கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா_2

Status
Not open for further replies.

Jothiramar

Moderator
Staff member
♥️என் வானம்♥️-2

அர்ஜுன் திடிரென மணமேடையில் இருந்து இறங்குவான் என்று எதிர்பார்க்காத சந்தோஷ் அதிர்ச்சியில், உறைந்து நிற்க... அர்ஜுனின் திடிர் செய்கையில் அதிர்ந்த இளாவும், என்னாச்சு இவனுக்கு ஏன் இப்படி வேகமாக போறான்... அதுவும் தேவா வர்றது கூடவா, தெரியாமல் போறான்" என்று தன் மனதில் முதல் முறையாக அர்ஜுனின் மாற்றத்தை கண்டவள், சந்தோஷின் தோளை இடிக்க.. அப்போது தான் சுயநினைவுக்கு வந்தவன், இளாவை பார்த்து அசட்டையாக சிரித்து வைத்தவன், டேய் அர்ஜு!!! என்று தன்னை மீறி சத்தமாக அழைக்கவும்,

நண்பனின் அதிர்ச்சியான குரலில் நிகழ்வுக்கு வந்த அர்ஜுன் தான் இருக்கும் இடம் உணர்ந்து சட்டென நின்றான்.

அர்ஜுன் நின்றது தெரியாமல், கலங்கிய மனதுடன், தன்னவனின் வேகநடைக்கு ஈடுகொடுத்தபடி நடந்து வந்த தேவா, அர்ஜுனின் மீது மோதி கீழே விழப் போகவும், தேவா!!

தேவா!! என அதிர்சியுடன் பல குரல்கள் போட்டி போட்டு அழைத்தடியே அவர்கள் அருகில் வந்தனர்.

கீழே விழப்போகிறோம் என்று நினைக்கும் போதே பயத்தில், தன் கண்களை சட்டென மூடிவிட, திடிரென தன் வெற்றிடையில் ஒரு ஆடவனின் கரங்கள் அழுத்தமாக பதியவும், பெண்மைக்கே உண்டான அதிர்ச்சியில் மூடியிருந்த மான் விழிகள் இரண்டும் திறந்து... தன்னை தாங்கியிருந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார் என்று தெரிந்ததும் பெண்ணவளின் கண்களில் இருந்த அதிர்ச்சி விலகி,
தன்னவனின் பாராமுகத்திற்கான காரணத்தை அவனுடைய கண்களில் தேடினாள்.

தேவாவின் விழி மொழியில், அவளுடைய மணாளனின் கண்களும், கட்டுண்டு கிடந்தன. இருஜோடி கண்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து தங்களை மறந்து நின்றிருக்க, டேய் மச்சி போதும்டா தங்கச்சியை இப்படியே எவ்ளோ நேரம் வச்சிருக்க போற என்று அர்ஜுனின் காதில் சந்தோஷ் கிசுகிசுக்க... அப்போது தான் தன்னிலை அடைந்தவன், ச்சே நானா? இப்படி என மனதுக்குள் தன்னையே திட்டியபடி அவளை நிற்க வைத்துவிட்டு பார்வையை திருப்பினான்.

என்ன அர்ஜுன் இவ்வளவு வேகமாகவா நடக்கிறது தேவாவுக்கு அடிப்பட்டுருந்தா என்ன ஆகிருக்கும் என மகனிடம் சற்றே குரலை உயிர்த்திய அம்பிகை, மருமகளின் பக்கம்மாக திரும்பி அவளுடைய பூ முகத்தை வருடியவர், என்னம்மா எங்கயாவது அடிப்பட்டுடுச்சா என பாசமாக கேட்கவும்,

அவருடைய குரலில் இருந்த தாயன்பில் கலங்கிய கண்களுடன், இல்லை என்று வேகமாக தலையை ஆட்டினாள் தேவா!!

என் அம்மா கேட்கிறதுக்கு வாயைத் திறந்து பதில் சொல்றாளா? பாரு என வாய்க்குள் முனகினான் அர்ஜுன்.

நல்ல வேலை சம்பந்தி அபசகுனமா, எதுவும் நடக்கல என அகல்யா நிம்மதியுடன் சொல்லவும், ஆமாம் சம்பந்தி என அம்பிகையும் அவருடைய கூற்றில் இணைந்தார்.

சரி சரி இப்டியே பேசிட்டு இருந்தா எப்படி வந்திருக்கிற சொந்தபந்தங்களை நல்ல படியா கவனிச்சிட்டு, நல்ல நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளையை புகுந்த வீட்டிற்கு அனுப்பனும், என அமுதவாணன் சொல்ல...

அட ஆமாம் சம்பந்தி வாங்க நாம போகலாம் என கைலாஷ் அமுதவாணன் உடன் சென்று விட அம்பிகையோ, சந்தோஷ் இளா நீங்க இரண்டு பேரும் இவங்களை பந்திக்கு சாப்பிட அழைச்சிட்டு போங்க... என்று கட்டளையிட,

சரிங்கம்மா என சந்தோஷும், ஓகே ஆன்ட்டி என இளாவும் ஒரே நேரத்தில் சொன்னாலும், இளாவின் பார்வையோ! தன்னவனை முறைத்தது. அந்த பார்வையில், வெறுப்பு கோபம் என்று கலந்து இருக்க, தன்னவளிடம் இருந்து பார்வையை திருப்பினான்.

சாப்பிடும் இடத்திற்கு சென்றதும், சிறியவர்களோ மணமக்கள் இருவரையும் ஓட்டி எடுத்தனர். அவர்களின் கேலியில், தேவாவின் முகம் சந்தோசத்தில் மலர்ந்திருக்க... அதை கண்ட அர்ஜுனின் விழிகள் கோபத்தில் சிவந்தது. உள்ளம் உலைக்களமாக கொதிக்க" வாயில் இருந்த உணவு, உள்ளே செல்ல மாட்டேன் என தொண்டையில் மீன் முள்ளாய் சிக்கியது. தன்னை இயல்பாக வைத்துக் கொள்ள முடியாமல் தவித்தவன் அதற்கான பழியையும் தேவாவின் மீதே போட்டான்.

எனக்கும் அர்ஜுனுக்கும் இருக்கிற வித்தியாசம் கூடவா இவளுக்கு தெரியாது, அப்டியே ஆளையே மயக்குற மாதிரி பார்வைய பார்க்குறா? இப்டி தானே அர்ஜுனையும் அவள் மயக்கி இருப்பாள் என தேவாவின் கேரக்டரையே கேவலமாக எடைப்போட்டு கொண்டிருந்தான் அவளுடைய கணவன்.

ஆனால் தேவாவின் மனமோ நிம்மதியுடன் இருந்தது. தன்னவனிடம் பேசுவதற்கு எத்தனையோ விசயங்கள் இருக்கிறது... அதை அவனிடம் முழுமையாக சொன்னால் தான் என் மேல் இருக்கும் சிறு கோபம் கூட பனித்துளியாய் மறைந்துவிடும் என்று மனதுக்குள் கற்பனை கோட்டை கட்டியவளுக்கு தன்னுடைய தற்போதைய நிலையின் உண்மைநிலையை உணர்ந்தவள், தன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.

சந்தோஷின் கிண்டலில் தன்னை மறந்து சிரித்தபடி நின்றவனின் புன்னகையில் லயித்து இருந்தவள் இளாவின் கையை பிடித்து அழுத்தினாள்.
.
.
.
கல்யாணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களை தம்பதி சமேதராய் அம்பிகையும், கைலாஷும் தனித்தனியாக கவனித்து நலம் விசாரித்தபடி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது தன் அருகே, அண்ணி என்றழைப்பில் திரும்பிய, அம்பிகை எதிரே நின்றவரை பார்த்து புன்னகைக்க... அவரோ கண்களில் கோபத்துடன், ஏன் அண்ணி இப்படி செய்தீங்க! என்ற கேள்வியில் அதிர்ச்சியுற்ற அம்பிகை தன் எதிரே நின்றவரை தனித்து அழைத்து சென்றார்.

தான் காதால் கேட்டது, உண்மை தானா என தெரிந்து கொள்ள வேண்டி அம்பிகை அவரிடமே திரும்பி, வளர்மதி நீ என்ன சொல்ற? ஒன்றும் புரியாமல் அம்பிகை கேட்க...

என் அண்ணனோட உறவை எனக்கு இல்லாமலே பன்னிட்டிங்களே அண்ணி, நானும் எதுவும் பேசக் கூடாதுனு தான் இருந்தேன்... சரி நம்மல விட, அவங்க பிள்ளைக்கு வளமான வாழ்க்கையை தான் அமைச்சி கொடுக்குறீங்கனு, நினைத்தேன். ஆனால் இங்கே நடப்பதையும் நடந்ததையும் பார்த்தாலே தெரியுது, அவசரக் கல்யாணம் மாதிரி இருக்கு!! அதை கூட நான் விட்டுடுவேன் ஊர், பேர், ஜாதி சணம் இப்படி எதுவுமே தெரியாத, போயும் போயும் ஒரு ஊமை பெண்ணை அர்ஜுனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. இந்த ஊமையை விட என் மகள் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டாள் என அடுக்கடுக்கான வளர்மதியின் கேள்வியில் அம்பிகையின் உள்ளம் தடதடக்க ஆரம்பித்தது.

கடவுளே யாருக்கு தெரியக்கூடாதுனு நான் நினைத்தேனோ, அவங்களுக்கு உண்மை தெரியும்படி ஆகிடுச்சே, இவளை என்னால தனியா சமாளிக்க முடியாதே! இந்த நேரம் பார்த்து இவர் எங்கே போய் தொலைஞ்சார், என பதற்றத்தில் கண்களாலேயே தன் கணவன் இருக்கும் இடத்தை அலசினார் அம்பிகை.

தன்னுடைய பிஸ்னெஸ் பார்ட்னர்களுடன் பேசிக் கொண்டிருந்தவரின் பார்வை எதேச்சையாக மனைவியின் பக்கம் திரும்ப... அம்பிகையின் முகத் தோற்றமும் தன் தங்கை வளர்மதியின் கோபமான முகமும் கண்களில் பட்டுவிட மனைவியை காப்பாற்றும் பொருட்டு வேகமாக நண்பரிடம் விடைபெற்றுக் கொண்டு வந்தார்.

வாமா, வளர்மதி மாப்பிள்ளையும் அனன்யாவும் எங்கேமா? இவ்ளோ நேரமும் உன்னை நான் பார்க்கலையே மா, அர்ஜுனோட மேரேஜை முன்ன நின்று நடத்த வேண்டாமா? என தங்கையைப் பார்த்து கேட்டவர்,

மனைவியின் புறம் திரும்பி, என்ன மங்கை தங்கச்சி வந்தது கூட தெரியாமல், இருந்திருக்க... என் தங்கச்சி சாப்பிட்டாளானு பார்க்கிறது இல்லை என கோபக்குரலில் சொன்னாலும், கண்களில் மென்மை மட்டுமே இருப்பதை கண்ட, அம்பிகை!!

இதோங்க, மன்னிச்சிக்க வளர்மதி கல்யாண டென்ஷன்ல நீ வந்ததை கூட நான் கவனிக்கல என்று உண்மையான வருத்தத்துடன் சொன்ன அம்பிகை, வா வளர்மதி சாப்பிட்டு தான் போகனும், ஆமா தம்பி எங்கே என்று அவருடைய கணவனை கேட்கவும்,, தன் கையை அம்பிகையிடம் இருந்து உதறினார்.

போதும் அண்ணி, போதும் அண்ணா உங்க விருந்தை நீங்களே வச்சிக்கோங்க! என் மகளோட ஆசையை இப்படி குழித்தோண்டி புதைச்சிட்டிங்களே! அவள் கண்ணுல உள்ள வலி உங்களுக்கு எங்கே தெரியப்போகுது... என்று தன் அருகில் இருந்தவளை சுட்டி காட்டினார் வளர்மதி.

சிவந்த கண்களுடன் நின்றிருந்தவளை பார்த்ததும் அம்பிகையின் மனம் வருத்தமடைந்தது. வளர்மதி கிருஷ்ணா மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா, அனன்யாவை அவனுக்கு தான் கட்டி வச்சிருப்பேன் என்று சொல்லவும்,

அய்யோ அண்ணி என் மகள் அர்ஜுன் மேல உயிரையே வச்சிருந்தா!! ஆனால் நீங்க என்ன செஞ்சீங்க... அவனுக்கு வேற பொண்ணை தேர்ந்து எடுத்துட்டிங்க, என்று மூக்கை உறிஞ்சினார் வளர்மதி.

அம்மா கடைசியா ஒரே முறை அத்தானை பார்த்துடுறேன் என்னை அப்பாவுக்கு தெரியாமல் மேரேஜிக்கு அழைச்சிட்டு போனு சொல்லிட்டு தான் என்கூட வந்தா, ஆனால் என் வீட்டுக்காரருக்கு நாங்க இங்கே வந்ததே தெரியாது என சொன்னவர் தொடர்ந்து

என் புருஷன் சத்தியம் அடிச்சி சொல்லிட்டார், இனிமேல் உனக்கும் உன் அண்ணன் குடும்பத்துக்கும், எந்த ஒட்டும் இல்லை! உறவும் இல்லைனு... நாங்க வறோம் என்ற வளர்மதி அருகே கோபத்துடன் அம்பிகையை முறைத்தபடி நின்ற தன் மகள் அனன்யாவை அழைத்துக் கொண்டு கனத்த மனதுடன் வெளியேறினார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்தவர் போல அமைதியுடனே இருந்தார் கைலாஷ்.
.
.
மண்டபத்தை விட்டு வெளியே வந்த அம்மாவும் மகளும் தங்களுடைய காரில் ஏறி அமர்ந்ததும், டிரைவர் சீட்டில் இருந்தவரை முறைத்தவர்கள், இனிமேல் இங்கே என்ன வேலை காரை எடுங்க என அதிகாரக் குரலில் வளர்மதி கட்டளையிட ஆடு திருடிய கள்ளனை போல முழித்தபடி காரை எடுத்தார்.

கார் மிதமான வேகத்தில் சென்று ஒரு ஸ்டார் ஹோட்டல் முன்பு நிற்கவும் அதிலிருந்து இறங்கிய மூவரும் தங்களுடைய கார் கீயை அங்கிருந்த செக்யூரிட்டியிடம் தூக்கி போட்டுவிட்டு ஏற்கனவே புக்காகி இருந்த அறைக்குள் வந்தனர்.

சோபாவில் அமர்ந்திருந்த பசுபதி மனைவியை பார்க்க... அவரோ அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருக்க மகளோ நகத்தை கடித்து துப்பியபடி கட்டிலில் அமர்ந்திருப்பதை கண்டவரின் உடல் பதற்றத்தில் நடுங்கியது.

அறையை அளந்த வளர்மதி கணவனை பார்த்து, யோவ் என்னமோ சொன்ன இந்த கல்யாணம் நடக்காது மாப்பிள்ளையை ஆளு வச்சி தூக்கிடுவேனு, அப்படி இப்படினு வெட்டி ஜெம்பம் செஞ்ச, ஆனால் நீ சொன்ன ஒன்று கூட நடக்கலையே யா என கோபத்தில் சிடுசிடுக்கவும்,

நான் என்னடி பன்றது, என்று குரலை உயர்த்திய பசுபதி வளர்மதியின் அக்னி பார்வையில் நான் என்ன பன்றது வளரு!! உன் அண்ணன் மகனை கடத்துறதுக்கு ஆட்களோட, சீக்கிரமே அவனோட அறைக்கு போய்ட்டேன், ஆனால் உன் அண்ணன் மகன் அங்கே இல்லை!! நான் போட்ட பிளான் எல்லாம் வீணாகி போச்சி... என நொந்த குரலில் சொல்லவும்,

அதுவரைக்கும் பற்களால் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்த அனன்யா அப்பாவை அலட்சியமாக பார்த்து, அட போங்க டேடி, அர்ஜுனை தூக்குறதுக்கு பதிலா" அந்த ஊமையை தூக்கியிருக்கனும் என்று தேவாவின் அழகை நினைத்து பார்த்து பொறாமையில் பொங்கியவள் தன் அம்மாவை பார்த்து ஏன் மம்மி நான் அர்ஜுனை லவ் பன்னேனு சொன்ன என்ற கேள்வியையும் கேட்க மறக்கவில்லை.

அடி அறிவு கெட்ட அனு அவங்ககிட்ட அப்படி சொன்னா தான் நம்புறமாதிரி இருக்கும் என வளர் மகளின் கேள்வியை நினைத்து கோபத்தில் கத்த!!

வளரு இப்போ ஏன் பாப்பாவை திட்டுற என பசுபதி தன் மகளுக்கு சப்போர்ட்டாக கேட்க, மனைவியின் முறைப்பில் மகளிடம் திரும்பியவர்,

அட என்ன அனு செல்லம், அர்ஜுனை தூக்கினா, ஊமையை கட்டிக்க விருப்பம் இல்லை" அதனால் நான் போகிறேன்னு ஒரு மொட்டை கடிதாசி எழுதினா, உன் ஆசைக்கு எதிரியா வந்தவளுக்கு காலம் பூரா கல்யாணமே ஆகாமல் கன்னியாவே இருந்துடனும்னு நினைச்சேன்... அவளை எல்லாரும் தூற்றி பேசுற பேச்சில் நாண்டுகிட்டு செத்துபோவானு தான் மாப்பிள்ளையை தூக்கலாம்னு முடிவு செஞ்சேன், ஆனால் அவன் எங்கே போய் தொலைஞ்சானோ தெரியலை, கரெக்டா கல்யாண நேரத்துக்கு வந்து தொலைஞ்சிட்டான் என தன் திட்டம் தோல்வி அடைந்த வருத்தத்தில் வளர்மதியின் கணவன் பசுபதி ஆற்றாமையுடன் சொல்ல!!!

கிழிச்சிங்க உங்க திட்டத்தில் மண் அள்ளி போட, ஏன்யா நான் தான் அப்போவே கேட்டேனே என் அண்ணன் மகன் கல்யாணத்தை நிறுத்த என்ன திட்டம் போட்டுருக்கன்னு, அப்போவே சொல்லியிருந்தா, இந்த இத்து போன திட்டத்துக்கு அன்னைக்கே சங்கு ஊதிருப்பேனே, ஆனால் எல்லாமே கையை மீறி போய்டுச்சே, உன்னை கட்டின பாவத்துக்கு இன்னும் கொஞ்ச நாளில் நான் நடுத்தெருவுக்கு தான் வந்து நிற்கனும் போல இருக்கே, போயும் போயும் உன்னை கட்டிக்கிட்டதுக்கு ஒரு கழுதையை கட்டியிருந்தா கூட பொதி சுமக்க உதவியிருக்கும், என் அண்ணன் சொத்தை எல்லாம் எங்கிருந்தோ வந்த அனாதை ஆளப் போறதை நினைச்சா என் வயிறு எரியுது என மூச்சுவிடாமல் வளர்மதி பேச பசுபதி வாயை திறக்காமல் வழக்கம் போலவே அமைதியுடனே நின்றார். பொண்டாட்டியா இருந்தா வாயை கொடுக்கலாம் இவ தான் பேயாச்சே இவளிடம் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்க நான் என்ன மாங்கா மடையனா என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தார்.
.
.
இளாவின் கையை அழுத்தி பிடித்த தேவா அவளிடம் தனிமையில் பேச வேண்டியதை கண்களால் உணர்த்தவும், தோழியின் பார்வையை புரிந்து கொண்ட இளாவும் தலையை ஆட்டி சம்மதமாக சொன்னாள்.

தேவாவுக்கு சிறிது நேரம் தனிமை கிடைத்துவிட இளாவின் கையை பற்றி மண்டபத்தில் இருந்த மணமகள் அறைக்கு அழைத்து சென்றவள், அவளின் கண்களை பார்த்து, என்னால பேச முடியாதுங்கிற உண்மையை அர்ஜுனிடம் சொல்லிட்டிங்களா என சைகையில் கேட்க...

இளாவோ தடுமாறினாள். தேவாவிடம் இருந்து பார்வையை திருப்பியவள் சாரி தேவா என மனதுக்குள் சொல்லியவள், தோழியை பார்த்து ஏய் அதெல்லாம் அப்போவே சொல்லிட்டேன்... என்று சொல்லவும் தேவாவின் மனம் நிம்மதியானது.

ஆனால் தன்னை பற்றிய உண்மை நிலை அர்ஜுனுக்கு தெரியாது என்ற உண்மை தெரிந்தால் தேவாவின் நிலை என்னவாக இருக்கும்???


 
Status
Not open for further replies.
Top