கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா -20

Jothiramar

Moderator
Staff member
என் வானம் -20


"ப்பா, இவரா யங் அன்ட் எனர்ஜெடிக் பர்ஸன் என்று அதிர்ச்சி மாறாதக் குரலில் கேட்டாள் தேவா. அவளின் முகம் போன போக்கை பார்த்த இளவேந்திரன்,


தேவா என்னடா ஆச்சு? ஏன் இப்படி ரியாக்ட் பன்ற? என்று மெதுவான குரலில் கேட்டார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனை பார்த்தா வயதானவன் போலவா இருக்கிறது என மனதுக்குள் நினைத்தவர், ஒரு முறை திரும்பி அவனின் முகத்தை பார்த்தார்.


டேடி ப்ளீஸ், ஹம்... ஹாங் வரும் சிரிப்பை வாய்க்குள் அடக்கியவள், ம்ஹூம் என்று தொண்டையை செருமி சரி செய்து கொண்டவள், டேடி இன்னொரு தடவை அந்த தாத்தாவை, யங் எனர்ஜெடிக்னு சொல்லிடாதிங்க" என்றவளால் எவ்வளவோ முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிற்றை பிடித்துக் கொண்டு சத்தம் வராமல் சிரிப்பதற்கு வெகு சிரமப்பட்டாள் தேவா.


தேவா நான், சொல்றதை என பேச ஆரம்பித்தவரை தடுத்தவள், நான் வீட்டுக்கு கிளம்பவா டேடி? என மெதுவாக முனுமுனுக்க,


ஏன்டா இன்னும் பங்சனே ஸ்டார்ட் ஆகலையே அதற்குள்ள ஏன் போகிறாய்? மகளின் மனதை மாற்றுவதற்காக தானே இங்கே அழைத்து வந்தேன் அப்படி இருந்தும் உடனே கிளம்புறேன் என்று சொல்லவும், என்ன செய்வது என்று தெரியவில்லை.


அப்பா ப்ளீஸ் என்று கெஞ்சும் பார்வை பார்த்த மகளை பார்த்தவர், சரிடா என்று சம்மதம் சொல்லி தலையை அசைத்தார்.


அப்பாவும் மகளும் இதுவரை பேசிக்கொண்டிருந்தது எதுவுமே சரிவர புரியவில்லை என்றாலும் இறுதியாக தேவா வீட்டுக்கு போகிறேன் என்று சொன்னதை கேட்டு, என்னங்க நீங்க அவள் எது சொன்னாலும் சரின்னு சொல்லிக்கிட்டு, என்று கடிந்துக் கொண்டவர், தேவா இப்போ வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரம் ஆனபிறகு போகலாம் என்று முடித்துவிட, வேண்டா வெறுப்பாக அமர்ந்துவிட்டாள்.


அதே நேரம் இந்த வருடத்தின் இளம் தொழிலதிபருக்கான அவார்டை வழங்குவதற்கு இண்டஸ்டிரியலிஸ்ட் மிஸ்டர் இளவேந்திரன் அவர்களை மேடைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அறிவிக்கவும், அசுவாரஸ்யமாக அமர்ந்திருந்த தேவாவுக்கு, இதுவரை இருந்த இறுக்கம் மறைந்து சிரிப்பு பிரீட்டது. வாய்க்குள் தன்னுடைய சிரிப்பை அடக்கியவள், வாவ் டேடி சூப்பர், நீங்களே போய் உங்க கையால அந்த யங் எனர்ஜெடிக் பர்சன்க்கு அவார்டை கொடுங்க என்று காதை கடிக்கவும், தேவா என குணவதி பல்லை கடிக்க, சரி சரி நான் பேசல என்று வாயை பொத்திக் கொள்வது போல கையை வைத்துக் கொண்டு சமர்த்தாக அமர்ந்து கண்ணை உருட்டவும், இளவேந்திரனுக்கும் சிரிப்பு வந்தது. அதே புன்னகையோடு மேடையை நோக்கி சென்றார்.


மேடைக்கு சென்ற இளவேந்திரன் கையில் ஒரு கார்டை கொடுக்க, அதிலிருந்த பெயரை பார்த்ததும் முகத்தில் புன்னகையுடன், இந்த வருடத்திற்கான இளம் தொழிலதிபருக்கான அவார்டை பெறப்போகும் நபர் வேற யாரும் இல்லை நன் அனதர் தென், கிருஷ்ணா குரூப்ஸ் ஆப் இண்டஸ்ட்ரீஸ் எம்டி மிஸ்டர் அர்ஜுன் என்று சொன்ன அடுத்த நொடி, கரவோசையில் அந்த இடமே அதிர்ந்தது.


அடேங்கப்பா தாத்தாவுக்கு இப்படி ஒரு பலமான வரவேற்ப்பா என்று கூட்டத்தில் இருந்தவரை பார்த்த தேவாவுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது.இவ்வளவு நேரமாக யாரை இளம் தொழிலதிபர் என்று நினைத்து இருந்தாளோ, அவர் தன்னருகில் இருந்தவனை கட்டியணைத்து வாழ்த்து சொல்ல, தேங்க்ஸ் அங்கிள் என்று சிரித்தவனை பார்த்து இவனா? என அதிர்ந்தாள் தேவா. கம்பீர நடையுடன் மேடைக்கு சென்று, தன் அப்பாவின் கரத்தால் அவார்டை வாங்கியவனை கண்டதுமே… அ அ ர் ஜு ன், இவன் பேரு அர்ஜுனா… என்று வாயை பிளந்துகொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் தேவா.


தேவாவினால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக யாரை தேடி அலைந்தாளோ, அந்த அவன் தற்போது கண் முன்னால் அதுவும் தன் கையெட்டும் தூரத்திலேயே இருப்பதை பார்த்தவளுக்கு நம்பவே முடியவில்லை. அவனை பார்த்தவுடனே அருகே போக துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.


தேவாவின் பார்வை என்னவோ அர்ஜுனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவனின் பேச்சு சிரிப்பு, வரிசையாக தெரிந்த முத்துப்பல் வரிசை, அடங்காமல் அலையலையாய் சிலிர்த்துக் கொண்டிருந்த முடியும், அவன் சிரிக்கும் போது கண்களும் சேர்ந்து சிரிப்பது போல இருக்க கண்டவள் கள்ளத்தனமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.


தேவா நீயா இப்படி? அதுவும் ஒரு ஆடவனை அணுவணுவாக ரசிப்பது என்று அவளுடைய மனசாட்சியே நேரம் காலம் பார்க்காமல் நக்கலடிக்க, நான் ஒன்னும் அவனை ரசிக்கல, நீ உன் வேலையை பார்த்துட்டு போய்டு என்று இவள் கடுப்படிக்கவும், ம்ம் நானும் பார்க்கத்தானே போகிறேன், நீ யாருகிட்ட வேணாலும் ஒழியலாம் ஆனால் என்கிட்டே முடியாது அதை உன் நியாபகத்துல வச்சிக்க என்று சொல்லிவிட்டு மறைந்தது.


அவார்டை வாங்கியதும், அர்ஜுன் பேசிய வார்த்தைகள் எதுவுமே தேவாவின் காதில் விழவே இல்லை. அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


மேடையில் இருந்து இறங்கி வந்தவனிடம், கைகுலுக்கி வாழ்த்துக்களை சொல்ல, அவனும் அதை ஒற்றை தலையசைப்புடன் ஏற்றவனின் பார்வை அந்த இடத்தையே வட்டமிட்டது. கொஞ்ச நேரமாக யாரோ தன்னை உற்று நோக்குவதாக உள்ளுக்குள் உணர்ந்தவன் அது யார் என தெரிந்துக் கொள்ள வேண்டி, சாதாரணாமாக பார்ப்பதுபோல கண்களால் அந்த இடத்தையே ஸ்கேன் செய்து கொண்டிருந்தான்.


ஆனால் திடுமென அவனுடைய விழிகள் அந்த இடத்தையே சுற்றி வருவதை கண்டவள், ஆஹா நம்மள கண்டுபிடிச்சிட்டானா என்று உள்ளம் படபடக்க தன் அம்மாவின் பக்கமாக தலையை திருப்பிக் கொண்டு தன்னுடைய கையால் கன்னத்தை தாங்குவது போல வைத்து மேடையை கவனிக்க ஆரம்பித்தவள் ஓரவிழியால் அர்ஜுனை பார்க்க… அவனோ அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


தன் புருவத்தை ஏற்றி என்ன என்பதாய் கேட்கவும், பெண்ணவளின் கன்னங்கள் ரூஜ் போடாமலேயே சிவந்தது. வேகமாக துடிக்கும் இதயத்தை சமன்ப்படுத்திக் கொண்டு மறுபடியும் அர்ஜுனை ஒரவிழியால் பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


ச்சே நான் மட்டும் தான் அவனை மறக்காமல் நினைச்சிட்டே இருக்கேன். ஆனால் அவன் என்று நினைக்கும் போதே தேவாவின் கண்கள் காரணமேயின்றி கலங்க, நோ நோ தேவா, அவன் யார் என்னனு கூட உனக்கு தெரியாது, அப்படியிருக்கும் போது யாரை கட்டிபிடிச்சா உனக்கு என்ன? என்று மனசாட்சி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள். என்னை பார்த்தும் பார்க்காதமாதிரி திரும்பிக்கிட்டானே… திரும்பும் போது என்னை முறைத்தது போல அல்லவா இருந்தது. ஒருவேளை அன்னைக்கு நான் அந்த பசங்களுக்காக சப்போர்ட் பண்ணதால என்னை தவறா புரிஞ்சிக்கிட்டானா என்று நினைக்கும் போதே மனம் கனத்துப் போனது. சரி சரி அன்னைக்கு நடந்ததுக்கு மட்டும், அவனிடம் மன்னிப்பு கேட்டுவிடுறேன் அப்போ தான் என்னால மன நிம்மதியுடன் இருக்க முடியும் என தன்னையே சமாதானப்படுத்திக் கொண்ட பிறகு தான் தேவாவின் மனம் லேசானது. சிறிது நேரம் சென்றதும் அர்ஜுன் என்ன செய்கிறான் என்று ஓரவிழியால் பார்த்த தேவாவின் மனதில் இன்ப அதிர்வு உண்டானது. தன்னிடம் தான் சொல்கிறானா என்று மறுபடியும் அவனை பார்க்க, “அவனோ,


ஹாய் என்று தன்னை பார்த்து கையசைக்கவும், அய்யோ தேவா உன்னை அவன் மறக்கல என்று நினைக்கும் போதே அவளின் உள்ளத்தில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. அவன் அருகே வர வர அவளின் இதயத்தின் துடிப்பு என்றுமில்லாமல் அதிவேகமாக துடிக்க ஆரம்பித்தது. நடுங்கிய கைகளை மேசையின் மீது வைத்து அழுந்த பற்றி சமாளித்துக் கொண்டு தடுமாறி எழுந்து நின்றவள், தன்னருகே நெருங்கியவனை பார்த்து, ஹாய் என்று வாயை திறக்கப் போகவும், அவளை தன் கூர்மையான விழிகளால் உரசியபடியே கடந்து சென்றான் அர்ஜுன்.


அவனுடைய செயலில் மிகவும் அடிபட்டு போன தேவாவுக்கு, அவமானமாக இருந்தது. அதே நேரம் ரொம்ப நேரமாக நின்றுக் கொண்டிருந்த மகளை பார்த்ததும், தேவா என்னடா ஆச்சு உட்கார் என்று குணவதி சொல்லிக் கொண்டிருக்க, ஹலோ மிஸ்ஸஸ் குணவதி ஹவ் ஆர் யூ பார்த்து ரொம்ப நாள் ஆச்சில்ல என்று ஒரு லேடி பேச ஆரம்பிக்கவும், நிம்மதியாக உணர்ந்தாள் தேவா.


உங்க பொண்ணா? என்று வந்தவர் கேட்டதும், “தன்னுடைய அம்மா, அதற்கு ஆமாம் என்று பதில் சொன்னதை கேட்டும் கேட்காதவள் போல இருந்தவளின் காதில், உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா என்று சொன்னதை கேட்டவளுக்கு எரிச்சலாக இருந்தது. தலை வேறு விண்ணென்று வலிக்க ஆரம்பித்தது தேவாவுக்கு.


அதற்குள் இளவேந்திரனும் தேவாவின் அருகே வர, மகளின் முகத்தில் இவ்வளவு நேரமாக இருந்த புன்னகை காணாமல் போயிருப்பதை கண்டு என்னடா என்க, ப்பா என்று அவரின் கையை பற்றிக் கொண்டாள்.


அப்போது தான் இலவேந்திரனிடம் பேசலாம் என்று அங்கே வந்த அர்ஜுனின் காதில் தேவா அப்பா என்றது தெளிவாக கேட்டுவிட, "அப்பாவா…" என்று மனதுக்குள் நினைத்தவனின் முகத்தில் கலவையான உணர்வுகள் வெளிப்பட்டது. அதே நேரம், ஹல்லோ அர்ஜுன் என்று இளவேந்திரனே அவனை கண்டு பேசவும்,


தன்னுடைய அதிர்ச்சியை நொடியில் மறைத்துக் கொண்டவன், ஹலோ சார் என்று அவரின் கையை குலுக்கியவனிடம், தேவாவை அறிமுகப்படுத்தி வைத்தவர், பிறகு தன் மனைவியையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.


அவனும் புதிதாய் பார்ப்பவன் போல ஹாய் என்றான்.


"அவளோ, ஹாயாம் ஹாய், பொல்லாத ஹாய், பெருசா ஹாய் சொல்ல வந்துட்டான் என்று வாய்க்குள் முனுமுனுத்துவிட்டு அசுவாரஸ்யமாக ஹலோ என்று சொன்னவள், மாம் டேட், ஷெல் ஐ கோ என்று கேட்டதும், ஏன் தேவா என்னாச்சு என்று குணா பதற?


நத்திங் மாம், சின்னதா ஹெட்டேக் என்றவளின் பார்வையோ அர்ஜுனை தொட்டு மீண்டது.


ஓஹ் அவளோட தலைவலிக்கு நான் தான் காரணமா? என உள்ளுக்குள் நினைத்தாலும், வெளியே சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றான்.


தேவா கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதாடா…. நோ வே என்று பிடிவாதமாய் நிற்கவும்,


சார் இஃப்யூ டோன்ட் மைண்ட், நான் வேணா டிராப் பண்ணிடவா? என்று கேட்டு தயங்கி நின்றான்.


மகளை எப்படி யாரோடு அனுப்புவது என்று தவித்து நின்றவர், அர்ஜுன் கேட்டதுமே, முகம் கொள்ளா புன்னகையுடன் வித் ப்ளஷர் என்று சம்மதம் தெரிவித்துவிட, இவனோடவா வேண்டவே வேண்டாம், இவங்கூட போறதுக்கு டாக்ஸிலேயே போய்டலாம், என்று மனதுக்குள் நினைத்தவள், மறுப்பதற்கு வாயை திறக்கப் போன தேவாவை கண்டு அவளுடைய எண்ணத்தை படித்தவன், சார் உங்க பொண்ணுக்கிடே கேளுங்க என் கூட வர சம்மதமான்னு…. இன்னைக்கு தானே என்னை முதன் முறையாக பார்க்கிறாங்க என்றவனோ, இன்னைக்கு என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுக்கவே செய்தான்.


“நோ…. “நோ, அர்ஜுன்” அதெல்லாம் ஒன்றும் இல்லை… உங்க கூட அனுப்பினா கொஞ்ம் பாதுகாப்பா உணர்வேன் என்றவரை, பார்த்தவள், தன் அப்பாவை இதற்கு மேலும் கீழிறக்க கூடாது என்ற முடிவுக்கு வந்தவள், ஓகே டேட் மாம் பை பை சீக்கிரமா வீட்டுக்கு வாங்க என்று விடைபெற்றவள், போகும் போது அர்ஜுனை முறைத்து விட்டே சென்றாள்.


சாரி அர்ஜுன் அவள் கொஞ்சம் டிஸ்டர்பா இருக்காளேன்னு தான் இங்கே அழைச்சிட்டு வந்தேன். இவ்வளவு நேரம் நல்லாத்தான் இருந்தா சடன்னா என்ன ஆச்சின்னு தெரியல? என்றவர், அர்ஜுனின் கையை பிடித்துக் கொண்டு, அவள் இப்படி நடந்துகிட்டதை நினைச்சு தவறா எடுத்துக்காதிங்க? என்று தன்மையாக சொன்னவரை வியப்புடன் பார்த்தான் அர்ஜுன். அவன் இதுநாள் வரை சந்தித்த பெரிய மனிதர்களிலேயே இவரை போல எவருமே இல்லை, என்று மனதுக்குள் நினைத்தவன், பணம் படைத்தவர்களிடம் இருக்கும் திமிரும் செருக்கும் இன்றி இருந்தவரை கண்டு, சார் ப்ளீஸ்… நான் தவறா எடுத்துக்கல என்று சொன்னவன், அவரிடம் விடைபெற்று தேவாவை பின்தொடர்ந்து சென்றான்.


அந்த ஹோட்டலின் காரிடாரில் நின்றபடி அர்ஜுனின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள் தேவா. அவன் வருகையை கண்டதுமே, அப்பாடா ஒருவழியா வந்து சேர்ந்துட்டான் என்று வாய்க்குள் முனுமுனுத்தவளின் அருகே வந்து, போகலாமா என்க., “அவளோ,


முகத்தை திருப்பிக் கொண்டு முன்னால் நடக்க, அடியாத்தி நம்ம மேல செம்ம காண்டுல இருக்கா போல இருக்கே வாயை திறக்கவே மாட்டேங்கிறா? இவளை தேடி நான் எங்கேயெல்லாம் அலைந்திருப்பேன், இவ என்னடானா முறுக்கிட்டு போறா… நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருந்தேன் திடிர்னு ஒரு நாள் என் முன்னால் வந்து ப்ராக்ஷன் ஆப் செகேன்ட்ல என்னை விழ்த்தியது மட்டும் இல்லாமல், இப்போ என்னை யாருனே தெரியாதவள் மாதிரியே ஓவரா ரியாக்ட் பண்றாளே, இவள என கையை ஓங்கவும், தேவா திரும்பவும் சரியாக இருக்க, ஓங்கியிருந்த கையை சந்தேகமாக பார்த்தவளை கண்டதுமே, தலை முடியை கோதியபடி அவளை தாண்டி வேகமாக சென்றவன் அடுத்த சில நிமிடங்களிலேயே தன் காருடன் வந்து நின்றான்.


காரின் முன் கதவை திறந்து விட்டு அவளை பார்க்க… அமைதியாக காரில் ஏறி அமரவும், காரை எடுத்தான் அர்ஜுன்.


சிறிது நேரம் காரில் அமைதியே நிலவியது. அவன் ஏதாவது பேசுவான், தன்னை கேட்பான் என்று நினைத்து காத்திருந்தவளுக்கு, அவனின் அந்த அமைதிக்கூட அவளின் மனதை வருத்த, அந்த அமைதியை தேவாவே கலைத்தாள்.


அன்னைக்கு என்ன நடந்துச்சின்னே தெரியாமல் அந்த பசங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணிட்டேன், உங்ககிட்ட சாரி கேட்க ரொம்ப நாளா காத்திட்டு இருந்தேன். அன்று நடந்ததை வச்சி என்னை தவறா நினைச்சிடாதிங்க… சாரி என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருக்க, “அவனோ


எந்த பசங்க என்று கூலாக கேட்டதுமே அதிர்ந்தாள் தேவா.
 
Last edited:
Top