♥என் வானம்♥-3
ம்மா இன்னமும் இது தேவையா? என அருகில் நின்றிருக்கும் தேவாவின் காதில் விழாதாவாறு அர்ஜுன் மெதுவான குரலில் அம்பிகையிடம் கேட்கவும்!!
எதை கேட்கிற அர்ஜுன் என்று புரியாமல் கேட்ட தன் அம்மாவிடம், இதைத்தான் என கண்களால் காண்பித்தான்.
தன் கழுத்தில் இருந்த மாலையையும் நெற்றியில் இருந்த பட்டத்தையும் சுட்டிக் காட்டிய மகனிடம்,
நோ வே ஆதி!! இப்போதைக்கு நீ இத கழட்ட கூடாது. வீட்டுக்கு போய் சேரும் வரைக்கும் இப்படியே தான் இருக்கனும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்தார்…
கீழே குனிந்தபடி அம்மா மற்றும் பிள்ளையின் பேச்சை கேட்ட தேவாவின் உதட்டில் சிறு புன்னகை வெளிப்பட அர்ஜுனின் முகம் இருண்டது.
தன்னவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க துடித்த மனதை கட்டுப்படுத்தியவளுக்கு முடியாமல் போகவும், ஓரவிழியால் அர்ஜுனின் முகத்தை பார்த்த தேவாவின் முகத்தில் இதுவரை ஒட்டியிருந்த புன்னகையும், மறைந்தது.
டேய் அர்ஜு நீ ரொம்ப பன்றடா? என் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க மாட்டேங்கிற, அவ்வளவு கோபமா என்மேல, "உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுனு தானே நான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன் என நினைக்கும் போதே, அன்றைய நாளின் நினைவில் அவளுடைய பூ உடல் நடுங்க" இதயத்தின் ஓரத்தின் தாங்க முடியாத வலியை உணர்ந்தவளின் பார்வை தன் நெஞ்சில் தொங்கிக் கொண்டிருக்கும் பொன் மஞ்சள் தாலியை பார்த்ததும், தேவாவின் இதழ் புன்னகையை சிந்த கூடவே அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் இரண்டு விழுந்தது.
அர்ஜுவின் முகத்தை ஏக்கமாய் பார்த்தவள், ஒரு முறை ஒரே முறை எனக்காக எல்லாமாமும் நீ இருப்பேன்னு வாயால சொல்ல வேண்டாம் அர்ஜு! உன்னோட ஒற்றை பார்வையே போதும்டா, என மானசீகமாய் தன்னவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் தேவா.
தேவா!! ஏய் தேவா?? என்ற இளாவின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவளோ, என்ன என்பதாய் அவளை பார்க்க, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்தபடி என்னடி இது கண்ணை திறந்துக் கொண்டே கனவு காண்கிறாயா? என கேட்க, தேவாவின் முகம் அந்திவானமாய் சிவந்தது.
டேய் அர்ஜுன் அண்ணா, உன் பொண்ணாட்டியை பாருடா!! ரூஜ் போடாமலேயே அவளோட கண்ணம் எப்படி சிவந்து இருக்குனு பார்த்தியா? என அமைதியாக நின்றிருந்தவனை பார்த்து இளா கேட்கவும்,
அய்யோ வேலில போற ஓனானை எடுத்து வேட்டில விடுவாங்களாம் அந்த மாதிரி, சிவனேனு அடங்கி இருக்கிறவனை உசுப்பேத்துறாளே, இவளை!!! என தன் மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தான் சந்தோஷ்.
இளாவின் பேச்சை தட்ட முடியாமல் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு தேவாவின் முகத்தை பார்த்த அர்ஜுன் இமைக்க மறந்தான். அவள் கழுத்தில் தான் கட்டிய புத்தம் புதிதான பொன் மஞ்சள் தாலியுடன் தேவதையை போல மிளிர்ந்து கொண்டிருந்தவளின் அழகில், தன்னை மறந்து நின்றவனை பார்த்த இளாவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.. இருக்காதா பின்னே காலையிலிருந்து இறுக்கமாகவே இருந்தவனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கும் சற்று பயமாக கூட இருந்தது. தேவாவின் மீது கோபம் தீராமல் இருக்கிறானே, என நினைத்து உள்ளுக்குள் தன் தோழிக்காக வருந்தியவள், வேண்டும் என்றே அர்ஜுனிடம் இவ்வாறு பேசினாள். அவனின் முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்து தேவாவை ரசனைக் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்ததும் அவளுடைய பழைய துடுக்கு தனம் தலை தூக்கியது.
வாரேவா!!! அர்ஜுன் அண்ணா!!! உன்கிட்ட இதை நான் சத்தியமா எக்ஸ்பெட் பன்னல, என கண்ணை விரித்து கேட்டவளை பார்த்தவன் என்ன என்பதாய் முழித்துக் கொண்டிருந்தான். இந்த தேவதையை பார்த்துட்டு தேவனே மயங்கியாச்சா என தேவாவை அவன் பக்கம் திரும்பி நிற்க வைத்து, சீண்டவும் நிகழ்வுக்கு வந்தவன் மனம் எரிமலையாய் குமுறியது.
இளாவின் பேச்சை கேட்ட பெண்ணவளோ வெட்கத்தில், தன் இதழை கடித்து புன்னகையை மறைத்தாள்.
டேய் அறிவு கெட்டவனே, இவளைப் பற்றி தெரிஞ்சும், நீ இப்படி செய்வேனு நான் நினைச்சி பார்க்கல, நடந்ததை எல்லாம் ஒரே நொடியில் மறந்துட்டியா? என அவனுடைய மனசாட்சி கேள்வி எழுப்ப, தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த மிகவும் போராடினான் அர்ஜுன்.
அதே நேரம் அவர்களின் அருகே வந்த அம்பிகை, சந்தோஷ், இளா!! பேசினது போதும் இரண்டு பேரையும் அழைச்சிட்டு வாங்க நல்ல நேரம் முடியிறதுக்குள்ள வீட்டுக்கு போகனும், என சொல்லவும், தலையை ஆட்டினான்.
கைலாஷோ, சந்தோஷின் அருகே வந்தவர், இன்னும் ஃபிப்டின் மினிட்ஸ் கழிச்சி காரில் ஏறுங்க!! நம்ம வீட்டுக்கு வர கரெக்டா இருக்கும், அதுக்குள்ள நாங்க போய் மற்ற வேலையெல்லாம் பார்த்துடுறோம் என்று சொல்லவும் சரிங்கப்பா, என்றான் சந்தோஷ்.
அம்பிகை வா, போகலாம் மருமகள் கிரகபிரவேஷத்துக்கு எல்லாத்தையும் கரெக்டா டைமுக்கு செய்யனும் என்று சொல்ல, இவர் ஒருத்தர் டையத்துக்கு பிறந்தவர் மாதிரி எல்லாத்தையும் ஷெட்யூல் போட்டு தான் செய்வார் என மனதுக்குள் முனகினாலும், கணவனின் பின்னால் சென்றார்.
இருவரும் போகும் முன்னர் அமுதவாணனிடமும் அகல்யாவிடமும் விடைபெற்று சென்றனர்.
அவர்களை தொடர்ந்து அகல்யா தன் மகளின் அருகே வந்தவர், இளா இன்னைக்கு நீ அங்கேயே தங்கிடுடா நாளைக்கு பொண்ணு மாப்பிள்ளையோட நம்ம வீட்டுக்கு (மறுவீட்டுக்கு) அழைச்சிட்டு வந்துடு என சொல்லிவிட்டு தேவாவின் அருகே வந்தவர், அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர் நல்லபடியா இருடா, நல்ல மருமகள் நல்ல மனைவின்னு பெயர் எடுக்கனும் அதுதான் எங்களுக்கு சந்தோசம் என்றவர், ஏதாவது பிரச்சனைனா இந்த அத்தையை மறந்துடாதே, என கலங்கிய குரலில் சொல்லவும், தேவாவின் கண்களும் கண்ணீரை சுரந்தது.
அமுதவாணனால் பேச முடியாமல் தவித்தவர், கலங்கிய கண்களோடு, தேவாவின் தலையில் கையை வைத்து, என் தங்கையோட நினைவா நீ மட்டும் தான்டா எங்களுக்கு இருக்க என்றதும், கடந்து போன கொடுமையான நாட்களின் நினைவு அவளை உயிரோட கொல்ல ஆரம்பித்தது. பழைய நினைவில் உடல்நடுங்க நின்றவளை கண்ட அகல்யா, என்னங்க என்ன பேச்சு பேசுறீங்க நல்ல நாளும் அதுவுமா, என சிடுசிடுக்கவும், தன் தவறை உணர்ந்தவர், பேச்சை மாற்றினார்.
அம்பிகையிடம் இருந்து சந்தோஷிற்கு போன் வர, இதோ கிளம்பிட்டோம்மா என பதிலளித்தவன் அத்தை மாமா நாங்க கிளம்புறோம், என தன் மாமனார் மற்றும் மாமியாரிடம் சொல்லி விட்டு, வாடா மாப்பிள்ளை என அர்ஜுனின் கையைப் பிடிக்கவும்…
மாப்பிள்ளை எங்க வீட்டு பெண்ணை நல்லபடியா பார்த்துக்கோங்க… தனக்கு என்ன வேண்டும்னு கூட அவளுக்கு தெரியாது, ரொம்பவே கஷ்டத்தை அனுபவிச்சிட்டா, தேவாவை கண்கலங்காமல் பார்த்துக்கோங்க என அகல்யாவும் அமுதவாணனும் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ல, உள்ளுக்கு எரிச்சல் அடைந்தாலும் வெளியே சிரித்து வைத்தான்.
ஐயோ அடுத்த போன் வேற வந்துடுச்சி அத்தை மாமா நாங்க கிளம்புறோம் என்றவன் அர்ஜுனின் கையை பற்ற, அவனோ, கையை உதறிவிட்டு வேகமாக காரை நோக்கி நடந்தான்.
டேய் டேய் என சந்தோஷ் அழைத்தும் திரும்பியும் பாராமல் வாயிலில் நின்றிருந்த காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.
அர்ஜுனின் இச்செய்கையில் தேவாவின் மனதில் இதுவரை இருந்த சந்தோசம் அனைத்தும் கானல் நீராய் மறைந்து போனது. தன்னுடைய கலங்கிய கண்களை யாரும் பார்க்காதவாறு தலையை குனிந்தபடியே நின்றாள்.
என்னாச்சி இவனுக்கு என இளாவின் மனதில் கேள்வி எழ... தன் கூடவே நின்றிருந்த அம்மாவையும் அப்பாவையும் பார்த்தவளுக்கு அவர்களுடைய அதிர்ந்த முகத்தை பார்க்க… அவர்களும் இளாவை தான் பார்த்தனர்.
இளா!! என்ன இது?? மாப்பிள்ளை தேவாவை விட்டுட்டு தனியா போறார். நீ சொன்ன வார்த்தையை நம்பி தான் தேவாவை அவருக்கு மேரேஜ் பன்னி வச்சேன். இவர் நடந்துக்கிறதை பார்த்தால் காதலிச்ச பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட சந்தோசம் கூட இல்லாமல் இருக்கார்!! தன் அப்பாவின் கடுமையான பேச்சில் என்ன சொல்வது என்று தெரியாமல் பயந்து போனாள்.
தோழியின் பயத்தை கண்ட தேவாவோ அவளுடைய கையை அழுத்தி பிடிக்கவும் நிமிர்ந்த இளாவிடம், கண்ணை மூடி திறந்து, தான் பார்த்துக் கொள்வதாய் சொன்னவள், தன் மாமாவிடம், அர்ஜுனை காண்பித்து என் மேல கோபம் என இருகைகளால் சைகையில், தன்மையாக அவருக்கு புரியும்படி சொல்ல…
உன் மேல மாப்பிள்ளைக்கு கோபம்? அது உனக்கும் தெரியுமா? ஏன் கோபம் என்ன காரணம் என்று தேவாவிடம் கேட்க!!
அவரின் முகத்தை பார்க்காமல் தலையை குனிந்து ஆமா என மேலும் கீழுமாக தலையை ஆட்டினாள்.
என்னங்க!!! அதான் தேவா சொல்றாளே, மாப்பிள்ளை கோபமா இருக்கார்னு" இப்போ போய் என்ன பேசப் போறீங்க!! நேரம் வேற ஆகிட்டு நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரும் போது உங்க கேள்வியை வச்சிக்கோங்க... இப்ப இவங்க கிளம்பட்டும் என தேவாவுக்கு ஆதரவாக பேசவும்,
இதோ பாரு அகல்யா என் தங்கச்சி பொண்ணு ஆசைப்பட்டாளேனு தான் இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சேன், ஆனால் அவள் கண்கலங்கி நிற்கிற மாதிரி ஏதாவது ஆச்சி நான் பொல்லாதவனா ஆகிடுவேன் என மீசையை முறுக்கியபடி பேசவும்,
அய்யோ!! இந்த மனுசன் அமைதியா இருக்கிற வரைக்கும் தான் நம்ம பேச்சை கேட்பார், கோபம் வந்துட்டா!! அவரை மலை இறக்குறது ரொம்ப கஷ்டமாச்சே" என மனதுக்குள் நொந்தவர், கடவுளே தேவாவோட வாழ்க்கையில் இதுவரை அவள் அனுபவித்த கொடுமைகளே போதும், இனிமேலும் அவளை சோதிக்காதே என முறையிட்டவர், சரி சரி வாங்க மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும் என்ன சொன்னாங்க தேவாவை நல்லபடியா பார்த்துப்போம்னு சொல்லிருக்காங்களே, அப்புறம் என்ன!! வாங்க பொண்ணை நல்ல படியா அனுப்பி வைக்கலாம் என சமாதானப்படுத்தி தேவாவை அழைத்துக் கொண்டு காரை நோக்கி சென்றனர்.
அர்ஜுனின் பின்னாலேயே ஓடி வந்த சந்தோஷ் காரில் ஏறி அமர்ந்து, டேய் அறிவுகெட்டவனே, இன்னைக்கு உனக்கு மேரேஜ் ஆகிருக்குன்னு பார்க்கிறேன் இல்லனா வர கோபத்துக்கு முகறையை பேத்துடலாம் போல இருக்கு என அடக்கப்பட்ட கோபத்துடன் சீறினான்.
மச்சி கூல்டா இப்போ என்ன நடந்துடுச்சின்னு இப்படி கத்துற, நான் தான் கரெக்டான டைமுக்கு இங்கே வந்து மேரேஜ் பன்னிட்டேனே அப்புறம் என்ன எதிர்பார்க்கிற, என நக்கலாக கேட்டவனிடம்,
டேய் அங்கே தானே தேவாவோட அத்தையும் மாமாவும் இருக்காங்க அவங்க முன்னாடியே தேவாவை விட்டுட்டு நீ மட்டும் தனியா வந்து காரில் ஏறி அமர்ந்தா என்ன நினைப்பாங்க!! என சிடுசிடுத்தவன், தொடர்ந்து அர்ஜுனிடம், இந்தமாதிரி நீ நடந்துக்கிறதுக்கு அவளை மேரேஜ் பன்னாமல் இருந்திருந்தாலே நல்லா இருந்திருக்கும்னு, இப்போ தோனுதுடா என கடுப்படிக்க..
அது எப்படி மச்சி அவளோட பாவத்துக்கான சம்பளம் கிடைக்க வேண்டாமா? நான் எப்படி டா, கிடைக்கிற சான்ஸை மிஸ் பன்னுவேன், என சொல்லும் போதே அகல்யாவும் அமுதவாணனும், தேவாவை அழைத்துக் கொண்டு காரை நெருங்கி விட, இருவரும் வாயை மூடிக் கொண்டனர்.
தேவாவின் மனம் அர்ஜுனின் கலவையான நடவடிக்கையை நினைத்து பார்த்து உள்ளம் கலங்கியபடி காரில் ஏறி அவன் அருகே அமரவும், அர்ஜுன் சற்று தள்ளி அமர்ந்து கொண்டதை கண்டவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது. அவனின் செய்கையில் அதிகமாகவே மனதுக்குள் உடைந்து போனவள் தன்னை இயல்பாக வைத்துக் கொண்டு அத்தையையும் மாமாவையும் பார்த்து சிரித்து வைத்தாள்.
அர்ஜுன் மற்றும் தேவாவின் நடவடிக்கையை கண்டும் காணாமல் இருந்தனர் பெரியவர்கள்.
இளா, முன் சீட்டில் சந்தோஷின் அருகே சென்று அமர்ந்து கொள்ளவும், உடனே காரை எடுத்தான்.
தேவாவின் மனநிலையை எல்லாம் கவனிக்கும் நிலையில் அர்ஜுன் இல்லை என்பது அவனுடைய செய்கையிலேலே தெரிந்தது. தேவா அருகில் அமர்ந்தவுடனேயே அவனால் இயல்பாக இருக்க முடியாமல், தவித்தவன் வெளிப்புறத்தை, கண்களால் அலசினான். அப்போது திருமண பேனர் அவனுடைய கண்ணில் பட அதில் இணைந்து இருந்த பெயரை பார்த்ததும், அர்ஜுனின் கோபம் அதிகமானது.
அர்ஜுன் வெட்ஸ் தேவநிலா என்ற பெயரை பார்த்தவன், பேரை பாரு தேவநிலாவாம், இவளுக்கு இந்த பேர் இருக்க கூடாது கொலைக்காரிங்கிற பேர் தான் கரெக்டா இருக்கும்… என மனதுக்குள் கருவ..
அர்ஜுனின் மனசாட்சியோ! டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா, தேவநிலா எவ்ளோ அழகான பேரை அவளுக்கு பொருத்தமாக வச்சிருக்காங்க பார்த்தியா என கேட்க..
ஆமாடா படம் எடுத்து ஆடுற பாம்பு கூட அழகா தான் இருக்கும். அதே மாதிரி தான் இவளும் என தன் மனசாட்சியிடம் வாதம் புரிந்தவன், தேவநிலாவாம் தேவநிலா ச்சே" என்று வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டே திரும்பியவனின் பார்வை தேவாவின் மீது பட, அதே நேரம் தேவாவும் அர்ஜுனை நிமிர்ந்து பார்க்க… இருஜோடி கண்களும் சந்தித்தது.
தேவாவின் கலங்கிய கண்களை பார்த்த அர்ஜுனின் இதயம் ஒரு நொடி இளக ஆரம்பித்தது. அவனுடைய கைகள் தேவாவின் கண்ணீரை துடைக்க அவள் முகம் நோக்கி சென்ற வேகத்திலேயே திரும்பியது. டேய் ……. என்னடா செய்ற நீ அர்ஜுன் இல்ல, அர்ஜுனா வாழ்ற தட்ஸ் இட் இவளுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவளை ஏன் மேரேஜ் பன்னிக்கிட்டனு உனக்கு தெரியும் தானே, அதை மட்டும் பாரு என தன் மனதை உடனே கட்டுப்படுத்தியவன் அவளிடமிருந்த தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
என்னங்க பார்த்திங்களா மாப்பிள்ளையை என அர்ஜுனைப் பற்றி அகல்யா கேட்கவும்,
ம்ம் நல்லாவே பார்த்தேன்டி தேவா உட்கார்ந்த உடனே முகத்தை திருப்பினானே நல்லாவே கவனிச்சேன் என கோபத்தோடு முனுமுனுத்துவிட்டு தங்களுடைய காரை நோக்கி சென்றார்.
கடவுளே என தலையில் கையை வைத்தபடி கணவனின் பின்னாலேயே சென்றார் அகல்யா.
sangamamnovels.com

என் வானிலே நீ வெண்ணிலா...கருத்துத் திரி
என் வானிலே நீ வெண்ணிலா...கருத்துக்களை இங்கே பதிவிடவும்
sangamamnovels.com