என் வானம்-21
தேவாவின் கண்களில் இருந்த அதிர்ச்சியை பார்த்த அர்ஜுனுக்கு, ஏதாவது தவறா சொல்லிட்டேனா, என்று உள்ளுக்குள் நினைத்தவன், வெளியே முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, என்ன தேவா அமைதியாகிட்டிங்க என்று கேட்டான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன். நாம எதையாவது உளறி அவளுக்கு சந்தேகம் வந்துட்டா இந்த வேலையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான் அர்ஜுன்.
தேவாவுக்கு குழப்பமாக இருந்தது, அடப்பாவி அன்னைக்கு என்ன நடந்துச்சின்றதை கூட மறந்துவிட்டானா… எத்தனை நாளு நான் சரியா சாப்பிடாமல், தூங்காமல் என்னோட இயல்பை தொலைச்சிட்டு இருந்திருப்பேன். இவன் என்னடானா எல்லாத்தையும் மறந்துட்டு என்கிட்டையே கேட்கிறான் மங்கூஸ் மண்டையன் என்று மனதுக்குள் அவனை திட்டி தீர்த்தவள், வெளியே சிரித்து வைத்தாள்.
அடியே அறிவு கொழுந்தே, அன்னைக்கு நடந்த இன்சிடென்ட்டை அவனே மறந்துட்டானா சந்தோசப்படுறதை விட்டுட்டு, இப்படி புலம்பிக்கிட்டு இருக்க, அன்னைக்கு நடந்ததை நியாபகப்படுத்தி அதனால உன்னை தவறா எடுத்துக்கவும் வாய்ப்பு இருக்கு என்று மனசாட்சி சொல்லவும், அட ஆமால இது எனக்கு தோணாம போய்டுச்சே, அய்யய்யோ அப்போ நானா தான் வாயை விட்டேனா, தேவா சமாளிச்சிடு டி, என்று உள்ளுக்குள் இருந்து குரல் கேட்டதும், சரி சரி நீ அடங்கு நான் பார்த்துக்கிறேன் என்று தட்டி கொடுத்தவள், ஆஆ தலை ரொம்ப வலிக்கிது என்று இரண்டு கையாலும் தலையை அழுத்தி பிடித்துக் கொள்ள… தேவா என்னாச்சு ரொம்ப பெயினா இருக்கா நாம வேணா டாக்டரிடம் போகலாமா? பதற்றத்துடன் கேட்டவனிடம், வேண்டாம் வேண்டாம் என்றாள் தேவா. அவள் அப்படி சொன்னதுமே அர்ஜுனுக்கு சந்தேகம் உண்டானது.
அவன் முகத்தில் சந்தேகம் படருவதை கண்டவள், இல்ல எனக்கு ஊசினா பயம் வீட்டுல டேப்ளட் வச்சிருக்கேன் என்றாள் மெதுவான குரலில்…. ஓ அப்ப ஓகே இன்னும் கொஞ்ச நேரமே தான் வீட்டுக்கு போய்விடலாம் என்றவன், தேவாவின் வீட்டிற்கு போக வேண்டிய இடத்தை அவளிடம் தெரிந்து கொண்டு காரை விரட்டினான் அர்ஜுன்.
அப்பாடா என்று பெருமூச்சு விட்ட தேவா கண்ணை மூடி சீட்டில் தலையை சாய்த்து கொண்டாள்.
அடுத்த அறைமணி நேரத்தில் தேவாவை அவளுடை வீட்டில் இறக்கி விட்டவன் முக்கியமான வேலையிருப்பதாக சொல்லிவிட்டு சென்றிருந்தான்.
பாப்பா என்று வாட்ச்மேன் அழைத்ததும், என்ன அண்ணா? என்றாள் தேவா.
தனியா வந்து இருக்கியே பாப்பா அம்மா அப்பா என்று கேட்டதும், அவங்க வருவாங்க அண்ணா, நீங்க ஏதாவது சாப்பிட்டிங்களா என்று கேட்டு தெரிந்து கொண்டு வீட்டை தன்னிடம் இருந்த சாவியை கொண்டு திறந்து உள்ளே சென்றாள்.
இரவுடையை மாற்றிக்கொண்டு தன் மெத்தையில் விழுந்தவள் மொபைலை எடுத்து, இளாவிற்கு போன் செய்தாள்.
முதல் ரிங்கிலேயே எடுத்து ஹலோ என்ற இளாவிடம், அர்ஜுனை பார்த்தது பேசியது என அனைத்தையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தவளிடம், தேவா டு யூ லவ் ஹிம் என்று இளா நேரிடையாக கேட்டதுமே, தேவாவிடம் பதில் இல்லை.
அந்த பக்கம் இளா ஹலோ ஹலோ என்று கத்துவது கூட அவளுடைய காதை அடையவில்லை. நான் அவனை காதலிக்கிறேனா? என்று தன்னையே பலமுறை கேட்டுக் கொண்டவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை. ஐயோ இளா என்னை இப்படி குழப்பிட்டியே என்று புலம்பியவளுக்கு, மூச்சு அடைப்பது போல இருக்க பால்கனி கதவை திறந்து விட்டதும் குளிர்ந்த காற்று தேவாவின் மீது பட்டதும் மனம் சிறிது லேசாகியது.
இங்கே தேவாவின் நிலை இப்படி இருக்க, அர்ஜுனோ கிருஷ்ணாவுக்கு போன் செய்து தன்னுடைய விசாரணையை ஆரம்பித்து இருந்தான்.
அவனுக்கு தேவா வேறு எப்போது தன் அண்ணனை சந்தித்து இருப்பாள் அதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முடிவுடன் கேட்க? அவனுக்கோ தேவாவை பற்றிய நினைவு சுத்தமாக இல்லை.
அர்ஜு இப்போ என்ன ஆச்சின்னு என்னிடம் இப்படி கேள்வி கேட்கிறாய் என்று கேட்டதும், சொல்லலாமா வேண்டாமா என மனதுக்குள் பட்டிமன்றம் செய்துக் கொண்டிருந்தவன், இறுதியாக சொல்லியே கேட்போம் நாளை பின்ன தேவா இதை பற்றி பேசினால் இன்று போல முழித்துக் கொண்டிருக்க முடியாது என நினைத்தவன், விஷயத்தை சுருக்கமாக சொல்லி கேட்டதும், யோசிக்க ஆரம்பித்த கிருஷ்ணாவுக்கு, அந்த குழந்தைகள் விபத்தாக இருக்குமோ என நினைத்து, அன்று நடந்ததை சொல்ல, அனைத்தையும் பொறுமையாக கேட்டவனுக்கு, தேவாவின் தலையீடு இதுவாக தான் இருக்கும் என்று புரிந்துக் கொண்டவன், சரி அண்ணா பை என்க, அவனோ அர்ஜுனுக்கு வாழ்த்து சொல்லி அம்மாவிடம் போனை கொடுக்கவும், அர்ஜு என்று அம்பிகை அழைத்த நொடி தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மாம் ப்ளீஸ் அழாதிங்க..” அவன் உங்கள சீக்கிரமே புரிஞ்சிப்பான் என்று எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவருடைய கண்ணீர் நிற்கவில்லை.
கிருஷ்ணா உன் தம்பி என்னை மன்னிக்கவே மாட்டானா? என்னை அம்மான்னு கூப்பிட மாட்டானா என்று ஏக்கமாக கேட்க…
சீக்கிரமே உங்களை அவன் அம்மான்னு கூப்பிடத்தான் போகிறான் அதையும் நீங்க பார்க்கத்தானே போறிங்க என்ற கிருஷ்ணாவுக்கு தெரியவில்லை அப்படியொரு காலம் வரப்போவதே இல்லை என்று. தன்னுடைய வாழ்க்கையே மாறும் என தெரியாமல் விதியின் பார்வையில் வந்து விழுந்தான்.
அதே நேரம் கவியோ தன்னுடைய அடையாளத்தை மாற்றிக் கொண்டு, சிட்டி அவுட்டரில் இருக்கும் சாலையில் தன்னுடைய வண்டியை வேகமாக ஒட்டிகொண்டிருந்தாள்.
சாலையின் இரண்டு பக்கமும் மரங்களும் புதர்செடிகளும் மண்டி கிடக்க, அந்த பாதையில் இருந்து சற்று திருப்பி மலைக்கு செல்லும் சாலையில் வண்டியை விட்டவள் ஒத்தையடி பாதை போல இருந்த வழியில் இரண்டு பக்கமும் அடர்ந்த மரங்கள் இருந்தது.
வெய்யோனின் வெளிச்சம் இன்றி பகலே இருளாக காட்சியளித்துக் கொண்டிருக்க மனதில் இருந்த பயத்தை விரட்டியடித்தவள், சற்று உள்நோக்கி ஒதுக்குபுறமாக இருந்த வழியே தன்னுடைய வண்டியை ஒட்டிக்கொண்டு சென்றாள். சாலையில் இருந்து பார்த்தால் இங்கே இப்படி ஒரு பங்களா இருப்பதே எவருக்கும் தெரியாது அந்த அளவிற்கு மறைவாக இருந்தது.
ஏற்கனவே இரண்டு மூன்று முறை இந்த இடத்திற்கு வந்து எதுவுமே கிடைக்காமல் ஏமாந்து திரும்பியவளுக்கு இன்னைக்கு இங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டே ஆகணும் என்று தீர்மானமாக சொல்ல, இவ்வளவு நேரமும் அமைதியாக வந்துக் கொண்டிருந்தவன் மெதுவாக வாயை திறந்தான்.
நிலா இந்த ரிஸ்க் அவசியம் தானா என்று கேட்டவனை பார்த்து, இந்தர் உன்கிட்ட நான் பல தடவை சொல்லிட்டேன், கொஞ்ச நாளா நடக்கிற எதுவுமே சரியில்லை. யாரோ ஒருத்தன் பெருசா விளையாடிக்கிட்டு இருக்கான். அவன் யாரு என்னன்னு இப்போ வரைக்கும் ஒரு க்ளுவும் கிடைக்கல, ஆனால் இந்த வீட்டுக்கு வந்துட்டு போற ஆட்களை சில நாட்களா நானே பாத்துருக்கேன், அவங்க முகத்தை பார்த்தாலே சந்தேகமா இருக்கு. இந்த பங்களாவுல என்ன நடக்குதுன்னு இன்னைக்கு நான் தெரிஞ்சிகிட்டே ஆகணும் என்று சொல்லிவிட்டு, இந்தர் தடுக்க தடுக்க காதில் வாங்காமல் ஒரு பெரிய மதில் சுவரில் ஏறி உள் பக்கமாக குதித்தாள் கவிநிலா.
ஒரு கையில் பெப்பர் ஸ்ப்ரேயை வைத்துக் கொண்டவள் மற்றொரு கையில் மிக சிறய கேமராவை வைத்துக் கொண்டு, யாரேனும் இருக்கிறார்களா, என்று கண்களால் துலாவியபடியே அந்த பங்களாவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். எங்கும் காரிருள் சூழ்ந்திருக்க, வீட்டை நெருங்க நெருங்க வந்து கொண்டிருந்த வெளிச்சமும், சத்தமாக ஒலிக்கும் மேல்நாட்டு இசையும் கவியின் ஆர்வத்தை தூண்டியது. அதே நேரம் வீட்டை சுற்றி அடியாட்கள் கையில் கட்டையுடன் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு, அடுத்து எப்படி செல்வது என தெரியாமல் யோசிக்க ஆரம்பித்தாள்.
கவியை உள்ளே அனுப்பிவிட்டு கையை பிசைந்துக் கொண்டு நின்றான் இந்தர். அவனுக்கு கவியின் பத்திரிக்கை வேலை சுத்தமாக பிடிக்கவே இல்லை எனலாம். தான் யாரென்ற உண்மையை மறைத்து அவளிடம் பழகிக் கொண்டிருந்தான். தானும் உள்ளே போகலாமா வேண்டாமா என இருவேறு மனநிலையில் நின்றிருந்தவனுக்கு அவள் ஏதேனும் ஆபத்தில் மாட்டியிருந்தால் என்று நினைக்கும் போதே மூச்சு அடைப்பது போல இருக்க சுவர் ஏறி குதித்து விட்டான்.
மெதுவாக அடிமேல் அடிவைத்து நடந்தவனுக்கு, பேச்சுக் குரல் கேட்டதும், அங்கேயிருந்த புதர்களுக்குள் மறைந்து கொண்டு பேசுவதை கேட்க ஆரம்பித்தான்.
டேய் நல்லா தேடி பாத்தியா? யாரும் இல்ல தானே, நம்ம அய்யாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது இங்கே இருக்கிற மரங்களுக்கு நம்மல உரமா போட்டுடுவாரு என்றவனின் குரலில் இருந்த பயம் இந்தருக்கு தொற்றிக் கொண்டது.
ஐயோ இவனுக தேடுறது நிலாவையா? என்று மனதுக்குள் பதறியவன், கடவுளே என் நிலாவுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாதுப்பா அப்படி எந்த ஆபத்தையும் வரவிட மாட்டேன் என்று மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டே, இருவரையும் நெருங்க போனவனின் தோள் மீது திடிரென கையை வைக்கவும் திடுக்கிட்டு திரும்பியவனுக்கு உயிர் போய் உயிர் வந்தது.
ராட்சசி எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா? என்று முனுமுனுத்தவனிடம், இங்கே ஏன் வந்த? அங்கேயே இருக்க வேண்டியது தானே என்று கடிந்துக் கொள்ளவும், உன்னை தனியாக விட்டுட்டு நான் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் நிலாம்மா என்று உருகிய குரலில் கேட்டதும், அவன் பால் செல்லும் மனதை எப்போதும் போல கடிவாளமிட்டு கொண்டவள், இந்தர் இன்னும் அந்த முக்கியமான ஆளு இங்கே வரல, இன்னும் கொஞ்சம் இருட்டுற வரைக்கும் நாம காத்திருக்கணும், உன்னோட மொபைலே இருந்தால் வைப்ல போட்டுடு என்று எச்சரித்தவள், மறைவான இடத்துக்கு சென்று பதுங்கினர்.
ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என நேரங்கள் கடந்து கொண்டிருந்ததே தவிர, ஆட்களின் நடமாட்டம் மட்டும் குறையவே இல்லை. இப்போது வெளியே போனால் அவர்களிடம் கண்டிப்பாக மாட்டிக்கொள்ள நேரிடும் என்று நினைத்தவர்கள், விடியலுக்காக அங்கேயே காத்திருக்கலாயினர்.
அனால் முக்கியமான விஷயத்தை இந்தரிடம் கூட சொல்லாமல் மறைத்தாள் கவி ஒருவேளை அவனிடம் சொல்லியிருந்தால் வரப் போகும் ஆபத்தில் இருந்து தப்பித்து இருக்கலாம். ஆனால் அதை பற்றிய முழு விசாரணையை அடுத்த நாளே ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மனதுக்குள் எடுத்தவள் முடிந்தவரை இந்தருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவள்… தன் அம்மாவுக்கு மெசேஜை அனுப்பிய பிறகே நிம்மதியடைந்தாள்.
கவிநிலாவின் மனதில் இருப்பதை அறியாத இந்தரோ, அவளை எப்படியாவது ஆபத்து நிறைந்த பத்திரிக்கை வேலையில் இருந்து அகற்ற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தான்.
டேய் சீக்கிரம் போங்கடா சீக்கிரம் என்ற குரலை கேட்டு கண்விழித்த கவிநிலா தான் இருக்கும் நிலையை கண்டு தலையிலேயே அடித்துக் கொண்டாள், இந்தரின் கையணைப்பில் இரவெல்லாம் உறங்கியதை எண்ணி, அவள் முகம் குங்குமமாய் சிவந்து போனது. மெதுவாக அவனின் அணைப்பில் இருந்து நகர்ந்து சிறிது இடைவெளி விட்டு அமர, நிலா என்று திடுக்கிட்டு விழித்த இந்தர் அப்போது தான் தன்னையே பார்த்துக் கொண்டு மர்மமாக சிரித்தவளை கண்டு அசடு வழிந்தான்.
சாரி என்றான் தலையை கவிழ்த்துக் கொண்டு, அவளோ ஏன் என்று கேட்க? அவனோ பதில் சொல்லாது மவுனமாய் இருக்கவும் அவளே தொடர்ந்தாள்.
இந்தர் நீ இதுல சாரி சொல்றதுக்கு அவசியமே இல்ல, நீ எனக்கு ஒரு பாதுகாவலான தான் இருந்தாய், நீ இருக்கிற தைரியத்தில் தான் நானே நல்லா தூங்கியிருக்கேன், இன்பாக்ட் நீ எனக்கு நல்ல துணையாக தான் இருந்த என்று சொன்னவள், ஏதோ சத்தம் கேட்டதை தொடர்ந்து ஷு என்று தன் வாயில் கையை வைத்து எச்சரித்தாள்.
இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கணுமா நிலா என்றான் ஒரு மாதிரிகுரலில்,
அவனின் குரல் மாறுபாட்டை கண்டும் காணாமல், இன்வெஸ்டிகேஷன் ஜேர்னலிசம்னா சாதாரணமா நினைச்சியா இந்தர்?
கவி அப்படி ஒரு கேள்வியை கேட்டதும், அவனால் வாயை திறக்க முடியவில்லை. உனக்கு ஏதாவது ஆனா என்று சொல்லும் போதே அவனுடைய குரல் கரகரத்தது.
அது எதனால் என்று தெரிந்தாலும், என் உயிரே போனாலும் உண்மைக்காக நான் போராடுவேன் இந்தர், என்றவள், உன்னால எனக்கு துணையிருக்க முடிந்தால், என்னோடு வா இல்லனா உன்னோட ரூட்டை பார்த்துட்டு போ என்று முகத்திலடித்தார் போல சொல்ல அவனோ அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
மாம் எதுக்கு வெளியே போயிட்டு போயிட்டு வரிங்க அப்பறம் மொபைலை வேற எடுத்து பார்த்துட்டே இருக்கீங்க” என்ற தேவாவிடம்,
சாப்பிட்டில காலேஜிக்கு கிளம்பி போய்கிட்டே இரு ஏற்கனவே நான் டென்சன்ல இருக்கேன் என்று சொல்லிவிட்டு தலையில் கையை வைத்துக் கொண்டு சோபாவில் அமர.
“ம்மா, இப்போ என்ன ஆச்சு என்று அவருடைய தலையை பிடித்து விட, குணாவின் கண்கள் கலங்கியது. அதை தன் மகள் அறியாதவாறு துடைத்துக் கொண்டவர், தேவா அம்மாவுக்கு ஒன்றுமில்லை நீ காலேஜிக்கு போடா டைம் வேற ஆகிட்டு என்று சொல்லவும், வேற எந்த பிரச்சனையும் இல்ல தானே ம்மா” என்று இரண்டு மூன்று முறை கேட்கவும்,
ஏய் ஒரே கேள்வியை எத்தனை தடவை கேட்ப அம்மாவுக்கு ஒன்றும் இல்லை என்று சீறவும்,
“ம்ஹும், நீங்க கோபப்படுறதை பார்த்தால், சம்திங் சம்திங் போல இருக்கே மிஸ்டர் இளவேந்திரன் வீட்டுக்கு வரட்டும் கவனிச்சிக்குறேன், இந்த வீட்டுல என்னமோ நடக்குது, ஆனால் என்கிட்டே சொல்லாமல் மறைக்கிறீங்க” என்று எச்சரித்துவிட்டு செல்லவும், கவி வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது.
“ஹாய் அக்கா, இது என்ன இப்படி ஒரு காஸ்ட்டியும், என்று கவியை பார்த்து கேட்டவள், வீட்டின் பக்கம் எட்டிபார்த்து, மம்மி ரொம்ப ஹாட்டா இருக்காங்க” ஏன்னு தான் எனக்கு தெரியல? என்று உதடு பிதுக்கிய தங்கையை பார்த்து, நான் போய் பார்க்கிறேன் நீ பத்திரமா காலேஜிக்கு போயிட்டு வா என்றதும்,
பைக்கா என்றவள் தன் வண்டியில் ஏறி பறந்தாள்.
காலேஜிக்கு சென்றாலும் முழு மனதோடு எதையுமே கவனிக்க முடியாமல் தனக்குள் உழன்று கொண்டிருந்தாள் தேவா. அம்மா அக்கா அர்ஜுன் என மூவரையும் பற்றி யோசித்து யோசித்து குழம்பி தவித்தாள். இதற்கு மேலும் தன்னால் வகுப்பில் அமர முடியாது என்ற நிலைக்கு வந்த தேவா இளாவை பார்த்து, இந்த கிளாஸ் முடிந்ததும் என்னோடு வெளியே வரனும் என்று சொல்ல,
எங்கே டி? ஏன்? என்னால கட் அடிக்க முடியாது என சொல்லிக்கொண்டிருக்க அதை காதில் வாங்காமல் இருந்தாள் தேவா.
அடுத்த சில மணி நேரத்தில் தன் கையில் இருந்த பேக்கால் தேவாவை மொத்திக் கொண்டிருந்தாள் இளா. எரும எரும நீ நினைச்சதை சாதித்து விட்டாய், இப்போ என்ன ஆச்சி? உன் முகம் ஏன் டல்லா இருக்கு என்று அடிப்பதை நிறுத்திவிட்டு கேட்டாள் இளா.
“நேற்று அக்கா, எங்கே போனாள்?, நைட் கூட வீட்டுக்கு வரவே இல்ல, எங்கே போயிருப்பா என்று சொல்லிக்கொண்டிருக்க… தேவா இதை பத்தி பேசத்தான் தனியா அழைச்சிட்டு வந்தியா, காலையில் காலேஜிக்குள்ள வந்ததில் இருந்து இதை தானே நீ கேட்கிற” இதோட நீ இதை நூறு தடவையாவது சொல்லிருப்ப தெரியுமா? என்று அழுகுரலில் சொன்னவளை பார்த்து,
“இளா, அக்கா எங்கே போனான்னு அம்மாவுக்கு தெரியும்னு நினைக்கிறேன், காலையில் இருந்து வாசலுக்கும் வீட்டுக்கும் எத்தனை, நடை நடந்துருப்பாங்கன்னு உனக்கு தெரியுமா? அப்பா கேட்டப்போ கூட எதையோ சொல்லி சமாளிச்ச மாதிரி தான் இருந்தது. என் அக்கா, அம்மாவுக்கு தெரியாமல் எங்கேயும் போனதே இல்லை.
அக்கா போன இடம் அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கும் ஆனால் வாயே திறக்கல, வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கணும் என்று முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னவளை பார்த்து முறைத்த இளா, நீ பேசி முடிச்சிட்டியா இன்னும் இருக்கா என்க,
ஏண்டி நான் எவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கேன் உனக்கு காமெடியா இருக்கா என்று இளாவை துரத்த ஆரம்பித்தாள் தேவா.
அவளிடம் இருந்து தப்பித்து வேகமாக ஓடிய இளா, தேவா வருகிறாளா என்று எட்டி பார்க்க, என்கிட்டே இருந்து உன்னால தப்பிக்க முடியுமா? என்று மனதுக்குள் சொல்லியவள், இளாவின் காதை பிடித்து திருக, ஆ விடுடி விடுடி எரும மாடு இல்ல நீ பண்ற போர்ஜரி வேலைய அம்மாகிட்ட சொல்லிடுவேன் என்று மிரட்டியதுமே இளாவை விட்டவள், நீ மிரட்டினதுனால உன்னை விட்டேன்னு நினைக்காதே, போனா போகுதுன்னு தான் விட்டேன் என்று சொல்லவும், நம்பிட்டேன்டி என்று சிரித்தாள் இளா.
நாட்கள் விரைவாக சென்றது. தேவாவின் மனம் இளா கேட்ட கேள்வியை பற்றியே அசைப்போட்டு கொண்டிருந்தது. அவனை பார்க்க வேண்டும் என்று எந்த முயற்சியும் "அவளும்" செய்யவில்லை, "அவனும், செயல்படுத்தவில்லை இருவருமே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க விதியோ தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.