❤என் வானம்❤-6
சென்னையின் மத்திய பகுதியில் அரசியல்வாதிகள், சினிமாத்துறையில் பிரபலமானவர்கள் வசிக்கும் பகுதியில், உயர்ரகமான கார் ஒன்று சாலையில் சீறி பாய்ந்தது.
காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் வயது முப்பது முதல் முப்பத்தியைந்து இருக்கலாம். அவனின் முகம் கோபத்தில் சிவந்து இருக்க" கண்களில் இருந்த கொலைவெறியில் காரின் முன்னால் யாரேனும் வந்தால், அவர்களின் உயிர் எமனின் திருவடியை சரணடைவது உறுதி.
அவனின் முகம் கடுகடுவென தான் நினைத்தது எதுவுமே நடக்கவில்லையே என்ற கோபத்தில், அடுத்து என்ன என அவன் மனம் ஒரு பக்கம் யோசித்துக் கொண்டு இருந்தது. காரை லாவகமாக ஓட்டியவனின் பார்வை அவ்வப்போது அருகில் இருந்த செய்தித்தாளையே வெறித்தபடி இருந்தது என்பதை விட அந்த பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த செய்தியில் தான் இருந்தது என்றும் சொல்லலாம், இறந்து போனதாக நினைத்த இருவருமே இத்தனை வருடங்கள் கழித்து திடிரென ஒரு நாள் கண் முன்னால் வந்தால் எப்படி இருக்கும், இத்தனை வருடங்கள் தான் கட்டி வைத்த கோட்டைகள் தன் கண் முன்னாலே சுக்குநூறாக உடைந்து சிதறுவதை போலவும் அதை தடுக்க இயலாத தன்னுடைய கையாலாக நிலைமையை நினைத்து பலத்த அதிர்ச்சிக்கு உள்ளானான். இதுவரைக்கும் நான் செய்த குற்றத்திற்கு சாட்சிகளாக இருந்தவர்கள் எல்லாருமே பூமியில் வாழ்ந்தார்கள் என்று ஆதாரமே இல்லாமல், உருத்தெரியாமல் போய்விட்டனர். ஆனால் இறந்து போன இருவருமே நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாய் என் கண் முன்னால் வந்து நிற்கிறார்களே எப்படி??? என அவன் மூளை வேகமாக யோசிக்க திடிரென்று பித்து பிடித்தவன் போல கத்தினான்.
நோ!! நோ!! நோ!! நெவர்!! என்று கத்தியவன் சட்டென காரை சடன்பிரேக்கிட்டு நடுரோட்டில் நிறுத்தவும், பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிகள் நிலைக்குழைந்து போய் ஒன்றோடு ஒன்று மோதி நின்றது.
டேய் நீ அர்ஜுன் என்று பெயரை மாற்றிக் கொண்டு வந்தால், நீ அவன் இல்லை என்று நான் நினைத்து விடுவேனா ஏசிபி கிருஷ்ணா!!! இந்த கையால் தானே உன் வாயில் விஷத்தை ஊற்றினேன், நீ இறந்ததை உறுதி செய்த பிறகு தானே நான் உன் உடலையே தூக்கி போட்டேன், ஆனால் நீ மறுபடியும் பிழைத்து வந்திருக்கிறாய், ஏன் மறுபடியும் நீங்க இருவரும் என் கண் முன்னால் வந்தீங்க!! என்று தனக்குத் தானே ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தான்.
அதே நேரம் காருக்கு வெளியே ஒரே சத்தம் கூச்சல் என்று அதிகமாக கேட்டது. எவன்டா!! அது? காரை நடுரோட்டில் நிப்பாட்டியது. பின்னால் இருந்த காரிலிருந்து நாலைந்து பேர் கோபத்துடன், அவனுடைய காரின் கதவை படபடவென தட்ட,
கார் கதவை தட்டும் சத்தத்தில், அப்போதுதான், தான் எங்கே இருக்கிறோம் என்பதை சுற்றிலும் நோட்டம் இட்டவன், காருக்குள் இருந்தபடியே வெளியே நின்றவர்களை உக்கிரமாக பார்த்துக் கொண்டே மெதுவாக கார் கண்ணாடியை இறக்கவும், வெளியே கோபத்துடன் நின்றிருந்த அனைவரும், பயத்தில் நடுநடுங்கி போயினர்.
ஐ…! ஐ.. யா! அ…! அதூ!! எங் கா….! என வாயில் தந்தியடித்துக் கொண்டு நிற்க கண்டவன், என்னங்கடா துளிர் விட்டு போச்சா" என் காரையே உடைக்கிற அளவுக்கு தட்டுறீங்க என்று கண்களில் கனலை தேக்கி கர்ஜனைக் குரலில் கேட்கவும்,
ஐயா!! எங்களை மன்னிச்சிடுங்க, என்று அனைவரும் அப்படியே கீழே விழுந்து மன்னிப்பை கேட்க, ஒரு வித அலட்சியத்தோடு காரை உயிர்பித்துக் கொண்டு விரைந்தான்.
அப்பாடா!!! தப்பிச்சோம்டா!!! எமனோட வாசலுக்கே, போய்ட்டு உயிரோட திரும்பி வந்துட்டோம் என ஆளாளுக்கு புலம்பியபடியே சேதாரம் வண்டியோடு போனதை நினைத்து நிம்மதியுடன் கலைந்து சென்றனர்.
சீறி பாய்ந்து சென்ற காரை! நின்று பார்த்த சிலரில், படுபாவி போற வழில எங்கேயாவது அடிப்பட்டு செத்து ஒழிந்தாலும் ஊரு நல்லாருக்கும் நாடும் நல்லா இருக்கும் என மனதுக்குள் புகைந்தபடியே சென்றனர்.
கார் ஹாரன் சத்தத்தில் வேகமாக கேட்டை திறந்த காவலாளியின் கால்கள் நடுங்க ஆரம்பித்து முகம் பயத்தில் வெளிறி போய் நின்றிருந்தான்.
காரை நிறுத்திவிட்டு வெளியே இறங்கி நின்றவன் தன் விரல் சொடக்கிட்டு வாட்ச்மேனை அழைக்க, பயத்துடன் வேகமாக முதலாளியின் அருகே வந்த வாட்ச்மேனின் கண்ணம் திகுதிகுவென எரிய, கண்ணத்தில் கையை வைத்தபடி கண்களில் பயத்துடன் நின்றவன், ஐயா இனிமேல் இப்படி நடக்காதுங்க!!! பைப்பை ஆஃப் பன்ன போனேனுங்க என்று அழுதபடி சொன்னவனிடம், இதான் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங் என்று எச்சரித்துவிட்டு வேகமாக வீட்டிற்குள் நுழைய, கார் டிரைவர் வேகமாக வந்து நிறுத்தியிருந்த காரை தள்ளிக் கொண்டே போய் ஷெட்டில் நிறுத்தினான்.
வீட்டிற்குள் வேக நடையுடன் உள்ளே சென்றவனின் முன்பு, ஐயா என்றபடி பயத்துடன் நின்றான் வேலைக்காரன்.
வேகநடையுடன் சென்றவனின் கால்கள் சட்டென நின்றது. என்ன!!! என்று கேட்கும் போதே அவன் குரலில் இருந்து வெளிவந்த கடுமையைப் பார்த்ததும்,
ஐயா அம்மா இன்னைக்கும் சாப்பிடல என சொன்னவனின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டவன், டேய் என்று அந்த மாளிகையே அதிரும்படி கத்தியவனின் முன்பு வேலைக்காரர்கள் அனைவரும் வந்து பயத்துடன் நின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் உற்று பார்த்தபடியே வந்தவன் மாடிப்படியின் கீழே தன் கையை பிசைந்தபடி நின்று கொண்டிருந்தவளின் முன்பு வந்து நின்றான்.
சார் நான் அவங்களை சாப்பிட வைக்க எவ்வளவோ, ட்ரை பன்னினேன் பட் அவங்க எல்லாத்தையும் கீழே கொட்டிட்டாங்க சாப்பிடமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க மகேந்தர் மகேந்தர்னு யாரோட பெயரையோ சொல்லி கத்துறாங்க!! என பயமும் பதற்றமும் முகத்தில் பிரதிபிலிக்க படபடவென சொல்லவும்,
அய்யோ அண்ணே இந்த அம்மாவும் அந்த பேரை சொல்லிட்டாங்களே, நம்ம ஐயா என்னப் பன்ன போறாரோ என வேலைக்காரர்கள் தங்களுக்குள் கிசுகிசுக்க!!!
எந்த பெயரை கேட்டால் தன் உடலும் உள்ளமும் அனலைப் போல எரியுமோ, அதே பெயரை இவள் சொல்லவும், அதே நேரம் அவனின் பிஏ ஐயா என்றபடி அருகில் வந்து நிற்க, பிஏவை ஓங்கி ஒரு அறைவிட்டவன், இன்னும் ஒரு நிமிடம் கூட, இவள் இந்த வீட்டில் இருக்க கூடாது என உறுமிவிட்டு மாடியில் இருக்கும் தன் அம்மாவை பார்க்க விரைந்தான்.
சார்ர்ர் என்றழைத்த அப்பெண்ணின் முகம் வெளிறி போய் இருக்க!! எம்மா போமா இங்கேயிருந்து உன் சம்பளம் வீட்டை தேடி வரும், இன்னும் ஒரு நிமிடம் நீ இங்கே இருந்தாலும், நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை என்று சொல்லவும், ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.
அர்ஜுனின் வீடு:
மயக்கத்தில் இருந்து மெல்ல தன் கண்களை திறந்தவள், சுற்றிலும் தன் பார்வையால் தன்னவனை தேடினாள்.
தேவா யாரை தேடுகிறாள் என்று தெரிந்த இளா, தேவா அர்ஜுன் அண்ணா வெளியே போயிருக்கார் என்று சொல்லவும், தேவாவின் முகம் சுருங்கியது.
பார்டா உடனே முகம் டல்லாகிட்டு என இளா வேடிக்கையாய் பேச, எழ முயற்சி செய்த தேவாவின் வலது கையில் வலி அதிகரிக்கவும், அவளுடைய முகத்தில், வேதனை படற, ஏய் என்னடி பன்ற கையை அசைக்காதே ரொம்ப வலிக்கும் என சொல்லி மறுபடியும் தேவாவை படுக்கவைத்தாள்.
கால்யாணப் புடவையோடு தான் பெட்டில் இருப்பதை கண்ட தேவா, இளாவின் கையை பிடித்து தன்னை காண்பித்து எனக்கு என்ன ஆச்சு என்று கேட்க!!! இளாவின் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
தேவாவின் அருகே அமர்ந்தவள் அதிர்ச்சி விலகாத கண்ணோடு, தேவா உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாதா? என கேட்க
ம்ஹூம் என்று தலையை ஆட்டியவள், உடனே எல்லாரும் என் மேல கோபமா இருக்காங்களா, என சைகையில் கேட்க!!
ஏன் தேவா அப்படி கேட்கிற?
இளா, கேட்டதும் தேவாவின் கண்கள் கண்ணீரை சுரந்தது.
தேவாவின் கண்ணில் கண்ணீரை பார்த்தவள், ஹேய் நீ இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கியா? உன் மேல யாருக்கும் கோபமே இல்லை நீ முதல்ல இதை குடி என ஜூஸை அவளுக்கு கொடுக்க… வேண்டாம் என மறுத்தவளை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தாள்.
ஜுசை குடித்ததும், மெதுவாக எழ முயற்சி செய்ய, எழ வேண்டாம் என மறுத்த தோழியை கொண்டே மெதுவாக எழுந்தவள், இளா மறுக்க மறுக்க அவளின் உதவியோடு குளித்து முடித்தவள், வேறு உடையை மாற்றிக் கொண்டவள் தன் வலது கையை அசைத்தால் வலி அதிகரிக்க, அதை தன் முகத்தில் காட்டாமல் மறைத்தாள். இதை விட அதிகமான வலியை அனுபவித்தவளுக்கு தன்னுடைய கை வலி பெரிதாக தெரியவில்லை.
அதே நேரம் தேவாவின் அறைக்குள் வந்த அம்பிகை, தேவா வேறு உடையில், நின்று கொண்டிருப்பதை பார்த்ததும், பதறியவர் தேவா என்னம்மா ஏன் எழுந்துட்ட இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடும்மா கையில் பெயின் அதிகமாக இருக்கும் என அக்கறையுடம் சொல்லவும்,
தன் மாமியாரின் அன்பில் உள்ளம் உருகியவள், அவருடைய கையை பற்றி தன்னோடு அமர வைத்த தேவா, நான் நல்லா இருக்கேன் என்றவள், பாட்டி எங்கே என்று அவரைப் போல நடித்து கேட்க!!!
ஹேய் போக்கிரி அவங்கள மாதிரி இமிடேட் பன்றியா!!! என கோபத்துடன் கேட்க!!
தேவாவின் முகம் சுருங்கியது. தன் காதில் ஒரு கையை வைத்து சாரி என்று கண்களால் இறைஞ்சியவளிடம், அம்பிகையின் பொய்யான கோபம், சட்டென மறைந்து விட, தேவாவின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவர், அவங்களும் உன்னை பார்க்க தான் துடிச்சிட்டு இருக்காங்கடா என சொல்லவும், தேவாவின் முகம் மலர்ந்தது.
தேவா, அர்ஜுனோட பாட்டி பார்க்க கரடுமுரடா கண்டிப்பானவங்களா இருந்தாலும், அதிலேயும் அவங்க பாசம் தான்மா இருக்கும் என்க,. தலையை ஆட்டினாள் தேவா.
தன் அத்தையை வற்புறுத்தி இப்போவே பாட்டியை பார்க்க வேண்டும் என அழைத்துக் கொண்டு அவருடைய அறைக்கு சென்றாள் தேவா.
தேவா அர்ஜுனின் பாட்டியை சந்திக்க சென்ற அதே நேரம், அர்ஜுன் தன்னுடைய இரகசிய இடத்தில் இருந்தான்.
டேய் அர்ஜுன் என்னடா யோசிக்கிற, சந்தோஷின் கேள்வியில் தன்னிலைக்கு வந்த அர்ஜுன், அவனின் முன்னால் சிறிய அளவிலான உருளை வடிவத்தில் ஒரு பொருளை போட்டு இதை பார்டா?
மிகச்சிறிய ஊசி அளவில் இருந்ததை பார்த்ததும், என்னடா இது, இவ்ளோ சின்னதா உருளையா இருக்கு என பதில் கேள்வி கேட்டவனிடம்,
புல்லட் டா இதனால் தான் அவளை சுட்டு இருக்கான் என்று சொன்னதும், வாட்!! என அதிர்ந்தான் சந்தோஷ்.
யார்டா இப்படி செஞ்சிருப்பாங்க!! அதுவும் நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து தேவாவை கொல்ல பார்த்து இருக்காங்கன்னா!! இதை சாதாரணமா விடக்கூடாது மச்சான் என்றவனிடம்,
ம்ம் நானும் அதைத்தான் யோசிக்கிறேன்டா!! என்னை விட அவள் மேல யாருக்கு இவ்வளவு வெறி இருக்குன்னு, எனக்கும் உடனே தெரிஞ்சாகனும், அதான் வீட்டில் இருந்த ஃபுட்டேஜை எடுத்துட்டு வந்துருக்கேன் என்றவனை முறைத்தான் சந்தோஷ்.
டேய் இது உனக்கே ஓவரா தெரியலை, என கடுப்படிக்க?!
எதுடா!! எது தெரியலை, தான் உயிரோட இருக்கும் போதே செத்துட்டதா அவனை நம்ப வைத்து ஏமாத்தினவள் மேல எனக்கு எப்படி டா இறக்கம் வரும், என்று அந்த இடமே அதிரும்படி கத்தினான் அர்ஜுன்(கிருஷ்ணா) தன்னோட காதலி இல்லாத உலகத்தில் தனக்கும் இனி இடமில்லைனு, அந்த சோகத்திலேயே, விஷம் குடிச்சி தற்கொலை செய்து கொண்டு செத்து போனானே, எங்களைப் பற்றி கொஞ்சமாவது நினைச்சி பார்த்தானா அவன்!!! இல்லையே!!, இந்த ஏமாத்துக்காரி பொய்யானவளுக்காக தன் உயிரையே கடைசில விட்டானே, அதே மாதிரி அவன் இல்லாத இந்த உலகத்தில் இவளும் வாழக்கூடாது, என் கூட வாழ பிடிக்காமல், இவனையா நாம காதலிச்சோம்னு நினைத்து நினைத்து வருந்தி வாழ முடியாமல் தற்கொலை பன்னிக்கிட்டு செத்து போகனும், அதுக்கு குறுக்கே எவன் வந்தாலும், அவனுங்க சாவு என் கையால் தான் என கண்கள் சிவக்க உரைத்தவனை பார்த்து சந்தோஷ் பலமாக அதிர்ந்தான்.
டேய் உன் மனசுல இந்த எண்ணம் தான் இருக்காடா!! பாவம்டா அவள், அவளைப் பற்றி எதுவுமே தெரியாமல், நீ இந்தளவிற்கு வெறுக்கிறது ரொம்ப தப்புடா மச்சான்… இளா வேற என்னன்னமோ சொல்றாடா!! என மேலும் தேவாவை பற்றி பேசப் போனவனை தடுத்தான் அர்ஜுன்.
ஹேய் முதல்ல நிறுத்துடா சந்தோஷ். நீ அவளைப் பற்றி எவ்ளோ தான் சொன்னாலும் என் மனசு இறங்காது… அதுல இருந்த ஈரம் எல்லாம் எப்போவோ வற்றி போய்டுச்சி!! இப்ப உன் முன்னாடி இருக்கிறவன் மனசுல ஈரமே இல்லாத கல் நெஞ்சக்காரன், அவளைப் பற்றி பேசி டைம் வேஸ்ட் பன்னாத, முதல்ல வீட்டுக்குள் வந்தவன் யார்னு பார்க்கனும் என அவனின் போலீஸ் மூளை யோசிக்க ஆரம்பிக்கவும், வீட்டிற்குள் இருந்த ஃபுட்டேஜை பார்த்தவர்களுக்கு வீட்டில் இருந்த சொந்தபந்தங்களின் கூட்டத்தில் அவனைப்பற்றிய அடையாளம் தெரியாமல் போகவும், கேட்டில் இருந்த ஃபுட்டேஜை ஓட விட்டான்.
ஃபுட்டேஜை முழுமையாக பார்த்த இருவரும், சந்தோஷ் இதுல வேகவேகமாக ஓடிப் போறானே அவன் தான் சுட்டவனா இருக்கனும், பாரு அவன் கேட்டை விட்டு வெளியே போனவுடனே ஒரு கார் வந்து நிற்கிறது. கார் வேகமாக போனதால நம்பர் சரியா கேப்சர் ஆகல, இரண்டு நம்பர் தான் தெரியுது அதுவும் சரியா தெரியலை, என்றவன் ஜூம் செய்யவும், கலங்களாக தெரிந்தது. அந்த பிக்கை பிரிண்ட் அவுட் எடுத்தவன், சந்தோஷிடம் கொடுத்து இதுல எந்த நம்பராக இருக்கலாம்னு நோட் பன்னிக்கோ என சொல்லவும், அவனும் மற்றதை மறந்து விரைந்து செயல்பட்டான்.
கடவுளே இவன் மனசை நீ தான் மாற்றனும், தேவா மேல எந்த தவறும் இல்லைனு இவன் தெரிஞ்சிக்கிற காலம் சீக்கிரம் வரனும், என்று மனதுக்குள் நினைக்க… சந்தோஷின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட அர்ஜுனோ?!! தன் நண்பனை நக்கலாக பார்த்து, டேய் மச்சான் நடக்கவே நடக்காத விசயத்தை நினைச்சி நேரத்தை வீணடிக்காதே என்க.,
கண்டிப்பா நடக்கும்டா!! எந்த கண்ணு தேவா மேல வெறுப்பை கொட்டுதோ! அந்த கண்ணுல தேவாவுக்காக நீ தவிக்கிற தவிப்பை நான் பார்ப்பேன்டா!! அதுக்கு ரொம்ப நாளும் இல்லை வெகு தூரத்திலும் இல்லை என சந்தோஷ் சவால் விட!!
பார்க்கலாம்டா மச்சி!! நீ நினைத்தது நடக்கிறதா இல்லை நான் நினைத்தது நடக்கிறதானு பார்க்கலாம், டா என்றவனை முறைத்துக் கொண்டு நின்றான் சந்தோஷ்.

என் வானிலே நீ வெண்ணிலா...கருத்துத் திரி
என் வானிலே நீ வெண்ணிலா...கருத்துக்களை இங்கே பதிவிடவும்
sangamamnovels.com