அவரோ மறுத்துவிட்டு தன் மனைவி மக்களோடு அமர்ந்தார்.


வாங்க சார், இளவேந்திரன் சாரை பற்றி தெரியாதா? எவ்வளவு உயரத்துக்கு போனாலும், அவர் பழைய மாதிரியே எல்லோருடனும் ஒரே மாதிரி தான் பழகுகிறார்.


அவர் இங்கே வர ஒத்துக் கொண்டதே பெரிய விசயம். அவர் இந்திய அளவில் டாப் டென் பிஸ்னெஸ்மேன்ல ஒருத்தர் என்று சிலாகித்துக் கூறிக் கொண்டே செல்ல, இளவேந்திரனோ தன் மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.


தேவா பிடிச்சிருக்காடா என்று மகளிடம் கேட்டார்.


வாவ் டேடி சூப்பர் அரேன்ஜ்மெண்ட்ஸ் என்று சொல்ல,.


பல புதிய முகங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தவள் தன் அப்பாவின் கேள்விக்கு தலையை ஆட்டினாள்.


தேவா பல இன்டஸ்டிரியலிஸ்ட் இங்கே வந்திருக்காங்க!! நம்ம சௌத் இண்டியால பெஸ்ட் தொழிலதிபருக்கு அவார்டு கொடுக்க போறோம். இந்த இயருக்கான இளம்தொழிலதிபரை அனோன்ஸ் பண்ணுவாங்க, லாஸ்ட் த்ரீ இயர்ஸா ஒருத்தன் தான் வாங்குறான். தி யெங் அண்ட் எனேர்ஜிடிக் பெர்சன். அதோ அவன் தான் என்று மற்றவர்கள் கவராதபடி தன் மகளிடம் காட்டினார்.


தந்தையின் பேச்சை ஆர்வமாக கேட்டபடி, யார் அவன்? என்று மனதில் யோசித்தபடியே, அலட்சியமாக திரும்பிப் பார்த்த தேவாவின் கண்களில் மின்னல் தாக்கியது போல அதிர்ந்தாள்.
 
Top