கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா-7

Status
Not open for further replies.

Jothiramar

Moderator
Staff member
❤என் வானம்❤-7


அகல்யா எனக்கு அர்ஜுன் மேல சந்தேகமா தான் இருக்கு, அவனால தேவாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி அப்புறம் நான் பொல்லாதவனா மாறிடுவேன் என்ற கணவனின் பேச்சை கேட்டதும் அகல்யாவிற்கு சுர்ரென கோபம் வந்தது.

"மண்டபத்தில் இருந்து வீட்டிற்குள் வந்ததும், வராததுமாக பேசும் கணவனை முறைத்து விட்டு" என்னங்க இப்படி பேசுறீங்க! அவர் நம்ம தேவாவோட புருஷன், ஒரு வகையில் நமக்கு மகன் முறை என்று கடிந்து கொள்ள...

இல்ல அகல், கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதில் இருந்து நானும் பார்க்கிறேன் ஒரு தடவை கூட தேவாவை பார்க்கனும்னு இந்த வீட்டுக்கு வரல, அது மட்டுமில்லாமல், எந்த விசயத்திலும் ஈடுபடாமல் இருந்த மாதிரி தான் இருந்துச்சி காதலிச்ச பொண்ணை கல்யாணம் செய்றவன் எப்படி இருப்பான்னு எனக்கும் தெரியும்டி என்று மீசையை முறுக்கஸ

ஆமாமா நல்லாவே தெரியும், காதலிச்சானு சொல்லி தங்கையோட உறவையே வெட்டி விட்டவர் தானே நீங்க, அவள் இப்படி பாதிலேயே போவானு தெரிஞ்சா உங்களை மீறியாவது எங்கே இருக்கா எப்படி இருக்கானு தேடியிருப்பேன் என கணவனின் செயலை குத்திக்காட்டவும் மறக்கவில்லை அகல்யா.

மனைவியின் சொல்லம்பில் வெகுவாக தாக்கப்பட்ட அமுதவாணன் எதுவுமே பேசாமல் தளர்ந்த நடையுடன் சென்றார்.

ச்சே நான் ஒருத்தி, நல்ல நாளும் அதுவுமா அவர் மனசு கஷ்டப்படுற மாதிரி பேசிட்டேன்" என தன்னையே திட்டிக் கொண்டவர், நாளை மணமக்கள் வரும் போது பளிச்சென்று இருக்க வேண்டும் என்று உடல் அசதியையும் பொருட்படுத்தாமல் தேவாவின் திருமணத்திற்காக, கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்த வீட்டை ஒழுங்க படுத்த ஆரம்பித்தார் அகல்யா.

அர்ஜுனும் சந்தோஷும் காரின் எண்ணை கண்டுபிடிக்க செய்த முயற்சி எல்லாம் தோல்வியில் முடிய, ச்சே என்னடா இது கண்டே பிடிக்க முடியல என்ற அர்ஜுனின் கோபத்தை பார்த்த சந்தோஷ்

டேய் வெறும் இரண்டே இரண்டு நம்பரை வச்சிக்கிட்டு எப்டிடா கண்டுபிடிக்க முடியும், அந்த வண்டி எந்த ஊரில் ரிஜிஸ்டர் ஆகிருக்குன்னு தெரியனும், என்றவன் இதை ஈசியா கண்டுபிடிக்க ஒரே வழி தான் இருக்கு என்றவனிடம்,

அப்படி என்ன வழி இருக்கு என கேள்வியாக பார்த்த அர்ஜுனிடம்,

நீ கிருஷ்ணாவா மாறினா எல்லாமே உனக்கு ஈசி தான்டா யார் என்ன எவன்னு ஒரே நாளில் குற்றவாளி உன் காலடியில் இருப்பான் என்றதும்,

அர்ஜுனின் விழிகளில் கோபத்துடன் இந்த ஜென்மத்தில் நான் இந்த காக்கி உடையை போடமாட்டேன்னு உனக்கு தெரியும் தானே சந்தோஷ். இறுகிய குரலில் கேட்டான் அர்ஜுன்.

டேய் நீ ஆசைப்பட்டு போலீஸ் ஆனடா, உன் கனவு லட்சியம் எல்லாத்தையும் கடந்த ஐந்து வருடமா பூட்டி வச்சிருக்கியே உன்னால ஒரு நிமிடம் நிம்மதியா இருக்க முடியுதா? டிபார்ட்மெண்ட்ல ஏசிபி கிருஷ்ணா ன்ற பெயரை கேட்டாலே அவன் அவன் ஒரு அடி தள்ளி நிற்பான் இப்பவாவது எல்லார்கிட்டையும் நீ யாருன்ற உண்மையை சொல்லுடா? இன்னும் எத்தனை நாள் எல்லாரையும் இருட்டிலேயே வச்சிருப்ப என்று கத்திய சந்தோஷ் அர்ஜுனின் வலது கை சட்டையின் கைப்பகுதியை கிழித்தெரிந்தவன் அர்ஜுனின் முகத்தினை நோக்கி இது என்னன்னு தெரியுமா? இது தான் நீ அர்ஜுன் இல்ல கிருஷ்ணா என்பதற்கான அத்தாட்சி இதை உன்னால ஒன்றுமே செய்ய முடியாது என கத்தியவன், அர்ஜுனின் முகத்தையே வெறித்து பார்க்க, அவனோ வேறு ஒரு சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவன் ஒன்றுமே நடக்காதது போல வீட்டுக்கு போகலாமாடா இப்போவே டைம் ஆகிட்டு அம்மா வேற தேடுவாங்க என சாதாரணமாக சொன்னவனை பார்த்து

ஏன் கிருஷ்ணா, அர்ஜுன் மாதிரி நடந்த, அவனை மாதிரி பேசின ஏன் அவனைப் போலவே உன்னை மாத்திகிட்ட, இப்போ அவனை காதலிச்ச பெண்ணை நீ கல்யாணம் பன்னிருக்க கேட்டா அவளை பழிவாங்க தான்னு சொல்ற, உன்னால வாழ் நாள் முழுக்க அர்ஜுனா இருக்க முடியும்னு நினைக்கிறியா? ஏன்டா இந்த அடையாளத்தையும் நீ ப்ளாஷ்டிக் சர்ஜரி செஞ்சி அழிச்சிருக்கலாமே ஏன் இதை அப்படியே வச்சிருக்க என கேட்டதும் அர்ஜுனின் கண்கள் கோபத்தில் சிவந்தது.

ஒரு நிமிடம் தன் கண்களை மூடி திறந்த அர்ஜுன் வாடா போகலாம் உன் தங்கச்சி மயக்கம் தெளிந்து எழுந்துட்டாளானு தெரியலை, என இயல்பான குரலில் பேசியபடியே அந்த இடத்தில் இருந்து வெளியேற,

ச்சே இவனை என நொந்தவாறே சந்தோஷும் வேறு வழியின்றி அவனோடு சென்றான்.

பாட்டியை பார்க்க வேண்டும் என்று அம்பிகையை வற்புறுத்தி அழைத்து வந்தாலும், அவருடைய அறைக்குள் செல்லாமல் வெளியேவே நிற்க.. தேவா உள்ளே வாமா அத்தை ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்க.. அவளுடைய கண்கள் தன் கையில் இருந்த கட்டை பார்த்துவிட்டு வேண்டாம் என தலையை ஆட்டி மறுத்தாள்.

தேவாவின் கண்களில் இருந்த பயமும் தவிப்பையும் பார்த்த அம்பிகை சரி நீ இங்கேயே இரு நான் போய் அத்தை என்ன செய்றாங்கன்னு பார்த்துட்டு வரேன் என உள்ளே செல்ல இளாவோ தேவாவின் அருகே வந்தாள். தனியாக நின்றவளை பார்த்ததும்,

என்னடி பாட்டியை பார்க்க அவ்ளோ வேகமாக வந்த ஏன் இங்கேயே நிற்கிற? என்று இளா கேட்டதும்,

எனக்கு பயமா இருக்குடி, பாட்டி என்ன சொல்வாங்கன்னு! என சைகையில் சொல்லவும்,

தோழியின் முகத்தில் இருந்த பதற்றத்தை பார்த்துவிட்டு சரி சரி நீ ஒன்னும் கவலைப்படாதே நீ என்ன வேண்டுமென்றா செய்த இல்லையே, என ஆறுதலாக சொல்லவும்,

தேவாவின் மனம் மட்டும் ஆறுதல் அடையாமல் தவித்தது. அவள் மனதில் பல கேள்விகள் விஸ்வரூபம் எடுத்தது. அர்ஜுனை சுற்றியே யோசித்துக் கொண்டு இருந்தாள். கடந்து போன ஐந்து வருடத்தில் அவனின் மாற்றத்தை நினைத்து பார்த்து பெண்ணவளின் கண்கள் கலங்கியது. பழைய நினைவுகள் அவள் மனதுக்குள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொண்டு நியாபகத்திற்கு வந்து அலைக்கழித்தது. தன்னவனின் கண்களில் தனக்கான காதலை ஒரு முறை கூட நான் காணவில்லையே நான் சொன்ன பொய்யால் என்னை முற்றிலும் வெறுத்துவிட்டானா? என பெண்ணவளின் உள்ளம் தவித்தது.

தேவாவின் முகத்தையே உற்று பார்த்த இளாவுக்கு அவளின் மனம் படும் துன்பத்தை எண்ணி தவித்தவள் இவளை பாட்டியோட அறைக்கே அழைத்துக் கொண்டு போவோம் இங்கேயே நின்றால் கண்டதை யோசிப்பா என நினைத்தவள் தேவாவுடன் பாட்டியின் அறைக்குள் நுழைந்தாள்.

அம்பிகை அறைக்குள் நுழைந்ததும் அவர் கண்ணில் பட்டது மாமியாரின் தியானம் தான். தன் கண்களை மூடிக் கொண்டு ருத்திராட்சை மாலையை கையில் வைத்தபடி ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு இருந்தவரை பார்த்ததும், ம்கூம் அத்தை இதை கையில் எடுத்துவிட்டால் முடிக்கும் வரை தன் கண்ணை திறக்கமாட்டார் என தெரிந்தமையால் அவருடைய அறையில் இருந்து மெதுவாக திரும்பியவர் தேவாவையும், இளாவையும் பார்த்ததும், வாயில் ஒற்றை விரலை வைத்து ஷ்ஷ் என்க..

பாட்டி தியானத்தில் இருப்பதை பார்த்த இருவரும் சரி என்று வேகமாக தலையை ஆட்டினர். மூவரும் அவரின் அறையில் இருந்து வெளியேற போகவும், ரங்கநாயகியின் கோபமான குரலில் நின்றனர்.

அம்பிகை!! என்றதுமே மூவரும் திரும்பிட, பாட்டியின் முகத்தில் தெரிந்த கோபத்தை பார்த்து தேவாவின் உடல் நடுங்கியது.

மெதுவாக இருக்கையில் இருந்து எழுந்தவர், தேவாவின் மீது சுட்டெரிக்கும் பார்வையை வீசினார். பாட்டியின் கோபப்பார்வையை தாங்க முடியாமல் அஞ்சினாள் தேவா.

தன் கையில் இருந்த தடியை தேவாவின் மீது வைத்து மருமகளை அழைத்தார்.

அம்பிகை ஏன் இவளை இங்கே அழைச்சிட்டு வந்துருக்க?? என்று தடியை தேவாவின் மீது வைத்து அழுத்தினார், குரலை உயர்த்தாமலேயே கோபத்தை காட்ட முடியும் என்பதை முதன் முதலாக தேவா பாட்டியை பார்த்ததும் உணர்ந்தாள். ஆனால் அடுத்தடுத்து அவர் வீசிய சொல்லம்புகளால் வெகுவாக தாக்கப்பட்டாள்.

அவளை முதல்ல என் அறையில் இருந்து வெளியே போக சொல்லு, என ஆங்காரமாக கத்தினார் ரங்கநாயகி.

பாட்டி தன்னை முற்றிலுமாக வெறுப்பதை எண்ணி தேவாவின் மனம் வேதனை அடைந்தது.

அத்தை என்றழைத்த அம்பிகையின் குரல் பூமியின் கீழிருந்து வருவது போல இருந்தது தேவாவுக்கும், இளாவுக்கும்!! மாமியார் என்ன சொல்ல போகிறார் என அவருடைய முகத்தையே கலங்கிய கண்களோடு பார்த்துக் கொண்டு நின்றாள் தேவா.

அய்யோ நான் வேற தேவாகிட்ட பாட்டி, உன்னை பார்க்க துடிச்சிட்டு இருக்காங்கன்னு சொல்லிட்டேனே இந்த அத்தை ஏடாகூடாமா அவள் மனசு கஷ்டப்படுற மாதிரி எதையாவது பேசிட்டா என்று நினைக்கும் போதே ரங்கநாயகியின் கோபமான குரல் அந்த அறையெங்கும் ஒலித்தது.

இவளை பார்த்தாலே என்ற பேரனுக்கு கல்யாணம் ஆகிடுச்சிங்கிற சந்தோசத்தை கூட என்னால முழு மனசா அனுபவிக்க முடியலை, கல்யாணம் நடந்த அன்னைக்கே அபசகுணமா என்னவெல்லாமோ நடந்துடுச்சி, பையன் ஆசைப்பட்டான்னு சொல்லி தானே பொருத்தம் கூட பார்க்காமல் இவளை நீ இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்த, பாரு அம்பிகை, நல்லா பாரு!! இந்த வீட்டுல காலை எடுத்து வைத்து ஒரு மணி நேரம் கூட ஆகல, மகராசி வந்த முதல் நாளே இப்படி ஆகிடுச்சே! இனி என்னலாம் நடக்க போகிறதோ, என்றவரின் பேச்சு பாதியில் நிற்க,

அத்தை என்ற அம்பிகையின் அதிர்ச்சியான குரலில் நிமிர்ந்தவர், தேவா இன்னும் இங்கேயே நிற்பதை பார்த்ததும், ஏய் இன்னும் ஏன்டி இங்கேயே நிற்கிற போ வெளியே, பெத்தவங்க கூட பிறந்தவங்கன்னு எல்லாரையும் முழுங்கிட்டு நீ மட்டும் ஏன்டி உயிரோட இன்னும் இருக்கிற, அவங்க போன இடத்திற்கே போய் தொலைய வேண்டியது தானே!! என் பேரனோட வாழ்க்கையாவது நல்லா இருந்திருக்கும் என்ற பாட்டியின் தேள் போல் கொட்டிய வார்த்தைகளை, கேட்ட இளாவுக்கு மனம் கொதித்தது.

ஏய் வாடி இந்த கிழவி ரொம்ப தான் ஓவரா பேசுது, அது நாக்கு தேள் கொடுக்குடி எனக்கு வர கோபத்துக்கு என பல்லைக் கடிக்க, தேவாவின் மறுப்பில், வந்த கோபத்தை பாட்டியை பற்றி வாய்க்குள் முனுமுனுத்தபடி அவளை இழுத்துக் கொண்டு அவர் அறையில் இருந்து வெளியேறினாள்.

இளாவின் இழுப்பிற்கு பொம்மை போல நடந்து வந்தவளின் காதில் பாட்டியின் வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலித்தது. தேவாவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல சுரந்தபடி இருக்க கண்ட இளா அவளுடைய கண்ணீரை துடைத்து விட அதனை தடுப்பது போல இளாவின் கையை அழுத்தி பிடித்த தேவாவின் கை நடுங்கியது.

தேவாவின் கண்களில் கண்ணீரை பார்த்ததும் இளாவின் மனம் துடித்தது. அய்யோ இந்த பாட்டி ஏன் இப்படிலாம் பேசினாங்க! தேவாவைப் பற்றிய உண்மையை நான் சொல்லாமல் இருந்திருந்தால், அர்ஜுனை பற்றி தெரிந்ததும், தேவாவின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும் என நினைத்து தானே கல்யாணமே வேண்டாம் என்றவளை வற்புறுத்தி, சம்மதிக்க வைத்தேன். நடந்த கல்யாணத்தால் பழைய விசயத்தை மறந்து புது வாழ்கையை சந்தோசமாக தொடங்குவாள் என்று நினைத்திருக்க திருமணம் ஆன அன்றே இப்படி நடக்கும் என நான் நினைத்து பார்க்காமல் விட்டது தவறா என்று காலம் கடந்து யோசித்தாள் இளா. இந்த பாட்டி, எப்படி பட்ட வார்த்தைகளை கொட்டிட்டாங்க... அவங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு இனி இவளை எப்படி சமாளிக்கிறது என தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் இளா.

அப்போது தான் போன் பேசியபடியே வீட்டிற்குள் வந்த கைலாஷின் கண்களில் தேவாவும், இளாவும் தென்பட, இருவரின் அருகே வேகமாக வந்தவர், தேவாவின் கலங்கிய கண்களும், அவளின் தோற்றத்தையும் பார்த்துவிட்டு, இளா தேவாவுக்கு என்னம்மா ஆச்சி!! ஏன் கண்ணு கலங்கி இருக்கு யார் என்ன சொன்னாங்க என கோபத்துடன் கேட்க, அதே நேரம் தன் அம்மாவின் அறையில் இருந்து வந்த சத்தத்தில் உண்மையை உணர்ந்தவர்.

தேவாவின் அருகே சென்றவர், அவள் கண்ணீரை துடைத்துவிட்டு அம்மா ஏதாவது சொல்லிருந்தா மனசுல வச்சிக்காதம்மா இன்னைக்கு நடந்த அசம்பாவிதம் தான் அவங்க இப்படி ரியாக்ட் பன்றதுக்கு காரணம், ஏன்னா அர்ஜுன் மேல உயிரையே வச்சிருக்காங்க அவனை சின்ன வயதில் இருந்து வளர்த்தவங்க எங்களை விட அவன் மேல அதிக பாசத்தை வச்சிருக்காங்க, நீ எதைப்பற்றியும் கவலைப்படாதேம்மா சீக்கிரமே உன் மனசை புரிஞ்சிப்பாங்க என்று ஆறுதலாக பேசியவர், இளாவோடு தேவாவை ரூமிற்கு அனுப்பி வைத்துவிட்டு தன் அம்மாவின் அறைக்கு சென்றார்.

அம்மா என்னம்மா இதெல்லாம் என அறைக்கு வந்ததும் வராததுமாக குரலை உயர்த்தி, தன்னை கேள்விக் கேட்ட மகனை உற்று நோக்கினார் ரங்கநாயகி.

என்ன கைலாஷ் இந்த அம்மா முன்னாடியே குரலை உயர்த்துற? என்னை விட உனக்கு உன் மருமகள் முக்கியமா போய்ட்டாளா? இன்னைக்கு நடந்தது எதுவுமே சரியில்லை, என் மனசுக்கு நெருடலாவே இருக்கு. ஏற்கனவே இந்த வீட்டு வாரிசை இழந்துட்டு நிற்கிறது போதாதா!! இருக்கிற இவனையும், என்னால இழக்க முடியாது என்று கடுமையான குரலில் சொல்ல

அத்தை என்று அம்பிகையின் குரல் சத்தமாக ஒலித்தது.

இதுவரை வாயை திறந்து பேசாத மருமகள் இன்று சத்தமாக தன்னை அழைக்கவும், கூர்மையான பார்வையுடன் அம்பிகையை பார்த்தார்.

என்ன கைலாஷ் உன் பொண்டாட்டி குரல் உயருது என மகனை பார்த்து கேட்க,

அம்பிகை என கைலாஷ் அழைப்பதிலேயே என்ன வென்று கண்டுகொண்டவர்

கணவனை எரித்துவிடுவது போல முறைத்தவர், தாங்க முடியாத கோபத்தில் சும்மா நிறுத்துங்க உங்க அம்மா பேச்சை கேட்டு என் ஒரு புள்ளையை இருபத்தி ஐந்து வருடம் பிரிந்து இருந்தேன். அவனையும் நம்ம கூட ஒரே வீட்டில் அழைச்சிட்டு வரப் போற நேரம், என் இன்னொரு மகன் என்னை விட்டு போய்ட்டான். ஜாதகம் பரிகாரம் அது இதுன்னு உங்க அம்மா பேச்சை கேட்டு நடந்து என் ஒரு மகனை கொன்னுட்டிங்க.. இருக்கிறவனையாவது எனக்கு கொடுத்துடுங்க என இதுவரை அடக்கி வைத்திருந்த வேதனை அனைத்தும் அம்பிகையின் வார்த்தைகளில் வெளிப்படவும், ரங்கநாயகி பலத்த அதிர்ச்சி அடைந்தார்.

என்னை இருபத்தி ஐந்து வருடமாக பிரிஞ்சி இருந்த மகன் இன்னைக்கு என்கூட இருக்கான். அவன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம், அதனால் தான் அவன் காதலிச்ச பெண்ணையே நான் கல்யாணம் செய்து வச்சிருக்கேன். அவளும் ஒன்னும் சாதாரண பெண் கிடையாது என் மகனுக்காகவே யோசித்து, அவனை இத்தனை வருடமா பிரிந்து இருந்தவள், அவளை விட நல்ல பெண்ணை உங்களால காட்ட முடியுமா? என்று மாமியாரின் முகத்திற்கு நேராக விரலை நீட்டி கேட்க!!! ஆடித்தான் போனார் ரங்கநாயகி.

அதே நேரம் தன் அம்மா பேசிய கடைசி வார்த்தைகளை கேட்டபடியே வீட்டின் உள்ளே வந்தான் அர்ஜுன். அவன் காதுகளில் அந்த வார்த்தைகள் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டு இருந்தது. என் மகனுக்காகவே யோசித்து இத்தனை வருடமா பிரிந்து இருந்தவள் அவளை விட நல்ல பெண்ணை உங்களால காட்ட முடியுமா? இது என்ன அம்மா இப்படி சொல்றாங்க! அர்ஜுனின்(கிருஷ்ணா) மனது குழப்பம் அடைந்தது.

Hi friends first late ah ud potathuku sorry 🙅🙅🙅
Intha ud read panna udane niraiya kelvi ungaluku varum athukelam inmel vera pora ud la kidaikum
paatti mela ungaluku kobam varum enna ivlo mosama pesitanganu... avangaluku manasula innoru ragasiyam irukku athu yaaruk ume theriyathu athu enna nu ipo solla maten 😜😜

Intha ud epadi irukkunu marakamal c.nts pannunga

Thread 'என் வானிலே நீ வெண்ணிலா...கருத்துத் திரி'
https://sangamamnovels.com/threads/என்-வானிலே-நீ-வெண்ணிலா-கருத்துத்-திரி.71/
 
Last edited:
Status
Not open for further replies.
Top