❤என் வானம்❤-4
மணமக்களின் கார் ஒரு பிரமாண்டமான கோட்டை சுவர் போல அமையப்பெற்ற கேட்டின் முன்பு வந்து நிற்கவும், கதவுகள் சட்டென திறக்கப்பட, காரும் மெதுவாக உள்ளே நுழைந்தது.
கார் செல்லும் பாதையின் இரண்டு பக்கமும், பூக்களாலும், மாவிலை தோரணங்களாலும், அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்ததை விழிகள் விரிய பார்த்துக் கொண்டே வந்தாள் தேவா.
அர்ஜுவின் மாளிகை போன்ற வீட்டை பார்த்த உடனே பிரமித்து போனவள்... கேட்டில் இருந்து வீட்டிற்கு, காரில் பயணம் செய்யும் போதே" ஐந்து நிமிடங்கள் ஆகும் போல இருக்கே, அப்போ நடந்து செல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று" கார் வீட்டை அடைந்தது கூட தெரியாமல் தன் மனதுக்குள் கணக்கிட்டு கொண்டிருந்தாள் தேவா.
அர்ஜுனின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய சொந்த பந்தங்கள் அனைவரும், மணமக்களை வரவேற்க வாயிலுக்கே வந்து நின்றிருந்தனர். அவர்களுக்கு அருகே ஒரு நாற்காலியில் அர்ஜுனின் பாட்டியும் அமர்ந்திருந்தார். வயதின் மூப்பு காரணமாக மண்டபத்திற்கு வராமல் இருந்தவர், தன் பேரனின் மனைவியை காண ஆவலுடன் காத்திருந்தார்.
கார் நின்றதும், சந்தோஷ் மற்றும் இளாவும் அங்கே குழுமியிருக்கும் நெருங்கிய சொந்தங்களைப் பார்த்ததும் வேகமாக இறங்கிவிட, அர்ஜுனும், தன் பாட்டியை பார்த்தமாத்திரத்தில் தேவாவை விடுத்து கீழே இறங்கி அவர் அருகே சென்று நின்றான்.
தன் பேரனின் கல்யாணக் கோலத்தை பார்த்து அந்த வயது முதிர்ந்தவரின் சுருங்கிய கண்ணங்கள் பூரிப்பில் விரிந்தது.
அர்ஜுனின் முகத்தை தன் கைகளில் ஏந்தி கண்களில் நிரப்பிக் கொண்டவர், அவனின் சிகையை ஆதூரமாக வருடியவரின் பார்வை தன் பேரனின் பின்னால் சென்றது.
அவரின் பார்வை சென்ற பிறகே, தன்னருகில் அவள் இல்லாததை அறிந்தவன், மகாராணி காரில் இருந்து இறங்க மாட்டாளா என மனதுக்குள் கருவியவன், பாட்டியின் பார்வையை பார்க்காமல் தவிர்த்தான்.
பேரனின் பார்வை தவிர்த்தலை கண்டுக் கொண்ட ரங்கநாயகி, தன் மருமகளை பார்த்து, என்ன அம்பிகை உன் மருமகளுக்கு காரை வீட்டு இறங்க மனசு வரலையா? இல்ல கிழடுகளை எல்லாம் ஏன் பார்க்கனும்னு அலட்சியமா இருக்காளா என கேட்க...
மாமியாரின் குரல் பேதத்தை கண்ட அம்பிகை, பதறியபடி அய்யோ அத்தை நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை, தேவா ரொம்ப அமைதியான தங்கமான பொண்ணு, என சொல்லி முடிக்க..
ம்ம் பரவாயில்லையே அம்பிகை, மருமகளுக்கு இப்போவே வக்காலத்து வாங்குற, அப்படிப்பட்ட பெண்ணை என் கண்ணுல காட்டுவியா என எகத்தாளமான குரலில் கேட்டவர், தன் பேரனிடம் திரும்பி,
என்ன பேரான்டி புது மாப்பிள்ளை நீ, காரிலிருந்து தனியா இறங்கி நிற்கிற, ஏன் உன் பொண்டாட்டி காலு தரையில் படாதா? அப்படி எந்த சீமையில இருந்த ராஜா வீட்டு பொண்ணை கண்ணாலம் கட்டிருக்கனு நானும் பார்க்கனும், உன் பொண்டாட்டியை தூக்கிட்டு வா என வயதில் மூத்த பெண்மணியின் நக்கல் கலந்த, கிண்டல் பேச்சில் மற்றவர்கள் பக்கென சிரிக்க, சுற்றி இருந்தவர்களின் சிரிப்பலையில் சுயநினைவிற்கு வந்த தேவா தான் இருக்கும் இடத்தை பார்த்ததும், உள்ளுக்குள் பதற ஆரம்பித்தாள்.
தனியாக காரில் அமர்ந்திருக்கும் தன்னை சுற்றி இருப்பவர்களின் குறுகுறுப்பு பார்வையில், அவசர அவசரமாக கீழே இறங்குகிறேன் என்று புடவை தடுக்கி கீழே விழப்போனவளை நொடியும் தாமதிக்காமல் தாங்கி பிடித்தான் அர்ஜுன்.
கீழே விழாமலிருக்க தன்னவனின் புஜத்தை அழுத்தி பற்றியிருக்க அவனோ தன்னவளின் இடைப்பற்றி தாங்கி நின்றான். இவர்கள் இருவரின் இந்த கோலத்தை பார்த்து ரங்கநாயகியின் மனம் உள்ளக்குள் பூரித்தது. பொண்ணு மகாலெட்சுமியாட்டம் பாந்தமா தான் இருக்கா!! என் பேரனுக்கு ஏத்த ஜோடிய தான் அம்பிகை தேர்ந்து எடுத்துருக்கா, என்று ரங்கா பாட்டியின் மனம் நிறைந்து போனது.
புது ஜோடிகளின் நிலையை பார்த்து சுற்றி இருந்த சொந்தங்களின் பேச்சும் சிரிப்பும், இருவரையும் நிகழ் உலகத்திற்கு அழைத்து வர தன்னவனிடம் இருந்து சட்டென விலகியவள், தங்களை சுற்றிலும் நிரம்பியிருந்த கூட்டத்தை பார்த்து, அடக்கடவுளே, என தலையில் அடித்துக் கொள்ள, அவளுடைய செய்கைகளை பார்த்து உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும், முறைப்புடன் தேவாவை இன்னும் நெருங்கியவன் நூலிலை இடைவெளி மட்டுமே இருக்க, பெண்ணவளின் காதுமடலில் அவனின் சூடான மூச்சு காற்று படவும் நெஞ்சம் படபடக்க நின்றவளிடம், என்ன மேடத்துக்கு கீழே இறங்க தெரியாதா? தவழ்ந்து தான் வர தெரியுமா? நான் மட்டும் பிடிக்கலனா முன்னடி இருக்கிற பல்லு இரண்டும் சில்லு சில்லா போயிருக்கும் என அவளுடைய காதில் சிடுசிடுக்க… இமை தாழ்த்தி கீழே குனிந்து நின்றாள்.
பேரனின் பேச்சிற்கு இமை தாழ்த்தி கீழே குனிந்து நின்ற தேவாவின் செயல் மீதே, பாட்டியின் பார்வை நிலைத்து நின்றது. இருவரின் ஜோடி பொருத்தமும், முதியவரின் கண்களை நிரப்ப தவறவில்லை. (அவன் என்ன சொன்னானு தெரியாமல் இப்டி சந்தோசப்படுறீங்களே பாட்டி)
அர்ஜுனின் அருகே சந்தோஷும், தேவாவின் அருகே இளாவும், சேர்ந்து நின்று கொள்ள… இன்னும் எவ்வளவு நேரம்பா, மாப்பிள்ளை பொண்ணை வெளியேவே நிற்க வைப்பிங்க!! சீக்கிரம் ஆலம் எடுத்து, வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைக்க சொல்லி பொண்ண உள்ளே கூட்டிப் போங்க, என்று கூட்டத்தில் ஒருவர் சலசலக்க…
அம்பிகை சீக்கிரம் ஆகட்டும், என ரங்கநாயகி சொல்லவும், சரிங்க அத்தை என்றவர், உறவு பெண் கொண்டு வந்த ஆலத்தை வாங்கி மூன்று பேர் சேர்ந்து நின்று மணமக்களுக்கு ஆலம் எடுத்ததும், மூவரும் இருவரின் நெற்றியில் திலகமிட்டு முடித்ததும், ஆலத்தட்டை வேலைக்கார பெண்ணிடம் கொடுத்து மூச்சந்தியில் கொட்டி வரும்படி கொடுத்து அனுப்பிய அம்பிகை, தேவாவை பார்த்து வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாம்மா என வீட்டிற்குள் தன் மருமகளை அழைத்தார்.
எது ஒன்று, தன் வாழ்கையில் இனி நடக்கவே நடக்காது என்று நினைத்து மருகியவள், தன் இதயத்தின் ஆழத்தில் அவனின் நினைவுகளை அழுந்த பூட்டி, அவனின் நியாபகத்தை உன் நினைவை விட்டு துரத்த முடியுமா என கேட்ட மனசாட்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "தன்னவனை, தன் உயிருக்கும் மேலானவனை, அவனில்லாத உலகில் தனக்கும் இடம் இல்லை என்னும் அளவிற்கு, தன் காதலனின் மீது வைத்து இருந்த உன்னத காதலையும், துறந்த பெண்ணவளுக்கு, இன்று தன் உயிர் காதலனை கல்யாணம் செய்த சந்தோசத்தில் கண்ணில், நீர் நிறைந்து போனது. அகமும் முகமும் மலர்ந்து,
தன் அத்தை அம்பிகையின் சொல்படியே வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தாள் தேவா.
வீட்டின் பிரமாண்டத்தை தன் கண்களில் நிரப்பிக் கொண்டு தன்னவனின் அருகே பதுமையாய் அடிமேல் அடிவைத்து பூமி தாய்க்கே வலிக்காதபடி உள்ளே சென்றவள் நேராக சென்று நின்ற இடம் பூஜை அறைதான்… ரங்கநாயகி தன் வயதுடைய சொந்தங்களுடன் பூஜையறைக்கு அழைத்து வரப்பட அவரின் அனுமதியை எதிர்பார்த்து நின்றார் அம்பிகை.
பூஜையறையில் இருக்கும் சுவாமிப்படங்களை பார்த்ததும், தேவாவின் முகம் இருண்டது.
பூஜையறையை பார்த்ததும் இளாவின், கண்களில் பயம் கவ்விக் கொண்டது அய்யோ இப்ப என்ன பன்றது என தன்னை மீறி முனுமுனுக்க… அது சந்தோஷின் காதிலும் விழுந்தது.
என்ன இவள் அய்யோங்குறா? என்று இளாவின் முகத்தில் இருந்த பயத்தை, அதனோடு இருகையையும் இறுக்கமாக பிடித்தபடியே இருந்துவளின் கண்களில் இருந்த தவிப்பை பார்த்த சந்தோஷிற்கு, ஒன்றுமே விளங்கவில்லை.
ஏய் எதுக்கு இப்போ பயப்புடுற?, என இளாவின் காதில் கிசுகிசுக்க…
அதுதூ தேவா சாமி கும்பிடுறதை விட்டே ஐந்து வருடமாகிடுச்சி, வீட்டில் பூஜையறை பக்கமே வரமாட்டா விளக்கை தொடக் கூட மாட்டா என தன்னவனின் காதில் மெதுவாக சொன்னாலும், அது அர்ஜுனின் காதிலும் விழுந்தது.
அர்ஜுனின் முகம் இப்போது மேலும் மலர்ந்தது. வாவ் செம்ம,, இவள் என்ன பன்றானு நானும் பார்க்கிறேன். விளக்கு ஏற்றுவாளா? இல்லை மாட்டாளானு, இது ஒன்றே போதும் பாட்டிக்கு இவளை பிடிக்காமல் போக என நினைத்து மனதுக்குள் கும்மாளமிட்டபடி நின்றிருந்தான் அர்ஜுன்.
இதுவரைக்கும் மனதுக்குள் இறுகியபடியே நின்றிருந்த அர்ஜுனின் பார்வை தேவாவின் மீது விழுந்தது. அவளுடைய முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பியிருக்க, கண்களோ இதுவரை இல்லாத அளவிற்கு கோவைப்பழமென சிவந்து இருப்பதை பார்த்தவனின் மனதுக்குள் நிம்மதி சந்தோசத்திற்கு பதிலாக, ஏன் என்ற கேள்வியே பிறந்தது.
தன்னுடைய கையில் இருந்த பூச்செண்டை அழுத்தி பிடித்தவண்ணம் நின்றிருந்தவளின் நிலையை எண்ணி உள்ளுக்குள் சிரிப்புடன் அடுத்து நடப்பதை காணும் ஆவலுடன் தேவாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இவ்வளவு நேரமும் தன் கண்களை மூடி பிரார்த்தனையில் இருந்த ரங்கநாயகி மெதுவாக தன் கண்களை திறந்து, அம்பிகையை பார்த்தார்.
அம்பிகை, நம்ம பரம்பரை விளக்கை இந்த வீட்டு மருமகளை ஏற்ற சொல்லு, விளக்கை ஏற்றும் போது இந்த குடும்பத்தோட சந்தோசத்துக்கும், கௌரவத்துக்கும் எந்த குறையும் வராமல் நல்ல மருமகளாக இருப்பேன்னும், அதோட பரம்பரை பழக்கவழக்கத்தையும் நன்முறையில் கடைபிடிப்பேன்னும் சொல்லி மனசாரா நம்ம குலதெய்வத்தை வேண்டிக்கிட்டு விளக்கேற்ற சொல்லு, ம்ம் இன்னொரு முக்கியமான விசயம், இங்கே இருக்கிற பரம்பரை விளக்கை ஒரே தீ குச்சியால் தான் ஏற்றனும் என்று சொல்லி முடித்தார்.
என்னங்க இது அத்தை இப்படி சொல்றாங்க!! தேவா எப்படி ஒரே ஒரு தீக்குச்சியால் விளக்கை ஏற்றுவா என தன் கணவனிடம் கேட்டார் அம்பிகை.
கைலாஷோ, இதோ பார் அம்பிகை என் அம்மா எது செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என சொல்லிவிட்டு அமைதியாக நின்றார்.
அட்ரா சக்கன்னா பாட்டின்னா பாட்டி தான் என்று மனதுக்குள் மெச்சிக் கொண்டான் அர்ஜுன். எனக்கு வேலையே இருக்காது போல இருக்கே என் பாட்டியை வைத்தே நிறைய செய்யலாம் போல இருக்கே, என மனதுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அய்யோ!! இந்த பாட்டிக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, ஒரே தீக்குச்சியில எப்படி இத்தனை விளக்குகளை ஏற்ற முடியும் என்று இளாவுக்கு பாட்டியின் மீது கோபமாக வந்தது.
என்ன அம்பிகை, உன் மருமகள் அப்படியே தெகச்சி போய் நிற்கிறா? நல்லநேரத்தில் விளக்கை, ஏற்ற சொல்லு" என்ற பாட்டியின் கணீர் குரலில், தன்னிலை அடைந்த தேவா… தன் கண்களை மூடி மனதை சமன் செய்தவள், ஒரு முடிவுடன் பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளை கவனித்து பார்த்தாள்.
சுவாமிக்கு மிக அருகில், பெரிய காமாட்சி விளக்கும், அதன் இரண்டு பக்கத்திலும் மிக பெரிய குத்துவிளக்கும், அதுவும் ஒன்பது முக அமைப்புக் கொண்ட இரண்டு விளக்கையும் பார்த்தவள், தீப்பெட்டியிலிருந்து ஒரே ஒரு குச்சியை எடுத்தவள் அதை பற்ற வைக்கும் முன்னர் தன்னவனின் முகத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து கண்களில் நிரப்பிக் கொண்டவள், விளக்கை ஏற்ற ஆரம்பித்தாள்.
விளக்கை ஏற்ற போகும் முன்னர், "தன்னை அவள் பார்த்த பார்வையில் ஒரு நிமிடம் ஆடித்தான் போனான் அர்ஜுன். எப்படி இவள் ஏற்றுவாள், தீக்குச்சியோ அளவில் சிறியதாக இருக்க" இத்தனை திரிகளையும் எப்படி பற்ற வைப்பாள் என நினைத்து, அர்ஜுனின் மனது கவலையில் ஆழ்ந்தது ஒரு நிமிடமே,
டேய் முட்டாள், அவளுக்கு பிரச்சனை வந்தால் சந்தோசப்படுறதை விட்டுட்டு ரொம்பவே ஃபீல் பன்ற", என்ன சார்!! தாலியை கட்டினவுடனே பொண்டாட்டின்ற பாசம் வந்துட்டா? அர்ஜுனுக்கு, அவள் செய்ததை எப்படி மறந்தாய்? என அவனுடைய மூளை கேள்வி கேட்க… அவனின் இளகிய மனம் மீண்டும் இறுகியது.
ரங்கநாயகிக்கும், மருமகள் எவ்வாறு இந்த சிறு தீக்குச்சியை வைத்து, ஏற்றப் போகிறாள் என்று பார்க்கவேண்டி இருந்தது. வீட்டிற்கு வந்த மருமகளின் திறமையை சோதிக்கவே, எப்போதும் இருக்கும் பெரிய தீக்குச்சிக்கு பதிலாக, அளவில் மிகச்சிறியதாக இருந்ததை வைத்தார்.
ரங்கநாயகியின் மனதில் தேவா எவ்விதம் விளக்கை ஏற்றுவாள் என்று ஊகித்திருக்க… அவருடைய எண்ணத்தை நொடியில் பொய்யாக்கினாள் தேவா.
காமாட்சி விளக்கிலும், குத்து விளக்குகளில் இருந்த திரியின் நுனியில், ஏற்றுவதற்கு தோதாக சிலவற்றை செய்து முடித்தவள், உடனே அந்த சிறிய தீக்குச்சியை கொண்டே அனைத்து விளக்குகளிலும், நிதானமாகவும் பதற்றமின்றியும் விளக்கை ஏற்ற, அனைத்தும் மிக அழகாக எரிந்தது.
மருமகள் ஒரே தீக்குச்சியில் விளக்கை ஏற்றி முடிக்கவும், அம்பிகையின் மனம் சந்தோசத்தில் திளைத்தது. அருகில் நின்றிருந்த கணவனிடம் எப்படி!! என்ற பார்வையை பதித்து விட்டு, பெருமையுடன் தேவாவை பார்த்தவர், அத்தை என்று அழைக்க..
ம்ம் இரண்டு பேரும், தம்பதியா கீழே விழுந்து சுவாமியை கும்பிடுங்க என சொல்லிவிட்டு மெதுவாக வெளியேறியவரின் முகத்தில் தேவாவை நினைத்து புன்னகையும் மெச்சுதலும் தெரிந்தது.
ச்சே,, நாம நினைத்த மாதிரி நடக்கலையே! என மனதுக்குள் புகைந்து கொண்டிருந்தான் அர்ஜுன்.
ஹேய் தேவா, செம்மடி!! நான் ரொம்ப பயந்தே போய்ட்டேன்" என்று இளா, அவளின் கையைப்பிடித்து ஒரு அழுத்தத்துடன் சொல்லவும், தோழியின் முகத்தை பார்த்து மென்மையாக சிரித்தாள். அவள் முகத்தில் இருந்த சிரிப்பு இன்னும் கொஞ்ச நேரத்தில் மறையப் போவது தெரியாமல் பூஜையறையில் இருந்து வெளியே சென்றாள்.
பராவயில்லையே ரங்கம், உன் பேரனோட பொண்டாட்டி கெட்டிக்காரி தான், நீ வச்ச பரிட்சையில் பாஸ் ஆகிட்டா" என அவருடைய தோழி மெச்சுதலாக சொல்லவும், புன்னகையை மட்டும் சிந்தினார் ரங்கநாயகி.
அம்பிகை, இரண்டு பேருக்கும் பால் பழம் கொடு" என்று ரங்கநாயகி கட்டளையிட, வேகமாக அதற்கான வேலையை செய்தார் அம்பிகை.
மணமக்கள் இருவரையும், அருகருகே அமரும்படி சோபாவில் அமரவைக்க, அர்ஜுனோ தேவாவின் அருகே அமராமல், சற்று இடைவெளி விட்டே அமர்ந்ததை நாயகியின் கண்கள் கவனிக்க தவறவில்லை தன் மனதுக்குள் குறித்துக் கொண்டார்.
வெள்ளி டம்பளரில் பாலையும் பழத்தையும் ஒன்றாக கலந்து எடுத்து வந்து, அர்ஜுனிடம் கொடுத்து, அர்ஜு பாதி குடிச்சிட்டு மருமகளிடம் மீதியை கொடு என்று சொல்லவும்,
அம்மாவிடம், இருந்து டம்பளரை கையில் வாங்கியவன்,முகத்தை சந்தோசமாக வைத்துக் கொண்டு பாதியை குடித்துவிட்டு, மீதியை தேவாவின் பக்கமாக கொடுக்க… தங்களையே பார்த்தபடி, அனைவரும் சுற்றி இருக்க கண்டவள், மனதில் ஒருவித பதற்றத்துடன் கைகள் நடுங்க, தன்னவனிடம் இருந்து டம்பளரை வாங்கியவளின் கையில், சுரீர் என்று வலி வர, தேவா தன் கையில் இருந்த பால்ப்பழ டம்பளரை கீழேப் போட்டாள்.
திடிரென இப்படி நிகழ்ந்துவிட்டதை கண்ட அனைவரும், தேவா வேண்டுமென்றே கீழே போட்டதாக நினைத்து அதிர்ந்தனர். கூட்டத்தில் இருந்த சொந்தபந்தகளும் சலசலக்க ஆரம்பிக்கவும்,
அம்பிகை!! என்று ரங்கநாயகியின், கணீர் குரலில் அனைவரும் அமைதியாகிட, அங்கிருந்த அனைவரும், பதற்றத்துடன் ரங்கநாயகியின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றனர்.
Hi friends intha ud epadi irukkunu marakkamal cmnts pannunga...
deva kaila iruntha tamblar epadi kile vilunthathunu nxt udla therium.
paatiku deva mela kobam varuma? arjun ninaithathu nadakumanu therinthu kolla adutha ud varai wait pannunga!!
stry ah patrina ungaludaiya manasula enna thondruthunu marakkamal sollunga!!

என் வானிலே நீ வெண்ணிலா...கருத்துத் திரி
என் வானிலே நீ வெண்ணிலா...கருத்துக்களை இங்கே பதிவிடவும்
sangamamnovels.com