கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா-5

Status
Not open for further replies.

Jothiramar

Moderator
Staff member
என் வானம்❤-5


தேவா பால்ப்பழ டம்பளரை கீழே போட்டதும், அங்கிருந்த சொந்தபந்தங்களின் சலசலப்பு அதிகரிக்க!!!

இதுவரை தேவாவைப் பற்றிய நன் மதிப்புடன் இருந்த ரங்கநாயகி பாட்டிக்கு அவளுடைய இச்செய்கையினால் கோபம் எழ, அம்பிகை என்று அர்ஜுனின் அம்மாவை சத்தமாக அழைக்கவும், மற்றவர்கள் அமைதியடைந்தனர்.

அத்தை என்று அவர் அருகில் வந்து நின்ற அம்பிகையிடம் தனது அதிருப்தியின்மையை கண்களில் காட்டினார்.

தேவாவின் உடல் நடுக்கத்தை பார்த்ததும் இளா அவளுடைய தோளைப் பற்றவும், கலங்கிய கண்களுடன் தன் தோழியை பார்த்தவள், இப்படி ஆகிவிட்டதே என கண்களால் மௌன மொழியில் பேச,

தேவா ப்ளீஸ்ம்மா நான் உன்னை நம்புறேன் நீ வேண்டுமென்றே செய்திருக்க மாட்ட என அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லவும்,

இளாவின் முகத்தை பார்த்து விரக்தியான புன்னகையை சிந்தினாள். முதல் கோணல் முற்றிலும் கோணல்னு அம்மா அடிக்கடி சொல்வாங்களே, இப்போ அதே மாதிரி பாட்டிக்கு என் மேல தப்பான அபிப்ராயம் தானே வந்து இருக்கு என மருகியவள் திடிரென அர்ஜுனின் மீது சரிந்தாள்.

எதையாவது செய்து இவளை பாட்டியின் முன்பு, மாட்டிவிட வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கே தேவாவின் செய்கையில் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். ஓரக்கண்ணால் தேவாவின் முகத்தை பார்த்தவனுக்கு அவளுடைய கலங்கிய விழிகளை கண்டதும், அவன் மனதை எதுவோ செய்வதை போல இருக்க" அதே நேரம் தன் பாட்டியின் கோபக்குரலில் சுயநினைவுக்கு வந்தவன், ம்ம் பரவாயில்லையே நாம செய்ய நினைக்கிறதுக்கு முன்னால அதுவாவே நடக்கிறதே, ம்ம் என்ன நடக்கிறதுனு பார்க்கலாம் என நினைத்து அமைதியடைந்தவனின் தோள்களிலே பூமாலையாய் வந்து விழுந்தவளை பார்த்ததும் ஒன்றுமே புரியாமல், அதிர்ந்தவன், அவளை பற்றியிருந்த கைகளில் அவள் உடுத்தியிருந்த பட்டுச்சேலைக்கு நிகராக சிவப்பான திரவம் பிசுபிசுப்பாக இருப்பதை கண்டவன், சந்தோஷ் டாக்டர் அங்கிளுக்கு போனை போடுடா? என்று கத்திவிட்டு தேவாவை தன் கைகளில் தாங்கியபடி மாடியில் இருக்கும் தன்னுடைய அறைக்கு வேகமாக சென்றான். அருகில் இதுவரை கவலையுடன் நின்றிருந்த இளாவிற்கு எதுவுமே புரியாமல் பதற்றத்துடன் அர்ஜுனை பின்தொடர்ந்து சென்றாள்.

அர்ஜுனின் திடிர் கத்தலில் ஒன்றுமே புரியாமல் விழித்த சந்தோஷின் கைகள் உடனடியாக மருத்துவரின் நம்பரை அழுத்தியது, ஹலோ, அங்கிள்... என்றவன் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு வேகமாக அர்ஜுனிடம் சென்றான்.

அர்ஜுனின் வீட்டில் இதுவரைக்கும் கூட்டத்தோடு கலந்திருந்த ஒரு உருவம் மட்டும் மற்றவர்களின் பதற்றமான நிலைமையை பயன்படுத்திக் கொண்டு அங்கேயிருந்து வேகமாக வெளியேறியது.

தன் முகத்தை சாதாரணமாக ழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து விரைந்து சென்ற உருவம், கேட்டை விட்டு வெளியே வரவும், ஒரு கார் வந்து நிற்க அருகில் நிற்கவும் வேகமாக ஏறவும், கார் சீறி பாய்ந்தது.

அர்ஜுனின் வீட்டில்:

கைலாஷ், அம்பிகை சீக்கிரம் மேலே போய் தேவாவுக்கு என்ன ஆச்சின்னு பாருங்க!! என்று ரங்கநாயகி அவசரப்படுத்தவும், வேகமாக அர்ஜுனின் அறைக்கு சென்றனர்.

அவர்கள் பின்னோடு செல்ல இருந்த சொந்தபந்தங்கள் அனைவரும், பாட்டியின் ஒரே குரலில் அமைதியாக அதே இடத்தில் நின்றனர். ரரங்கநாயகி பாட்டியின் பார்வை இப்போது தேவா அமர்ந்திருந்த இடத்தை கூர்ந்து கவனித்தது. அதை பார்த்தவரின் கண்களில் சிதறியிருந்த இரத்தத்துளிகள், தென்பட கடவுளே, என நடந்த நிகழ்வை எண்ணி அவருடைய மனம் பதற்றத்தில் அரற்றியது. உடனே வேலைக்காரனை அழைத்தவர் அவனிடம் சில கட்டளைகளை இட்ட பிறகே சீரான மூச்சியை விட்டார்.

தேவாவின் கைகளில் இருந்து இரத்தம் நிற்கவே இல்லை, காயத்தில் பரிசோதித்து பார்த்த அர்ஜுனின் விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

அண்ணா தேவாவுக்கு என்ன ஆச்சி ஏன் மயங்கிட்டா நல்லா தான் இருந்தா என அழுகையில் கரைந்த இளாவிடம், எந்த பதிலையும் சொல்ல முடியாமல் திணறினான்.

டேய் அர்ஜுன் டாக்டர் இப்ப வந்துடுவார்டா தேவாவுக்கு என்னடா ஆச்சி என கேட்க, சந்தோஷை உற்று பார்த்தவன் தேவாவின் கையை கண்களால் காட்டிய அர்ஜுன் சொன்ன செய்தியில் சந்தோஷின் விழிகளும் அதிர்ச்சியடைந்தது.

சந்தோஷின் பின்னாலேயே வந்த அர்ஜுனின் அப்பா அம்மாவும், பதற்றத்துடன், தேவாவுக்கு என்ன ஆச்சி என மாறி மாறி கேள்விக் கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறினான் அர்ஜுன் அதே நேரம் டாக்டரும் உள்ளே வந்தவர், அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, தேவாவுக்கு சிகிச்சையை ஆரம்பித்தார்.

அறைமணி நேரம் கழித்து வெளியே வந்த டாக்டரை சூழ்ந்து கொண்டனர்.

டேய் சங்கர் என் மருமகளுக்கு என்ன ஆச்சி ஏன் மயங்கிட்டா, அவளோட கையில் இருந்து ஒரே இரத்தமா வந்துருக்கே என பதற்றத்துடன் கேட்ட நண்பனிடம்,

உன் மருமகள் கையில் புல்லட் பட்டுருக்குடா, நான் அதை ரீமூவ் பன்னிட்டேன் என சாதாரணமாக சொன்னதும், அம்பிகை கைலாஷ் இளா மூவரும் அதிர்ந்தனர்.

அர்ஜுனின் முகத்தில் அதிர்ச்சிக்கு பதில் சந்தேகமே துளிர்த்தது.

என்னடா இப்படி சொல்ற, யாருடா இந்த வேலையை செய்துருப்பாங்க!! அதுவும் இத்தனை பேர் சுற்றியிருக்கும் போதே, என கைலாஷ் சங்கரிடம் சந்தேகத்துடன் சொல்ல,

அதானே அவன் மட்டும் இப்போ இருந்திருந்தா இந்த மாதிரி ஒரு விசயம் நடந்து இருக்குமா? இல்ல செய்ய தான் யாருக்காவது துணிவு இருக்குமா? என்றவரிடம்,

அண்ணா நாங்க தேவாவை பார்க்கலாமா? என அம்பிகை கேட்க

ம்ம் தாராளமா போய் பாருமா? இன்னும் ஒன்னவர் கழிச்சி தான் கான்சியஸ் வரும் என்றவர், அர்ஜுன் என்கூட வா என்று மட்டும் சொல்லிவிட்டு வேகமாக சென்றார்.

இதோ வரேன் அங்கிள் என்றவன், அவர் பின்னாலேலே சென்றான்.

டாக்டரிடம் பேசிவிட்டு அறைக்குள் வந்த அர்ஜுன் மயக்கத்தில் இருந்த தேவாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். அவனின் காதுகளில் டாக்டர் சொன்னவையே ஓடிக் கொண்டிருந்தது.

தாம்பரத்தில் உள்ள பங்களா:

அர்ஜுனின் வீட்டிலிருந்து கிளம்பிய கார் நேராக சென்று நின்றது தாம்பரத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு தனித்த பங்களாவின் முன்பு தான்!! கார் நிற்கப்படவும், அதிலிருந்து இறங்கிய உருவம் கண்ணெதிரே தெரிந்த மாளிகையையும், அதன் சுற்றுப்புற பகுதியையும் தன் கண்களால் அளவிட்டுக் கொண்டு நின்றது.

பங்களாவை சுற்றிலும் ஒரே மரங்களும் பூச்செடிகளும் பார்க்க அழகாக இருந்தது. சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்கள் கூட அந்த பங்களாவின் மீது படாமலே இருந்தது. இப்படி ஒரு இடத்தில் ஒரு மாளிகை இருப்பது ஏனைய பேருக்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. சுற்றிலும்ஆள் அரவமற்ற பகுதியாக வெட்ட வெளியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

காரில் இருந்து இறங்கிய உருவம் கேட்டை மூன்று முறை தட்டவும், மூடியிருந்த கதவுகள் தானாகவே திறந்தது.

நடையில் வேகம் இருந்தாலும், அந்த உருவத்தின் முகம் பதற்றமாக இருப்பது தெரிந்தது, என்ன நடக்குமோ? என்ற பயத்துடன் கதவில் கையை வைக்கவும் தானாகவே திறந்து கொண்டது.

மெல்ல மெல்ல தன் எட்டுக்களை வைத்து வீட்டிற்குள் பிரவேசித்த அந்த உருவம் ஐயா என்று அழைக்க… சத்தத்திற்கு பதிலாக காற்று மட்டுமே வந்தது.

வீட்டிற்கு வந்தது முதல் பயத்தில் கால் நடுங்க நின்றபடியே, சத்தமே வராத அளவிற்கு தன்னை அழைப்பவனை எதிர்பார்த்தது போலவே உள்ளேயேருந்தவனின் கண்கள் கும்மிருட்டாக இருந்த நிலைமையிலும் பளப்பளத்தது.

என்னடா போன விசயம் என்ன ஆச்சி என சிங்கமென கர்ஜிக்க..

தன் அருகே திடுமென்று இடியென ஒலித்த குரலை கேட்டதும், பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து நின்றவனின் நாக்கு மேழண்ணத்தில் ஒட்டிக் கொண்டு வார்த்தையை சொல்ல முடியாமல் நின்றவனை பற்றியதும், பயந்த அந்த உருவம், சாரிங்க ஐயா டார்கெட் மிஸ் ஆகிடுச்சி, என சொன்ன அடுத்த நொடி, அந்த உருவம் கீழே சாய்ந்தது.

டேய் என்று கர்ஜிக்க!! அந்த அறையெங்கும் வெளிச்சம் பரவ உள்ளிருந்து மூன்று நான்கு பேர் திபுதிபுவென அந்த இடத்திற்கு வந்தனர். உள்ளே வந்தவர்களின் கண்களில், உக்கிரத்துடன் உடலெங்கும் இரத்த கறைகளுடன் நிற்கும் தங்களின் எஜமானனின் முகமும், கீழே மல்லாக்க கிடந்தவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றனர்.

மூவரில் தலைவானாகப்பட்டவன் ஐயா என்று, சற்று முன்னால் வந்து தலை குனிந்து நிற்க,, டேய் இதை சுத்தம் பன்னுங்க என்று இடியென்ற குரலில் சொல்லிவிட்டு மாடியில் இருக்கும் ஒரு அறைக்கு சென்றவனின் கண்களில் இப்போது வெறி அதிகமாக இருந்தது.

அந்த அறையில் இருந்த பெரிய கட்டிலில் இரண்டு கைகளும் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருக்க., காலும் அதே போல சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்த உருவத்தை பார்த்தவனின், விழிகளில் சிவப்பேறியது. உடல் தேய்ந்து, நிறம் கருத்து வெறும் எலும்பு கூடுகளாக மட்டுமே கிடந்தவனின் மீது தன் கையை வைக்கவும், மூடியிருந்த கண்கள் சட்டென திறக்க… தன் எதிரே நின்றவனை புரியாத பார்வையை பார்த்தது.

சிறிது நேரத்தில் தன் மீது படிந்திருந்த கையை பட்டென தட்டிவிட்டவன், கண்களில் கோபமே பிரதிபிலித்தது. டேய் என்ன விடுடா நான் போகனும், என் நிலாகிட்ட போகனும் டா, என்னை விடு டா என கத்தவும், நிலா நிலா நிலா தானா? வேற எதுவுமே உனக்கு நியாபகத்துக்கு வராதா? என சங்கிலியால் பிணைக்கப்பட்டு கிடந்தவனிடம் கத்த!!! அவனோ வேறு ஏதும் நடக்காதது போல பொம்மையை வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பிக்கவும், கோபத்தோடு அந்த அறையில் இருந்து வேகமாக வெளியேறினான்.

அறையில் இருந்து வெளியே வந்தவன் கதவை மூடி தாழிட்டு விட்டு கீழே இறங்கினான். அவன் தன் ஆட்களை பார்வையால் தேடினான். அதே நேரம் மூவரும் உள்ளே வேகமாக வந்தனர். அவர்களை பார்த்ததும், என்னங்கடா பாடியை டிஸ்போஸ் பன்னிட்டிங்களா? என சாதாராணமாக கேட்க,

ம்ம் செஞ்சிட்டோம்ங்க ஐயா, என பணிவுடன் சொல்லவும்,

சரி தம்பியை பார்த்துக்க நேரத்துக்கு சாப்பாடு மருந்தை கொடு, எதாவதுன்னா எனக்கு உடனே போன் பன்னு என்றவன் தான் நினைத்தது நடக்காமல் போன கோபத்தில் வேகமாக அந்த வீட்டில் இருந்து கிளம்பினான்.

அர்ஜுனின் வீடு:

காலையில் சொந்தபந்தங்களின் சந்தோச கூச்சல், எங்கும் புன்னகையை மட்டுமே சுமந்திருந்த முகங்கள் என அர்ஜுனின் வீடே விழாக்கோலம் பூண்டது போல கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கல்யாணத்திற்காக கட்டிய தோரணங்கள் மற்றும் வாழைமரங்கள் என அலங்காரத்துடன் இருந்த வீடு இப்போது வெறிச்சோடி கிடந்தது.

வந்திருந்த சொந்தங்களிடம் மன்னிப்பை வேண்டிய ரங்கநாயகி மருமகளின் திடிர் உடல் நலக் குறைவால் எந்த சம்பிரதாயமும் இப்போதைக்கு இல்லை என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தவர், மெதுவாக தன் மகனிடம் வந்து, தேவாவின் உடல்நிலையை பற்றி கேட்க!!

நல்லாருக்கா அம்மா ஆனால் இத்தனை பேர் முன்னால இப்படி ஆகிட்டேன்னு நினைக்கும் போது தான் குழப்பமா இருக்கும்மா? யார் செஞ்சாங்க ஏன் எதுக்கு பிஸ்னெஸ்ல எதிரிங்க இருக்காங்க ஆனால் இந்தளவுக்கு போவாங்களானு நினைக்கிறேன். இந்த விசயம் மட்டும் வெளியே தெரிஞ்சா பிராப்ளம் ஆகிடும்மா என தன் கவலையை சொல்லவும்,

டேய் மகனே, வீட்டுக்கு வந்த மருமகளுக்கு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த அன்றே, இப்படி ஆகிடுச்சேன்னு கவலைப்படாமல், விசயம் வெளியே தெரிஞ்சா பிரச்சனைனு பேசுறியே என்னடா இது என்றவரின் குரல் அமைதியாகவே ஒலித்தாலும் அதில் இருந்த கண்டிப்பை கண்ட கைலாஷ் சாரிமா என சொல்லிவிட்டு தலையை கவிழ்ந்தார்.

அம்பிகை அர்ஜுன் என்ன செய்றான்.

அவன் தேவா பக்கத்தில் தான் அத்தை இருக்கான். அவன் முகத்தை பார்க்க முடியலை, சங்கர் அண்ணன் போலீஸில் சொல்லுங்கன்னு சொல்லிட்டு போய் இருக்கார் என்று கவலையுடன் சொல்லவும், சரி சரி நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல், அர்ஜுனுக்கு ஜூஸை கலந்து எடுத்து வா தெம்பா இருக்கும், கூடவே சந்தோஷுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் எடுத்துட்டு வா தேவா தேவானு அவள் பக்கத்தில் இருந்து அரற்றிகிட்டே தான் இருக்கா என சொல்லவும், சரிங்க அத்தை என வேகமாக கிட்சனிற்கு சென்றார்.

இளா முதல்ல அழுகையை நிறுத்து அதான் தேவாவுக்கு ஒன்றும் ஆகலையே ஏன் இன்னும் நடந்ததையே நினைச்சிட்டு அழற என பொறுமையாக எடுத்து சொல்லவும்,

இல்ல தேவா பயந்த மாதிரியே இப்போ நடந்துடுச்சி அதுவும் இத்தனை வருடங்கள் கழிச்சி நடந்துடுச்சி என இளா பதற்றத்தில் புலம்ப சந்தோஷின் விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

ஹேய் நீ என்ன சொல்ற? தேவா பயந்தமாதிரின்னா என்ன அர்த்தம் என கேட்க… அப்போது தான் தன்னவனிடம் பதற்றத்தில் உலறிவிட்டதை நினைத்து உள்ளுக்குள் கலங்கியவளுக்கு கணவனின் முகத்தை பார்க்காமல், என்ன உலர்றீங்க தேவா பயந்த மாதிரினு என அவனிடம் கேள்வியை கேட்க!!

ஏய் நான் உலர்றேனா? என இளாவையே உறுத்து பார்த்தவன் அவளுடைய முகத்தில் தெரிந்த பதற்றத்தை கண்டதும், எதுவோ சரியில்லை என மனதுக்குள் நினைத்தவன், அறையில் இருந்து வேகமாக வெளியேறினான்.

அப்பாடா நல்லவேளை தோண்டி துருவி என்ன ஏதுன்னு கேள்வி கேட்கல என மனதுக்குள் நினைத்து நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டவளுக்கு, தன் அப்பா அம்மாவின் நியாபகம் வர!! அய்யோ, தேவாவுக்கு இப்படி நடந்தது மட்டும் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா? என்ன நடக்கும்னு தெரியலையே என கவலையில் ஆழ்ந்தாள் இளா.

 
Last edited:
Status
Not open for further replies.
Top