என் வானம்-23
தேவாவின் அக்கா கவிநிலாவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தது கிருஷ்ணாவே தான், இரண்டு வாரங்களாக பேசாமல் இருக்கும் தம்பியை சமாதானப்படுத்துவதற்கும், இன்னும் மூன்று மாதங்களில் வரவிருக்கும் தங்களுடைய இருபத்தியைந்தாவது பிறந்தநாளை பற்றி பேசுவதற்காகவே கோயம்புத்தூருக்கு வந்ததே, ஆனால் அர்ஜுன் அண்ணனிடம் பேசாமல் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு தன்னுடைய கம்பெனிக்கு செல்லவும், எப்படி தன் தம்பியை சம்மதிக்க வைப்பது என்று யோசித்து யோசித்து மண்டை சூடாகவும், வீட்டில் இருக்கவே மூச்சு முட்டுவது போல இருக்க தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு ஊரையே சுற்றிக் கொண்டிருந்தான்.
மனம் போன போக்கில் இலக்கின்றி எங்கே போகிறோம் என்று தெரியாமலேயே சுற்றிக் கொண்டிருக்கும் போது தான், திடிரென்று விபத்தை நேரிடையாக பார்க்க நேர்ந்தது. அந்த லாரிக்காரன் வேண்டுமென்றே மோதியது போல தான் தோன்றியது கிருஷ்ணாவுக்கு, இப்போது தான் செய்ய வேண்டியது அடிப்பட்டுக்கிடக்கும் பெண்ணின் உயிரை காப்பாற்றுவதே முக்கியம் என்று முடிவெடுத்தவன் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தான். கவிநிலாவை அட்மிட் செய்த பிறகு சற்றும் தாமதிக்காமல் போலீசுக்கும் தகவலை சொல்லியிருந்தான்.
அவர்களும் அடுத்த சிலமணி நேரங்களில் மருத்துவமனைக்கு வர, அவர்களிடம் விபத்து நடந்த இடம், மற்றும் லாரியை பற்றி தனக்கு தெரிந்த தகவலை சொல்ல, அவர்களும் அதை குறிப்பெடுத்துக் கொண்டு உடனே விசாரணை செய்வதாக சொல்லிவிட்டு சென்றனர். கிருஷ்ணாவும் தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று வெளிப்படுத்திக் கொள்ளவில்லை அதற்கான காரணத்தை அவனே அறிவான்.
போலிஸ் விசாரணையை முடித்துக் கொண்டு செல்லவும் அர்ஜுனிடம் இருந்து போன் வரவும் சரியாக இருந்தது. அந்த நேரம், வரும் வழியில் ஆக்சிடென்ட்டை பார்த்தேன் என்று சொல்லிமுடிப்பதற்குள் துண்டிக்கப்பட, சரி அவன் வந்த பிறகு பேசிக்கலாம் என்று நினைத்தவன், மற்ற வேலையை கவனித்தான்.
தன் அண்ணனுக்கு தான் அடிப்பட்டு இருக்கிறதோ என்று பதறியடித்துக் கொண்டு, வந்தவன் தேவாவை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
தன் முகத்தில் இருக்கும் அதிர்ச்சியை சட்டென மறைத்துக் கொண்ட அர்ஜுன், அண்ணா என்று அழைக்க, நிமிர்ந்த கிருஷ்ணாவோ,
டேய் சீக்கிரமா டாக்டரை கூப்பிடு இந்த பொண்ணு என்னமோ சொல்ல ட்ரை பண்ணா, சொல்லாமலேயே மயங்கிட்டா, ஒன்னு ரெண்டு வார்த்தை ஏதோ சொன்ன மாதிரியே இருந்துச்சி ஆனால் எனக்கு எதுவுமே புரியல, நீ சீக்கிரமா டாக்டரை கூப்பிடு அர்ஜு என்றவன், தேவாவை தூக்கியபடியே அறை ஏதேனும் காலியாக இருக்கிறதா என பார்த்துக் கொண்டே நடந்தான்.
ஐயோ இப்ப என்ன செய்றது என்று மனதுக்குள் புலம்பியபடியே டாக்டரை அழைக்க சென்றான் அர்ஜுன். அதே நேரம் காலியாக இருந்த அறையில் தேவாவை படுக்கவைத்து விட்டு, வெளியே வந்து அர்ஜுனை எதிர்பார்த்துக் கொண்டு நின்றான்.
அர்ஜுன் டாக்டரோடு வரவும், டேய் நீ இந்த பொண்ணை பார்த்துக்க நான் எமெர்ஜென்சி வார்டுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு அர்ஜுனின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் போகவும், அப்பாடா ஜஸ்ட் மிஸ் என்று பெருமூச்சு விட்டான்.
டாக்டர் தேவாவுக்கு எப்படி இருக்கு என்று பதற்றத்துடன் கேட்ட அர்ஜுனிடம், நத்திங் டூ வொரி ஷாக்ல தான் மயங்கிட்டாங்க என்றார் டாக்டர்.
தேங்க்ஸ் டாக்டர் தேங்க் யூ சோ மச் என்று அவரின் கையை பிடித்து குலுக்கவும், சிரித்துவிட்டு சென்றார்.
அதே நேரம் அர்ஜுனின் போன் ரிங்காகவும், அந்த சத்தம் கேட்டு மெதுவாக தன் கண்ணை திறந்தாள் தேவா.
அவள் மயக்கம் தெளிந்ததை அறியாத அர்ஜுன், ஹான் சொல்லுண்ணா,
………????
ம்ம் அந்த பொண்ணு நல்லா இருக்காங்க..” டாக்டர் செக் பண்ணிட்டார், ஹான் ஏதோ அதிர்ச்சில மயங்கிட்டதா சொன்னார் வேற எதுவும் இல்ல.
……
ம்ம் சரி நான் பார்த்துக்கிறேன் நீங்க நேரா நம்ம வீட்டுக்கே வந்துடுங்க என்று சொல்ல, அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, இதுக்கு நீ வராமலேயே இருந்திருக்கலாம் என்ற அர்ஜுனின் குரலில் கோபம் அதிகமாக இருந்தது. அந்த கோபத்தில் தொடர்பை துண்டித்துவிட்டு திரும்பியவன், கலங்கிய கண்களோடு தன்னையே பார்த்தபடி இருந்த தேவாவை பார்த்ததும், தேவ் என்னாச்சி? ஏன் மயங்கிட்ட? என்று கேட்க,
அர்ஜு அ அ ங்கே எமர்ஜென்சி, வா வா ர்டுல, தன்னவளின் கண்களில் இருந்து வழிகின்ற கண்ணீரை துடைத்து விட்டவன், பேச முடியாமல் கஷ்டப்படுவதை கண்டு உள்ளுக்குள் துடித்து போனவன், என்ன தேவ் சொல்ல வர, பொறுமையா அழாமல் சொல்லுடா என்று தனக்காக உருகியவனை கண்டுக்கொள்ளும் நிலையில் தேவா இல்லை.
தேவா எமெர்ஜென்சி வார்டுக்கு தானே வந்திருக்கா அப்போ அங்கே அட்மிட் பண்ணிருக்கிற பெண்ணை தெரியுமா என்று மனதுக்குள் நினைத்தவன், அதை அவளிடமே கேட்டு தெளிவு பெரும் பொருட்டு, தேவ் என்ன பாரு நீ சொல்ல வரது எமெர்ஜென்சி வார்டா என்று அவளை பார்த்து கேட்கவும் வேகமாக தலையை ஆட்டினாள் தேவா.
இப்போ அட்மிட் பண்ண பொண்ணை உனக்கு தெரியுமா என்று அதிர்ச்சியுடன் கேட்க, ம்ம்ம் என்று மேலும் கீழுமாக தலையை வேகமாக ஆட்டிய தேவாவை அழைத்துக் கொண்டு போனான்.
அவர்கள் எமெர்ஜென்சி வார்டை நெருங்கும் நேரம், டாக்டர் வெளியே வந்தார், டாக்டர் அந்த பொண்ணுக்கு இப்போ எப்படி இருக்கு என்று கேட்க, அவர் சொல்ல போகும் பதிலை கேட்க பதற்றத்துடன் அர்ஜுனின் கையை இறுக பற்றிக் கொண்டு நின்றிருந்தாள் தேவா.
நவ் ஷி ஈஸ் ஆல்ரைட் காலிலும் கையிலும் பிராக்ட்ச்சர் ஆகிருக்கு, நீங்க சீக்கிரமா வந்து அட்மிட் பண்ணதால ப்ளட் லாஸ் ஆகல, இல்லன்னா கொஞ்சம் கிரிட்டிகலாகிருக்கும், இன்னும் டூ அவர்ஸ் அவங்கள அப்சர்வேஷன்ல தான் வைக்கணும், தலையில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுத்து பார்த்துட்டா போதும், என்று சொல்ல, டாக்டர் நாங்க அவங்கள பார்க்கலாமா என்று அர்ஜுன் கேட்டதும்,
நோ மிஸ்டர் கிருஷ்ணா வார்டுக்கு மாற்றியபிறகு பார்க்கலாம் இப்போ நீங்க உள்ளே போக முடியாது என்று சொல்லிவிட்டு சென்றார் டாக்டர்.
உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிந்ததுமே, கண்களை மூடி கடவுளுக்கு நன்றியுரைத்தவள், நா பயந்தே போயிட்டேன் அர்ஜு, அடிப்பட்டது என் அக்காவா இருக்குமோ என்னமோன்னு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சார் பேசன்ட்டோட திங்க்ஸ் இதுல இருக்கு என்று ஒரு கவரை கொடுக்கவும் அதை வேகமாக பார்த்த தேவாவின் கைகள் நடுங்கியது. இ இ து என் அக்காவோட செயின் தான், என்றவள் டாலரை திறந்து அதிலிருந்த போட்டோவை காட்டினாள் தேவா. இதே மாதிரி தான் என்னோட செயின்ல இருக்கும் என்றவள், அதை அர்ஜுனிடம் காட்டவும் செய்தாள். அச்சு அசலாக ஒரே மாதிரி இருந்ததை பார்த்த அர்ஜுன், தேவாவிடம் திரும்பி உனக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆனா விஷயம் தெரியும் என்று கேட்டான்.
அவளும் நடந்ததை சொல்ல அதை கேட்ட அர்ஜுனோ உள்ளுக்குள் அதிர்ந்தான். ஆஹா கொஞ்சம் நான் லேட்டாகிருந்தால் கூட நாங்க டிவின்ஸ்னு தெரிஞ்சிருக்குமே, நானும் வசமா சிக்கிருப்பேனே, நல்ல வேலை அப்படி எதுவும் நடக்கல என்று மனதுக்குள் நிம்மதியடைந்தவன், தேவாவை பார்க்க அவளோ திரும்ப திரும்ப யாருக்கோ போன் செய்து கொண்டிருப்பதை பார்த்தவன், தேவ் யாருக்கு போன் பண்ற?
அர்ஜு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கால் கணக்ட்டே ஆக மாட்டேங்குது என்றவளின் முகத்தில் பயம் அதிகமாக இருந்ததை கண்ட அர்ஜுன், மொபைல் கணக்ட் ஆகலைனா என்ன? லேன்ட் லைனுக்கு ட்ரை பண்ணு தேவ் என்ற அர்ஜுனை முறைத்தாள். தேவாவின் பயத்தை போக்குவதற்கு சொன்னாலும் அவன் மனதுக்குள்ளும் நெருடலாக தான் இருந்தது.
ஐயோ அர்ஜு அப்பாவும் அம்மாவும் மாசாணி அம்மன் கோவிலுக்கு போயிருக்காங்க, அக்காவுக்கு ஆக்சிடென்ட் ஆனதை சொல்ல தான் போன் பண்ணேன், ஆனால் அவங்களுக்கு போன் ரீச் ஆகவே மாட்டேங்குது என்று சொன்னவளின் குரலில் தவிப்பும் பயமும் இருப்பதை கண்டவன், தேவ் அவங்க வீட்டுக்கு வந்த பிறகு சொல்லிக்கலாம் நீ இப்போவே சொன்னா பயந்துடுவாங்க, அதனால தான் சொல்கிறேன் என்று தேவாவை அமைதிப்படுத்த முயன்றான்.
அர்ஜுன் சொன்னது அவளுக்கும் சரியெனப்பட, வார்டுக்கு வெளியே எப்போது தன் அக்காவை பார்ப்போம் என்று காத்திருந்தாள். இப்போது வரைக்கும் அது ஏதேச்சையாக நடந்த ஒரு விபத்து என்றே தேவாவும் அர்ஜுனும் நம்பினர், கிருஷ்ணாவுக்கு நெருடல் இருந்தாலும் அவன் அவசர வேலைக் காரணமாக உடனே சென்னை போகவேண்டிய நிலை ஏற்பட்டதால் அர்ஜுனிடம் போனில் தகவலை சொல்லிவிட்டு சென்றிருந்தான். ஒருவேளை அவன் இங்கே இருந்திருந்தாலோ அல்லது கவியின் விபத்தின் மீது சந்தேகம் வந்திருந்தாளோ, இதற்கு பிறகு நடந்த எதுவுமே நடந்திருக்காது. அர்ஜுனும் இறந்திருக்க மாட்டான். இதை தான் விதி என்று பெரியவர்கள் சொல்கின்றார்களோ!!!.
அதே நேரம் தான் இளவேந்திரன்,கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்தவர், தன் கை கால்கள் இரண்டையும் அசைக்க முடியாமல் போகவும், ஏன் நம்ம காலு மரத்து போன மாதிரி இருக்கு என்றபடியே தன்னை ஆராய்ந்தார். தான் நாற்காலியோடு சேர்த்துக் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்தவர், சுற்றிலும் யாராவது டேய் யார்டா நீ? ஏண்டா எங்களை கடத்தினாய், என் மனைவி எங்கடா? டேய் நான் யாருன்னு தெரியுமா உனக்கு என்று சத்தமாக கத்தியவரை பார்த்தபடியே உள்ளே நுழைந்தவனின் கையிலோ வறுத்த சிக்கன் லெக் பீஸ் பாதி கடித்து தின்ற நிலையில் இருந்தது.
டேய் நல்லா பாருங்கடா கிழட்டு சிங்கத்தை” என்று நக்கலாக சிரித்தவனை பார்த்து அதிர்ந்தார்.
நீயா? என்று அவரின் உதடுகள் உச்சரித்ததை கண்டவன் பேய் சிரிப்பு சிரித்தான். என்னய்யா இளவேந்திரா எப்படி இருக்க? நாற்காலி ரொம்ப வசதியா இருக்கா” என்று கேட்டவனோ, சிக்கன் லெக்ப்பீசை கடித்து மாடு போல மென்றபடியே, அவரை நெருங்கிக் கொண்டிருந்தான்.
“டேய், உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே கடத்திருப்ப, எங்கடா என் குணா? சொல்லுடா சொல்லு…” அவளுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சி உன் சாவு என் கையில தாண்டா, என்று கத்தியவர் தன் கைகளை கயிற்றில் இருந்து அவிழ்க்க போராடிக் கொண்டிருந்தார்.
டேய் கிழட்டு சிங்கம் உன்னால என்னை என்ன பண்ண முடியும், இப்போ நான் நினைச்சா, கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கிற உன் பொண்ணு உசுர பரலோகத்துக்கு அனுப்பி வச்சிடுவேன் என்று மெதுவாக அவர் தலையில் இடியை இறக்கினான்.
வாட்? இவ்வளவு நேரமாக இருந்த தைரியம் மறைந்து, டே… டேய் நீ நீ என்ன சொல்ற?
என்ன இளவேந்திரா இப்போவாவது நான் யாருன்னு தெரிஞ்சிக்கிட்டியா? நான் கேட்கும் போதே நீ கொடுத்துருந்தா இன்னைக்கு உனக்கு இந்த நிலை வந்திருக்காது என்றவனை பார்த்து, எஸ் நீ சொல்றது கரெக்ட். உன்னை பற்றி தெரிஞ்ச உடனே நான் அமைதியா இருக்காமல், உன்னோட நரித்தனத்தை நான் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருந்தால் இன்னைக்கு இந்த நிலை எனக்கு வந்திருக்காது என்று சொன்னவரை பார்த்து, சிரித்தவனின் முகத்தில் கடுமை ஏறியது.
டேய் என்று சத்தமாக கத்தவும், பாஸ் என்றபடியே முன்னால் வந்து நின்றவனிடம் கண்ணை காட்ட, அடுத்த நிமிடமே பொருளை எடுத்து நீட்டினான்.
கூர்மையான வாளை பார்த்ததுமே இளவேந்திரனின் உடல் நடுங்கியது.
ப்ச் நான் உன்னை எதுக்கு கடத்தினேன்னு தெரிஞ்சும், என்கிட்ட பயமில்லாமல் பேசுறியே உன்னை என்ன செய்யலாம் இளவேந்திரா என்று கேட்டப்படியே, அவரை நெருங்கினான் அவன்.
இதால ஒரு கோடு போட்டா இந்த வாய் திமிரா பேசாதுல்ல என்றவாறே முகத்தின் அருகே கொண்டு சென்றான். இளவேந்திரனுக்கோ இவ்வளவு நேரம் இருந்த தைரியம் காற்று போன பலூன் மாதிரி ஆனார்.
ஊரெல்லாம் உன் மகள் என்னை பற்றி தோண்டி துருவிட்டு இருக்காளே, அவளுக்கு உன்னை பற்றி தெரியாமல் போயிடுச்சி பார் என்று சொல்லிவிட்டு சிரித்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தார்.
நீ நீ என்ன சொல்ற? எ என் மகள் என்று முடிக்கும் முன்னரே, ஆமான்டா உன் மகள் தான், மோப்ப நாய் மாதிரி என்னைப்பற்றி இரகசியமா விசாரணை நடத்திட்டு இருக்கா, ஏன்டா உன் பொண்ணுக்கு வேற வேலையே இல்லையா? இதோ பார் உன்னோட ஸ்பின்னிங் மில்லையும், அந்த ரிசார்ட்டையும் எனக்கு கொடுத்துட்டு போய்கிட்டே இருக்கனும், எல்லாத்தையும் உன்கிட்டே இருந்து உறுவிடனும்னு தான் நினைச்சேன் போனா போகுதுனு விட்டுட்டேன்… அதோட இப்போ உன் மகளை படுக்கையில தான் போட்டுருக்கேன், இதுக்கும் மேல என் விசயத்துல தலையிட்டானு வச்சிக்க உன் குடும்பத்துல ஒரு உசுரு கூட தங்காது வேறோட அறுத்தெரிஞ்சிடுவேன் என்று கர்ஜித்தவன், இளவேந்திரனின் ரிசார்ட்டையும், ஸ்பின்னிங் மில்லையும் அவனுடைய பெயருக்கு மாற்றிய பிறகே, எப்படி கடத்திக் கொண்டு வந்தானோ அதே போல கொண்டு விட்டுவிட உத்தரவிட்டான்.
மயக்கம் தெளிந்து எழுந்த போது, தங்களுடைய காரில் இருப்பதை கண்டு, அதிர்ந்த குணமதி, இதற்கு முன் நடந்தவைகளை கனவென்று மனதுக்குள் நினைத்தார். ஆனால் இளவேந்திரனுக்கு அப்படி இல்லை அனைத்தும் அவனுடைய சதி திட்டம் என்று மனதுக்குள் நினைத்தவர், மயக்கத்தில் கிடந்த டிரைவரின் முகத்தில் தண்ணீரை தெளிக்கவும், ஐயா என்று பதறிக் கொண்டு எழுந்தவன், அம்மா அய்யா ரெண்டு பேரும் நல்லாருக்கீகளா!! அந்த வண்டி, ரவுடிங்க என்று சொல்ல ஆரம்பிக்கவும்,
டேய் சீக்கிரம் வண்டியை வீட்டுக்கே திருப்பு மத்ததை அப்புறம் பேசலாம் என்று கத்தரித்தவர், மனைவியிடம் திரும்பி, குணா என் போன் எங்கே? என்று கேட்டுக் கொண்டிருக்கும் நேரம் காலுக்கு அடியில் இருந்து போன் ரிங்காகும் சத்தம் கேட்டதும், இதோ கிடக்கு பாருங்க என்ற குணமதி தானே எடுத்து கணவனிடம் கொடுத்தவர்…. யாருங்க? என்று கேட்ட மனைவியிடம்,
தேவா தான் என்றவாறே ஆன் செய்து காதில் வைத்த நொடி, மகள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்தவர், அடுத்து தேவா சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து போனார். தன்னை பயமுறுத்துவதற்காக சொல்லியிருப்பான் என்று நினைத்து தன் மனதை சமாதானம் செய்து இருந்தவருக்கு தேவா சொன்னதை கேட்டதும், கண்கள் கலங்கிவிட்டது.
இளைய மகள் நினைப்பது போல கவிக்கு நடந்தது விபத்தாகவே நினைக்கட்டும், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை முயற்சி என்று தெரிய வேண்டாம் தெரியவந்தால் மனைவியும் மகளும் பயந்துவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்தவர், கார் டிரைவரை மருத்துவமனைக்கு போக உத்தரவிட்டார்.
என்னங்க என்னாச்சு? ஏன் ஹாஸ்பிடலுக்கு போக சொன்னிங்க? யாருக்கு என்ன நடந்தது? என்று பதற்றமடைந்தார்.
குணா குணா காம்டவுன், இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற… " யாருக்கும் ஒன்றும் இல்ல என்று சொன்னவரின் முகத்தை பார்த்து, எப்போதிருந்து என்கிட்டே பொய் சொல்ல ஆரம்பிச்சிங்க இளா என்று கேட்டு கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
மனைவியின் கண்களை சந்திக்க முடியாமல் தடுமாறிய இளவேந்திரன் சுருக்கமாக சொல்ல, கணவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் மயங்கினார் குணமதி. மயங்கிய குணமதியை சுயத்திற்கு கொண்டு வந்த இளவேந்திரன் கவி நலமாக இருப்பதை சொல்லி, மனைவியை தேற்றினார்.
என்னங்க நான் இப்போவே என் மகளிடம் போகனும் சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு போக சொல்லுங்க என்று அழுதவரை தட்டிக் கொடுத்தவர், டிரைவருக்கு உத்தரவீட்டார்.
கவிநிலாவை இரண்டு மணி நேர அப்சர்வேஷனுக்கு பிறகு நார்மல் வார்டுக்கு மாற்றினார்கள். அக்காவின் முகத்தையே பார்த்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தேவாவை பார்த்த அர்ஜுனின் மனம் வலிக்க, அவளை வெளியே அழைத்து வந்தவன் தன் மனதை அரித்து கொண்டிருந்ததை அவளிடம் கேட்டே விட்டான்.
தேவா உன்கிட்ட என்ன சொன்னேன் நீ என்ன செஞ்சி வச்சிருக்க' அர்ஜுனின் வார்த்தையில் கடுமை இருப்பதை கண்ட தேவாவோ,
இல்ல அர்ஜு, எப்படி இருந்தாலும் தெரிய தான் போகிறது. அதான் இப்போவே சொல்லிட்டேன். அப்பா கிட்ட பொய் சொல்ல முடியாது என்றவளின் கண்கள் கலங்கியது.
அதான் உன் அக்காவுக்கு எந்த ஆபத்தும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரே பிறகு என்ன கவலை,
ஆ ஆனால் அவள் கையும் காலும் உடைந்திருக்கிறதை பார்க்கும் போது ரொம்ப வலிக்கிது அர்ஜு என்று நெஞ்சில் கைவைத்து அழுதவளை பார்த்து அதிர்ந்து நின்றான் அர்ஜுன்.